TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


எப்படி மதம் தோன்றியது?உலகின் முதல் மறை எது? பகுதி -5 ( 19 - 20 - 21 - 22 - 23 )

Go down

எப்படி மதம் தோன்றியது?உலகின் முதல் மறை எது? பகுதி -5 ( 19 - 20 - 21 - 22 - 23  ) Empty எப்படி மதம் தோன்றியது?உலகின் முதல் மறை எது? பகுதி -5 ( 19 - 20 - 21 - 22 - 23 )

Post by sakthy Mon Sep 15, 2014 5:46 pm

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? - 19

Al Buraq என்பது  குதிரை உடலும்,பெண்ணின் தலையும், மயிலின் வாலும் கொண்ட உருவம், தீர்க்கதரிசி முகமதுவை இரண்டாவது தடவையாக ஏழு சொர்க்கங்களின் ஊடாக ஜெருசலேமிற்கு இரவில் கொண்டு சென்றது- Miraj-என சொல்லப்படுகிறது.
முதல் பயணம்  ஜெருசலேமில் இருந்து மெக்காவிற்காகும்.இது Israa and Miraj  எனச் சொல்லப்படுகிறது.

எப்படி மதம் தோன்றியது?உலகின் முதல் மறை எது? பகுதி -5 ( 19 - 20 - 21 - 22 - 23  ) 14vmibo

முகமது சென்ற இடங்கள்............

எப்படி மதம் தோன்றியது?உலகின் முதல் மறை எது? பகுதி -5 ( 19 - 20 - 21 - 22 - 23  ) 14lsi9k

எப்படி மதம் தோன்றியது?உலகின் முதல் மறை எது? பகுதி -5 ( 19 - 20 - 21 - 22 - 23  ) 24uxb42

இஜேசு சென்ற இடங்கள்................

எப்படி மதம் தோன்றியது?உலகின் முதல் மறை எது? பகுதி -5 ( 19 - 20 - 21 - 22 - 23  ) Bhyp1f

இராமாயணம் ,மகாபாரதம் நடந்தது  எனச் சொல்லப்படும் இடங்கள்...........

எப்படி மதம் தோன்றியது?உலகின் முதல் மறை எது? பகுதி -5 ( 19 - 20 - 21 - 22 - 23  ) 2r6lldl

எப்படி மதம் தோன்றியது?உலகின் முதல் மறை எது? பகுதி -5 ( 19 - 20 - 21 - 22 - 23  ) 2ijkyux

மத்திய ஐரோப்பாவில் வாழ்ந்து வந்த ஆரியர்களிடம், எகிப்து இசுரயெல்,ரோம்,கிரேக்க கடவுட் கொள்கைகள் உருவ வழிபாடுகள் அங்கிருந்து வந்தவர்களால் பரப்பப்படுகிறது. ஏதோ பல காரணங்களால் மத்திய ஐரோப்பிய ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைகிறார்கள்.

அவர்களில் சிலர் பஞ்சாப்பிலும் மற்ற இடங்களிலும் குடியேறுகிறார்கள். வேறு சிலர் பாகிஸ்தான்,ஆப்கான் ஊடாக சைபீரியப் பகுதிகளுக்கும் செல்கின்றனர். இன்றும் அங்கே அவர்கள் இனத்தவர்கள் வாழ்வதைக் காண முடியும்.

முதல் இடப்பெயர்வு........

எப்படி மதம் தோன்றியது?உலகின் முதல் மறை எது? பகுதி -5 ( 19 - 20 - 21 - 22 - 23  ) Fbyed1

German scholar Max-Muller thought that the original home of the Aryans was somewhere near the Caspian Sea. From there they had migrated to the European countries. Two groups of Aryans are said to have come to Persia and India. The Aryans who had migrated to India are known as the 'Indo-Aryans'.

இரண்டாம் இடப்பெயர்வு.........

எப்படி மதம் தோன்றியது?உலகின் முதல் மறை எது? பகுதி -5 ( 19 - 20 - 21 - 22 - 23  ) 2yoq490

இந்தியா வந்த ஆரியர்களிடம் நிறம் சாதி ஆள ஆரம்பிக்கிறது. தாழ்த்தப்பட்டவர்கள்-தலித் என சிலர் புறக்கணிக்கப்படுகின்றனர். புறக்கணிக்கப்பட்ட இவர்கள் பஞ்சாப் பகுதிகளில் இருந்து மீண்டும் மத்திய ஐரோப்பியப் பகுதிகளுக்கு செல்கின்றனர்.இப்படிச் சென்றவர்கள் இன்றைய குருதீஸ்,யசிடிஸ்,ரோமான் போன்ற இனத்தவர்களாவர்.
எப்படி மதம் தோன்றியது?உலகின் முதல் மறை எது? பகுதி -5 ( 19 - 20 - 21 - 22 - 23  ) 25uqzk1

இன்றும் தொடரும் தீண்டாமை துயரம்.........

எப்படி மதம் தோன்றியது?உலகின் முதல் மறை எது? பகுதி -5 ( 19 - 20 - 21 - 22 - 23  ) 2exlao9

மொழியியல் ஆய்வுகளின் படி,  இந்திய உபகண்டத்தில் இருந்து 11ம் நூற்றாண்டு காலப்பகுதியில் வடமேற்கே இடம்பெயர ஆரம்பித்தவர்கள் தான் இன்றும் நாடோடிகளாக அலையும் ரோமான் -கிப்சி மரபியல், ரோமா மக்கள் என நம்பப்படுகிறது. ஆனாலும் இந்தியத் தரப்பில் இன்றும் வரலாற்று ஆய்வுகள்  மறுக்கப்படுகிறது.

ஐரோப்பாவில் உள்ள ரோமா மக்களின் மூதாதைகள் இன்றைய பஞ்சாப் பிரதேசத்தில் இருந்து கிபி 1001 இற்கும் 1026 இடைப்பட்ட காலத்தில் இடம் பெயர்ந்தார்கள் என வரலாறு சொல்கிறது.

இசுலாவியர் (Slavic people) அல்லது சிலாவிக் மக்கள் கிழக்கு ஐரோப்பா ,உரூசியாவும் சுற்றியுள்ள பகுதியிலும்,சைபீரியா,நடு ஆசியாவிலும் வாழ்ந்தவர்கள்,கிறித்துவ மதப் பரவலுக்கு முன்னர் சிலவிக் மதக் கொள்கைகளை உடைய உருவ வழிபாட்டைக் கொண்டிருந்தனர்.

எப்படி மதம் தோன்றியது?உலகின் முதல் மறை எது? பகுதி -5 ( 19 - 20 - 21 - 22 - 23  ) Xlwmmx

எப்படி மதம் தோன்றியது?உலகின் முதல் மறை எது? பகுதி -5 ( 19 - 20 - 21 - 22 - 23  ) 20adncw

இவை அனைத்தும் சேர்ந்தே புதிய மதமாக இந்து மதம் உருவாகி இருக்கலாம். ஆனாலும்.......

தொடரும்....................


Last edited by sakthy on Wed Sep 17, 2014 2:19 pm; edited 2 times in total
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

எப்படி மதம் தோன்றியது?உலகின் முதல் மறை எது? பகுதி -5 ( 19 - 20 - 21 - 22 - 23  ) Empty Re: எப்படி மதம் தோன்றியது?உலகின் முதல் மறை எது? பகுதி -5 ( 19 - 20 - 21 - 22 - 23 )

Post by sakthy Tue Sep 16, 2014 1:16 pm

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? - 20

இதுவரை சொல்லப்பட்டு வந்த மதங்கள் தவிர சொல்லப்படாத மாயன்,ஆபிரிக்க மதங்கள், அவுஸ்திரேலிய ஆதிக் குடியினரின் மதங்கள்,சப்பானிய ஆதி மதங்கள் இப்படிப் பல இங்கு சொல்லப்படவில்லை.மனிதனின் மதங்கள் என வரும் போது மேற்சொன்ன மதங்களை விட பல நூறு வருடங்கள் முன்னர் ஆரம்பமான மதங்களையும் நாம் கருத்தில் கொண்டாக வேண்டும்.

மக்களிடையே பரப்பப்பட்டு விட்டது என்பதால் கிறித்தவம்,இஸ்லாம், இந்து,புத்த சமயங்களை மட்டும் வைத்துக் கொண்டு எதையும் தீர்மானித்துவிட முடியாது,கூடாது.

தென் அமெரிக்கா ,சில ஆபிரிக்க நாடுகளிலும் உள்ள யொருபா-Yoruba- மதத்தினர் Orisha,
சங்கோ- Shango ,Jakuta  கடவுள்களை வணங்குகின்றனர்.

எப்படி மதம் தோன்றியது?உலகின் முதல் மறை எது? பகுதி -5 ( 19 - 20 - 21 - 22 - 23  ) 2hs50mf

எப்படி மதம் தோன்றியது?உலகின் முதல் மறை எது? பகுதி -5 ( 19 - 20 - 21 - 22 - 23  ) Ehdidy

கொன்பியுசிசம்-Confucianism-போல் தாவோயிசம்-Taoism – கொள்கைகளை பின்பற்றுவோர்.........

எப்படி மதம் தோன்றியது?உலகின் முதல் மறை எது? பகுதி -5 ( 19 - 20 - 21 - 22 - 23  ) 120sf0x

பார்சிக்களின் - parsi -Maneckji Sett Agiary -கடவுள்...............

எப்படி மதம் தோன்றியது?உலகின் முதல் மறை எது? பகுதி -5 ( 19 - 20 - 21 - 22 - 23  ) 24e9cux

கீழுலகின் கடவுள்கள்  -Yazılıkaya

எப்படி மதம் தோன்றியது?உலகின் முதல் மறை எது? பகுதி -5 ( 19 - 20 - 21 - 22 - 23  ) An0tjr

அமேசன் பகுதிகளில் -Urarina Shaman..........

பல கடவுட் கொள்கைகையைக் கொண்ட சப்பானிய மதமான சிந்தோ-Shintoism -
(சின் - கடவுள், தோ-வழி) …............

எப்படி மதம் தோன்றியது?உலகின் முதல் மறை எது? பகுதி -5 ( 19 - 20 - 21 - 22 - 23  ) Zkl6o7

இப்படி சமய -கடவுட் கொள்கைகள் கொண்டவர்கள் இந்த உலகில் எங்கும் உள்ளனர். தமிழ் நாட்டின் நீலகிரி மலைப்பகுதிகலீல் 18 வேறுபாடான இனங்களும் மத நம்பிக்கை உள்ளவர்களும் இன்றும் வாழ்கிறார்கள்.

தொடரும்................
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

எப்படி மதம் தோன்றியது?உலகின் முதல் மறை எது? பகுதி -5 ( 19 - 20 - 21 - 22 - 23  ) Empty Re: எப்படி மதம் தோன்றியது?உலகின் முதல் மறை எது? பகுதி -5 ( 19 - 20 - 21 - 22 - 23 )

Post by sakthy Wed Sep 17, 2014 2:17 pm

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? - 21

புதிய ஆட்சி இந்தியாவில் ஆட்சிக்கு வந்ததும் மெல்ல மீண்டும் இந்தி,சம்ஸ்கிருதம்,இந்து மதக் கொள்கைகள்-கருத்துகள் திணிக்கப்படும் நிலை அதிகரித்து வருகிறது. குடியரசுத் தலைவரே இந்திக்கு வக்காலத்து வாங்குவதும், தொலைக்காட்சிகள் சில ஊடகங்கள்,இந்து மதத் தலைவர்கள் அதிக மதப் பிரசாரத்தில் ஈடுபடுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. நேபாளம் சென்ற பிரதமர் சந்தணக் கட்டளைகளை அள்ளிக் கொடுத்து விட்டு வந்திருக்கிறார்.

மற்ற சிறுபான்மை மதங்களை புறக்கணிப்பது கண்கூடாகத் தெரிகிறது. இன்றே இந்த நிலை என்றால் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எந்த நிலையில் மக்கள் வழி நடத்திச் செல்லப்பட்டிருப்பார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

மதம் மாறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆக்கிரமிப்பு,அச்சுறுத்தல்,சலுகைகள், பொய்ப் பிரச்சாரம் போன்ற பல காரணங்களால் மெல்ல மக்கள் மதத்தை தழுவ ஆரம்பிக்கிறார்கள். புத்தம்,சமணம் எனத் தொடங்கி இந்து மதம்,கிறித்துவ மதம்,இஸ்லாம் என மத மாற்றம் மக்களிடையே ஊடுரு ஆரம்பித்து விடுகிறது.

ஒரு சின்ன உதாரணத்தை இங்கே சுட்டிக் காட்டலாம். தமிழ் ஈழப் பகுதிகளில் வினாயகர் சதுர்த்தி மிகச் சிறிய பூசையுடன் நடந்து முடிந்து விடும். ஆனால் இந்த ஆண்டு முதன் முதலாக ஒரு இடத்தில் சிலைக் கரைப்பு இடம்பெற்றுள்ளது. அதே போல் கோலிப் பண்டிகையும் முதல் முறையாக நடந்தது. இராணுவமோ சிங்களரோ கொண்டாடாத இவை எப்படி ஆரம்பிக்கப்பட்டது. இந்தியத் துணைத் தூதரக ஏற்பாடு என்பது தெரிய வருகிறது.

இப்படித் தான் நேரடியாகவோ மறைமுகமாகவோ மதங்கள் ஊடுருவ அல்லது திணிக்கப்பட ஆரம்பிக்கின்றன.

எடுத்தற்கெல்லாம் கீதையை கொண்டுவருவோர் திருக்குறளைக் கொண்டு வருவதில்லை. குறளில் இல்லாதது கீதையில் என்ன இருக்கிறது. ஏன்? கீதை மதநூல் என்பதுடன் ஆட்சி அதிகாரம் உள்ளவர்களின் நூல் என்பதும் காரணம்.

ஆனால் குறள் வேத நூல்களுக்கு எதிராக எழுதப்பட்டு அடிமைப்பட்டிருக்கும் ஒரு இனத்தில் இருந்து வந்த நூல் என்பதும் காரணம்.

பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டாலும் கூட, ஆட்சியாளர்கள் ஏற்கத் தயாராக இல்லை. கீதையை விட உயர்ந்த கருத்துக்களைக் கொண்ட நூல் இன்று மத நூலாக இல்லாததும் ஆட்சியில் இல்லாத மொழியில் எழுதப்பட்டதாலும் நம்மவர்களாலேயே உதாசீனம் செய்யப்படுகிறது. இது தான் உண்மையாகும்.

இந்த நிலையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் எப்படி ஆரிய இந்துமதக் கருத்துகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள்?..................

எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? - 22

ஆரியர்கள் இடப்பெயர்வில் கைபர் கணவாய் ஊடாக வந்த ஆரியர்கள் பஞ்சாப் பகுதிகளில் முதலில் குடியேறினார்கள். மத்திய ஐரோப்பியப் பகுதிகளில் இருந்தவர்கள் பகலில் மந்தை மேய்ப்பது,மாலையில் கூடி இருந்து அப்பகுதியில் குளிர் என்பதால் தீ மூட்டி குளிர் காய்ந்து மிருகங்களின் இறைச்சியை அதில் சமைத்து உண்பது போல்,இங்கும் தொடர்ந்தார்கள்.

எப்படி மதம் தோன்றியது?உலகின் முதல் மறை எது? பகுதி -5 ( 19 - 20 - 21 - 22 - 23  ) 2r73ul2

எப்படி மதம் தோன்றியது?உலகின் முதல் மறை எது? பகுதி -5 ( 19 - 20 - 21 - 22 - 23  ) 2aeqm39

இதைக் கண்ட அங்கு வாழ்ந்த ஆதிக் குடியினர் அச்சம் கொண்டனர். நிறத்தில் மாறுபட்டவர்கள் காய்கறிகளை உணவாகிக் கொண்ட இவர்களின் மனத்தில் அச்சம் தோன்றுவது இயற்கையே.

இந்த அச்சம் மக்களை மட்டுமல்ல மன்னர்களையும் பாதித்தது. நிறம், மிருகங்களைப் படைப்பது, தீ மூட்டி குளிர் காய்வது-வேள்வி எனச் சொல்லிக் கொண்டார்கள்- இப்படி அனைத்தும் மக்களையும் மன்னர்களையும் மன அளவில் பாதிக்கத் தொடங்கியது.

மெல்ல அந்த வேற்று இனமக்களை அணுகிய அவர்கள் காரணத்தையும் அறிய ஆவல் கொண்டனர். கிடைத்த பதில் இறைவனுடைய இடத்தில் இருந்து வருவதாகவும்,தீ மூட்டி இறைச்சியை சமைத்து இறைவனுக்கு படைத்து பின்னர் உண்பதாகவும் கூறவே மேலும் அச்சம் கொண்ட ஆதி இனத்தவர்கள் மெல்ல பின்வாங்க ஆரம்பித்தனர். இது ஆரியர்களுக்கு வசதியையும் ஊக்கத்தையும் தரவே அதை வலுப்படுத்த ஆரம்பித்தனர்.

இந்த அச்சம் ஆதி இனத்தவர்களை அவர்கள் பக்கம் திரும்ப வைத்ததில் வியப்பொன்றும் இல்லை. இதே நிலை தான் ஆதியில் கடவுளை வைத்து மக்களை தங்கள் பக்கம் திருப்பியதும் மதத்தை ஆரம்பித்ததும் ஆன செயலாகும்.


எப்படி மதம் தோன்றியது? உலகின் முதல் மறை எது? - 23

தமிழர்களின் சைவ சித்தாந்தம் பற்றி சொல்லவில்லையே என்றால்..................

இதைவிட சைவ சித்தாந்தமே உலகின் முதல் இறை வெளிப்பாடு என்றும் எந்த மதத்தையும் சாராத மனிதனை வழிகாட்டும் தத்துவங்கள் கொண்ட மதம் என்றும் சிலர் சொல்கிறார்கள். அவர்களில் சிலர் சொன்ன கருத்துக்கள்...............

ஜான் மார்ஷல்...............
உலகின் மிகப் பழைய உயிரோட்டமுள்ள சமயம் சைவ சமயமேயாகும்.மேலும் மொகெஞ்சதரோ – கரப்பா வெளிக்காட்டும் செய்திகள் பலவற்றால் சைவம் மிகப் பழைய கற்காலத்தும் அதற்கும் முற்பட்ட காலத்துக்குமான சமயம் என்றும் இந்த வகையில் உலகின் மிகப்பழைய சமயமாகச் சைவம் விளங்குகிறது, என்றும்  குறிப்பிடுகின்றார்.

திருவாசக ஆங்கில மொழி பெயர்ப்பு செய்த G.U.போப்................
சைவம், தென்னிந்தியாவின் மிகப்பழைய, வரலாற்றுக்கு முற்பட்ட சமயம் ஆகும்; அது ஆரியருக்கு முற்பட்ட காலத்திலிருந்தே வழக்கில் இருந்து வருகிறது,      இந்தியாவில் உள்ள சமயங்கள் அனைத்திலும் சைவ சித்தாந்தமே மிக மேம்பட்டது என்பதில் ஐயம் இல்லை, என்றும் கூறுகிறார்.

இந்தியப் பண்பாட்டில் திராவிடக் கூறுகள் என்னும் நூலில், G. சிலேட்டர் …..................
காளியும் சிவனும் திருமாலும் வேத காலத்துக் கடவுளர்கள் அல்லர்; எனவே அவர்கள் ஆரியர்களைச் சேர்ந்தவர்களும் அல்லர். அவர்கள் திராவிடர்களைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தவிர வேறு முடிவுக்கு வருவதற்கு இல்லை என்று  குறிப்பிடுகின்றார்.

முனைவர் கபில சுவபில்.................. மனித சிந்தனைகளில் மிக முழுமையான, அறிவார்ந்த சிந்தனை சைவ சித்தாந்தமே!

H.R Hoyzington,the founder of church of South India ( CSI) ,சைவ சித்தாந்தத்தில் காணப்படும் மெய்யியல் உண்மைகள் கிரேக்க மெய்யியலிலோ இலத்தீன் மெய்யியலிலோ காண முடியாதவை.

சைவசமயம் எல்லாச் சமயங்களையும் தனக்கு அங்கமாகக் கொண்டு தாயகமாய் விளங்குவது. எந்தச் சமயத்தையும் புறக்கணிக்காது தழுவி நிற்கும் சமரசமுடையது. ஆனால் இந்துமதம் அப்படியல்ல. இரண்டாயிர, ஆண்டு வரலாற்றை உற்று நோக்கினால்.........

ஆனாலும் மேலே சொல்லப்பட்டவர்களின் கருத்துகளில் ஒன்றைக் கவனிக்க முடியும்.அதாவது சைவ சமயம்-சைவ சித்தாந்தம் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் வள்ளுவனுக்கு பின்னரே தமிழர்கள் மறை என்ற ஒன்றைத் தொடங்குகிறார்கள். அதற்கு முன்னர் ஒன்றே குலமும் ஒருவனே தேவன் என்ற கோட்பாட்டுடன் வாழ்ந்ததாகவே தெரிகிறது.

தமிழர்கள் மறைக் கருத்துகள்-பின்பற்றல்கள் தொடர்ந்தனவே தவிர, யாரும் மதத்தை உருவாக்கியதாக வரலாற்றில் காணமுடியவில்லை.

மோசஸ் காலத்திற்கு முன்னரும் பின்னரும் இஸ்ரயேல், அரபு நாடுகள், எகிப்து, ரோம், கிரேக்கம் எங்கும் கடவுட் கொள்கைகளை வைத்து அடித்துக் கொண்டார்கள், போரிட்டார்கள் என வரலாறும்; அதே சமயம் தமிழர் நிலங்களில் சமயச் சண்டைகள் போர்கள் நடந்ததாகத் தெரியவில்லை.

ஆனால் சித்தர்கள் சமாசம் என்ன சொல்கிறது?

தொடரும்........................
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

எப்படி மதம் தோன்றியது?உலகின் முதல் மறை எது? பகுதி -5 ( 19 - 20 - 21 - 22 - 23  ) Empty Re: எப்படி மதம் தோன்றியது?உலகின் முதல் மறை எது? பகுதி -5 ( 19 - 20 - 21 - 22 - 23 )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum