TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சமூகத்தின் கறைகள் துகிலுரிப்பு- இரும்புக்காது

2 posters

Go down

சமூகத்தின் கறைகள் துகிலுரிப்பு- இரும்புக்காது Empty சமூகத்தின் கறைகள் துகிலுரிப்பு- இரும்புக்காது

Post by sakthy Fri Jul 29, 2011 4:24 pm

சக்தியின் துகிலுரிக்கும் படலம் 11
உள்ளதைச் சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையால் மறைக்கும் கபடம் தெரியாது.

சென்ற வாரம் ரஜனியை பற்றி எழுதியதற்காக, ஒரு நண்பர் வருத்தப்பட்டார். பொய்யாக என்னால் எதுவும் எழுதப்படவில்லை என்பதை கூறிக் கொள்ள விரும்புகிறேன். இப்போதே கட்டுரை நீளமாக இருப்பதால்,ஆதாரங்களை சேர்க்க முடியவில்லை. சமீபத்தில் மனோ.கிரிஷ்,சுசித்திரா பாடகர் குழு ராஜபக்சேயின் அழைப்பை ஏற்று,தேர்தல் பிரச்சாரம் என்று தெரிந்தும் கூட, இலங்கை சென்று ,உடனே திரும்பியது நீங்கள் அறிந்ததே.அவர்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பில் ராஜபக்சே பெயர் இருந்தது தெரிந்தும், இரகசியமாக சென்றவர்கள், எதிர்ப்பு காரணமாக திரும்பிய பின், தங்களை நல்லவர்களாக காட்ட,தேர்தல் பற்றி தெரியாது என்றும்,பணத்திற்காக செல்லவில்லை என்றும், பல கருத்துக்களை, நாம் நம்பக் கூடிய வகையில் வெளியிட்டனர். நாம் தான் சினிமாக்காரர்கள் என்றால் புனிதர்களாக பார்க்கிறோமே.உண்மையில் அவர்கள் தமிழர்களின் உணர்வுகளை மதிப்பவர்களானால்,பணத்திற்கு அடிமை இல்லை என்றால், அவர்களுக்கு வந்த,இரட்டை மடிப்பு அழைப்பைக் காட்டட்டும்.பெரும் தொகையான பணத்தை முன்பணமாக பெற்றுக் கொண்டதை மறுக்கட்டும். செய்வார்களா? ராஜபக்சேக்கு எதிரான கையெழுத்து சேகரிப்பில் விஜய் கையெழுத்துப் போட மறுத்து விட்டார் என்ற செய்தி வந்தது.இதற்கு பதில் சொல்ல, அவர் விடுதலை சிறுத்தைகள் சேகரித்த போன்ற, ஏதாவது வைத்திருப்பார்.நாம் தான் கண்ணை மூடிக் கொண்டு கேட்கத் தயாராக இருக்கிறோமே!நம்புங்கள்,தற்போதய சினிமாக்களில், விரல் விட்டு எண்ணக்கூடிய ஓரிருவரைத் தவிர,மற்றவர்கள் பணம்,பதவி,புகழ் இவற்றை மட்டுமே கொள்கைகளாக கொண்ட போலிப் புனிதர்கள்.
மண்டபம் நிறைந்த மருத்துவத் துறை மாணவர்கள். அமைதியாக பேராசிரியர் விரிவுரை நடத்திக் கொண்டு இருக்கிறார். என் மனமோ கட்டின்றி அலைகிறது.சனல் 4 முன்னைய,நேற்றைய காட்சிகள், இதயத்திலும் மூளைக்குள்ளும் கூரிய ஆயுதம் கொண்டு குத்திக் கிளறுவது போன்ற வலி,வேதனை. என்னை அறியாமலேயே ஐயோ என்று கத்தி விடுகிறேன். பேராசிரியர் விரிவுரையை நிறுத்தி விட்டு என்னிடம் வருகிறார். அனைத்து மாணவர்கள் தலைகளும் டென்னிஸ் விளையாடும்போது ஆடும் தலை போல் அசைந்து என் பக்கம் திரும்புகிறது. என் பக்கம் வந்த பேராசிரியர் என் தலையை தடவி விடுகிறார். நானும் பார்த்தேன்,என்னால் என்ன செய்ய முடியும் என்ற வேதனையுடன் கூறி விட்டு செல்கிறார், ஈழ தமிழர் நிலை தெரிந்த அந்த மனிதர்.
ஒரு ரோஜாத் தோட்டம். அழகாக மொட்டுக்களும்,விரிந்த மலர்களும் காற்றில் அசைந்து சுதந்திரமாக காற்றை தழுவி ஆனந்தமடைகின்றன. அவற்றை பெற்றவளோ தாய் மரமாய் நின்று அந்த மொட்டுக்களை மலர்களை அவை அனுபவிக்கும் ஆனந்த சுகத்தை தான் பெற்றது போல் அனுபவித்து ஆனந்தம் அடைகிறாள். மலர் இதழ்களையும் மொட்டுக்களையும் மெதுவாக தடவிய என் கை விரல்கள்,அந்த மென்மையை பரிசத்தினால் அனுபவிக்கின்றன. என்ன மென்மை. முகரும் எனக்கு அது தேனாய் மணம் தருகிறது. அந்த சுகத்தில் என்னை பறி கொடுத்து நின்று விட்ட நான், மீண்டும் மெதுவாக என் இதழ்களை மொட்டுக்களின்,மலர்களின் இதழ்களில் பதிக்கிறேன். வெட்கமடைந்த அந்த மலர்கள் வெட்கத்தால் தலை குனிகின்றன. வெட்கத்தால் குனிந்த மலர்களை உயர்த்தி பறிக்க நினைக்கிறது என் மனம். ஏனோ என் கை பின் வாங்குகிறது. தாய் மரத்தின் மடியில் துயிலும் அந்த மலர்களையும் மொட்டுக்களையும் பறிக்க மனம் ஏனோ இடம் தரவில்லை. மலர்களும் தாயும் சுகத்தை அனுபவிக்கட்டும். தாயும் பிரசவித்த அந்த மலர்மொட்டு குழந்தைகளை அணைத்து மகிழட்டும் என்று எண்ணினேன் திரும்பினேன்.
தினமும் வரும் குழந்தைகள் பலாத்காரம் பற்றிய செய்திகள்,வராத செய்திகள் கணக்கில் அடங்காதவை. நெல்லை சிறுமி ஐம்பது பேருக்கு விருந்தாக்கப்படுகிறாள்.ஊடகங்களுக்கு செய்திகள் வந்து குவிகின்றன. நீதிக்கு முன் நிறுத்தப்படுகிறது ஒரு சில,மனித உரிமை இயக்கங்களிடம் செல்கிறது சில,வேலியே மேய்கிறது சில, ஆனாலும் பெருகி வளர்கிறது பல.
13 வயது பச்சிளம் பாலகன். உலகின் எந்த பேதங்களையும் அறியாத சிறுவன். கொய்யாப்பழமோ மாம்பழமோ இல்லை எதுவோ பறிக்க விளையாட்டுக்காய் சென்றவன் இராணுவ நாய்களால் சுட்டுக் கொல்லப்படுகிறான். இராணுவம் என்றால் குடும்பமே இல்லையா,தாய்க்கு பிள்ளையாய் பிறக்கவில்லையா, மனிதனே இல்லையா? எப்படி முடிந்தது? பெற்றாளே ஒரு தாய் எப்படி துடித்திருப்பாள்,கண்ணீர் விட்டிருப்பாள், கதறியிருப்பாள்? இதயமே இல்லாத மிருகங்களா இவர்கள்.அமைதிப்படை என்ற பேரில் அன்று ஈழத்திற்கு சென்ற இந்திய இராணுவம் எத்தகைய கொடுமைகளை நம் உறவுகளுக்கு செய்திருக்கும், எண்ணிப் பார்க்கிறேன்.கண்ணில் வருவது இரத்தக்கண்ணீர்.அரசன் எவ்வளி,குடிகள் அவ்வளி என்பது உண்மையா?
11 வயது சிறுமி ஈழத் திருநாட்டின் எங்கோ ஒரு மூலையில், இரக்கமற்ற,இதயமாற்ற, அரக்கனான தந்தையால் விற்கப்படுகிறான். இஸ்லாமியன் என்று கூறத் தகுதியற்ற ஒரு இன்னொரு மிருகம்,மாட்டு வியாபாரியாய் வந்து வாங்கி, கழுத்தில் கயிற்றினால் கட்டி இழுத்து செல்கிறான். வீட்டிற்கு கொண்டு சென்ற அந்த மிருகம் தொழுவத்தில் கட்டினானா இல்லையே. படுக்கை அறைக்கு இழுத்துச் சென்று பலாத்காரம் செய்து முற்றத்தில் வீசி எறிகிறான், உன்னதமான திருக்குரானைப் படித்து தன்னை இஸ்லாமியன் என்று சொல்லிக் கொண்ட அந்த மிருகம். இதழ் விரிக்காத அந்த மொட்டு என்ன பாவம் செய்தது? சினிமாவைப் போல் பார்த்திருந்தது ஒரு கூட்டம். கேட்கவில்லை, தடுக்கவில்லை. ஏன்? சமீபத்தில் கோவையில் நட்ட நடு வீதியிலே நாலு பேர் பார்க்கையிலே கொல்லப்படுகிறான் ஒருவன்.சட்டக்கலூரியிலே சாதி பார்த்து தாக்கப்படுகிறான் இன்னொருவன். இப்படி பல சம்பவங்கள், இருட்டில் நடக்கவில்லை.தனி இடத்தில் நடக்கவில்லை. அனைவரும், சினிமாப் படபிடிப்பை போல், பார்த்திருக்க நடந்த கொடுமைகள்.உயிரினங்கள் அனைத்தும் ஒன்றென்றால், மரத்திற்கும்,பறவைக்கும்,மிருகத்திற்கும் கொடுக்கும் அன்பை, உரிமையை மனிதன் மற்ற மனிதனுக்கு கொடுக்க மறுக்கிறானே. ஏன்?
...........மாதவிலக் காதலால் ஓராடை தன்னி லிருக்கிறேன்,
தார்வேந்தர் பொற்சபை முன் என்னை அழைத்தல் இயல்பில்லை...........
…...பெருமூடன் பக்கத்தில் வந்தேயப் பாஞ்சாலி கூந்தலினை
கையினாற் பற்றிக் கரகரெனத் தானிழுத்தான்.
ஐயகோ என்றே அலறி உணர்விழந்து
பாண்டவர்தம் தேவியவள் பாதியுயிர் கொண்டுவர
நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி முன்னிழுத்துச் சென்றான்.
வழிநெடுக மொய்த்தவாராய் என்ன கொடுமை யிதுவென்று பார்த்திருந்தார்.ஊரவர்தம் கீழ்மை உரைக்கும் தரமாமோ? வீரமில்லா நாய்கள்...!
அன்றும்,இன்றும்,என்றும் இதே நிலை தானா? வீரமில்லா நாய்கள். இராணுவ அச்சம் காரணமாக, தடுக்க முடியாமல் இருந்திருந்தால் யாரும் எதுவும் சொல்லி இருக்க மாட்டார்கள். ஒரு சாதாரண மாட்டு வியாபாரி செய்த இந்த மிருகத்தனமான செயலுக்கு, பார்த்திருந்த இவர்களை எப்படி அழைப்பது?
எல்லோரும் வழக்கமாக செய்வது போல், மேலே நோக்கி பார்த்தேன். கடவுள் கக்கக்கவென சிரித்தார். மனிதன் பார்த்திருந்தான், நீயுமா என்றேன். மீண்டும் சிரித்த கடவுள், கடலில் தானியங்களை விதைத்து விட்டு, வீட்டில் வந்து கதிர் விளைந்திருக்கிறதா என்று பார்க்கிறாயே முட்டாளே என்றார். அலுவலகத்திற்கு வெளியே நிற்கும் அலுவலக துப்பரவுத் தொழிலாளியிடம் பணத்தை கொடுத்து விட்டு,அதிகாரியிடம் காரியம் முடிந்ததா என்று கேட்கிறாயே. எனக்கு ஒன்றும் புரியவில்லை. கடவுள் மீண்டும் பேசினார். உன்னைப் போல் ஒரு மனிதனுக்கு, பட்டும் பீதாம்பரமும்,பாலாபிசேகமும், ஊர்வலத் திருவிழாவும் செய்து விட்டு என்னிடம் வந்து விளைவு பற்றிக் கேட்கிறாயே என்ன நியாயம் அப்பா என்றார். கடவுளை புறந்தள்ளி விட்டு மனிதனை கடவுளாக்கி பூசை செய்தோமே அதற்குண்டான பலனா, இன்று நாம் அனுபவிப்பது? கடவுள் முன் தலை குனிந்து நின்றேன்.
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை,என்னை சொல்லிக் குற்றமில்லை,காலம் செய்த கோலமடா என்று கடவுள் பாடினான். வரலாற்றுக் கோலத்தை கலைத்து, நாம் எப்போது உண்மையை உணரப் போகிறோம்? இய்ற்கையை அழித்து விட்டு,மழை பெய்யவில்லை என்கிறோமே! என்ன நியாயம்?
செஞ்ச்சோலையில் துடி துடித்து, உடல் சிதறி கொல்லப்பட்டார்களே அந்த பிஞ்சுகளை,மொட்டுக்களை எண்ணிப் பார்க்கிறேன். கல்லூரி விரிவுரையின் போது பக்கத்தில் இருந்த வெள்ளைநிலா கையில் எதையோ திணித்தது. அதை எடுத்து கண்ணீரை துடைத்துக் கொண்டேன். அவளால் என் கண்ணீரை காகிதத்தாளால் துடைக்க முடிந்தது. ஆனால் கருகிக் கொண்டிருக்கும் மலர்களின்,மெழுகுதிரியாய் தங்களை அழித்துக் கொண்டிருக்கும் தாய்மார்களின், கண்ணீரை துடைக்க என்னால் முடியவில்லையே.
பெருகி வரும் மனிதநேயமற்ற குற்றங்களை கண்டும் நம் சமூகம் கண் மூடி இருப்பது ஏன்? பாலில் விஷம், மனித உடலில் புற்று, விளைநிலத்தில் புல்,களைகள் எங்கோ ஒரு மூலையில் பிடித்து முழு வயல் நெற்கதிர்களையும் அழிக்கும் கிருமிகள், ஏன் கணினியில் தொற்றிக் கொண்ட வைரஸ் இப்படி நம் சமூகத்தில் தொற்றிக் கொண்ட இந்த மிருகத்தனமான செயல்கள், சமூகத்தை அழிக்கும் இந்தக் குற்றங்களில் இருந்து காப்பாற்றப் போவது யார்? நம் இளைய சமுதாயமா? நாம் தான் கணினியிலும், சினிமாவிலும், நடிகர் பின்னேயும்,சாமியார்கள் வழிநடத்தலிலும் சென்று கொண்டிருக்கிறோமே! எப்படிக் காப்பாற்றப் போகிறோம்?
நம்மால் முடியாதா இவற்றை தடுக்க? ஏன் முடியாது? அக்கா தங்கை என்ற உறவுகள் என்றதும் துடிக்கிறோம். ஆனால் மற்றவர்கள் என்றதும் திரும்பி செல்கிறோமே ஏன்? பணம் பறிக்க,காதலிக்க, பொய்யான தகவல் கொடுத்து திருமணம் செய்ய, இப்படி எத்தனையோ முறைகேடான செயல்களிற்கு பேஸ்புக் செல்கிறோம், இணையத் தளங்களை நாடுகிறோம். நம் உறவுகள் தடம் மாறி செல்லாமல் இருக்க விழிப்புணர்வை ஏற்படுத்த,நாம் எதுவும் செய்வதில்லையே.
தினமும் ஏமாற்றுக்கள்,மணமுறிவுகள், பிரிவுகள் எத்தனை? இருவரிடம் ஒன்றான நாம், ஒன்றி வாழ முடியாவிட்டால் எப்படி இந்த உலகில் சேர்ந்து வாழப் போகிறோம்? கோயிலுக்கு சேலை கட்டி வர சொன்னதற்காக மணமுறிவு கேட்கிறாள் ஒரு இந்தியப் பெண். இப்படி சின்ன சின்ன விசயங்களுக்கே ஒன்றிப் போக முடியாத நாம் எப்படி நம்மை நாகரீகத்தின் உச்சகட்ட மனிதன் என்று சொல்ல முடியும்? அன்றைய மனிதனிடம் வசதி இருக்கவில்லை.ஆனால் மனிதநேயம் இருந்தது, சேர்ந்து வாழ்ந்து சாதித்தான்.இன்றைய மனிதனிடம் வசதி உண்டு விஞ்ஞான வளர்ச்சி உண்டு, ஆனால் மனிதநேயம் இல்லை. மனிதநேயத்தை மதித்த மனிதன் பணம்,பதவியை மதிக்க ஆரம்பித்த போது, கலாச்சாரம்,பண்பாடு,மனிதத் தன்மை அனைத்தும் சரிந்து விழ ஆரம்பித்தது. பணம் ,பதவி,தற்பெருமைக்காக எதையும் செய்யத் துணிந்தான். மனிதனை மனிதனே உண்கிறான்.மனிதனை மனிதனே பலாத்காரம் செய்கிறான்.மனிதனை மனிதனே கொலை செய்கிறான். முழு நிர்வாணமாக ஒன்று கூட துணியும் மனிதன், பயங்கர கொடுஞ்செயல்களை தடுக்க ஒன்று கூட மறுக்கிறான். மனிதனை காப்பாற்ற ஒன்று கூடாத மனிதன் கொலை செய்வதற்கு ஒன்று கூடுகிறான். பலாத்காரம் செய்வதற்கு ஒன்று கூடுகிறான். எல்லோருமே இப்படியல்ல என்று வாதிட வருவோர், 200 பேரால் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியை காப்பாற்ற ஏன் ஒரு மனிதன் கூட வரவில்லை,முயற்சி செய்யவும் இல்லை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.எடுத்துக் காட்டுக்கள் எல்லாம் முழுமையான சமூகம் ஆகாது.. காம இச்சையை தீர்த்துக் கொண்டு சென்றானே தவிர, யாராவது அந்த குழந்தையை காப்பாற்ற முன் வந்தார்களா? இப்போது சொல்லுங்கள் நாம் நல்லவர்கள் தானா?
நீங்கள் அத்தனை பேரும் நல்லவர்கள் தானா சொல்லுங்கள்?
காமப் பிசாசுகளை காட்டிக் கொடுங்கள். உங்களால் நிச்சயம் முடியும். தயவு செய்து வேடிக்கை மட்டும் பார்க்காதீர்கள்.சந்தர்ப்பம் மனிதனை உருவாக்குகிறது.ஒருவன் பத்துப் பேரை அடிப்பது சினிமா சண்டை.உடல் வலுவற்ற இரண்டு பெண்களால், ஆயுதம் இல்லாமலேயே,ஐந்துக்கு மேற்பட்டோருடன்,மனவலுவை மட்டும் வைத்து போராடி வேற்றி பெற முடியும்.ஆனால் வெட்கம்,பயம்,தாழ்வு மனப்பான்மை,அச்சம் போன்ற காரணங்கள் மன வலிமைக்கு தடை போட,பின்வாங்கி விடுகிறோம்.பாம்பின் வாயில் அகப்பட்ட எலி கூடப் போராடுகிறது.மனிதன் மட்டும் போராட பின்வாங்குவது ஏன்?
புத்தரிடம் ஒருவன் வந்து தன்னால் முடிந்தவரை கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்தான். விவேக் கேட்பது போல் என்ன கெட்ட வார்த்தையாக இருக்கும் என்று மனத்தை போட்டுக் குழப்பிக் கொள்ளாதீகள். எனக்கும் அது பற்றி தெரியாது. திட்டியவன் சென்றதும்,சீடர்கள் கோபத்துடன் புத்தரைக் கேட்டார்கள். நீங்கள் ஒரு சொல் சொல்லி இருந்தால், இல்லை கடைக் கண் காட்டி இருந்தால் அவனை ஒரு கை பார்த்திருப்போமே, ஏன் பேசாது இருந்தீர்கள்? அதற்கு புத்தர் சொன்னார், நீங்கள் உண்வு கொண்டு வருகிறீர்கள்.அதை உண்டு என் பசியை போக்கிக் கொண்டேன். நான் ஏற்றுக் கொள்ளாவிட்டால் திரும்ப எடுத்து செல்வீர்கள். அது போல் ஒருவன் பருசுப் பொருள் ஒன்றை கொண்டு வருகிறான்.அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால்,அதை அவன் திருப்பி எடுத்து சென்று விடுவான். அது போலவே வந்தவன் என்னை திட்டினான்.நான் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் அவன் அதை திருப்பி எடுத்து சென்று விட்டான்.அதாவது அவன் தன்னைத் தானே திட்டித் தீர்த்துக் கொண்டான், என்றார்.
உங்களில் பலர் என்னை திட்டி இருப்பீர்கள்.வரலாறு,விஞ்ஞான முடிவுகளைக் கூட ஏற்றுக் கொள்ளாது, இராமாயணமே கதி என்று இருக்கும் இராமபக்தர்களும் திட்டித் தீர்த்திருப்பீர்கள்.திட்டித் தீப்பதற்கு முன் ஒரு நிமிடம் நான் சொல்வது சரிதானா என்று சிந்தித்து விட்டு,தவறென்று தோன்றினால் திட்டுங்கள்.
மீண்டும் மற்றொரு சிந்தனையுடன், அடுத்த வாரம் வருகிறேன். எங்கேயும் போய் விடாதீர்கள்.வேண்டுமானால் சக்தியின் மற்ற சிந்தனைகளை படித்துப் பாருங்கள். சிந்திக்க ஒரு சிறு துளியாவது நிச்சயம் கிடைக்கும்.சிந்தனை ஒன்றைப் படைக்கிறது.படைக்கப்பட்டது தானே அதை படைத்தேன் என்று கூறிக் கொள்ள முடியாது.கவிஞன் கவிதை எழுதுகிறான்.தானே கவிதையை எழுதியதாக பேனா உரிமை கொண்டாட முடியுமா?சிந்தனையே மனிதனின் பலம்.மற்றவைகள் துணை போகும் கருவிகள்.நீங்கள் நல்லவர்கள்.உங்களால் மற்றவர்களை சிந்திக்க வைக்க முடியும்.தமிழர்கள் உணர்ச்சியற்ற எருமைத் தமிழர்கள் என்று முனைவர் திருமுருகனார் சாடினார். பாரதியாரோ ஒரு படி மேலே போய் தமிழனுக்கு இரும்புக் காதுகள் என்றார். இவற்றை நீங்கள் நிரூபிக்கப் போகிறீர்களா இல்லையா என்பதை உங்களிடமே விட்டு விடுகிறேன்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

சமூகத்தின் கறைகள் துகிலுரிப்பு- இரும்புக்காது Empty Re: சமூகத்தின் கறைகள் துகிலுரிப்பு- இரும்புக்காது

Post by மாலதி Fri Jul 29, 2011 5:42 pm

உங்களின் கட்டுரை படித்தேன் . உங்களை போன்று தான் என்மனதும் படபடத்தது . gold


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சமூகத்தின் கறைகள் துகிலுரிப்பு-16 உலகிலேயே மிகப் பெரிய பயங்கரவாதி
» சமூகத்தின் துகிலுரிப்பு 19 மாணவிகளின் பேயாட்டமும் பாவமன்னிப்பும்
» சமூகத்தின் கறைகள் 15 ஆண்மைக்குறைவும்,பெண்மைக்குறைவும்
» சமூகத்தின் குறைகள் துகிலுரிப்பு 21 பெண் ஒரு போதைப்பொருள்,சிதம்பரத்தில் யார் வழிபடலாம்
» சமூகத்தின் கறைகள் 12-அறிவியலில் செவ்வாய் தோசமும்,பரிகாரமும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum