TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்

Go down

தினம் ஒரு திருக்குறள்- படிப்போம் Empty தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்

Post by வாகரைமைந்தன் Mon Jul 18, 2022 12:20 am

தினம் ஒரு திருக்குறள்- படிப்போம் 18072022

முதல் 10 திருக்குறள் பாடல்கள்-கடவுள் வாழ்த்து-தினமும் ஒரு குறள் படிக்கலாம்.

குரல்....டி.எல்.மகாராசன்,சைந்தவி,மகதி,பிரபாகரன்,எஸ்.பி.தேவராசன்
இசை...டி.வி.ரமணி



Last edited by வாகரைமைந்தன் on Sun Jul 31, 2022 1:07 pm; edited 1 time in total
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1696
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு திருக்குறள்- படிப்போம் Empty வான் சிறப்பு

Post by வாகரைமைந்தன் Sun Jul 24, 2022 7:30 pm

தினம் ஒரு திருக்குறள்- படிப்போம் 25072022

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1696
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு திருக்குறள்- படிப்போம் Empty நீத்தார் பெருமை - அதிகாரம் 3 - அறத்துப்பால்

Post by வாகரைமைந்தன் Sun Jul 31, 2022 1:05 pm

தினம் ஒரு திருக்குறள்- படிப்போம் 1082022
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1696
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு திருக்குறள்- படிப்போம் Empty திருக்குறள்

Post by வாகரைமைந்தன் Sun Aug 07, 2022 3:04 pm


சங்க இலக்கியத்தின் வலுவான பின்புலத் துணையுடன் புதிய யாப்பில், புதிய முறையில், பல புதுமைக் கருத்துக்களோடு சமூக முன்னேற்றத்தை அடிப்படை நோக்கமாகக் கொண்டு பொருட்பெருக்கமும் சொற்சுருக்கமும் கொண்ட தனிச்சிறப்புடன் எழுதப்பட்ட ஒப்புயர்வற்ற நூல் குறள். இது அற நூல், மெய்யியல் நூல், இலக்கிய நூல், அரசியல் நூல், இன்ப நூல், வாழ்வியல் நூல் என்ற பல பரிமாணங்களை உடையது.


குறள் யாக்கப்பட்டது புலவர்களுக்காகவோ அறிஞர்களுக்காகவோ அல்ல. யாரையும் குறிப்பாக நோக்காமல் எல்லா நிலையில் உள்ள உலக மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வண்ணம் எளிய நடையில் படைக்கப்பட்ட பனுவல் ஆகும் இது.
மனிதன் பலவேறு நிலமைகளில் கொள்ளவேண்டியவற்றையும் தள்ளவேண்டியவற்றையும் கூறி, நாட்டிலே நல்லாட்சி ஏற்பட, இல்வாழ்வான் சான்றாண்மையுடனே குடிமையை நடத்தி, இன்பம் நுகர்ந்து, வாழ்வாங்கு வாழ வழி கூறுவது நூலின் நோக்கமாகும்.


நூல்

திருக்குறள் என்பது அழகிய குறள் வெண்பாவினால் ஆகிய நூல் எனப் பொருள்படும். திரு என்னும் அடைமொழி ஒவ்வொரு குறளையும் சிறப்பித்து நிற்கிறது. இந்நூலை வள்ளுவர் குறட்பாக்களால் கூற எடுத்துக்கொண்டதால், சுருங்கச்சொல்லல், விளங்கவைத்தல், நவின்றோர்க்கினிமை, நன்மொழி புணர்த்தல் முதலான அழகுகள் இனிதாக அமைந்தன. ஏழு சீர்களில் எதுகை மோனை இன்பத்துடன், இலக்கியச் சுவை மிக்க, கவித்துவம் ஒளியிடும் நுலாக அமைந்துள்ளது. குறட்பாக்கள் அனைத்தும் கேட்டாரை மீண்டும் தம்மை நோக்கி நோக்கப் பயன்கொள்ள நிற்கும் நிலைமை வாய்ந்தன.


பதினெண்கீழ்கணக்கு

சங்க கால இலக்கியங்களில் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சேர்ந்து பதினெண்மேல்கணக்கு என்று பகுத்துக் காட்டப்பட்டது. சங்கம்/சங்கம் மருவிய கால பதினெட்டு நூல்களின் தொகுப்பு பதினெனண்கீழ்க்கணக்கு எனப்பெயர் பெற்றது. ஏறத்தாழ 500 ஆண்டுகளில் எழுதப்பட்ட பலவேறு சிந்தனை நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்ற ஒரே தொகை நுல்களாயின. கீழ்க்கணக்காவது- பெரும்பாலும் ஐந்தடியின் மிகாத பாடல்களால், ஐம்பதில் குறையாமல் ஐந்நூற்றில் மிகாமல், வெண்பா யாப்பில் அமைவது- என்ற இலக்கண வரையறையில் நூல்வகைப் படுத்தினர் என்று பழம் செய்யுட்களால் தெரியவருகிறது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பன்னிரண்டு நீதி நூல்கள். இவை யாவும் வெண்பாக்களால் ஆனவை. திருக்குறள் எழுசீர் வெண்பாவாகும். இந்நூல்களின் பாடல் மற்றும் யாப்புவகை ஒருதன்மைத்தானது எனக் கொள்ளப்பட்டு பதினெண்கீழ்க்கணக்கு என்ற இந்தத் தொகுப்பில் திருக்குறளையும் சேர்த்து விட்டனர்.


குறள் வெறும் நீதிநூல் எனப் பிற்காலத்தவர் முடிவு எடுத்துப் பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாகத் தொகுத்துள்ளனர். பதினெண்கீழ்க்கணக்குத் தொகுதி முறையே மிகத்தவறானது என்று ஆய்வாளர்கள் கருதுவர். இத்தொகுதியினுள் சங்க நூல்களும் சங்கம் மருவிய நூல்களும் இருக்கின்றன. குறள் இத்தொகுப்பில் கண்ட ஏனைய 17 நூல்களுக்கும் முற்பட்டது. மற்ற நூல்களின் பழமையையும் கருத்தையும் உயர்த்தவே குறள் இவைகளோடு இணைக்கப்பட்டதா? குறள் ஐந்நூறில் மிகுந்த ஆயிரத்து முந்நூற்று முப்பது பாடல்களால் ஆனது; எந்த வகையில் குறளை பதினெண்கீழ்க்கணக்குத் தொகை நூல்களில் ஒன்றாகப் பகுத்தார்கள்? என்ற கேள்விகள் எழுகின்றன.


அத்தொகுதியில் சேர்க்கப்பட்டதால் திருக்குறளின் உள்ளார்ந்த மெய்ப்பொருளும், நுவல் பொருளும், மறுமலர்ச்சிச் சமுதாயத்தைப் படைக்கும் புதுமைக் கொள்கைகளும், மறைக்கப்பட்டு, திரிபு படுத்தப்பட்டுத் தோற்றம் தருகிறது என்றும் இதனால் குறள் வெறும் நீதி நூலாகவும் சிற்றிலக்கியமாகவும் வடமொழி வழிநூல் கருத்துக்களின் தொகுப்பாகவும் திசை திருப்பப்பட்டு விட்டது என்றும் அதன் நுண்மாண் நுழைபுலத் திறன்கள், அஃகி அகன்ற அறிவுக் கோட்பாடுகள், உண்மைப் பொருள் விளக்கங்கள் நமக்குத் தரப்படவேயில்லை என்றும் பதினெண்கீழ்க்கணக்கில் சேர்க்கப்பட்டதால் குறளுக்குப் பிறழ்ச்சியும் அநீதியும் நேர்ந்தன என்பார் கு ச ஆனந்தன்.


தனிப் பெருமை வாய்ந்த திருக்குறளை பதினெண்கீழ்க்கணக்கினுள் ஒன்றாக்கிக் மற்ற ஏனைய சிறு நூல்களில் ஒன்றாய்க் கூறியது பொருத்தமற்றது. குறளைத் தொகை நூல்களில் ஒன்றாகப் பார்க்காமல் தனி நூலாகப் பார்ப்பதே ஏற்புடையதாகும்.
முப்பால்

சங்ககாலத்தில் தமிழ் மரபைச் சார்ந்த இலக்கியக் கோட்பாடு அகம், புறம் என்றிருந்தது. வடநூலார் அறம், பொருள், இன்பம், வீடு என்று நான்கு உறுதிப் பொருட்களைச் சொல்கிறார்கள். சில சஙகப்பாடல்கள் முப்பொருள் பற்றிப் பேசின.
அந்நிலை மருங்கின் அறமுத லாகிய
மும்முதற் பொருட்கு முரிய வென்ப (செய். 105)என்று தொல்காப்பியமும்
அறமும் பொருளும் இன்பமு மூன்றும்
ஆற்றும் பெருமநின் செல்வம் (புற. 28)
சிறப்புடை மரபிற் பொருளு மின்பமும்
அறத்துவழிப் படூஉந் தோற்றம் போல (புற. 31) என்று புறநானூறும் கூறுகின்றன.


முப்பால் பகுப்புப் பற்றிய சோமசுந்தர பாரதியார் கருத்து இங்கு கவனிக்கத்தக்கது: "இனி, இதுவே போல், குறள் நூலும் இன்பமல்லா எல்லாப் பொருளுமே புறப்பகுதி ஒன்றிலே அடங்கும். அதை அறத்துப்பால்-பொருட்பால் என்றிரு வகையாக்க யாதோர் அவசியமும் நியாயமும் இல்லை.அது தமிழ்மரபும் ஆகாது. அறமற்ற பொருளும் பொருள் தொடர்பற்ற அறமும் கருத்தொணாதன. அது போலவே அறத் தொடர்பற்ற இன்பமும் இன்பமாகக் கொள்ளாத அறமும் தமிழறிஞர்கட்கு உடன்பாடில்லை. அறமே 'சிறப்பீனும் செல்வமும் ஈனும்' எனவும் 'அறத்தான் வருவதே இன்பம்' எனவும் பேசும் பொய்யில் புலவர் பொருளுரைகள் போற்றற் பாலனவாம். எனவே அறம், பொருள் என்ற இரண்டும் ஒன்றோடொன்று இன்றியமையாத் தொடர்புடைய வாகலும், அதனால் அவை வெவ்வேறு பொருவகைகளாகாமையும் இனிது விளங்கும்.


ஆனால், அவை அனைத்தும் அகத்தின் வேறாய புறப்பொருள் வகைகளாய் அடங்கும் என்பதும் மறுக்கொணாது. உண்மை இதுவாகவும் குறட்பொருளைத் தமிழ் மரபுக்கேற்ப அகம் புறம் என்றிருவகையாக்காமல் அறத்தை வேறு பிரித்து அறம், பொருள், இன்பம் என முப்பாற்படுத்தியதோடு, இன்பத்தைக் காமத்துப் பால் எனப் பெயரிட்டதும் உரைகாரர் குறளை வடநூல் வரன்முறையாக்கும் நோக்கத்தாலன்றி அதற்கு வேறு தக்க ஏது ஏதுவுமில்லை. மேலும் அப்பாகுபாடு குறளுக்குப் பொருள் நிறைவும் மாட்சியும் தருமாறில்லை எனக் கான்கிறோம். அது உரைகாரர் குறள் துவக்கத்தில் பாயிரம் என்று வேறு ஒரு பகுதி வகுப்பதால் தெளிவாகும். அவர் கொண்ட மூவகுப்பிலும் அடங்காத ஊழ்-உழவு-கள்ளாமை, கயமை- வரைவின் மகளிர்-மருந்து-மானம் போன்ற பலவற்றை வலிந்து பொருத்தமின்றிப் பொருள் வகையில் புகுத்தி இடர்ப்படுவதாலும் அவர் வீண் முயற்சி விருதாவாவது தெளிவும் தேற்றமுமாகும். அவை அனைத்தும் தமிழ்ப் புறப்பொருள் வகையில் அடங்கி அமைவதும் ஈண்டுச் சிந்திக்கத்தக்கதாம்."


வள்ளுவர் தமிழ் இலக்கியக் கோட்பாடோடு மேலே சொன்ன உறுதிப் பொருள்களை இணைத்துப் பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டார் போல் தோன்றுகிறது. மேலும் அறநெறியோடு இந்த உலகத்தில் வாழ்ந்தால் தானாகவே அமைவது வீடு என்பதால் சிந்தைக்கு எட்டாத வீட்டை கைவிட்டு வள்ளுவர் திருக்குறளை அறம், பொருள், காமம் என முப்பாலாய் தன் நூலில் பகுத்துக்கொண்டார் என்று விளக்கம் அளிப்பார் பரிமேலழகர்.


எனினும் குறளை ஒரே பாலாகக் கொண்டு நூல் முழுவதையுமே தொடர்ச்சியாக அறிந்து அதை ஒரு வாழ்வியல் நூலாகக் கொள்வது சிறப்புடைத்து.


குறள் அமைப்பு

இலக்கியப் படைப்புகள் சிறந்த வெற்றியினைப் பெறுவதற்குப் பாடு பொருளுடன் அவற்றின் வடிவமும் அடிப்படையாக அமையும். யாப்பின் கட்டுக்கோப்புடன் இருக்கும் இலக்கியங்கள் யாவும் இன்றும் அழியா இலக்கியங்களாக உள்ளன. எப்பொருள் எந்த யாப்பில் பாடினால் சிறக்கும் என்பதனை அறிந்த கவிஞர்கள் அந்தந்த அடிப்படையில் இலக்கிய வடிவங்களை வகுத்தனர். வெண்பா யாப்பும் அவ்விலக்கிய வடிவங்களுள் ஒன்றாகும்.


குறள் முழுமையும் குறுகிய எழுசீர் வெண்பாக்களால் ஆனது. குறட்பாக்களான வேறு ஒரு பெரிய இலக்கிய நூல் முன்பு இருந்ததாகத் தெரியவில்லை. இலக்கண நூல்கள் மட்டும் சில இருந்தனவென்று யாப்பருங்கலவிருத்தியால் தெரிகின்றது. வெண்பா பிரிவில் முதலில் வைக்கப்பட்ட பா வகை குறட்பா ஆகும். குறள் என்பது குறுமை - குறுகியதைக் குறிக்கும். குறுகிய பா குறட்பா. இது குறுவெண்பாட்டு என்றும், குறள் வெண்பா என்றும் சொல்லப்படும். முதல் அடி நான்கு சீரும், இரண்டாம் அடி மூன்று சீருமாக ஏழு சீர் கொண்டது குறள் வெண்பா. எளிதில் ஓதும் வண்ணம் பெரும்பான்மையும் ஓரசை முதல் மூன்றசைகளுடைய் எழுத்துக்களால் அமைந்துள்ளன. ஒவ்வொரு குறளும் முப்பதுக்குட்பட்ட எழுத்துக்களால் ஆனது. ஈற்றடியிலுள்ள இறுதிச்சீர், நேர், நிரை, நேர்பு, நிரைபு என்னும் நால்வகை அசையுள் ஓர் அசையாய் நிற்கும்.


"வெண்பாவில் வேற்றுச் சீர்கள் கலந்துவிட்டால் ஓசை கெட்டுப் போகும். உயர்ந்த ஒழுக்கத்தை வரையறுக்கும் நூலுக்கு வேற்றுச்சீர் விரவினும் ஓசை கெடும்; வெண்பா பாடுபவனுக்குத் துன்பம்; படிப்பனுக்கு எளிது. வெண்பாவை இருமுறை படித்தாலே பாடம் வந்துவிடும்; சிறந்த கருத்துக்களத் தாங்கி நிற்கும் பாக்களும் பயில்வார் மனத்தில் எளிதில் பதிய வேண்டும் என்பதால் வெண்பா யாப்பு வள்ளுவரால் விரும்பப்பெற்றது; வெண்பாவிற்கு உரிய ஓசை செப்பலோசை; செப்பல் என்றால் சொல்வது என்று பொருள்; அறக்கருத்துகளை எடுத்துச்சொல்வதற்கு செப்பலோசையுடன் பிற தளைகள் கலவாத தூய்மையுடையதாக வெண்பா கருதப்பட்டது."- இவை ச தண்டபாணி தேசிகர் கூறும் விளக்கங்கள்.


திருவள்ளுவர் தம்நூலை எல்லோரும் ஓதி உணர விரும்பியதால் செய்யுள் வழக்கினை மட்டும் மேற்கொள்ளாமல் பேச்சு வழக்கினையும் பின்பற்றிச் சென்றார்.


பகுப்பு

இந்நூலில் பெரும் பிரிவு பால் எனவும், சிறு பிரிவு இயல் எனவும், அதனில் சிறு பிரிவு அதிகாரம் எனவும் அமைக்கப் பெற்றுள்ளது.


பால்: பகுதி என்னும் பொருள்பட்டது.


இயல்: இலக்கணம் என்ற பொருள் கொண்டு பாலின் உட்பகுதியாகிய 'கற்பியல்' போன்றவற்றின் இலக்கணம் உணர்த்தும்.


அதிகாரம்: இயலின் உட்பிரிவாகி அதிகரித்தல் உடைய பகுதி எனப் பொருள்படும். ஏனைய நூல்களில், இப்பெயர் பெரும் பிரிவிற்கே வழங்கியிருக்கிறது. குறித்த பத்துக் குறளிலும் அந்தப் பொருள் அதிகரித்து நிற்பதால் இப்பெயர் இடப்பெற்றிருக்கலாம் என்கிறார் ச தண்டபாணி தேசிகர்.
பாக்கள்- ஒவ்வொரு அதிகாரமும் பத்து குறள்களை உடையது. இவ்வாறாக 133 அதிகாரங்களுக்கு மொத்தம் 1330 குறட்களால் ஆனது இந்நூல்.
ஒவ்வொரு குறளும் முப்பதுக்குட்பட்ட எழுத்துக்களில் அமைந்தவையாய் உள்ளது.


குறள் அமைப்பொழுங்கை நினைவிற்கொள்ள:
நூல் - 1 ; பால் - 3 ; இயல் - 13; அதிகாரம் - 133; பாக்கள் - 1330
குறளைப் பெரும் பிரிவாகப் மூன்று பாலாகப் பிரித்தாலும், அறமே மூன்று பகுதியாகப் பிரிக்கப்பட்டு, ஒழுக்கம் பற்றிய அறமும், பொருளீட்டல் பற்றிய அறமும், இன்பம் பற்றிய அறமுமாக இயற்றப்பட்டதாக அறிஞர்கள் கருதுவர்.


குறளின் பகுப்பு முறையும் மிகுந்த ஐயப்பாட்டுடனே நோக்கப்படுகிறது. திருக்குறள் மூலநூல் அதன் ஆசிரியரால் செய்யப்பட்ட மெய்யான பகுப்புக்களுடன் இன்றுவரை முழுவடிவில் கிடைக்கவில்லை. திருக்குறளின் முப்பால் முறையும், இயல்கள் பகுப்பும் அதிகார அடைவும் வள்ளுவரால் செய்யப்பட்டனவா? திருக்குறள் என்ற பெயரோ முப்பால்களின், இயல்களின் அதிகாரங்களின் தலைப்புக்களோ குறட்பாக்களைத் தொகுத்தவர்கள் தந்தனவா? பாக்களையும் அதிகாரங்களையும் வரிசைப்படுத்தியது வள்ளுவர்தானா? என்ற ஐய வினாக்கள் எழுப்பப்ப்ட்டுள்ளன..


உரை ஆசிரியர்கள் வழியும் திருவள்ளுவமாலை பாடியவர்கள் வழியும் பால், இயல், அதிகாரம், பாக்கள் ஆகியவற்றின் துணையுடன்தான் அமைப்பு முறையைக் கணிக்க முடிகிறது. பாக்கள் இயற்றி அதிகாரப் பெயரிட்டுப் பகுப்பு செய்தது வள்ளுவர்தான் என்பதில் பெரும்பாலும் எல்லா ஆய்வாளர்களும் உடன்படுகின்றனர். ஆனால் இயற்பகுப்பு, அதிகார வரிசை, குறள் உட்பகுப்பு, முறை வைப்பு இப்பொழுது உள்ளபடியே மூலநூலில் இருந்தது என்று சொல்ல முடியாதிருக்கிறது. இவற்றில் உரைகாரர்கள் வேறுபடுகின்றனர். எனவே இவை உரைகாரர்களது பிற்காலப் படைப்பே என்று ஆய்வாளர்கள் கருதுவர்.


பரிமேலழகர் பகுத்தபடி 9 இயல்கள்.
அறத்துப்பால்: (38 அதிகாரங்கள்)
1. பாயிரம்- 4அதிகாரங்கள்;
2.இல்லறவியல்- 20அதிகாரங்கள்;
3.துறவறஇயல்-13அதிகாரங்கள்;
4.ஊழ்-1அதிகாரம்.


பொருட்பால்: (70அதிகாரங்கள்)
5.அரசியல்-25அதிகாரங்கள்;
6.அங்கவியல்-32அதிகாரங்கள்;
7.ஒழிபியல்-13அதிகாரங்கள்.




காமத்துப்பால்: (25அதிகாரங்கள்)
8.களவியல் (7 அதிகாரங்கள்);
9.கற்பியல் (18 அதிகாரங்கள்)
மேற்சொன்னபடி மொத்தம் 133 அதிகாரங்களாகும்.


பரிமேலழகர் பகுப்பு முறையே பெரும்பாலும் பின்பற்றப்படுகிறது. ஆனால் “வள்ளுவரது முறையை உணர்வதற்குப் பரிமேலழகரைக் காட்டினும் பிற உரைகாரர்களே நாம் நம்பித் துணையாகக் கொள்வதற்கு உரியன. மணக்குடவர் நமக்கு துணையாகலாம் என்று தோன்றுகிறது. இவரது செய்யுள் வைப்புமுறை பெரும்பாலும் வள்ளுவரது ஆகலாம். ஆனால் இவர் உரை கிடைக்கக்கூடும் பிரதிகள் அனைத்தையும் ஒப்பு நோக்கி ஆராய்ச்சி முறையாகப் பதிப்பிக்கப்பெறவில்லை” என வையாபுரிப்பிள்ளை தனது ஆய்வுக் கருத்தில் சொல்கிறார்.


71,110 ஆகிய இரண்டு அதிகாரங்களுக்கும் 'குறிப்பறிதல்' என்ற பெயரே உள்ளது. எனவே 132 தலைப்புகளே 133 அதிகாரங்களுக்கு உள்ளன. காலிங்கர் தம் உரையில், 110-ம் அதிகாரத்தைக் 'குறிப்புணர்தல்' என வேறு பெயரில் குறிக்கிறார்.


பாயிரம்

பாயிரம் என்பது நூலைப் பற்றிய பருப்பொருள்களை அறிவிப்பது. பாயிரத்தால் நூற்போக்கு அறியப்படும். குறளின் முதல் நான்கு அதிகாரங்களான கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்பனவற்றைக் கூட்டாக பாயிரம் என்று கூறுவர். குறளின் கடவுள் வாழ்த்திற்கும் ஏனைய நூல்களின் கடவுள் வாழ்த்திற்கும் வேறுபாடு உண்டு. ஏனைய நூல்களில், எடுத்துக்கொண்ட நூல் இனிது நிறைவேறுதற்காகவும் நின்று நிலவுதற்காகவும் கவிஞர் கடவுளை வாழ்த்துவர். இந்நூலில் கடவுளின் பொது இயல்பும், சிறப்பியல்பும் கூறி, அவரை வாழ்த்துததால் உண்டாகும் பயனும் கூறப்படுகின்றன.


குறளில் கடவுளை வாழ்த்துதலும் தலையாய அறம் அல்லது ஒழுக்கம் என்பது உணர்த்தப் பெற்றதேயன்றி, ஏனைய நூல்களைப் போலப் பயன் கருதிக் கடவுள் வாழ்த்தப்படவில்லை. கடவுளை வாழ்த்தாமல், கடவுளை வாழ்த்துதல் கற்றவருக்கும் மற்றவர்க்கும் உள்ள கடமை என்று அதனையும் ஓர் ஒழுக்க இயலாக வள்ளுவர் உரைத்தார்.


பாயிரத்திலுள்ள நான்கு அதிகாரங்களுமே வள்ளுவரால் இயற்றப்படவில்லை என்று ஒரு சாரார் கூறினர். வான் சிறப்பு அதிகாரம் எந்த வகையில் பாயிரத்தில் சேர்க்கப்பட்டது என்றும் வினவப்படுகிறது. ஆனால் அவர்கள் கூற்றில் வலு இல்லை என்பதும் பாயிரம் வள்ளுவர் இயற்றியதே என்பதுமே பெரும்பன்மையோர் கருத்தாகும்.


மூலநூலா? வழிநூலா?

திருக்குறளின் முதல்நூல்கள் எவை என்று ஆராய்ந்தவர்கள் மேம்போக்காக சில அடிப்படை உண்மையற்ற முடிவுகளைக் கூறினர். அவற்றில் ஒன்று குறள் வடமொழி இலக்கியங்களின் வழிநூல் என்பதாகும்.


தமிழ்நூல்களில் சங்க இலக்கியங்களும் தொல்காப்பியமும் எப்படி குறளுக்கு முன்னோடியாக வழிகாட்டி நூல்களாக இருந்திருக்கின்றனவோ அதேபோல சில வடமொழி இலக்கியங்களின் தாக்கமும் குறளுக்கு இருந்திருக்கலாம். எல்லா நூல்களும் பல்வேறு நூல்களிலிருந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு பிறப்பனவே என்ற புரிதலில் இருந்து எழும் எண்ணமாகவும் இது இருக்கக்கூடும். குறள் ஒருவரால் இயற்றப்பட்டதா? அல்லது பலரின் கூட்டு முயறசியால் நாலடியார் போல உருவான தொகை நூலா? என்றுகூட சிலர் ஐயுற்றனர். பரந்துபட்ட பல்வேறு துறைகளுக்குரிய விழுமிய கருத்துக்களை ஒரு தனிப் புலவரால் எடுத்துரைக்க இயலுமா என வியப்புற்றுதால் எழுந்த வினாக்களே இவை. "எல்லா நூல்களிலும் நல்லன வெடுத்து எல்லார்க்கும் பொதுப்படக் கூறுதல் இவர்க்கியல்பு" என்னும் பரிமேலழகர் (குறள் 322) கருத்துரை இங்கு நோக்கத்தக்கது.


குறள் எப்படி வடநூலின் வேறுபடுகிறது?

வள்ளுவர் செய்த பனுவலில் வடநூலார் வழிகாட்டும் வீடில்லை .
பெற்றோரும், மனைவி, குழந்தைகள் பசியால் வருந்துவராயின் தீயன செய்தாயினும் புறந்தருக என்பதும் இறக்க நேர்ந்தால் இளிவந்தன செய்தாயினும் உய்க என்பது வடநூன்முறையாகும். ஆனால் குறளோ உடம்பினது நிலையின்மையை வலியுறுத்தியும் மானத்தினது நிலையுடைமையைத் தூக்கியும் 'ஈன்றவள் பசி காண்பாளாயினும் சான்றோர் பழிக்கும் வினையைச் செய்யற்க' என்கிறது என்பதைப் பரிமேலழகர் சுட்டிக்காட்டியுள்ளார்.


சாணக்கியரும் சுக்கிரநீதி நூலுடையாரும் தத்தம் பொருள் நூல்களிற் கள்ளினை சிறிதளவுண்ண இடம் கொடுத்திருக்க, திருவள்ளுவர் கள்ளுண்ணாமையை நன்கு வற்புறுத்திச் சொல்லியுள்ளார். சுக்கிரநீதி சிறிதளவு உண்ணப்படும் கள் மதி நுட்பத்தையுந் தருவதாகும் என்கிறது. குறள் கள்ளுண்பவரைச் சாடி அவர்களைச் செத்தார் என்கிறது.


பிறப்பால் உயர்வும் பீடில்லாத் தாழ்வும் மக்களுக்கு என்றும் மாறா நிலையில் உள்ளது என்று கூறி சாதிக்கொரு நீதி விதித்தது வடவர் நூல்கள். அதை மறுத்து ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ என்று முழங்கும் குறள் பிறப்பாலுரிமையும், சாதி நீதியும் பேசாது மட்டுமல்ல; ‘பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்’ என்று நம் சமுதாயக் கொள்கையையும் வரையறுக்கிறது.


எல்லா ஸ்மிருதிகளும் நான்குவருணங்கள் நான்கு புருஷார்த்தங்கள் நான்கு ஆசிரமங்கள் இவற்றைப்பற்றியே விரித்துரைக்கின்றன. ஒரு நீதிநூலை இன்னொன்றுடன் நாம் வேறுபடுத்திப்பார்ப்பது எவ்வகையில் அது இந்த பொதுமையில் இருந்து வேறுபடுகிறது என்பதை வைத்தே. குறள் நான்குவருணங்களைப் பற்றிப் பேசவே இல்லை. நான்கு புருஷார்த்தங்களில் வீடுபேறை விட்டுவிட்டது.


ஆல்பர்ட் சுவைட்சர் என்ற ஜெர்மனி நாட்டைச் செர்ந்த உலகப் புகழ் பெற்ற அறிஞர் "பண்டைக்கால இந்தியாவில் திருக்குறளில் காணாப்படுவதைப் போன்ற அன்புவழிப்பட்ட செயல்முறை வாழ்க்கையும், வாழ்க்கை மறுப்பு இன்மைக் கோட்பாடும் புத்த,(சமண)சமயத்திலோ, பகவத்கீதை வழி வளர்ந்துள்ள இந்து சமயத்திலோ இடம் பெறவில்லை" என்று தெளிவுபடக் கூறியுள்ளார்.


இவை குறளுக்கும் வடநூலார் மரபுக்கும் உள்ள வேற்றுமைகளில் ஒருசில. இதுவே குறள் வழிநூல் அல்ல; அது தனித்தன்மை வாய்ந்த மூலநூலே என்பதைத் தெள்ளிதின் விளக்கும்.


குறளின் சிறப்புக்கள் சில

தானே முழுது உணர்ந்து தண்தமிழில் ஓதற்கும் உணர்தற்கும் எளிதான குறளைப் படைத்தார் வள்ளுவர். “மிக எளிய நடை; பளிங்கு போலத் தெளிவாகத் தோன்றும் சிந்தனை, பொருத்தமான, அழுத்தமான, சிறிய தேர்ந்த சொல்லாட்சி, ஆழமான கல்வி, பண்பாடு, ஞானம், விரிந்து பரந்த மனப்பான்மை, தேவையானவற்றையெ தேர்ந்து தரும் திறம், மேன்மையான நகைச்சுவை, முழுமையான அறவுரை ஆகிய அனைத்தும், சேர்ந்து, அவரை எக்காலத்திலும் தொழத்தக்கவராய் ஆக்கியுள்ளன; தமிழ் மக்களின் மறைநூலாக அவரது நூல் மதிக்கப்படுகிறது.” என்று எஸ். வையாபுரிப் பிள்ளை குறளுக்கு ஒரு தெளிவான திறனுரை தந்துள்ளார்.


வள்ளுவர் தாம் கூற விரும்பும் பொருளை நன்கு உணர்த்துவதற்குப் பல்வேறு உத்திகளையும் மொழி நடைகளையும் பயன்படுத்துகின்றார். முன்னிலைப் படுத்தி விளித்தலையும், ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினா-விடைப் பாணியில் உரையாடல்களை அமைத்தலை ஒருவகைக் கலைத்திறனாகக் கையாண்டுள்ளார். உபநிடதங்கள், புத்தரின் போதனைகள், பிளேட்டோவின் உரையாடல்கள் போன்ற மெய்யியல் நூல்களும் இந்த உத்தி பின்பற்றப்படுவதை அறிஞர்கள் சுட்டிக்காட்டுவர்.


நூல் மிகச்சிறந்த அமைப்புடையது. மிக அரிய செய்திகளை வரையறைப்படுத்திச் சுருக்கமாக கூறுகிறது. சொல் வளனும், பொருட்சிறப்பும், நுண்ணோக்கும், அணி நலனும், ஓசையொழுக்கும், ஆழ்கருத்தும் ஒருங்கு நிறைந்தது குறள். சொல், தொடர், குறிப்புப்பொருள் எனப்பலவற்றில் நுட்பமான உத்திகளைப் பயன்படுத்திச் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது குறள். நூல் முழுவதும் உயர்வு நவிற்சியையோ, இல்பொருளையோ எடுத்துக் கூறாது பெரும்பாலும் தன்மை நவிற்சியாக இயற்கையோடு பட்டு, மக்கள் மனத்தில் தைக்குமாறு அழகுற எளிய நடையில் உவமைகளை ஆண்டுள்ள திறம் வியக்கவைக்கும். இப்பனுவலில் தமிழின் இனிமை உண்டு; தத்துவத்தின் தெளிவுண்டு; வாழ்க்கையின் விளக்கமுண்டு; உணர்வும் உண்மையும் ஒன்றி இருக்கும்; அறத்தோடு பொருளும் பொருளோடு இன்பமும், இன்பத்தோடு அறமும் பொருந்திக் கிடக்கும்; இனிமையும் எளிமையும் இணந்திருக்கும்; ஆழமும் அகலமும் அமைந்திருக்கும்.


சமயத்திலும் வாழ்க்கையிலும் மேல்நாட்டார் பெரும்பாலும் உலகையும் வாழ்க்கையயும் ஏற்றுக்கொள்ளுதல் (World and Life Affirmation) என்ற கோட்பாட்டையே பின்பற்றுகின்றனர் எனவும் இந்தியரோ பெரும்பாலும் உலகையும் வாழ்க்கையையும் மறுத்தல்(World and Life Negation) என்ற கோட்பாட்டைத் தழுவுகின்றனர் எனவும் மெய்யியல் அறிஞர் ஆல்பர்ட்டு சுவெட்சர் கருதினார். பிறப்புக்களினின்று விடுதலையடைதல் வேண்டும் என இந்தியச் சமயங்கள் கற்பிப்பதால் வாழ்க்கையும் உலகும் துன்பமானவை அல்லது குறையுள்ளவை என அவற்றை மறுத்து விடுதலையைத் தேடுதல் இந்திய மக்களின் நோக்கமாகிறது.


உலகையும் வாழ்க்கையையும் மறுத்தல் என்னும் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளும் மக்கள் தீமை செய்யாமையையே சிறந்த அறமாகக் கொள்வார் அன்றி நன்மையைச் செய்தலாகிய அறங்களில் அதிகம் கருத்தைச் செலுத்தார். தீமை செய்யாமை ஒருவரை உலகினின்றும் காக்கிறது; நன்மை செய்தாலோ ஒருவரை உலக வாழ்க்கையில் ஈடுபடும்படி செய்யும். ஆகவே உலகையும் வாழ்க்கையையும் மறுக்க விழைவோர் தீமை செய்யாது தம்மைக் காத்துக் கொள்வாரேயன்றி நன்மை செய்தல், பிறர்க்கு உதவி செய்தல், பிறர் துன்பம் நீக்குதல் ஆகிய அறச் செயல்களில் போதிய அளவு ஈடுபடார் என சுவைட்சர் கருதினார். குறளை நன்கு ஆய்ந்துணர்ந்த சுவைட்சர், பிற இந்திய மொழி நூல்கள் வாழ்வின் நிலையாமையை வலியுறுத்தக் குறளோ வாழ்க்கை வாழ்வதற்கே என்ற உடன்பாட்டு நிலையை வலியுறுத்தும் நூல் என்று கூறினார்.


உலகமும், உயிர்களும், மானிட வாழ்வும் கனவுமல்ல, பொய்யுமல்ல, மாயையுமல்ல. மாறாக அவை மனிதன் உணரக்கூடிய உண்மையே என்னும் உடன்பாட்டுக் கொள்கையை ஏற்றுக் கொண்டு, மனிதனைச் செயற்பாட்டு வாழ்வில் நின்று ஒழுகச் செய்வதற்கு ஊக்கமளித்திடும் நெறியாகவும் குறளறம் மாட்சிமை கொண்டு விளங்குகிறது.


பொருளும் காமமும் பெரிதாகக் கொண்ட நூலை வெறும் அறநூலென்பது தவறு. குறள் ஒரு அறநூல் மட்டுமல்லாது கவிச்சுவையோடு கூடிய வாழ்வியல் நூலுமாகும். மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத பல கருத்துக்களைக் கொண்டு, சமயம், காலம், இடம், இனம் என்ற வேறு பாட்டுக்கு அப்பாற்பட்ட அடிப்படையான உண்மைகளச் சொல்லுகிறது. அற நூல் என்பதற்கும் வாழ்வு நூல் என்பதற்கும் நிரம்ப வேறுபாடு உண்டு. அற நூல்கள் பல சமயச் சார்பும் அறநெறியை விதிகளாக வகுத்துக் கூறும் போக்கும் மிக்கன. குறள் அறக்கருத்துகளைக் கூறும் வகையில் மட்டும் அற நூலுடன் ஒற்றுமை உடையது என்பதைத் தவிர தனக்கெனப் பல தனித் தன்மைகளை உடையது. பொருட்டொகையாலும், முறைவகையாலும் குறளுக்கு ஈடான நூல் வேறொன்று இல்லை.


இன்றைய காலகட்டத்தின் குடியரசுப் பண்புகளுடன் ஒத்துப்போகின்றவையாக குறட்பாக்கள் இருக்கின்றதையும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.


மனித வாழ்க்கையினை உயர்ந்த வழியில் அமைத்துக் கொள்ளுவதற்கு அடிகோலும் நூல் இது. பொதுவாக உலகில் வழங்கிவரும் எல்லா அற நூல்களும் இறை வழிபாட்டினையும் தத்துவார்த்தமான சிந்தனையுடன் போதனை நுலாக மட்டுமே உள்ளன. ஆனால் திருக்குறள் மனிதன் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய நெறிகள் அனத்தையும் கூறும் நடைமுறை நூலாகும்.



வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1696
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு திருக்குறள்- படிப்போம் Empty அறன் வலியுறுத்தல் - அதிகாரம் 4 - அறத்துப்பால்

Post by வாகரைமைந்தன் Sun Aug 07, 2022 3:08 pm

தினம் ஒரு திருக்குறள்- படிப்போம் 8082022

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1696
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு திருக்குறள்- படிப்போம் Empty வள்ளுவர்

Post by வாகரைமைந்தன் Sun Aug 14, 2022 11:59 am

திருவள்ளுவர் அறநெறியில் ஆழ்ந்த பற்று உடையவர்; அரசியலிலும் மற்ற உலகியலிலும் தெளிந்த அறிவு உடையவர்; கலைத்துறையில் அழகுணர்ச்சியும் கற்பனை வளமும் நிரம்பியவர்.
-மு வரதராசன்-




குறள் படைத்த வள்ளுவர் தம் நூற்பெருமையில் பெருநோக்குடையராய் இருந்தவர்; காலங்காலத்திற்கும் பின்பற்றக்கூடிய நன்னூல் படைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் நூல் யாத்தார் என்பதைக் குறள் படித்தவர் உணர்வர். சமயக் கருத்துக்களை முற்றிலும் புறந்தள்ளியதால் அவை அவரைப் பாதிக்கவில்லை. எந்தக் கட்டுக்குள்ளும் சிக்காமல் செம்பொருள் கண்டு அடிப்படையான உண்மைகளை உணர்த்தினார். அவர் தாம் யார் என்பதையும் அடையாளம் காட்டவில்லை.

திருவள்ளுவர்
தமிழுக்குப் பெருமை சேர்த்த திருக்குறளை படைத்த ஆசிரியர் வள்ளுவர். தமிழனின் பண்புகளைத் திரட்டியும், அற்றை நாளைய பண்பாட்டில் காணப்பட்ட நல்வாழ்வுக்குப் பொருந்தாதவைகளைக் களைந்தெறியும் நோக்கத்திலும், புதிதாக வெளியில் இருந்து வந்த கோட்பாடுகளிலுள்ள தாழ்வுகளைக் கண்டித்தும், உலகத்து மக்கள் அனைவருக்கும் ஏற்ற வாழ்வியல் முறைகளை குறள் மூலம் நல்கியவர்.

வள்ளுவர் அறக்கொள்கைகளில் அசையாத நம்பிக்கை உடையவராதலால், உயிர் வாழ்வைப் பொருட்படுத்தாமல் மிக உயர்வான குறிக்கோளோடு அறவாழ்வு வாழவேண்டும் என்றார். தீயன செய்வதற்கு ஒரு சிறுதளவும் இடம் கொடார். பொருளீட்டுவதிலும் காமவாழ்விலும் அறம் பேண விழைவார்.

உலகத்தோடு ஒட்டிய வழக்குகளை பின்பற்றச் சொல்லுவார். காலத்தோடும் ஊரோடும் ஒட்டிச்சென்று நல்லனவென்று கருதப்பட்டதைக் கண்டுணர்ந்து அவற்றை அறவுரைகளாகத் தந்த நூல்தான் குறள். ஆயினும் மாற்றுச் சிந்தனையாளர்; எனவே மரபுகளை மீறியும் அறிவுரை பகன்றுள்ளார். கூர்ந்து கவனிக்கிறபோது பாடல்களிடையே நிற்கும் மௌனங்களும், ஆங்காங்கே சீற்றத்துடன் வெடிக்கும் சொற்களும் வள்ளுவரின் கலக மனநிலையையும் வெளிக்காட்டும்.

பன்முகம் கொண்டவர். பரந்துபட்ட பல்வேறு துறைகளுக்குரிய விழுமிய கருத்துக்களை எடுத்துரைத்த புலவர் கோமகன் அவர்; அறத்துப்பாலில் ஒரு சான்றோராய் தோற்றமளித்து அருள்மொழி பகர்கிறார்; பொருட்பாலில் அரசியல் அறிஞராகிறார்; காமத்துப்பாலில் கற்பனை நயங்களுடன் கூடிய ஒரு நாடகக் கவிஞனாக மாறி நம்மை இன்பத்தில் திளைக்க வைக்கிறார்.

இவர் தானே முழுவதுமாக உணர்ந்து வெண்பாக் குறளால் எழுதி உருவான நூல் அறநெறி கூறுவதோடு இலக்கியச் சுவையில் நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய் உள்ளது; இவர் பாட்டின் வளம் உரைக்கின் வாய்மடுக்கும்; எல்லாப் பொருளும் குறட்பாவில் உள; இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லை; அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்தது குறள்; இந்நூல் சிந்தைக்கு இனியது செவிக்கு இனியது வாய்க்கு இனியது. இவ்வாறாக பழம் புலவர்கள் இவரது படைப்பைப் போற்றிக் கொண்டாடினார்கள்.

பிற மொழித் தாக்குதலால் தமிழ் அழிந்து போவதைத் தொல்காப்பியர் தடுத்தார் என்றால், திருவள்ளுவர், வெளியில் இருந்து வந்தவர்களது செல்வாக்கால் தமிழ்ப்பண்பாடு அழிந்து போவதை நிறுத்தி அரண் அமைத்துக் காத்தார்.

வள்ளுவர் காலம்
சங்க இலக்கியங்களிலே குறளைப் பற்றிய செய்தி இல்லை; ஆனால் சங்க இலக்கியக் கருத்துக்கள் பல குறளில் காணப்படுகின்றன. சங்க நூல்களுக்குப் பிற்பட்டதே குறள் என்று குறிப்பதாக இது அமைகிறது என்று ஆய்வாளர்கள் கூறுவர். சங்க நூல்கள் எல்லாம் ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடல்களிலே ஆக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் குறள் வெண்பாவினால் ஆகியது. இந்த யாப்பு முறையும் குறள் சங்க காலத்தைச் (கி மு 500-கி பி 200) சேர்ந்தது அல்ல என்பதற்கு ஒரு சான்றாக கருதப்படுகிறது.தற்போது நாட்காட்டியில் 2022 என்பது 2053 என திருவள்ளுவர் ஆண்டாக கொள்ளப்படுகிறது.

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க நூல்களிலே கள், புலால் உணவு, விலைமாதர் உறவு ஆகியன விலக்க வேண்டியவை என்று கூறப்படவில்லை. குறளிலே இவை கண்டிக்கப்படுகின்றன; விலக்கப்பட வேண்டியவை என்று வலியுறுத்தப்ப்டுகின்றன. இவற்றையெல்லாம் நோக்கி குறள் சங்க காலத்திற்குப் பிந்தியது என்று ஊகித்துச் சொல்லப்படுகிறது.

அடுத்து, சங்க காலம் முடிவுக்கு வந்ததை சங்கம் மருவிய காலம் (கி பி 100-கி பி 500) என்று சொல்லுகிறோம். வள்ளுவர் காலத்தை வையபுரிப் பிள்ளை கி பி 5ஆம் நூற்றாண்டுக்குக் கொண்டு செல்கின்றார். ஆனால் தெ.பொ.மீ போன்றோர்க்கு அதில் உடன்பாடு இல்லை; அக்கருத்தை மறுத்து சங்க காலம் முடிகின்ற கி பி 3-ஆம் நூற்றாண்டுக்குள் வள்ளுவர் தோன்றியிருப்பார் என்று நிறுவியிருக்கின்றனர். ஆகவே வள்ளுவர் காலம் கி பி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி பி ஐந்தாம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலம் என்று கொள்ளலாம். வள்ளுவர் சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்தவர் என்பது பெரும்பான்மையான அறிஞர்களின் முடிவு.

வள்ளுவர் குலம்,தொழில்,தோன்றிய/வளர்ந்த இடம்
வள்ளுவர் தோன்றிய குலம் பற்றியும் செய்த தொழில் பற்றியும் பலவேறு வகையான மாறுபட்ட செய்திகளுடன் பழம்பாடல்களும் புனை கதைகளும் உள்ளன.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன மாபெரும் சிந்தனையாளரின் குலம் பற்றி ஆராய்வது பொருளற்றதாகும்; அவர் செய்த தொழிலும் அவர்க்குச் சிறப்போ இழிவோ தரப்போவதில்லை.

வள்ளுவர் தோன்றிய, வாழ்ந்த இடங்களைப் பற்றியும் நிறைய ஆராய்ச்சிகளும் ஊகங்களும் காணக்கிடக்கின்றன. தோன்றிய ஊரினாலும் அவர் புகழ் கூடவோ குறையவோ போவதில்லை.
அவர் தமிழர்; அவர் தோன்றிய இடம் தமிழ்நாடு; அவர் சிந்தித்தது தமிழில்; நூல் யாத்தது தமிழில். இவை நமக்குப் பெருமை தருவன.

சங்க நூல்களின் தாக்கம்
சில அடிப்படையான மேம்பாடுடைய வாழ்வியல் கருத்துக்கள் தமிழர்களிடையே வேரூன்றி வலுப்பெற்றிருந்தன என்பது சங்க நூல்களிலிருந்து பெறப்படும். இக்கருத்துக்களின் சாரத்தையெல்லாம் உட்கொண்டு குறள் புதிய இன்னும் சீரிய செம்மையான வழியில் படைக்கப்பட்டது. சங்க நூல்களின் செல்வாக்கு எவ்வளவு ஆழமாகக் குறளில் பதிந்துள்ளது என்பதற்குப் பல சான்றுகள் உள. வள்ளுவர் பின்பற்றிய ஆசிரியர் தொல்காப்பியர் ஆவார். தொல்காப்பிய இலக்கண அமைதியைக் கொண்டே குறள் ஆக்கப்பட்டது. கணியன் பூங்குன்றனின் புகழ்பெற்ற சங்கப் பாடல் வள்ளுவரைப் பாதித்த மெய்யியல் கோட்பாடு:

யாதும் ஊரே யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவ(து)அன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா(து) என்றலும் இலமே மின்னொடு
வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொரு(து) இரங்கும் மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம்; ஆகலின், மாட்சியிற்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.(புறநானூறு:192)


(பொருள்: சொந்த ஊர் என்று ஒன்று இல்லை. எல்லாம் நம் ஊரே. உறவினர் என்று சிலர் மட்டும் இல்லை. மக்கள் எல்லாரும் உறவினர்களே. தீமையும் நன்மையும் யாரோ ந்மக்குச் செய்வனவற்றால் வருவன அல்ல. துன்புறுதலும் ஆறுதல் பெறுதலும் அவ்வாறே பிறரால் வருவன அல்ல. சாதல் என்பதும் புதுமையானது அல்ல. வாழ்தல் இன்பமானது என்று யாம் மகிழ்ந்தது இல்லை. வெறுப்பால் வாழ்க்கை துன்பமானது என்று ஒதுங்கியதும் இல்லை. பெரிய ஆற்றில் நீர் ஓடும் வழியில் ஓடும் தெப்பம் போல், உயிர்வாழ்க்கை இயற்கை முறை வழியே நடக்கும் என்பதை தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம். ஆகையால் உலகில் பிறந்து வாழ்வோரில் சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை. பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.) இந்தச் சிந்தனை குறளில் பல இடங்களில் எதிரொலிப்பதைக் காணலாம்.

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு. (கல்வி 397)

என்ற குறட்பாவில் முதலடியில் மேலே சொல்லப்பட்ட புறநானூற்றுச் செய்யுள் வரியை நேரடியாகப் பயன் படுத்தியுள்ளார்.

மற்ற பிற சங்கப்பாக்களின் கருத்திற்கு ஒப்பான குறள்களில் சில:

பகுத்தூண் தொகுத்த ஆண்மைப்
பிறர்க்கென வாழ்திநீ ஆகன்மாறே [பதிற்றுப்பத்து]
என்பது

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நுலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை (கொல்லாமை 322)
என்னும் குறளை ஒக்கும்.

பேதமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின் [பழைமை 805]
என்பது

பேதமையாற் பெருந்தகை கெழுமி
நோதக செய்ததென்றுடையேன் கொல்லோ [குறுந்தொகை 230]
என்னும் சங்கச் செய்யுளை நினைவுபடுத்தும்.
ஈதல் இரந்தார்க்கு ஒன்று ஆற்றாது வாழ்தலின்
சாதலும் கூடுமாம் மற்று [கலித்தொகை 61]
என்பது

சாதலின் இன்னாதது இல்லை இனிது அதுவும்
ஈதல் இயையா கடை (ஈகை 230.)
என்ற குறளின் பொருள்படுகிறது.

காமத்துப்பாலில் சங்கப் பாக்களின் தாக்குறவு இன்னும் மிகையாக உள்ளது.

சமயம் நீங்கிய வள்ளுவர்
நமது சிந்தனை, செயல்பாடு, நடைமுறை நிலைகளில் சமயமும், சமயச் செயல்பாடுகளும் மரபுகளும் பிரிக்க முடியாதபடி கலந்துவிட்டபடியால், இவற்றினின்று உண்மையான மெய்யியலை அறிய நாம் தவறிவிடுகிறோம். குறளையும் அந்தக் கண்ணோட்டத்திலேயே, சமயமின்றி அது நிலைக்காது என்ற நிலையிலேயே சிலர் பார்க்கின்றனர்.


குறள் எந்தச் சமயத்தையும் வழிமொழிகிறதா? பழம் புலவர் கல்லாடர் தெளிவுபடுத்துகிறார்:
ஒன்றே பொருள்எனின் வேறுஎன்ப; வேறுஎனின்
அன்றுஎன்ப; ஆறு சமயத்தார் நன்றுஎன
எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார்

முப்பால் மொழிந்த மொழி.- கல்லாடர் (திருவள்ளுவமாலை)

(பொருள்: ஆறுவகை மதத்தாரில் ஒரு மதத்தார், தாம் எழுதிய நூலிலே ஒரு பொருளின் இயல்பை இன்னது என்று ஒரு மதத்தைச் சார்ந்தவர் கூறினால், மற்றொரு மதத்தார் அதனை மறுத்து வேறு ஒரு பொருளைக் காட்டுவர். ஆனால், திருவள்ளுவர் முப்பாலில் சொன்னவற்றை அனைத்து மதத்தினரும் நன்றென்று ஏற்றுக்கொள்ள உடன்படுவர்.)

சமயக் கணக்கர் மதிவழி கூறாது
உலகியல் கூறிப் பொருளிது வென்ற
வள்ளுவன் .... - கல்லாடர் (கல்லாடம்)

(பொருள்: சமயங்களை வளர்ப்போர் தத்தம் சமயத்திற்குப் பொருந்துவன கூறுவர். அவ்வாறு கூறாமல் எல்லாச் சமயத்தார்க்கும் பொருந்தும் வழி உலகியல் கூறிய வள்ளுவர் ...)
கல்லாடர் கூற்றுப்படி எக்காலத்தினருக்கும் எக்கொள்கையினருக்கும் ஏற்றதொரு பொது நூல் குறள்.

குறள் ஒரு சமய நூல் அன்று; வள்ளுவர் சமய வழி நின்று குறளைப் படைக்கவில்லை; இது சமயச்சார்புடைய சமயப் பொதுமையை நாட்டும் நூலும் அன்று.

இங்கே சிந்தைக்கு எட்டாத 'வீடு' இல்லை; கன்மம் இல்லை; கழுவாய் இல்லை. வழிபாட்டு முறைகள், சடங்குகள், விழாக்கள்,சமயம் சார்ந்த நம்பிக்கைகள், கோவில்கள் இல்லை. "செய்யவள், செய்யாள், தாமரையினாள், தாமரைக்கண்ணன் போன்ற பெயர்கள் குறளில் கூறப்பட்டாலும் அவை வழிபடத்தக்கவகையில் வைக்கப்படவில்லை. சொல்லப்போனால், 1103 ஆம் குறளில் 'தன் தலைவியிடம் பெற்ற இன்பத்தைவிட, தாமரைக்கண்ணனின் உலகு இனியதா?' என்று தலைவன் கேட்பதிலிருந்து தாமரைக் கண்ணன் உலகை எந்தத் தளத்தில் வள்ளுவர் வைத்திருக்கிறார் என்பது நன்கு விளங்கும்.

வானோர், வானுலகம், மறுபிறப்பு பற்றிப் பேசினாலும், 'தேவர் அனையர் கயவர்' என்ற கூற்றை காணும்போது, வள்ளுவரின் நோக்கம், சொல்லும் செய்தி மக்களுக்கு எளிதில் சென்று அடைய வேண்டும் என்பதுதான் என்பது விளங்கும். ஆனால் அவர் தம் சமயத்தவர் என்று சமண, பெளத்த, சைவ, வைணவ போன்ற பல பிரிவினர் உரிமை கொண்டாடி சான்றுகள் பல கூறி வருகிறார்கள். சங்கக் கருத்துக்களை மிகையாகப் பயன்படுத்திக் கொண்டு அன்றிருந்த எந்தச் சமய கோட்பாடுகளுக்கும் சிறுதும் இடம் கொடுக்காமல் குறளை வழங்கினார்.

வள்ளுவரது சமயக் கோட்பாடு என ஒன்று தனித்து இல்லை. எந்தச் சமயத்தின் கருத்துக்களோடும் வள்ளுவர் கருத்துக்கள் முழுமையாக ஒத்து வரவில்லை. சமயக் கருத்துக்களுக்கு மாறான கருத்துக்கள் குறளில் உண்டு. மேலும் போலித் துறவிகளின் வேடங்கள் முதலியவற்றையும் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

குறளில் எந்த ஒரு குறிப்பிட்ட தெய்வத்தைப்பற்றிய குறிப்பும் இல்லை என்பது மிகத் தெளிவு. கடவுள் என்ற சொல் குறளில் எங்கும் இல்லை. ஆனால் குறளில் சங்ககாலச் சொல்லான 'அனைத்தையும் கடந்து நிற்கும் ஒன்று' என்று பொருள்படும் 'கடவுள்' உண்டு; "வாழ்க" என வாழ்த்தாது கடவுள் ஒருவர் உளர், அவரை நினைந்து வணங்க வேண்டும் என்ற கருத்துப்படக் கடவுளின் உண்மை கூறியுள்ளார்.
இவை சமயங்கள் உதவியின்றி கடவுளை அடைய முடியும் என்று வள்ளுவர் கருதினார் என்பதையே நமக்குக் காட்டுவன.

சான்றோர் வள்ளுவர்
சமணர்கள் தங்கள் நூல்களில் வைதிக சமய சடங்குகளை இழித்துப் பழித்து எழுதினர். அதுபோல் வைதிக நூல்களும் சமணர்களத் தாக்கி எழுதின. ஆனால் சான்றோராகிய வள்ளுவர், தமிழர் விரும்பாத ஆரிய வழக்குகளைப் பழிக்கமாட்டார்; புகழவுமில்லை; மக்கள் மனதில் பதிந்த ஆரிய கதை மாந்தரை குறளில் ஆங்காங்கே குறிப்பிட்டவர் ‘ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்துண்ணாமை நன்று’ என்று வேள்வியை விலக்குக என்ற பொருளில் இடித்துரைக்கவும் தயங்கவில்லை.

வள்ளுவர் அறநெறியை விதிகளாக வகுத்துக் கூறவில்லை. கடவுளின் ஆணையாகக் குறளைச் சொல்லவில்லை. குறளின் அறச் செய்திகள் மிக மென்மையான ஒலியிலே வலியுறுத்தப்படுகின்றன.
குறிப்பிட்ட சமயம், சடங்கு முதலியவற்றை வற்புறுத்தாதது போலவே தாம் போற்றிய கொள்கைகளையும் பிடிவாதமாக வற்புறுத்தித் திணிக்கவில்லை. அடிப்படை உண்மைகளை மட்டும் எடுத்துரைத்து மற்றவற்றை சிந்தனை செய்து உணரும் வகையில் தூண்டுகிறார். எந்தக் கருத்தையும் எத்தன்மைதாயினும் யார் சொன்னாலும் கண்மூடி ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பது அவர் தரும் அறிவுரை.

மாற்றுச் சிந்தனையாளர் வள்ளுவர்
மக்கள் வாழ்வில் காணப்படும் பொருந்தாத மூட நம்பிக்கைக் கொள்கைகளை எதிர்த்து போர் முழக்கம் செய்தவர் வள்ளுவர்.

சமுதாய நிலைப்பேற்றிற்கு என்ற பெயரில், வர்ணாசிரமம் என்ற மனித குலத்துக்கு எதிரான, மனித வரலாற்றின் மிகப் பெரிய மோசடி, ஆரிய செல்வாக்கால் இங்கு திணிக்கப்பட்டது. இதன்படி பிறப்பால் உயர்வும் இழிவான தாழ்வும் மக்களுக்கு என்றும் மாறாது என்று சொல்லி நால்வேறு வகையில் வாழ்க்கையுரிமை வகுத்துக் கொடுத்து சாதிக்கொரு நீதி விதிக்கப்பட்ட்து. கல்வி, புலமைச் சிந்தனை, விடுதலை வாழ்வு என்பன சாதியின் பெயரால் பெரும்பாலோர்க்கு விரும்பினும் குற்றமாகும் என்று சொல்லப்பட்டது. அதை மறுத்து

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான் (பெருமை 972)

(பொருள்: எல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை. ஆயினும் தான்செய் தொழிலினது ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது. எனவே, இது பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும் கூறிற்று.)

என்று முழங்கினார் வள்ளுவர். ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’ என்றது வர்ணாசிரம தர்மம் என்று சொல்லப்படுவதற்கு, நேர் எதிர்க் கருத்தாக அமைந்த முதல் தமிழ் இலக்கிய வரியாகும். பிறப்பாலுரிமை பேசியது மட்டுமல்ல ஒருவர்க்கு பெருமையும் சிறுமையும் எவ்விதம் ஏற்படுகிறது என்பதற்கு

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல் (தெரிந்துதெளிதல் 505)

(பொருள்: மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரை கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.)
என்ற வரையறையையும் சொன்னார்.

கல்வி, மனைமாட்சி, தவம், துறவு என்பன எல்லா மாந்தர்க்கும் ஏற்றது என்பது குறளறம்; ஒழுக்கத்தால் உயர்ந்தாரே நல்ல குடியில் பிறந்தோர் ஆவார் என்று கூறினார்; கல்வி அனைவருக்கும் பொது என்றார்; உயிர்ப்பலி கொடுத்து வேள்வி செய்வதைக் கண்டித்தார்; “அந்தணர் யார்” என்று விளக்கம் கொடுத்து போலி அந்தணர்களை அடையாளம் காட்டி அவர்களைப் புறக்கணிக்க வழிகோலினார். இவையெல்லாம் மக்களைப் பிரித்தாளும் வைதிக சமயம் வலுவாய் இருந்த காலத்தில் விழிப்புணர்ச்சி ஏற்படச் செய்த வீர முழக்கங்களாகும்.

'சாதலைவிட கொடியது இல்லை, ஆனால் கொடைக்கு முடியாத நிலைவந்தால் அதுவும் இனிதே’ என்ற குறள் உண்மையில் மிகக் கடுமையானது. இரப்பவர்களுக்கும் அறவோருக்கும் கொடுப்பதே இல்லறத்தார் கடமை என்று சொல்லி அப்படிக் கொடுக்க முடியாதபோது சாவதே மேல் என்று அழுத்தமாகக் கூற வரும் குறள் அந்நிலையில் மரணமும் இனியதாகிவிடும் என்றே கூறி அமைகிறது. கொடுத்தலால் வீடு அடைதல் போன்றே பெறுதலாலும் வீடு அடையலாம் என்ற கொள்கை பரப்ப்பட்டு வந்தது; அந்தணர் கடமைகளாக வேட்டல் வேட்பித்தல், கற்றல், கற்பித்தல், இரத்தல், புரத்தல் ஆகியன சொல்லப்பட்டன; ஆனால் வள்ளுவர்

நல்லாறு எனினும் கொளல் தீது; மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று (ஈகை 222)
என்று சொன்னது எத்தகைய புரட்சிக் கொள்கை!

மகளிரின் உயர்வுக்காகப் போராட்டம் தொடங்கியவரும் வள்ளுவரே. பெண்களின் சமநிலைக்காக அவர் கூறியுள்ள கருத்துக்கள் இன்றும் என்றும் பொன்போலப் போற்றத்தக்கன. மனைவியை வாழ்க்கைத் துணை என முதல் முதலாக அழைத்தவரும் அவரே. கணவனும் மனைவியும் நண்பர் போன்று வாழ்தல் வேண்டும் என்று கட்டுரைத்தவரும் அவரே. ஆண்மகனுடைய ஒழுக்கத்திற்குப் பெண்மகளை எடுத்துக்காட்டாகக் கூறியவரும் இப்பெரியாரே -

ஒருமை மகளிரே போல் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு(பெருமை 974)
என்ற குறள் ஆண்கற்பை வலியுறுத்தும்.

(பொருள்: ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப் போல், பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.)

பரத்தையர் பிரிவைக் கண்டித்த முதல் புரட்சியாளரான வள்ளுவர் ஊன் உண்ணுதலை எதிர்த்தார்; கள் உண்ணுதலைக் கடிந்தார்; சூதாடுதலை இகழ்ந்தார்.

வறியவரின் சார்பாக வள்ளுவரின் அறச்சீற்றமாக வரும் அனல் கக்கும் வரிகளை நோக்குங்கள்:
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றியான் (இரவச்சம் 1062)

(பொருள்: பிச்சை எடுத்துதான் உயிர் வாழ வேண்டும் ன்று படைத்திருந்தால், இந்த உலகத்தைப் படைத்தவனும் இரப்பவர்போல் அலைந்து கெடுவானாக!)

வள்ளுவர் போன்ற தூய நேரிய அருளாளர்களால் மட்டுமே துயர் நீங்க வழியின்றி வாடும் உயிர்களுக்காக, மனதைக் கலங்கடிக்கும் இத்தகைய சொற்களால் கூறமுடியும்.

கவிஞர் வள்ளுவர்
வள்ளுவர் தேற்றம் மிகு கவிதை நலமும் மொழி மேலாண்மையும் கொண்டவர். கட்டுக்கோப்பான குறள் வடிவம், சொற் சிக்கனம், உவமை ஆளுமை, சின்னஞ்சிறு பாக்களில் செம்மையாக வடித்தெடுக்கும் யாப்பு வல்லமை, காலத்தை வென்று நிற்கும் உண்மைகளை இலக்கியமாக வடித்தது இன்னபிற அவரை சிறந்த கவிஞராக அடையாளம் காட்டுவன. சிறந்த சொற்தேர்வு, செம்மையான தொடர்கள், அழகு மிகுந்த அருமையான வாக்கியச் சேர்க்கைகள் இவற்றால் கவிதைகளை ஆக்கி வெற்றி கண்டவர் வள்ளுவர். கற்பனை கலவாமல் தாம் உணர்ந்தவற்றை உணர்ந்தவாறே எடுத்துரைத்துள்ள கருத்துகள் கொண்ட சில குறட்பாக்களில் வள்ளுவரின் உணர்ச்சிகளை நாம் நேரடியாக உணரமுடியும். வள்ளுவரின் உள்ளம் இவற்றில் மிகவும் ஈடுபட்டிருந்தமையால், அவற்றை உணர்ச்சியாக எடுத்துரைக்க அவரால் முடிந்தது.

செய்யுள் யாத்த முறையில் சங்க நூல்களிலிருந்து வேறுபடுகின்றார். மொழி இயல்புகளில் புதுமைப் போக்கையும் மொழியமைப்பில் புதுமைப் பண்புகளையும் காணமுடிகிறது. வழக்கிறந்த சொற்களோ இலக்கண முடிவுகளோ மரபுகளோ திருக்குறளில் இடம்பெறவில்ல; மாறாக மக்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திய பேச்சுமொழியின் இயல்புகள் பல திருக்குறளில் இடம்பெற்றிருக்கின்றன என்பார் க த திருநாவுக்கரசு.

மேலும் இத்தமிழறிஞர் குறளில் தோன்றும் புதிய பண்புகள் பற்றி ஆய்ந்து இவ்வாறு கூறுகிறார்: 'இப்பண்புகள் சங்க நூல்களான அகத்திலும் புறத்திலும் காணப்படவில்லை. குறுந்தொகையிலும் நற்றிணையிலும் இடம் பெறவில்லை. கலித்தொகையிலும் பரிபாடலிலும் அவை அங்கொன்றும் இங்கொன்றுமாக நுழைந்துள்ளன.

இவை இரண்டும் இசைப்பாடல்களால் இயற்றப்பட்டவை. இவ்விசைப்பாடல்களைச் செந்துறை மார்க்கப் பாடல்கள் என்பர். இவை செய்யுள் வழக்கினை மட்டும் பின்பற்றாமல் இசை வழக்கினையும் பின்பற்றுவதால் இப்பாடல்களை இயற்றிய புலவர்கள் எல்லாரும் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் பேச்சு வழக்கினயும் பின்பற்றி இருக்கலாம். இதைப்போன்றே உலகிற்கு அறத்தினை எடுத்துரைக்க முன்வந்த திருவள்ளுவர், தம்நூலை, எல்லோரும் ஓதியுணர்ந்து பயன்பெறவேண்டும் என்ற கருத்துடன் செய்யுள் வழக்கினை மட்டும் பின்பற்றாமல் அன்றைய மக்களின் பேச்சு வழக்கினையும் தழுவியே தம்முடைய 'முப்பாலை' இயற்றினார் எனக் கொள்ளுவது சாலவும் பொருந்தும்.'

ஒரு பொருளின் இலக்கணத்தைக் கூறுதலும், அதன் இன்றியமையாமையை விளக்குதலும் அதனால் பெறப்படும் பயனை அறிவுறுத்தலும், அதனை நாம் மேற்கொள்ளுதற்குரிய வழிமுறைகளை உரைத்தலும், நம் கண் முன்னே காணப்படும் பொருள்களின் வாயிலாக ஒப்பு நோக்கி மொழிதலும் வள்ளுவர் உத்திகள். மக்கள் விலக்க வேண்டியவற்றை வெஃகாமை. கள்ளாமை என்று எதிர்மறை முகத்தால் கூறுவார். ஒரு கருத்தை உடன்பாட்டு முகத்தாலும் மறைமுகத்தாலும் தெளிவுபடுத்துவார். ஒரு நீதிக்கு மற்றொரு நீதியை உவமையாக வைத்து இரண்டையும் வற்புறுத்துவார்.

நயம் தோன்றவும் நகைச்சுவையாகவும் அறவழியைக் கூறும் இடங்கள் பல.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு (விருந்தோம்பல் 86)

என்று ஒருவன் விருந்தோம்பி வாழ்வானாயின் வானுலகில் அவனுக்கு விருந்து காத்திருக்கிறது என்று சொல்லுவார்.

நன்றறி வாரின் கயவர் திருவுடையார்
நெஞ்சத்து அவலம் இலர் (கயமை 1072)

கயவர் நல்லவரை விடவும் பேறு பெற்றவர் என்று கூறும்போது இது ஏன் என்று குழம்புகிறோம். அடுத்து அவர் நெஞ்சில் எதைப்பற்றியும் கவலை கொள்ளாதவர் அதனால் என்று முடிக்கும்போதுதான் வள்ளுவருடைய கருத்து புலப்படும்.

தேவர் அனையர் கயவர் அவரும்தாம்
மேவன செய்துஒழுக லான் (கயமை 1073)

கயவர் தேவரைப் போன்றவர் என்று சொல்லும்போது தேவரை நிந்திக்கிறாரா அல்லது கயவரை பாராட்டுகிறாரா என்று புரிவதில்லை. ‘அவரும் தாம் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால்’ என்று விளக்கியபின்தான் அவரது கவித்திறன் தெரிகிறது. இது போன்ற எண்ணற்ற நயங்கள் நூல் முழுவதும் பரவிக் கிடக்கின்றன.

காமத்துப் பால் கற்பனைவளமும் இலக்கியச்சுவையும் சேர்ந்து அமைக்கப்பட்ட காதல் நாடகம். ஆண் பெண் உறவில் அக வாழ்வின் பதிவாக விளங்கும் சுவையான சொல்லோவியங்களாகவே புலவி, புலவி நுணுக்கம், ஊடலுவகை என்னும் காமத்துப் பாலின் இறுதி மூன்று அதிகாரங்களும் அமைந்துள்ளன. இலக்கியச்சுவை மிகுந்த இந்த இன்பப் பகுதியை படித்து முடிக்கும்போது 'வள்ளுவர் முற்றிலுமான நாடக இலக்கியங்களை ஏன் படைக்கவில்லை? அவற்றைப் படிக்கும் பேறு பெற்றோம் இல்லையே' என்ற எண்ணங்கள் இயற்கையாகவே எழுகின்றன.

நுண்ணோக்கம்
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற (அறன்வலியுறுத்தல் 34)

(பொருள்: ஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும்; அறம் அவ்வளவே; மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.) இவ்வாறு அறத்துக்கு எளிய ஆழமான இலக்கணம் வகுத்த பெருமை வள்ளுவர் ஒருவருக்கே உண்டு. இது உலகம் அனைத்தும் விரும்பி ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்தாகும்.

குறளின் கருப்பொருளாக விளங்கும் பாடல்களில் மிகச்சிறப்பானது:
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் (இல்வாழ்க்கை 50)

(பொருள்: உலகத்தில் வாழவேண்டிய முறையில் இல்வாழ்க்கை நடத்தி வாழ்பவன், வானில் உள்ள தேவர்களோடு வைத்துப் போற்றத்தக்க பெருமையுடையவன்.)
என்னும் குறளே.

"பிற சமயவாதிகள் துறவறம் தவங்கட்குத் தரும் சிறப்பையெல்லாம் வள்ளுவர் இல்லறத்திற்குத் தரும் நுட்பம் காண்க. வாழ்வாங்கு வாழ்பவனைத் "தெய்வம்" என்றே கூறுவது, அவர் கருத்தின் மணிமுடியாகத் திகழ்கிறது. பிறரெல்லாம் துறவியர் முன் மக்களை மண்டியிட வைத்துள்ளனர். அதற்கு நேர் எதிரான கருத்து இது." என்று இக்குறளுக்குத் தமிழண்ணல் நுண்ணுரை வழங்கியுள்ளார்.

'வாழ்வாங்கு வாழும் முறை' என்பது என்ன? திரு வி க விரிவுரை அதை விளக்குகிறது: "ஒருத்தனும் ஒருத்தியும் கற்பன கற்று, கேட்பன கேட்டு,மணம் புரிந்து, இல்வாழ்க்கையில் தலைப்பட்டு, மனமாசற்று, விடுதலை பெறுதற்குப், பிள்ளைப் பேறுண்டாகவும், அன்பு பெருகவும், விருந்து நிகழவும், அடக்கம் அமையவும், ஒழுக்கம் ஊடுருவவும், பொறை பொருந்தவும், ஒப்புரவு உயரவும், ஈகை எழவும், அருள் வளரவும், தவம் ஓங்கவும், வாய்மை சிறக்கவும், அவா அறவும், துறவு நிலைக்கவும், மெய்யுணர்வு மேம்படவும், வாழ்வு நடாத்தல் வேண்டும். இவ்வாறு வாழ்தல் முறைப்படி இல்வாழ்க்கையில் ஒழுகுவதாகும். இதை "வாழ்வாங்கு வாழ்பவன்" என்று சுருங்கச் சொற்றனர் ஆசிரியர்."

இதுதான் மனிதன் மன்பதைக்குச் சொன்ன அறம். அந்த மனிதன் திருக்குறள் தந்த தெய்வத்திருவள்ளுவர்.
-கணிஞன்-
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1696
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு திருக்குறள்- படிப்போம் Empty இல்வாழ்க்கை - அதிகாரம் 5 - அறத்துப்பால்

Post by வாகரைமைந்தன் Sun Aug 14, 2022 12:01 pm

தினம் ஒரு திருக்குறள்- படிப்போம் 15082022

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1696
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு திருக்குறள்- படிப்போம் Empty குறளில் குறைகள்?

Post by வாகரைமைந்தன் Sun Aug 21, 2022 1:17 pm


எக்காலத்திற்கும் ஏற்றவாறு எல்லா மானுடருக்கும் பயன்படும் வகையில் படைக்கப்பட்டது குறள். தெளிந்த சிந்தனையால் பெருநோக்குடன் உருவாக்கப்பட்ட பேரிலக்கியம் இது. பல்வேறு துறைசார்ந்த நூல்களை, பலவேறு மொழி இலக்கியங்களைப் பயின்றவர் வள்ளுவர். தெய்வப்புலவர் என்று அவரை நாம் கொண்டாடுகிறோம். அவர் குறை செய்திருக்கமாட்டார்; செய்யவில்லை என்று குறள் பற்றாளர்கள் கூறுவர். ஆனாலும் அவர் படைத்த குறளில் குற்றம் உண்டு என்று சொல்பவர்களும் உண்டு. குறளை ஆழப்படிப்போர்க்கு சில குறட்பாக்கள் ஐயத்திற்குரியனவாகவும் சிக்கல் உள்ளனவாகவும் தெரியும். இவைகளும் குற்றங்களால் ஏற்பட்டனவா? அவை என்ன வகையான குறைகள்? உண்மையிலேயே அவை குறைகள்தாமா? குறைகள் என்றால் அவற்றிற்கு அமைதி உண்டா?

குறைகள் தோன்றக் காரணங்கள்
குறளின் மூலச்சுவடி நமக்குக் கிடைக்கவில்லை. உரைகளே மூலத்துக்குச் சான்றாக உள்ளன.

குறள் படைக்கப்பெற்று ஓராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர்தான் உரையாசிரியர்கள் தோன்றுகிறார்கள். இடைப்பட்ட காலத்தில் திருக்குறள் பலமுறை ஏடெடுத்து எழுதப்பட்டிருக்க வேண்டும். இதனால் பாடவேறுபாடுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. பாடத்தவறுகள் கருத்துத் திரிபுக்குக் காரணமாயின. உரையாசிரியர்கள் தம் கருத்துக்கு ஏற்ப பாடத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாக மாற்றி தத்தம் கருத்துக்களை உரைகளில் புகுத்தியுள்ளனர்.

பொருள்கோள் முறையாலும், சொற்களுக்குப் பொருள் காண்பதில் ஏற்படும் தவறுகளாலும் குறைகள் காணப்படலாம்.

மாற்றமே கூடாது எனக் கருதி வலிந்து பொருள் கண்டுள்ளமையும் குறையாகத் தெரிவதற்கு காரணமாயிற்று. குறை என்று இல்லாவிட்டாலும் குறளில் பிழை இருக்கலாம் என்பது ஒருசாரார் கருத்து.

குறளின் அமைப்பும் குறைகள் நேரக் காரணமாயிற்று.

காலமாற்றத்தால் கருத்து விளங்கிக் கொள்ள இயலாமை.

குறள் மீது கொண்ட மிகைப்பற்றுக் காரணமாகத் திருக்குறளில் இல்லாதனவும் இருப்பதாகக் கூறப்பட்ட கருத்துக்களும் குறைகளாகக் கொள்ளப்பட்டன.

குறள் அமைப்பு:
குறட்பா தேர்வு:
குறட்பாவால் யாக்கப்பட்டதால் குறை ஒன்று குறுக்கிடுகின்றது. அதிகாரத்துக்குட்பட்ட பொருள்களை ஒரு முடிபால் விளக்குவது விளங்கவைத்தலாக இருக்கும். அப்படி முடிபு ஒன்றால் முடித்துக் கூற முடியாதவாறு, பொருள் விரிவதாயின், அதனை ஒரு குறட்பாலில் விளங்கவைப்பது இயலாது. அமைச்சு-தூது-அரண்-நட்பு என்றாற் போல்வனவற்றை விளக்குகின்ற பொழுது, இக்குறை நன்கு விளங்கும்.

அதிகாரம்-பாக்கள் வரையறை:
ஒவ்வொரு அதிகாரமும் பத்துப் பத்து குறளைக் கொண்டதாக வரையறை செய்ததினால் இரண்டு வகையான இடர்ப்பாடு நேர்ந்தது. ஒன்று, ஒரு அதிகாரத்துக்குட்பட்ட பொருள் பத்துக்குறட்குக் குறைவதாயின், கூறியது கூறுதல், மற்றொன்று விரித்தல், மிகைபடக்கூறல் முதலான குற்றங்களுக்கு இடமுண்டாகும். கடவுள் வாழ்த்து அதிகாரத்தில், நீடுவாழ்வார் யார் என்பது பற்றி இரண்டு குறளால் உணர்த்தினார். அவ்விரண்டு குறளையும் ஒன்றாக இணைத்திருக்கலாம். இரண்டாவதாக ஒரு அதிகாரத்துக்குட்பட்ட பொருள் பத்துக்குறளின் மிகுவதாயின், குன்றக்கூறல், மிகைபடக்கூறல் முதலான குற்றங்களுக்கு இடமுண்டாகும். அது மட்டுமின்றி பல அதிகாரங்களில் அவற்றைக் கூற வேண்டி வரும். நட்பு அதிகாரப்பட்ட இடத்தில் கூற வேண்டுவனவெல்லாம் ஓரதிகாரத்தில் அடங்காமையால், அதனைப் பல அதிகாரங்களாக வகுத்துக்கொண்டார்.

இடப்பிறழ்வு:
வலியறிதல் என்னும் அதிகாரத்தின் இறுதியில் உரைத்த
ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி. (477)
ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை.(478)
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.(479)
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும். (480) என்னும் நான்கு பாக்களும் பொருள்செயல்வகையிலோ குடிசெயல்வகையிலோ உரைக்கத்தக்கவை. அவைகளை வலியறிதலில் உரைத்தது இடப்பிறழ்வாக உள்ளது.

மற்றொன்று விரித்தல்:
நட்பு தொடர்பான அதிகாரத் தொகுப்பில் சூது, மருந்து என்பனவற்றை விரித்துரைத்தது மற்றொன்று விரித்தல் என்னும் குற்றமாகும் என்பர் (திருமணம் செல்வக்கேசவராய முதலியார்).

பாடத்தவறுகள்
திருக்குறளை பலகாலங்களில் ஏடு பெயர்த்தெழுதியதால் பாடவேறுபாடுகள் நிகழ்ந்திருக்கின்றன. சிலர் தம் சமயம், கொள்கை ஆகியவற்றிற்கு மாறானவற்றை நீக்கிவிட்டு, தம் கருத்திற்கு ஏற்ப மாற்றினர். பழைய நூல்களைப் பதிப்பித்தவர்கள், கிடைக்காத பகுதிகளுக்கு, தாமே எழுதி அவ்விடத்தை நிரப்பியதாலலும் மூலபாடம் திருத்தம் கண்டது. இவ்வாறான இடைச்செருகல்கள் குறைகள் ஏற்பட ஏதுவாயிற்று.

பொருட்சிறப்பு இல்லை என்று கருதி பாடதிருத்தம் மேற்கொள்ளப்பட்டது; யாப்பு அமைதிக்காவும், எதுகை மோனை நயம் என்ற காரணம் கொண்டும், பல்வேறு பாடத்தவறுகள் நடந்தன.

கருத்து சார்ந்தவை
காலத்தால் சொற்கள் அடைந்த பொருள் வேறுபாடுகளும் சமுதாயத்தின் பழக்க வழக்க மாறுபாடுகளும் குறைகள் உண்டாக வழியாயின. புற நாகரிகச் சார்பும் சமயச் சார்பும் அரசியற் சார்பும் முன்னிற்க, வலிந்து கூறப்பட்ட உரைகள் கருத்துச் சிதைவு ஏற்பட காரணமாயிற்று. மூலத்திற்கும் உரைக்கும் தொடர்பே இல்லாமல் உள்ள உரைகளும் உண்டு. இவை குழப்பத்துக்கு இடமாயின.

குறள் துறவுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை நாம் இன்று தருவதில்லை என்றொரு சிந்தனை உள்ளது. புறத்துறவுக்கு வேண்டுமானல் இக்கருத்து பொருந்தலாம். ஆனால் அகத்துறவை எண்ணிக்கொண்டால் வள்ளுவர் கூறும் கருத்து இன்றும் என்றும் ஒத்துவரும்.

பெண்ணின் பெருமை பற்றிக் குறள் நிறையப் பேசுகிறது. ஆனாலும் அப்பெருமை வழக்கமான ஆண் மேலாண்மைக் கோணத்திலிருந்தே கூறப்படுவதாகவும், ஆணுடன் ஒத்த நிகர்நிலை வள்ளுவரால் பெண்ணுக்கு வழங்கப்படவில்லை என்றும் பெண்ணியக் கொள்கையினர் குற்றம் கற்பிக்கின்றனர். குறளிலிருந்து வாழ்க்கைத்துணை நலம், பிறனில் விழையாமை, பெண்வழிச் சேறல், வரைவின் மகளிர் ஆகிய அதிகாரங்களில் உள்ள குறள்கள் சிலவற்றை நீக்கி விட வேண்டும் என்றும் திருவள்ளுவர் ஒரு ஆணாயில்லாமல் பெண்னாயிருந்திருந்தால் இம்மாதிரிக் கருத்துக்களைக் காட்டியிருப்பாரா என்றும் எழுதினர். ஆனால் இது முற்றிலும் தவறான கருத்து. பெண்ணை இழித்துக் குறளில் எங்கும் கூறப்படவில்லை; ஆணுக்கு சமநிலையாகவே பெண் பேசப்படுகிறாள்; மாறாக ஆணைப் பழித்தும் குறட்கருத்துகள் உண்டு. ஆயினும் தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் (குறள் 55) போன்ற கருத்துக்கள் இன்று மறுஆய்வுக்கு உரியனவாக உள்ளன என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

முரண்பாடுகள்
குறளில் முரண்பாடுகள் உள்ளன என்ற குற்றச்சாட்டுக்கள் ஆங்காங்கே கூறப்படுகின்றன.

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.(481) எனக்கூறிப் பின்னர்
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும். (1028)என்று கூறியது
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். (380) எனக்கூறிப் பின்னர்
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர். (620) என்று கூறியது

போன்றவை குறளில் முரண்பாடுகள் உள்ளன போலத் தோன்றுகின்றன.
ஆனால், குறளின் திண்மையை, உண்மையை, நுண்ணிதின் உணர்ந்தால், உண்மையில் அவை முரணல்ல என்பது தெளிவாகும். வள்ளுவர் சொல்லிய இடம், காலம், சூழல், காரணம் ஆகியவற்றை நோக்கிக் கருத்தை உட்கொண்டால் அவை முரணே அல்ல என்று புரிந்துகொள்ளப்படும்.

இரவு, இரவச்சம் என்ற இரண்டு தலைப்புகள் அமைத்துப் பேசியிருப்பது பெரும்பாலோர்க்கு குழப்பமாகவே அமையலாம். ஆனால் சில மரபுகளை நினைவில் கொண்டு நாம் அவற்றை நோக்கினால் அவை யாவும் முரணல்ல, இரண்டும் தேவையானதே என்று தோன்றும். இரவலர், கொடையாளர் இருவரும் இருப்பது ஒரு நாட்டின் தேவையாகவும் அமையும். வள்ளுவர் உலகியல்படி நடந்தாக வேண்டும் என்ற கொள்கையுடையவராதலால் பெரும்பாலும் அதை ஒட்டியே குறட்கருத்துகள் அமைந்தன.

குறைகள் உள்ளனவா?
குறள் அமைப்பால் ஏற்பட்ட இடர்ப்பாடுகள் இருந்தும், இந்நூலில் குற்றமான சொற்களை அமைத்தல், தெளிவு இல்லாமல் மயங்குமாறு கூறுதல், பொருளற்ற சொற்களை அமைத்தல், விரிவாகத் தொடங்கிப் போகப் போகச் சுருக்கி முடித்தல், சொற்கள் இருந்தும் பொருட்பயன் இல்லாமற் போதல் முதலான குற்றங்கள், பலமுறை தேடிப் பார்த்தவிடத்தும், ஒன்றும் காணப்படவில்லை என்பார் திருமணம் செல்வக்கேசவராயர்.

நூலினை முழுதும் கற்று நூலின் நோக்கத்தைத் தொகுத்துப் பார்த்து நுனித்து அறிவார்க்கு முரண்பாடுகள் போன்று தோன்றுபவை குற்றங்களாகாமை தெளிவாகும்.

கால மாற்றத்தால் சில குறள் கருத்துக்கள் குறைகளாகத் தெரிகின்றன.

குறளில் பகுத்தறிவுக்குப் பொருந்தா கருத்து எதுவும் இல்லை.

திருக்குறள் மிகமிக ஆழமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது; செய்யப்பட்டு வருகிறது. ஆயினும் பொறுக்க முடியாத குறைகளை இதனுள் எவராலும் கண்டுபிடிக்க இயலவில்லை. ஆங்காங்கே சிறுசிறு குறை-சிறு பிழைகள் காணப்படலாம். அவை திருவள்ளுவரால் செய்யப்பட்டதாகக் கொள்ளமுடியாது. இப்பனுவலில் குறை இருப்பின் அவை மிகவும் பொதுவானவையே; அவையும் திருக்குறளின் புனிதம் காப்பற்றப்படவேண்டும் என்னும் விருப்பத்தால் எழுப்பப்படுவனவே.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1696
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு திருக்குறள்- படிப்போம் Empty வாழ்க்கைத் துணைநலம் - அதிகாரம் 6 - அறத்துப்பால்

Post by வாகரைமைந்தன் Sun Aug 21, 2022 1:20 pm

தினம் ஒரு திருக்குறள்- படிப்போம் 22082022


வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1696
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு திருக்குறள்- படிப்போம் Empty ஒரு வரி உரை

Post by வாகரைமைந்தன் Sun Aug 21, 2022 1:41 pm



திருக்குறள் ஒரு வரி உரை


திருக்குறள் - அதிகாரம் -1. கடவுள் வாழ்த்து
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. - 1

எழுத்துக்களின் தொடக்கம் அகரம். உலகின் தொடக்கம் ஆதிபகவன்

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். - 2

கல்வியின் பயன் அறிவுடையவரை வணங்குவதே

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்                  
நிலமிசை நீடுவாழ் வார். - 3

மலர்தூவி வணக்கப்படுபவரைப் பணிந்தவர்  புகழுடன் வாழ்வர்

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. - 4

பற்றற்றவர்களைப் பின்தொடர்பவர்களுக்குத் துன்பங்கள் இல்லை

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. - 5

பக்தர்களுக்கு அறியாமையின் இருவினைகளும் வராது.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். - 6

புலனடக்கத்துடன் வாழ்பவரைப் பின்பற்றுவோர் நெடுநாள் வாழ்வர்

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. -7

மனக்கவலை நீங்க ஒப்பாரும் மிக்காருமில்லாதவரின் அடியைப் பற்று

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. - 8

சான்றோர் வழிவாழ்பவரின்றி பிறர் துன்பக் கடலை கடப்பது அரிது

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.- 9

ஈடில்லாத ஆற்றலுடையவரை வணங்கவே ஐம்புலன்களும் தலையும்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். - 10

இறைவனை வணங்குவோரே மறுபிறவி அடையார்

திருக்குறள் அதிகாரம் - 2. வான் சிறப்பு

வானின்று உலகம் வழங்கி வருதலால்    
தானமிழ்தம் என்றுணரற் பாற்று. - 11

வானம், மண்ணுக்கு வழங்கும் அமுதமே மழை  

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. - 12

உணவாகவும், உணவிற்கு அடிப்படையாவதும் மழையே

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி. -13

வான் மழை பொய்த்துவிட்டால், உயிர்கள் பசியால் வாடும்

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால் - 14

மழை இல்லாவிட்டால் உழவும் இல்லை

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை. -15

வாழ்வுக்கும், தாழ்வுக்கும் மழையே முதன்மையாகிறது

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது. -16

மழையின்றி, மண்ணில் பசும்புல்லைக்கூட காணமுடியாது

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.-17

மழை இல்லையென்றால் நெடுங்கடலும் வற்றிவிடும்

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. - 18

மழை பொழியாவிட்டால், வானோர்க்கு பூசைகள் கிடையாது

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின். -19

தானம், தவம் இரண்டுக்கும் மழைவேண்டும்  

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு. - 20

நீர் இன்றி இவ்வுலகமும், இவ்வுலகில் ஒழுக்கமும் இல்லை

திருக்குறள் - அதிகாரம் - 3. நீத்தார் பெருமை

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. - 21

ஒழுக்கமானவர் பற்றிய நூலே நல்ல நூல்

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. - 22

துறவிகளின் பெருமையை எண்ணிவிடமுடியாது

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு. - 23

இவ்வுலகம் துறவிகளையே போற்றும்

உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. - 24

ஐம்புலன்களையும் அறிவால் அடக்கவேண்டும்

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.- 25

ஐம்புலன்களை அடக்கியவர்களுக்கு இந்திரனே சான்று  

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.- 26

பண்பில் பெரியோரே செயற்கு அரிய செய்வர்

சுவையொளி ஊறோசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரி வான் கட்டே உலகு. - 27

ஐம்புலன்களை அடக்கியவரிடம், உலகம் அடங்கும்

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். - 28

துறவிகளின் பெருமையை அவர்களின் மொழியே காட்டிவிடும்

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது.- 29

பக்குவப்பட்டவர்களின் கோபம் நெடுநேரம் நிற்காது

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். - 30

அருள்தன்மை கொண்டவரே அந்தணர்  

திருக்குறள் - அதிகாரம் - 4. அறன் வலியுறுத்தல்

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறந்தினூங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு - 31

செல்வமும், சிறப்பும் தருவதால் அறமே உயர்ந்தது

அறத்தினூங்கு ஆக்கம் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.- 32

ஆக்கம் என்பது அறமே, மறத்தலே கேடு

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.- 33

இயன்றவரை அறம் செய்க

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற.- 34

மனதளவில் மாசின்றி இருத்தலே அறங்களுள் சிறந்த அறம்

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். - 35

பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல்லைத் தவிர்

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. - 36

அறத்தைத் தள்ளிப் போடாதே

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. - 37

அறத்தைப் பற்றி எல்லோரிடமும் பேசாதே    

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல். - 38

நாள்தோறும் அறம்செய்தால் பிறவிப் பிணி நீங்கும்

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.- 39

அறத்தால் மட்டுமே நிலையான இன்பம் வரும்

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி. - 40

அறம் செய்து பழியைத் தவிர்க்க

திருக்குறள் - அதிகாரம்- 5. இல்வாழ்க்கை

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை - 41

துறவி, ஏழை, ஏதிலிகளுக்கும் இல்வாழ்வாரே துணை

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை. - 42

துறவி, ஏழை, இறந்தவர்களுக்கும் இல்வாழ்வாரே துணையாவர்

தென்புலத்தார் தெய்வம் விருந்தோக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.- 43

முன்னோர், தெய்வம், விருந்து, சுற்றம், தான் என நினை

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். - 44

பகிர்ந்து உண்டு வாழ்பவர் எதிர்காலம் குறித்து அஞ்சவேண்டாம்

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. - 45

அன்பும், அறனுமே வாழ்க்கையின் பண்பும், பயனும் ஆகும்

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவ தெவன். - 46

அறத்தின் வழி வாழ்ந்தால் யாவும் பெறலாம்  

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை. - 47

அறவழி வாழ்க்கை வாழ்பவனே தலைசிறந்தவன்

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து. - 48

அறவாழ்க்கை வாழ்பவன் துறவிகளிலும் சிறந்தவன்

அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. -  49

பிறர் பழிக்காத அறவழி வாழும் வாழ்வே நல்வாழ்வு

வையத்தின் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் - 50                

முறைப்படி வாழ்பவன், தேவருள் ஒருவனாவான்

அதிகாரம் - 6. வாழ்க்கைத் துணைநலம்

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.- 51

வருவாய்க்குத் தக்க செலவு செய்து வாழ்பளே சிறந்தவள்

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல். - 52

மனைவியின் நற்பண்பே பிற சிறப்புகளைவிட மேலானது

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.- 53

இருப்பதும், இல்லாததும் மனைவியின் நற்பண்பைச் சார்ந்தது

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.- 54

கற்புடைய பெண்ணே உயர்ந்தவள்

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.- 55

கணவனை தெய்வமாக மதிப்பவள் சொன்னால் மழை வரும்

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண். - 56

தானும் சிறந்து, தன் கணவனையும் முன்னேற்றுபவளே பெண்

சிறைகாக்கும் காப்பவென் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.- 57

பெண்மைக்குரிய இலக்கணத்துடன் வாழ்பவளே சிறந்தவள்

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.- 58

கணவனைப் போற்றி வாழும் பெண்கள் வாழ்வில் உயர்வர்

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.- 59

நல்ல மனைவியால் தான் கணவனுக்குப் பெருமிதம் தோன்றும்

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.- 60

பெண்ணின் பெருமை நற்பண்பு, குடும்பத்தின் பெருமை குழந்தை

(நன்றி: முனைவர் இரா.குணசீலன் )

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1696
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு திருக்குறள்- படிப்போம் Empty மக்கட்பேறு - அதிகாரம் 7 - அறத்துப்பால்

Post by வாகரைமைந்தன் Sun Aug 28, 2022 12:28 pm

தினம் ஒரு திருக்குறள்- படிப்போம் 29082022


ஒரு வரி உரை

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.                     61

உயர்ந்த பேறு அறிவுள்ள  குழந்தைகளே

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.                   62

நல்ல குழந்தைகளைப் பெறுபவர்களுக்குப் பழி தோன்றாது

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.                  63

அவரவர் செய்வினைக்கு ஏற்ப குழந்தைகள் பிறக்கும்

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.                     64

தம் குழந்தையின் கையில்பட்ட உணவு அமுதைவிட இனியது

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.            65

குழந்தைகளின் தொடுதல் உடலுக்கும், பேச்சு செவிக்கும் இன்பம்

குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.                 66

குழல், யாழைவிட தம் மழலைச் சொல்லே இனிது  

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பபச் செயல்.                    67

நல்லோர் முன் குழந்தையை முன்னிலைப்படுத்துவது தந்தையின் கடன்

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.              68

தம்மைவிட அறிவுக்குழந்தைகளைப் பெறுதல் உலகிற்கே இனிது

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.                            69

தன் மகன் சான்றோன் என்ற போதே தாய் பெரிதும் மகிழ்வாள்

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல்.              70

தவப்புதல்வன் என்ற சொல்லே தந்தைக்கு மகிழ்வளிக்கும்
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1696
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு திருக்குறள்- படிப்போம் Empty திருவள்ளுவமாலை

Post by வாகரைமைந்தன் Sun Aug 28, 2022 12:50 pm


வள்ளுவமாலை தோன்றியது எங்ஙனம்? காலந்தோறும் குறளைப் பற்றிய பாடல்கள் பல புலவர்களால் இயற்றப்பட்டிருக்க, பிற்காலத்து வந்த கவிஞரொருவர் அவற்றுள் சிறந்தனவற்றை எடுத்து ஒருங்கு சேர்த்து ஒழுங்குபடுத்தி, அந்நாளில் நன்கு அறியப்பட்ட பழம்புலவர்கள் படைத்ததாக அவர்கள் பெயர்களில் ஒரு நூலாகத் தொகுத்திருக்கலாம். இவற்றுடன் அவரே தாமும் சில பாக்களை இயற்றி இதுபோலவே புகழ்பெற்ற பாவலர்கள் எழுதியதாக அவர்கள் பெயரில் சேர்த்து இத்தொகுப்பை வழங்கியிருக்கலாம்.

திருவள்ளுவமாலை
திருவள்ளுவமாலை என்பது திருக்குறளைச் சிறப்பித்துப் பாடிய பாடல்களின் கோவை என்று பொருள்படும். மொத்தம் ஐம்பத்து மூன்று வெண்பாக்களாலான பாக்களையுடையது.

இதில், பல பாக்கள் கருத்துச் செறிவுடனும், மேற்கோளாக ஆளத்தக்கனவுமாகமும் உள்ளன. சில பாக்கள் குறளின் முப்பாலின் இயற்பகுப்புகளை எடுத்தோதுகின்றன; கவிதை நலம் நிறைந்து கற்பனையால் குறளைச் சிறப்பிக்கின்றன சில; வடமறைநூலுக்கும் இதற்கும் வேற்றுமை காட்டி ஏற்றம் கூறுகின்றன சில; குறள் ஆசிரியரைப் பாராட்டுகின்றன சில; வள்ளுவரின் இதயத்தின் ஆழத்தையும், அவரது அறிவின் ஆற்றலையும் தெளிவையும் உணர்ந்து தாங்கள் பெற்ற இன்பத்திற்குக் கனிந்த கற்பனையுடன் செய்த பாக்கள் பிற.

காலம்
வள்ளுவமாலை திருக்குறள் அரங்கேற்றத்தின்போது சங்கப் புலவர்களால் பாடப்பெற்றது என்பர் ஒருசாரார். கல்லாடத்தில் கூறப்பட்டுள்ள குறள் அரங்கேற்ற நிகழ்ச்சி இத்தொகுப்பின் முதல் பாட்டுக்கு ஆதாரமாக இருக்கலாம். அப்பாடல் மதுரையில் உள்ள சங்கப்பலகையில் திருவள்ளுவரோடு ஒத்து இருத்தற்கு உருத்திரசன்மரே ஏற்றவர் என்று குறிப்பது. ஆனால் பழங்கதைகளில், குறள் அரங்கேறிய காலத்தில், சங்கப்புலவர் நாற்பத்தெண்மரும் திருவள்ளுவரோடு ஒக்க இருக்கத் தகுதியற்றவராய்ப் பொற்றாமரைக் குளத்தில் வீழ்ந்து மூழ்கினர் என்று கூறப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு வள்ளுவமாலை குறள் ஆசிரியர் காலத்தது அல்ல; பிற்காலத்தே தோன்றியதே என்பர்.

காலத்தால், பண்டைய குறள் உரை ஆசிரியர்கள் பதின்மருக்கு முந்தியது திருவள்ளுவமாலை என்பது பல அறிஞர்களின் முடிவு. இப்பாடல்கள் கி.பி. எட்டாம் நூற்றாண்டு வரையில் உள்ள காலகட்டத்தில் தொகுக்கப்பட்டதெனச் சில அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். சிலர் இதன் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தியதாக அமையும் என்று கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும் திருவள்ளுவமாலை வரலாறு பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தியதென்பதில் ஐயம் இல்லை என்பார் தெ பொ மீ.

தொடுத்தது யார்?
அசரீரி, நாமகள், இறையனார், உக்கிரப்பெருவழுதி உரைத்த பாக்களுடனே சங்கப்புலவர் நாற்பத்தொனபதின்மரும் பாடிய பாடல்களுமாகக்கூடி ஐம்பத்து மூன்று பாக்களைக் கொண்டதாக அறியப்படுவது வள்ளுவமாலை. இவ்வாறாக விண்ணிலிருந்து வந்த ஒலியாகவும் உடல்கொண்டோராலும் பாடப்பட்ட பாடல்களுடன் மேலும் ஔவையார், இடைக்காடர் ஆகியோர் பாக்களையும் சேர்த்து இப்பொழுது திருவள்ளுவமாலை ஐம்பத்தைந்து பாடல்கள் கொண்டதாக உள்ளது.

வள்ளுவமாலையில் இடம்பெற்றுள்ள புலவர் பெயர்களை அறிவதற்குரிய ஆதாரங்கள் சங்க நூல்கள் அன்றி வேறு ஒன்றுமில்லை. அவ்வாறு நோக்கும்போது இதில் காணப்படும் பெயர்களுள் சில சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கவில்லை. இறையனார் களவியலுரையின்படி கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் நாற்பத்தொபதின்மர் ஆவர். இவர்களில் சேந்தம் பூதனார், அறிவுடையரானார், பெருங்குன்றூர்க் கிழார், இளந்திருமாறன், மருதன்இளநாகனார் ஆகிய இவர்கள் பெயர் வள்ளுவமாலையில் காணப்படவில்லை.

வள்ளுவமாலையில் காணப்படும் உருத்திரசன்மர், நத்தத்தனார், முகையலூர்ச் சிறுகருந்தும்பியார், எறிச்சனூர் மலாடனார், போக்கியார், நாகன் தேவனார், செங்குன்றூர்க் கிழார், கவிசாகரப் பெருந்தேவனார், செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார், வண்ணக்கஞ் சாத்தனார், களத்தூர்க் கிழார், நச்சுமனார், அக்காரக்கனி நச்சுமனார், குலபதி நாயனார், தேனீக்குடிக் கீரனார், கொடிஞாழன் மாணிபூதனார், கௌணியனார், மதுரைப் பாலாசிரியனார் என்பவர்களைச் சங்க இலக்கியங்களில் காண முடியவில்லை. சங்கப் புலவர்கள் வாழ்ந்தது ஒரே காலத்தில் அல்ல.

அவர்கள் வாழ்ந்த கால இடைவெளி சில நூற்றாண்டுகள் ஆகும். எனவே பாடல்கள் ஒரே காலத்தில் தோன்றியன என்பதும் ஏற்க இயலாது. வள்ளுவமாலைப் பாக்கள் சங்ககாலத்தில் அமைந்துள்ள ஓசை தராமல் பிற்கால இலக்கணமமைந்த ஓசை தருகின்றன என்றும் சங்கநுல்களில் காணப்படாத சொற்சிதைவு இப்பாடல்களில் காணப்படுவதையும் ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். எனவே குறளைப் பற்றிச் சங்கப் புலவர்கள் பாடிய பாடல்களின் திரட்டே வள்ளுவமாலை என்பது பொருந்தாதாகிறது.

இந்நூல் அனைத்தும் ஒரே புலவரால் பாடி இயற்றப்பட்டிருக்கூடும் என்னும் கருத்தையும் ஆராய்ச்சி அறிஞர்கள் மறுத்துள்ளனர். இந்தப் பாராட்டு மாலை யாரோ ஒருவரோ அல்லது ஒரு சிலரோ வெவ்வேறு காலங்களில் எழுதிய பாடல்களின் தொகுப்பாக இருக்கலாம் என்பது பொதுவான கருத்து. வள்ளுவமாலையிலுள்ள பாடல்களுள் சில சங்கப் புலவர்களாலும், சில பிற்காலப் புலவர்களாலும் பாடப் பெற்றிருக்கலாம்; பின்னர் இவை நுலாகத் தொகுக்கப் பெற்றிருக்க வேண்டும் எனவும் கொள்ள முடிகிறது.

சங்கப்புலவர்கள் பாடியதுபோலப் பிற்காலத்தவர் பாடிவைத்த பாடல் தொகுப்பே வள்ளுவமாலை என்பது மற்றொரு கருத்து. வள்ளுவமாலையை இயற்றியவர் தமது பல்வேறு பாடல்களுக்குத் தம் விருப்பத்திற்கேற்பப் புகழ்வாய்ந்த சங்கப் புலவர்களின் பெயர்களை அமைத்துக் கொண்டிருக்கலாம். பாடல்களின் அமைப்பையும் பாடுபொருளையும் காணும்போதும் இம்மாலையை ஒருவரே தொகுத்தார் என்பதற்கான காரணம் வலுப்படும்.

தாக்கங்கள்
பண்டைத் தமிழ் இலக்கியத்தில் காணப்பெறும் ஒரே திறனாய்வு நுல் திருவள்ளுவமாலையே என்பர் அறிஞர். திருக்குறள் பற்றிய ஆராய்ச்சிக்கு வள்ளுவமாலையில் ஓரு தொடக்கம் உண்டானது எனலாம். இது திருக்குறளுக்குச் செய்யப்பட்ட சிறப்பு எனவும் கொள்வர். வள்ளுவமாலை திருக்குறளின் நயத்தையும் சிறப்பையும் ஆராய்ந்துரைக்கும் திறனாய்வு மாலையாக விளங்குகிறது.

இதிலுள்ள ஒவ்வொரு பாடலும் குறளை அணுகிய முறை வெவ்வேறாக உள்ளது. இப்பாடல்கள் வள்ளுவரை தெய்வ வாக்கு கொண்டவர் என்று வாழ்த்தும்; குறள் மறைநூலுக்கு மேலானது, இணையானது எனவும் வடமொழியின் சிறப்பிற்கு மறைநூல்; தமிழ்மொழியின் பெருமைக்குக் குறள், முப்பாலில் நாற்பால் மொழியப்பட்டது எனவும் ஒப்பாய்வு செய்யும்; பால், இயல், அதிகாரத் தொகுப்பு இவற்றைக் கூறி குறளின் சொற்பொருள், யாப்பின் அமைப்பு ஆகியவற்றின் சிறப்புபற்றிப் பேசும்; உள்ளத்து இருளை நீக்கும் வாழ்வியல் நூல் என்றும் இருவினை நீக்கும் மாமருந்தாகிய ஆன்மநூல் இது என்றும் போற்றும். இவ்வாறு பல்வேறு நிலைகளில் திருக்குறளின் பாடுபொருளும் பாடுமுறையும் ஆராயப்பட்டுள்ளன.

வடமொழியில் தோன்றிய வேதம் மூலநூல், குறள் அதன் வழிநூல் என்று ஒரு பாடல் கருத்து உரைக்க அதற்கு மாறாகத் திருக்குறள் மூலநூலே, திருக்குறளோடு எந்த நூல்களையும் ஒப்பிட்டுப் பார்த்தல் பொருத்தமாகாது என்பதை வேறு ஒரு பாடல் உணர்த்துகிறது.

வடமொழிநூல்களோடு திருக்குறளை ஒப்பிட்டுப் பேசுதல் ஒவ்வாது என்பதனை வலியுறுத்தும் போக்கு அக்காலச் சூழலிலேயே தோன்றியமையும், திருக்குறள் தமிழில் எழுந்த மூலநூல் என்பதனை வள்ளுவமாலை மூலமும் நிறுவப் பெற்றமையையும் காணலாம்.

வள்ளுவமாலை எழுந்த காலத்தில் மாந்தர் பெரிதாக மதித்து வந்ததாகக் கருதப்படும் வைதீக நூல்களுடன் திருக்குறளை ஒப்பிட்டுப் பாராட்டிக் கூறியதன் நோக்கம் தமிழின் ஆற்றலை மற்றவரும் உணர வேண்டும் என்பதே என்று ஒரு கருத்து உள்ளது. ஆனால் காலப்போக்கில் இந்த ஒப்பீடே பிறழ உணரப்பட்டுப் பின்னையோர் திருக்குறள் கருத்துகள் வடநூற் கருத்துக்களின் பிழிவாகக் கருதத் தொடங்கி விட்டனர்; பின்வந்த உரையாசிரியர்களின் வெவ்வேறு அணுகுமுறைக்கு மாலைப்பாடல்கள் அடித்தளமாக அமைந்து விட்டன என்பதும் தெளிவாகும் என்பர் ஆய்வாளர்கள்.

வள்ளுவமாலை தரும் பாராட்டுரைகளே வள்ளுவத்திற்கு வேறுபொருள் காணத்தூண்டியிருக்கலாம்; அல்லது குறள் தோன்றிய காலத்திலிருந்து பின்னர் பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு கருத்துகள் அதில் ஏற்றியுரைக்கப்பட்ட பின் அக்கருத்துரைகளே வள்ளுவமாலை தரும் கருத்துரைகளாக மாறின எனவும் கொள்ளலாம். எவ்வாறாயினும் மூலம் கொண்டிருந்த கருத்துகள் காலப்போக்கில் வள்ளுவமாலையாலும், உரைகளாலும் மாறிப்போயின என்பது உண்மை.

வள்ளுவம் பெற்ற திரிபிற்கு வள்ளுவமாலையும் அடிப்படை என்னும் நிலையில் பல காரணங்களைக் காட்டுவார் கு ச ஆனந்தன். திருக்குறளின் உண்மைப் பொருளையும் உள்ளுறை நோக்கையும் அமைப்பையும் மூலத்திலிருந்து மாற்றியமைத்து வேறுவிளக்கம் தரும் பல பாட்டுகள் வள்ளுவமாலையில் இடம் பெற்றுள்ளன; தொன்மை நூலாகிய தொல்காப்பியம், சங்க நூல்கள், திருக்குறள் முதலியவற்றில் 'வீடு' பற்றிப் பேசும் நான்காம் உறுதிப்பொருள் இல்லை; அறம், பொருள், காமம் என்ற மூன்று மட்டுமே பேசப்படுகின்றன; ஆனால் வள்ளுவமாலையின் பல பாடல்களில் (7,8,20,22,33,38,40,50) திருக்குறளில் இல்லாத நாற்பால் வலியுறுத்திச் சொல்லப்பட்டுத் திருக்குறளின் ஆராய்ச்சிப் போக்கை அல்லது திருக்குறள் உணரும் நெறியை மாற்றிவிட்டது என்பார் இவர்.

அடுத்து வள்ளுவமாலை திருக்குறளுக்குத் தரும் இன்னொரு மதிப்பீட்டுரை வேதப்பொருளும் குறட்பொருளும் ஒன்றேயாம் என்பது. இது தவறான ஒப்பீடு. ஏனென்றால் வேதங்கள் இயற்கை சக்திகளையும் தெய்வங்களையும், யாகம்-சடங்குகள் செய்யும் முறைகளையும் விளக்குபவை; குறள் போல வாழ்வியல் நெறி; காதல் நெறிகளை விளக்குவன அல்ல. மேலும் குறளை இராமாயணம் போன்ற காப்பியங்களோடு ஒப்பிட்டதும் பொருத்தம் இல்லை.

வள்ளுவமாலைக் கருத்துக்கள் அந்தணர்-அந்தணர் அல்லாதவர் என்று வேற்றுமை பாராட்டும் கொள்கையைக் காட்டுவதாக உள்ளன என்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தொகுப்புரை
முன்னர் வள்ளுவமாலை திருக்குறளின் சிறப்புப் பாயிரமாகப் பேசப்பட்டது. ஆனால் இன்று யாரும் அதைக் குறளின் சிறப்புப் பாயிரம் என்று கருதவில்லை; இது இப்போது சில உரைகளின் பிற்சேர்க்கையாகவும் தனி நூலாகவும் படிக்கப்படுகிறது.

பொறுப்பற்ற நாடோடிகளின் கற்பனையில் உருவான கதையே வள்ளுவமாலை என்று ஒரு புறம் கூறப்பட மறுகோடியில் சிலர்க்கோ இது நல்லதோர் திறனாய்வு மாலையாகத் தோன்றியது. வள்ளுவமாலைப் பாடல்களே திருக்குறளைத் திரித்துப் பொருள் கொள்வதற்குப் பயன்பட்டன என ஒருசாரார் கூற மற்றவர்கள் இது கவித்துவம் மிக்க பாராட்டுப் பாடல் தொகுதி எனப் போற்றினர். எவ்வாறாயினும் குறளைப் பற்றி அறிதற்கு இது ஓர் பண்டைக் கருவி நூலாகத் திகழ்கிறது என்பதிலும் திருக்குறளின் சிறப்பை நன்கு சுவைத்துப் பிறரையும் சுவைக்கச் செய்கின்றது என்பதிலும் ஐயமில்லை.

இதன் காலம் கல்லாடர் காலமாகிய கி பி 11-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்பது பலரின் முடிவு.

வள்ளுவமாலையில் உள்ள பாடல்களுக்குள்ளேயே, குறள் அமைப்பு பற்றிய பால், இயல், அதிகாரம் என்ற கூறுகளைப் பற்றி மாறுபட்ட கருத்துகள் கூறப்பட்டுள்ளன. அதுபோலவே முப்பாலில் நாலு உறுதிப் பொருளையும் கூறியது என்று ஒரு பாட்டு கூற, நாலு உறுதிப் பொருளையும் நேரடியாகக் கூறியது என்கிறது இன்னொரு பாடல். திருக்குறளை அதனுடன் ஒப்புமையற்ற வேதம், வடமொழி இலக்கியங்களான இராமாயணம், மகாபாரதம் ஆகியவைகளோடு இணைத்துக் கூறியது ஒப்பிலக்கிய நோக்கில் பிழையானது. திருக்குறள் முதல்நூல் அல்ல; அது வழிநூல்; குறள் வடமொழி வேதத்தைத் தழுவியது போன்ற வள்ளுவமாலைக் கருத்துக்கள், இதனுள் குறளின் புகழுரை மட்டுமே அடங்கியிருக்கவில்லை, குறளின் வரலாற்றைத் திரிக்கும் பாடல்களும் இருக்கின்றன என்பதையும் உணர்த்துகின்றன.

திருக்குறள் பற்றிய பாராட்டுரைகள், புகழுரைகள், திறனாய்வுரைகள் கொண்ட பாடல் தொகுப்பு வள்ளுவமாலை.
வானொலி, தெய்வம், வேந்தன் பாராட்டுரை - இவை குறளுக்குத் தெய்வத்தன்மை தரும் நோக்கில் புனையப்பட்டதாகத் தோன்றுகின்றன.

குறளாசிரியரின் மீது வழங்கி வந்த பழியை நீக்க வேண்டும் என்ற எண்ணம் சில பாடல்களில் தெரிகிறது.
எந்த ஒரு நூலினும் மேம்பாடனது குறள் என்பதைக் காட்டவேண்டும் என்ற ஆர்வம் சில பாக்களில் காணப்படுகிறது.
இயலும் அதிகாரமும் இத்தனையென்று அரண் செய்ய விரும்பிய நோக்கம் சில பாடல்கள் மூலம் வெளிப்படுகிறது.
திருவள்ளுவரைக் கொண்டாடவும் திருக்குறளைப் புகழ்ந்தேத்தவும், குறள் பற்றிச் சுதந்திரமாக மொழியப்பட்ட பல புலவர்களின் கருத்துக்களின் தொகுப்பாக ஆக்கப்பெற்ற நூல் இது.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1696
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு திருக்குறள்- படிப்போம் Empty அன்புடைமை - அதிகாரம் 8 - அறத்துப்பால்

Post by வாகரைமைந்தன் Sun Sep 04, 2022 11:45 am

தினம் ஒரு திருக்குறள்- படிப்போம் 5092022



அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும். -71

அன்பை அடைத்து வைக்கமுடியாது.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. - 72

அன்பிலாதவர்களுக்கே எல்லாம் சொந்தம்

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு. - 73

உயிர்களுக்குள் உறவென்பது அன்பால் அமைவது-

அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு. - 74

அன்பு விருப்பத்தையும், விருப்பம் நட்பையும் வழங்கும்

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு. -75

அன்பான வாழ்வே மகிழ்வானவர்களின் வாழ்க்கைப் பயன்

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை. - 76

அறத்துக்கும், வீரத்துக்கும் அன்பே துணை

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம். - 77

வெயிலில் இட்ட புழுபோல் அன்பில்லாதவர்கள் வாடுவா்

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று. -78

அன்பிலா உயிர் வாழ்க்கை பாலைவன மரம் தளிர்த்தது போன்றது

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. - 79

பிற உறுப்புகளைவிட, உள்ளமே அன்பை நன்கு வெளிப்படுத்தும்

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு. - 80

அன்பே உயிர், மற்றது எலும்பாலான உடம்பு
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1696
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு திருக்குறள்- படிப்போம் Empty திருக்குறள் விபரம்

Post by வாகரைமைந்தன் Sun Sep 04, 2022 11:58 am


ரஷ்ய நாட்டுக் கிரெம்ளின் மாளிகையில் அமைந்துள்ள அணுவும் துளைக்க முடியாத சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள மிகச்சிறந்த நூல்கள் சிலவற்றுள் திருக்குறளும் ஒன்றாகும்.

பைபிளுக்கு அடுத்தபடியாக உலக மொழிகளில் அதிகம் மொழிபெயர்க்கப் பெற்ற நூல் குறள்.

1796-இல் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றிய ஃபிரன்சிஸ் வைட் எல்லிஸ் (18-10-1819)என்ற குறள் பற்றாளர் வள்ளுவர் உருவமும், ஐந்துமுனை நட்சத்திரமும் பொறித்த 'இரட்டை வராக-நட்சத்திர பகோடர்' தங்கக் காசுகளை வெளியிட ஏற்பாடு செய்தார் (அவை புழக்கத்திற்கு விடப்பட்டனவா என்பதற்கு இப்பொழுது ஆதாரம் கிடைக்கவில்லை). அக்காசுகளில் இரண்டு லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திலும் இரண்டு கொல்கத்தாவிலுள்ள இந்திய அருங்காட்சியகத்திலும் உள்ளன.
எல்லீஸ் 1831-ஆம் ஆண்டு முதலில் குறளை அச்சிட்டார்.

'தமிழ்' என்னும் சொல்லில் ழகரமாகிய தமிழ்ச் சிறப்பெழுத்து ஒன்று அமைந்திருப்பது போலக் 'குறள்' என்பதில் றகரமாகிய சிறப்பெழுத்து அமைந்திருக்கின்றது.

முதற்குறள் தமிழில் முதல் எழுத்தாகிய 'அ' என்னும் உயிரெழுத்தில் தொடங்கி இறுதி எழுத்தான 'ன்' என்னும் மெய்யெழுத்துடன் கடைசிப் பாடலில் முடிகிறது.

ஒருமுறை பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்துக்கள்: வீ, ங.

அதிகம் பயன்படுத்தப்பட்ட எழுத்து: 'ன்' -1750 முறை

பயன்படுத்தாத எழுத்துக்கள்:
ஒள, ஙி, ஙீ, ஙூ, ஙெ, ஙே, ஙை, ஙொ, ஙோ, ஙொள, செள, ஞி, ஞீ, ஞை, ஞொ, ஞோ, ஞெள, டெள, ணெள, தெள, நை, நெள, பெள, மெள, யெள, ரெள, லெள, வெள, ழூ, ழெ, ழே, ழோ, ழெள, ளோ,ளெள, றெள, னெள, ழூ, ழெ, ழே, ழோ, ழெள, ளோ,ளெள,றெள, னெள.

துணை எழுத்தே இல்லாத குறள்

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக (குறள்391)

வெஃகாமை அதிகாரத்தில் அதிகாரத் தலைப்பையும் சேர்த்து 14 இடங்களில் ஆயுத எழுத்து இடம் பெற்றுள்ளது.

குறளில் உள்ள மொத்தச் சொற்கள் 11597. அவைகளில் 4888 வெவ்வேறானவை; இன்னொரு வகையில் சொல்வதானால், ஒரு சொல் சராசரியாக இரண்டுக்கு மேற்பட்ட தடவை குறளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நூல் முழுமையும் ஐம்பது அல்லது அறுபது வடமொழிச் சொற்களே உள.

குறட்பா 1159 மட்டும் ஈற்றுச் சீரில் ஒரே ஒரு எழுத்தைக் கொண்ட 'தீ' என்னும் சொல்லுடன் முடிந்துள்ளது. அதுவும் அசைச் சொல்லாக இல்லாமல் பொருட்பெயராக அமைந்துள்ளது:

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ

தொடங்கிய சொற்களாலேயே முடித்திருப்பது இரண்டு பாக்கள்:

1. நாடுஎன்ப நாடா வளத்தன நாடுஅல்ல
நாட வளம்தரு நாடு (குறள் 739)
2. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள் (குறள் 751)

முப்பால் எனவும் சொல்லப்படும் திருக்குறளில் அறம், பொருள், இன்பம் எனும் மூன்று சொற்களும் ஒரே பாடலில் இடம் பெற்றுள்ள குறள்:

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள் (குறள் 754)
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு (குறள் 350)
என்ற குறளில் ஒரே சொல் 6முறை இடம் பெற்றுள்ளது.

ஒரே சொல் 5 முறை 5 குறட்பாக்களிலும், ஒரே சொல் 4முறை 22 குறட்பாக்களிலும், ஒரே சொல் 3 முறை 27 குறட்பாக்களிலும் இடம் பெற்றுள்ளன.

கடவுள் வாழ்த்து, கூடாஒழுக்கம், வினைத்தூய்மை, என்ற அதிகாரங்களில் எந்தப் பாடல்களிலும் அதிகாரப் பெயர் இடம் பெறவில்லை.

வெஃகாமை என்னும் அதிகாரம் ஒன்றில் மட்டுமே அதிகாரப் பெயரைச் சுட்டும் பெயர் அதிலுள்ள பத்துப் பாக்களிலும் பயின்று வந்துள்ளது.

71, 110 ஆகிய அதிகாரங்கள் 'குறிப்பறிதல்' என்ற பெயரில் உள்ளன. எனவே 133 அதிகாரங்களுக்கு 132 பெயர்களே உள்ளன.
உதடு ஒட்டாது பாடும் குறட்பாக்கள் கீழ் வருவன:

208, 240, 286, 310. 341, 419, 427, 472, 489, 516, 523, 678 679, 894, 1080, 1082, 1177, 1179, 1211, 1213, 1219, 1236, 1286, 1296.
கி மு 31-ல் திருவள்ளுவர் ஆண்டு தொடங்குவதாக தமிழ் அறிஞர் கொள்வர்.

ஒரே ஈற்றடி இரண்டு குறட்பாக்களில் அமைந்தவாறு ஐந்து இடங்களில் வருகின்றன:

"மெய்ப்பொருள் காண்பது அறிவு" (குறள்கள் 355-423)
"கோடாமை சான்றோர்க்கு அணி" (குறள்கள் 115-118)
"தேரினும் அஃதே துணை" (குறள்கள் 132-242)
"செய்யாமை மாசற்றோர் கோள்" (குறள்கள் 311-312)
"தொல்கவின் வாடிய தோள்" (குறள்கள் 1234-1235) .

ஈற்றடியில் மூன்று சீர்களின் கூட்டுத் தொகையாக ஏழு எழுத்துக்களே கொண்ட குறட்பாக்கள் இரண்டு:

1. ஆகுல நீர பிற (குறள் 34)
2. காதலை வாழி மதி (குறள் 1118)

குறளில் எண்கள்:
குறளில் மிகவும் பயன்படுத்தப்பட்ட எண் '1' தான் (47 முறை). குறளில் கூறப்படாத எண்: 9. பழந்தமிழ் மரபில் 9 என்ற எண்ணைத் தொண்டு என்ற சொல்லால் குறிப்பிடுவர். ஆயினும் தொண்டு, தொண்பது போன்ற சொல்லாட்சி கூட குறளில் காணப்பெறவில்லை.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1696
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு திருக்குறள்- படிப்போம் Empty விருந்தோம்பல் - அதிகாரம் 9 - அறத்துப்பால்

Post by வாகரைமைந்தன் Sun Sep 11, 2022 1:52 pm

தினம் ஒரு திருக்குறள்- படிப்போம் 12092022

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.- 81

இல்லறத்தின் சிறப்பு விருந்தினருக்கு உதவுவதே ஆகும்

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. 82

விருந்தினர் இருக்க சாவா மருந்தானாலும் தனித்து உண்ணாதே

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.- 83

விருந்தினருக்கு உதவுபவனுக்குத் துன்பங்கள் வாராது

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.- 84

விருந்தோம்புபவன் வீட்டில் திருமகள் விரும்பித் தங்குவாள்

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சல் மிசைவான் புலம்.- 85

விருந்தோம்புவான் நிலம் விதைக்காமலே விளையும்    

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.- 86

விருந்தோம்புபவனே வானவர்க்கும் விருந்தினன்

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.- 87

விருந்தினனின் பண்பளவுக்கு விருந்தோம்பிக்குப் பயன் கிட்டும்

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.- 88

ஆதரவில்லாத நிலை விருந்தோம்புவனுக்கு ஏற்படாது  

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.- 89

அறிவில்லாத செல்வந்தர்களே விருந்தோம்ப மாட்டார்கள்

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.- 90

முகம் திரிந்தால் அனிச்சம்போல முகம் வாடுவர் விருந்தினர்
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1696
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு திருக்குறள்- படிப்போம் Empty உரையாசிரியர்கள்

Post by வாகரைமைந்தன் Sun Sep 11, 2022 2:03 pm


உரையாசிரியர்கள்
திருக்குறளில் மூலபாடமே இன்றியமையாதது. உரைகள், உள்ள பொருளைக் காட்டும் கைவிளக்குப் போன்றவை. திரும்பத் திரும்ப மூலத்தைப் பொருளுணர்ச்சியோடு படிப்பதாலேயே வள்ளுவத்தின் உண்மை புலப்படுவதுடன் அதன்வழி நடக்கும் உந்தலும் ஏற்படும்.
- தமிழண்ணல்

உரையாசிரியர்கள் உரையினுள் புகுந்தால் உண்மையைக் காண்பது அரிது; உரைகள் மதியை மயக்குவன; உண்மையை ஒளிப்பன; குழப்பமே தருவன என்பது அவர்கள் மீது கூறப்படும் பொதுவான குறைகளாகும். ஆயினும் ஏனைய சங்கத்தமிழ் நூல்களுக்கும் மற்றும் குறளுக்கும் உரை எழுதி அவற்றைக் காத்துத்தந்தவர்கள் உரையாசிரியர்களே. குறளுக்கு உரை செய்த புகழ்பெற்ற அறிஞர்கள் பல துறை அறிவுக்கூறுகள், பல்கலைப் புலமை கொண்டவர்கள். அவர்கள் அகராதித் தொண்டாற்றினர்; இலக்கண ஆராய்ச்சி செய்தனர்; இலக்கியச் சுவை நல்கினர்; திறனாய்வாளராகத் திகழ்ந்தனர்; குறளுக்குக் களங்கம் சேர்க்கும் நோக்கில் அமைந்த வஞ்சன உரைக்கு எதிர்ப்புக் குரல் எழுப்பினர்; நம் நாகரிகம், பண்பாடு, பழக்க வழக்கம் ஆகியவற்றை வெளிப்படுத்தினர். இவர்கள் செய்த பணி போற்றிப் புகழத்தக்கது.

உரையாசிரியர்கள்
மு வை அரவிந்தன் "உரையாசிரியர்கள்" என்ற தனது அரிய விரிவான ஆய்வு நூலில் தமிழ் இலக்கண, இலக்கிய, சமய நூல்கள் பலவற்றின் உரையாசிரியர்களைப் பற்றி பரந்துபட்ட செய்திகளைத் தெளிவாகத் தருகிறார். அவர் நூலில் காணப்படும் கருத்துக்கள் இப்பக்கத்தில் நிறையப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தம் ஆராய்ச்சிக்கு வடிவம் தரும் நோக்கிலும், தாங்கள் பெற்ற இலக்கிய இன்ப அனுபவங்களை மற்றவர்களும் நுகரும் முகத்தானும் உரையாசிரியர்கள் அவற்றை எழுதி வைத்து நூல் இயற்றினர்.

தோன்றிய காலத்தில் புகழுடன் விளங்கிய சில நூல்கள், காலப்போக்கில் ஏற்பட்ட மாறிய அரசியல் சூழல், சமூகச் சிந்தனை மாற்றம், சமயக் கோட்பாடுகளின் தாக்கம் ஆகியவற்றால் செல்வாக்கு இழந்தன. இலக்கிய மரபும் இலக்கணக் கோட்பாடும் மாறியதால் சில நூல்கள் தமக்குரிய இடத்தை இழந்து பின்தங்கின. தமிழ் மொழியில் பழையன கழிந்து புதியன புகுந்து, பழஞ்சொற்களின் பொருள் மாறியதால் சில நூல்கள் புரியாத நிலையை அடைந்தன.

அயல் நாகரிகத்தை ஏற்றுக் கொண்ட மக்களின் புதுமை நாட்டத்தால் சில நூல்கள் அழிந்தன. இவ்வாறு தமிழ் நூல்களுக்கு அவ்வப்போது ஏற்பட்டு வந்துள்ள தடை, எதிர்ப்பு, புறக்கணிப்பு ஆகியவற்றை அகற்றி அவை இழந்த விட்ட செல்வாக்கை மீட்டுத் தர உரையாசிரியர்கள் பெருமுயற்சி செய்தனர். இலக்கணக் கொள்கைகளை விளக்கி மொழியை வரம்புகட்டிக் காத்தும், இலக்கியக் கருத்துக்களை விளக்கிக் காலந்தோறும் பண்பாட்டை வளர்த்தும் தமிழ் மரபிற்குத் தொண்டு செய்ததில் உரையாசிரியர்களின் பங்கு நிறைய உண்டு.

ஒரு நூலின் கருத்தையோ பாட்டின் பொருளையோ காண்பதற்குப் பல அறிவுக்கூறுகள் வேண்டும். உரையாசிரியர்கள் மொழியியல், அறிவியல், உளவியல், சமூகவியல், வரலாற்றியல், சட்டவியல், நாட்டுப்புறவியல் எனப் பல்துற அறிவுக்கூறுகளைக் கொண்டிருந்தனராகக் காணப்படுகின்றனர். திறனாய்வின் கூறுகளும் பண்டைய உரையாசிரியர்களின் உரைகளில் காண்கிறோம். இது இன்ன காலத்துத் தோன்றிய நூல் என்ற கால அறிவும், இக்காலத்து இச் சொல்லுக்கு இப் பொருள் என்ற சொல்லறிவும், இன்ன காலத்து இருந்த பழக்க வழக்கங்கள் இவை என்ற சமுதாய அறிவும், இத்தொடர் ஓடிக்கிடக்கும் முறை இது என்ற நடையறிவும், இன்ன பிறவும் இருந்தால்தான் பொருளை முரணின்றிக் காண முடியும்.

உரையாசிரியர்களின் பணி பழைய நூல்களுக்கு உரை கண்டதோடு நின்றுவிடவில்லை. அவர்கள் பழைய நூல்களில் பிற்காலத்தவர் எழுதிச் சேர்த்த/திருத்திய பொருந்தாப் பாடல்களை/இடைச்செறுகல்களை ஆராய்ந்து நீக்கினர். ஏடு எழுதியவரால் நேர்ந்த பிழைகளையும் களைந்தனர். உரையாசிரியர்களின் துணை இல்லாவிடின் பழம்பெரும் நூல்களில் பொதிந்து கிடக்கும் கருத்து வளங்களை நாம் பெற முடியாமலேயே போய் இருக்கும்.

"உரையாசிரியர்கள் பண்டைத் தமிழ் நூல்களுக்குச் செய்த ஒரு பெருந்தொண்டு மூலச் செம்மையாகும்" என்பார் வ சு ப மாணிக்கம். உரைகள் தோன்றியிராவிட்டால் திருக்குறள் மூலம் பல மூலங்களாயிருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இலக்கண நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் விளக்கங்களில் பொருள் தெளிவைத் தருகிறார்கள். குறள் போன்ற இலக்கிய நூல்களின் உரைகளிலோ பொருள் தெளிவோடு நயங்களும் பெருகிக் காணப்படுகின்றன.

குறள் உரையாசிரியர்கள் வள்ளுவர்மேல் மிகுந்த மதிப்பு வைத்திருந்தனர். காலிங்கர் 'வள்ளுவக் கடவுள்' என்று சொன்னார். பரிமேலழகர் 'தெய்வப் புலமைத் திருவள்ளுவர்' என்று உயர்த்திக் குறிப்பிடுகிறார். சிவப்பிரகாசர் இறைவன் திருவடியோடு ஒத்த மதிப்பு திருக்குறளுக்குத் தந்தார்.

உரை தேவை ஏன்?
இலக்கணமும் இலக்கியமும் சுருங்கிய சூத்திர வடிவில் அமைந்திருப்பதால், அவற்றின் பொருளை அறிந்துகொள்ள உரைகள் தேவையாகின்றன. இலக்கிய நூல்கள் சிலவற்றை உரைகளின் உதவி இல்லாமல் அறிவது கடினம். மேலும் மொழி வளர்ச்சியின்போது சொல் மாற்றங்களும் பொருள் மாற்றங்களும் நிகழ்கின்றன. காலம் செல்லச் செல்ல முந்தைய காலத்தில் வழங்கிய சொல்லின் பொருளை இன்னொரு காலத்தில் புரிந்து கொள்வது கடினமாகிப் போகிறது. கடினம் என்பது காலத்துக்கேற்பவும் அவரவர் தகுதிக்கு ஏற்பவும் அமையும்.

படிப்பவர்களுக்கு எளிதாகப் புரியும் வண்ணம் உரை காண முயன்ற ஆசிரியர்கள் பயன்பாடுடைய நூல்களை, பயன்படத்தக்க வகையில் எளிய முறையில் புரிந்து கொள்ளும் நோக்கில் உரை அமைத்தனர். குறள் தோன்றிய காலம் முதல் இன்று வரையான இந்தக் காலத்தில் நூலைப் பயில வந்தவர்களின் இடர்ப்பாடுகளை இந்த உரைகள் போக்கியிருக்கின்றன; காலம் என்ற இடைவெளியைக் குறைத்திருக்கின்றன. உரைகள் எழுதவேண்டிய தேவையும் கட்டாயமும் இதனால் தெளியப்படும்.

மூல நூலைச் சிதைவுறாமல் காப்பாற்றிப் பெரும்பணி ஆற்றினர் உரையாசிரியர்கள். உரைகள் இல்லாமல் இருந்திருந்தால், பல பழந்தமிழ் இலக்கணங்களும் இலக்கியங்களும், கால ஓட்டத்தில் மறைந்து போய் கிடைக்காமல் இருந்திருக்கும். பழைய உரைகள் இன்மையால் கம்பராமாயணத்தில் நூல்முழுக்க இடைச்செருகல்களாக பல நூறு பாடல்கள் நுழைந்தன; பாடல் தோறும் கணக்கற்ற பாட வேறுபாடுகள் இடம் பெற்றன. பெருங்கதை முதலும் முடிவும் இழந்து விளங்காது இருப்பதற்குக் காரணம், அதற்குப் பழைய உரை ஒன்றும் ஏற்படாமையே ஆகும் என்பர் அறிஞர். கால மாறுபட்டால், பரிபாடலில் இடைச் செருகலும் பாட வேறுபாடுகளும் புகுந்து நூல் சிதைந்துவிட்டது. அந்த நிலையில் அதனைத் திருத்தம் செய்து அதன் பண்டைய பெருமை மாறாமல் உரையுடன் தந்தவர் பரிமேலழகர்.

உரை இலக்கணம்:
உரையின் பொது இலக்கணத்தை நன்னூலின் பொதுப்பாயிரம் இவ்வாறு கூறுகின்றது:

பாடம் கருத்தே சொல்வகை சொற்பொருள்
தொகுத்துரை உதாரணம் வினாவிடை விசேடம்
விரிவு அதிகாரம் துணிவு பயனோடு
ஆசிரிய வசனம்என்று ஈரேழ் உரையே. (பொதுப்பாயிரம்-20)

(பொருள்: பாடம் சொல்லலும், கருத்துரைத்தலும், சொல்வகுத்தலும், சொற்பொருள் உரைத்தலும், பொழிப்புரைத்தலும், உதாரணம் காட்டலும், வினாத் தோற்றலும், விடை கொடுத்தலும், விசேடம் காட்டலும்(சூத்திரத்து உட்பொருளன்றி ஆண்டைக்கு வேண்டுவன தந்து உரைத்தல்), விரிவு காட்டலும் (வேற்றுமை முதலிய தொக்கு நிற்பனவற்றை விரிக்க வேண்டியதிருந்தால் விரித்து உரைத்தல்), அதிகார வரவு காட்டலும் (அவ்வதிகாரத்தோடு பொருந்த உரைக்க வேண்டும் வகையில் உரைத்தல்), துணிவு கூறலும் (ஐயுறக் கிடந்தவழி இதற்கு இதுவே பொருள் என உரைத்தல்), பயனொடு படுத்தலும், ஆசிரிய வசனம் காட்டலும் என்னும் இப்பதினான்கு பகுதியானும் உரைக்கப்படும் சூத்திரப் பொருள்.)

உரை வகைகள்:
உரைகளை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்துவர்:
பதவுரைகள்: சொற்கள், தொடர்கள் அனைத்திற்கும் ஒன்று விடாமல் தனித்தனியே பொருள் கொள்ளுமாறு அமையும்.

பொழிப்புரைகள்: சொல்லுக்குச் சொல், தொடருக்குத் தொடர் பொருள் கண்டு, அப்பொருள்கள் கூடியோ, குறைந்தோ, சிதையாமல் அவற்றை ஒருங்கிணைத்துப் பொருள் கொள்வது.

விரிவுரைகள்: பதவுரை, பொழிப்புரை என இவற்றுள் ஒன்றோ அல்லது இரண்டையுமே அமைந்து அந்த குறள் பற்றி பல நோக்கிலான விளக்கங்களும் அமையும்.

விளக்கவுரைகள்: வரலாற்று நிகழ்வுகள், புராணக்கதைகள், சமயத்தத்துவங்கள், நடைமுறை நிகழ்வுகள் போல்வன தந்து, அல்லது அவற்றின் அடிப்படையில் பொருளை விளக்குவதாக அமையும்.

கருத்துரைகள்: சொல்லுக்குச் சொல், தொடருக்குத் தொடர் பொருள் சொல்லுதல் என்று இல்லாமல், குறளின் திரண்ட கருத்தைச் சொல்லும் வகையில் அமையும்.

ஒரு வரி உரைகள்: சொல்லுக்குச் சொல், தொடருக்குத் தொடர் பொருள் காணுதல் என்று இல்லாமல், குறளின் திரண்ட கருத்துரைகள் கண்டு அவற்றை மேலும் சுருக்கி ஒரு வரியில் உரை காணும் முயற்சி.

நூலுக்கு உரை காணுதல் என்பதோடு, தேவை கருதி, உரைக்கும் விளக்க உரை காண வேண்டிய சூழல்கள் உருவாக்கம் பெற்றுள்ளது. அவை உரை விளக்க உரைகள் எனப்படும்.
ஒரு செய்யுள் நூலுக்கு உரைநடையில் கூறுவதோடு செய்யுள் உருவத்திலேயே உரை இயற்றுதலும் உண்டு.

உரை திறனாய்வாளர்கள் நல்லுரை, கவியுரை, தற்சார்புரை, மிகையுரை, குறையுரை, பொருந்தா உரை என்று வகை கண்டு ஆய்வு செய்வர்.

பல உரைகள் ஏன்?
குறளுக்குப் பத்தாம் நூற்றாண்டு தொடங்கி இன்றுவரை நூற்றுக்கணக்கில் உரை கண்டிருக்கிறார்கள்; இன்னும் உரைகள் வந்த வண்னமே உள்ளன. பெரும்பான்மைக் குறட்பாக்களுக்கு உரைகளில் ஒப்புமை உண்டு. சில பாக்களுக்கு உரை சிறிய வேறுபாட்டோடு உள்ளன. இன்னும் சில பாடல்களுக்கு உரை வேற்றுமை மிகையாக உள்ளன. இது ஒர் பெரிய குறைபாடே ஆகும். ஒரு குறளுக்கு ஒரு கருத்துத்தான் இருக்கமுடியும் என்பதை மறுப்பதற்கில்லை. வள்ளுவர் அவ்வாறெல்லாம் விரும்பினாரோ இல்லையோ, அவரது மொழி ஒரு பாடலுக்குப் பல வகையாய்ப் பொருள் கொள்ள இடந்தருகின்றது.

திருக்குறளுக்குப் பல உரைகள் தோன்றியதற்குரிய காரணங்களை ஆராய்ந்த வ.சுப.மாணிக்கம் கூறுவதாவது:
1. பாட வேற்றுமையால் சில உரை வேற்றுமைகள் காணப்படும். இவை ஆராய்ந்து ஏற்கத்தக்கன.
2. பாடம் கற்பித்துக்கொண்டு ஓரிருவர் புதுப் பொருள் காட்டியுள்ளனர்; இவர் பொறுக்கத் தகார்; கண்டிக்கத் தகுவர்.
3. இலக்கண வறுமையாலும் இலக்கணச் செருக்காலும் எழுந்த உரைவேற்றுமைகளும் உள; இவை பழிக்கத் தகும்.
4. முன்னோன் எழுதிய உரைப்பொருளைப் பெரிதும் தழுவக்கூடாது; தாம் ஒரு தனியுரை எழுதத் துணிந்ததற்குச் சான்றாக எங்ஙனமேனும் பல குறட்குப் புத்துரை சொல்ல வேண்டும் என்னும் முனைப்பு.

திருக்குறள் உரை வேற்றுமைகளை நன்கு ஆராய்ந்துரைத்த இரா சாரங்கபாணி உரை வேற்றுமைக்குரிய காரணங்களைப் பின்வருமாறு கூறுகின்றார்: “ஏடெழுதுவோர் பிழையால் புகுந்த பாட வேறுபாடுகளும், குறளைப் பிரிக்கும் முறைகளும் சொற்களைக் கொண்டு கூட்டும் நெறிகளும், காலத்தால் சொற்கள் எய்திய பொருள் வேறுபாடுகளும் சமுதாயத்தின் பழக்க வழக்க மாறுபாடுகளும் இயல்பாகவே உரை வேற்றுமைகட்கு இடங்கொடுத்து விட்டன. புற நாகரிகச் சார்பும் சமயச் சார்பும் அரசியற் சார்பும் முன்னிற்க, வலிந்து வேறுபட்ட உரைகளை எழுதினோரும் உளர்."

நூலாசிரியரே உரை எழுதிவிட்டால் உரைவேற்றுமை எழ வாய்ப்பில்லையே என்ற எண்ணம் எழுகிறது. மூல ஆசிரியரே உரையையும் எழுதிவிடும் வழக்கமும் உண்டு. வடமொழி நூல்களில் இவ்வாறு ஆசிரியரே உரை எழுதும் முறை பெரிதும் உள்ளது. நூலாசிரியரே தம் கருத்தைத் தாமே இது என்று திட்டவட்டமாக விளக்கி விடுகின்றார். பின் வருவோர் தம் கருத்தை மாறுபடக்கொள்வாரோ, தாம் கூறியுள்ள அரிய கருத்து விளங்காமல் போய்விடுமோ என்று நூலாசிரியர் அஞ்சியதாலேயே இவ்வாறு உரை எழுதியிருக்கலாம். ஆகையால் நூலாசிரியரே உரை எழுதிவிட்டால், மற்றோர் உரை தோன்ற வாய்ப்பு இல்லை. நூலைப் படிப்பவர்களுக்கு வேறுவகையான விளக்கமோ, கருத்தோ தோன்றினாலும் அவற்றைக்கொள்ளத் தடையாக இருக்கும்.

ஆனால் காலந்தோறும் தோன்றும் புதிய கருத்திற்கு அந்நூலில் இடமிருக்காது. நூலின் சிறப்பு, பாடலின் நயம், கருத்தழகு ஆகியவற்றை நூலாசிரியரே வியந்து, தம் உரையில் பாராட்டிக் கொள்வது சிறப்பாக இருக்காது. தம் புலமை மாண்பைத் தாமே பாராட்டிக்கூறும் ஆசிரியரை உலகம் எள்ளி நோக்கும் நிலை வரும். இவற்றை எல்லாம் பார்க்கும்போது, நூலாசிரியரே உரை எழுதுவதால் பயன் மிகுதியாக இல்லை என்றே தோன்றுகிறது.

தோன்றியுள்ள பல உரைகளைத் தொகுத்து உரை வேற்றுமைகளை அறிந்து உண்மை காணும் ஆய்விலும் ஆய்வில் கண்ட முடிவுகளைப் படித்து உணரும்போதும் ஓர் இன்பம் உண்டாகின்றது. ஏதேனும் ஒரு சொல், ஏதேனும் ஓர் இலக்கணக் குறிப்பு, ஏதேனும் ஒரு விளக்கம் ஆகியவை பற்றி வெவ்வேறு காலத்தில் தோன்றிய வெவ்வேறு நூலின் உரையாசிரியர்கள் என்ன என்ன கருதினர் என்பதை அறிந்து இன்புறலாம். குறளுக்குப் பல உரைகள் தோன்றியமை நன்மைகளே மிகவும் செய்துள்ளன.

குறள் உரைகளை ஒப்பிட்டு நோக்கும்போது மாறுபட்ட கருத்துகள் வெளிப்படுகின்றன. நூலின்அமைப்பு, உரையாசிரியர்களின் நோக்கு, பால்தோறும் அமைந்துள்ள இயல்கள், குறள் வைப்புமுறை, ஒரே குறளுக்குப் பலவேறு கருத்துக்கள், ஒரே சொல்லுக்கு வேறுவேறு பொருள்கள் ஆகியவற்றினால் உரைவேற்றுமைகளை அறியமுடிகின்றது.

குறள் - பழைய உரையாசிரியர்கள்
திருக்குறளுக்கு முன்னர் உரை செய்தவர்கள் பத்து பேர். இதை
தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பரிமேலழகர் பரிதி-திருமலையர்
மல்லர் கலிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர்நூற்கு
எல்லை யுரையெழுதினோர். என்ற வெண்பா தெரிவிக்கிறது.
[எல்லை உரை - மிகாமலும் குறையாமலும் அளவோடு அமைந்த உரை]
அக்காலத்திலேயே குறளுக்கு பத்து உரைகள் தோன்றியதை அறிஞர்கள் பெருமையாகப் போற்றிக் கொள்வர்.

இப் பதின்மருள் இன்று மணக்குடவர், பரிமேலழகர், பரிதி, பரிப்பெருமாள், காலிங்கர் ஆகிய ஐவர் இயற்றிய உரைகள் கிடைத்து அச்சில் வெளி வந்துள்ளன. ஏனையோர் உரைகள் கிடைக்கவில்லை. கடவுள் வாழ்த்தில் இரண்டு குறள்களுக்குத்(5.6) தாமத்தர் நச்சர் தருமர் ஆகிய மூவர் உரைகள் கிடைத்துள்ளன.

தருமரைப்பற்றி அபிதானகோசம், “வள்ளுவருக்கு உரை செய்த பதின்மருள் முற்பட்டவராகிய தருமர் (தரும சேனர்) உரையில் ஆருகத மதக் கொள்கைகளே பிரசங்கிக்கப்பட்டன” என்று கூறுகின்றது. இவரைப்பற்றி வேறு செய்தி எதுவும் தெரியவில்லை. நச்சர் என்பவர் நச்சினார்க்கினியர் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் பெயரில் உள்ள சில எழுத்துக்களின் ஒற்றுமை தவிர்த்து, நச்சர்தான் நச்சினார்க்கினியர் என்பதற்குப் போதிய சான்றுகள் இல்லை; நச்சினார்க்கினியரைப்பற்றிய சிறப்புப் பாயிரம் அவர் குறளுக்கு உரை இயற்றியதாய்க் குறிப்பிடவில்லை. திருமலையர் என்பவர் சமணராய் இருத்தல் கூடும். திருமலை என்பது, வேலூர் மாவட்டத்தில் உள்ளது; சமணர்க்குரிய இடமாய்த் திகழ்ந்து வருகின்றது. தாமத்தர், மல்லர் ஆகியோரைப்பற்றி எந்தச் செய்தியும் வெளிப்படவில்லை.

பத்து உரைகளே அன்றி, செய்தவர் பெயர் தெரியாத இரண்டு தொல் உரைகளும் உள்ளன. அவற்றுள் ஒன்றினை ‘திருக்குறள் பழையவுரை’ என்ற பெயருடன் டாக்டர் உ.வே.சா. நூல் நிலையம் வெளியிட்டுள்ளது. மற்றோர் உரை பரிதியாரின் உரையைத் தழுவி எழுதப்பட்டுள்ளது. முதல் பதினோரு அதிகாரங்களுக்குமேல் இப்பழைய உரைக்கும் பரிதியார் உரைக்கும் வேறுபாடில்லை. கடவுள் வாழ்த்துப் பகுதியில் சைவ சமயக் கருத்திற்கு ஏற்பக் கடவுளின் தன்மை கூறப்பட்டுள்ளது. வழக்குச் சொற்களும் வடசொற்களும் மிகுதியாக உள்ளன. சைவ சமயச் சார்புடைய புராணங்கள் மேற்கோள் காட்டப்பெறுகின்றன. நடைச் சிறப்பு இல்லாவிட்டாலும் கருத்துச் சிறப்பிற்காகக் கற்று மகிழவேண்டிய இடங்கள் பல உள்ளன.

குறளுக்குத் தனியாக உரை எழுதாமல் வேறு நூல்களுக்கு உரை இயற்றியவர்கள் தம் உரைகளில் தேவையான இடங்களில் குறட்பாக்கள் சிலவற்றிற்கு உரை எழுதியுள்ளனர். இலக்கிய இலக்கண நூல்களுக்கு உரையெழுதிய புகழ்பெற்ற உரையாசிரியர்கள் சிலர் தமது உரைகளில் குறளை தகுந்த இடங்களில் பயன்படுத்தினர். அவர்கள் வள்ளுவரின் வாக்கை மேற்கோளாகக் காட்டி அவற்றின் சொற்பொருள் நயங்களிலும் இலக்கண முடிவுகளிலும் பெரிதும் ஈடுபட்டனர்.

அவ்வுரைகள் புதிய கருத்துகளுடன் மற்ற உரைகளோடு மாறுபட்டு உள்ளன. தொல்காப்பிய சொல்லதிகாரத்திற்கு உரையெழுதிய இளம்பூரணர் இரண்டு இடங்களிலும்,சேனாவரையர் இருபது இடங்களிலும், நச்சினார்க்கினியர் நாற்பத்தொன்பது இடங்களிலும்,கல்லாடர் மூன்று இடங்களிலும், பெயர் தெரியாத ஒருவர் ஐந்து இடங்களிலும் குறட்பாக்களை மேற்கோளாகக் காட்டி நயம்பட உரை எழுதியுள்ளனர். குறளை இவ்வுரையாசிரியர்கள் மிக நன்றாக ஊன்றிக் கற்றுள்ளமை தெளிவாகின்றது. தொல்காப்பிய இலக்கணத்தோடு ஒத்து நடப்பது குறள் என்பது இவ்வுரையாசிரியர்களின் கருத்தாகும்.

சங்கர நமச்சிவாயர் தமது நன்னூல் உரையில் ‘இசையெச்சம் என்னும் இலக்கணத்துக்கு உதாரணமாக, ‘இணரெரி தோய்வன்ன.......’ என்னும் குறளை எடுத்துக்காட்டி மிக அழகாக விரிவுரை எழுதியுள்ளார்.

பழைய உரையாசிரியர்களில்
- மணக்குடவர் உரை இயல்பாகவும் எளிமையாகவும் அமைந்துள்ளது.
- பரிப்பெருமாள் உரை பெரிதும் மணக்குடவரைச் சொல்லிலும் பொருளிலும் தழுவிச் செல்கிறது.
- பரிதியார் உரை பல இடங்களில் மூலத்தோடு தொடர்பில்லாமல் தனித்து நிற்கும்.
- காலிங்கர் உரை நல்ல நடையழகோடு அமைந்திருக்கிறது.
- பரிமேலழகர் உரை செறிவும் நுண்மையும் இலக்கணத் திட்பமும் உடையதாய் இருக்கிறது.

சமண, பெளத்த, வைதிக சைவ, வைணவ, அத்வைத, துவைத, கிருத்தவ, சாங்கிய, பகுத்தறிவு, இயற்கை நெறி, காந்திய, பொதுவுடைமை நோக்கில் பலர் பலவிதமாக உரை கண்டிருக்கிறார்கள். மதங்களின் நோக்கில், கோட்பாடுகளின் பார்வையில், குறளை இவ்வுரையாசிரியர்கள் மறு விளக்கம் அளித்துக்கொண்டார்கள். சார்புகளே அற்ற குறளை, விரும்பியோ விரும்பாமலோ, சார்பு நூல் ஆக்க முயற்சித்தனர்.

இன்றைய உரையாசிரியர்கள்
இக்காலத்தில் பழம்பெரும் நூல்களுக்கு மிக எளிய உரைகள் எழுதி அவற்றை மக்களிடம் பரப்பும் முயற்சி நடைபெறுகிறது. பழைய உரைகளைத் திருத்தமாக வெளியிடுதல், உரையில் வழுவுள்ள இடங்களை ஆராய்ந்து உண்மை உரைகாணுதல், சிறந்த பாடம் கண்டு போற்றுதல், உரைக்கு விளக்கம் தரல், கடினமான உரைப் பகுதிக்கு எளிய நடையில் விளக்கம் எழுதுதல் போன்ற நல்ல முயற்சிகள் நடை பெறுகின்றன. மாணவர்க்கு ஏற்ற வகையில் அடிக்குறிப்பும், வினாவிடைகளும் அமைத்துத் தரல்; உரையில் வந்துள்ள நயமான பகுதி, உவமைகள், மேற்கோள், பழமொழி ஆகியவற்றைத் திரட்டித் தருதல் போன்ற பயனுள்ள பணிகளும் நடைபெற்று வருகின்றன.

ஒரு நூலுக்கு வழங்கிய பல்வேறு உரைகளையும் தொகுத்துக் காணவேண்டும் என்ற ஆர்வம் இக்காலத்தில் ஏற்பட்டுள்ளது. பலருடைய கருத்துக்களையும் ஒரே இடத்தில் காணும் வேட்கை பிறந்துள்ளது; உரை வேற்றுமைகளைக் கண்டு நல்லனவற்றையும் அல்லனவற்றையும் சீர்தூக்கும் நோக்கம் வளர்ந்து வருகின்றது. செல்வாக்கு உடையவர்களின் சொல்லை அப்படியே ஏற்கும் நிலை மாறி, நல்லது எது, சிறந்தது எது, பொருத்தமானது எது - என்று ஆராயும் திறன் பெருகி வருகின்றது. புகழ்பெற்ற உரையாசிரியர்களின் பொருந்தாக் கருத்துக்களை மறுக்கும் துணிவு தலை தூக்கியுள்ளது. யார் சொல்கின்றார்கள் என்று பார்க்கும் நிலை மாறி என்ன சொல்லுகின்றார் என்று நுணுகி நோக்கும் நிலை ஏற்பட்டு வருகின்றது. (மு.வை. அரவிந்தன்).

குறட்பொருளை வேறுபட்ட கோணங்களில் புரிந்து கொள்ளவும் உரைத் திறனை ஒப்பு நோக்கிப் பாராட்டவும் வெவ்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த மணக்குடவர், பரிமேலழகர், மு வரதராசன் (பொழிப்புரைப் பகுதி)ஆகிய மூன்று உரையாசிரியர்களைப் பற்றிய சிறு குறிப்புகள்:

மணக்குடவர் (கி பி 10-11-ம் நூற்றாண்டு):
இப்பொழுது நமக்கு முழுதாகக் கிடைத்திருக்கிற குறள் உரைகளின் ஆசிரியர்களில் காலத்தால் முற்பட்டவர் இவர். ஆயினும் இவரே மற்ற உரைகளைப் பற்றித் தம் உரையில் குறிப்பிடுவதால் இவருக்கு முன்னும் உரையாசிரியர் இருந்தமை புலனாகும்.

இவரது உரை தெள்ளிய தமிழில் எளிய நடையில் பொழிப்புரையாக உள்ளது; தேவையான இடங்களில் மிகச் சுருக்கமாக விளக்கம் எழுதுகின்றார். மேற்கோள் காட்டி கருத்துரையும் செய்கிறார். குறட்கருத்தை முடிபுரையாகவும் கூறும் போக்கு இவர் உரையில் உண்டு. குறளின் கருத்து இது என்று கூறுகின்றார். குறள் இருக்கும் அமைப்பிலேயே பொருள் உரைக்கின்றார். தமிழ்ப் பண்பாடு தழுவி எழுதப்பட்ட தெளிவுரை என்று இவரது உரையைப் போற்றுவர். வலிந்து வட நூற் கருத்தைத் தம் உரையில் புகுத்துவதில்லை. பரிமேலழகர் உரையை மறுப்பவர்களும் அவரது கருத்தை ஏற்காதவர்களும் மணக்குடவர் உரையையே நோக்குவது மரபாகிவிட்டது.

"இவரிடம் ஆரவாரமோ புலமைச் செருக்கோ காணப்படவில்லை. கற்று அறிந்து அடங்கிய அறிஞராக இவர் காணப்படுகின்றார்." என்று மு வை அரவிந்தன் குறிப்பிடுகிறார். மேலும் இவர் கூறுவதாவது: "பரிமேலழகருக்குச் சிறந்த வழிகாட்டியாய் இருந்தவர் மணக்குடவரே. இவர் அமைத்துச் செப்பனிட்ட பாதையிலேயே பரிமேலழகர் முன்னேறிச் செல்கின்றார். அதிகாரந்தோறும் அமைந்துள்ள குறட்பாக்களை, கருத்து இயைபு நோக்கிப் பிரித்துப் பொருள்கூறும் முறையைப் பரிமேலழகர் மணக்குடவரிடமிருந்தே பெற்றுள்ளார். பல குறட்பாக்களின் உரையும் விளக்கமும்கூடப் பரிமேலழகர், மணக்குடவரைத் தழுவியே உரைக்கின்றார்."

பரிமேலழகர் (கி பி 13-ம் நூற்றாண்டு):
பழைய உரையாசிரியரிகள் பத்துப் பேரினுள் காலத்தால் பிற்பட்டவர். பரிமேலழகர் தமக்குமுன் தோன்றிய ஒன்பது உரைகளையும் கற்கும் வாய்ப்புப் பெற்றார். முந்தைய உரையாசிரியர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு சிறப்பியல்பு காணப்படுகின்றது. எல்லா உரைகளிலும் உள்ள நல்ல இயல்புகளை அறிந்தார். ஒவ்வொரு உரையிலும் காணப்பட்ட குறை நிறைகளை உணர்ந்தார். இதன் பயனாய் நல்லனவற்றை மேற்கொண்டு குற்றங்குறைகளை நீக்கி, சிறந்த உரை காணும் வாய்ப்புக் கொண்டார். பாலின் தொடக்கத்தில் எழுதும் விரிவுரை, இயல்பற்றிய ஆராய்ச்சியுரை, அதிகாரம் தோறும் எழுதும் முன்னுரை, அதிகார வைப்பு முறை பற்றிய விளக்கம், அதிகாரத்திற்குள் குறட்பாக்களைப் பொருள் தொடர்போடு தொகுத்து நோக்குதல் ஆகியவற்றைப் பரிமேலழகர் தமக்கு முற்பட்ட உரையாசிரியர்களிடமிருந்து பெற்றார்.

பிற நான்கு பழைய உரையாசிரியர்களும் பொழிப்புரை மட்டுமே வரைந்தார்கள்; மணக்குடவர் சில இடங்களில் விரிவுரை தந்துள்ளார். ஆனல் பரிமேலழகர் குறளுக்குப் பதவுரை, பொழிப்புரையோடு விளக்கவுரை கலந்து உரையெழுதியுள்ளார். இவர் சொல்நயம், பொருள்நயங்களை எடுத்துக்காட்டுவதோடு தேவையான இடங்களில்(ஏறக்குறைய 500) இலக்கணக் குறிப்புகளும் எழுதியுள்ளார். அகப்பொருள் இலக்கணத்தைக் காமத்துப்பாலில் நன்கு பொருத்திக்காட்டி நயமாகப் பொருள் எழுதுகின்றார். இவரது இலக்கண விளக்கங்கள் இவரது உரைக்கு மிகப்பெரிய வலு சேர்த்தன. பரிமேலழகர் உரையை இலக்கணவுரை என்றும் கூறுவர்.

நம்மால் விரும்பப்படுபவர் என்பதற்காகவோ, பலரால் போற்றப்படுபவர் என்பதற்காகவோ அவர்களிடம் உள்ள தாழ்வான சிந்தனைகளையும் ஏற்கமுடியாது. பரிமேலழகர் உரையாசிரியர்களில் சிறந்தவர் என்பது உண்மையானாலும் சமயக்கருத்துக்களையும் ஆரியக் கொள்கைகளையும் இயல்பாகவோ வலிந்தோ புகுத்தி உரையெழுதினார் என்று குற்றம் சாட்டுவோர் பலர் உண்டு. சில இடங்களில் வள்ளுவர் புகழுக்கு மாசு கற்பிக்கும் வகையிலும் உரை தந்துள்ளார். பெண்கள் இயல்பு பற்றியும் குறளில் இல்லாத, தவறான, விளக்கம் தந்துள்ளார்.

குறள் 61-உரையில் 'அறிவறிந்த மக்கட்பேறு' என்ற தொடருக்கு ''அறிவறிந்த' என்றதனான் 'மக்கள்' என்னும் பெயர் பெண்ணொழித்து நினறது' என்று கூறி, 'இதனால் புதல்வர்ப் பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது' எனவும் மேலும் ஒரு பொருந்தாக் கருத்தையும் கூறி இருக்கிறார். குறள் 68-இல் 'கேட்ட தாய்' என்பதற்கு 'பெண்ணியல்பால் தானாக அறியாமல் கேட்ட தாய்' என விசேட உரையில் கூறியுள்ளார். அதாவது பெண்ணிற்கு கல்வி, கேள்விகளால் வரும் அறிவில்லை எனவும் அதனால் தாய் தன் மகன் சான்றோனாய்த் திகழும் சிறப்பத் தானே அறிய மாட்டாள் எனவும் ஊர்ப்பெரியோர் வாயிலாகக் கேட்டே அறிவாள் எனவும், அவ்வுரை கேட்டமையால் பெரிதும் மகிழ்வாள் எனவும் கொள்வது பரிமேலழகர் கூற்றாகிறது. இது முற்றிலும் வள்ளுவத்திற்கு எதிரான கருத்து ஆகும்.

"திருவள்ளுவரால் சிறப்புடைய ஒழுக்கமே அறம் என எடுத்துக்கொள்ளப்பட்டது. அது தான் நால்வகை நிலைத்தாய் வருணந்தோறும் வேறுபாடு உடைமையின்" எனவும் "அஃதாவது - தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஓதப்பட்ட ஒழுக்கத்தினை உடையரால்" எனவும் ஆங்காங்கே குறட்பாக்களின் உரைவிளக்கங்களில் வருணாசிரம கருத்துக்களை - வள்ளுவர் கருதாததை-நுழைத்து எழுதுகிறார்.

காமத்துப் பாலில் 'பரத்தையிற் பிரிவு ஊடலுக்கு ஒரு காரணம்' என்று, வள்ளுவர் சொல்லாததைச் சொல்லி புலவி, புலவிநுணுக்கம், ஊடலுவகை அதிகாரங்களுக்கு துறை வகுக்கும்போது உரை காண்கிறார்.

'பலவிடங்களில் பரிமேலழகர் இலக்கண அமைதிக்காக இலக்கியத்தை முறித்து இயற்கைக்கு மாறான பொருள் கொண்டுள்ளார்' என்று ரா பி சேதுப்பிள்ளை கருதுகிறார்.

பரிமேலழகர் கொண்ட சில பாடங்கள் மணக்குடவருடைய பாடங்களினும் வேறுபட்டுள்ளன. அவற்றுள் சில மணக்குடவரினும் சிறந்தவை. பிற பாடங்களில் பரிமேலழகர் உரை ஏற்கமுடியாதனவாக உள்ளன.

இவைபோன்று பரிமேலழகர் பல குறைகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளானாலும் வள்ளுவரின் கருத்தறிந்து உரை எழுதியவர் பரிமேலழகரே என்றும் பரிமேலழகர் இன்றேல் வள்ளுவரின் பெருமையை நாம் இன்று அறிந்தது போல அறிய இயலாது என்றும் பலரால் புகழப்படுபவர். பரிமேலழகர் உரையாசிரியர்களுள் நுண்மான் நுழைபுலம் மிக்கவர். இவர் பெருங்கல்வியாளர். வடமொழியிலும் தேர்ந்தவர் என்பது அவரது உரைமூலம் அறிகிறோம்.

இவரது பொருள்வன்மையையும், செஞ்சொற் சிறப்பையும், இலக்கணங் கூறும் திறமையையும், மேற்கோளெடுத்து விளக்கம் செய்யும் வழியையும், வடமொழிச் சொற்களைச் செந்தமிழ் மொழியாக்கும் திறமையையும், தமிழ்ச்சொற் செல்வமுடைமையையும், வடநூற் பயிற்சியோடு முத்தமிழ்ப் பரப்பெல்லாம் நன்குணர்ந்த நுண்புலமையையும் இவர்தம் உரைநூல் பறைசாற்றுகின்றது. பரிமேலழகரை நச்சுக்கருத்துகளை விதைத்தவர் என்று குறைகூறும் தேவநேயப்பாவாணர், குழந்தை போன்றோர்கூட அவருடைய நுட்பவுரைகளை அப்படியே ஏற்று ஆண்டுகொள்கின்றதைக் காணலாம்.

மு வரதராசன்(கி பி 1912 - 1974);
மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட மு. வரதராசன் 20ம் நூற்றாண்டின் நன்கு அறியப்பட்ட தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இக்கால நடையில் எளிய பொழிப்புரை தந்துள்ளார். அவரது கையடக்க உரைப்பதிப்பில் வெளிவந்துள்ள திருக்குறள் தெளிவுரை மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. "திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்", "குறள் காட்டும் காதலர்" என்ற இவருடைய மற்ற குறள் பற்றிய நூல்களும் சிறப்புப் பெற்றன.

புதினம், சிறுகதை, நாடகம், கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வுகள், மொழிவரலாறு ஆகிய துறைகளில் 85 நூல்கள் எழுதி, சாகித்ய அகாடெமி, தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சிக் கழகம் இவற்றில் பரிசும் பாராட்டும் பெற்றார். இவரது "தமிழ் இலக்கிய வரலாறு" என்னும் நூல் அனைவரும் படித்துப் பயன்பெறத்தக்கது.

இவரது குறட்புலமை குறித்து திரு வி க கூறுவதாவது: 'வரதராசனார் திருவள்ளுவர் சுரங்கத்தில் பன்முறை மூழ்கி மூழ்கிப் பலதிற மணிகளைத் திரட்டிக் கொணர்ந்தவர். அவரது நெஞ்சம் திருவள்ளுவர் நெஞ்சுடன் உறவாடி உறவாடிப் பண்பட்டது. அறநெஞ்சினின்றும் அரும்பும் கருத்துச் சிந்தனைக்குரியதே.'
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1696
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு திருக்குறள்- படிப்போம் Empty இனியவை கூறல் - அதிகாரம் 10 - அறத்துப்பால்

Post by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

தினம் ஒரு திருக்குறள்- படிப்போம் 19092022


இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.- 91

உண்மையானவர்களின் இனிய சொற்கள் குற்றமற்றவை

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலான் ஆகப் பெறின்.- 92

ஈதலைவிடச் சிறந்தது இனிய சொல்லே

முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.- 93

மனமகிழ்வுடன் கூடிய இனியசொல்லே அறம்

துன்புறுஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறுஉம் இன்சொ லவர்க்கு.- 94

இன்சொல்லுடையவர்க்கு துன்பநிலை தோன்றாது  

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.- 95

பணிவுடன்,இனிய சொல்லுடையவர்க்கு வேறு அணி வேண்டாம்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.- 96

இன்சொல்லால் தீமை நீங்கி நன்மை பெருகும்

நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.- 97

நல்ல செயலும், இனிய சொல்லும் நன்று

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.- 98

இனிய சொல் இப்பிறப்புக்கும், மறுபிறப்புக்கும் இன்பம் தரும்

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.- 99

இன்பம் தரும் இன்சொல்லிருக்க, வன்சொல் எதற்கு?

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.- 100

கனிபோன்ற இன்சொல்லிருக்க, காய்போன்ற வன்சொல் ஏன்?



திருக்குறள் முழுவதும் உரையுடன் கேட்க.......................


வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1696
Join date : 23/05/2021

Back to top Go down

தினம் ஒரு திருக்குறள்- படிப்போம் Empty Re: தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum