TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


போகலாம் வாங்க – சிங்கப்பூர் –

3 posters

Go down

போகலாம் வாங்க – சிங்கப்பூர் –  Empty போகலாம் வாங்க – சிங்கப்பூர் –

Post by sakthy Sat Oct 04, 2014 4:01 pm

போகலாம் வாங்க – சிங்கப்பூர் –

சிங்கப்பூர் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியால் 1819ல் ஆக்கிரமிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியர்களால் சிறிது காலம் ஆட்சியில் இருந்த சிங்கப்பூர், மறுபடியும் 1945ல் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்து பிறகு 1963ல் மலேசியாவோடு இணைக்கப்பட்டது. ஆகஸ்ட் 9, 1965 அன்று மலேசியாவில் இருந்து பிரிந்து, விடுதலை பெற்று தனி குடியரசு நாடாக உருவானது.

இங்கே உள்ள முக்கிய சின்னம் சிங்க-மீன் இணைந்த சின்னமாகும்.
போகலாம் வாங்க – சிங்கப்பூர் –  J5fho6

மலாய் சொற்களான சிங்கா (சிங்கம்) மற்றும் பூரா (ஊர்) சேர்ந்து சிங்கப்பூரா என்று அழைக்கப்படுகிறது. சிங்கப்பூர் நகரமும் ஒரு தீவுதான் என்றாலும்,அறுபத்துமூன்று சிறிய தீவுகளை கொண்ட நாடாக உள்ளது..
போகலாம் வாங்க – சிங்கப்பூர் –  Sc5llc

சிங்கப்பூரின் சாலைகளின் மொத்த தொலைவு 3,356 கி.மீட்டர், இதில் 161 கிலோ மீட்டர் விரைவுச் சாலைகளாகும்.
போகலாம் வாங்க – சிங்கப்பூர் –  2rrxp4i

சிங்கப்பூரில் நான்கு அலுவலக மொழிகள் – மலேய் மொழி (தேசிய மொழி) சீனமொழி (மேண்டரின்), தமிழ், ஆங்கிலம் முதலிய மொழிகள் இருக்கின்றன. நிர்வாக மொழியாக ஆங்கிலம் இருக்கின்றது.

புத்தசமயம், இசுலாம், கிறித்துவமதம், இந்து சமயம் முதலிய சமயங்களைப் பெரும்பான்மையான மக்கள் சிங்கப்பூரில் பின்பற்றுகின்றார்கள். பெரும்பான்மையான சீனர்கள் புத்த சமயத்தையோ அல்லது தாயிஸ சமயத்தையோ தழுவியிருக்கிறார்கள்.

சிங்கப்பூர் என்றால் சுத்தம் என்று சொல்லிவிடலாம். அங்கே உள்ள அரசு விதிகளும் அதை மக்கள் மீற முடியாத அளவுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளும் தான் இதற்குக் காரணம். எங்கும் விளம்பரப் பலகைகள், அரசியல் கட் அவுட், சினிமா போஸ்டர்கள் எதையும் காண முடியாது.

சீனாவில் உள்ள கட்டுப்பாடு போல் இங்கும் மக்கள் பேருந்து, வாடகையுந்து, தொடருந்து அனைத்திலும் ஒழுங்கை வரிசையில் காத்து நின்று செல்வதைக் காண முடிகிறது. ஆட்டோக்களை எங்கும் காண முடியவில்லை.

அனேகமாக எல்லாப் பொது இடங்களிலும் கண்காணிப்புக் கேமராக்களும் , கமெரா இருக்கும் எச்சரிக்கையும் காணப்படுகிறது.

இந்தியாவைப் போன்ற வெப்ப நிலையும்,இந்தியர்கள் குறிப்பாக தமிழர்களும் அதிகமாக வாழ்கின்றனர். லிட்டில் இந்தியா என ஒரு பகுதி அங்கிருப்பதையும், அங்கு இந்துக் கோவில் இருப்பதையும் குறிப்பாக சொல்லியாக வேண்டும்.

தீபாவளி நாளில் தமிழர்கள் அதிகம் வாழும் லிட்டில் இந்தியா-Little India-
போகலாம் வாங்க – சிங்கப்பூர் –  2yytwmw

சிறிய நகரம் என்பதாலும்,சாலை நெரிசலை தவிர்க்கவும்,சுற்றுச் சூழல் மாசுபடுவதை தவிர்க்கவும் மகிழுந்து வைத்துக்கொள்ள பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. சாரதி அனுமதிப்பத்திரம் தவிர, மகிழுந்து வாங்கி 10 ஆண்டுகளுக்கு மகிழுந்தை சிங்கப்பூரில் ஓட்ட அனுமதிக்கும் தகுதி சான்றிதழ் (COE -Certificate of Entitlement ) ஒன்றையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட முறையில் மகிழுந்து வைத்துக்கொள்ளப் பல கட்டுப்பாடுகள் இருப்பதாலும் பேருந்து தொடருந்து வசதி நன்றாக இருப்பதாலும் பெரும்பாலான சிங்கப்பூர்வாசிகள் பேருந்து, தொடருந்து, வாடகை மகிழுந்து, மிதிவண்டி மூலம் பயணம் மேற்கொள்கின்றனர்.

கண்களைக் கவரும் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக இருப்பது செந்தோசா Sentosa Island தீவாகும்.

யாழ்ப்பாணத் தமிழர்கள் போல் மலேசியா சிங்கப்பூர் தமிழர்களும் நல்ல தமிழைப் பேசுவதையும், தமிழ் பற்றுக் கொண்டவர்களாக இருப்பதையும் காண முடிகிறது.

ஆனாலும் பேச்சுத் தமிழைப் பொறுத்த வரை, சிங்கையில் பிறந்தவர்கள் யாழ்ப்பாணத் தமிழையும்,சமீபத்தில் வந்த தமிழ் நாட்டவர்கள் தமிழகத் தமிழையும்,தமிழர்களைப் போல் அதிகம் உள்ள மலையாளிகள் பேசும் தமிழ் வேறாகவும் மூன்று விதமாகப் பேசப்படுகிறது.

தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் தமிழ் தவிர்ந்த ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தியதன் விளைவாக கொதிதெழுந்து போராட்டம் நடத்தி, அகற்றச் செய்த தமிழ் உணர்வு கொண்ட தமிழர்களை சிங்கையில் காண முடிகிறது.

தமிழுக்கு அரசு உதவி செய்வதும் சிங்கப்பூரின் தகவல் கலை அமைச்சின் (MICA) மேற்பார்வையில் வளர்தமிழ் இயக்கம் ஒன்றை உருவாக்கி நடத்தி வருவதையும் குறிப்பிடலாம்.
போகலாம் வாங்க – சிங்கப்பூர் –  66z2o0

தமிழர்கள் மேல் குறிப்பாக ஈழத் தமிழர்கள் மேல் பாசம் கொண்ட சிங்கப்பூரின் முதல் பிரதமரும்,முன்னாள் பிரதமர் -லீ குவான் இயூ-Lee Kuan Yew -வின் மூத்த மகன் லீ சியன் லூங் -Lee Hsien Loong- தற்போதைய பிரதமராக இருக்கிறார்.

சிங்கப்பூரின் ஜனாதிபதி என்று சொல்லும் போது செல்லப்பன் ராமநாதன் (எஸ். ஆர். நாதன்-S.R. Nathan ) இரண்டு முறை பதவிக்காலத்தை நிறைவேற்றி இருக்கிறார். 1991 ஆம் ஆண்டில் நடந்த சாசன மாற்றங்களால், குடியரசுத் தலைவருக்கு சில தனிப்பட்ட உறிமைகள் அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ வாழுமிடம் இஸ்தானா -Istana -ஆகும் .தற்போதைய அதிபர் டோனி டான் கெங் யாம் – Tony Tan Keng Yam ஆவார்.
போகலாம் வாங்க – சிங்கப்பூர் –  1674mdd

சிங்கப்பூர் வளர்ந்ததை இந்த இரண்டு படங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். செரங்கூன் வீதி முன்னரும் இன்றும்,அங்காடி வீதி-Market Place- அன்றும் இன்றும் காட்சிகள்.
போகலாம் வாங்க – சிங்கப்பூர் –  6iz8l5
போகலாம் வாங்க – சிங்கப்பூர் –  25qgpwg

போகலாம் வாங்க – சிங்கப்பூர் –  4hbck7
போகலாம் வாங்க – சிங்கப்பூர் –  2vn5mb8
போகலாம் வாங்க – சிங்கப்பூர் –  25r1cls
போகலாம் வாங்க – சிங்கப்பூர் –  2qbajc1

China Town ஐ இரவில் ரிக்சாவில் சுற்றிப் பார்க்க இன்றும் விரும்புகிறார்கள்.
போகலாம் வாங்க – சிங்கப்பூர் –  Iciyc7

ஆனாலும் உலகெங்கும் பொருட்களை நேசிக்கத் தெரிந்த மனிதனுக்கு, மனிதனை நேசிக்கத் தெரியவில்லையே என்ற ஆதங்கத்தை தெரிவித்துத் தான் ஆக வேண்டும்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

போகலாம் வாங்க – சிங்கப்பூர் –  Empty Re: போகலாம் வாங்க – சிங்கப்பூர் –

Post by logu Sat Oct 04, 2014 4:23 pm

சிங்கபூரை பற்றிய உங்களின் விளக்கமான பதிவு அருமை
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

போகலாம் வாங்க – சிங்கப்பூர் –  Empty Re: போகலாம் வாங்க – சிங்கப்பூர் –

Post by அருள் Sun Oct 05, 2014 8:30 am

logu wrote:சிங்கபூரை பற்றிய உங்களின் விளக்கமான பதிவு அருமை
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

போகலாம் வாங்க – சிங்கப்பூர் –  Empty Re: போகலாம் வாங்க – சிங்கப்பூர் –

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» போகலாம் வாங்க – சீனா - 4 – சீனா பார்த்த தமிழகம் .
» வாங்க போகலாம் சீனா - 5 -பொது உடைமை சீனாவில் தொழிலாளர்கள்.
» போகலாம் வாங்க – சீனா - 2 சீனாவின் இன்றைய உண்மை நிலை என்ன?
» போகலாம் வாங்க – தெரிந்து கொள்ள வேண்டிய சீனாவின் சாலைப் போக்குவரத்து - படங்கள்-
» போகலாம் வாங்க – சீனா - 3 -அன்றைய பொது உடைமை அரசும்,இன்றைய முதலாளித்துவ சீனாவும்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum