TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


சமூகத்தின் குறைகள் துகிலுரிப்பு 21 பெண் ஒரு போதைப்பொருள்,சிதம்பரத்தில் யார் வழிபடலாம்

Go down

சமூகத்தின் குறைகள் துகிலுரிப்பு 21 பெண் ஒரு போதைப்பொருள்,சிதம்பரத்தில் யார் வழிபடலாம் Empty சமூகத்தின் குறைகள் துகிலுரிப்பு 21 பெண் ஒரு போதைப்பொருள்,சிதம்பரத்தில் யார் வழிபடலாம்

Post by sakthy Fri Sep 09, 2011 4:50 pm

சமூகத்தின் துகிலுரிப்பு 21 பெண் ஒரு போதைப்பொருள்,விடுதலை தேவையா?சிதம்பரத்தில் யார் வழிபடலாம்.
உள்ளதைச் சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையால் மறைக்கும் கபடம் தெரியாது.

கடவுள் என்றும் அவதாரம் எடுத்திருக்க முடியாது என்றேன். மனிதனை கடவுளாக்கக் கூடாது என்றேன். கடவுளை வைத்து இயக்கப்படும் மூட நம்பிக்கைகள் கூடாது என்றேன். பிறப்பை நம்மிடம் விட்ட இறைவன், இறப்பை நம்மிடம் விடவில்லை,அதனால் சோதிடம் சொல்லும் தோஷங்கள் பொய் என்றேன். அதற்காக நான் நாத்திகன் என்று கூற முடியாது. உண்மையில் மனிதனை கடவுள் அவதாரமாக்கி வணங்கும் கூட்டமே நாத்திகர்கள். யார் ராம நாமம் ஓதுகிறார்களோ அவர்கள் நாத்திகர்கள்.
நான் கடவுளை நம்புகிறேன்,ஆனால் கோயிலுக்கு போவதில்லை. நடிகர் சிவகுமார் கோயிலுக்கு போவதில்லை என்றார். ஆனால் அவர் சொல்லும் காரணமும் என் காரணமும் ஒன்றல்ல.கோயிலில் தமிழ் அர்ச்சனையும் இல்லை தமிழும் இல்லை. .அர்ச்சகர் என்ன ஓதுகிறாரோ யாருக்குத் தெரியும். நீங்கள் பலர் காலையில்,விசேட தினங்களில் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சுப்பிரபாதம் அல்லது கந்தசஸ்டிக்கவசம் கேட்பீர்கள்.இந்த சி.டி.க்கள் ஒன்றாவது ஒரு தவறும் இல்லாமல் பாடப்பட்டுள்ளனவா? தேவராஜ சுவாமிகள் ஆறு வெவ்வேறு கோயில்களை வைத்து ஆறு கவசங்களைப் பாடினார்.அவற்றுள் மிகப் பிரபலமானதும் பலராலும் கேட்கப்படுவதும் கந்தசஷ்டிக்கவசமாகும்.பத்திற்கு மேற்பட்டவர்களால் பாடப்பட்டு சி.டி வடிவில் வந்துள்ளது இதுவரை ஏழு சி.டி.க்களை கேட்டிருக்கிறேன் ஒரு பிழையாவது இல்லாமல் பாடப்பட்டது எதுவும் இல்லை. அப்படி இருக்கும் போது சமஸ்கிருத தோத்திரங்கள் எப்படி பிழை இல்லாமல் பாடப்பட்டிருக்கும்,எப்படி பிழை இல்லாமல் அர்ச்சகர்களால் ஓதப்படும். தவறான தோத்திரங்களால் கடவுளை நிந்திக்க எனக்கு இஷ்டமில்லை. ஒரு தவறும் இல்லாமல் பாடப்பட்ட கந்தசஷ்டிக்கவசம் இருந்தால் சொல்லுங்கள்.நமச்சிவாய(நமசிவய)ஓதும் எத்தனை குறுந்தகடுகள்,ஒன்றாவது சரியாக உச்சரிக்கப்பட்டுள்ளதா?
தமிழர்களின் வேதம் அல்லாத ஆரிய வேதங்களை வைத்து நாம் இன்று கூட்டம் போட்டு கொண்டாடுகிறோம். தமிழர்களின் நான்கு வேதங்கள் அறம் பொருள் இன்பம் வீடு என்பதை அடிப்படையாக வைத்து விளக்கும்,பத்துப்பாட்டு,எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு ஆகும்.இத்துடன் திருமந்திரத்தையும் வேதநூலாக பார்க்கிறார்கள். ஆனாலும் திருமந்திரம் ஆன்மீக நூல் மட்டுமல்லாது மருத்துவ நூலாகவும், யோகநூலாகவும் இருந்துவருவதை அதைப் படித்தால் புரிந்து கொள்ளலாம். வேதத்தை தொகுத்தவரும்,மகாபாரதத்தையும் கீதையையும் எழுதியவரும் வேதவியாசர் என்பது நாம் அறிந்ததே.இவர் காலம் கி.பி. 7 ஆகும்.ஆனால் அதற்கு முன்னர் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்ட தொல்காப்பியம் நான்மறை பற்றி கூறுகிறது.ஆரியர்கள் வந்தது கி.மு.2000 ற்கு பின் என்றால்,வேதகாலம் கி.மு.1500 க்குப் பின்னர் வாய் மொழியாக சொல்லப்பட்டு வந்தது என்றால்,வேத வியாசர் தந்தது கி.பி. 7 என்றால்,ஆரியர்களே வராத காலத்தில்,கி.மு.3000 ற்கு முற்பட்ட தொல்காப்பியம், எப்படி ஆரிய நால்வேதத்தைப் பற்றி கூறி இருக்க முடியும்? தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆரிய அந்தணரான, நச்சினார்க்கினியர் தொல்காப்பியத்தில் சொல்லப்பட்ட நான்கு வேதம் ஆரிய வேதம் அல்ல என்று கூறுகிறார்.ஆனாலும் நாம் இல்லை இல்லை என்று, நாம் பிடித்த முயலுக்கு....என்று தொங்கிக் கொண்டிருக்கிறோம் ஏன்?
....நிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து அறம் கரை நாவின் நான்மறை
முற்றிய.....என்று தொல்காப்பியம் கூறுகிறது.
வேதம் சிறு தெய்வங்களைப் பற்றி கூறுகிறது.சிவனைப் பற்றி எதுவும் கூறவில்லை,மாறாக நிந்தனை செய்கிறது.தமிழர்கள் கி.மு.5000 ற்கு முன்பிருந்தே சிவனை வழிபட்டு வந்துள்ளதாக மொகெஞ்சதாரோ ஆய்வுகள் கூறுகிறது.கி.மு.5000 ற்கு முற்பட்ட தமிழர்களின் சிவனை வணங்கிய இறைவணக்கம்,சிவனைப் பற்றியே சொல்லப்படாத ஆரிய வேதம், எப்படி தமிழர்களின் வேதமாக இருக்க முடியும்? தமிழன் தன்னால் காண முடியாத கடவுளுக்கு உருவம் கொடுக்காது,தன்னால் அறிய முடியாத இறைவனை பற்றிய பொய்யான கருத்துக்களையும்,மூட நம்பிக்கைகளையும் சமூகத்தில் வைக்காது,தான் வாழும் உலகில்,இறைவன் படைத்த இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் இறைவனை அடைய முடியும் என்று நம்பினான். அதன் விளைவே அவன் அறம்,பொருள்,இன்பம்,வீடு என்று ஒரு தத்துவத்தை,விதியை உருவாக்கினான். இந்த இயற்கை விதிகளை மீறி நாம் நடந்து கொள்ளும் போது கடவுளை நாம் நிராகரிக்கிறோம் என்பதே, இந்த வாழ்வியல் தத்துவமாகும்.
நீ உன் அலுவலகத்தில் அல்லது வேறு எங்காயினும் உண்மையாக உழை.உனக்கு கிடைக்க வேண்டியவை அனைத்தும் கிடைக்கும் என்கிறது தமிழ்மறை. ஆனால் ஆரிய மறையின் தத்துவம் எப்படி? நீ உழைக்காவிட்டால்,உண்மையாக இருக்காவிட்டால் பரவாயில்லை,ஆனால் சிபார்சு செய்,லஞ்சம் கொடு,வன்முறை செய்,ஊழல் செய்,வேண்டுமானால் கொலையையும் செய், அதனால் உனக்கு பலன் உண்டு என்று நான் சொல்லவில்லை,ரிக்வேதம் சொல்கிறது. எதை செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? தமிழன் வேதம் சொல்லுவதையா இல்லை ஆரிய வேதம் சொல்வதையா?நீங்கள் தமிழர்களாக இருந்தால் தமிழன் வேதத்தை பின்பற்றுங்கள். தமிழனின் மறையான திருக்குறளில் இவை நன்றாகவே சொல்லப்பட்டுள்ளது. இயற்கையுடன் இணைந்த தமிழ்மறை, இயற்கைக்கு மாறான பிரமச்சாரியம்,துறவு போன்றவற்றை ஏற்கவில்லை. அப்போது தமிழர்கள்,அரசர்கள் துறவறம் போனார்களே, ஏன் என்று கேட்பீர்கள். நன்றாக கவனியுங்கள். ஆரிய வேதத்தை பின்பற்றிய,பின்பற்றும் முனிவர்கள்,சாமியார்கள், மனைவியை தனியே தவிக்க விட்டு விட்டு துறவறம் என்று சொல்லிக் கொண்டு காட்டுக்கு ஓடினார்கள்.அங்கே எப்படி நடந்தார்கள் என்பதை நான் சொல்லியா தெரிய வேண்டும்.விசுவாமித்திரன் மேனகையில் மயங்கினான்,அப்புறம் கேட்க நாதியில்லாமல் தறி கெட்டு திரிந்தார்கள். அதே சமயம் தமிழர்கள் துறவு பூண்ட போது தங்கள் மனைவியருடனே தான் சென்று காட்டில் அமைதியை நாடினார்கள்.கட்டிய மனைவியை தவிக்க விட்டு செல்லவில்லை.
ஆரிய வேதங்களில் அறம் உணர்த்தப்படவில்லை.மாறாக சிறு தெய்வ வழிபாடும்,தங்களின் வேள்வி,யாகங்களுக்கு தடையாக இருந்த தமிழர்களை அழிக்க தெய்வங்களை வழிபட்ட செய்திகளுக்குமே(Rigvedha உ+ம்-31.3,4; 51.8) முதலிடம் தரப்பட்டுள்ளது.ஆனால் தமிழர்களின் அனைத்து சங்ககால நூல்களும் அறநெறிக்கு முதலிடம் தந்ததை காணலாம். இந்த அறங்களை நிலை நிறுத்தி,சிவனை வழிபட்டு வந்ததால் தமிழர்களின் மதம் சைவம் என்றாயிற்று.
இது தவிர ஆரியர்கள் புலால் உண்பதும், சோமபானம் என்பது போன்ற மதுபானங்களை, இப்போதும் கூட, அருந்துவதையும் வழக்கமாக கொண்டிருந்தனர்.கல்கத்தாவில் உள்ள பார்ப்பணர்கள் புலால் உண்பதை பார்த்தேன்.தமிழர்களிடம் இவை இருக்காததும், அதற்கு தமிழர்கள் தடையாக இருந்ததையும்,அந்த தடையில் இருந்து விடுதலை பெற ஆரியர்கள் சிறு தெய்வங்களை வழிபட்டதையும், ரிக் வேதம் காட்டுகிறது.சமஸ்கிருதம் தெரியாதவர்கள், வேண்டுமானால் நேரடியாக Griffith என்பவரால் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில ரிக் வேதநூலை பார்க்கலாம்.கூடவே இராமாயணத்தை உருவாக்கி தமிழர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தவும் முற்பட்டது ஆரியம். தமிழர்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்ற சிறிது பணிவையும் காட்ட ஆரம்பித்ததன் விளைவு, தமிழர்கள் மத்தியில் இருந்த ஆரியர்கள், புலால்,மது போன்றவற்றை தவிர்க்க முற்பட்டதும்,மிருகங்களை கொல்வதை குறைத்து தானமாக கொடுக்கும் முறையையும் கொண்டு வந்தார்கள். இந்த தானம் கொடுக்கும் முறை இன்றும் நடைமுறையில் உள்ளது. ஆனாலும் ஆரியர்களிடம் உள்ள கொடுமையான ,யாகம் அசுவமேதயாகம்(Rigvedha 103.9; 163.12 போன்ற உதாரணங்கள்) ஆகும்.இது அரசர்கள்,பணம் படைத்தவர்கள் மட்டுமே செய்யக் கூடிய யாகமாகும். குதிரையை பலி கொடுத்து உணவாக்கிய கொடுமை வேறு எந்த மதத்தில் உள்ளது சொல்லுங்கள்?ஆனாலும் இன்று அதை, கொல்லப்படவில்லை தானமாகவே கொடுக்கப்பட்டது என்கிறார்கள்.
இந்த சமயத்தில், பெண்கள் சிந்திக்க வேண்டியது ஒன்று, திருமணத்தின் போது உள்ள கன்னிகாதானம் போன்ற சடங்குகள் பெண் அடிமைத்தனத்தை வலியுறுத்துகின்றன. பெண்விடுதலை கேட்கும் பெண்கள் இன்றும் இந்த கன்னிகாதானத்திற்காக ஆரிய முறை திருமணங்களுக்கு உடன்படுவது ஏன்? தங்களை போதைப்பொருள் என்று இன்றும் பெண்கள் நினைக்கிறார்களா?பொருளை தானமாக கொடுப்பது சரி,ஆனால் மனிதனை தானமாக அதாவது அடிமையாக கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்?தமிழர்களில் சங்ககாலம் தொட்டு எத்தனை பெண் புலவர்கள்,பாடகர்கள்,அரசாண்ட பெண்கள்,படைத் தளபதிகள் இருந்தார்கள்.ஆனால் ஆரியர்களிடம்?,வீட்டிற்குள் பூட்டி போதைப் பொருள் ஆக்கி வேடிக்கை பார்த்தனர். ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் கூட ஆரம்பத்தில் சில ராகங்களை பெண்கள் பாடக் கூடாது என்று தடை விதித்திருந்தார்கள். கோயிலில் கர்ப்பக்கிரகம் வரை செல்ல ஆரிய வேதம் அனுமதித்ததில்லை. பெண்கள் சில இயற்கை உபாதைகள் காரணமாக கோயில்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அது பெண்களுக்கு மட்டும் தானா இல்லை ஆண்களுக்கும் உண்டா? திடகாத்திரமான ஆண்களுக்கும் சில சமயங்களில் இந்த உபத்திரவம் வருவதுண்டு.ஏன் மிருகங்களுக்குக் கூட உண்டு.அப்படியானால் ஆண்களுக்கு அந்த நாட்களில் கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்படுகிறதா? பெண்களை மட்டும் பிரித்து அடிமைகளாக ஆக்கியது ஆரிய மதக்கொள்கைகள்.
யோகம் பற்றி எழுதிய நூலைக் கூட ஆரியதாசர்கள் தங்களது ஆக்கிக் கொண்டார்கள்.யோகம் பற்றி மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருமந்திரமும்,உடலின் எட்டு உறுப்புக்கள் பற்றிய யோகத்தை தொல்காப்பியமும் ஏற்கனவே தெரிவித்து விட்டன. யோகம் எழுதிய பதஞ்சலி கி.பி.7 ளில் வாழ்ந்தவர் என ஆய்வாளர்கள் வூட்ஸ் சும் ஜகோபியும் தெரிவிக்கிறார்கள். அப்படியானால் யோகம் எப்படி ஆரியநூலாக முடியும்? கி.பி.இரண்டில் வாழ்ந்த பதஞ்சலி மகாபாஸ்சியம் நூலை தொகுத்தவர்.இவரும் யோகா பதஞ்சலியும் ஒருவரல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சங்ககாலம் முதல் ஒன்பது ஔவையார்கள் வாழ்ந்திருந்தனர். அறம் செய்ய விரும்பு தந்தவர், அவர்களில் ஒருவர். இவர்களை விட கே.பி.சுந்தராம்பாள், பிரியதர்சணி,ஜூனியர் சூப்பர் ஸ்டார் ஸ்ரீனிசா போன்றோர் ஔவையார் படப்பாடல்களை பாடிய நவீன ஔவையார்கள்.
இங்கே என் தலைக்குள் நண்டு ஒன்று பிராண்டுகிறது.தமிழ் இலக்கணத்தின்படி சில
விதிகள் உண்டு. நக்கீரன்,சங்ககால இலக்கண நூல்கள் முதல், இருந்து வரும் இந்த விதிகளை இந்த சூப்பர் சிங்கரில் நடுவர்களும்,தொலைக்காட்சியினரும் மீறி விட்டார்கள் என்று தோன்றுகிறது. போட்டி முடிவதற்கு முன் வெற்றி பெற்றவரை தெரிவு செய்து விட்டார்களோ என்ற எண்ணம் என்னுடையது மட்டுமல்ல, பலரின் கருத்தாகவும் இருக்கிறது. வேலைக்கு தெரிவு செய்ய நேர்முகப்பரீட்சைக்கு அழைப்பார்கள். அதற்குள் சிபார்சு மூலம் ஒருவர் தெரிவு செய்யப்பட்டு விடுவார். நேர்முகப்பரீட்சைக்கு சென்றவர்கள் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு கவலையுடனும்,திட்டித் தீர்த்துக் கொண்டும் திரும்புவார்கள்.அது போலவே இந்த போட்டி நிகழ்ச்சியிலும் முன்னரே வெற்றியாளர் தெரிவு செய்யப்பட்டு விட்டார் என்பதே சந்தேகம். இதற்கு நடுவர்களும் துணை போனார்களே!
தமிழ் இசை இலக்கண விதி என்ன சொல்கிறது?சொற்குற்றம்,பொருட்குற்றம்,இலக்கணக்குற்றம் என்ற மூன்று குற்றங்களை எவரும் செய்யக் கூடாது.இதையே நக்கீரனும்(குறுந்தொகை-2) நெற்றிக் கண்ணை காட்டினும் குற்றம் குற்றமே என்று வாதிட்டான். இலக்கணக்குற்றத்தை கடைசியில் வைத்ததற்குக் காரணம், அகப் புறச் சூழல். பாடி என்னத்தை கிழித்தாய், என்று வீட்டில் மனைவி தர்க்கம், ,அம்மாவின் வழக்கமான பாட்டு,வரும் வழியில் ஏதாவது,உடல் வருத்தம் இப்படி பல காரணங்களால் தாளம் சுருதி தவறலாம். ஆனால் உச்சரிப்பு,சொல்,பொருள் குற்றம் வரவே கூடாது. தமிழை வடிவேல் போல் தமில் என்றோ,சென்னை தமிழிலோ, ழ,ள,ல,ண,ன,ற,ர வேறுபாடு இப்படியான குற்றங்கள் கூடவே கூடாது. அரசியின் கூந்தல் எந்த நாற்றம்? நாற்றம் என்பது நல்ல வாசனை,எதிர்ச்சொல் துர்நாற்றம் என்பதாகும். நாம் எப்படி பயன்படுத்துகிறோம்? கூவம் நாற்றமா இல்லை துர்நாற்றமா? சிப்பு சிப்பா வருகிறது.
இவற்றை நடுவர்கள், தொலைக்காட்சியினர் கவனிக்காது தீர்ப்பளித்தது கண்டிக்கத்தக்கதாகும். எத்தனை சொற்,பொருட் குற்றங்கள், ஏன் தெரிவு செய்யப்பட்டார்?குரலுக்கும்,இலக்கணத்திற்கும் முதலிடம் தருவது இலக்கண மரபுப்படி தவறாயிற்றே.நல்ல தமிழ் உச்சரிப்பில் பாடிய ஸ்ரீனிசா மற்றும் குழந்தைகள் விலக்கப்பட்டது ஏன்? குட்டித் தங்கை ஸ்ரீனிசா உட்பட அனைத்து குழந்தைகளுக்கும் என் அனுதாபங்கள்.
ஈழத்தின் பல பகுதிகளில் சோழர் கால பழம்பொருட்கள் முன்பும் தற்போதும் கண்டெடுக்கப்பட்டு வருகிறது.அப்படி இருந்தும் சிங்களமும், பௌத்த குருமார்களும் அவை எல்லாம் சிங்கள மன்னர்களின் பொருட்கள் என்று கூறி வருவதைப் போலவே ஆரியதாசர்கள் தமிழர்களின் பெரும் சொத்துக்கள் எல்லாம் ஆரியம் தந்தவை என்று சொல்லி வருவதில் வியப்பென்ன இருக்கிறது.
வேதங்களில் சில இடங்களில் பாடியவர்கள் பெயர்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, பாடியவர்கள் பரத்துவாசர்,மனுச்சந்தைசுவாமித்திரர் என்றிருக்கிறது.வேதம் இறைவனால் சொல்லப்பட்டதாயின் ஏன் எழுதியவர் பெயர் அங்கே வர வேண்டும்?

சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலை தொடக்க காலத்தில் தில்லைப்பொது, என்று அழைத்தார்கள்.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வணிகத்திற்காக எகிப்தியரும்,கிரேக்கரும்,அராபியரும் தமிழ்நாட்டிற்கு வந்த காலத்தில்,கோயில்கள் ஆரம்பிக்கப்பட்ட காலம்,இஸ்லாம் கிறிஸ்தவம் இல்லாத காலம் வெளிநாட்டவர்கள் தங்கள் கப்பல்களை திருத்தவும்,பொருட்களை வாங்க விற்கவும் பல மாதங்கள் ஆனதால்,எல்லா மதத்தினரும் இறை வணக்கம் செய்யும் வகையில் வணிகர்கள், தில்லை வனத்தில் பொது வழிபாட்டு கோயிலை,வெளிநாட்டவர்களின் கடவுள்களின் உருவங்களை அமைக்க முடியாமற் போனதால், ஆகாயத்தை நோக்கி வணங்கும் முறையில் ஏற்படுத்தினார்கள். தமிழ் மன்னர்கள் ஆரியமதக் கொள்கைகளில் ஆர்வம் காட்ட ஆரம்பித்த போது,ஆரிய பார்ப்பணர்கள் தில்லையை தங்களது ஆக்கி மற்ற மதத்தினரை வணங்க விடாது,உருவ வழிபாடு அற்ற வணக்க முறையை சிதம்பர இரகசியமாக மாற்றி விட்டார்கள். சிதம்பரத்தில் உருவ,அருஉருவ,அருவ வழிபாடு உண்டு.நடராஜர் உருவ வழிபாடு,பெட்டியில் வைத்துள்ள படிகலிங்கம் அருஉருவ வழிபாடு,ஆகாயம் அருவ வழிபாடு.இஸ்லாம் அருவ(உருவமற்ற) வழிபாட்டை மட்டுமே ஏற்கிறது;கிறிஸ்தவர்கள் உருவ,ஜேசு,மரியா,சிலுவை வழிபாட்டை ஏற்கிறார்கள்,சைவர்கள் மூன்றையும் ஏற்கிறார்கள்.தொடக்கத்தில் எல்லா மதத்தினருக்கும் சம வழிபாட்டு உரிமை இருந்த நேரம், இந்த முறையை கொண்டு வந்தார்களாயினும்,ஆரிய பார்ப்பணர்களின் கைக்கு கோயில்கள் மாறியதும் அந்தக் கோட்பாட்டை மாற்றி, சிதம்பர இரகசியமாக மாற்றினார்கள்.
ஆகம விதிப்படி தான் கோயில் கட்டுவதாக சொல்லுகிறார்கள். சில கோயில்களில் சாமி,நந்தி,பலிபீடம்,கொடிக்கம்பம் என்ற வரிசையில் இருக்கும்.வேறு சில கோயில்களில் சாமி,கொடிமரம்,பலிபீடம்,நந்தி என்றிருக்கும். பார்த்திருக்கிறீர்களா? கோயிலுக்குப் போகும் பழக்கம் இருந்தால் அடுத்த முறை கவனியுங்கள்.

கோவிலாவது ஏதடா?குளங்களாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே,குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே.
கட்டையால்செய் தேவரும்,கல்லினால்செய் தேவரும்
மட்டையால்செய் தேவரும் மஞ்சளால்செய் தேவரும்
சட்டையால்செய் தேவரும் சாணியால்செய் தேவரும்
வெட்ட வெளிய தன்றிமற்று வேறு தெய்வம் இல்லையே.
சிவவாக்கியர் என்ற சித்தர் இப்படி பாடுகிறார். கோயிலுக்கு போகலாமா?

மீண்டும் அடுத்த வாரம் சமூகத்தின் துகிலுரிக்க வருகிறேன்..............Dr. சக்தி.

avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum