Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
போகலாம் வாங்க – சீனா - 4 – சீனா பார்த்த தமிழகம் .
2 posters
TamilYes :: இது உங்கள் பகுதி :: சுற்றுலா
Page 1 of 1

சியான்(Xi’an) முந்தைய சங்கன்(Chang’an) தலைநகரமாகக் கொண்டு கி.பி. 618 இலிருந்து 904 வரை (இ)டாங்கு அரசகுடும்பத்தினர், நல்லாட்சி புரிந்துள்ளனர்.
கி.மு. 221இலிருந்து 207 வரை சங்கன்(சியான்) நகரை ஆட்சி செய்த குவின்(Qin) பேரரசு, அங்கிருந்த நகரின் தென்கிழக்குப் பகுதியிலிருந்த ஒரு ஏரியைப் பூங்காவாக புனரமைத்தது. பின்னர், கி.பி. 618இலிருந்து 907 வரை ஆண்ட(இ)டாங்கு (Tang) பேரரசு அந்தப் பூங்காவை மக்கள் பார்வைக்கான பொது இடமாக மாற்றி வடிவமைத்தது.
அந்த ஏரியின் கரையில் கவிஞர்கள் கவிதைகள் எழுதியதும், மக்கள் ஆடிப் பாடியதும் எனப் பல நிகழ்வுகள் சீன இலக்கியங்களில் பதிவாகின. 2008ஆம் ஆண்டு சீன அரசு, இந்த இரண்டு பேரரசுகளின் காலத்திலும் அந்த ஏரி எப்படி இருந்ததோ அவற்றையெல்லாம் சான்றுகளோடு பதிவு செய்து, அந்தப் பூங்காவைப் புதுப்பித்தது.
செங்குவான் என்ற மரபில் வந்த மன்னர் ஒருவர் தனது படை பரிவாரங்களுடன் கோபத்துடன் போருக்குச் செல்லுவது போல் மிகப்பெரிய அளவில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சையில் உலகமே வியக்கும் வண்ணம் ஒரு மாபெரும் கலைப்படைப்பை உருவாக்கிய மன்னர் இராசராசனின் சிலையை , இன்றுவரை அந்தக் கோயிலுக்குள் நம்மால் வைக்க முடியவில்லை. இராசஇராச மன்னனின் குடவோலை முறை, அவரது சமத்துவப் பார்வை, நில அளவீ்ட்டு முறை என இராச இராசனின் எத்தனை அருவினைகளை நாம் காட்சிப்படுத்தி யிருக்கவேண்டும்? இன்றும் முடியவில்லையே!
தமிழகம் வந்த முதலாவது சீனப்பயணி பாகி யான் என்பவர், சீனாவின் நான் சிங் பகுதியிலிருந்து வந்தவர். இரண்டாவது வந்த சீனப்பயணி யுவான் சுவாங்கு, சியான் நகரத்திலிருந்து வந்தவர். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் யுவான் சுவாங்கு என்ற சீனப்பயணி தமிழகம் வந்தார்
தமிழ்நாட்டின் மதுரை வீதிகளில், யுவான் சுவாங்கு நடந்து வந்த போது, மக்கள் அனைவரும் ‘பாண்டிய மன்னர் வருகிறார். பாண்டிய மன்னர் வருகிறார்’ எனப் பரபரப்பாக ஒதுங்கி வணக்கம் செலுத்தி வழிவிடுகின்றனர். இதைக் கண்ட, யுவான் சுவாங்கு யார் மன்னன் என்று தேடியதையும், பாண்டிய மன்னனும் மக்களைப் போலவே சாதாரணமாக இருக்கிறார் என்பதையும் எந்த ஆடை, ஆபரண வேறுபாடும் இல்லை என்பதையும், தமது பயணக் குறிப்பிலே எழுதிவைத்திருந்தார்.
அப்போது அரசாண்டு கொண்டிருந்த டாங் பேரரசர், கி.பி. 652இல், யுவான் சுவான் கொண்டுவந்திருந்த பொருட்களைக் கொண்டு புத்த கோயில் ஒன்றை எழுப்பினார். 64கோல்(மீட்டர்) உயரத்தில் அமைக்கப்பட்ட அந்தக் கோயில் இன்றைக்கு ‘Giant Wild Goose Pagoda’ என்றழைக்கப்பட்டு வருகிறது. அங்கு இன்றைக்கும் யுவான் சுவான் கொண்டுவந்திருந்த பல பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
(இ)டாங்கு மன்னராட்சிக்கும் தமிழகத்திற்கும் அக்காலத்திலிருந்தே பல இன்றியமையாத் தொடர்புகள் உண்டு. சோழர்கள், (இ)டாங்கு அரசர்களுடன்தான் வணிகத் தொடர்புகளைப் பேணி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கி.பி. 1225-ஆம் ஆண்டில், தமிழகம் வந்திருந்த மற்றொரு சீன புவியியலாளர் சா யூ-குவா என்பவர், பிற்காலச் சோழர்களின் படைகளைப் பற்றி பின்வருமாறு எழுதினார்:
இந்நாடு மேற்கிலுள்ள நாடுகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தினரிடம் அறுபது ஆயிரம் போர் யானைகள் உள்ளன. ஒவ்வொரு யானையும் 7 அல்லது 8 அடி உயரம் உள்ளது. போரிடும்போது யானைகளின் மீது அம்பாரிகள் அமைத்து அவற்றில் வீரர்கள் அமர்ந்து கொண்டு நெடுந்தொலைவிற்கு அம்பு எய்கின்றார்கள். அருகே உள்ளவர்கள் ஈட்டிகளால் தாக்குகின்றனர்.
வெற்றி அடைந்தவுடன் யானைகளுக்கு விருந்து கொடுத்து கௌரவிக்கின்றனர். சிலர் அவைகளுக்கு பொன்னாலான அம்பாரிகளைப் பரிசாகத் தருகின்றன. ஒவ்வொரு நாளும் அரசர் முன் யானைகள் கொண்டுவரப்படுகின்றன.
கி.பி. 960 முதல் 1279 ஆம் ஆண்டு வரை சீனாவை சாங் பேரரசு(Song Dynasty) ஆட்சி செய்தது. அப்போது, தமிழகத்தில் பிற்காலச் சோழர்களின் ஆட்சி இருந்தது. அதன்போதும், தமிழகத்திற்கும் சீனாவிற்குமான வணிக உறவுகள் இருந்தன. அக்காலத்தில், சோழத் தூதர்கள், கி.பி. 1016, 1033, 1077 ஆகிய ஆண்டுகளில் சீனாவிற்குத் தமிழகத்திலிருந்து பயணம் மேற்கொண்டதாகக் குறிப்புகள் உள்ளன.
கி.பி. 1077ஆம் ஆண்டு சோழர்கள் சிறிவிசயாவை வென்றவதற்குப் பிறகு, முதலாம் குலோத்துங்கச் சோழன் சாங்(கு) பேரரசின் சென்சாங்(கு)அரசருக்கு தமது வணிகத் தொடர்புகளை அனுப்பி வைத்தார்.
குலோத்துங்கச் சோழனை அப்பகுதியில் தி- அவு-கியா-லோ (Ti-hau-kia-Lo) என அழைத்தனர். தன் இயோக் சியோங்கு (Tan Yeok Seong) என்ற ஆய்வாளர், சிறீவிசயா நாட்டில் பாழடைந்து கிடந்த தாவோயிசக் கோயில்களைச் சீரமைக்க குலோத்துங்க சோழன் பெருமளவில் நிதியுதவி செய்ததற்கு அந்நாட்டில் இன்றைக்கும் கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன எனக் குறிப்பிடுகிறார்.
சியான் நகரின் மையப் பகுதியில் மணிக்கோபுரம் (Bell Tower) என்றொரு பகுதி உள்ளது. 1384ஆம் ஆண்டு மிங் மன்னராட்சியின் போது, இந்தக் கோபுரம் எழுப்பப்பட்டது.
திருவில்லிப்புத்தூர் கோயில் கோபுரம் தமிழகத்தின் அரசுச் சின்னமாக வழங்கப்படுவதைப் போல், சியான நகரின் அடையாளமாக இந்தக் கோபுரமே பல இடங்களில் காட்சிப்படுத்தப்படுகிறது.
மன்னர் காலத்தில் 5000 பொற்கொல்லர்கள் இணைந்து, சற்றொப்ப 6500 அயிரைக்கல் (கிலோ) எடை கொண்ட ஒரு மிகப்பெரும் மணியை இங்கு உருவாக்கியுள்ளனர்.
நகரத்திற்கு வெளியிலுள்ள ஓர் ஆற்றில் நாகப்புள்(dragon) ஒன்று படுத்து உறங்குவதாகவும், அதன் காரணமாகச் சியான் நகரில் பலமுறை நிலநடுக்கம் ஏற்படுவதாகவும், அதைப் போக்கவே இந்த மணி உருவாக்கப்பட்டதாகவும் இந்த மணிக் கோபுரத்திற்குப் பின்னணியில் ஒரு கதை வழங்கப்படுகின்றது.
சீன இலக்கியங்கள் குறிப்பிடுவதுபோல, சியான் நகருக்கு வெளியில் ஓர் ஆறு வெய்யாறு(Wei River) சீனாவின் புகழ்பெற்ற மஞ்சள் நதியிலிருந்து பிரிந்து வரும் கிளை ஆறு ஓடுவது உண்மைதான்! ஆனால், அது ஆறாக மட்டும் இல்லை , தொழிற்சாலைக் கழிவுகளுடன் செம்மண் கலந்து ஓடும் அந்த ஆறு, சென்னை நகரின் கூவம் போலவே சீனத்துக் கழிவுநீர் ஆறாகக் காட்சியளித்தது.
சீனாவில் திரும்பியப் பக்கமெல்லாம் புத்தர் சிலைகளும், சிற்பங்களும் இருக்கின்றன. ஆனால், யாரிடமும் கடவுள் நம்பிக்கை இருப்பதாகத் தெரியவில்லை.
கி.மு. 209-210 காலக்கட்டத்தில், சியான் நகரம் சீனாவின் பண்டையத் தலைநகரமாக விளங்கிக் கொண்டிருந்த போது, குவின் சி ஃகுவாங்கு(Qin Shi Huang) என்னும் பேரரசன், தான் இறந்தவுடன் தனது உடலுடன், தன்னுடைய படையினரின் உருவம் கொண்ட வீரர்களின் சிலைகளும் புதைக்கப்பட வேண்டுமென விரும்பினார். அதற்காக, ஒவ்வொரு படை வீரர் சிலையும், ஒவ்வொரு முக அமைப்புடன் கலை நயத்துடன் படைக்கப்பட்டன.
1974 ஆம் ஆண்டு இவ்விடத்தை வயலொன்றில் கிணறு தோண்டும்போது தற்செயலாகப் படை வீர்ர்களின் சிலைகள் சிலவற்றைக் கண்டுபிடித்த சீனர்கள், அதை முழுவதுமாக தோண்டியெடுத்தபோது அதன் பிரம்மாண்டத்தைப் பார்த்து அதிர்ந்தனர். சற்றொப்ப 8000 படை வீரர்கள், 520 குதிரைகளைக் கொண்ட 130 தேர் வண்டிகள், 150 குதிரைப்படை வீரர்கள் என மிகப் பிரம்மாண்டமான அகழ்வுப்பணியாக அது அமைந்தது.
7 இலட்சம் பேரைக் கொண்டு, அந்த அரசர் இவ்விடத்தைக் கட்டினார் எனச் சில வரலாற்றுக் குறிப்புகள் வழிகாட்டுகின்றன. அத்துடன் சீன வரலாற்றைப் பற்றிய பல அரிய தகவல்களையும் இந்தக் கல்லறை தன்னகத்தே வைத்திருந்தது. சில இடங்களை மட்டும்தான் அனைத்துப் பார்வையாளர்களுக்கும் இங்கு திறந்துவிட்டுள்ளனர்.
சில இடங்கள் இன்றுவரை குறிப்பிட்ட சிலரை மட்டுமே பார்வையாளராகக் கொண்டுள்ளன. இங்கிலாந்து இராணி எலிசபத் போன்ற வெகுசிலரே அந்த இடத்திற்குச் செல்ல இசைவளிக்கப்பட்டுள்ளனர். அகழ்வுப்பணிகள் தொடர்ந்து அப்பகுதியில் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: போகலாம் வாங்க – சீனா - 4 – சீனா பார்த்த தமிழகம் .
அருமையான பதிவு
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» வாங்க போகலாம் சீனா - 5 -பொது உடைமை சீனாவில் தொழிலாளர்கள்.
» போகலாம் வாங்க – சீனா - 2 சீனாவின் இன்றைய உண்மை நிலை என்ன?
» போகலாம் வாங்க – சீனா - 3 -அன்றைய பொது உடைமை அரசும்,இன்றைய முதலாளித்துவ சீனாவும்.
» போகலாம் வாங்க – சிங்கப்பூர் –
» மொபைல் வழியாக கிரகங்களுடன் வாக்கிங் போகலாம் வாங்க--
» போகலாம் வாங்க – சீனா - 2 சீனாவின் இன்றைய உண்மை நிலை என்ன?
» போகலாம் வாங்க – சீனா - 3 -அன்றைய பொது உடைமை அரசும்,இன்றைய முதலாளித்துவ சீனாவும்.
» போகலாம் வாங்க – சிங்கப்பூர் –
» மொபைல் வழியாக கிரகங்களுடன் வாக்கிங் போகலாம் வாங்க--
TamilYes :: இது உங்கள் பகுதி :: சுற்றுலா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum