Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? முடிவாக -முடிவு உங்களிடம்....
Page 1 of 1

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? - 24
மதம் -சமயம்,மறை-என்றால் என்ன?
சமயம் என்பது மனிதனுக்கும் அவன் நம்பும் கடவுளுக்கும் இடையிலான நம்பிக்கை, உணர்வு,நடைமுறை எனச் சொல்லலாம். இதற்கு சமய நூல்கள்,வழிபாட்டு முறை, சடங்குகள்,அமைப்பு உதவியாக உள்ளன. இந்த மதம் வரலாற்றில் வந்த மனிதர்கள் சிலரின் கருத்துகள்,வழிகாட்டல்களை வைத்து அல்லது அவர்களை நம்ப வைத்த மனிதர்கள்-தீர்க்கதரிசிகள்-போன்றவர்களால் வழி நடத்தி அல்லது சொல்லிக் கொடுத்ததன் மூலம் தொடங்கியது.
முதலில் மனிதனிடம் ஏற்பட்ட பயமே கடவுள் நம்பிக்கையையும் அதைத் தொடர்ந்து மதத்தையும் உருவாக்கியது.
மதங்கள் அதன் தொடக்கம் மதக் கதைகள் எல்லாமே ஆதாரங்கள் இல்லாத புனைகதைகள் என்றே சொல்லப்படுகிறது.பாவம்-புண்ணியம்,மறுபிறப்பு,கடவுள் மனிதனுக்குப் சொன்னது, கட்டளையிட்டது, பல கடவுள்கள் இப்படிப் பல கருத்துகளுக்கு ஆதாரம் எதுவும் கிடையாது.வேத நூல்கள்,இராமாயணம் கதை எதற்கும் ஆதாரம் கிடையாது.
மனிதனை அச்ச நிலையில் வைத்து தவறு செய்யாமல் இருக்கச் செய்ய பாவ-புண்ணியக் கருத்தும் மறுபிறப்பும் சொல்லப்பட்டது.
ஆரிய இடப்பெயர்வு,மத்திய கிழக்கில் தோன்றிய மதங்கள் இப்படிப் பலவற்றில் தொல்பொருள் ஆய்வாளர்கள்,வரலாற்று ஆய்வாளர்கள் இடையில் கருத்து மோதல்கள் இருந்து வருகிறது. சில கருத்துகள் ஒன்றுடன் ஒன்று ஒத்துவரவில்லை.
இந்த நிலையில்,......................
கடவுள் ஒருவன் என்றால்,அவன் மனிதனைப் படைத்தான் என்றால் ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்காக வரவோ அவதாரம் எடுக்கவோ முடிவு செய்திருப்பானா?
கிறித்துவ சமயம் ஒன்றும் இஸ்லாம் இன்னொன்றும்,இந்து சமயம் மற்றொன்றையும் இப்படி உலக மதங்கள் அனைத்தும் வெவ்வேறான கருத்துக்கள் உடையதாக இருக்கும் போது இவை எல்லாம் எப்படி உண்மையாக இருக்க முடியும்? அவை கடவுள் சொன்னதாக இருக்க முடியுமா?
அப்படியானால் உலகில் இன்று இருக்கும்,முன்னர் இருந்த நூற்றுக் கணக்கான சமயங்களும் கடவுள் பற்றியும்,கடவுள் தங்களுக்கு சொன்னவை பற்றியும் அவர்கள் மத நூலில் சொல்லிக் கொள்கிறார்கள். அந்த நூற்றுக் கணக்கான கடவுள்கள்,கடவுளின் கட்டளைகள் உண்மையாக இருக்க முடியுமா?
எல்லா மதங்களையும் அரவணைக்கிறது என்று சொன்ன இந்து மதம்,இன்று உலகின் ஒரே மதமும்,முதல் மதமும்,உண்மையான மதமும் இந்து மதமே என்கிறது. சமீபத்தைய மதத் தலைவர்களின் கருத்துக்களும் எழுத்துக்களும் அதையே சொல்லிக் காட்டுகின்றன.இதன் அடிப்படையில் தான் இன்றைய இந்திய மத்திய அரசின் பேச்சுக்களும் செயல்களும் இருந்து வருகின்றன.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதக் குழுவால் கொல்லப்பட்டும் பெண் கொடுமைகளுக்கு உள்ளாகியும் வரும் யசிடிஸ் இனத்தவர்கள், தங்கள் மதமே முதல் மதம் என்றும் தாங்கள் கடவுள் படைத்த ஆதாம் ஏவாளின் நேரடி வாரீசுகள் என்றும் சொல்லி வருகின்றனர்.அத்துடன் பாவம்,பிசாசு,சாத்தான் நரகம் போன்றவற்றை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
ஆனால் அதே யசிடிஸ் இனத்தவர்களின் மதத்தை சாத்தானின் மதம் என்கிறது இஸ்லாம்.
கிறித்தவர்களோ தங்கள் மதமே முதலில் உருவானது என்றும் அதைப் பின்பற்றி வந்தது இஸ்லாம் என்றும் அவர்கள் போலி தீவிரவாத மதம் எனவும் சொல்கின்றனர். இன்றும் இருக்கும் பழமைவாதிகள் -Orthodox- தங்கள் மதக் கருத்துகளே உயர்ந்தது முதலில் தோன்றியது என்கிறார்கள்.
கடவுள் ஒருவனே என்றால்,அவன் உலகைப் படைத்தவன் என்றால் அவன் மனிதனை நோக்கி வந்திருக்க முடியாது.மனிதர்களை பாகுபடுத்திப் பார்த்திருக்க முடியாது.
மனிதனை வழி நடத்திச் செல்ல ஏற்படுத்தப்பட்ட கொள்கைகள், வழி நடத்தல்கள் தான் மதங்களாக மாறினவே தவிர கடவுள் நிச்சயமாக மதங்களை உருவாக்கி இருக்க முடியாது. அரசியல் சட்ட திருத்தங்கள் மாற்றங்கள் போல் மத நூல்களும் காலத்திற்கு காலம் ஒவ்வாத கருத்துக்களை நீக்கி புதிய கருத்துக்களை இணைத்துக் கொள்வதே உண்மையான மதம் ஒன்றின் செயலாக இருக்க முடியும்.
கடவுள் போர் நடத்தி மற்ற இனங்களை அழிக்க உத்தரவிட முடியுமா? கடவுள் ஆணையும் பெண்ணையும் வேறுபடுத்திப் பார்த்திருக்க முடியுமா? பெண்களுக்கு தண்டனையும் ஆண்களுக்கு பெண்களை விருந்தாகவும் கொடுத்திருக்க முடியுமா?
இதை எல்லாம் நிச்சயம் கடவுள் செய்திருக்க முடியாது. அதனால் மதங்களை மனிதனே உருவாக்கினானே தவிர கடவுள் உருவாக்கி இருக்கவோ,அவனுக்கு கட்டளைகளை இட்டிருக்கவோ முடியாது.
வரலாற்றில் நான் படித்த தெரிந்து கொண்டவற்றை சிறு குறிப்புகளாக உண்மைகளை தந்தேன். கடவுள் ஒருவன் என்பதை நம்பும் நாம் அந்தக் கடவுளை வைத்து மதங்களை உருவாக்கி இன்று அடித்துக் கொள்ளும் நிலையில்............................
ஆதாரங்கள் சாட்சியங்கள் எதையும் வரலாறோ,தொல்பொருள் ஆய்வுகளோ தராத நிலையில், மக்களை நம்ப வைக்க ஆதாரங்களை உருவாக்கி அந்த வட்டத்திற்குள் நம்மை வைத்திருக்க விரும்பும் மதங்கள் தேவைதானா?
அன்று தேவைப்பட்டவை, இன்று நம்மை பிளவு படுத்த,அடித்துக் கொள்ளச் செய்யும் மதங்கள்..............
ஆதாரங்கள் சாட்சியங்கள் எதுவும் வைக்கப்படாதவரை புனை கதையாகவே பார்க்கும் வரலாறு........................
சிந்தியுங்கள். கடவுளை நம்பும் நாம் மதமற்ற,மதச்சார்பற்ற மனிதர்களாக வாழ்வதா இல்லையா?
எந்தவித ஆதாரங்கள் சாட்சியங்கள் இல்லாத கடவுட் கொள்கைகள்,மதக் கருத்துகள், பிரிவுகளை வைத்து வாதாடாமல்,அடித்துக் கொள்ளாமல் இருக்க வேண்டாமா?
கேரளாவை தலைமையகமாக கொண்டு இயங்குகிறது சித்தர்கள் சமாசம் என்ற ஒரு பிரிவினர். இவர்கள் சொல்வது,.................
இரண்டாயிரம் அல்லது அத்ற்கு மேலாக மனித இனம் உருவானது முதல் எல்லா மதங்களும் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கிறது. இன்று பிரசங்கங்கள், தொலைக்காட்சி அறிவுரைகள்,போதனைகள் எனத் தொடருகிறது. ஆனால் மதங்களால் எதையாவது சாதிக்க முடிந்ததா? ஒருவரையாவது திருத்த முடிந்ததா? மதவெறி மட்டுமே வளர்ந்துள்ளது. என்று சொல்கிறார்கள். சிந்தியுங்கள்.
முடிவு உங்களிடம்.......................

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Similar topics
» எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10)
» எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14 )
» எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4 (15- 18 )
» எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-1 (1 - 6)
» எப்படி மதம் தோன்றியது?உலகின் முதல் மறை எது? பகுதி -5 ( 19 - 20 - 21 - 22 - 23 )

Permissions in this forum:
You cannot reply to topics in this forum