TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


நீங்கள் தமிழர்கள் தானா சொல்லுங்கள்.கேள்வியும் பதிலும்

2 posters

Go down

நீங்கள் தமிழர்கள் தானா சொல்லுங்கள்.கேள்வியும் பதிலும் Empty நீங்கள் தமிழர்கள் தானா சொல்லுங்கள்.கேள்வியும் பதிலும்

Post by sakthy Sun Jan 22, 2012 11:33 pm

உள்ளதைச் சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது.
உள்ளத்தில் இருப்பதை வார்த்தையால் மறைக்கும் கபடம் தெரியாது.

நீங்கள் தமிழர்கள் தானா சொல்லுங்கள்.கேள்வியும் பதிலும்

அமெரிக்கா போன்ற வெளி நாடுகளில் வாழும் அனேகமான தமிழ்க் குழந்தைகள் தமிழை படித்து வரும் இன்றைய நாளில், தமிழ் நாட்டில் உள்ள குழந்தைகள் ஆங்கில மூல கல்வி என்று தெரிவித்து தமிழை பேச வெட்கப்பட்டும் சரியாக தெரிந்து கொள்ளாமலும் தவறான உச்சரிப்பிலும் வாழும் இந் நாளில், பல இன உணர்வாளர்கள் இந்த அவல நிலையை எடுத்துரைத்தும் கூட பல பெற்றொர்கள் தமிழை படிப்பது கேவலம் என எண்ணுவதை நாம் காண்கிறோம்.சமீபத்தில் இரண்டு தமிழக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நேரிலேயே இந்த அவல நிலையை கண்டோம்.

இந்த இணையம் தமிழில் இருப்பதால் உங்களுக்கு தமிழ் நன்றாகவே தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும் மிக சுலபமான சில கேள்விகளை இங்கே தருகிறோம். 80 % திற்கு மேல் மதிப்பெண்கள் கிடைத்தால் நீங்கள் தமிழர்கள் தான் என்பதை குரலை உயர்த்தி சொல்லுங்கள்.இல்லையேல் சிறிது கற்றுக் கொள்ளுங்கள்.எனது புதுவருட பொங்கல் விடுமுறையின் போது ஆங்கில மொழிக் கல்வி பெறும் மாணவர்களிடம் பொழுது போக்காக கேட்கப்பட்ட கேள்விகள் தான் இவை.ஆனால் கிடைத்த பதிலோ....?

1.புகழுக்காக இன்று அனைவரும் அலைகிறார்கள்.இந்த புகழுக்கு எதிர் சொல் என்ன?
இகழ்
2.திருக்குறள் எந்த எழுத்தில் தொடங்கி எந்த எழுத்தில் முடிவடைகிறது?
அ வில் தொடங்கி ன் இல் முடிகிறது.
3.மலர்களால் தூவி மண்ணை வணங்குவது எது?
மரம்
4.தமிழன்னையை ஆபரணங்களால் அணிவித்து அழகு பார்த்த தமிழ் நூல்கள் எவை?
ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், சிந்தாமணி, மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி.
5.தமிழில் உள்ள எழுத்துக்கள் எத்தனை?அந்த எழுத்துக்கள் எழுத்து குறியீடுகளை கொண்டவை?
247 , 107
6.தமிழில் உயிர் எழுத்திற்கு ஏன் உயிர் எழுத்து என்று பெயெர் வந்தது?
உயிர் வாழ அவசியமான காற்றை கழுத்தில் இருந்து வெளியேற்றி பயன்படுத்தி உச்சரிக்கப்படுவதால்.
பன்னீ ருயிருந் தந்நிலை திரியா
மிடற்றுப் பிறந்த வளியி னிசைக்கும் -எழுத்து/.84 .என தொல்காப்பியம் கூறுகிறது..
7.தமிழ் எழுத்தில் உள்ளது போல் ஆங்கிலத்தில் உள்ள மெய் எழுத்து எவை?
மெய் எழுத்து கிடையாது. ஆனால் மெய் எழுத்திற்கு பதிலாக உயிர்மெய் எழுத்தை இடங்களுக்கு ஏற்ப பயன்படுத்துகிறார்கள்.உ+ம். book ல் k வை க் என
8.வழமையாக நாம் பயன்படுத்தும் ஒரு சொல்லின் பொருளை எதிரான பொருளுக்காக பயன்படுத்துகிறோம்.அந்த சொல் என்ன?
நாற்றம். இதன் பொருள் மணம்,நறுமணம்.கூவம் நாறுகிறது என்றால் கூவம் நறுமணம் வீசுகிறது என்று பொருள்.எதிர்ச்சொல் துர்நாற்றம்.
9.வெட்க்கம்,முயற்ச்சி என்ற சொற்கள் சரியாக எழுதப்பட்டுள்ளதா?
தவறு. ட்.ற் என்ற எழுத்துக்களுக்குப் பின் இன்னொரு மெய் எழுத்து வராது.
10.தமிழ் தாத்தா யார்?
உ.வே.சாமிநாதையர்
11.தமிழனின் மறை நூல் எது?
திருக்குறள்.
12.முச்சங்கங்கள் எவை?
முதல்,இடை,கடை சங்கம்.
13.சங்க இலக்கிய நூல்கள் அனைத்தையும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தரப்பட்டுள்ளன.அப் பிரிவுகள் எவை?
எட்டு தொகை,பத்து பாட்டு.
14.தமிழ் இலக்கணம் தந்த முதல் நூல் எது?
தொல்காப்பியம்.
15.இந்து மதம் ஒரு மதம் அல்ல.அது தமிழர்களால் தழுவப்பட்ட சமயமும் அல்ல.அப்படியானால் தமிழ் நாட்டில் சங்க காலத்திற்குப் பின் இருந்த சமயங்கள் எவை?
சைவம்,சமணம்,பௌத்தம்,வைணவம்,கிறிஸ்தவம்,இஸ்லாம்.
16.அறிவினா அறியாவினா என்பதன் பொருள் என்ன?
அறிவினா அறிந்து கேட்பது-ஆசிரியர்,அறியாவினா என்பது ஒருவர் அறியாமல் கேட்பது-மாணவர்
17.தருமியின் பாடலுக்கு நக்கீரன் கொடுத்த பதிலின் உட்பொருள் என்ன?
ஒரு பாடலில் சொல்லப்படும் பொருளில் தவறு இருக்கக் கூடாது என்பதாகும்.
18.தீர்ப்பு தவறியதற்காக உயிரை விட்ட மன்னன் யார்?
கோவலன் வழக்கில் பொற்கொல்லன் பேச்சை கேட்டு தீர்ப்பு கூறிய பாண்டியன் நெடுஞ்செழியன்.
19.ஆண்மையின் மிடுக்குக்கும் வீரத்திற்கும் எடுத்துக்காட்டாக தஞ்சை பெரிய கோயிலை சொல்வது போல்,அதே காலத்தில் உருவான இன்னொரு கோயிலை பெண்களின் மென்மைக்கும் அழகுக்கும் எடுத்துக் காட்டாக சொல்வார்கள்.அது எந்தக் கோயில்?
கங்கை கொண்ட சோழபுரம். இங்கு இறைவன் கோயிலும்,அம்மன் கோயிலும் உண்டு.
20.இத்தாலியில் இருந்து 18 ம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு வந்து 30 அகவைக்குப் பின் தமிழை கற்று தமிழையும்,தமிழ் இலக்கியங்களையும் உலகறிய செய்ததுடன் 23 நூல்களையும்,ஒரு சிறந்த கலைக் காப்பியத்தையும் தந்த இந்த வெளி நாட்டவர் யார்?
வீரமாமுனிவர்(Constantine Joseph Beschi ) என்ற கத்தோலிக்க குருவாவர்.இவர் தேம்பாவணி,the Unfading Garland ,என்ற கலைக் காப்பியத்தை எழுதினார்.
21.நாநிலம்,நான்கு பருவ காலங்கள் எவை?
நாநிலம்-குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்
பருவகாலம்-இளவேனிற்காலம்,கோடைகாலம்,இலையுதிர்காலம்,குளிர் காலம்.
22.யாது ஊரே யாவரும் கேளீர்,தீதும் நன்றும் பிறர்தர வாரா, என்பதை சொன்னவர் யார்?
கணியன் பூங்குன்றனார் புற நானூற்றில்.
23.நீராடும் கடல் உடுத்து.... என்ற தமிழ் தாய் வாழ்த்து பாடலை எழுதியவர் யார்?
மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளை.
24.இந்த தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு எதிர்ப்பை மறைமுகமாக தெரிவித்து,புதிய உலகளாவிய தமிழ் தாய் வாழ்த்தை உருவாக்கப் போவதாக கூறிய பிரபல தமிழக கவிஞர் யார்?
கவிப்பேரசு வைரமுத்து.
25.எந்த நாட்டில் தமிழர்களை வைத்தே தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள்?
சிறிலங்கா என்று சிங்கள பெயரிடப்பட்ட தமிழ் நாட்டில்.
26.கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை உருவாக வடிவமைத்தவர் யார்?
வி.கணபதி ஸ்தபதி.
27.2008 ல் Microsoft Certified Professional (MCP) பட்டத்தை பெற்ற தமிழ் சிறுமி யார்?
மதுரையை சேர்ந்த முனிசாமி லவினசிறி என்ற 8 வயது சிறுமி..பொதுவாக 20-25 வயதுள்ளவர்களே பங்கு பெறுகிறார்கள்.இதைவிட 3 வது வயதில் திருக்குறள் 1330 குறளையும் மனப்பாடமாக ஒப்புவித்ததுடன்,10 வது வயதில் ரெட் ஹாட் நிறுவனத்தின் பொறியியலாளர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
இந்த சமயத்தில் இன்னொரு குழந்தையைப் பற்றி இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.2004 ல் பாகிஸ்தானை சேர்ந்த Arfa Karim Randhawa என்ற பெண் குழந்தை தனது 9 வயதில் இந்த MCP பட்டத்தை பெற்றிருந்தார்.ஆனால் தனது 16 வது வயதில், 14.01.2012 ல் மூளையில் ஏற்பட்ட நோயினால் மரணத்தை தழுவிக் கொண்டார். மைக்ரோசொஃப்ட் நிறுவனர் Bill Gates பல உதவிகளை கொடுத்து பெரு முயற்சி செய்தும் அவளைக் காப்பாற்ற முடியவில்லை.
28.28.திருக்குறளில் எத்தனை அத்தியாயங்கள்,எத்தனை பாடல்கள்?
133, 1330


avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

நீங்கள் தமிழர்கள் தானா சொல்லுங்கள்.கேள்வியும் பதிலும் Empty Re: நீங்கள் தமிழர்கள் தானா சொல்லுங்கள்.கேள்வியும் பதிலும்

Post by மாலதி Mon Jan 23, 2012 7:22 am

கண்டிப்பாக அனைவரும் அறிய வேண்டிய செய்தி. நண்பர் சக்தி அவர்களின் தொகுப்புகள் அனைத்தும் அறிய தகவல்கள் அடங்கியவைகள் . நன்றிகள் சக்தி அறிவிப்பு


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum