Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சமூகத்தின் கறைகள் 12-அறிவியலில் செவ்வாய் தோசமும்,பரிகாரமும்
2 posters
Page 1 of 1
சமூகத்தின் கறைகள் 12-அறிவியலில் செவ்வாய் தோசமும்,பரிகாரமும்
சமூகத்தின் கறைகள் துகிலுரிப்பு 12 -செவ்வாய் தோஷம் அறிவியல் சொல்வது என்ன?
உள்ளதைச் சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையால் மறைக்கும் கபடம் தெரியாது.
மிகச் சிறந்த ஆயுர்வேத, சித்த மருத்துவர்கள் மறைக்கப்பட்டார்கள், மறக்கடிக்கப்பட்டார்கள். வெளிநாடுகளின் படை எடுப்புக்கள் மூலம் தன்னை இணைத்துக் கொண்ட ஆங்கில மருத்துவத்துறை, இருந்த சில அரிய மருத்துவ முறைகளை தூக்கி எறிந்து விட்டது. ஆரியத்தைப் போல், ஆங்கில வாடையும் அளப்பரிய சிறந்த மருத்துவ நுணுக்கங்களை தெரியாமல் செய்து விட்டது. அவற்றை தெரிந்து வைத்திருந்த சில மருத்துவர்கள் கூட கவனிப்பாரற்று சிதைக்கப்பட்டனர். சமீபகாலமாக மீண்டும் அதன் அருமை அறிந்தோர் முயற்சியால் துளிர் விட ஆரம்பித்துள்ளது.
ஆங்கில விஞ்ஞான மருத்துவம் ஒரு நூறு ஆண்டுகளுக்குள் கண்டறிந்ததை, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மருத்துவம் தந்திருந்தது. ஒரு பெண்ணின் கருவில் உருவாகும் கரு எப்படியான மாற்றத்தை மாதந்தோறும் அடைகிறது என்பதை மூவாயிரம் ஆண்டுகளூக்கு முன்னரே திருமந்திரம் தந்து விட்டது. ஆனாலும் மதநூல் என்ற கருத்தில், அதை ஏற்க சிலர் மறுத்தாலும், திருமந்திரம் ஒரு மதநூல் மட்டுமல்ல மருத்துவ நூலும் கூடத்தான். நம் முன்னோர்கள் மதத்தில் வைத்து மருத்துவத்தை தந்ததன் காரணம்,அன்று அவர்களால் விஞ்ஞான விளக்கத்தை தர முடியாமல் இருந்ததும்,மக்களிடம் அறிவியல் வளர்ச்சி இல்லாமல் இருந்ததும் ஆகும். மதத்திற்குள் இருப்பதை அறிவியல் விஞ்ஞான மூலம் பகுத்தறிந்து, பிரித்தெடுத்து பயன்படுத்துவதை விடுத்து, மூட நம்பிக்கை என்று தூக்கி எறிவதும்,பலவற்றை மூட நம்பிக்கையாக வளர்த்துக் கொள்வதும் எப்படி நியாயமாகும்?
அன்று கையை பிடித்து,இன்றும் கூட சிலர், பல மருத்துவ உண்மைகளை தருகிறார்கள். விஞ்ஞான கண்டு பிடிப்புக்களை தூக்கி எறிகிறாள், நம் பாட்டி. கருத்தரித்ததையும்,என்ன குழந்தை என்பதையும், இரத்தத்தின் பிரிவுகளையும் கூட அட்டகாசமாக சொல்கிறார் நாட்டு வைத்தியர். ஆனால் என்ன, அவரால் இரத்தப் பிரிவுக்கு பெயர் தர முடியவில்லை,விஞ்ஞான விளக்கமும் தர முடியவில்லை. அவரால்,இரத்தத்தில் பல பிரிவுகள் இருக்கிறது என்பதையும்,அதனால் வெவ்வேறு விளைவுகள் உடலில் ஏற்படுகின்றது என்பதையும் மட்டும் தான் சொல்ல முடிந்தது
அந்த தமிழ் மருத்துவர் விஞ்ஞான விளக்கம் தர முடியாமல் போனதை சோதிடர்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டார்கள். விளைவு, தோஷம் என்ற சோதிட விளக்கம். அதை போக்கிக் கொள்ள பரிகார முறைகள். ஏமாற நாம் இருந்தால், ஏமாற்ற குட்டிப் பையன் கூட ஓடி வருவான். வடிவேலுவை பழி தீர்க்க ஒரு குட்டிப் பெண் திட்டமிடுகிறாள். பலூனை ஊதித் தரும்படி வடிவேலுவிடம் கொடுக்கிறாள். ஊது ஊது என்று சொல்லி ஊத வைத்து உடைக்க செய்து விட்டு அழத் தொடங்குகிறாள். ஐயோ பாவம் வடிவேலு, சினிமாவில் மட்டுமல்ல, இன்று தன் வாழ்க்கையிலும் கூடத்தான் ஏமாந்து நிற்கிறார்.ஏமாந்து நிற்கிறாரா இல்லை ஏமாற்றி நிற்கிறாரா?கிளி சோதிடமும் கை கொடுக்கவில்லை.ரேஷன் காட்டை வைத்து பார்த்த ஜோதிடமும் கை கொடுக்கவில்லை.
சிறந்த மருத்துவம் என்று பல வெளிநாட்டவர்கள் இந்தியாவிற்கு வருகிறார்கள். ஆங்கில,அலோபதி தவிர ஆயுர்வேத சித்தாவிற்காகவும் வருகிறார்கள். அவர்கள் நாட்டை விட இங்கு செலவும் குறைவாகவே இருக்கும்.ஒரு சில சத்திரசிகிச்சைகள் தவிர மற்ற அனைத்தும் இந்தியாவில் சிறப்பாக இருப்பதாக பலர் கருதுகிறார்கள். சமீபத்தில் ரஜனி கூட நம் நாட்டு மருத்துவம் பிடிக்காமல் சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார்.ஊருக்குத்தான் உபதேசம் ரஜனிக்கல்ல. ஏன் நம்ம சோனியா அம்மையாரும் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு அமெரிக்கா சென்றிருக்கிறாரே!ஈழத் தமிழர்களின் கண்ணீர் சும்மா விடுமா?
இந்தியாவில் உள்ள பல மருத்துவ முறைகளை கற்றுக் கொண்ட வெளிநாட்டு மருத்துவர்கள், தங்கள் நாட்டில் அவற்றை செயல்படுத்தி வரும் நிலையில், நாம் அவ்ற்றை மூடநம்பிக்கையாக,நாட்டு வைத்தியமாக தூக்கி வீசி விடுகிறோம்.
ஜேர்மன் மருத்துவர் டாக்டர் J.H.Schultz இந்தியாவில் இருந்து தெரிந்து கொண்டு சென்ற பழைய முறை ஒன்றை மெருகூட்டி Autogenic பயிற்சி என்ற முறையை உருவாக்கினார். அதை பின்னர் அவரின் மாணவன் டாக்டர். L.Luthe உலகின் பல நாடுகளுக்கும் கொண்டு சென்றார். இன்று ஐரோப்பிய, அமெரிக்க, ஜப்பான் நாடுகளில் சிறப்பாக செயல்பட்டும் வருகிறது. இந்த பயிற்சி 6 - 8 வாரங்கள் ஒரு டாக்டரால் வழங்கப்படுகிறது. மருந்து, மாத்திரை இல்லாமல் மனச்சிதைவு,அதிக நாடித் துடிப்பு,இரத்த அழுத்தம் போன்ற பலவற்றுக்கு மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது. ஒரு சில வினாடிகளில் கட்டுப்பாட்டிற்குள் இரத்த அழுத்தத்தை கூட கொண்டு வரவும் முடிகிறது. இப்படி பலவற்றை வெளிநாட்டவர்கள் நம்மிடம் தெரிந்து கொண்டு தங்கள் நாட்டில் செயல்படுத்துகிறார்கள். ஆனால் நாமோ?வெள்ளை தோலுடையவன் சொன்னால் வேதம் என்று கை எடுத்து கும்பிடுகிறோம்.
நம் முன்னோர்கள் மணிக்கணக்காக, நாட்கணக்காக,மாதக்கணக்காக,வருடக்கணக்காக வானத்தை பார்த்திருந்து கிரகங்களின் அசைவுகளை கண்டறிகிறார்கள்.அவர்கள் தந்த அற்புத அறிவியலை,ஒரு சில சம்பவங்கள் சரியாக அமைந்ததை வைத்து,சிலர் சோதிடம் என்ற ஒன்றை அதற்குள் நுழைத்துக் கொண்டார்கள்.இந்த சோதிடம் மூக்கை நுழைக்காமல் இருந்திருந்தால், நாம் இன்று சோதிட சாமிகளாய் இல்லாமல்,அறிவியலின் தந்தையர்களாக இருந்திருப்போம்.
தோஷங்கள் பற்றி சோதிடம் சொல்வதை விட, அறிவியல் ரீதியாக, விஞ்ஞான ரீதியாக சிந்திப்பதே சிறந்தது என்று சோதிட கலாநிதி P.H.சர்மா கூறுகிறார். இருக்கும் பல தோஷங்களில் ஒன்றான செவ்வாய் தோஷத்தை எடுத்துக் கொள்வோம். தஞ்சையில் உள்ள ஒரு முதியவரான மருத்துவர், ஓலைச்சுவடிகளை புரட்டி விட்டு, "இரத்தப் பிரிவுகளைப் பற்றி எனக்குத் தெரியாது.ஆனால் ஒவ்வொரு மனிதனின் இரத்தக் கூறுகள் வேறுபடுகின்றன. இந்த இரத்த வேறுபாட்டை கைநாடியை வைத்து கண்டறிய முடியும். சில ஆண்களின் இரத்தம் சில பெண்களின் இரத்ததுடன் ஒத்துப் போவதில்லை. இதனால் பிறக்கும் குழந்தைகளுக்கும்,தாய்க்கும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குழந்தைகள் குறையுடனும் அல்லது இறக்கவும் செய்கிறது. நம் காலத்தில் திருமணத்திற்கு முன்னர் இவற்றை பார்ப்பதில்லை. திருமணத்தின் பின்னர் ஏற்படும் சிக்கல்களை அறிந்த பின் பொருந்தாத இரத்தக் கூறு என்பதை வைத்தியர் கண்டறிகிறார். அதற்கு சிக்கிச்சையும் செய்கிறார். ஆனால் நாமோ அந்த மருத்துவ உண்மையை அறியாமல் சோதிடத்திற்குள், தோஷம் என்ற பெயரில் சேர்த்துக் கொள்கிறோம்", என்று கூறுகிறார்.
இது பற்றி சர்மா கூறும் விளக்கம்,"சோதிட தோஷத்தை ஒரு பக்கம் வைத்து விட்டு இன்றைய மருத்துவ விளக்கத்திற்கு வருவதே சாலச் சிறந்தது" என்கிறார். இன்றைய மருத்துவ உலகு என்ன சொல்கிறது?எமது இரத்தப்பிரிவு A,B,AB,O என்பது நீங்கள் அறிந்ததே.இதில் 85 வீதமானோர் Rh + உடையவர்களாகவும், மிகுதி 15 வீதம் Rh- உடையவர்களாகவும் இருக்கிறார்கள்.இதில் விசேடம் என்னவென்றால் Rh- உள்ளவர்கள் ஆசிய,ஆபிரிக்க நாடுகளில் மிகக் குறைவாகவும்,அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளில் கூடுதலாகவும் உள்ளனர் என்பது தான்.ஒருவேளை நம்ம நாட்டு சோதிடர்களைக் கண்டு எல்லா செவ்வாய் தோஷங்களும் வட அமெரிக்கா,மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஓடி விட்டனவா? இரத்தத்தில் Rhesusfactor - உள்ள பெண் திருமணம் செய்யு முன் மருத்துவரின் அறிவுரையை பெற்றுக் கொள்வது சிறந்தது. HIV போன்ற நோய்களுக்காக மட்டுமல்லாது, RH பிரிவு பற்றியும் அறிந்து, கருத்தரித்த காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வும் காணலாம். Rh - உள்ள பெண்ணின் குழந்தை Rh+ ஆக இருக்குமிடத்து பல பிரச்சனைகளை உருவாக்கும். அநேகமாக முதல் முறை கருத்தரித்த காலத்தில் தாய்க்கு பிரச்சனைகளை தராத போதும், பின்னர் கருத்தரிக்கும் காலத்தில் தாய்க்கோ,பிள்ளைக்கோ ஆபத்து ஏற்படலாம்.கூடவே Rh நோயையும் குழந்தைக்கு ஏற்படுத்தலாம்.
அன்று வைத்தியர்களால் கண்டறியப்பட்ட, இந்த இரத்த ஒவ்வாமையை, சோதிடர்கள் தங்களுக்கு சாதகமாக,செவ்வாய் தோஷம் ஆக்கி,சோதிடக் கலையை வளர்த்து,தங்களை கணித மேதைகளாக்கி,பணத்தை சம்பாதித்து,சொகுசாக வாழ ஆரம்பித்தார்கள்.சும்மா இருந்து ராஜபோகம் அனுபவிக்க வேண்டுமானால், ஒன்று சோதிடராக வேண்டும் இல்லையேல் சாமியாராக இருக்க வேண்டும். ஆரிய மதக் கொள்கையை பரப்ப, இரண்டு இதிகாசங்களையும்,சாதியையும் வைத்து,திட்டமிட்டு மிகு கவனமாக தமிழர்களுக்கு எதிரானதாக திருப்பி, தமிழர்கள் கலாச்சாரத்தை அழித்தவர்களுக்கு, இந்த இரத்த ஒவ்வாமையை, சோதிட தோஷம் என்று நிரூபிப்பது ஒரு ஜுஜுப்பி தானே.ஆனாலும் ஆரிய மதத்தின் ஆரம்ப நூல்களான வேதம், உபநிஷதங்களில் ஜோதிடம் பற்றி எதுவும் கிடையாது..அதன் பின் வந்த சாஸ்திரங்கள்,புராணங்களில் மட்டுமே ஜோதிட,சாதக நம்பிக்கைகள் புகுத்தப்பட்டுள்ளன. அதன் பின் ஜிங்கு ஜிங்கு என்று வளர்ந்து,ஆடத் தொடங்கியது சோதிடம்.
சோதிடம் தனக்கு சாதகமாக இவற்றை தோஷங்களாக திசை திருப்பிக் கொண்டாலும் கூட, இன்றைய மருத்துவம் உண்மையை கண்டறிந்தது, சோதிடத்திற்கு விழுந்த ஒரு சாட்டை அடியே. சோதிடர்களால் சொல்லப்படும் செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் என்ற பெயரில் கஸ்டப்பட்டு உழைத்து பெற்ற பணத்தை,ஏமாற்றுக்காரர்கள் கையில் கொடாது, நேரடியாக உங்கள் மருத்துவரிடம் இரத்தப் பரிசோதனை செய்து RH factor,இரத்த ஒவ்வாமை(செவ்வாய் தோஷம்!)பற்றி தெரிந்து கொண்டு, அந்த இரத்தப் பிரிவிற்கு ஏற்ற ஆணையோ பெண்ணையோ மணம் செய்து கொள்ளலாம். இது கட்டாயமானதாக இல்லாவிட்டாலும் கூட பிரச்சனைக்கு மருந்தை தேடுவதை விட,பிரச்சனையை முதலிலேயே தீர்த்துக் கொள்வதே சிறந்ததாகும். சோதிடம் சொல்லும் செவ்வாய் தோஷம் என்பது, சோதிட ரீதியில் உண்மையற்றது என்பதையும்,சோதிடத்தை காப்பாற்றவும், தலை நிமிர்ந்து நிற்கச் செய்யவும் மருத்துவத்திடம் இருந்து களவாடப்பட்டது என்பதையும்,ஆரிய மதக் கொள்கைகளை காப்பாற்றவும்,தெய்வமதம்,தெய்வமொழி என்பதை நிலை நிறுத்தவும், வந்த இதிகாசங்களை போல் தான்,இந்த சோதிட தோஷங்கள் என்பதையும் புரிந்து கொண்டால் போதும் என்பதே, சில சோதிடர்களினதும்,அறிவியலாளர்களினதும் கருத்தும் ஆகும். சோதிடம் சொல்லும் செவ்வாய் தோஷமே RH factor ஒவ்வாமை என்றாலும் கூட, ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ள சிலருக்கு இந்த Rh factor - இருந்து விடுவதால்,அதை வைத்து செவ்வாய் தோஷம் உள்ள அனைவருக்கும் இந்த RH ஒவ்வாமை இருப்பதாக சொல்ல முடியாது.
RH- உள்ளவர்களுக்கு பொதுவாக உடல் நிலையில் குறை இருக்காத போதும்,கரு உருவான காலத்தில் தாயின் RH- இரத்தமும், RH+ குழந்தையின் இரத்தமும் சேரும் போது பிரச்சனைகள் உருவாகிறது.இதற்கு immunoglobulin(Rhlg) ,RhoGAM கருதரித்த காலத்தில் அநேகமாக 28 வது வாரமும்,குழந்தை பிறந்த பின்னரும் தாய்க்கு தரப்படுகிறது. RH-உள்ளவர்களுக்கு கருசிதைவு,அதற்கான தூண்டுதல்,குறைபாடுள்ள குழந்தை,குழந்தை கருவிலோ,பிறக்கும் போதோ இறந்து விடுவது அல்லது சிக்கலான பிரசவம் வர வாய்ப்புக்கள் உண்டு.அதனால் முன்னர் தெரிந்து கொள்வது சிக்கலை தவிர்க்கும்.
Rh ஒவ்வாமை ஓரிரு செவ்வாய் தோசக்காரருக்கு தற்செயலாக இருந்து விடுவதை வைத்து,சோதிடத்தை உண்மை ஆக்க முயற்சிப்பதை விட ,மருத்துவரிடம் செல்வதே சிறந்த பரிகாரமாகும். பிரச்சனை வந்து விட்டால் அவரையே நாம் அணுகப் போகிறோம். நாத்திகன் கூட பிரச்சனை வந்ததும், கருணாநிதி போல், மெதுவாக திருநீற்றை தொட்டு விடுவார்கள். அது போல சோதிடத்தில் தொங்கும் சோதிட பக்தர்களும், பிரச்சனை என்று வந்து விட்டால், பரிகாரத்தை மறந்து விட்டு மருத்துவரிடம் தான் போவார்கள்.இது தவிர,நோய் வந்தபின் ,எல்லாம் அவன் செயல் என்று யாராவது வீட்டில் முடங்கிக் கிடந்ததை கண்டிருக்கிறீர்களா? எந்த இராம பக்தராவது நோய் வந்து விட்டால்,எல்லாம் அவன் செயல் என்று,மருத்துவரிடம் போகாமல் இராமா இராமா என்று இருந்து விடுவார்களா?
பௌர்னமி நிலவைக் கண்டால் நம் வீட்டு நாய் கூட உழையிட்டு ஆர்பரிக்கிறது. ஒருவனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக நோய் தொற்றுவது குறைகிறது அல்லது தொற்றுவதில்லை.இன்னொருவனுக்கோ உடனே நோய் தொற்றிக் கொள்கிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் இவை எல்லாவற்றையும் மருத்துவர்கள் கண்டறிந்து இருந்தார்கள். மனிதனிடம் இருந்த அக,புறக் காரணிகளே இதற்கெல்லாம் காரணம் என்று கண்டறிந்தார்கள். ஆனால் இவற்றை சோதிட தாசர்கள் தங்களுக்கு சாதகமாக்கி , கிரகங்களுடன் இணைத்து சோதிடத்தை பரப்பினார்கள். அதில் பலமான வெற்றியும் கண்டார்கள். நம்மைப் போல் பலர் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்ற தயாராக இருக்கும் வரை, அவர்கள் செயலும் வளர்ந்து கொண்டே இருக்கும்.மருத்துவத்தையும்,மக்களிடம் உள்ள பலவீனத்தையும் வைத்து பரவிய சோதிடம்,பின்னர் மருத்துவத்தை புறந்தள்ளி விட்டு,மக்களின் பலவீனத்தையும்,மூட மத கொள்கைகளையும் வைத்து தன்னை வளர்த்துக் கொண்டது.இதை வெளிக் கொணர பல ஓலைச்சுவடிகள் இருந்தும் கூட,பணமும் அதிகாரமும் சோதிடத்திற்கு துணை போபவர் கையில் இருப்பதால், எதையும் நம்மால் செய்ய முடியவில்லை என ஆதங்கப் படுகிறார் தஞ்சைப் பெரியவ்ர் ஒருவர்.
எப்படி இராமன் அவதாரம் ஆக்கப்பட்டானோ, அப்படி சோதிடத்தையும் கடவுளுக்கு அடுத்த படியாக கொண்டு வந்து எல்லாம் சோதிடத்தால் கண்டறிய முடியும் என்ற மாயையும் ஏற்படுத்தினார்கள். பிறப்பை மட்டும் மனிதனிடம் கொடுத்த கடவுள், அதற்குப் பின் நடப்பதையும், இறப்பையும் மனிதனிடம் ஏன் விட்டு வைக்கவில்லை? எங்கோ ஒன்று சரியாக நடந்து விடுவதால்,அதை வைத்துக் கொண்டு, சோதிடத்தை உண்மையாக்கி கழுத்தில் தொங்கும் மனிதனை என்னவென்று சொல்வேனம்மா? கடவுளை நம்புபவன் சோதிடத்தை நம்ப மாட்டான். சோதிடத்தை நம்பும் மனிதன், நிச்சயம் மனிதனை கடவுளாக்கி வணங்குபவனாகவே இருப்பான். அதனால் தான் சோதிடம் பார்க்கும் அனைவரும் சிறு தெய்வங்களையும்,மந்திரத் தகடுகளையும் வைத்து பரிகாரம்,பில்லி சூனியம் ஏவல் என்றெல்லாம் ஏமாற்றி வருகிறார்கள். தங்களை விஞ்ஞானிகள் என்றும் பறைசாற்றி வரும் இவர்களை எல்லாம் கணித மேதைகள்,விஞ்ஞானிகள் என்றால் அப்துல் கலாமையும், அண்ணாத்துரையையும், ராமானுஜத்தையும்,ஏபெளையும்,எஸ்ரேயையும் எப்படி அழைப்பது?
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
சூரியன் ஒரு நட்சத்திரம்,பூமி கிரகம்,சந்திரன் துணைக்கோள்.ஆனால் சோதிடம் சூரியனையும் சந்திரனையும் கிரகங்களாக்கி,இல்லாத ராகு,கேதுவை ஞானக் கண்ணால் மட்டுமே பார்க்கக்கூடிய கிரகங்களாக்கியது.ஹையிட்டியிலும்,ஈழத்தில் இறந்த இரண்டரைலட்சம் தமிழர்களும்,சுனாமியால் அழிக்கப்பட்ட மக்களும் ஒரே கிரக தோஷம் உள்ளவர்களா?
அன்று அச்சத்தினால் கண்ணை மூடிக் கொண்டு எதையும் பின்பற்றிய மனிதன்,இன்று அச்சம் அகன்று அறிவியல் முதுமை பெற்ற போது,ஏன்,எப்படி போன்ற பல கேள்விகளைக் கேட்டு உண்மையை கண்டறிந்து பின்பற்றுவதே இன்றைய மனிதனுக்கு அழகு.
மீண்டும் அடுத்த வாரம் வருகிறேன்.
ஓலைச்சுவடிகள் மூலம் விளக்கமளித்த A.K.ஐயங்கார் ஐயாவிற்கு மனமார்ந்த நன்றிகள்.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Similar topics
» சமூகத்தின் கறைகள் 15 ஆண்மைக்குறைவும்,பெண்மைக்குறைவும்
» சமூகத்தின் கறைகள் துகிலுரிப்பு- இரும்புக்காது
» சமூகத்தின் கறைகள் துகிலுரிப்பு-16 உலகிலேயே மிகப் பெரிய பயங்கரவாதி
» சமூகத்தின் கறைகள் 17 நீங்க வயதிற்கு வந்திட்டீங்களா? அப்போ படியுங்க
» சமூகத்தின் துகிலுரிப்பு 19 மாணவிகளின் பேயாட்டமும் பாவமன்னிப்பும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum