TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சமூகத்தின் கறைகள் துகிலுரிப்பு-16 உலகிலேயே மிகப் பெரிய பயங்கரவாதி

2 posters

Go down

சமூகத்தின் கறைகள் துகிலுரிப்பு-16 உலகிலேயே மிகப் பெரிய பயங்கரவாதி Empty சமூகத்தின் கறைகள் துகிலுரிப்பு-16 உலகிலேயே மிகப் பெரிய பயங்கரவாதி

Post by sakthy Fri Aug 19, 2011 5:35 pm

சமூகத்தின் துகிலுரிப்பு 16 உலகிலேயே மிகப் பயங்கரவாதி

உள்ளதைச் சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையால் மறைக்கும் கபடம் தெரியாது.

கட்டிய மனைவியை காப்பாற்ற வேண்டும்.கர்ப்பிணியாக இருக்கும் போது அவளை கொலை செய்து விட்டு,தாயாக மதிக்கப்பட வேண்டிய மாமியாரிடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. என்ன சினிமாக் கதை என்கிறீர்களா? நான் முன்னரே எழுதியது போல், சினிமாவை பார்த்து பெண்ணைக் கடத்துகிறார்கள்,கொலை செய்கிறார்கள், ஆபாசப் படம் எடுக்கிறார்கள், இன்று தமிழ்நாட்டில் கர்ப்பிணி மனைவியை கொலை செய்து விட்டு மாமியாரோடு லீலை செய்கிறான் ஒரு கேடு கேட்ட கணவன். மாமனாரோடு தொடர்பு படுத்திய சினிமாவுக்கு எதிராக போர் கொடி தூக்கினோம்.இன்று திசை மாறி, மாமியாருடன் தொடர்பாகி விட்டது. தன் மகளை வாழ வைக்க வேண்டிய தாய், மகளையே கொல்ல துணை போய், சுகம் அனுபவிக்கிறாளே, வலிக்கவில்லை உங்களுக்கு?
நம்மிடையே இருக்கும் மிகப் பெரிய கொடுமை என்னன்னு தெரியுங்களா? போலிக் கௌரவம். பணம் இல்லை.குழந்தைகளுக்கு நல்ல உணவு,உடை தர முடியவில்லை. அடுத்த வீட்டில் விலை உயர்ந்த பொருள்,ஏன் சேலை போன்ற உடனடி அவசிமற்ற பொருளாகவும் இருக்கும், ஒன்று வாங்கி விட்டால், நாமும் கடன் பட்டு கூடிய வட்டி கொடுத்து,நம் கௌரவத்தைக் காப்பாற்றி விடுவோம்.இது நகரங்களிலும்,நடுத்தர வர்க்கத்திடமும் மிக அதிகம். அலுவலகத்தில் அதிகம் ஈடுபாடில்லாமல் வேலை செய்திருப்போம்.பதவி உயர்வு வேறு ஒருவருக்கு கிடைத்து விட்டாலோ,முதலாளியை திட்டுவோம் இல்லையேல் பதவி உயர்வு பெற்றவரை சிபார்சு,லஞ்சம் கொடுத்தார் என்று கூறவும் செய்வோம். பரீட்சையில் தவறி விடுவோம். ஆசிரியர் மீது பழி போடுவோம்.நன்றாகப் படிக்கவில்லை என்று சொல்ல மனமே வருவதில்லை. இவைகள் வெட்கம்,தாழ்வுமனப்பான்மை மட்டுமல்ல ஒருவகையில் போலிக் கௌரமும் தான். உங்களுக்குமா? மாற்ற மாட்டார்கள்.மாறவும் மாட்டார்கள். கௌரவம் தான் போய் விடுமே. கேட்க சி(ரி)ப்பு சி(ரி)பாய் வருகிறது.
நடிகர் நடிகைகள் தொலைக்காட்சி,பத்திரிகைகளுக்கு முன் தோன்றுவார்கள். மலையாளத்தில் இரண்டு,தெலுங்கில் மூன்று,தமிழில் இரண்டு பண்ணிக் கொண்டிருக்கிறேன் என்று டூப் விடுவார்கள். ஐயோ பாவம் ஒரு படம் கூட இருக்காது. எதற்கும் தயார் என்று சான்ஸ் கேட்டு அலைவார்கள், இல்லையேல் சாமியார்கள் பின் போய் விடுவார்கள்.அதுவும் இல்லையேல் பணம் கொடுத்து ஒரு வேலையுமே இல்லாமல் காய்ந்து போய்க் கிடக்கும் நிருபரை அழைத்துக் கொண்டு போய், சமூக சேவை செய்வதாகவோ,ஏழைகளுக்கு உதவும் நற்பணிகள் செய்வதாகவோ காட்டி படம் பிடிக்க வைத்து, எப்படியோ ஒரு பத்திரிகையில் வர வைத்தும் விடுவார்கள். நாம் தான்...........ஆயிற்றே, பரம விசிறியாகி, நடிகையின் படத்தை வீடு முழுவதும் ஒட்டி வைத்து விடுவோம் இல்லையேல் கோயில் கட்ட, ரசிகர் மன்றம் ஆரம்பித்து விடுவோம். ஆனாலும் அடுத்த வாரமோ அந்த நடிகையின் குடியும் குடித்தனத்தையும் அம்பலப்படுத்தி விடுவார் வேறொரு நிருபர். நமக்குத் தான் அது எதுவும் ஏறாதே. எத்தனை ஆதாரங்கள் கொடுத்தாலும் கண்ணை மூடிக் கொண்டு கட்டித் தொங்குபவர்களாயிற்றே. இல்லையேல் இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆரியர் சொன்ன பொய்களின் மேல் கோயில் கட்டி குடியிருப்போமா? ஆனாலும் தங்களை புனிதர்களாக்கிக் கொண்ட நடிகர்கள், தேர்தலின் பொது ராஜ பவனி வந்தார்கள். என்ன பேச்சு,எத்தனை பொய்,என்ன நடிப்பு. இந்த குஷ்புவும் வடிவேலுவும், ஐயோ பாவம், மக்கள் குப்பையில் தூக்கிப் போட்டு விட்டார்கள். இன்னமும் எழும்ப முடியவில்லையாமே!.கிக்கு என்று சொல்லி ஜெயம் ரவி தில்லாலங்கடி வேலைகள் செய்வார். அதே போல் தில்லாலங்கடி வேலையை வடிவேலுவும் செய்வார்.குப்புற விழுந்தது ரவியா இல்லை வடிவேலுவா? படத்தில் தாங்க!
இறைவன் சன்னிதியில் அனைவரும் சமம் என்று ஜனநாயக சமதர்மம் பேசுவோம். சாதி,இனம்,மதம்,ஏழை,பணக்காரன்,உயர்ந்தவன் தாழ்ந்தவன்,விபச்சாரம் என்று அனைத்துமே இந்தக் கோயிலில் தான் கொடி கட்டிப் பறக்கும். அரசியல்வாதிகளுக்கும்,பணம் படைத்தவர்களுக்கும்,நடிகர்களுக்கும்,அதிகாரிகளுக்கும்,VIP களுக்கும் இந்த சாமி சன்னிதியில் தான் தனியான பூசை,தனியான பகுதி.கடவுளின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டிய அர்ச்சகர்கள், தலை குனிந்து காலில் விழுவது ஏன்?பெண்களும்,நடிகைகளும் சாமியார்கள் காலில் விழுகிறார்கள்.ஆனால் சாமியார்களோ VIP களின் கால்களில் விழுகிறார்களே. ஆமா உங்களை ஒன்று கேட்க வேண்டும். இராமன் கடவுள் அவதாரம்,செய்ததெல்லாம் சரியானது என்றால்,நம் பாட்டன் வள்ளுவன் ஏன் கடவுளைப் பற்றி, நாத்திகன் போல் குறள் பாடி முடித்தான். இராமனுக்கு பின் வந்த வள்ளுவன்,ராமா ராமா என்று நூறு வேண்டாம், பத்து குறள் பாடியிருக்க வேண்டாம்? வரலாற்று ஆய்வாளர்களினதும்,ராமபக்தர் அகரமாங்குடியாரின் கருத்துப்படியும் இராமன் தெற்குக்கு வரவில்லையா? அதனால் தான் வள்ளுவருக்கு தெரியாமல் போனதா? இல்லை இராம காதை பொய்யானதா?
கடமையை செய் என்றால்,இது எல்லாம் என் விதி, என்று ஒன்றும் செய்ய முடியாது என்று தூங்கி விடுகிறோமா இல்லையா? நம்மால் செய்ய முடிந்தால்,நம் திறமைக்கு நாமே பட்டங்களும் விருதுகளும் கொடுத்து விடுகிறோம். செய்ய முடியா விட்டால் விதி என்று தப்பித்துக் கொள்கிறோம்.தப்பித்துக் கொள்கிறோமா இல்லை, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோமா? மற்றவர்களைத் தான் ஏமாற்றுகிறோம்,நம்மை நாமே ஏமாற்றுவது வேடிக்கையாக இல்லை?
எந்த மதத்தையும் கடவுள் படைக்காத போதும், நாமே மதத்தை படைத்து,நாமே போதனை செய்து,நாமே பிரச்சாரம் செய்து,நாமே மதத்திற்காக வக்காலத்தும் வாங்கி,நாமே மத மாற்றமும் செய்கிறோம். கடவுள் ஒருவனாக இருந்தால் அவனுக்கு ஏன் மதம்? கடவுளை அடைவதற்கு மதம் தேவையா? இங்கே தான் கடமை வருகிறது.நல்லதை செய்,நல்லதை பேசு,நல்லதை பார். நல்லவர்களாய், நல்ல சமுதாயத்தை உருவாக்க நாம் செய்ய வேண்டிய கடமை இதுவல்லவா? அப்படியானால் மதமே இல்லாது இறைவனை வணங்கலாமே.எதற்கு இந்த வெறியாட்டம், கலவரம், போர்? மத மாற்றம் செய்பவன் உண்மையிலேயே, கடவுளுக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் பயங்கரவாதியே.
கோயில்களுக்கு தங்களை மிகப் பெரிய பக்தர்களாகக் காட்டிக் கொண்டு சிலர் வருவார்கள். பிரசாதம் பெற்றதும் என்ன செய்வார்கள் என்று பார்த்திருக்கிறீர்களா? இரண்டு கைகளாலும் பணிந்து வாங்கும் திருநீற்றை, எங்கோ ஒரு மூலையில் போடுவார்கள். சந்தணம்,குங்குமம் இருக்கவே இருக்கிறது,கண்ணை மூடிக் காத்திருக்கும் அப்பாவி கோயில் சுவர்கள், அதை, பிக்காசோவின் எதிர்வீட்டுக்காரர்கள் என்ற நினைப்பில், பல வர்ண கோலங்கள் போடுவார்கள். உங்களை பற்றி சொல்லவில்லை என்று நெஞ்சை நிமிர்த்தி வீரநடை போடாதீர்கள்.நீங்களும் தான் வர்ணப் படங்கள் வரைவதில் திறமைசாலிகளாயிற்றே.பிரசாதம் என்று எத்தனை வரும். ஒரு மூலையில் குடும்பத்தோடு இருந்து ஒரு பிடி பிடிப்போம். வெளியே காத்திருக்கும் ஏழைகளுக்கோ,பிச்சைக்காரர்களுக்கோ கொடுத்தால் குறைந்து விடுவோமா? அவர்களும் இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் தானே! ஆனாலும், சிநேகிதியே... என்று பாடிக் கொண்டு யாராவது வந்தால், வீட்டிற்கு கூட்டிக் கொண்டு போய், பெற வேண்டியதை எல்லாம் பெற்று விட்டு, சொறியையும்,நோயையும் விவேக்கைப் போல் வாங்கிக் கொள்வோம். இங்கே மட்டும் எந்த வித்தியாசமும் பார்க்கவே மாட்டார்கள்.
இதை விட வேறு ஒரு வேடிக்கை சொல்லட்டுமா? நீங்கள் கேட்கத் தயாரானால்? ஒரு பெரும் போதனையாளர்,சரியாகப் படியுங்கள்,சாதனையாளர் அல்ல,மேடைகள்,தொலைக்காட்சி,வெளிநாடுகள் என்றெல்லாம் போய் பெயர் வாங்கியவர்,சில மாதங்களுக்கு முன்னாள் ஒரு கோயிலில் பார்த்தேன். கோயில் காரியங்கள் எல்லாம் முடிந்து தட்டுக்களுடன்,பிரசாதங்களுடன் வெளியே வருகிறார். ஐயா என்று, என்னைத் தவிர, பலர் வணக்கம் போட்டு மரியாதை செலுத்துகிறார்கள். மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர் காருக்கு செல்கிறார். சில குழந்தைகள் ஓடிச் சென்று கையை நீட்டுகின்றனர். அந்த தருமவான், பிச்சை எடுக்க வெட்கமாக இல்லை, என்று நல்ல தமிழில் சொல்லி விட்டு, காரில் ஏறி சென்று விடுகிறார்.பிரசாதத்தை கொடுத்திருக்கலாமே என்று கேட்காதீர்கள்.அந்தப் பொங்கலும், மோதகமும், வாழைப்பழமும் இறைவன் தந்த பிரசாதம்,எனக்கே எனக்கு மட்டும் தான், என்று அவர் நினைத்தாரோ என்னவோ,யாம் அறியோம் பராபரனே!. ஐயோ பாவம் என்று என் வாய் முணுமுணுத்தது,அவரைப் பார்த்தல்ல,பின்னால் பார்த்துக் கொண்டு நல்லவராக கண்ணை மூடிக் கொண்டு இருக்கும் கடவுளையும், அந்தக் குழந்தைகளையும் பார்த்து.
மனிதனுக்காக இறைவன் இந்த உலகை,இயற்கை வளங்களைப் படைதிருக்கிறான் என்று மத போதகர்கள் விளாசித் தள்ளுவார்கள். ஆனாலும் இயற்கை வளங்களை அழிப்பதில் முதலில் நிற்பவர்கள் அவர்களாகத் தான் இருப்பர்ர்கள். ஆமா, ஒமா என்று வாயைப் பிளக்காதீர்கள். ஆறடி கூட வளர முடியாதிருக்கும் இந்த மனிதனுக்காக, உலகை படைக்க, கடவுள் என்ன முட்டாளா? கிரகங்களை பற்றியே தெரியாத இந்த மனிதனை, சோதிடம் என்று சொல்லிக் கொண்டு இல்லாததையும்,தெரியாததையும், கண்ட கண்டபடி சொல்லித் திரிகிறானே இந்த மனிதனை,முக்காலமும் தெரிந்த சோதிடர்கள்,கணித விற்பன்னர்கள் என்று கூறித் திரியும் இந்த மனிதனை பற்றி,அந்த மகாமேதையான சோதிடனைப் படைத்த கடவுளுக்கு, தெரிந்து கொள்ள முடியாமல் போனதா, இல்லை கடவுளின் சக்தி அவ்வளவுதானா? மனிதன் இப்படித்தான் இருப்பான்,இப்படித்தான் நடப்பான், இப்படித்தான் அக்கா, தங்கை, குழந்தைகள், மனைவி, அம்மா என்று யாரையும் கண்டு கொள்ளாது பலாத்காரம் செய்வான் என்றெல்லாம் தெரியாதவரா கடவுள். இவற்றை எல்லாம் தெரிந்து கொண்டு இந்த மனிதனுக்காக இந்த அழகிய இயற்கையையும்,உலகத்தையும் படைத்திருப்பானா? இந்த குட்டை மனிதனுக்காக, நினைத்தே பார்க்க முடியாத பிரபஞ்சத்தை படைதிருப்பானா? ஏங்க! இப்படி ஏமாத்துறீங்க?
இந்த உலகை சொர்க்கமாக்க வருகிறார் இறைவன், என்று புத்தகங்களுடன் அலைகிறது ஒரு கூட்டம், இணையங்களில் பாடாய் படுத்துகிறது ஒரு கூட்டம், மேடைகளிலும் தொலைக்காட்சிகளிலும் சரிகைத் துண்டுகளை போட்டுக் கொண்டு போதனை செய்கிறது ஒரு கூட்டம், ஆச்சிரமங்களில் அட்டகாசம் நடத்துகிறது இன்னொரு கூட்டம். உடலில் வலு இருக்கும் வரை உழைப்பது தானே கடவுள் சொன்ன கடமை. ஏன் உழைக்காமல்,பக்தர்கள் பணத்தில் ஆச்சிரமம் கட்டி உல்லாச வாழ்வு வாழ்கிறார்கள் இந்த சாமிகள் கூட்டம்? மக்களுக்கு நல்லது சொல்ல பட்டு பீதாம்பரம் வேண்டுமா? அரச வாழ்வை துறந்தாரே புத்தர்,ஒற்றைத் துண்டுடன் மக்களுக்காக உலகம் சுற்றினாரே மகாத்மா, ஒற்றைத் துண்டுடன் கட்டிய மனைவியை தாயாக்கி தவம் செய்தாரே இராமகிருஷ்னர், தாயாக, ஏழைகளை குழந்தைகளாக்கி மகிழ்ந்தாரே அன்னை தெரேசா, பணத்திற்காக போதனையா,இல்லை போதனைக்காக பணமா? நாம் இன்னமும் போலிகளை பொக்கிசங்களாக பார்க்கிறோமே, மாறமாட்டோமா? மனிதன் மாறவில்லை,மதத்தில் தான் ஏறி விட்டான்.
உலகிலேயே மிகப் பயங்கரவாதி யார் என்று ஒரு மனிதநேயம் படைத்த ஒரு அமெரிக்கரிடம் கேட்டார்களாம். அவர் சிறிது நேரம் யோசனையில் இருந்து விட்டு, ஜோர்ச் புஷ் என்றாராம். அவரிடம் விளக்கம் கேட்டார்கள். மனிதனுக்கு பயன்படக் கூடிய,மனிதனைக் காப்பாற்றக் கூடிய எத்தனையோ பொருட்கள் இருக்க, ஆயுதங்களை உற்பத்தி செய்யவும்,தேங்கிக் கிடக்கும் ஆயுதங்களை விற்கவும்,எண்ணைக்காவும்,பயங்கர ஆயுதங்கள் இருப்பதாக உலகை ஏமாற்றி, போர் நடத்தி சதாமை தூக்கில் ஏற்றினாரே, அவர் தான் உலகிலேயே மிகப் பெரிய பயங்கரமான பயங்கரவாதி என்று புன்சிரிப்புடன் பதிலளித்தாராம் அந்த அமெரிக்கர்.அமெரிக்காவில் உள்ள ஆயுத தொழிற்சாலைகள் முற்றாக மூடப்படும் வரை உலகில் பிரச்சனைகள் தீர்க்கப்பட மாட்டாது,எங்கோ ஒரு மூலையிலாவது போர் நடந்து கொண்டே இருக்கும் என்கிறார் அவர்.
நல்ல பொருட்களை கூவிக் கூவி விற்பார் விவேக்.யாரும் அந்தப் பக்கமே வர மாட்டார்கள். எதிரே கல்லாப்பட்டி சிங்காரம் போல் ஒரு பெண்,கெட்டுப் போன வேண்டாத பொருட்களை எல்லாம் விற்பாள், கூட்டமோ கூட்டம். ஏன்?
செத்துப் போக யார் தான் விரும்புவார்கள். வாழ்வே முடியும் கடைசி நாளில் கூட, இன்னும் ஒரு நாள் வாழக் கூடாதா என்று ஆசை வரும். சதாம் ஹுசேன் முகத்தை மூட வேண்டாம் என்று சொல்லி சாவை எதிர்த்து நின்று செத்தாராம். எல்லோருக்குமே வாழ ஆசை தான். ஆனால் ஏனோ மற்றவர்களை வாழ விட மாட்டோம் என்கிறோம்?உயிரினங்கள் அனைத்துக்கும் இனத்தை விருத்தி செய்வது முதல் கடமையாகும். அந்த வேலைக்கு அவன் தகுதியற்றவனாகும் போது முதுமை அடைகிறான்.அதன் பின் அவனுக்கு இந்த உலகில் இடமில்லை. இதுவே இயற்கையின் தத்துவம்.
தெரு நமக்கு மட்டுமே சொந்தம் என்று, முழுத் தெருவையும் நமக்காக்கி கொண்டு, அட்டகாசமாகி தெருவிலே பவனி வருவோம். இந்த உலகம் நமக்காக மட்டுமே படைக்கப் பட்டது என்று எண்ணிக் கொண்டு மற்றவர்களை அழித்து விட்டு, நாம் மட்டுமே வாழ நினைப்போம். ஏன்? தெருக்கள் நமக்கு மட்டும் சொந்தமுமல்ல, விபத்தினால் கொல்லப்படும் உயிர்களும் நம்முடையது அல்ல.மற்றவர்கள் இல்லாமல் நம்மால் வாழ முடியாது என்பதை ஏன் மறந்து விடுகிறோம்?
மீண்டும் அடுத்த வாரம் மற்றொரு சிந்தனையுடன்.......... Dr. சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

சமூகத்தின் கறைகள் துகிலுரிப்பு-16 உலகிலேயே மிகப் பெரிய பயங்கரவாதி Empty Re: சமூகத்தின் கறைகள் துகிலுரிப்பு-16 உலகிலேயே மிகப் பெரிய பயங்கரவாதி

Post by mmani Fri Aug 19, 2011 7:36 pm

உள்ளதைச் சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையால் மறைக்கும் கபடம் தெரியாது
அறிவிப்பு
நன்றி .தொடரட்டும் உங்களின் பதிவுகள்
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சமூகத்தின் கறைகள் துகிலுரிப்பு- இரும்புக்காது
» சமூகத்தின் கறைகள் 17 நீங்க வயதிற்கு வந்திட்டீங்களா? அப்போ படியுங்க
» சமூகத்தின் துகிலுரிப்பு 19 மாணவிகளின் பேயாட்டமும் பாவமன்னிப்பும்
» சமூகத்தின் கறைகள் 15 ஆண்மைக்குறைவும்,பெண்மைக்குறைவும்
» சமூகத்தின் குறைகள் துகிலுரிப்பு 21 பெண் ஒரு போதைப்பொருள்,சிதம்பரத்தில் யார் வழிபடலாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum