TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 6:21 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அறிவை வளர்த்துக் கொள்வோம் - மருத்துவம்

3 posters

Go down

அறிவை வளர்த்துக் கொள்வோம் - மருத்துவம் Empty அறிவை வளர்த்துக் கொள்வோம் - மருத்துவம்

Post by sakthy Fri Feb 24, 2012 7:34 pm

அறிவை வளர்த்துக் கொள்வோம் - மருத்துவம்

சென்ற கட்டுரையில் மருத்துவ தவறுகளினால் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றன என்று எழுதி இருந்தேன்.சென்ற வாரம் வெளியிடப்பட்ட உலக அறிக்கையின் படி இந்த வருட ஆரம்பித்திலேயே 35 வீதமளவில் சென்ற ஆண்டை விட அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயிரிழப்புக்கள் முன்னர் சொன்னது போல் மருத்துவ நிலைய தவறுகள்,தவறான மருந்துக்கள்,மருத்துவர்களின் தவறுகள் கவலையீனம், நோயாளர்கள் அசட்டையீனம் காரணமாக தாமதமாக மருத்துவரை அணுகுவது போன்ற பல காரணங்களால் நடந்ததாக சொல்லப்பட்டுள்ளது.. இந்த செய்தி வந்தவுடன், உடனே ஜேர்மன் சுகாதார அமைச்சும் அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் சம்மேளனமும் தவறை ஏற்றுக் கொண்டு உலகில் முதல் தடவையாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.

முன்னர் குறிப்பிடும் போது மருந்துக்கள் வளரும் நாடுகள்,சிறிய வறிய நாடுகளில் பரீட்சிக்கப்படுகின்றன என்று தெரிவித்திருந்தேன்.அந்தக் கருத்தை சமீபத்தய தமிழக சிற்றிதழ் ஒன்று ஏற்றுக் கொண்டு கருத்து தெரிவித்துள்ளது.மேற்குலகம்,இந்தியா,சீனா போன்ற நாடுகளில் தயாரிக்கப்படும் புதிய மருந்துக்கள் மக்களிடம் பரீட்சிக்கப்படுகிறது. புதிய ஆயுதங்களை தயாரிக்கும் நாடுகள் அவற்றை சிறிய நாடுகளில் கலவரங்களை உருவாக்கி ஆயுதங்களை பரீட்சிப்பது போல், மருந்து உற்பத்தி நாடுகளும் புதிய மருந்துகளை சிறிய வறிய நாட்டு மக்களிடம் பரீட்சிக்கின்றன.இதில் தமிழ் நாடும் இந்தியாவின் மற்றைய மாநிலங்களும் அடங்கி விட்டது என்னவோ பரிதாபிமானது தான். இதில் ஒரு கொடுமை என்னவெனில், மேற்குலகமும்,சீனாவும் தங்கள் உற்பத்திகளை வறிய நாடுகளில் பரீட்சிக்கும் அதே சமயம், இந்தியாவின் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புக்களை,மற்றைய நாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் சேர்ந்து தங்கள் நாட்டிலேயே மக்களிடம் பரீட்சிப்பது தான்.இதற்கு உருமங்களை வளங்கும் இந்திய அரசியல்வாதிகள் மறைமுகமாக கண்ணை மூடி பாராமுகமாக இருந்து விடுவது தான் கொடுமையிலும் கொடுமையாகும். அணு ஆயுதங்களையும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும் தனது மக்களையே கொல்ல பயன்படுத்திய சிங்கள நாட்டைப் போல், புதிய மருந்துக்களை தங்கள் மக்களிடமே பாவிக்க இந்தியா அனுமதி கொடுத்ததை, அகிம்சை போதிக்கும் நாடு என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் சோனியா இந்தியா மறந்தது ஏன்?

மருத்துவர்கள் சிலர் தவறு விடக் காரணம் என்ன? அதிக வேலைப்பளுவை காரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.தங்கள் மீது கொண்ட அதீத நம்பிக்கை,கவலையீனம் பாரபட்சம் போன்றவை சில காரணங்களாக சொல்லலாம். இதை விட man made ஆன மருத்துவ கருவிகளை அதிகமாக நம்புவதும்,God made ஆன நம் மூளையை குறைவாக நம்புவதும் காரணமாக சொல்லலாம். ஏன்? கணினியில் நாம் கொடுத்ததை,feed, வைத்தே கணினி முடிவை சொல்லுகிறது. எந்திரன் ரொபோட்டோவைப் போல் தானாக சிந்திக்கும் நிலைக்கு கணினி தொழில் நுட்பம் இன்னமும் வளரவில்லை. அதாவது நாம் உடல் பரிசோதனைக்காக செய்யும் சோதனைகளை செய்யும் கருவிகள் அதற்கு ஊட்டப்பட்ட முடிவுகளை வைத்தே நமக்கு முடிவுகளை தருகிறது.நாம் எதை சொன்னோமோ அதை வைத்து பதிலை தருகிறது. EEG,ECG,sonogram போன்றவற்றின் முடிவுகளை கணினியை வைத்து முடிவு செய்யாது நமது மூளையையும் வைத்து முடிவு செய்ய வேண்டும். கணினியிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்து விட்டால் எந்திரனில் ரஜனிக்கு வந்த முடிவு தான் நமக்கும் வந்து விடும். எனவே கருவிகளை நமக்கான உதவிக் கருவியாக வைத்துக் கொண்டு மருத்துவத்தை தொடர வேண்டும்.பல மருத்துவர்கள் கருவிகளின் முடிவுகளை வைத்து உடனேயே முடிவை சொல்லி விடுவதுண்டு.

எடுத்துக்காட்டாக டயபிடிஸ் சை எடுத்துக் கொண்டால்,குருதிப் பரிசோதனையில் ஒரு டயபிடிஸ் நோயாளியை குளுக்கோசிற்காக சோதனை செய்யும் போது,venous glucose ற்கும் capillaray glucose ,finger stick, ற்கும் இடையிலான குளுக்கோசின் அளவு வேறு படும்.venous glucose ஐ விட capillary glucose ல் குளுக்கோசின் அளவு 30mg/dll அளவு கூடுதலாக இருக்கும்.அதே சமயம் குறைந்த இரத்த அழுத்தம் உடையவர்களுக்கு இந்த நிலை எதிர்மாறாக இருக்கும்.அதனால் தான் பரிசோதனை முடிவுகள் வரும் போது அப்படியே எடுத்துக் கொள்ளாது மற்ற முடிவுகளுடன் ஒப்பிட்டு முடிவு செய்ய வேண்டும்.கல்லீரல் குளுக்கோசை க்ளைகோஜினாக மாற்றி மேலதிக குளுக்கோசை சேமிக்க, கணையம் இன்சுலினை சுரந்து செல்களில் குளுக்கோசை சக்தியாக மாற்றுகிறது.சுரக்கும் இன்சுலினின் அளவு 6-26 mU/ml ஆக இருக்கும்.டயபிடிஸ் என முடிவு செய்யு முன் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் 140mg/dl மேலாகவும், ஒரு முறை 200mg/dl ற்கு மேலாக அதிகரிக்கும் போது மருத்துவரை அணுகி உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் சமீபத்தில் மருத்துவர்களின் தவறினால் நடந்து இரு சம்பவங்களை முன் வைக்கலாம். ஒரு நோயாளியின் மருத்துவ அறிக்கை தொகுப்புடன் இறுதியாக செய்யப்பட்ட பரிசோதனை ஒன்றும் வேறொருவரின் பரிசோதனை முடிவும் தவறுதலாக மாறி விட்டதால் ஒரு உயிர் பலியாக வேண்டிய நிலை ஏற்பட்டது. பெயரையும் வயதையும் சரி பார்த்திருந்தால் இந்த தவறும் ஒரு உயிர் பிரிவும் ஏற்பட்டிருக்காது. இதற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் கூட பிரிந்த உயிர் வரப் போவதில்லை என்பதை நாம் மறந்து விட முடியாது. அடுத்தது,ஒரு ஏழைக் கிராமப் பெண்ணின் கர்ப்பத்தின் போது அவளுக்கு ஏற்பட்டிருந்த கர்ப்பகால டயபிடிஸ் கவனிக்கப்படாது இருந்ததால் இறுதி நேரத்தில் முழு வளர்ச்சி அடைந்த குழந்தை பரிதாபமாக உயிர் இழந்தது.இது போன்ற தவறுகள் பல, மருத்துவர்களின் தவறுகளாக இருந்து வருவதால், நாமும் ஒரு சிறிதாவது மருத்துவ முடிவுகள் பற்றி தெரிந்து வைத்திருப்பது நல்லதே.

சென்ற முறை இரத்தப் பரிசோதனையில் சில முடிவுகள் பற்றி சொல்லி இருந்தேன். இன்னும் சில முடிவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த முடிவுகளை வைத்து நாம் நமக்கோ அல்லது நமக்கு வேண்டியவர்களுக்கோ மருத்துவர்களாக மாறக் கூடாது. காரணம் சில சமயங்களில் சில முடிவுகள் வேறு நோய்களின் காரணிகளாக இருக்கலாம்.குருதியில் சர்க்கரை ஒரு சமயம் அதிகரித்து இருந்தால் உடனே சர்க்கரை நோய் என்று முடிவு செய்ய முடியாது.சிறுநீரில் இரத்தக் கலப்பு இருப்பின் அதற்கு ப்ரொஸ்டா புற்று,சிறுநீரக கல், சிறுநீர் பை புற்று என்று முடிவு செய்ய முடியாது. அதனால் மற்ற முடிவுகளையும் ஒப்பிட்டே நோயை தீர்மானிக்க முடியும்.பல சமயங்களில் சிறு நீரில் இரத்தக் கலப்போ குருதியில் சர்க்கரையோ ஒரிரு நாட்களில் மறைந்து விடக் கூடும்.சில உணவுகளினாலும் இவை தோன்றி மறையவும் கூடும்.அதனால் நாம் உடனே மருத்துவராக மாறி விடாது குறிப்பிட்ட காரணங்களை மருத்துவரிடம் தெரிவித்து ஆலோசனை பெறுவதே சிறந்ததாகும்.இதற்காகவே நமக்கு சிறிதளவிலாவது மருத்துவ அறிவு தெரிந்திருக்க வேண்டியது இன்றைய நாளில் அவசியமாகும்.

Cholesterin(cholesterol) என்பது ஸ்டேரேல் எனப்படும் ஒரு வகை கொழுப்பு.
12 மணி நேரம் உணவை எடுத்துக் கொள்ளாது இரத்த பரிசோதனை செய்யப்படுகிறது.
பொதுவான முழு முடிவின்,total Cholesterol, 160 mg/dl ற்கு கீழ் இருப்பது நல்லது.
200 - 240mg/dl(5,2 -6,2 mmol/l)கவனமாக இருக்க வேண்டும் என்பதும் ; 240mg/dl(6,2mmol/l) மோசமான நிலை என்பதையும் தெரிந்திருந்தால் சரியே. இந்த கொழுப்பால் இன்று பலர் பல விதமான நோய்களுக்கு ஆளாவதால் இப்போது LDL/HDL தனியாக அளக்கிறார்கள்.இந்த கொலொஸ்டெரொல் ஒவ்வொரு நாளும் வித்தியாசப் படுவதும்,வயதைப் பொறுத்து மாறுபடவும்,கர்ப்ப காலத்தில் அதிகரிக்கவும் செய்யும். இந்த முடிவுகள் நாட்டுக்கு நாடு அவர்கள் உணவு முறைக்கேற்ப சிறிது மாறுபடும்.HDL ஐ healthy cholesterol,good boy எனவும், LDL ஐ bad boy ஆகவும் சொல்லிக் கொள்கிறார்கள்.

இரும்பு (Iron) சாதாரண நிலையில் 40 - 160 ug/dl ( 7 - 29 umol/l)

கல்சியம்(Calcium) 9 -10,5 mg/dl (2,25-2,62mmol/l)
கல்சியம் உடலில் சேர வேண்டுமானால் வைட்டமின் D 3 தேவைப்படும்.இந்த வைட்டமின் D ஒரு பகுதி நாம் உண்ணும் உணவில் இருந்தும்,மற்றொரு பகுதி சூரிய ஒளியில்(UV) இருந்தும் பெறப்படுகிறது.அதனால் தான் திறந்தவெளி உடற்பயிற்சியை மருத்துவ உலகம் ஊக்கப்படுத்துகிறது.கல்சியப் பற்றாக் குறையினால் பாதிக்கப்பட்டு எலும்பு நோய்( Osteoporosis) க்கு ஆளாகுபவர்கள் அதிகமாக பெண்களே.சிலர் வைட்டமின்D சேர்ந்த கல்சியம் மாத்திரைகளை பயன்படுத்துகிறார்கள்.அந்த செயற்கை மாத்திரைகள் அளவுக்கு அதிகமாகிவிடும் போது சிறு நீரக கற்களுக்கு வித்திடுகிறது. அதனால் செயற்கையை விட இயற்கை முறையே சிறந்ததாகும்.

Platelet,இரத்த தட்டு, 130,000-400,000mm3 (130-400 × 109/L)
இது எலும்பு மச்சையில்(bone marrow) உருவாகும் உயிரணுக்களாகும்.இவை குறையும் போது இரத்தம் உறையாமை ஏற்பட்டு குருதிப் பெருக்கு ஏற்படும்.அதிகமாக இருப்பின் இரத்தக் கட்டு ஏற்படலாம்.இதன் ஆயுட்காலம் 5-9 நாட்களே.

இரத்த பரிசோதனை நிலையங்களைப் பொறுத்து சிறு சிறு மாற்றமுடன் இந்த பரிசோதனை முடிவுகள் இருக்கும்.எடுத்துக்காட்டாக பரிசோதனை முடிவுகளின் பக்கத்தில், வழமைக்கு மாறாக இருக்கும் முடிவுகளுக்கு L,H என்ற எழுத்துக்களை குறிப்பிடுவார்கள்.(L – low ; H – high ) வேறு சிலர் நிறங்களில் குறிப்பிட்டு காட்டுவார்கள்.
இந்த பரிசோதனை நிலையங்களை இரு வகையாக சொல்லலாம்.ஒன்று தனிப்பட்ட முறையில் பரிசோதனைகளை மட்டுமே செய்யும் தனிப்பட்ட நிலையங்கள்.இரண்டாவது பரிசோதனை நிலையங்களுடன்,இரத்த வங்கிகளை கொண்டதுமாகும். எந்த வகையாக இருப்பினும் முக்கிய பாதுகாப்பு விதிகளை முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். HIV போன்ற நோய்கள்,இரத்த நன்கொடையாளர்களின் குருதி பாதுகாப்பு,சேமிப்பு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தியாக வேண்டும். இதை விட குளுக்கோஸ்,கர்ப்ப சோதனை போன்ற உடனடி பரிசோதனையை செய்யும் நிலையமும்(Labs) உண்டு.

இந்த இரத்தப் போரிசோதனை நேரடியாக குருதியில் நடத்தப்படாது,குருதியின் வெவ்வேறு பிரிவுகளில் நடத்தப்படுகிறது. அதாவது artery blood,plasma,serum,blood என பரிசோதிக்கப்படுகிறது. உதாரணமாக குளுக்கோஸ்,கொலொஸ்டெரொல் plasma விலும், இன்சுலின் பிலாஸ்மா அல்லது சேருமிலும்,இரும்பு சேருமிலும் செய்யப்படுகிறது.

மீண்டும் விரும்பினால் சந்திக்கலாம்.என்றும் வேண்டும் இனிய அன்பு..............Dr.சக்தி.






avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

அறிவை வளர்த்துக் கொள்வோம் - மருத்துவம் Empty Re: அறிவை வளர்த்துக் கொள்வோம் - மருத்துவம்

Post by ஜனனி Fri Feb 24, 2012 9:19 pm

நல்ல பதிவு சக்தி அறிவிப்பு
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

அறிவை வளர்த்துக் கொள்வோம் - மருத்துவம் Empty Re: அறிவை வளர்த்துக் கொள்வோம் - மருத்துவம்

Post by அருள் Sat Feb 25, 2012 8:20 am

நன்றி தல அறிவிப்பு
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

அறிவை வளர்த்துக் கொள்வோம் - மருத்துவம் Empty Re: அறிவை வளர்த்துக் கொள்வோம் - மருத்துவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அறிவை வளர்த்துக் கொள்வோம்.ஆங்கிலமும் த(தி)மிங்கிலமும் தமிழும் படும்பாடு.
» பொது அறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி - 4
» அறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில். பகுதி - 4 ன் பதில்கள்
» கேப்டனின் அறிக்கை. படித்து அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் மக்கழே
» பொதுஅறிவை வளர்த்துக் கொள்வோம்.கணினி கேள்வி பதில் பகுதி- 5

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum