TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 1 - 11

Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 1 - 11 Empty அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 1 - 11

Post by வாகரைமைந்தன் Sat Jun 05, 2021 11:54 pm

அன்று சிறீநிதி பாடிய பாடல் ஒன்று



இன்று அதே சிறீநிதி  லாக்டவுண் சமயத்தில் வீட்டில் இருந்து பாடிய பாடல்.



Last edited by வாகரைமைந்தன் on Mon Jun 14, 2021 9:55 pm; edited 10 times in total
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1916
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 1 - 11 Empty அன்றும் இன்றும் பாடல் தொடர் - 2

Post by வாகரைமைந்தன் Sun Jun 06, 2021 2:18 pm


கவிஞர் கண்ணதாசனுக்குப் பிடித்த பாடல் இது..முதல் பாடலும் கூட.
 1949ல் அவருக்கு திரை‌க்கதவு திறந்தது. கேமரா ‌மேதை கே.ராம்நாத் இயக்கத்தில் 'கன்னியின் காதலி' என்ற படத்தில் எழுதிய 'கலங்காதிரு மனமே.உன்‌ கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே' என்ற பாடலாகும்.அந்தப் பாடலை கதாநாயகி மாதுரிதே‌விக்காக டி.வி.ரத்னம் பாட, முதல் பாட்டே பிரபலமானது. ஷேக்ஸ்பியரின் பிரபல நகைச்சுவை நாடகம் ஒன்றைத் தழுவி அப்படம் ‌எடுக்கப்பட்டது. (கண்ணதாசன் என்ற முத்தையா -ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981)



அவர் எழுதி வெளிவந்த கடைசி திரைப்படம் மூன்றாம் பிறை.கண்ணே கலைமானே ..என்ற பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாட இளையராஜா இசை அமைத்துள்ளார்.காட்சி கமல்,சிறீதேவி



Last edited by வாகரைமைந்தன் on Mon Jun 14, 2021 9:42 pm; edited 1 time in total
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1916
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 1 - 11 Empty அன்றும் இன்றும் பாடல் தொடர் - 3

Post by வாகரைமைந்தன் Sun Jun 06, 2021 10:17 pm

ஜி.வி.பிரகாஷ் அன்று...



இன்று...பாடல் காட்சி



படம்- சர்வம் தாள மயம்
இசை - ஜி.வி.பிரகாஷ் குமார்
பாடல் - மதன் கார்க்கி
பாடியவர் - ஸ்ரீராம் பார்த்தசாரதி
-
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1916
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 1 - 11 Empty அன்றும் இன்றும் பாடல் தொடர் - 4

Post by வாகரைமைந்தன் Mon Jun 07, 2021 6:27 pm

சைந்தவி சிறிவத்சன் அன்று..



சைந்தவி பிரகாஷ் இன்று..
இசை ஸ்டெபன் சக்காரியா,வரிகள் சூரியவேலன்+ஜயா ராதாகிரிஷ்னன்,குரல் ஸ்டெபன்+சைந்தவி பிரகாஷ்



      அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 1 - 11 Saindhavi-21-12-2

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 1 - 11 Saindhavi-21-12-3

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 1 - 11 Saindhavi-21-12-4
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1916
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 1 - 11 Empty அன்றும் இன்றும் பாடல் தொடர் - 5

Post by வாகரைமைந்தன் Tue Jun 08, 2021 11:12 am

கங்காதரன் என்ற கங்கை அமரன்

 
அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 1 - 11 Ilayarajaa-ang-gangaiamaran

’இங்கேயும் ஒரு கங்கை’ 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முரளி, தாரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் வரும் ஒரு பாடலை முதல் பாடலாக கொள்ளலாம்.



அண்டாவ காணோம் (Andava Kaanom) என்பது சி.வேல்மதி என்ற அறிமுக இயக்குநரால் இயக்கப்பட்ட, அன்று  திரைக்கு வராத தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும்.பின்னர் சென்ற ஆண்டு ஓடிடி யில் வெளியானது. இத்திரைப்படத்தில் சிரேயா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதில் வரும் பாடலை முதல் பாடலாக கொண்டாலும்,அது திரைக்கு வரவில்லை.அதனால் இப்போது வந்திருக்கும் அந்தப் பாடல் கடைசிப் பாடலாக மாறுகிறது.உண்மையில் 2016 இல் வெளிவந்த திருநாள் படத்தில் அமைந்த அன்பால் அமைந்த உலகம் அவர் பாடிய கடைசிப் பாடல்.இன்னும் அவர் சினிமாத் துறையில் இருப்பதால்...தொடரலாம்.



முதல் கதாசிரியர்,இயக்குனராக கோழி கூவுது  படம் (1982)
முதல் இசையமைத்த படம் ஒரு விடுகதை ஒரு  தொடர்கதை (1979)
முதல் பாடலாசிரியர் 16 வயதினிலே (1977)
முதல் நடித்த படம் இதயம் (1991)
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1916
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 1 - 11 Empty அன்றும் இன்றும் பாடல் தொடர் - 6

Post by வாகரைமைந்தன் Wed Jun 09, 2021 12:41 pm

கே. எஸ். சித்ரா (கிருஷ்ணன் நாயர் சாந்தகுமாரி சித்ரா)

’நீதானே அந்தக் குயில்’ (1986) படத்தில் பூசைக்கேத்த பூவிது என்ற பாடல்..இளையராஜா இசையில் கங்கை அமரனுடன் சித்திரா பாடியிருக்கிறார்.  இந்தப் பாடல் சித்திராவின் முதல் பாடலாக இருந்தாலும்,1985 இல் வெளிவந்த ’பூவே பூச்சூட வா’ என்ற படத்தில் பாடிய, சின்னக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா..என்ற பாடல் முதலில் வெளிவந்த திரைப்படத்தின் பாடலாகி,அந்தப் பாடலுக்காக ’சின்னக்குயில்’ என்ற பெயரையும் வாங்கிக் கொடுத்தது.மலையாளத்தில் அறிமுகமான அவரை ’வானம்பாடி’ என அழைக்கிறார்கள்.




ஓகே கண்மணி’ படத்தில் மலர்கள் கேட்டேன்...என்ற பாடல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடிய கடைசிப் பாடல்...



வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1916
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 1 - 11 Empty 7.எஸ்.பி.பாலசுப்பிரமணியன்

Post by வாகரைமைந்தன் Thu Jun 10, 2021 11:38 am

எஸ். பி. பாலசுப்பிரமணியம் -(Sripathi Panditaradhyula Balasubrahmanyam - 4 சூன், 1946 – 25 செப்டம்பர், 2020),

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 1 - 11 Family

இவரது முதலாவது தமிழ் பாடல் எம். எஸ். விஸ்வநாதன் இசையில் எல். ஆர். ஈஸ்வரியுடன் ஓட்டல் ரம்பா என்ற திரைப்படத்துக்காகப் பாடிய "அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு" என்பதாகும்.. ஆனால் இத்திரைப்படம் வெளிவரவில்லை. அடுத்ததாக 1969 இல் சாந்தி நிலையம் படத்தில் வரும் இயற்கையெனும் இளையகன்னி என்ற பாடலை ஜெமினி கணேசனுக்காகப் பாடினார். ஆனால் இப்படம் வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆருக்காக அடிமைப் பெண் திரைப்படத்தில் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் வெளிவந்தது. இதுவே இவர் பாடி வெளிவந்த முதலாவது திரைப்படம் ஆகும். இவர் நடித்த முதல் படம் முகமது பின் துக்ளக் (1971) ஆனாலும் அவரது சிறந்த நடிப்பை வெளிக்காட்டிய படம் மனதில் உறுதி வேண்டும் (1987)

தொலைக்காட்சித் தொடர்,பின்னணிக்குரல்,பின்னணிப் பாடகர்,நடிகர்,இசையமைப்பாளர்...என பன்முகக் கலைஞராக இருந்தார்.

2017 இல் அழகு தொடரில் அழகம்மா பாடல் கடைசி தொலைக்காட்சி தொடர் பாடலாகவும்,இந்த ஆண்டு டி.இமான் இசையில் ரஜனிகாந்த் நடித்து  வரவிருக்கும் அண்ணாத்த பட அறிமுகப் பாடல் கடைசிப் பாடலாகவும் இருக்கலாம்.


 
கடைசிப் பாடல்
                                                                                                     
   

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1916
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 1 - 11 Empty 8.இசைஞானி இளையராஜா

Post by வாகரைமைந்தன் Fri Jun 11, 2021 12:54 am

ஞானதேசிகன், இராசையா -இளையராஜா பிறப்பு: சூன் 2, 1943

1970 களில் சென்னையில், இளையராஜா ஒரு இசைக்குழுவில் கிட்டார் வாசித்தார். 14 வயதில், தனது மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன் தலைமையிலான "பாவலர் பிரதர்ஸ்" என்ற பயண இசைக் குழுவில் சேர்ந்தார்,

1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவருடைய தந்தை: இராமசாமி ; தாயார்: சின்னத்தாயம்மாள். பாவலர் வரதராஜன், தாவீது டேனியல் பாஸ்கர் (ஆர். டி. பாஸ்கர்), கங்கை அமரன் என்ற அமர் சிங் ஆகிய மூவரும் இவரது உடன்பிறப்புகள் ஆவார். இவருடைய மனைவியின் பெயர் ஜீவா. இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன், யுவன் ஷங்கர் மற்றும் பவதாரிணி.

இளையராஜா முதல் இசையமைத்த பாடல் முன்னாள் பிரதமர் நேரு இறந்த சமயத்தில் கண்ணதாசன் எழுதிய பாடலுக்காகும்.சினிமாவில் 16 வயதினிலே என்ற படத்துக்கு இசையமைத்தார்.இந்தப் படத்தில் கமல் சிறிதேவி ரஜனி முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அந்தப் படத்தில் இசையமைத்து பாடிய பாடல்...


                                                                                               
இன்று யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து இசையமைத்த  மாமனிதன் படத்தில் இளையராஜா பாடும் பாடல்..

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1916
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 1 - 11 Empty 9.வைரமுத்து

Post by வாகரைமைந்தன் Fri Jun 11, 2021 9:26 pm

u10111.png
வைரமுத்து (வைரமுத்து இராமசாமி)-பிறப்பு- 13 ஜூலை 1953 ,அவர் மனைவி பொன்மணி,மீனாட்சி மகளீர் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ஆவார்.மதன் கார்க்கி,கபிலன் அவர்களுடைய மகன்கள்.

இளையராஜா பிரிவு,அவர் மனைவி பாடல்களை எழுத துணை நிற்பது, ,சின்மையின் (மீ டூ) குற்றச்சாட்டு என சர்ச்சைகளும் வைரமுத்துவை பின் தொடர்ந்தன.

நிழல்கள் (1980) படத்தில் இது ஒரு பொன்மாலைப் பொழுது - என்ற  பாடல், சினிமாத்துறையின்  ஆரம்பம் எனலாம்.


கவிப்பேரரசு வைரமுத்துவின் ’நாட்படு தேறல்’ 100 பாடல்கள் திட்டம் - இதில் 100 இசையமைப்பாளர்கள் – 100 பாடகர்கள் – 100 இயக்குநர்கள் என வெவ்வேறு உள்ளடக்கங்களில் உலகத்தின் எல்லாப் பொருள் குறித்தும் பாடப்படும் பாடல்கள் நிகழ்ச்சி கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

இந்த நூற்றாண்டின் மறக்க முடியாத மனிதத் துயரம் ஈழத்தில் நடந்த இனப்படுகொலை. உடலோ வெளிநாட்டில்; உயிரோ தாய்நாட்டில். புலம்பெயர் மக்களின் புலம்பல் இப்பாடல்.

தமிழ் ஈழக்காற்றே...என்ற பாடல், வரிகள் வைரமுத்து,இசையரசன் இசையில் சத்தியப்பிரகாஷ் பாடுகிறார்.



நாட்படு தேறல் திட்டத்தில் நாக்குச் சிவந்தவரே.. என்ற பாடல்,வைரமுத்து வரிகளை கிட்டார் இசைக்கலைஞர்  வாகு மசான்,  இசையமைத்துப் பாடுகிறார்.

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1916
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 1 - 11 Empty 10.டி. எம். சௌந்தரராஜன்

Post by வாகரைமைந்தன் Sat Jun 12, 2021 6:22 pm

டி. எம். சௌந்தரராஜன் (மார்ச் 24, 1922 - மே 25, 2013)

2021-011.png
சௌராட்டிரக் குடும்பத்தில் (சௌராஸ்ரா=நூறு பகுதிகளில் வாழ்ந்தவர்கள் ) மதுரையில் தொ. அ. மீனாட்சி ஐயங்கார் என்பவரின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் சௌந்தரராஜன் உடன்பிறப்புகள் தனலட்சுமி, சீனிவாசன். சௌந்தரராஜன் 1946 இல் சுமுத்திரா என்பவரைத் திருமணம் புரிந்தார். டி.எம்.சவுந்திரராஜன் – சுமித்ரா தம்பதிக்கு டி.எம்.எஸ்.பால்ராஜ், டி.எம்.எஸ். செல்வக்குமார் என்ற மகன்களும், மல்லிகா என்ற மகளும் உள்ளனர். .  பிரபல வித்துவான் பூச்சி சிறீனிவாச ஐயங்காரின் மருமகன் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக இசைப் பயிற்சி பெற்று திரையுலகில் நுழைந்தார். பல ஆண்டுகளாகக் கச்சேரி செய்து வந்த இவரை சுந்தரராவ் நட்கர்னி என்பவர் தனது கிருஷ்ண விஜயம் திரைப்படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார்.எல்லா நடிகர்களின் குரலுக்கு ஏற்ப பாடக்கூடிய டி.எம்.எஸ். 1962 இல் பட்டினத்தாரில் நடித்ததன் மூலம் நடிகரானார்.



படம் கிருஷ்ன விஜயம் (1946) ,குரல் டி.எம்.எஸ்,இசை சிதம்பரம் ஜயராமன்+எஸ்.எம்.சுப்பையா நாயுடு
வா‌லிப‌ன் சு‌ற்று‌ம் உலக‌ம் (2005) படத்தில் சிவா,எம்.ஜி.ஆர்.ஹரி,ஏ.ஆர்.லலிதசாமி,லதா,மனோரமா நடித்துள்ளனர்.



அந்தப் படத்தில் ஒரு பாடல் உருவாகும் காட்சி. இந்தப் படத்தில் எம்.எஸ்.விஸ்வனாதன்,வாலி டி.எம்.எஸ்,எஸ்.பி.பி,.பி.சுசீலா ஆகியோர் இணைந்து பங்காற்றி இருந்தனர். .



(திரை உலகில் சௌராஸ்ர மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள்... எம்.என்.ராஜம்,வெண்ணிறஆடை நிர்மலா , ஏ.எல். ராகவன், போன்ற சிலர்.
குஜராத் மற்றும் வட இந்தியாவிலும்,பெரும்பாலோர் தமிழ் நாட்டிலும் வாழ்கிறார்கள்.தமிழ் நாட்டை சேர்ந்த பலருக்கும் அவர்கள் தாய் மொழி தெரியாது.ஆங்கில வழிக் கல்வி என சொல்லி சமாளிக்கிறார்கள்.)
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1916
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 1 - 11 Empty 11.கண்ணதாசன் மேலதிக இணைப்பு

Post by வாகரைமைந்தன் Mon Jun 14, 2021 9:53 pm

உடல்நலக் குறைவு காரணமாக 1981, ஜூலை 24இல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்திய நேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22இல் எரியூட்டப்பட்டது.


கண்ணதாசனின் வாழ்க்கைப் போல் அமைந்த பாடல் -இரத்தத்திலகம் (1963) கண்ணதாசன் வரிகளில்  டி.எம்.சௌந்தரராஜன்



அபூர்வ ராகங்களில் (1975) கண்ணதாசன்+நாகேஷ் வரும் காட்சி



அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 1 - 11 2021-012
அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 1 - 11 2021-013
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1916
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 1 - 11 Empty Re: அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 1 - 11

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum