Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-1 (1 - 6)
2 posters
Page 1 of 1
எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-1 (1 - 6)
எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -1
இதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னர் இந்தக் கேள்விகள் வருகின்றன.
இறைவன் மனிதனைப் படைத்தானா?
மனிதன் இறைவனைப் படைத்தானா?
சமீபத்தில் (04.02.2014) அமெரிக்காவில் கென்டக்கியில்- Kentucky- உள்ள Creation Museum த்தில் ஒரு வாதம் நடந்தது. மனிதன் படைக்கப்பட்டானா அல்லது டார்வின் சொல்லியது போல் பரிணாம வளர்ச்சியினால் (creationism and evolution) உருவானானா? என்பது வாதம்.மிகப் பெரிய வல்லுனர்கள் Bill Nye , Ken Ham கலந்து கொண்டார்கள். பார்வையாளர்கள் அறிஞர்கள் நடுநிலை வகித்து நீண்ட வாதம் நடந்தது. முடிவில் அறிஞர்கள் பார்வையாளர்களின் கருத்தை வைத்து பரிணாம வளர்ச்சியினால் தான் உருவானான் என்று தீர்ப்புக் கூறினார்கள்.
எது எப்படியோ அதைப் பற்றியும் கருத்துக் கூற வரவில்லை. ஏனென்றால் அறிவியலாளர்கள் மதச்சார்பாளர்களிடையே கருத்துப் போர் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.
….....................
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மனிதன் தோன்றிய காலத்தில், அவன் எப்படித் தோன்றினான் என்று ஆராய வரவில்லை, அந்த ஆதி மனிதனின் மன நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை சிறிது எண்ணிப் பார்க்கலாம்.
மழை வந்தது. இடி இடித்து மின்னல் கீற்றுக்கள் தொடர்ந்தன.காற்று சூறாவளியாய் வீசியது. மிகப் பெரிய விலங்கினங்கள்.சத்தம் காதைக் துழைத்தது. ஆதி முதல் மனிதன் அச்சம் கொண்டான். ஓடினான்.எங்கெல்லாமோ ஒழிந்து கொண்டான். அவனுடைய முதல் உணர்ச்சி அச்சம்தான். ஆதி மனிதன் சமூகம் உருவாகாத தனிமையில் வாழ்ந்தான்.
தாயின் கருவறை என்ற பாதுகாப்பில், அவள் இதயத் துடிப்பையே லயமாக உணர்ந்து வாழ்ந்த குழந்தை, கருப்பக் கால முடிவில் வெளியே தள்ளப் படுகிறது. இது வரை காணாத புதுச் சூழல்! இதுகாறும் உணர்ந்த லயத்தைக் காணோம்…எனவே அதன் முதல் உணர்ச்சி அச்சம்.
இந்த அச்சத்தின் காரணமாகவும் இது வரை தொப்புள் கொடி வழியாகக் கிடைத்து வந்த உயிர் வளி கிடைக்க வேண்டித் திணறியும் தன்னிச்சையாகக் குழந்தை அழுகிறது. தாயோ தாதியோ அதனைத் தூக்கி மார்போடு அணைக்கிறாள். குழந்தை மறுபடி அந்த லயத்தை உணருகிறது ; அதன் அச்சம் தணிகிறது. குழந்தை பிறந்தது முதல் 3 மாதம் வரை இப்படி மார்போடு அணைப்பது அதன் அழுகையை அமர்த்தும் என இக்கால மகப்பேற்றியல் அறிவுரை தருகிறது.
குழந்தையின் மனத்தில் உள்ளது போலவே, ஆதி மனிதனின் மனத்தில் அச்ச உணர்ச்சி வேரூன்றிக் கிடந்தது. இரவு வரும் போது, இருள் சூழும்போது காட்டு விலங்குகள் இரை தேடப் போகும் ஒலி, கொடிய விலங்குகள் எழுப்பும் ஒலிகள் அவன் அச்சத்தை அதிகம் ஆக்குகின்றன. மழையும் இடியும் அவனைக் கலக்குகின்றன! இப்படி நாலா புறமும் அச்சத்தால் சூழப்பட்ட மனிதனுக்கு ஏதாவது ஆறுதல் தேவைப்படுகிறது. ஆகவே, மகா சக்தி வாய்ந்த ஒன்றை அவன் கற்பனை செய்துகொள்கிறான். அது தன்னைக் காக்கும் என நம்புகிறான்.
தொடரும்....................

Last edited by sakthy on Fri Sep 05, 2014 1:22 pm; edited 2 times in total
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-1 (1 - 6)
கட்டுரை அருமை .....தொடருங்கள்
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-1 (1 - 6)
எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -2
இந்த சமயக் கணக்கைக் கணக்கிட, வழக்கில் உள்ள உண்மையைக் காண ஓர் அறிவியல் துறை உதவிக்கு வருகிறது .அதன் பெயர் -Anthropolgy- மாந்தனியல் எனத் தமிழில் கூறலாம்.
…...........................................தொடருகிறது.............
இரவு முழுதும் கடும் மழை, கிடுகிடுக்கும் இடி முழக்கம், கண்ணைப் பறிக்கும் மின்னல்… அஞ்சி நடுங்கும் மனிதன் அழுது புலம்புகிறான்.
தன்னைக் காக்க யாராவது வரமாட்டார்களா என்று எண்ணுகிறான். இரவுப் பொழுதை இப்படி அச்சத்தில் கழிக்கும் மனிதன் ஒரு வழியாகக் கண்ணயர்கிறான். காலையில் கண் விழிக்கும் அவனுக்கு வியப்பு காத்திருக்கிறது.
என்ன ஆச்சரியம், இடி முழக்கம் இல்லை! மழைத் தூறலைக் காணோம்! இதமான வெயில், பதமான காற்று.கரு முகிற் கூட்டம் அகன்று நீல வானம் காட்சி தருகிறது. அவன் மனத்தில் ஏதோ ஒரு எண்ணம் முளைவிடத் தொடங்குகிறது.
தான் அழுததை யாரோ கேட்டு யாரோ தனக்கு உதவி செய்யவே, இடி, மின்னல், மழை அனைத்தையும் நிறுத்தி, தன்னைக் காப்பாற்றினார்கள் என்ற ஒரு எண்ணம், அவன் மனத்தில் எழுகிறது. தான் அழுதது யாருக்கோ கேட்டிருக்கிறது.என்னைப் போல் யாரோ இருக்கிறார்கள் என எண்ணத் தொடங்கினான்.
அந்த சமயத்தில் கலைந்த முகில் கூட்டம் அதனூடாக வரும் ஒளி-கதிரவன் ஒளி- அது தான் தன்னைக் காப்பாற்றியதாக அவன் உணருகிறான். அதை தன் பக்கத்தில் இருக்கும் இன்னொரு மனித உயிருக்குக் காட்டுகிறான். அவன் அச்சம் மெல்லக் கலைகிறது.
வானத்தை நிமிர்ந்து நோக்குகிறான். ஏதேதோ உருவங்கள் முகில் கூட்டத்தினால் உருவாகிக் காண்கிறான். அந்த முகில் கூட்டத்தில் உருவான உருவங்கள் போன்ற அசைவுகள் அவனை சிந்திக்க வைக்கிறது. அங்கே யாரோ இருப்பதாக உணருகிறான்.
மறு நாள் மீண்டும் இடி-மின்னல்-மழை-கூடவே குளிர் அவனை கிடுகிடுக்க வைத்தது. அந்த மனிதன் அன்றும் அலறினான். கண்களை மூடிக் கொண்டான். நேரம் ஓடியது. மீண்டும் அவனுக்கு அதே ஆச்சரியம். இடி அகன்றது. மழை நின்றது. காற்று ஓய்ந்து பதமாய் அவன் உடலை வருடியது. கதிரவன் மெல்லத் தலையைக் காட்டுகிறான். வானத்தை நோக்கிய அவன் கைகளை அசைக்கிறான்.
தொடரும்..............

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -3
இதைத் தொடர்ந்து எழுத உதவியது- Anthropolgy- மாந்தனியல்.
தொடருகிறது....................
இப்படித் தொடர் நிகழ்வுகள். தான் மனத்தில் படைத்துக்கொண்ட அந்த-ஒன்றை- நோக்கி மன்றாடுகிறான்,கூக்கிரலிடத் தொடங்குகிறான், அழத் தொடங்குகிறான். சத்தமிடும் அவன் தன் மொழி இல்லாத மொழியில் ஏதோ உளறுகிறான்.
ஆகா, எல்லாம் வல்ல, மனத்தில் தான் நினைத்த ஒன்று, தன் வேண்டுகோளை ஏற்று அச்சத்தைக் களைந்துவிட்டது என்று எண்ணி அவனுக்குள் மகிழ்ச்சி.
அவன் முன்னே மிகப் பெரிய விலங்குகள்,அவனை நோக்கி உறுமுகிறது. விலங்குக்கு தெரியாத உருவம்,மனிதனுக்கு தெரியாத விலங்கு. அந்த மிருகங்கள் வாயைத் திறந்து சத்தமிட்டன.அது அவனை மீண்டும் வேறொரு அச்சத்திற்குள் கொண்டு வந்தது.
கண்களை மூடியபடி அலறினான். மீண்டும் கண்களைத் திறந்த போது அந்த மிருகம் இல்லை. மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான். அவன் அலறிய சத்தத்தில் அந்த மிருகங்கள் பயந்து ஓடியிருக்கலாம். ஆனாலும் அது அவனுக்குத் தெரியவில்லை.
அவனுக்குப் பசி எடுத்தது. மரத்தில் தொங்கிய காய்கள்,பழங்கள் பறிக்கப்பட்டன. வாயில் வைத்த அவனுக்கு என்ன தோன்றியதோ, வாயில் கடித்த பழத்தை முன்னே வைத்து விட்டு, மற்றொன்றை சாப்பிட்டான்.மேலே நோக்கி கைகளை அசைக்கிறான். முகில் கூட்டம்,சூரியன் இவற்றுக்கு அவற்றைக் கொடுக்க எண்ணினான். அது பயத்தினாலா இல்லை நன்றியினாலா? ஏதோ ஒன்று.
சக மனிதனுக்கு கொடுத்ததை தன்னைக் காத்த இனம் தெரியாத ஒன்றுக்கும் கொடுக்க ஆரம்பித்தான்.
தான் அழைத்த போது ஏதோ ஒன்று வந்து தன்னைக் காத்ததாக எண்ணிய அவன்,அந்த ஏதோ ஒன்றுக்கு தான் சாப்பிட நினைத்ததை முதலில் வைத்து விட்டு சாப்பிடும் வழக்கத்தை ஆரம்பித்தான். ஆனாலும் அந்தப் பழத்தை அந்த -ஒன்று- சாப்பிட வரவில்லை.
அவனுக்கு கவலை என்ற ஒரு உணர்ச்சி தோன்ற ஆரம்பித்தது.
அவனுக்கு அச்சம் தோன்றியது-அழத் தோன்றியது-கவலை தோன்றியது. தான் உண்ண நினைப்பதை கொடுக்கத் தோன்றியது.
யாரிடம் கொடுப்பது. அந்த ஒன்று தான் வரவில்லை,உண்ணவில்லை. கவலையுடன் தூங்கிய அவன் முகத்தில் சுளீரென காலைச் சூரியன் சுட்டது. எழுந்து உட்கார்ந்தான். முதல் நாள் அவன் வைத்த பழம் அப்படியே இருந்தது. அதை அவன் காலைச் சூரியன் முன்னே மீண்டும் வைத்தான்.
அங்கும் இங்குமாக சுற்றிய அவன் மீண்டும் வந்த போது பழத்தைக் காணவில்லை. பறவைகள் சாப்பிட்டிருக்கலாம்,சூரிய வெப்பத்தில் காய்ந்து இருக்கலாம்.காற்றினால் இடம் மாறி இருக்கலாம்.
ஆனால் அவனுக்கு அப்போது அதுவெல்லாம் தோன்றவில்லை. மகிழ்ச்சியினால் துள்ளிக் குதித்தான். தான் படைத்த உணவை அந்த-ஒன்று- ஏற்றுக் கொண்டதாக நினைக்கிறான்.
என் கண்களுக்குத் தெரியவில்லை. ஆனால் எனக்கு உதவுகிறது. நான் இல்லாத போது பழத்தை சாப்பிடுகிறது. அவன் சிந்திக்க ஆரம்பிக்கிறான். நீண்ட சிந்தனை. அது பயத்தினால் உண்டான சிந்தனை.
நாட்கள் நகர்ந்தன. இடி இல்லை,மழை இல்லை. திடீரென குளிர் அவனை வாட்டியது. இப்போது அவனுக்கு அச்சமில்லை,அழத் தோன்றவில்லை.கவலை வரவில்லை. ஏதோ ஒரு சுகந்தமான உணர்வு. அச்சப்பட்ட போதெல்லாம் கூவி அழைத்த ஒன்றை,தான் இல்லாத போது தான் வைத்ததை உண்ட ஒன்றை, இடி மின்னல்,மழை வந்த போது தன்னைக் காத்த அந்த ஒன்றை அழைக்க எண்ணினான்.
எப்படி அழைப்பது? எப்படி அழைக்கப் போகிறான்?
தொடரும்...............

Last edited by sakthy on Wed Sep 10, 2014 12:54 am; edited 1 time in total
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-1 (1 - 6)
சிலர் மதம் புளித்துப் போச்சு என்று கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் நம்மிடையே போதையில் இருப்பவர்களாகவே கருதுகிறேன்.
இன்று மதம் பற்றிய உண்மைகளை தெரிந்து கொள்ளாமல் பொய்யான தகவல்களை தெரிந்து கொண்டதன் விளைவும், விழிப்புணர்வின்மையும் தான், மதக் கொடுமைகள்,சாமியார்களின் போலித்தனம்,சாதி வேற்றுமைகள் என தலைவிரித்து ஆடுவதற்குக் காரணமாக இருக்கின்றன.. உண்மைகளைக் கண்டறிந்து கொள்ள வேண்டும்.
ஈழத்திலும் சரி தமிழ் நாட்டிலும் ஏன் இந்தியாவிலும் சாதி மதக் கொடுமைகள் தாங்க முடியவில்லை. தாழ்த்தப்பட்டோரின் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள்.நடவடிக்கை எடுக்க வேண்டிய சட்டம் கையை விரிக்கிறது.
கடவுள் ஒருவரை வணங்குவதோடு நிறுத்திக் கொண்டு மதப் போலிகள் மூட நம்பிக்கைகளில் இருந்து நாம் விடுபடல் வேண்டும்.
ஈராக், லிபியா, சிரியா இன்னும் பல அரபு நாடுகளில் நடந்த உள் நாட்டு சண்டைகளில் பலர் இறந்தபோது; மனிதாபிமானம் பீறிட்டுக் கிளம்பி அய்யோ குழந்தைகள் பெண்கள் எல்லாம் கொலை செய்யப்படுகிறார்கள். அந்த மக்களுக்கு அமைதியான வாழ்க்கையை தர இறைவனை வேண்டுவோம் என்றார்கள், அன்பே வடிவான போப் ஆண்டவர்கள்.
உடனே இறைவன் -அமெரிக்கா- அவதாரம் எடுத்து, தாக்குதல் நடத்தியவர்கள், தாக்குதலுக்கு உள்ளாகியவர்கள் என்று பல லட்சம் மக்களை கொன்று அமைதியை நிலை நாட்டினார்.
உள் நாட்டு சண்டையில் சில ஆயிரம் பேர் இறந்ததை தாங்க முடியாமல் துயருற்ற போப் ஆண்டவரின் மனம், அமெரிக்காவின் தாக்குதலில் பல லட்சம் மக்கள் கொல்லப்பட்ட பிறகே ஆறுதல் அடைந்தது. அதனால் தான் ஆண்டவனின் -அமெரிக்கா- கொலைவெறி தாக்குதலைக் கண்டித்து ஆண்டவர் வாடிகனிலிருந்து வருத்தப்படவேயில்லை.
சிரியா, ஈராக், லிபியா நாடுகளில் உள் நாட்டு சண்டையின் போது கொல்லப்பட்ட மக்களைவிட அதிகமாக கொடூரமான முறையில் குழந்தைகள் உட்பல பல ஆயிரம் மக்கள் பாலஸ்தீனத்தில் தொடர்ந்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அதியசம், கருணையே உருவான வாடிகன் வாழ் ஆண்டவர் கண்களிலிருந்து கண்ணீரே வரவில்லை. இஸ்ரேலின் அநீதியைக் கண்டித்து அமெரிக்க ஆண்டவனும் தன் அவதாரத்தை நிகழ்த்தவில்லை.
எனக்குத் தெரிந்து பாஸ்தீனத்தின் மீதான தாக்குதலைக் கண்டித்து, போப் ஆண்டவர்கள் இதுவரை யாரும் தங்கள் இதயத்தை ரணமாக்கிக் கொண்டதில்லை என்றே நினைக்கிறேன்.
2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இது போலவே கொடூர தாக்குதல்களைப் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தியபோது; பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத், செப்டபர் மாதம் 23 ஆம் தேதி பிரச்சனைக்குத் தீர்வுகாணும்படி போப் ஜான் பாலுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அத்தோடு போப்பைச் சந்திக்க ஒரு உயர் பாலஸ்தீன அதிகாரியையும் இத்தாலிக்கு அனுப்பி வைத்தார்.
பாலஸ்தீன ரேடியோ, இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து அவசரக் கூட்டமும் பிராத்தனையும் நடத்தும்படி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களுக்கு வேண்டுகோள் விடுத்தது.ஆனால் இவை எதுவுமே நடைமுறைப் படுத்தவில்லை என்பதை விட, மதிக்கப்படவே இல்லை.
இப்போது இனப்படுகொலை நடத்திய இலங்கையைக் கண்டிக்காத போபாண்டவர், அங்கே செல்ல இருக்கிறார். இப்படியான கொலைகளை எல்லாம் மதத் தலைவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் என்கிறார்களா? இந்த ஞானம் எல்லாம் பாலஸ்தீனக் குழந்தைகள் கொல்லப்படும் போதும் வரவில்லை, ஈராக் ,சிரியாக் கொலைகளுக்கும் வரவில்லை..
அப்பாவி மக்களைக் கொன்றொழிக்கிறது இஸ்லாமிய தீவிரவாதம். நூற்றுக் கணக்கான ஒன்றுமறியா பள்ளி மாணவிகளைக் கடத்தி வைத்திருக்கிறது நைஜீரிய மதத் தீவிரவாதம்.
அத்தனைக்கும் மதமே காரணம். காதலுக்காய் கவிதை பாடும் உத்தமர்களே அழிந்து கொண்டிருக்கும் அப்பாவிப் பாமர மக்களை கண் திறந்து பாருங்கள்.
ஈழத்தில் கொல்லப்படும் போது கண்களை மூடிக் கொண்டு சிந்து பாடினீர்கள். இன்னுமா உங்கள் கொலை வெறி தீரவில்லை.
அடித்தட்டு மக்கள் துயரம் தீராதவரை சுதந்திரம் என்பது சுடு நெருப்பாகும்.

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? - 4
தொடருகிறது................
அதனைக் கூப்பிட ஏதாவது பெயர் வேண்டுமே! அன்று அவனுக்கு பேச வரவில்லை. எழுத வரவில்லை. பெயர் வைக்க வரவில்லை. தனக்கு வந்த ஒரு ஒலியை எழுப்பினான். அவன் எழுப்பிய ஒலி கேட்டு மிருகங்கள் சிதறி ஓடின. பறவைகள் சிறகடித்துப் பறந்தன. அவன் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதற்கு மேலே எல்லாம் அவனால் சிந்திக்க முடியவில்லை.
நாட்கள் நகருகின்றன...................
அச்சத்தால் மறைந்திருந்த மனிதன்...........
அப்போது அவனுக்கு நன்றி என்ற உணர்வு உதயமாகிறது. தன்னைக் காக்கும் அதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் அல்லவா? எப்போதும் தனக்கு உதவி செய்ய வரும் ஒன்றுக்கு தான் உண்ணும் உணவில் ஒரு பகுதியை அதற்குத் தனியாக வைத்துப் பின் தான் உண்ணுகிறான்.இப்படி தான் உணவாக்கியவற்றை முதலில் கொடுக்க ஆரம்பித்த அவனால், அந்த உருவமில்லா ஒன்று இல்லாமல் இருக்க முடியவில்லை.
காலைச் சூரியனுக்கு,வானத்தில் அவன் கண்டவற்றுக்கு உணவுகளைக் கொடுக்க ஆரம்பித்த அவனால், சில சமயம் அந்தச் சூரியனை, முகில் கூட்டத்தைக் காண முடியவில்லை. அதற்குப் பதிலாக ஏதோ ஒன்றை வைத்து அதன் முன்னால் அந்த உணவுகளை வைத்து விட்டு செல்ல ஆரம்பிக்கிறான்.இப்படித் தெய்வம் ஒன்றைப் படைத்துக்கொண்ட மனிதன் நாளடைவில் அனைத்து வழியிலும் வளருகிறான்.உருவம் இல்லாமல் இருக்கும் தன் தெய்வத்துக்குத் தன்னைப் போலவே உருவம் தருகிறான்.அவன் எதை எல்லாம் கண்டு பயந்தானோ அவை போலவும் கடவுளைப் படைக்கிறான்.
அவனின் முதல் வணக்கம்.............அச்சம் கலந்த வணக்கம்..........
அப்படியே காலைச் சூரியனைப் பார்த்த அவன், சிவந்த அந்த சூரியனின் நிறம் போல் உருவாக்க முயலுகிறான்.சிவந்த மண்ணில் உருவம் செய்ததால் அவன் இறைவன் அவனைப்போல் கருப்பாக இல்லாமல் சிவந்த நிறம் பெறுகிறது.
அவன் வணங்கிய முதல் - கடவுள்- தன்னைக் காத்ததாக எண்ணிய காலைச் சூரியன்.
அவனுக்கு வணங்கத் தெரியவில்லை. இரு கைகளாலும் முகத்தை மூடி தன் முதல் வணக்கத்தை ஆரம்பிக்கிறான்.
தன் சக மனிதனை அரவணைக்க-ஒவ்வொரு மனிதனும் தனது உணவை மற்றவனுக்கு கொடுக்க ஆரம்பிக்கிறான்.அன்பு உதயமாகிறது.விலங்குகள் அவன் பக்கம் வருகிறது. அவற்றையும் அவன் நேசிக்க ஆரம்பிக்கிறான்.
அவனுக்கு உதவி செய்ததாக எண்ணிய -ஒன்று-அவனிடம் பயம் கொண்ட அன்பு,சக மனிதனிடம் அன்பு,மிருகங்களிடம் அன்பு அவன் மகிழ்ச்சி என்ற சுகத்தை அனுபவிக்க ஆரம்பிக்கிறான்.

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? - 5
தொடருகிறது..........
நாகரிகப் படிகளில் மனிதன் ஏறத் தொடங்கும் நிலை. தனக்குத் துணையாகத் துணை, இணை ஒன்றைத் தேடிச் சேர்த்துக்கொள்கிறான். அவன் உடலின் சில உறுப்புகள் அவனுக்கு தொந்தரவுகளைத் தருகிறது. அந்தப் பகுதிகளை -நிர்வாணத்தை- மறைக்க இலை, தழைகள் அவனுக்கு உதவுகின்றன, நாளடைவில் இவை மர உரிகளுக்கு இடம் தருகின்றன!
இவற்றையே தான் உருவாக்கிய கடவுளுக்கும் உடுத்தி அழகு பார்க்கிறான். இதுவரை உணவுக்காக காய்கள்,பழங்கள் என்றிருந்த அவன் சில மிருகங்களைப் பார்க்கிறான். அவற்றின் உணவு முறை அவனை சிந்திக்க வைக்கிறது. தானும் அப்படியே செய்ய முயலுகிறான்.முயல், பன்றி, மான், பறவைகள் என சிறியவற்றை வேட்டை ஆடத் தொடங்கிய அவன் பாதுகாப்புக்காக சிங்கம், புலி, யானை போன்றவற்றையும் வேட்டை ஆடுகிறான்.
இவற்றின் தோல்களை ஆடையாக அணியும் இவன் அவற்றையே தன் கடவுளுக்கும் ஆடையாக அணிவிக்கிறான். தான் கண்டு நடுங்கும் பாம்பை அஞ்சா நெஞ்சனாகக் கற்பனை செய்துகொண்ட தன் கடவுள் மீது படர விடுகிறான். மேலும் பெண்டு பிள்ளை எனச் சமூகமாக வாழத் தலைப்படுகிறான்.
மனிதனின் முதல் சூரியக் கடவுள்.
அவன் உருவாக்கிய கடவுளுக்கும் பெண்டு பிள்ளைகள் உண்டு என்று நம்பத் தொடங்குகிறான். இப்படியாக மனிதன் தன் கடவுளைத் தன் சாயலாகவே படைத்தான் என்கிறது மானிடஉருபியல் (Anthropomorphology).
அவன் உருவாக்கிய ஆடையுடன் கடவுள்.
சூரிய வணக்கத்தை முதலில் மனிதன் தொடங்கினான் என்பதற்கு எகிப்து,கிரேக்கம்,சுமேரிய நாகரீகத்தின் தொல்பொருள் ஆய்வுகள் சாட்சியமாகின்றன. தமிழன் மட்டும் சூரிய வணக்கத்தை தொடரும் நிலையில்,மற்றவர்கள் புதிய மதங்களை உருவாக்கிக் கொண்டனர். அதன் வேதங்கள் கடவுளால் சொல்லப்பட்டது என்றும் சொல்லிக் கொள்ளத் துணிகிறார்கள்.
ஆனாலும் உலகம் உருவான நாள் தொடக்கம் இன்றுவரை கடவுளோ கடவுளின் தூதர்களோ வரவுமில்லை.அவதாரம் எடுக்கவும் இல்லை என்பதே உண்மையாகும். அதற்காக கடவுள் இல்லவே இல்லை என்று வாதாட வரவில்லை. நானும் உருவமில்லாக் கடவுளை -கடவுள்களை அல்ல- வணங்குகிறேன்.
கிரேக்க கடவுளை மலை உச்சியில் வைத்து காட்டினார்கள். இந்த முறை போலவே மொகென்சதாரோவிலும் சமூகத்தின் தலைவனை உயரத்தில் வைத்துக் கிழே மக்கள் வாழ்ந்ததாக நகர் அமைப்பின் தொல்பொருள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த மானிடஉருபியலை இத்துடன் நிறுத்திக் கொண்டு, நமக்குத் தெரிந்த வரலாற்று செய்திகளை உண்மையுடன் தெரிந்து கொள்ள வரலாற்று சுவடுகளை திருப்புவோம்.
தொடரும்...................

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? - 6
தொடருகிறது...................
இங்கிருந்து வரலாறு மதம் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறது. ஆனாலும் அந்த ஆதி மனிதனின் அறியாமை அச்சம் தெளிவின்மை போன்ற காரணங்களுக்காக கடவுளை பூமிக்குக் கொண்டு வந்தவர்கள், அதையே மத நூல்களிலும் புகுத்தி விட்டதால், இன்று மக்களில் பலரும் மதத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்வோரும்,மதத் தீவிரவாதிகளும் வரலாற்றை மறைத்து,மாற்றி மக்களை மீண்டும் சாக்கடையில் வீழ்த்தி வருவது ஆபத்தான ஒன்றாகும்.
இவை வரலாற்று ஆய்வாளர்கள்,ஆசிரியர்கள் தெரிந்து சொன்ன ஆய்வுத் தகவல்கள். ஆனாலும் அவை எல்லாம் அரங்கேறாது என்பது அந்த வரலாற்று ஆய்வாளர்களுக்கே தெரிந்திருந்தது. சற்று சிந்தித்துப் பாருங்கள். உண்மையைச் சொன்ன எதுவும் நின்று நிலைக்கவில்லை.
இன்றைய மதக் கொடுமைகளை,ஏமாற்றுகளை,மூட நம்பிக்கைகளை சிறிது சிந்தித்துப் பார்த்தால், அறியாமையில் அச்சத்தில் வாழ்ந்த அன்றைய மக்கள் எப்படி ஏமாற்றப்பட்டு இருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
இயேசு, மொகமது,துவாரகபுரியில் ஆட்சி செய்ததாகக் கூறப்படும் சிற்றரசன் கண்ணன் இவர்களை எல்லாம் கடவுளாக்கியதும் கடவுளின் தூதர்களாக்கியதும் அன்றைய மக்களிடம் மட்டுமல்லாது இன்றைய மக்களிடமும் நன்றாக ஊறி விட்டது தான் இன்றைய மதக் தீவிரவாதங்களுக்குக் காரணம் என்றும் சொல்லலாம்.
தமிழர்களை அடிமைப்படுத்த இராமனை களத்தில் இறக்கியது என எத்தனை ஆய்வுத் தகவல்கள்,வேறு பல தகவல்கள் அனைத்தும் மறைக்கப்பட்டன. இராமனோ கிருஷ்னனோ எங்கோ வாழ்ந்திருக்கலாம். ஆனால் கடவுளாக்கியது மதத்தின் கடும் போக்கே தவிர வேறொன்றில்லை.ஈராக்கின் சில பகுதிகளில் இன்றும் பல இராமன் பற்றிய கதைகள் உண்டு. தங்கள் மதக் கொள்கைகளை பரப்ப திட்டமிட்டு செய்யப்பட்ட செயல்களாகவே இவற்றைப் பார்க்க முடியும்.
பல் ஆதாரங்கள் அழிக்கப்பட்டன. பணமும் பதவியும், பலமும் ஆட்சி நடத்தும் இந்த உலகில் உண்மைக்கு என்றும் இடம் கிடைக்காது. ஆனாலும் கிடைத்த உண்மைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
உண்மையான வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். ….................
குகைகள் அவன் வீடாகின.
வீடு கட்டத் தொடங்குகிறான்...............
மனிதன் துணையைத் தேடத் தொடங்கியதில் இருந்து வாழ ஓய்வெடுக்க தங்குமிடம் அமைக்கத் தொடங்கினான். அதைப் போலவே தான் வணங்கிய கடவுளுக்கும் இடம் அமைத்தான். அங்கே தான் உருவாக்கிய கடவுளை வைத்தான்.உணவுகளைப் படைத்தான். தான் எப்படி வாழ நினைத்தானோ அப்படிக் கடவுளையும் வைத்து வணங்கினான்.
கல்லில் கடவுளை செதுக்கி …...........
மனிதன் கடவுள் என்ற ஒன்றை உருவாக்கி வழிபடத் தொடங்கியவுடன், அவன் தன் மனத்தில் தோன்றிய உருவங்களை,அவன் அச்சமடைந்த உருவங்களை கடவுளின் வடிவமாக கற்பனை செய்து உருவாக்குகிறான்.
தன்னைக் காப்பாற்ற எவை தேவைப்பட்டனவோ அவற்றை எல்லாம் அந்தக் கடவுளின் கையில் வைக்கிறான். அவை தன்னைக் காப்பாற்ற அந்தக் கடவுளுக்கு உதவும் என நம்புகிறான். உருவங்கள் பலவாகின்றன. ஒவ்வொரு உருவத்தை உருவாக்கியவனும் தங்களுக்குள்ளே சண்டையிடத் தொடங்குகிறார்கள்.
பகிர்ந்துண்டு வாழ்ந்த மனிதன்................
அடிமைப்படுத்தப்படுகிறான், பெண்களின் மீது காமக் கொடுமைகள், எதிர்த்தவர்கள் மீது சித்திரவதை,கொலை........................
கொதித்தெழுந்த சிலர் புதிய கருத்துக்களை விதைக்கின்றனர்................

Similar topics
» எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி -3 ( 11 - 14 )
» எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? -பகுதி - 4 (15- 18 )
» எப்படி மதம் தோன்றியது?உலகின் முதல் மறை எது? பகுதி -5 ( 19 - 20 - 21 - 22 - 23 )
» எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? பகுதி-2 (7 - 10)
» எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? முடிவாக -முடிவு உங்களிடம்....

Permissions in this forum:
You cannot reply to topics in this forum