TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில். பகுதி - 4 ன் பதில்கள்

2 posters

Go down

அறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில். பகுதி - 4  ன் பதில்கள் Empty அறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில். பகுதி - 4 ன் பதில்கள்

Post by sakthy Fri Feb 17, 2012 5:31 pm

பொது அறிவை வளர்த்துக் கொள்வோம்.

உங்களுக்கு தெரியுமா?

நாம் பள்ளிகளில் ஆரம்ப காலத்தில் பூச்சிகளை பிடித்து உண்ணும் தாவரங்களான pitcherplant,carnivorous plant பற்றி படித்திருப்போம்.இவை சிறிய பூச்சிகளை மட்டுமல்லாது பறவைகளையும்,சிறிய மிருகங்களைக் கூட பிடித்து இரையாக்கிக் கொள்ளும் என கூறுகிறார்கள்.பிரேசில் அமேசன் காடுகளில் இருப்பதாக சொல்லப்பட்டாலும்,சிறிய பூச்சிகளை உண்ணும் சிறிய தாவரங்களை சிலர் வீடுகளிலும் வளர்க்கிறார்கள்.தற்போதய கண்டு பிடிப்புகளின் படி நிலத்திற்குள் இருக்கும் புளுக்களையும் உண்ணுவதாக சொல்லப்படுகிறது.மிகவும் அழகான இந்த மரங்களின் பூக்கள் இலைகள் அனைத்தும் அழகும் கவர்ச்சியும் உடையவையானாலும்,பூச்சி சிலந்தி போன்றவற்றுக்கு அவை ஆபத்தானவை.அதனால் தான் அழகிருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும் என்கிறார்களா?இந்த தாவரங்கள் பற்றி ஆராச்சி செய்து பல தகவல்களை தந்திருப்பவர், Lakshminarayanan Mahadevan என்ற தமிழர் ஆவர்.இவர் சென்னை ITT ல் கணிதவியலாளராகவும்,இயந்திரவியலாளராகவும்,பட்டம் பெற்று தாவரவியல் துறையிலும் தன்னை இணைத்துக் கொண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஆராச்சியாளராகவும், விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார். எங்கெங்கெல்லாம் தமிழன் சாதிக்கிறான்.நாமோ கொலைவெறிப் பாடலை பாடி தமிழையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் பண்பாடுகளையும் கொல்லுகிறோம்.கடைசியில் சினிமாவைப் பார்த்து விட்டு ஆசிரியையையும் கத்தியால் குத்தி கொலை செய்கிறோம்.என்ன வெறி?

கணினி கேள்வி பதில். பகுதி - 4 ன் பதில்கள்

1.ஒரு தவறை,error, இன்னொரு விதமாகவும் சொல்கிறார்கள்.
Bug
2.Apple நிறுவன எதிர்ப்பினால் Samsung Galaxy Tab.Computer ஐ விற்பதற்கு தடை செய்த நாடு எது?
ஜேர்மன் நாட்டின் நீதிமன்றம் இதை தடை செய்தது.
3.சில சமயங்களில் உங்கள் சுழலி ஒரு கையைப் போல் மாறும்.அதை அழுத்தும் போது வேறு பக்கத்திற்கோ அல்லது வேறொரு தளத்திற்கோ செல்லும்.இந்த கை அடையாளத்தை எப்படி சொல்கிறார்கள்?
Hyperlink.
4.சில சமயங்களில் இணையத்தில் ஒரு முகவரியை கொடுக்க வரும் ஒரு பொதுவான செய்தி,error message, நாம் தவறாக விசையை அழுத்தி தவறாக எழுதினால் அல்லது சில வரையறுக்கப்படாத தவறினால்,வருகிறது.அந்த செய்தி என்ன?
404 Page not found, முதல் எண் தவறாக எழுதியதை குறிக்கும்.அடுத்த இரண்டு எண்கள் வேறு சில சிறிய (dead or broken link) தவறுகளைக் குறிக்கும்.4-- ல் தொடங்குவது பொதுவாக Client error ஆகவும், 5-- ல் தொடங்குவது Server error ஆகவும் சொல்லப்படுகிறது.
5.முகப்புத் திரையில்(Desktop) உள்ள ஐகன்(Icon) பெயரை நீக்குவது எப்படி?
சுழலியின் வலப்பக்க மூலம்,right click, ஐகன் மேல் சொடுக்குங்கள். Rename ற்கு சென்று, alt + 0160, கொடுத்தால் பெயர் மறைந்து விடும்.
6.SMART என்பது என்ன?
SMART - Self-Monitoring, Analysis and Reporting Technology – வன் தட்டுகளில் உள்ள தவறுகளை கண்டறிவது.
7.வலைப்பூ உரிமையாளரும்,web programmer உம் ஆன ஒருவருக்கு மரண தண்டனை சமீபத்தில் வழங்கப்பட்டது.யார்,எங்கு?
Saeed Malekpour,என்ற web programmer ற்கு 2011 ல் வழங்கப்பட்ட மரண தண்டனையை ஈரானிய உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தி தீர்ப்பளித்துள்ளது.இவர் இஸ்லாமிய சட்டத்திற்கு மாறாக ஆபாச வீடியோ படங்களை தன் தளத்தில் சேர்த்திருந்ததற்காக இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
8.மவுஸ்,சுழலியை பாவிக்காது நீங்கள் தற்போது பார்க்கும் பக்கத்தில் இருந்து முந்தைய பக்கத்திற்கு செல்ல எந்த விசையை பயன்படுத்தி செல்லலாம்?
Alt + Tab விசைகளை ஒன்றாக அழுத்துவதன் மூலம்.
9.டெஸ்க்டொப்பில் உதாரணமாக 800x600 என்பது எதைக் குறிக்கும்?
பிக்செல்,Pixels அகலம்xஉய்ரம்.
10.விசப்பலகையில் print screen என்பதை அழுத்தும் போது என்ன நடைபெறுகிறது?
முதலில் பிரின்ட் செய்யு முன் திரையில் உள்ளவற்றை clipboard ல் சேமிக்கும்.
11.தொலைக்காட்சி,கணினி திரை அளவுகளை 15,17, 19 என்று சொல்லும் அளவு எதைக் குறிக்கும்?
திரையின் குறுக்களவை.
12.ஒரு மின் அஞ்சலை அனுப்ப pop smtp imap இவற்றில் எது தேவை?
The Simple Mail Transfer Protocol (SMTP) கணினியில் இருந்து இன்னொரு கணினிக்கு அனுப்ப அனுமதிக்கிறது.
13.DSL,aDSL இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
DSL (DSL stand for Digital Subscriber Line) ன் upload and download வேகம் ஒரேமாதிரியாகவும்,ADSL (Asymmetric Digital Subscriber Line) ல் upload வேகம் குறைவாக இருக்கும்.
14.cookies என்பது என்ன?
இணையத்தில் நாம் செல்லும் போது வரும் இணைய தளங்களுக்காக கணினியில் சேமிக்கப்படும் ஒரு சிறிய சொற்றொடர். நீங்கள் மறுமுறை இணையத்தளம் செல்லும் போது நீங்கள் திரும்ப வருகிறீர்கள் என்பதை ஞாபகப் படுத்தி உதவும் உ+ம்.www.google.com
15.start-run - command Prompt(cmd) ல் நாம் எக் காரணம் கொண்டும், fmt C:\? என்பதை பாவிக்கக் கூடாது.ஏன்?
வன்தட்டை திரும்ப format செய்து எல்லா தரவுகளையும் அழித்து விடும் என்பதால்.
16.நீங்கள் 100 gigabyte அளவுள்ள வன்தட்டை வாங்கி பாவிக்கும் போது, கணினி 93,13 gigabytes எனக் காட்டுகிறது. ஏன்?
வன் தட்டு தயாரிப்பாளர் சரியாகவே கணக்கிட்டு உள்ளார். ஆனால் விண்டோ கணினி தனது அளவுகளை gibibytes,GIB, ஆக கணக்கிடுகிறது.அத்துடன் தயாரிப்பாளர் formatting ற்கு தேவைப்படும் அளவுகளை கணக்கிடுவதில்லை என்பதால் அவர் கொடுக்கும் 100 GB கணினியில் 93,13 ஆக காட்டப்படுகிறது.இதே போல் mebi.tebi, kibi,pebi அளவைகளும் உண்டு.
17.PDF ன் விரிவாக்கம் என்ன?
Portable Document Format
18.Thumbnail என்பது என்ன?
ஒரு பெரிய வடிவத்தின் சிறிய முன்பார்வை.A small preview of a larger image
19.ஒரு computer processor ஐ எந்த அளவையால் அளக்கிறார்கள்?
Hertz
20.ஒரு terabyte எத்தனை gigahertz!!?
1000 Gigabytes. (Gigahertz அல்ல.)
21.Credit Card விபரங்கள் போன்றவற்றை களவாடும் Hacker ல் இருந்து பாதுகாக்கப்பட்ட ஒரு இணையத் தளம் என்பதை உடனடியாக எப்படி அறிய முடியும்?
https:// என்று ஆரம்பிக்கும் தளம் பாதுகாப்புடையது என சொல்கிறார்கள்.வங்கி போன்ற இணையத் தளங்களுக்கு செல்லும் போது https என்பதை கவனித்து செல்லலாம்.சில சமயம் வங்கிகளுக்கு போகும் போது http மட்டும் இருந்தால் எச்சரிக்கையாக இருப்பது நல்லதே.
22.கடைக்காரர் 1,4 Ghz Quad Core அல்லது Dual Core என்கிறார்.அப்படியானால்,1,4 Ghz Quad Core ன் வேகம் என்ன?
5,6 Ghz (1,4 x 4 )
23.கணினியில் Hibernate க்கும் Standby க்கும் உள்ள வேறுபாடு என்ன?
Standby ல் கணினியின் மின் திறந்தும்,மற்ற டிவைசில் மின்சாரம் அணைக்கப்பட்டு மின் சேமிக்கப்படும். .Hibernate ல் கணினியின் அனைத்து மின்சாரமும் அணைக்கப்பட்டு,சேமிக்கப்படாத வேலைகள் தற்காலிகமாக சேமிக்கப்பட்டு பின்னர் கணினி தொடக்கப்படும் போது முடிக்கப்படாத வேலைகளை மீண்டும் தொடரலாம். மின் சேமிக்க்ப்படுகிறது.கணினி தொடங்க, தொடக்க குமிழை அழுத்தியே தொடக்க வேண்டும்.இதனால் கணினியை சிறிது நேரம் நிறுத்தி வைப்பதானால் hibernate முறையில் நிறுத்தி வைப்பதால் மின் சேமிக்கப்படுகிறது,சிறந்த முறையும் கூட.
24.எந்த கணினி மொழி இணையத்தளத்திற்காக பாவிக்கப்படுகிறது?
HTML - HyperText Markup Language
25.Internet browser cache என்பது என்ன? அதை Firefox ல் நீக்குவது எப்படி?
தற்காலிக இணைய நிரல்,கோப்புகள்(Temporary Internet Files folder).இணையத்தில் செல்லும் போது வரும் அனைத்தையும் சேமிக்கும்.இவற்றை நெருப்பு நரி உலாவியில் அகற்ற, tools - Clear recent History -details -அங்கே தேவையில்லாதவற்றை அகற்றலாம்.

கேள்விகள் பகுதி - 5 நாளை.என்றும் வேண்டும் இனிய அன்பு ............................சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

அறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில். பகுதி - 4  ன் பதில்கள் Empty Re: அறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில். பகுதி - 4 ன் பதில்கள்

Post by ஜனனி Fri Feb 17, 2012 7:05 pm

அருமையான விளக்கம் அறிவிப்பு
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பொது அறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி - 4
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். கணினி கேள்வி - பதில், பகுதி - 2 ன் பதில்கள்.
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி- 5
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி- 5
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி-3.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum