TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 2 - 10

Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 2 - 10 Empty அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 2 - 10

Post by வாகரைமைந்தன் Sun Jun 13, 2021 11:12 am

இன்று ஜி.வி.பிரகாஷ் அவர்களின் பிறந்த நாள் (ஜூன் 13) அவரை வாழ்த்தி சைந்தவியுடன் இணைந்து பாடிய ஒரு பாடல்.சமீபத்தில் சைந்தவி தனது தளத்தில் பகிர்ந்த பாடல் இது.




இன்றைய புதியவர்கள் நாளைய பிரபலங்கள்... அவர்களையும் நினைவு கூறுவோம்.

பிரியங்கா என்.கே (நல்லதம்பி-காஞ்சனா) : 21. Juni 1997.விஜய் தொலைக்காட்சி சுப்பர் சிங்கரில் ஆரம்பித்த பயணம்.குரல் வளம் மிக்க இவர் ஒரு பல் மருத்துவரும் கூட.

சுப்பர் சிங்கரில் கண்கள் எங்கே… என்ற பாடல் அன்று பாடியது.



இன்று இளமாறன் இசையில் பிரியங்க்காவுடன் ,என்.எம்.பாலச்சந்திரன்,மதுசிறி,வைஷ்ணவி+வைபூர்ணன் வரதராஜன்.



என் ஆளோட செருப்பக் காணோம் (2017) படத்தில் அபிமானியே ..என்ற பாடல் பிரியங்காவுடன் இஷான் தேவ்.



Last edited by வாகரைமைந்தன் on Fri Jun 18, 2021 4:00 pm; edited 8 times in total
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1910
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 2 - 10 Empty அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 2 - 2

Post by வாகரைமைந்தன் Sun Jun 13, 2021 11:47 am


மலேசியா வாசுதேவன் -(சூன் 15, 1944 - பெப்ரவரி 20, 2011)

u1010.png
கேரளத்தை பிறப்பிடமாகக் கொண்ட மலேசியாவைச் சேர்ந்த சத்து நாயர்-அம்மாளு தம்பதியருக்கு மலேசியா வாசுதேவன் 8-வது மகனாக பிறந்தார். மலேசியாவில் தமிழர் இசைக்குழு ஒன்றில் முக்கிய பாடகராக விளங்கினார். மலேசியாவில் பல நாடகங்களில் நடித்த அனுபவத்தை நம்பிக்கையாகக் கொண்டு சென்னை வந்து திரைப்பட வாய்ப்புகளை தேடினார். மலேசியத் தமிழர்கள் கூட்டாக தயாரித்த ‘இரத்தப் பேய்’ என்ற தமிழ் படத்தில் முதன்முதலாக நடிகனாக அறிமுகமாகினார். இளையராஜாவின் ‘பாவலர் பிரதர்ஸ்’ இசைக்குழுவில் சேர்ந்து பல மேடைக் கச்சேரிகளில் பாடி வந்தார்.
டெல்லி டு மதராஸ் (Delhi to Madras)- 1972, வி குமார் இசையில் சுவர்ணாவுடன்... ‘பாலு விக்கிற பத்தம்மா’ என்ற பாடல்



பாடகராக இருந்ததோடு தமிழ் சினிமாவில்‘ஒரு கைதியின் டைரி’ படத்தில் வில்லனாக நடிக்க ஆரம்பித்தவருக்கு,  நடிகராகவும்,இசையமைப்பாளராகவும் வலம் வந்தார். கடைசியாக நடித்த படம் இத்தனை நாளாய் எங்கிருந்தாய்.கடையாக பாடல் எழுதிய பாடல் பலம் (2009) படத்தில் தேவதையே.. என்ற பாடல்.இசையமைத்தவர் அவருடைய மகன் யுகேந்திரன் வாசுதேவன் நாயர்.

கடைசியாக பாடிய பாடல் 2010 இல் பலே பாண்டியா படத்தில் பலர் பாடிய பாடலில் மலேசியா வாசுதேவனும் பாடியுள்ளார்.



வானொலி - மலேசியா வாசுதேவன் பாடல்கள் கேட்க.. படத்தை சொடுக்கவும்.

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 2 - 10 Malaysia-vasudevan-radio
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1910
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 2 - 10 Empty அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 2 - 3

Post by வாகரைமைந்தன் Mon Jun 14, 2021 11:19 am

சிறிநிசா ஜயசீலன் செப்.26 1999

இவரும் பிரியங்காவுடன் சுப்பர் சிங்கரில் தனது இசைப் பயணத்தை தொடங்கினார்.



இன்று

சாம் விஷால் உடன்



அம்மா கணக்கு (2016) படத்தில் மாட்ஸ் டப்ஃப் (Maths Tough) நா.முத்துக்குமார் பாடலைப் பாடியிருந்தார்.

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1910
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 2 - 10 Empty அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 2 - 4 -நித்தியசிறி மகாதேவன்

Post by வாகரைமைந்தன் Mon Jun 14, 2021 9:32 pm

நித்யஸ்ரீ மகாதேவன் ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. டி. கே. பட்டம்மாள் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது
டி.கே.பட்டம்மாளின் மகன்கள் சிவகுமார் மற்றும் லட்சுமணன் ஆவர். சிவகுமாரின் மகள், நித்யஸ்ரீ மகாதேவன் ஆவார். நித்யஸ்ரீயின் சகோதரியின் மகளாகிய லாவண்யா சுந்தரராமன், வளர்ந்துவரும் இளம் இசைக் கலைஞர் ஆவார்.

நித்யஸ்ரீ மகாதேவன், தமிழ்நாட்டில், திருவையாற்றில் லலிதா மற்றும் சிவகுமார் தம்பதியருக்கு மகளாக ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி, 1973 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர், பிரபல கர்நாடக இசைப் பாடகியான டி. கே. பட்டம்மாள் அவர்களின் மகன்வழி பேத்தி மற்றும் மிருதங்க வித்வானான பாலக்காடு மணி ஐயரின் பேத்தி ஆவார்.
தனுஜாஸ்ரீ மற்றும் தேஜாஸ்ரீ என்று இரு மகள்கள் உள்ளனர். இவரின் கணவர் மகாதேவன் டிசம்பர் 21 ஆம் தேதி, 2012 ஆம் ஆண்டில் அடையார் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

கர்நாடக இசைப்பாடகியான இவர் 1998 இல் ஜீன்ஸ் படத்தில் கண்ணோடு காண்பதெல்லாம்… என்ற புகழ் பெற்ற பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடினார்.



சங்கமம் (1999) படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில்  வைரமுத்து வரிகளில் சௌக்கியமா..என்ற பாடலும் அவர் பாடிய அனைத்துப் பாடல்களைப் போல் பெரும் வரவேற்பை பெற்றது.



அவர் பாடிய கடைசிப் பாடல் 2018 இல் மோகினி படத்தில் பா.விஜய் வரிகளுக்கு மெல்வின் இசையில் பிரசாந்தி,விக்னேஷ் நடராஜன் உடன் மோகினியின் ஆத்திரம் (Mohinis Rage )பாடியிருந்தார்.

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1910
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 2 - 10 Empty அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 2 - 5 பி.சுசீலா

Post by வாகரைமைந்தன் Tue Jun 15, 2021 11:12 am

பி. சுசீலா அல்லது புலப்பாக்க சுசீலா (பிறப்பு: நவம்பர் 13, 1935)

சுசீலா ஆந்திரா மாநிலத்தில் உள்ள விஜயநகரத்தில் புலப்பாக்க முந்தராவ், சிறீசம்மா ஆகியோருக்கு பிறந்த சுசீலாவுக்கு, 5 சகோதரிகளும் 3 சகோதரர்களும் உள்ளனர். இவரது தந்தை ஒரு வழக்குரைஞராக இருந்தார்.  ஆந்திராவின் புகழ்பெற்ற இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றவர்

2012 இல் மறைந்த டாக்டர் மோகன் ராவை 1957 இல் திருமணம் செய்து கொண்ட சுசீலாவிற்கு ஜயகிறிஷ்ணா என்ற மகன் உள்ளார்.

சுசீலா 1950 ஆம் ஆண்டில் சென்னை வானொலியில் பாப்பா மலர் நிகழ்ச்சியில் பாடத்தொடங்கினார். சுசீலாவின் இசைத்திறமையைக் கண்ட இயக்குநர் கே. எஸ். பிரகாஷ்ராவ் தனது பெற்றதாய் படத்தில் முதன் முதலில் பின்னணி பாட வைத்தார். 1953 ஆம் ஆண்டில் இப்படத்தில் ஏ. எம். ராஜாவுடன் இணைந்து பெண்டியாலா நாகேஸ்வரராவின் இசையமைப்பில் எதுக்கு அழைத்தாய் என்ற பாடலைப் பாடினார். பாடல் : எம் எஸ் சுப்ரமணியம நடிப்பு : MN நம்பியார் & TD வசந்தா



1955 இல் வெளிவந்த கணவனே கண் கண்ட தெய்வம் படத்தில் இடம்பெற்ற எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும், உன்னைக் கண் தேடுதே என்ற பாடல்கள் சுசீலாவுக்குப் பெயரை வாங்கிக் கொடுத்தன.

ஆடை (2019) படத்தில் ரக்சா ரக்சா ஜகன்மாதா என்ற பாடல் இடம்பெற்றுள்ளது.முதல் வரிகள் இன்றைய குரலிலும் பின்னர் பல வருடங்களுக்கு முன்னர் ஒலிப்பதிவான குரலும் ஒலிக்கிறது.



கடைசியாக பாடிய பாடல் கே.ஆர்.விஜயா நடித்த நிலவில் மழை  (2011) படத்தில் சுரேந்தர் இசையில் புதிய கரம் கொண்டு.. என்ற பாடல்.எனினும்..

2007 இல், சில நேரங்களில் படத்தில் பாடிய  பொட்டு வைத்த .. என்ற பாடல் கடைசிப் பாடலாக கருதப்படுகிறது.

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1910
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 2 - 10 Empty 6.நித்தியசிறீ வெங்கடராமன்

Post by வாகரைமைந்தன் Tue Jun 15, 2021 11:36 pm

நித்தியசிறீ வெங்கடராமன் 12 ஜூலை 1999

பிரியங்கா,சிறிநிசா,நித்தியசிறி மூவரும் ஒன்றாக சுப்பர் சிங்கரில் கலந்து கொண்டவர்கள்.



இன்று நித்தியசிறி+சிறிநிசா சேர்ந்து பாடிய பாடல்...



    இந்தியன் ஐடல் (Indian Idol Junior) போட்டியில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றார்.

 

இந்தப் போட்டியை Sony Entertainment Television, Mumbai 2015 இல் ஒழுங்கு செய்திருந்தது.



இன்று…
வால்ட் டிஸ்னி தயாரித்த பன்மொழி ஆல்பம் ஒன்றில் (விஸ்வாசம் தைரியம் உண்மை) பாடிய பாடல் ஒன்று.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1910
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 2 - 10 Empty 7.ஜென்சி

Post by வாகரைமைந்தன் Wed Jun 16, 2021 11:03 am

ஜென்சி அந்தோனி 23 அக்டோபர் 1961

ஜென்சி 1983 இல் கிரெகரி தாமஸ் என்ற மலையாளத் தொழிலதிபரை மணந்தார். அவருக்கு நித்தின் என்ற மூத்த மகனும், நூபியா என்ற இளைய மகளும் இருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் இளையராஜா மலையாளத்தில் கிறித்தவப் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த இவரைப் பற்றிக் கேள்விப்படவே, இவரைத் தாம் இசையமைத்துக் கொண்டிருந்த "திரிபுரசுந்தரி" என்ற படத்தில் "வானத்துப் பூங்கிளி" என்ற பாடலைப் பாட அறிமுகப் படுத்தினார்.இந்தப் பாடலை எஸ்.ஜனகியுடன் சேர்ந்து பாடியுள்ளார்.



கடைசியாக 1982 இல் 5 பாடல்களைப் பாடிய பின்  ஜென்சியின் குரல் தமிழ் சினிமாவில் ஒலிக்கவில்லை. 1982 இல் கடைசியாக  பொன்னி படத்தில் பாடிய  பூச்சூடிப் பொட்டும் வெச்சு… என்ற பாடலும் படமும் வெளிவரவில்லை.

திருமணத்திற்குப் பின் பாடுவதை நிறுத்தி விட்டார் என்று கூறிக் கொண்டார்கள்.ஆனாலும் அது உண்மை கிடையாது. தமிழ் சினிமா அவரைக் கண்டு கொள்ளவில்லை-யாரும் அவரை பாட அழைக்கவில்லை.அதன் பின்னர் மலையாளப் பாடல்கள்  பாடிக் கொண்டும்,ஆசிரியையாகவும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

 இந்தப் பாடல் எங்கேயோ கேட்ட குரல் (1982)  படத்தில் ஆத்தோரம் காத்தாட ..என்ற பாடல்,இளையராஜா இசையில் ரஜனிகாந்த்,ராதா நடித்தது.

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1910
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 2 - 10 Empty 8.மகதி

Post by வாகரைமைந்தன் Thu Jun 17, 2021 11:37 am

மஹதி (பிறப்பு: 10 பிப்ரவரி 1985)

டாக்டர் சிறிகுமார் ஐ 16/03/2008 இல்  திருமணம் செய்து கொண்ட அவருக்கு சமத்(27.02.2011) என்ற குழந்தை உள்ளது.அவரின் பெற்றோர் திருவையாறு சேகர்-வசந்தி ஆவர்.

2003 இல் சாமி திரைப்படத்தில் இடம் பெற்ற “ஐய்யயோ ஐய்யயோ பிடிச்சிருக்கு”,  ஹரிஸ் ஜயராஜ் இசையில் ஹரிகரனுடன்  பாடலைப் பாடியதன் மூலம் முதன் முதலாகத் திரையுலகில் பெயர் பெற்றார்.



2019 இல் 'தேவ்’ படத்தில் ஹரிஸ் ஜயராஜ் இசையில் ஹரிச்சரன், கிறிஸ்தோபர் ஸ்டான்லி உடன் பாடிய பாடல் She Is My Girl.



2021 இல் கேர்சன் இசையில் வஞ்சி அவள்.. என்ற பாடலை சாம் விசாலுடன் பாடியிருந்தார்.



2012 இல் சுவேதா மோகன் உடன் பாடிய பாடல்



கர்நாடக இசை கச்சேரிகளில் பாடி வரும் மஹதியின் ஒரு கர்நாடக இசைப் பாடல்

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1910
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 2 - 10 Empty 9. எஸ்.ஜானகி

Post by வாகரைமைந்தன் Fri Jun 18, 2021 11:44 am

சிஷ்டலா ஸ்ரீராமமூர்த்தி ஜானகி என்ற எஸ்.ஜானகி, ஏப்ரல் 23, 1938  ஆந்திரப் பிரதேசம் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் ராமமூர்த்தி - சத்யவதி தம்பதிகளுக்கு பிறந்தார்.ஜானகி 1959 இல் வி. ராம்பிரசாத்தை (1997 இல் காலமானார்) மணந்த இவருக்கு மகன் முரளி கிருஷ்ணா.

நாதசுர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்றார். சென்னைக்கு இடம்பெயர்ந்த ஜானகி ஏவிஎம் ஸ்டூடியோவில் இணைந்து திரைப்படத்துறையில் நுழைந்தார். 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த விதியின் விளையாட்டு என்ற படத்தில் இடம்பெற்ற பெண் என் ஆசை பாழானது ஏனோ.. என்ற பாடல் இவரது முதல் பாடல் ஆகும்.

விதியின் விளையாட்டு வெளிவரவில்லை.அடுத்து 1957 இல்
மகதல நாட்டு மேரி படத்தில், கண்ணுக்கு நீரே .. என்ற பாடல் பி.பி.சிறினிவாஸ் உடன் பாடி உள்ளார்.வரிகள் எம்.பி.சிவம்,இசை ஆர்.பார்த்தசாரதி.  



விருது வாங்கிய 16 வயதினிலே (1977) படத்தில் செந்தூரப் பூவே…



கொஞ்சும் சலங்கையில் சிங்கார வேலனே...பாடல்



திருநாள் (2016) படத்தில் முத்து விஜயன் வரிகளில் சிறிகாந்த் தேவா இசையில் தந்தையும் யாரோ..பாடல்



ஆண் குரலில் சுசீலாவிடன்..

வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1910
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 2 - 10 Empty 10.சித்தாரா கிரிஷ்னகுமார்

Post by வாகரைமைந்தன் Fri Jun 18, 2021 3:58 pm

சித்தாரா கிரிஷ்னகுமார்

சித்தாரா கிருஷ்ணகுமார் (Sithara Krishnakumar) (பிறப்பு: சூலை 1, 1986) மலப்புறம் கேரளா,திருமணம் 2007 ஆகஸ்ட் 31, டாக்டர் எம்.சாஜிஷ் இருதயநோய் மருத்துவர்,மகள் சாவன் ரித்து (2013 ஜூன் 9)

ஒரே பாடலில் இதயத்தை தொட்ட பாடல்,கண்கள் நீயே...முப்பொழுதும் உன் கற்பனைகள்(2012) படத்தில் தாமரையின் வரிகளில் ஜி.வி.பிரகாஷ் இசையில்..பாடியிருந்தார்.



தமிழில் 7 படங்கள், கடைசி எட்டுத்திக்கும் மதயானை (2015)
கண்கள் நீயே.. என்ற பாடலை வைத்து ஒரு கணொலி எடுத்திருந்தார்...



நாளை  அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 3 இல் சந்திக்கலாம்.
வாகரைமைந்தன்
வாகரைமைந்தன்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1910
Join date : 23/05/2021

Back to top Go down

அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 2 - 10 Empty Re: அன்றும் இன்றும் பாடல் தொடர் பகுதி 2 - 10

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum