Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சமூகத்தின் துகிலுரிப்பு 19 மாணவிகளின் பேயாட்டமும் பாவமன்னிப்பும்
2 posters
Page 1 of 1
சமூகத்தின் துகிலுரிப்பு 19 மாணவிகளின் பேயாட்டமும் பாவமன்னிப்பும்
சமூகத்தின் துகிலுரிப்பு 19 மாணவிகளின் சாமியாட்டமும் பாவமன்னிப்பும்
உள்ளதைச் சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையால் மறைக்கும் கபடம் தெரியாது.
குற்றமற்றவர்களை குற்றவாளிகளாக்கி வேடிக்கை பார்க்க நினைத்த மனிதநேயம் அற்றவர்களிடம் இருந்து, அவர்களைக் காப்பாற்ற ஒரு சிறு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர்களுக்கு தமிழனாய் மனிதனாய் நன்றியுடன்..............
மத,கலாச்சார கருத்துக்களை தென் இந்தியாவில் பரப்பி,தனக்கு ஒரு தனியான நாட்டை அமைத்துக் கொள்ள,அச்ச உணர்வையும்,மூட நம்பிக்கைகளையும்,போலியான வேத புராண இதிகாசங்களையும் ஆரியம் ஏற்படுத்தியது என்பதை நேராகவும், மறைமுகமாகவும் வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்ட நிலையில், அதன் தாக்கம் இன்னமும் வேரூன்றி இருப்பதற்கு சமீபத்தைய தெரணி பாடசாலை மாணவிகளின் செயல் உணர்த்தி உள்ளது.
சில வாரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் தெரணியில் உள்ள ஒரு பாடசாலையில் உள்ள பெண் பிள்ளைகள் சாமி ஆடியதாக கேள்விப்பட்டிருப்பீர்கள்.திருவிழா சமயத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர் கிழிக்கப்பட்டதை அடுத்து நடந்த சம்பவம் இதுவாகும். இது எப்படி வருகிறது? சாமியா அருளா அல்லது மனநோயா?
2007 ஆண்டில் மெக்சிக்கோவில் ஒரு கிராம கிறிஸ்தவ பாடசாலை ஒன்றில் சில மாணவிகள் நடக்க சிரமப்பட்டும், வழக்கத்திற்கு மாறான சில உணர்வுடன் இருந்ததையும்,2008 ல் தன்சானியாவில் உள்ள 20பள்ளி மாணவிகள் மயக்கநிலைக்கு சென்றதையும்,சில இயற்கைக்கு மாறான உணர்வுகளுடன் இருந்ததையும் எண்ணிப் பார்க்கிறேன்..சில வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் நூறுக்கு மேற்பட்ட மாணவிகள் உணவு எடுத்துக் கொண்டிருந்த போது, ஒரு மாணவி திடீரென தனக்கு வாந்தி,மயக்கம்,வயிற்றுவலி என்று ஆரம்பிக்க,அறுபதுக்கு மேற்பட்ட மற்ற மாணவிகளும் அதே உண்ர்வைப் பெற, ஆம்புலன்ஸ்கள் ஓட ஆரம்பித்தன. மருத்துவ நிலையத்தில் பரிசோதனை நடந்தது.அரை மணி நேரத்தில் உடலிலோ,உணவிலோ எதுவித நச்சுத் தன்மையும் இல்லாத நிலையில் உடன் திருப்பி அனுப்பப்பட்டனர். மருத்துவர்கள் இது பற்றி குறிப்பிடுகையில்,எங்கோ உணவு பற்றி கேள்விப்பட்ட ஒரு செய்தி அவர்கள் மனதில் பதிந்து, இந்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது என்றார்.ஒருவர் வாந்தி மயக்கம் என்றதும் மற்றவர்களும் அதே உணவைத்தானே நாமும் சாப்பிட்டோம் என்ற உணர்வு ஏற்பட,அவர்களும் அந்த நிலைக்குத் தள்ளப் பட்டார்கள்.
இது ஒரு மாஸ் ஹிஸ்டேரியா,Mass Hysteria, வகையை சேர்ந்தது தான் என்றும்,இதற்கு Mass sociogenic illness" (MSI), என்று சொல்வோம் என்கிறார்,டாக்டர்.மார்க் பெல்ட்மன். ஒரு குழுவாக உள்ளவர்களிடம் ஒரே மாதிரியான உள்,வெளி உணர்வுகள் இருப்பதும், இதற்கு எபிடெமிக் ஹிஸ்டீரியா,epidemic hysteria என்றும் சொல்வார்கள். அடிமனத்தில் பதிந்து விட்ட சில அன்றாட வாழ்க்கையில் காணாத நம்பிக்கைகள், சமய சம்பந்தமான கருத்துக்கள், அதனால் ஏற்படும் பயம் வெளியே வரும் போது தங்களை அறியாமலேயே என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே செய்து விடும் செயல்களே இவை என்கிறார் டாக்டர்.பிலிப்ஸ் ஸ்டீவன்ஸ்.
இந்த Mass Hysteria- வினால் ஏற்படும் செயல்கள், பொதுவாக ஒருவரிடம் வராது ஒரு குழுவினரிடம் சேர்ந்து வருகிறது. இது ஒரு மனநோய் வகையை சேர்ந்தது என்றும் பெண்களிடம்,அதுவும் 11 முதல் 16 வயதிற்குட்பட்டவர்களிடம் வரக் கூடியது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். மருத்துவத்தை பொறுத்த வரையில் இயற்கைக்கு மாறான எல்லா ஒழுங்கின்மையும்,disorder, ஒரு நோய் தான். இந்த நிலை ஏற்படும் போது மெதுவான மயக்கம்,உடல் சூடு, தன்னை மறந்த ஒரு நிலை, தொடர்ந்து பயம்,கிளுகிளுப்பு,ஆவேசம்,பரபரப்பு,துடிப்பு போன்றவை கூடவே இருக்கும் என்கிறார்கள் மனநோய் மருத்துவர்கள்.ஒன்றாக இருக்கும் ஒரு சிலர் ஒரே விஷயத்தை ஒருவித பயத்துடன் ஒரே மாதிரி நினைப்பதால் இப்படி ஏற்படுகிறது. இது தான் தேரணி மாணவிகளிடம் ஏற்பட்டது. போஸ்டர் கிழிக்கப்பட்டது,செருப்பால் அடித்தது, கூடவே மக்கள்,பெற்றோர் உறவினர்களின் சாமிக் குற்றம்,தெய்வக் குற்றம் என்ற கருத்தும் இந்த மாணவிகளிடம் ஒரு பயத்தை ஏற்படுத்த,எண்ணிப் பார்க்காது நம்பியதால்(suggestibility) அவர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இதனால் தான் ஒருவருக்கு வந்த இந்த நிலை மற்ற மாணவிகளிடமும் ஏற்பட்டு அருளாகி விட்டது.
இந்த நிலை magical thinking என்ற வகைக்குள் வருகிறது. இது ஒரு மன நோயாக கருதப்படா விட்டாலும் கூட, மருத்துவ உலகை பொறுத்த வரையில் இதுவும் ஒரு வகை மன நோயே.இந்த நிலை இளம் பெண் குழந்தைகளிடம் இருந்தாலும் கூட,இவற்றின் காரணத்தை தெளிவு படுத்தாமல் விடுவதாலேயே,அவர்கள் வளர்ந்த பின்னும் கூட சமய நிகழ்ச்சிகள்,கோயில் திருவிழாக்களில் ஆடுவதும்,பேய் ஆடுவதும்,அருள் வருவதுமாகி தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருவதை நாளாந்தம் நாம் ஊடகங்கள் மூலம் அறிந்து வருகிறோம். எமது விரிவுரையாளர் ஒருவரிடம் இது பற்றி கேட்ட போது, அந்த மாணவிகளை உடனே ஒரு மன நோய் மருத்துவரிடம் அழைத்துச் சென்று அந்தப் பயத்தை போக்கி இருக்கலாம். அதனால் அவர்கள் என்றும் இந்த நிலைக்கு தள்ளப்பட மாட்டார்கள் என்கிறார். அவ்ர்கள் அடி மனதில் உள்ள தேவையற்ற நம்பிக்கைகள் துடைத்தெறியப் படாவிட்டால் தொடர்ந்தும் இருந்து விட வாய்ப்புக்கள் உண்டு என்கிறார். இவர்களின் இன்றைய செயல் தான் நாளைய நாம் காணும் பேயாடுவதா இல்லை அருள் வந்து குறி சொல்வதா?
இதைவிட இன்னொரு நிலை psychosomatic எனச் சொல்லலாம்.மனதும் உடம்பும் சேர்ந்து மனத்தில் பதிந்து விட்ட ஒன்றை செயல்படுத்த முனைவது,இன்னொன்று ஆளுமைச்சிதைவு(dissociative disorder) ஆகும்.
அது என்ன மாஜிக்கல் திங்கிங்?
வழக்கத்தில் இல்லாத நம்பிக்கைகள், மத சம்பந்தமான,மூடநம்பிக்கைகள்,சகுனம் போன்றவை மனத்தின் எங்கோ ஒரு மூலையில் தங்கிவிட, அவை எப்போதோ,சமய நிகழ்ச்சிகள்,பிரார்த்தனை,பாராயணம்,தொழுகை போன்றவற்றின் போது தூண்டப்பட்டு வெளியே தள்ளப்படுகிறது. இதனால் தான் கோயில்களில் உருவாடுவதும்,அருள் வருவதும்,பூசாரி வீபூதி அடிப்பதும்,அப்பாவி வேப்பமரத்தின் இலைகள் கொத்துக் கொத்தாக முறிக்கப்பட்டு வேப்பிலை அடிப்பதும், தலையில் தேங்காய் கொண்டு அடித்து தலையை பிளப்பதும் நடந்தேறி வருகிறது. இதிலிருந்து வெளிவர ஒரே வழி விழிப்புணர்ச்சி தான். ஆசிரியர்கள்,பெற்றோர்கள் ஏன் நாமும் கூட நாம் காணும் குழந்தைகளிடம் எடுத்து சொல்வதனாலும் இந்த டுபாக்குவில் இருந்து வெளியே கொண்டு வரலாம். இந்த இடத்தில் பூசாரிகள்,அர்ச்சகர்களை, மத போதகர்களை சேர்த்துக் கொள்ளாதாதன் காரணம், அவர்கள் இந்த விழிப்புணர்ச்சியை எந்தக் காரணம் கொண்டும் ஏற்படுத்த மாட்டார்கள்.அப்படி செய்தால் அவர்கள் பிழைப்பு என்னாவது? நாளை வயிற்றுப் பாட்டுக்கு என்ன செய்வது? வடிவேலுவை தினமும் ஆயிரம் ரூபாய் கொண்டு வந்தால் தான் உள்ளே வர முடியும் என்று வீட்டுக்காரி சொல்வது போல், வீட்டுக்காரி வெளியே நிறுத்தி பூட்டி விடுவாளே,பாவம் பூசாரிகள்.
சினிமா பார்த்துக் கொண்டிருக்கும் போது சில காட்சிகளில் எங்களை அறியாமலேயே கண்ணீர் விடுவதும், காட்சிகளுடன் ஒன்றிப் போவதும் உண்டு.சில சமயம் பக்கத்து சீட்டில் அல்லது முன் பக்கம் உள்ள சீட்டில் உள்ளவர்களின் மேல் குத்துக்கள சரமாரியாக, சண்டைக் காட்சிகளின் போது, விழுவதும்,அதை தொடர்ந்து சண்டை இட்டுக் கொள்வதும், உரிமையாளர்களினால் வெளியேற்றப்படுவதும் நடப்பவை தான்.ஏன் தொலைகாட்சி தொடர்களில் நம் பெண்களின் அட்டகாசம் தெரிந்தது தானே.இதே போல் தான் சாமி வருவதும்,அருள் வருவதும் சில சமயங்களில் அளவுக்கு மீறிப் போய் விடுகிறது.சிலர் உடலில் குத்திக் கொள்வதும், நெருப்பில் குதிப்பதும்,போன்ற பல செயல்களில் ஈடுபடுகிறார்கள். வடிவேல் பேய் ஓட்டுவது போல், திரும்ப அது அடிக்காத வரை அல்லது மற்றவர்கள் அடிக்காதவரை எல்லாமே சௌக்கியம் தான். மீறினால் உடம்பு புண்ணாகி விடும். நமக்கு வரும் காயங்கள் உடனே வலிப்பதில்லை. மறுநாள் சிறிதாக தொடங்கி வலி ஆரம்பிக்கிறது. சில நம்பிக்கைகளுக்குள் அகப்படும் இந்த மனிதர்கள் உணர்ச்சி வசப்பட்டு செய்யும் செயல்கள் மறுநாள் சிறிது சிறிதாக உடலை புண்படுத்த ஆரம்பிக்கிறது. உடனே அவர்களுக்கும் தெரிவதில்லை,நமக்கும் தெரிவதில்லை. எல்லாம் சரிதான்,பக்திப் பரவசமாகி தலையில் தேங்காய் உடை,மொட்டை அடி,வேல் குத்து இப்படி எல்லாம் செய் என்று கடவுள் கேட்டாரா? கடவுள் நம் தந்தை என்றால்,நம்மை படைத்தவர் என்றால் நிச்சயம் இதற்கு சம்மதிக்கவே மாட்டார்.
சிலர் சில நம்பிக்கைகளை எண்ணிப் பார்க்காது,சிந்தித்து பார்க்காது,அரசியல்வாதிகள் மதவாதிகள் சொல்வதை நாம் அப்படியே கேட்கிறோமே அது போல,அப்படியே ஏற்றுக் கொள்வதும் இதற்கு காரணமாகி விடுகிறது.இவை அநேகமான சந்தர்ப்பங்களில் மத நம்பிக்கைகள் சார்ந்தே இருந்து வருவதை காண முடிகிறது. சில கிறிஸ்தவ மதக் குழுக்களின் பூசைகளில் இந்த மாதிரியான செயல்கள் நடப்பதை காண முடியும். ஆடுவார்கள்,பாடுவார்கள்,கண்களை மூடி தங்களை மறந்த நிலையில் இருப்பார்கள். அடுத்த நிமிடமே மத போதகர் வந்து தலையில் தட்டி அவரை சாதாரணை நிலைக்கு கொண்டு வருவார். இதைக் கண்ட நம்மவர்கள், ஐயோ பாவம், கடவுளே வந்து வரம் தருவதாக நினைத்து அந்த மதத்தில் சேர்ந்து விடுவார்கள். இந்த நிலையை பயன்படுத்தி மத மாற்றம் சுலபமாக நடந்தேறுகிறது. ஏமாற நாம் இருந்தால் ஏமாற்ற டுபாக்குகள் வரவே செய்வார்கள். உங்களில் யார் ஏமாற தயாராக இருக்கிறீர்கள்?
மாஜிக் செய்பவர்கள் பல தந்திரங்களைக் கையாளுவார்கள்.அவர்களுடைய ஆட்களும் மக்களோடு மக்களாய் இருந்து செயல்படுவார்கள். அது போல் இந்த மதம் மாற்றும் கூட்டத்தை சேர்ந்த சிலர் மக்களோடு இருந்து கொண்டு செயல்படுவார்கள்.
இந்த தெரணி மாணவிகள் நிலை வேறு.உண்மையில் அவர்கள் அந்த நிலைக்கு தள்ளப்பட்டவர்கள். ஆனால் இன்னொரு ஏமாற்றும் கூட்டம் இருக்கிறது.சமீபத்தில் சென்னையில் ஒரு பெண் தன் கணவருடன் சேர்ந்து அருள்,குறி என்று ஏமாற்றி பணம் பறித்து வந்த போது, அது ஏமாற்று என்று கைது செய்து உள்ளே தள்ளி விட்டார்கள்.இவை இந்தியா தவிர்ந்த மற்றைய நாடுகளில்,தமிழர்கள் வாழும் இடங்களிலும் இல்லையென்றே சொல்லலாம். இந்தியாவில் இது மிகப் பெரிய அளவிற்கு சென்றதன் காரணம் ஆரிய மத கலாச்சாரம் தான். என்ன சார், பணம் சம்பாதிக்க வழி இல்லை என்றீர்களே,வழியா இல்லை பூமியில்.
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காண்பி என்ற இயேசுவின் கருத்தை சிலர் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். ஒரு கன்னத்தில் அடிக்கும் போது மறு கன்னத்தை காட்டினால்,அடிப்பவன் ஒரு நிமிடம் தயங்குவான்,எண்ணிப் பார்ப்பான்,தான் தவறு செய்து விட்டோமோ என்று அவன் மனம் உறுத்தும். இது இயேசுவின் தத்துவம். ஒரு நகைச்சுவை காட்சியில் வடிவேலு சொல்லிக் கொண்டிருப்பார், "நாலு நாளா பத்துப் பேர் கொண்டு போய் அடித்தார்கள். அப்போ ஒருவன் இவன் அடியெல்லாம் தாங்கிறான் நல்லவன் போல இருக்கு.”என்று சொல்லி, விட்டு விடுவார்கள். இதிலும் அதே இயேசுவின் தத்துவம் தான். ஆனால் செய்வதெல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிரு என்பது பொருள் அல்ல. இன்னொரு சமயத்தில், தவறான வணக்கம் செயல்பாடு காரணமாக இயேசு கோயிலுக்குள் புகுந்து அடித்து நொறுக்குகிறார். அதே இயேசு,சிலுவையில் அறையப்பட்ட போது, தந்தையே அவர்கள் என்னவென்று தெரியாமல் செய்கிறார்கள், அவர்களை மன்னியும் என்கிறார். அதாவது ஒருவன் தெரியாமல் செய்யும் போது மன்னிக்க வேண்டும்,தெரிந்து செய்யும் போது தண்டிக்க வேண்டும்.
கிறிஸ்தவர்களால் பாவமன்னிப்பு என்று பேசப்படுவதை கேட்டிருப்பீர்கள்.இது சினிமாக்களிலும் காட்டப்படுகிறது. இதுவும் ஒரு தவறான சிந்தனை தான். பைபிளில் சொல்லப்பட்டதை,பைபிள் முழுவதையும் படித்தால் மட்டுமே தெரியும் புரியும், நன்கு அவதானித்தால், இந்த பாவமன்னிப்பு வேறு மாதிரி தெரிகிறது. பாவமன்னிப்பு கேட்கும் ஒருவனுக்கு உடனே பாவமன்னிப்பு கிடைத்து விடுமா? பைபிளின் படி இல்லை என்றே பதில் கிடைக்கிறது. ஒரு சினிமாவில் மைனர் ஒருவன் பஞ்சாயத்தில் அட்வான்ஸ்சாக பணம் கட்டி விட்டு, பெண்களை கெடுத்து வருகிறான்.பஞ்சாயத்தும் அதை ஏற்றுக் கொண்டு அவனை விட்டு விடுகிறது.. அதற்கு விவேக் பறவை முனியம்மாவுடன் சேர்ந்து துப்பாக்கியால் கொடுக்கும் தண்டனை உங்களுக்கு தெரிந்ததே.
இந்த விவேக்கின் நகைச்சுவையை எழுதும் போது ஐரோப்பிய நாடொன்றில் நடைபெற்ற உண்மையான சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த இந்த சம்பவத்தில் 19 வயதுப் பெண்ணை பலாத்காராம் செய்த இளைஞன் ஒருவனை அந்தப் பெண் கைத் துப்பாக்கியால், அந்த.... இடத்தில் சரியாக குறி பார்த்து சுட்டதில் இளைஞனுடைய அந்த... உறுப்பு முற்றாக சத்திர சிகிச்சையினால் அகற்றப்பட்டது. இதில் ஒரு விசேடம் என்னவென்றால் சாட்சியங்கள் இல்லாத இந்த வழக்கில் பெண்ணின் உடல்பரிசோதனையில் சம்பவம் நிரூபிக்கப்பட்டதும்,தன்னை தற்காத்துக் கொள்ளவே சுட்டதாக சொல்லியும் வழக்கில் இருந்தும் தண்டனையில் இருந்தும் தப்பித்துக் கொண்டாள்.ஐயோ பாவம் அந்த இளைஞனின் குடும்ப வாழ்க்கை.
பைபிள் சொல்கிறது, ஒருவன் செய்யும் குற்றத்திற்கு பாவமன்னிப்பு உண்டு. ஆனால் அந்த பாவமன்னிப்பு எப்போது கிடைக்கிறது என்பதே கேள்வியாகும். ஒருவன் தன் தவறை உணர்ந்து கொள்ளும் போது, என்று பதில் வருகிறது.அத்துடன் பைபிள் நிறுத்திக் கொள்ளவில்லை. பாவமன்னிப்பு கிடைத்த பின் அவன் அந்த தவறை மீண்டும் செய்யக் கூடாது. இயேசுவின் சொற்பொழிவின் முடிவு இங்கே தான் முடிகிறது. ஒருவன் தவறு செய்தால்,அவன் அதை உணர்ந்து திருத்திக் கொண்டு, மீண்டும் தவறு செய்யாது இருப்பானானால் அவனுக்கு பாவமன்னிப்பு நிச்சயம் உண்டு. சினிமாவில் காட்டுவது போலவும்,ஒரு சிலர் சொல்வது போலவும், ஒவ்வொரு முறை தவற்றை செய்து விட்டு பாவமன்னிப்பு கேட்டால் கிடைத்து விடும் என்பதல்ல. இப்படி நம் நாட்டில் பல பழமொழிகள் எதற்கோ ஏற்பட்டு எப்படியோ திண்டாடிக் கொண்டிருக்கிறது.
ஒரு ஆட்சி நாட்டை நல்ல வழியில் கொண்டு செல்ல வேண்டியது அவசியம். அது தவறான வழியில் அழைத்து சென்றால், முதலில் சிறப்பாக இருப்பது போல் தோன்றினாலும் பின்னர் மிகப் பெரிய பாழும் குழியில் விழுத்தி விடும்.அது போலவே நல்ல வழியில் மக்களை கொண்டு செல்ல வேண்டிய ஆன்மீகம், தவறான கருத்துக்களுடன்,தவறான வழியில் கொண்டு செல்லுமானால்,கடவுள் மீதுள்ள பயம் போய்விடுமானால் இன்றைய நிலை போல் நாட்டில் சமூக சீரழிவுகளும்,காந்தீயம் பேசிக் கொண்டு அராஜக ஆட்சி நடத்தும் சோனியா காங்கிரஸ் போலவும்,புத்த தர்மத்தை பேசிக் கொண்டு மக்களை கொன்று குவிக்கும் மகிந்தர்கள் போலவும் மனித விலங்குகள் முளைத்துக் கொண்டே இருக்கும். ரஜனியும்,விஜய்யும் போஸ்டர்களில்,சிலரின் பேச்சில்(மதுரையில் விஜய் சிவபெருமான் ஆகி விட்டார்), கடவுள் ஆகி விட்டார்கள்.எது எதற்கெல்லாம் போர்க்கொடி தூக்கும் இந்து மத வாதிகள் இப்போது எங்கே போனார்கள்? பசிக்கு திருடும் சிறுவனை கூண்டில் ஏற்றி விட்டு லஞ்சம் ஊழல் பெருச்சாளிகளை அரியணையில் ஏற்றி பூசை செய்பவர்களைப் போல் ஆகி விட்டார்களா?
மீண்டும் அடுத்த வாரம் மற்றொரு சிந்தனையுடன் துகிலுரிக்க வருகிறேன்.......Dr. சக்தி.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: சமூகத்தின் துகிலுரிப்பு 19 மாணவிகளின் பேயாட்டமும் பாவமன்னிப்பும்
வாங்க சக்தி .பதிவுகள் அனைத்தும் அருமை உங்களின் பதிவுகளுக்காக வாரவாரம் எதிர் பர்ர்த்து இருகிறோம்
Similar topics
» சமூகத்தின் கறைகள் துகிலுரிப்பு- இரும்புக்காது
» சமூகத்தின் கறைகள் துகிலுரிப்பு-16 உலகிலேயே மிகப் பெரிய பயங்கரவாதி
» சமூகத்தின் குறைகள் துகிலுரிப்பு 21 பெண் ஒரு போதைப்பொருள்,சிதம்பரத்தில் யார் வழிபடலாம்
» சமூகத்தின் கறைகள் 12-அறிவியலில் செவ்வாய் தோசமும்,பரிகாரமும்
» சமூகத்தின் கறைகள் 17 நீங்க வயதிற்கு வந்திட்டீங்களா? அப்போ படியுங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum