Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். மருத்துவத்தில் உயிரின் விலை என்ன?அனைவரும் தெரிந்திருக்க வேண்டும்.
5 posters
Page 1 of 1

பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.
மருத்துவத்தில் உயிரின் விலை என்ன?அனைவரும் தெரிந்திருக்க வேண்டும்.
இன்றைய காலத்தில் தமிழ்நாட்டில் இந்தியாவில் மற்றும் அனைத்து உலக நாடுகளிலும் மருத்துவ தவறுகளினால் அநியாயமாக பல ஆயிரக் கணக்கான மனித உயிர்கள் தினமும் இறப்பை தழுவிக் கொள்ளுகின்றன. சமீபத்தில் கூட ஒரு பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதும்,அதற்காக மருத்துவர்கள் வேலை நிறுத்தம் அறிவித்ததும் அறிந்ததே.யார் மீது தவறு என்பதை விட குற்றத்திற்கான தீர்ப்பை விசாரணை இன்றி, மரணத்தை தண்டனை ஆக்குவது மனித தர்மம் அல்ல. அந்த மருத்துவர் மீது குற்றம் இல்லாதும் இருக்கலாம். ஒருவருக்கு சரியாக இருப்பது இன்னொருவருக்கு தவறாக தெரிகிறது. எனது முன்னைய கட்டுரை ஒன்றில் குற்றம் செய்யாமலேயே தண்டனை பெற்றோர்,மரண தண்டனை பெற்றோர் பற்றி எழுதி இருந்தேன்.
மரண தண்டனைக்கு ஆளாக வேண்டிய ஊழல்வாதிகள்,கொலைகாரர்கள், பலாத்காரம் செய்தவர்கள்,இனப்படுகொலை செய்தவர்கள், தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் உயிருடன் கொழுத்தியவர்கள் இப்படி பலர் நல்லவர்களாக புனிதர்களாக வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.தமிழ்நாட்டில் லஞ்சம் ஊழல் வேறு காரணங்களினால் அப்பாவிகள் ஏமாற்றப்பட்டு அந்த சாவுகள் வெளிக் கொணரப்படாது மறைந்து மறைக்கப்பட்டு விடுகின்றன.NHRC அறிக்கையின்படி உள்ள மரணங்களை விட, பல நூறு மரணங்கள் மறைக்கப்பட்டு விடுகின்றன என்கின்றனர். ஆனாலும் சட்ட நடவடிக்கைக்கு மக்கள் செல்ல முன்வருவதில்லை.
டில்லியில் பாபு என்ற 17 வயது இளைஞன் மறைவுக்காக ஒரு இலட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடப்பட்டது. இது தவிர பங்களூரில், ஒரு கோடி ரூபாவை சாப்ட்வயர் கம்பனியில் வேலை பார்க்கும் ஒருவருக்கும்,கல்கத்தாவில் சமீபத்தில் மனைவியை இழந்த ஒருவருக்கு 1,72 கோடி நஷ்டஈடும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.இவை போன்ற பல தீர்ப்புக்களும்,நிலுவையில் உள்ள பல வழக்குகளும் மருத்துவர்களின், மருத்துவ நிலையங்களின் தவறுகளினால் உயிரிழந்த பரிதாபத்திற்கு உரியவர்களினதுவாகும்.
இப்படியான மருத்துவ தவறுகளினால் இழக்கப்படும் உயிர்களை இந்திய சட்டம், கிரிமினல் குற்றமாக பார்க்கிறது.மருத்துவ தவறால் உயிர் இழக்கப்படும் போது இபிகோ 304 பிரிவின் கீழும்,பாதிப்பு மட்டும் ஏற்பட்டால் இபிகோ(IPC-Indian Penal Code) 337,338 இன் கீழும் வழக்கு தொடர முடியும். நஷ்ட ஈடு மட்டுமல்ல, இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத சிறையும் தண்டமும் அல்லது இரண்டும் கிடைக்கலாம். இது தவிர ஒரு நோயாளி மருத்துவரிடமோ அல்லது மருத்துவ நிலையத்திலோ குருதி பரிசோதனையோ அன்றி வேறொரு பரிசோதனையோ செய்தால் அதன் பிரதியை பெற்று,அவர்களிடம் வைத்திருப்பது நலம். இந்தப் பிரதியை வைத்து கடுமையான நோய்களின் போது மருத்துவரின் சிகிச்சை,கொடுக்கப்பட்ட மருந்துகள் போன்றவற்றை வேறொரு மருத்துவர் மூலம் உறுதி செய்து கொள்ளவும்,தவறான சிகிச்சை தரப்படும் போது கண்டு கொள்ளவும்,பாதிப்பு ஏற்படும் சமயத்தில் மருத்துவரோ அல்லது மருத்துவ நிலையமோ தங்களின் தவறுகளை மூடி மறைக்கும் போது,சாட்சியமாக்கிக் கொள்ளவும் முடியும். மருத்துவ பரிசோதனை முடிவுகளின் பிரதியை ஒரு நோயாளி சொந்தக் காரணங்களுக்காகவோ அல்லது நீதிமன்ற சாட்சியத்திற்காகவோ பெற்றுக் கொள்வதற்கு இந்திய சட்டத்தில் இடம் உண்டு.
மருத்துவத் துறையில் பெரும் சாதனை செய்ததாக பெருமைப் படும் அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை பெற பணம் படைத்தவர்களும் ,விஐபி க்களும் பறந்து செல்லும் இந்த நாளில்,அங்கே மருத்துவ தவறுகளினால் ஆண்டு தோறும் ஒரு இலட்சத்துக்கு அதிகமானோர் இறந்து விடுவதாக மருத்துவ நிலைய அறிக்கையொன்று தெரிவிக்கிறது.
தவறான,தேவையற்ற சத்திரசிகிச்சையினால் 12,000; மருத்துவ நிலைய மருந்துகளின் தவறால் 7,000; மருத்துவநிலைய மற்றும் தவறுகளினால் 20,000; மருத்துவ நிலையத்தில் ஏற்பட்ட நோய் தொத்துக்களினால் 80,000; மருத்துவ நிலையங்களில் கொடுக்கப்பட்ட மருந்துக்கள் மற்றும் பக்க விளைவுகளால் 106,000 பேரும் உயிரிழந்துள்ளனர்.
சமீபத்தில் தமிழ்நாட்டிலும் இலவச கண் சத்திர சிகிச்சையால் கண் இழந்தவர்கள்,இடது வலது கை மாற்றி சத்திரசிகிச்சை,சிறுநீரக மாற்றில் ஏற்பட்ட தவறு போன்ற பல தவறுகள் மருத்துவர்களினால்,மருத்துவ நிலையங்களில் நடந்துள்ளன. பல மறைக்கப்பட்டும் வேறு பல ஒரு சில சில்லறைகளை எறிந்து தப்பித்துக் கொண்டதும்,சில மருத்துவக் பரிசோதனைக் குறிப்புக்கள் பின்னர் மாற்றப்பட்டும் தண்ணீரிலும்,கண்ணீரிலும் கரைந்து போயின,போய்க் கொண்டிருக்கின்றன.
இணையத்தளங்கள்,சிற்றிதழ்கள்,புத்தகங்களில் வரும் மருத்துவக் குறிப்புக்களை வைத்து உங்களுக்கோ இல்லையேல் உங்கள் உறவினர்,நண்பர்களுக்கோ சிகிச்சை பார்த்து,நீங்கள் மருத்துவர்களாக மாறி விடாதீர்கள்.இந்த மருத்துவக் குறிப்புக்கள் ஒரு வழிகாட்டியே தவிர அதை வைத்து மருத்துவம் பார்ப்பதற்கல்ல என்பதை மறந்து விடாதீர்கள். இதை விட ஆயுர்வேத சித்த பாட்டி வைத்திய முறைகளில் உள்ள இயற்கை மருத்துவ முறைகளால் அதிக பாதிப்பு இல்லாவிடினும்,இராசயண பொருட்கள் மூலம் தயாரிக்கப்படும் மேல்நாட்டு மருந்துகள் விடயத்தில் மிகவும் கவனம் தேவை என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
இதை விட மருத்துவ தவறுகள் என்று சிலவற்றை உலக மருத்துவ நிலையம் வகைப் படுத்தி பட்டியலிட்டு உள்ளது.
சத்திர சிகிச்சையின் போது தவறுதலாக சில பொருட்களை,கத்தி,துடைக்கும் பொருட்கள் போன்றவற்றை உள்ளே வைத்து மூடி விடுவது போன்ற தவறுகள் அதிகமாக அடிக்கடி நடப்பதாக சொல்வதை,மும்பாயை சேர்ந்த டாக்டர் அரவிந்த் குமாரும் ஏற்றுக் கொள்கிறார்.
தவறுதலாக எழுதப்படும் மருந்துகள்(prescription), கையெழுத்து பிழையானால் நோயாளியின் தலை எழுத்து மாறி விடும் என்பதைக் கண்டு கொள்ளாது, படிக்க முடியாத முறையில் எழுத்ப்படும் மருந்து சீட்டுக்கள்(சில இடங்களில் கணினி மூலம் மருந்து சீட்டுக்கள் எழுதப்படுகின்றன); மருத்துவர்களின் அறியாமை,குறைந்த அறிவு, அனுபவம் காரணமாக செய்யப்படும் மருத்துவம்; மருத்துவக் கல்வி இல்லாமலேயே மருத்துவராக பணியாற்றுவது;மருத்துவ நிலையத்தில் தவறான மருந்துக்களை கொடுப்பது அல்லது மருந்து விற்பனை நிலையத்தில் கையெழுத்து புரியாமல் தவறான மருந்துகளை கொடுப்பது; பரிசோதனை அறிக்கைகள் ஒருவருடையது இன்னொருவரிடம் மாற்றி வைக்கப்பட்டு விடுவது;நோயாளிகளுக்கு மருந்துகளை மாற்றிக் கொடுப்பது; மருந்தின் அளவுகளை(dose) மாற்றிக் கொடுப்பது; நேரம் மாற்றி அல்லது கொடுக்க வேண்டிய இடைவெளியை மாற்றிக் கொடுப்பது போன்றவை பட்டியலிடப்பட்ட தவறுகளாகும்.
மருத்துவருக்கும் நோயாளிக்கும் உள்ள மொழிப் பிரச்சனை, புரிதலின்மை போன்ற தொடர்புகள் சரியாக இல்லாதது; ஏழைகள், பாமரர்கள், படிக்காதவர்களை அலட்சியம் செய்வதனால் ஏற்படும் தவறான சிகிச்சை;தாமதமாக வரும் மருத்துவ பரிசோதனை முடிவுகள், ஒருவருடையது இன்னொருவருக்கு சென்று அது ஒப்பிட்டு பார்க்கப் படாமலேயே தொடரும் மருத்துவம்; பெயர்,இடம் மாறிவிடுவதால் வேறொருவரின் சிகிச்சை இன்னொருவருக்கு செய்யப்படுவது; போலி மருத்துவர்கள்; ஆசிய,ஆபிரிக்க நாடுகளில் சட்டமும் அதிகாரிகளும் கண்களை மூடிக் கொள்வதால்; போலி மருந்துக்கள் தயாரிப்பதால் அல்லது பாவனையில் இருப்பதால்; நாட்பட்ட மருந்துகள்;இணையத்தளம் மூலம் பெறும் மருந்துகள்; இந்தியாவில் தயாராகும்,விற்பனையாகும் மருந்துகளில் சிலவும் பலரின் இறப்பிற்கு காரணமாகி விடுகிறது.
இந்திய மருத்துவக் கவுன்சிலின் சென்ற ஆண்டு அறிக்கையின் படி 81 வீதமான மருந்து சீட்டுக்களை படிக்க முடியாது இருந்ததாகவும், அதில் சிலவற்றை அதே மருத்துவரிடம் காட்டிய போது அவராலும் படிக்க முடியாது இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
இப்படி பல சிக்கல்களில் தவிக்கும் மக்கள், ஓரளவாவது மருத்துவ அறிவை பெற வேண்டியது அவசியமாகும். அதனால் சில தகவல்கள் இங்கே தரப்படுகின்றன.
உலகிலேயே அதிக டயபிடிஸ் நோயாளிகளைக் கொண்ட நாடு,இந்தியா என்பதாலும், Silent killer என சொல்லப்படும் நோய் என்பதாலும், டயபிடிஸ் நோயாளிகள் தங்கள் குளுக்கோஸ் அளவை தெரிந்து வைத்துக் கொள்வது அவசியமாகும். சமீபத்தய அமெரிக்க ஆராய்ச்சியில் லவங்கம்,cinnamon என்ற கறுவா சேர்த்து சமையல் செய்யும் உணவால் குருதியில் உள்ள குளுகோசின் அளவும் கொலொஸ்டெரொல் அள்வும் குறைகிறது என்று கண்டுள்ளார்கள்.இந்த லவங்கப்பட்டையும், வெந்தயம், பாவற்காய் போன்றவையும் குருதியில் உள்ள சர்க்கரையின் அளவை 30 வீதம் வரை குறைக்கிறதாக கண்டுள்ளனர்.ஆனலும் அதிக அளவு லவங்கம் கல்லீரல் பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடும் எனவும் எச்சரித்துள்ளனர்.இந்த சினமொனில் இரண்டு வகை உண்டு. ஒன்று அமெரிக்க நாடுகளில் உள்ளவை மற்றவை இலங்கை,இந்தியா போன்ற நாடுகளில் உள்ளவை. இலங்கை இந்திய நாடுகளில் உள்ளவையே சிறந்தது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதே போல் குருதிப் பரிசோதனையில் வரும் முடிவுகளில் சிலவற்றையாவது ஓரளவு தெரிந்து வைத்திருப்பதும் அவசியமானதாகும்.மருத்துவர் நோயாளியின் நோய் அறிகுறிகளை வைத்து குளுக்கோஸ்,தைரோயிட் போன்ற வேறுபட்ட குருதிப் பரிசோதனையை செய்ய முடிவு செய்வார். பொதுவான பரிசோதனையாக CBC (complete blood count), CS-Test (chemical screen Test) செய்வார்கள். இந்த பரிசோதனை முடிவு அறிக்கையின் வடிவம் ஒவ்வோரு பரிசோதனை நிலையத்திலும் சிறிய மாற்றத்துடன் இருக்கலாம். ஆனாலும் பொதுவாக பெயர்,முகவரி,பிறந்த திகதி,பரிசோதிக்கப்பட்ட திகதி,ஆண்/பெண் பிரிவு, வயது,மருத்துவர் பெயர்,பரிசோதித்தவர் பெயர் அல்லது அடையாள இலக்கம் போன்ற தகவல்கள் இருப்பதுடன்; பரிசோதிக்கப்பட்ட இரத்த பகுதியின் பெயர், பரிசோதனை முடிவு,உண்மையில் இருக்க வேண்டிய அளவு(reference range) எந்த அளவையில் தரப்பட்டது போன்ற விபரங்கள் இருக்கும்.
எடுத்துக்காட்டாக..............
குளுக்கோஸ்(Glucose ), 70-100(இருக்க வேண்டியது), 180 (தற்போதைய நிலை), mg/dl
TSH (Thyrhoid) 0,27 -2,5 5,2 mlU/l
இந்த அளவு தற்போது mg/dl என்பதற்கு பதிலாக mmol/l என சர்வதேச அளவாக பயன்படுத்தப்படுகிறது.
அதாவது 70-100 mg/dl = 3,8 -5,6 mmol/l ஆகும்.
இந்த குருதி பரிசோதனை வரிசையில் முதலில் வெண்குருதியணு( Leucocytes -white blood cells) பற்றி சிறிது அறிந்து கொள்ளலாம்.Leucocytes (white blood cells) என்ற வெண்குருதியணு, எலும்பு மச்சைகளால்(bone marrow) தயாரிக்கப்பட்டு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியாகவும்,தொற்றுநோய் எதிர்ப்பு சக்தியாகவும் உடலெங்கும் இரத்தத்திலும் நிணநீரிலும்(blood and lymphatic ) இருந்து செயல்படுகிறது.இதன் எண்ணிக்கை அடிக்கடி மாறியவண்ணம் இருக்கும்.காரணம் இதன் ஆயுட்காலம் ஒருசில நிமிடங்கள் முதல் சில நாட்களாகும்.
வெண்குருதியணுக்கள் மேலும் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த வெண்குருதியணு, நோய் தொற்று,தைரோயிட் போன்றவற்றுக்கான மருந்துகளின் தாக்கம்,குருதியில் விஷம்,எரிகாயங்கள்,லூயுகோமி என்ற இரத்த புற்றுநோய்,வைரஸ் பக்ரீரிய கிருமியால் ஏற்படும் நோய்கள் போன்றவை ஏற்படும் போது, மாற்றத்திற்கு காரணியாகிறது.
சாதாரண நிலையில்........................
பெரியவர்கள் 4000 - 10000/ul (4 – 10/nl) புதிய அளவு 4 – 10 · 109/l
பள்ளி மாணவர்கள் 5000 - 15000/ul(5 – 15/nl) 5 – 15 · 109/l
குழந்தைகள் 6000 - 17500/ul(6 - 17,5/nl ) 6 – 17,5 · 109/l
பிறந்த குழந்தைகள் 9000 - 30000/ul(9 - 30/nl ) 9 – 30 · 109/l
எங்கள் மருத்துவ நிலையத்தில் நோயாளிகள் தங்கள் இரத்தப் பரிசோதனை முடிவுகளின் பிரதிகளை உடனே கேட்டுப் பெற்றுக் கொள்ளுகின்றனர். அத்துடன் அதன் விபரங்களையும் கேட்டு தெரிந்து கொள்ளுகின்றனர்.குருதிப் பரிசோதனையின் பிரதிகள் மற்றும் வேறு பரிசோதனை முடிவுகளையும், நீங்கள் எடுக்கும் மருந்துகளின் விபரங்களையும் சேகரித்து வைப்பதன் மூலம் எப்போதாவது நோய் வந்தால் அல்லது மருந்து ஒவ்வாமை அலர்ஜி போன்றவற்றை தெரிந்து கொள்வதற்கும்,உடனடியாகவே குணப்படுத்தவும் வாய்ப்புகள் உண்டு.சில நாடுகளில் மருத்துவ காப்புறுதி திட்டம் நடைமுறையில் இருப்பதால்,காப்புறுதி திட்டத்தினர் கொடுக்கும் எலெக்றோனிக் அடையாள அட்டையில் உரிமையாளர் பிறந்தது முதல், அவர் சென்ற மருத்துவர், செய்த பரிசோதனைகள்,பாவித்த மருந்துகள் அனைத்து விபரங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும்.நாட்டின் எந்த மூலையில் அவர் தனது நோய்க்காக மருத்தவரை அணுகினாலும் அவரின் வாழ்நாள் முழுவதும் பெற்ற மருத்துவ அறிக்கையை படிக்க முடியும்.அறுபது வயதில் உள்ள ஒருவர் ஆறு வயதில் பாவித்த மருந்துகளைக் கூட தெரிந்து கொள்ளும் வகையில் அந்த எலெக்றோனிக் அட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது.ஒருவர் மயக்க,கோமா நிலையில் இருந்தாலும் அவர் வாழ் நாளில் பெற்ற மருத்துவ விபரங்களை நாம் தெரிந்து கொண்டு, சிகிச்சை அளிக்க முடியும். ஆனால் நம் நாட்டில் அந்த வசதி இல்லாததால் நாமே நமது மருத்துவ விபரங்களை பேணிக் காப்பது நலம். இன்றைய இயந்திர சூழல் மாசுபடுத்தப்பட்ட உலகில் எந்த நோய் எப்போது யாருக்கு வருகிறது என்பது தெரியாமலேயே இருப்பதால் இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாம் பேண்லாம்.
இதைவிட சில பரிசோதனைகளை வீட்டில் இருந்தே நாம் பரிசோதித்து அறிந்து கொள்ள முடியும். நீரிழிவு நோய்க்கு குளுக்கோஸ் சோதனை போல், ஒரு துளி இரத்தத்தை எடுத்து பரிசோதனை நிலையத்திற்கு நேரடியாக அல்லது தபால் மூலம் அனுப்பி முடிவை நாமாகவே அறிந்து கொள்ளவும் முடியும்.கொலாஸ்டெரோல், இரத்தப் பிரிவு,HIV,TSH-தைரோயிட், ஒவ்வாமை, இரத்தசோகை அத்துடன் hcg-கர்ப்பம்,ஆண் பெண் ஹார்மோன் சோதனை,ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கை போன்றவை இவற்றுள் சிலவாகும்.
ஆனாலும்................
இணையத்தளங்கள்,தொலைக்காட்சி,பத்திரிகைகள் போன்றவற்றை படித்து அதை பின்பற்றுபவர்கள் நம் நாட்டில் மிகக் குறைவாகவே உள்ளதாலும், படிக்காதவர்கள், பாமரர்கள் வசதியற்ற ஏழைகள் அதிகமாக வாழும் நம் நாட்டில் இவை சாத்தியமா என்பது கேள்விக் கூறியே. இருப்பினும் கண்டது கற்றவன் பண்டிதனாவான் என்பதற்கேற்ப,நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியே இவற்றை உங்கள் முன் கொண்டு வந்தேன்.
மீண்டும் அடுத்த வாரம்..................................Dr.சக்தி

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். மருத்துவத்தில் உயிரின் விலை என்ன?அனைவரும் தெரிந்திருக்க வேண்டும்.
சக்தி உங்களின் பதிவுகள் அனைத்தும் சமுதாயத்திற்கு மிகவும் பயன்படும் வகையில் உள்ளது . பதிவுகள் தொடரட்டும் . உங்களை வாழ்த்தும் வயது எனக்கு இல்லை .
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Re: பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். மருத்துவத்தில் உயிரின் விலை என்ன?அனைவரும் தெரிந்திருக்க வேண்டும்.
நான் சின்னப் பையன்,கத்துக்குட்டி என நினைத்தேன்.என்னை விட சின்னப் பொண்ணா நீங்க! ஒருவரை வாழ்த்த அறிவோ,அனுபவமோ,அகவையோ தேவையில்லை.நல்ல மனமே வேண்டும்.மனிதனுக்கு இறைவன் தந்த பரிசு அது.அந்த உன்னதமான மனித மனத்தை எப்படி பயன்படுத்துவது என்பது மனிதனிடமே உண்டு.அதையும் இறைவன் மனிதனிடமே விட்டு விட்டான். இறைவன் தந்த அந்த உன்னதமான பரிசை மனிதன் எப்படி பயன்படுத்துகிறான்?தங்கையே! வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.
sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். மருத்துவத்தில் உயிரின் விலை என்ன?அனைவரும் தெரிந்திருக்க வேண்டும்.
sakthy wrote:நான் சின்னப் பையன்,கத்துக்குட்டி என நினைத்தேன்.என்னை விட சின்னப் பொண்ணா நீங்க! ஒருவரை வாழ்த்த அறிவோ,அனுபவமோ,அகவையோ தேவையில்லை.நல்ல மனமே வேண்டும்.மனிதனுக்கு இறைவன் தந்த பரிசு அது.அந்த உன்னதமான மனித மனத்தை எப்படி பயன்படுத்துவது என்பது மனிதனிடமே உண்டு.அதையும் இறைவன் மனிதனிடமே விட்டு விட்டான். இறைவன் தந்த அந்த உன்னதமான பரிசை மனிதன் எப்படி பயன்படுத்துகிறான்?தங்கையே! வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம். மருத்துவத்தில் உயிரின் விலை என்ன?அனைவரும் தெரிந்திருக்க வேண்டும்.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி-3.
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி- 5

» அறிவை வளர்த்துக் கொள்வோம் - மருத்துவம்
» அறிவை வளர்த்துக் கொள்வோம்.ஆங்கிலமும் த(தி)மிங்கிலமும் தமிழும் படும்பாடு.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum