TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்)

Go down

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) Empty பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்)

Post by வாகரைமைந்தன் Thu Jul 15, 2021 5:06 pm

ஐந்து கேள்விகள் - ஐந்து விளக்கம்

1.அநேகமான விமானங்கள் எதற்காக வெள்ளை நிறத்தில் இருக்கின்றன?

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) Air-France-and-United-Airlines-white-airplanes-768x768

2.தக்காளி காய் வகையை சேர்ந்ததா பழ வகையை சேர்ந்ததா?

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) Maxresdefault

3.சொரசொரப்பான பனிமலை வழுக்குவது ஏன்?

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) Sledding

4.ஒரு நட்சத்திரத்திற்குள் இன்னுமொரு நட்சத்திரம் இருக்க முடியுமா?

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) ThorneStar

5.நாம் கனவு காண்பதைப் போல் விலங்குகள் கனவு காணுமா?

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) Do-Dogs-Dream-LS-long


Last edited by வாகரைமைந்தன் on Fri Jul 16, 2021 11:36 am; edited 1 time in total
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1910
Join date : 23/05/2021

Back to top Go down

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) Empty பதில்கள்

Post by வாகரைமைந்தன் Thu Jul 15, 2021 8:47 pm

1.வெள்ளை நிறமானது புற ஊதா கதிர்வீச்சு மற்றும் வெயில் அதிகம்பட்டாலும் மங்காது, ஆனால் மற்ற நிறங்களானது வெயிலின் தாக்கத்தால் மங்கிவிடும். வெள்ளையை தவிர மற்ற நிறங்கள் எளிதில் வெப்பத்தை உள்வாங்கும் தன்மை கொண்டவை, இதனால் அதிகம் சூடாக வாய்ப்புகள் உள்ளது. வெள்ளை நிறம் ஒளியின் அலைநீளத்தை பிரதிபலித்து அதிகமாக வெப்பம் உள்வாங்காமல் பார்த்துக் கொள்ளும், இதனால் விமானம் அதிகமாக சூடாகாது. அத்துடன் விரிசல்கள் ஏற்படும் போது சுலபமாக சரி செய்து விடவும் முடியும்.

உலகின் மிகப்பெரிய விமானம் எது?

உலகின் மிகப்பெரிய விமானத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் கட்டமைத்துள்ளார்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு பாலைவனத்தில், ஸ்ட்ரேடோலாஞ்ச் (Stratolaunch) என்னும் அந்த விமானத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இதன் இறக்கைகள் மட்டும் ஒரு கால்பந்து மைதானத்தை விட பெரியதாக உள்ளது. விமான இறக்கைகள் 385 அடி நீளமும் 50 அடி உயரமும் கொண்டுள்ளன. 226 டன் எடை கொண்ட இந்த ஸ்ட்ரேடோலாஞ்ச், 113 டன் எரிபொருளை சேமிக்கும் வசதி கொண்டது. அது மட்டுமின்றி 400 டன் எடை கொண்ட பொருட்களை எடுத்துச் செல்ல முடியும்.
28 சக்கரங்கள் மற்றும் ஆறு ஜெட் எஞ்சின்களுடன் மிகவும் பிரமாண்டமாகக் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த விமானம் தூரத்தில் இருந்து பார்க்கும்போது ஒரு மலை போல் காட்சி அளிப்பதாகத் தெரிகிறது.



இவ்வளவு சிறப்பான ஸ்ட்ரேடோலாஞ்ச், பயணிகளுக்காக வடிவமைக்கப்படவில்லை என்றும் ராக்கெட்டுகளை சுமந்து செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

1000 டன் வரை எடை கொண்ட சிறிய வகை ராக்கெட்டுகள் இந்த விமானத்தின் ஆர்பிட் பகுதியுடன் இணைக்கப்படும். 30,000 அடி உயரத்தில் விமானம் பறக்கும்போது ராக்கெட்டுகள் விடுவிக்கப்பட்டு விண்ணில் ஏவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை மிகப்பெரிய விமானம் எனச் சொல்லப்பட்ட Antonov An-225 Mriya 2017



2.பொதுவாக காய்கறிக் கடைகளில் தக்காளி விற்பனையாகிறது.பழக் கடைகளில் தக்காளி கிடைப்பதில்லை.

தாவரவியல்-அறிவியலைப் பொறுத்த வரையில் தக்காளி  பழ வகையைச் சேர்ந்ததாகும்.பழங்கள் இனப்பெருக்க(ஆண்/பெண் இனப்பெருக்க பகுதிகள் Androecium/ Gynoecium ) வகையில் பூக்களின் மூலம் உருவாகின்றன. இனப்பெருக்கத்தின் பின் ovule மூலம் விதைகள் உருவாகின்றன.அந்த விதைகளை சுற்றி சதைப் பிடிப்பான பகுதி உருவாகும்.இதை பழம் என்கிறோம்.எனவே தக்காளி ஒரு பழ வகையை சேர்ந்ததாகும்.ஆனால்………….

அமெரிக்காவில் முன்னர் ஒருமுறை ஏற்றுமதி/இறக்குமதி வரிப் பிரச்சனை ஏற்பட்டு, நீதிமன்றத்தில் இந்தப் பிரச்சனை கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து,அமெரிக்கக் காங்கிரஸ் தக்காளியை காய் வகையில் சேர்த்து விட்டது.காயோ பழமோ பிரதான உணவில் பயன்படுத்தப்படுவதால் அது காய் தான் என விளக்கம் கொடுத்தது.

3.பனிக்கட்டிகளில் நாம் ஏறி நடக்கும் போதும், பனிச்சறுக்குப் பலகைகளை வைத்து சறுக்கி விளையாடும் போதும் பனிக்கட்டியின் மீது தரப்படும் நம்முடைய அழுத்தம் அதிகரித்து, அது உறைபனிப் படிவின் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்கிறது.

அதனால் பனிக்கட்டிகள் விரைவாக உருகுகின்றது. நாம் பனிச்சறுக்கு மலையில் விளையாடும் போது, பனிக்கட்டிகளுக்கும், பனிச்சறுக்குப் பலகைகளுக்கும் இடையே நீர் அடுக்கு உருவாகி உராய்வு குறைந்து விடுகிறது. இதனால் பனிக்கட்டி மீது நம்மால் விரைவாக வழுக்க முடிகிறது.  பனிக்கட்டிகள் வழுக்குவதற்கு நாம் கொடுக்கும் அழுத்தம் மட்டுமே காரணமாகும். விளையாட்டுகளைப் பொறுத்து உள்ளரங்குகளில் வெப்பநிலையை வைப்பார்கள்.சில 1-3 டிகிரி செல்சியஸ் ஆகவும்,சில விளையாட்டுகளில் -3 முதல் -4 வரையும் இருக்கும்.

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) PERTH_IceSkating

குளிர் நாடுகளில் குளிர் காலங்களில் வாகனங்களுக்கு பாதுகாப்பு சக்கரங்களை-tyres-போடாவிட்டால் எங்காவது இழுத்துச் சென்று விபத்து ஏற்படுத்துவதை காணலாம்.அல்லது குளிர் காலத்துக்கான (winter) டயர்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.அதுபோல் பாதுகாப்பான பாதணிகளை அணியா விட்டால் சறுக்கி விழலாம்.

உக்ரைனில் 9 வயதுப் பள்ளிக் சிறுமி 40 தடவைகளுக்கு மேல் சறுக்கும் சாய்வான பாதையில் விழுந்தும் சோர்வடையாமல் தொடர்ந்தாள்.



4.1975 இல்  Dr Kip Thorne and Dr Anna Żytkow  என்ற வானிலை ஆய்வாளர்கள் ஒரு நட்சத்திரத்திற்குள் இன்னொரு நட்சத்திரம் இருக்க முடியும் என கற்பனையில்psycho object ஆக சொல்லி, நம்பப்பட்டு வந்த நிலையில்,அந்த நம்பிக்கை கற்பனை 40 ஆண்டுகளுக்குப் பின்னர் உண்மை என கண்டறியப்பட்டது.ஒரு நட்சத்திரம் இன்னொரு நட்சத்திரத்தைக் கருவாகக் கொண்டிருப்பது psycho object  எனலாம்.அதாவது red giant   என இருக்கும் நட்சத்திற்குள் நியுரோன் நட்சத்திரம் ஒன்று இருப்பதாகும்.சக்தி கூடிய ஒன்று சக்தி குறைந்த ஒன்றை ஈர்ப்பு விசையால் உள்இழுக்கும் போது,மோதி இப்படி ஏற்படுகிறது.இந்த சிறிய நட்சத்திரம் பெரியதன் மையப்புள்ளியாக இருக்கும்.

   பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) Rs_oph_small

இப்படி ஒரு நட்சத்திரம், HV 2112,(Thorne-Żytkow  object போல்) 200,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதை 2014 இல் Emily Levesque தலைமையிலான குழுவினர் கண்டறிந்தனர்.

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) 1410968784217_wps_16_207358main_whitedwarf_200

5.முதலில் கனவு என்றால் என்ன? நாம் தூங்கும் போது,Rapid eye movement sleep (REM sleep ) , Non-rapid eye movement sleep -NREM  என இரண்டு வகைத் தூக்கம், நம்மை அரவணைக்கிறது. NREM எனத் தொடங்கி REM மாறி மாறி சுழற்சியான தூக்கம் நடைபெறுகிறது.

நொன் ரெம் தூக்கத்தின் போது பொதுவாக நாம் கனவு காண்பதில்லை.இது உண்மையான ஆழ்ந்த தூக்கமாக இருக்கும்.ரெம் சிலீப் தூக்கத்தில் 20-25 %  அளவே நாம் தூக்கத்தில் இருப்போம். அப்போது தான் கனவு காண்கிறோம்.கண்கள் வெவ்வேறு பக்கங்களில் அசையும். இதை தூக்கத்தில் இருப்பவரைப் பார்ப்பதால் அவதானிக்க முடியும்.

NREM  தூக்கத்தில் உடல் பகுதிகள்,டிசுக்கள்,எலும்பு,தசை பகுதிகள் பழுது பார்க்கப்பட்டு சரிசெய்யப்படுகின்றன.நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கப்படுகின்றன.

ஆனால் REM துக்கத்தின் போது மூளையின் சில பகுதிகள் மட்டும் செயல்பட்டாலும் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்.
கனவு 4-6 தடவைகள் தூக்கத்தில் வந்தாலும் விழித்தெழும் நேரத்திற்கு முன்பான கனவுகள் நம் மனதில் நினைவில் நிற்கிறது.

இது நமக்கானது மட்டுமல்ல. விலங்குகள் பறவை இனங்கள்,சில ஊர்வனவும் கனவு காண்கின்றதாம். அதிக அளவுடைய மூளை உள்ள விலங்குகளின்  ரெம் நிலையில் இருக்கும் நேரம் அதிகமாக இருக்கும். இதைப் பொறுத்து கனவு காணும் நேரமும் அதிகரிக்கிறது/வேறுபடுகிறது.

நாய் REM தூக்கத்தின் போது ………………..



சுவரில் முட்டிக் கொள்ளும் அளவிற்கு என்ன கனவு கண்டிருக்கும்?
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1910
Join date : 23/05/2021

Back to top Go down

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) Empty 2.ஐந்து கேள்விகள்

Post by வாகரைமைந்தன் Fri Jul 16, 2021 11:35 am

1.பிரபலஓவியங்களில் மறைந்திருக்கும் மர்மம் என்ன?

2.முட்டை ஏன் முட்டை வடிவில் உள்ளது?

3.காலை எழுந்ததும் சோம்பல் முறிப்பது ஏன்?

4.முதலில் வந்தது ஆரஞ்சு நிறமா அல்லது ஆரஞ்சுப் பழமா?

5.கடலடியில் காணப்படும் சித்திரங்களுக்குப்(Underwater Crop Circles ) பின்னால் இருக்கும் மர்மம் என்ன?

விடை தெரிகிறதா? மாலையில் விடைகளை சரி பார்க்கலாம்.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1910
Join date : 23/05/2021

Back to top Go down

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) Empty பதில்கள்

Post by வாகரைமைந்தன் Fri Jul 16, 2021 7:35 pm

1.1.மோனலிசா ஓவியத்தில் உள்ள சில மர்மங்கள் மறைந்திருக்கின்றன. அழகான ஓவியமாக பார்ப்பதுடன் நாம் நின்று விடுகிறோம். இந்த மோனலிசா ஓவியத்தில் அதை வரைந்த லியனார்டோ டாவின்சியின் (Leonardo da Vinci ) முதல் எழுத்துக்களான  எல் வி (LV)  மோனலிசாவின் வலது கண்ணிலும்,இடது கண்ணில் CE or B என்ற எழுத்தும் எழுதப்பட்டுள்ளன. கைகளை வயிற்றுப் பகுதியில் வைத்திருப்பதால்அந்தப் பெண் கர்ப்பமாக இருந்திருக்கலாம் என்கின்றனர் சிலர். படத்தில் உள்ள பாலத்தில் 72 என்ற இலக்கம் இருப்பதும் அதற்கான விளக்கம் என்னவென்று தெரியவில்லை என்கிறார்கள் ஓவியத்தை ஆய்வு செய்த வல்லுனர்கள்.

மோனலிசாவின் கண் புருவங்கள் இமைகள் வரையப்படாமல் இருப்பதையும் காணலாம்.

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) 1*Lo77HQkDtlB3M9zsIkHVCA

அதுமட்டுமல்ல அந்தப் படம் ஏற்கனவே டா வின்சியால் வரையப்பட்ட ஓவியத்தை மெருகேற்றி வரையப்பட்டது எனக் கண்டிருக்கிறார்கள்.

1.2.சன்றோ பொட்டிசெலி (Sandro Botticelli ) வரைந்த பிரிமாவேரா (Primavera -Allegory of Spring)   (1482)  என்ற ஓவியத்தில் 500 வகையான தாவர இனங்களும் 190 வகையான மலர்களும் வரைந்து காட்டப்பட்டுள்ளன.

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) 09_Primavera_jpg

1.3.ஜன் வன் ஐக் (Jan van Eyck ) இன் அனொல்பினி ஓவியம்.(Marriage of Giovanni Arnolfini and Giovanna Cenami) இந்த ஓவியத்தில் இருக்கும் கண்ணாடியைப் பார்த்தால்,இந்த இருவரின் படங்களும் கூடவே வேறு இரு உருவமும் தெரிகிறது.ஆனால் அது யார் என்பது கண்டு பிடிக்கப்படவில்லை.ஒரு உருவம் ஓவியராக இருக்கக் கூடும் என சொல்லப்படுகிறது.

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) Marriage-of-giovanni-arnolfini-and-his-wife-bride-giovanna-cenami-1434-n

1.4.பிகாசோவின் வயதான கிட்டார் கலைஞர் (The Old Guitarist, 1903 by Pablo Picasso ) பிரபலமானது.இவரின் ஓவியங்கள் பிரான்ஸ் நாட்டுக்கு வந்த சமயத்தில் ஒரே வண்ணத்தினால் வரையப்பட்டிருக்கும். இந்த காலத்தை நீலக் காலம்(Blue Period) என்பர்.அந்த காலம் துயரக் காலமாகவும்,பின்னர் ரோஸ் காலம்-அப்போது துயரத்தில் இருந்து மீண்டெழுந்த காலமாக,பல வர்ணங்களில் ஓவியங்களை வரையத் தொடங்கினார்.இதில் உள்ள மர்மம் என்னவென்றால் கழுத்துப் பகுதியை உற்றுப் பார்த்தால் அங்கே சோகமான ஒரு பெண்ணின் உருவத்தைக் காணலாம்.

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) The-old-guitarist

1.5.டா வின்சியின் (ஜேசுவின்) கடைசி உணவு (The Last Supper -Leonardo da Vinci)


பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) The-Last-Supper-Restored-Da-Vinci

இந்தப் படத்தில் உள்ள உருவத்தை இடது வலமாக மாற்றி வைத்துப் பார்த்தால் தேவாலய புனித வீரர்கள் இருப்பது போல் காட்சி தரும்.ஜேசுவின் அருகே ஒரு பெண் குழந்தையுடன் ஜேசுவைப் பார்ப்பது போல் இருக்கும். ஜூதாஸ் அந்தக் குழந்தையை வெறித்து ஆச்சரியமாக பார்ப்பது போல் கண்கள் இருக்கும். அதைவிட ஜேசுவின் பின்னால் உள்ள கண்ணாடியில் உள்ள செய்திகளை வைத்து, 4006 ஆம் ஆண்டு மார்ச் 21 முதல் நொவெம்பர் 1  வரை ஒரு பெரு வெள்ளம் ஏற்படலாம் என தெரிய வருவதாகவும் சொல்லப்படுகிறது.அந்தப் படத்தில் உள்ளவர்களின் கைகளிலும் ரொட்டித் துண்டுகளிலும் கறுப்புப் புள்ளிகளை வரைந்து,அதை வலது புறத்தில் இருந்து இடப் புறமாக வாசித்த போது ஒரு இசை மறைக்கப்பட்டிருந்ததாக ஜிவானி மரியா பாலா 2007 இல் நிரூபித்துக் காட்டினார்,.டா வின்சி ஒரு இசைக் கலைஞரும் கூட.

2.முட்டை கோழியின் வயிற்றில் இருந்து வரும் போது, உருண்டையாக இருந்தால் கோழியால்/பறவையால் உட்புறத் தசைகளினூடாக வெளியே கொண்டு வருவதில் சிரமம் இருக்கும்.முட்டை வடிவில் இருந்தால்,அதாவது (ovum-ovoid), சிறிது வருத்தம் இல்லாமல் வெளியே கொண்டு வர முடியும். இதுதவிர முட்டை இடும் போது உருண்டையாக இருந்தால் இருக்கும் இடத்தைப் பொறுத்து சிறிது சாய்வாக இருந்தால் கூட்டை விட்டு உருண்டு போக முடியும்.அதனால் உடைந்து போக வாய்ப்புள்ளது. உருண்டை ஒன்று உருளும் போது நேராக உருண்டு போகும்.ஆனால் முட்டை வடிவில் இருக்கும் போது நேராக உருளாமல் வட்ட வடிவில் தான் உருளும்.இயற்கையின் படைப்பு உயிரினங்களுக்குக் கொடுக்கும் பாதுகாப்பு வியக்க வைக்கிறது.

3.சோம்பல் முறிப்பது(Pandiculation - stretching and yawning ) மனிதன் மட்டுமல்ல உயிரினங்கள் அனைத்தும் சோம்பல் முறிப்பதுண்டு.இது கை கால்களை நீட்டுவது கொட்டாவி விடுவது என வேறுபடுகிறது.சாதாரணமாக குறிப்பிட்ட பகுதிகளை நீட்டி அசைக்கும் போதும் கொட்டாவி விடும் போதும், செய்தி முதுகெலும்புப் பகுதிக்கு(spinal cord) அனுப்பப்பட்டு அங்கிருந்து தசைநார்களுக்கு பதில் அனுப்பப்படுகிறது. ஆனால் காலையில் சோம்பல் முறிக்கும் போது மூளை வரை சென்று அங்கிருந்து தசைகளை விடுபட்ச் செய்ய பதில் அனுப்பப்படுகிறது.

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) 2015-05-08_0919

தூங்கும் போது தசைப் பகுதிகள் அதிக செயற்பாடில்லாமல் இறுக்கமாக இருப்பதால் காலை எழுந்ததும் அதிலிருந்து விடுபட கை கால்கலை நீட்டி  சோம்பல் முறிக்கிறோம்.இதனால் நான் விழித்து விட்டேன் என்று மூளைக்குச் சொல்லி,நமது குருதி அழுத்தத்தையும் சாதாரண நிலைக்கு கொண்டு வருகிறோம்.இதனால் மன அழுத்தமும் குறைகிறது.
பறவைகள் சிறகுகளை அடித்து சோம்பல் முறித்துக் கொள்ளும்.

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) Pandiculation-800x492

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) D178d2533952b385e6387c6cdf487839

4.முதலில் ஆரஞ்சு என 13 ஆம் நூற்றாண்டில் பழத்திற்குத் தான் பெயர் இருந்தது. பின்னர் 16 ஆம் நூற்றாண்டில் நிறமாக மாறியது.நிறத்தை முதலில் மஞ்சல்-சிவப்பு (yellow-red) என அழைத்து வந்தார்கள்.இந்த ஆரஞ்ச் என்ற வார்த்தை முதலில் பிரான்ஸ் மொழியில் இருந்து ஆங்கிலதிற்கு வந்த சொல் ஆகும். ஆனால் பிரான்ஸ் மொழிக்கு இத்தாலியில் இருந்து வந்ததாக கூறுகிறார்கள். அத்துடன் முடியவில்லை. மொழியிலாளர்கள் தேடத் (etymology ) தொடங்கினார்கள். முதலில் ஆரம்பம் தமிழ் (அல்லது ஒரு திராவிட மொழி)-சமஸ்கிருதம்-பாரசீகம்-அரபு-இத்தாலி-பிரான்ஸ்-ஆங்கிலம் என வந்ததாக கண்டு பிடித்தனர்.

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) Shutterstock_170129792

Arancio-Arancia-Narancia-Naranzo (Italy)-Naranj (Arabic)-Narang (Persian)-Naranga (Sanskrit)-இது தமிழ் மொழியில் இருந்து வந்ததாக மொழியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.தமிழில் அல்லது ஒரு திராவிட மொழியில் இருந்து எப்படி அந்தச் சொல் இருந்தது?

5.கடலுக்கடியில் வெவ்வேறான மணல் சிற்பங்களை(underwater crop circles  ) 1995 இல் சப்பானிய நீச்சல் வீரர்கள் கண்டனர்.இவை நிலத்தில் உள்ள பயிர் வட்டங்களைப் போலவே இருந்தன என தெரிவித்தனர்.இவை அடிக்கடி தோன்றுவதும் மறைவதுமாக இருப்பதையும் கண்டனர்.

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) Junoon.co-1717309

இந்த மர்மத்திற்கான விடையை பல ஆண்டுகளின் பின்னர் 2011 இல் கண்டு பிடித்தனர். இவற்றை வரைந்தது வெள்ளைப்புள்ளி கோலமீன் (pufferfish ) தான்.இந்த மீனின் நீளம் 12 செண்டிமீற்றர் தான்.தன் பின் வால்பகுதியை அசைப்பதன் மூலம் இரண்டு மீட்டர் குறுக்களவுள்ள மணல் சிற்பங்களை உருவாக்குகிறது.  இந்த மீன்கள் தன் காதலியைக் கவருவதற்காக வரைவது தான் இந்த மனல் சிற்பம் ஆகும். அந்த இடத்திற்கு வரும் பெண் மீன் அங்கு முட்டைகளை இடும். ஆண் மீன் முட்டைகளை குஞ்சாக பொரிக்கும் வரை காத்திருந்து பாதுகாக்கிறது என்பதைக் கண்டறிந்தார்கள்.பின்னர் மீன் அந்த இடத்தை விட்டுச் சென்று விடும்.இந்த வடிவம் 7 -9  நாட்கள் வரை இருந்து பின் நீரின் வேகத்தினால் அழிந்து விடும்.

நீங்கள் தாஜ்மகாலைக் கட்டுகிறீர்கள்,நாங்கள் இதைக் கூட செய்ய மாட்டோமா என்கிறது அந்த மீன்.

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) 187739-004-51E15C1C



Last edited by வாகரைமைந்தன் on Sat Jul 17, 2021 11:09 pm; edited 1 time in total
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1910
Join date : 23/05/2021

Back to top Go down

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) Empty ஐந்து கேள்விகள்

Post by வாகரைமைந்தன் Sat Jul 17, 2021 11:16 am

1.நமது கண்களால் பார்க்கும் அனைத்தும் நிகழ் காலம் தானா?

2.உங்களால் உங்களுக்கே கூச்சம் (tickling) காட்ட முடியுமா?

3.நமக்கு ஏன் கண் புருவம் உள்ளது?

4.எலும்புக்கூடுகளால் நிறைந்த ஏரிக்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன?

5.நமது கண்கள் எத்தனை மெகா பிக்சல் அளவைக் கொண்டிருக்கிறது? 

விடை தெரிகிறதா?

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1910
Join date : 23/05/2021

Back to top Go down

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) Empty பதில்

Post by வாகரைமைந்தன் Sat Jul 17, 2021 10:59 pm

1.
பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) Seecolor

நாம் நமது கண்களால் பார்ப்பவை எல்லாம் நிகழ்கால சம்பவங்களா என்றால்  ஆம் எனத் தான் சொல்வோம். ஆனால் அது உண்மையா? சூரியனை நாம் பார்க்கிறோம். அங்கிருந்து வரும் ஒளி நம்மை வந்தடைய 8  நிமிடங்கள்(8.3 light mts.) ஆகின்றன. ஒளியின் வேகம் மூன்று இலட்சம் கி.மீ. (3.00×108 m/s, approximately 186,282 mi/s)) என்பதுதான் காரணம். அப்படியானால் 8 நிமிடங்களுக்கு முன்னர் உள்ள சூரியனைத்தான் நாம் பார்க்கிறோம்.

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) Colorapple

நாம் ஒரு பொருளை பார்ப்பது என்றால், ஒளி அந்தப் பொருளின் மீது பட்டு தெறித்து அங்கிருந்து நம்மை வந்தடைவது என்று பொருள்.அதனால்தான் இரவில் ஒளி இல்லாத போது நம்மால் ஒரு பொருளை பார்க்க முடிவதில்லை.
ஒரு மீட்டர் தூரத்தில் உள்ள பொருளை நாம் பார்க்க 0.000000003 sec  எடுக்கிறது. இது மிகக் குறைந்த நேரமானாலும் கூட, இறந்த காலம் தான். அதனால் நிகழ் காலத்தில் வாழும் நாம் இறந்த காலத்தை மட்டுமே பார்க்கிறோம்,பார்க்க முடியும்.

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) Reflection+of+light2

2.யாராவது நமது உடலில் சில இடங்களில் தொடும் போது கூச்சம்/பதட்டம்/பயம் சில சமயம் சிரிப்பும் ஏற்படுகிறது.இது ஏன்? இயற்கை சில பாதுகாப்பு முறைகளை ஏற்படுத்தி தற்பாதுகாத்துக் கொள்கிறது. இது ஆழ்மனதால் கையாளப்படும் ஒரு உளவியல் தந்திரோபாயம் அல்லது Sigmund Freud  இன் கோட்பாட்டின்படி பாதுகாப்புப் பொறிமுறை -defence mechanism – ஆகும்.இதற்கு மூளையின் Rolandic operculum ,hypothalamus போன்ற பகுதிகள் காரணமாகின்றன.

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) 335FB79000000578-0-image-m-119_1461195574613

கூச்சம் மட்டுமன்றி,பூச்சி போன்றவை உடலில் உட்காரும் போது எதிர்வினையாற்றி தற்காத்துக் கொள்கிறது .இந்த பாதுகாப்பு முறையை உடல் பயன்படுத்துகிறது.
ஆனால் நமகு நாமே கூச்சம் ஏற்படுத்த முடியுமா என்றால் முடியாது என்பதுதான் பதிலாகும்.  நம்மை  நாமே தொடும் போது உடனே மூளை கைகளுக்கு செய்தியை அனுப்பி தடுத்து விடுகிறது.

3.இயற்கை ஒவ்வொன்றையும் ஏதோ காரணத்திற்காகவே உருவாக்குகிறது. அந்த வகையில் கண்ணின் மேல் உள்ள புருவத்தினால், அதை அசைத்து அல்லது புருவத்தை உயர்த்தி சில உணர்வுகளை வெளிப்படுத்தமுடியும்.நாட்டியத்தில் இப்படி புருவ அசைப்பை காணலாம். ஆனால் இயற்கை அதற்காகப் படைத்திருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.தண்ணீரோ வியர்வையோ நெற்றியில் இருந்து வடியும் போது புருவங்கள் கண்களை பாதுகாக்கிறது.உப்புத்தன்மை கலந்த வியர்வை கண்களுக்கு எரிச்சலைத் தந்து  பார்வையையும் பாதிக்கலாம்.அதனால் இயற்கை தந்த பாதுகாப்பே கண்புருவம் ஆகும். பெண்கள் அதை வெட்டி விடுவது அல்லது அகற்றுவது நல்லதல்ல.

அப்படி கண் புருவங்கள் இல்லாத நிலையில் ஏற்பட்டிருந்தால் இயற்கை என்ன மாற்றேட்பாட்டை செய்திருக்கும்?


4.
பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) Roopkund-7539616

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) D4_423_roopkund-1

எலும்புக் கூடுகள் நிறைந்த ஏரி -Roopkund- இந்தியாவில் இமயமலைப் பகுதியில் 5029 மிட்டர் உயரத்தில் இருக்கிறது?  இதை பிரிடிஷ் காட்டுப் பாதுகாவலர் ஒருவர் 1942 இல் கண்டுபிடித்தார்.உறைந்த நிலையில் உள்ள இந்த ஏரி கோடையில் உருகத் தொடங்கிய போது 200 க்கு மேற்பட்ட எலும்புக்கூடுகள் அந்த ஏரியில் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த எலும்புக் கூடுகள் கி.பி 850 ற்கு முன்னர் வாழ்ந்தவர்களுடையது என தடையவியலாளர்கள்(forensik) கண்டு பிடித்தனர்.அத்துடன் அவை ஒரே குடும்பம் அல்லது நெருங்கிய உறவுடைய குழுக்களைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என டி.என்.ஏ  ஆய்வில் தெரிய வந்துள்ளது. அவர்களின் தலையில் அடிபட்டுள்ளதால் மேலிருந்து கொண்டு தாக்குதல் நடத்திக் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் எண்ணப்பட்டிருந்த நிலையில் ,மேலிருந்து உருண்டை வடிவிலான பெரிய பனிக்கட்டிகள் தொடர்ந்து விழுந்ததால் இறந்திருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

5.
                                                                                                                                     
பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) Sagschem-KLS-edited

ஒரு மனிதனின் கண்கள் அசைவதற்கு ஆறு தசைகள் செயற்பட வேண்டி உள்ளது. தினமும் ஒருவரின் கண்கள் ஒரு இலட்சம் தடவைகள் அசைகின்றது.கண்களில் cold receptor உயிரணுக்களாக ஐந்தில் இருந்து ஏழு மில்லியன் வரையிலானCones களும், 120 மில்லியன் வரையிலான Rods என அழைக்கப்படும் உயிரணுக்களும்  நிறங்களை பிரித்தறிய செயற்படுகின்றன.எனவே 105 -120 வரை மெகாபிக்சல் அளவில் இருக்கலாம். ஆனாலும் நமது கண்கள் எல்லாப் புறமும் அசைந்து மூளைக்கு படங்களை அனுப்பிக் கொண்டிருப்பதால் விஞ்ஞானிகளின் கருத்துப்படி 576 மெகாபிக்சல்களைக் கொண்ட காமெராவிற்கு ஒப்பானது எனக் கொள்ளலாம்.

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1910
Join date : 23/05/2021

Back to top Go down

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) Empty கேள்வி

Post by வாகரைமைந்தன் Sun Jul 18, 2021 1:40 pm

1.மனிதன் ஏன் மாலையை விட காலையில் உயரமாக இருக்கிறான்?

2.சேவண்ட் குறைபாடு என்றால் என்ன?

3.பொதுவாக  உயிருக்கு ஆபத்தைத் தருவது எது?

4.நமக்கு விரும்பியபடி கனவு காண முடியுமா?

5.420 என்றால் என்ன?


Last edited by வாகரைமைந்தன் on Sun Jul 18, 2021 8:38 pm; edited 1 time in total
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1910
Join date : 23/05/2021

Back to top Go down

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) Empty பதில்

Post by வாகரைமைந்தன் Sun Jul 18, 2021 8:36 pm

1.முதுகெலும்பு -Spine- எலும்புகளாலும் வட்டுகளாலும்- intervertebral discs – (மனித முதுகெலும்பில் 24 வட்டுகள்-disks-shock absorber  ) ஆனது.இதில் இருக்கும் வட்டுகள் எலாஸ்டிக் போல் வளைந்து அசைந்து கொடுக்கக் கூடியதாக அமைந்துள்ளது.  இந்த வட்டுகள் உடலில் உள்ள நீர்மத்தை உறிஞ்சி எடுத்துக் கொள்ளும்.அதனால் காலையில் சிறிது உயரமாக இருக்கிறார்கள்.காலையில் எழுந்து நடக்கும் போதும் வேலைகளை செய்யும் போதும் புவிஈர்ப்பு விசை காரணமாகவும் முதுகெலும்பில் இருக்கும் வட்டுகளில் சேர்ந்த நீர் சிறிது சிறிதாக குறைவடைய நம்முடைய உயரமும் சிறிது குறைகிறது.இந்த உயர வேறுபாடு அரை செ.மீ.முதல் இரண்டு செ.மீ.வரை இருக்கலாம்.

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) Annulus_Fibrosus

2.சேவண்ட் குறைபாடு (Savant syndrome - autistic savant) என்றால், விபத்தினால் அல்லது வேறு சில காரணங்களால் மூளையில் உள்ள நியுரோன்கள் புதிதாக மாற்றங்களை ஏற்படுத்தி சீரமைக்கப்படுவதால்,  ஏதோ ஒரு துறையில் அந்த நபரை நிபுணத்துவம் அடையச் செய்து விடுகிறது. அளவுக்கு அதிக ஞாபகசக்தி, இசை ,ஓவியம்,கணிதம்,பல மொழிகள் பேசும் திறன் என சில துறையில் திறமைசாலிகளாக மாற்றி விடுகிறது, அல்லது ஆட்டிசம் உள்ளவர்களுக்கும் இப்படி ஏற்பட வாய்புண்டு. இன்று நூற்றுக்கு குறைவான இந்த திறமைசாலிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கு முன்னர் எதுவும் தெரியாதிருந்த ஒருவர்,விபத்தின் பின் திடீரென ஏதோ ஒரு துறையில் திறமைசாலி ஆகி விடுகின்றார்.

ஆனால் அவர்கள் திறமைசாலியாக இருந்தலும் மன வளர்ச்சி குன்றியவர்களாகவே இருப்பார்கள்.
கிம் பீக் என்பவர் தான் படித்த 12 ஆயிரம் புத்தகங்களையும் ஒரு வார்த்தை விடாமல் நினைவில் வைத்திருக்கிறார்.டெரிக் அமாட்டொ (Derik Amato) என்பவர் விபத்தில் தலையில் அடிபட்டு பாதிக்கப்பட்டதால் திடிரென ஒரு பியானோ இசை வல்லுனர் ஆனார்.



3.உடனே சொல்வது விசம் என்பதுதான்.விசம் மட்டுமல்ல,நாம் அன்றாடம் பாவிக்கும் பல பொருட்கள் உயிர் ஆபத்தைத் தரும். அவற்றுள் சில…..

ஒரே தடவையில் தொடர்ந்து 70 காப்பிகள் வரை குடித்தால் அதிலிருக்கும் கஃபின்-Caffeine- உயிர்கொல்லியாக மாறிவிடும்.அதில் பால்,சர்க்கரை இப்படிப் பொருட்களை சேர்ப்பதால் கஃபின் சக்தி குறைவடைகிறது.
தொடர்ந்து 13 சொட்ஸ் (1 shot=1.5 ounce) மதுச்சாரம் (Alcohol)  குடித்தால் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.இன்று உலகளவில் கிடைக்கும் மதுவில் குறைந்த அளவிலேயே மதுச்சாரம் கலக்கப்பட்டுள்ளது. Poitín ,Cocoroco  ,Everclear  போன்ற சிலவற்றில் 95% (Alcohol volume ) வரை கலக்கப்பட்டுள்ளது.

அரசுகள் வருமானத்திற்காக மதுவையும் புகைக்கும் பொருட்களையும் விற்பதற்கு அனுமதி கொடுத்துள்ளனர் என்றும்,மதுவைவிட ஹரயின் போன்ற போதைப் பொருட்கள் குறைந்த விளைவுகளையே தருகின்றன.போதைப் பொருட்களை தடை செயூம் அரசுகள் மதுவை தடை செய்வதில்லை என்றும் சொல்கிறார்,Wim van den Brink, a professor of psychiatry and addiction at the University of Amsterdam. 

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) NIAAA_What_is_a_Standard_Drink

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) NIAAA_BAC_Increases_Graphic

6 லீட்டருக்கு மேல் தண்ணீர் ஒரே சமயத்தில் குடித்தால் மூளையின் செயற்பாட்டில் தடை ஏற்பட ஆரம்பித்து உயிராபத்து வர வாய்ப்புண்டு.

செரி பழத்தின் விதைகளை உடைத்து சாப்பிடுவதும் ஆபத்தானதுதான்.அதன் விதையில் சயனைட் இருப்பதே காரனமாகும்.
சாக்கிலேட் இல் இருக்கும்  theobromine  காரணமாக 85 சாக்லட் பார்களுக்கு அதிகமாக எடுக்கும் போது ஆபத்து வரலாம்.

4.நாம் தினமும் 4 – 6  கனவுகளைக் காண்கிறோம். அவற்ரில் 90% மேற்பட்ட கனவுகளை மறந்து விடுகிறோம். நம் கனவில் பல்வேறு புதிய முகங்களை,இடங்களைக் காண்கிறோம். அவை எல்லாம் கற்பனை அல்ல. நாம் அன்றாட வாழ்க்கையில் காணும் நபர்கள் காட்சிகள்,காணும் படங்கள் கதைகள் மூலம் உருவான பாத்திரங்கள், இடங்கள்,பொருட்கள் தான் கனவாக வருகிறது.இந்தக் கனவுகள் எல்லாம் கறுப்பு வெள்ளையில் மட்டுமே காண முடிகிறது. கனவை நாம் வேண்டியபடி மாற்றி அமைக்க முடியும்.அதை தெளிவான கனவு(lucid dream) என்கிறார்கள்.தீபெத்திய துறவிகளால் சொல்லப்பட்டு வந்த நிலையில் 1975 இல் அறிவியல் நிரூபித்துள்ளது.இந்தக் கனவுகளை பதிவு செய்ய முடியும் கண்டிருக்கிறார்கள்.விரைவில் அது நடைமுறைக்கு வரலாம்.

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) Lucid-dreaming-image-1000x500

5.இது சு.சுவாமி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜனி பற்றி பதிவு செய்தது.

இந்தியாவில் பயன்படுத்தப்படும் 420 -charsoobees (இந்தியில்)-என்றால் என்ன?

பொதுவாக சினிமாவிலும் பேச்சுவழக்கிலும் மோசடி அல்லது தந்திரம் என்பதற்கு 420 என சொல்வார்கள். அந்த அர்த்தத்தில் சுவாமி அவர்கள் பதிவிட்டிருந்தார்.ஆனால் IPC -Indian Penal Code- Section 420  இன்படி மோசடி,ஏமாற்று போன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் சட்டமாகும்.1860 இல் பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் மட்டுமன்றி பாகிஸ்தான்,வங்காளதேசம், மியன்மார் நாடுகளிலும் 420 சட்டம் பயன்படுத்தப்படுகிறது.

ஆனாலும் உலகளவில் 420 என்பது பல்வேறு வகையில் பயன்படுத்தப்படுகிறது.

143 என்றால் என்ன? 143 = I Love You என்பதாகும்.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1910
Join date : 23/05/2021

Back to top Go down

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) Empty சூரியன் உதிக்காமலே போனால் என்ன ஆகும்?

Post by வாகரைமைந்தன் Mon Jul 19, 2021 8:50 pm

சூரியன் உதிக்காமலே போனால் என்ன ஆகும்?

பூமி தனது அச்சில் சுழல்வதால் தான் நமக்கு சூரிய உதயமும், அஸ்தமனமும் நிகழ்கின்றன. பூமி தனது அச்சில் சுழல்வது நின்று விடுவதாக வைத்துக் கொண்டால், சூரிய உதயமே இருக்காது. பூமியின் ஒரு பாதியில் வானில் சூரியன் நிலை குத்தி நிற்கும் (பூமி உருண்டை என்பதால்). அங்கு என்றெனும் பகலாகவே இருக்கும். அப்படியான நிலையில் சூரியனின் வெப்பம் தாங்காமல் அனைத்தும் பொசுங்கிப் போய்விடும்.

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) No-sun

பூமியின் மறுபாதியில் என்றென்றும் இரவாக இருக்கும். சூரிய வெப்பம் இல்லாமல் போய்விடுவதால் கடும் குளிர் வீசும். அனைத்தும் உறைந்து போய் விடும். பயிர்கள் வளராது. மக்கள் குளிரில் விறைத்து மடிந்து போவர். அல்லது பட்டினியால், நோய்களால் செத்து மடிவர். மொத்தத்தில் பூமியில் உயிரினமே இருக்காது. பூமி செத்து விடும். பூமி தனது அச்சில் சுழன்று, அதனால் சூரிய உதயமும் அஸ்தமனமும் இருந்தால் தான் பூமியில் உயிரினம் இருக்க முடியும். சூரியன் இல்லையேல் - அதாவது பகலும் இரவும் இல்லையேல் - உயிரினமே இராது. உயிர் வாழ்க்கையின் ஆதாரமே சூரியன் தான்.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் எப்போதும் ஒரே மாதிரியாக இல்லாமல் வித்தியாசப்படுவது ஏன்?

சூரியனை பூமி சுற்று வருகின்ற பாதை வட்ட வடிவமாக இல்லாமல் சற்றே நீள் வட்டமாக உள்ளது. எனவே தான் தூரம் வித்தியாசப்படுகிறது.

சூரியன் பூமிக்கு அருகில் இருக்கும் போது அதிக வெயிலாகவும் தொலைவில் இருக்கும் போது குளிராகவும் இல்லாமல் நேர் எதிராக இருப்பது ஏன்?

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) 1-earthsorbita

பூமி சுமார் 23 டிகிரி அளவுக்கு சாய்வான நிலையில் இருந்தபடி சூரியனை சுற்றுவதே இதற்குக் காரணம்.சுற்றும் வேகம் ,அதன் அடர்த்தி இவையும் காரணமாகிறது.

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) 681_ptemp

பூமியின் இந்த சாய்மானம் காரணமாக மார்ச் மாதம் தொடங்கி சூரியனின் கதிர்கள் இந்தியா உட்பட பூமியின் நடுக்கோட்டுக்கு வடக்கே உள்ள பகுதிகளில் செங்குத்தாக விழுகின்றன.  ஆகவே நடுக்கோட்டுக்கு வடக்கே உள்ள பகுதிகளில் கோடைக்காலமாக உள்ளது.

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) Seasons.en
     
பூமியின்  நடுக்கோட்டுக்கு வடக்கே உள்ள பகுதியில் சூரியனின் கதிர்கள்
செங்குத்தாக விழுகின்றன

அதே காலகட்டத்தில் சூரியன் கதிர்கள் பூமியின் நடுக்கோட்டுக்குத் தெற்கே உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலந்து, அர்ஜென்டினா போன்ற நாடுகளில்  சாய்வாக விழுகின்றன. ஆகவே நடுக்கோட்டுக்கு வடக்கே கோடையாக இருக்கின்ற காலத்தில் அக்கோட்டுக்கு தெற்கே உள்ள நாடுகளில் குளிர் காலமாக உள்ளது.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1910
Join date : 23/05/2021

Back to top Go down

பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்) Empty Re: பொதுஅறிவு - கேள்வியும் பதிலும் (தொடர்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum