Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:00 am
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 2:38 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 07, 2024 4:22 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Oct 01, 2024 7:38 pm
» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 19
3 posters
Page 1 of 1
தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 19
தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 19
அடிப்படையை அசைத்து உடைத்துவிட்டால் கட்டடம் நிலைப்பது ஏது?
மொழி மரபைக் காக்காமல் அடிப்படையைத் தகர்த்துவிட்டால் மொழி என்னாகும்?
வேறு மொழியாகத் திரிந்து போகாதா? இப்படித் திரிந்தவைதாமே தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள்.
அடிப்டைகளை மாற்றினால் அதனை வளர்ச்சி எனக் கூற முடியாது. அடிப்படை இலக்ணத்தையே உடைத்தெறிந்த நிலை ஏற்பட்டுவிடுகிறது. இதை சில மேதாவிகள் செய்து வருகின்றனர். எத்தனை தமிழ் அறிஞர்கள் கூறியும் கேட்டுக் கொள்ளாமல் மொழிச் சீர்திருத்தம்,எழுத்துச் சீர்திருத்தம் என்று தவறான வழியில் திசை திருப்ப முனையும் இவர்கள் பற்றி மிகுந்த கவனம் தேவை.
ஆங்கிலத்தில் mistake என்ற சொல்லை,தப்பா எடுத்துக்காத என்பதற்கு -don't mistake me, brother -என்று சிலர் தவறாகப் பேசுவது /எழுதுவதைக் காணலாம். தவறாக எண்ணாதே என்பதை - do not misunderstand - ஐப் பாவிக்கலாம்.
அப்படி நாமும் தவறான சொற்கள் என்று தெரிந்ததும்,அதைத் தொடர்ந்து தமிழில் பாவிக்காமல் தவறான சொற்களை திருத்தி எழுத முயல்வோம்
வேண்டாம் என்று எழுதுவது சரியானதா?
தொடும், வரும், தரும், எட்டும், முட்டும், கிட்டும், தட்டும் ….................... இவற்றுக்கு எதிர்ப்பதம் என்ன?
தொடும் - தொடா
வரும் - வரா
தரும் - தரா
எட்டும் - எட்டா
முட்டும் - முட்டா
கிட்டும் - கிட்டா
தட்டும் - தட்டா
என்றால்.........
வேண்டும் - வேண்டா - என்பது தானே எதிர்ப்பதம்.
அதனால் இனி நாம் எழுதும் போது -வேண்டாம்- என்பதற்குப் பதில் -வேண்டா- என எழுதலாமே.
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்னாற்றுங் கொல்லோ உலகு.
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும்
பொய்மை பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான
பேய் பிடியா திருக்க வேண்டும்”
விவாகரத்து -மணமுறிவு -என்பதை ஆங்கிலத்தில், டைவேர்ஸ் என்று சிலர் உச்சரிக்கிறார்கள்.இப்படி டைவேர்ஸ்/டிவேர்ஸ் என உச்சரித்தால், பொருள் diverse --பலதரப்பட்ட- என்பதாகும். அதனால் டிவோர்ஸ் என உச்சரிக்க வேண்டும். டிவோர்ஸ்-divorce- என்றால் மணமுறிவு என்று பொருள்.
இதைப் போல தமிழ் உச்சரிப்பும் தவறாக உச்சரித்தால் பொருள் மாறி விடும்.
கூகிள் தேடலின்படி............
தவறை (பிழையான சொல்) - பாவித்தவர்கள் - 2,31,000 பேர்.
தவற்றை (சரியான சொல்) - பாவித்தவர்கள் - 11,600 பேர்.
இந்த -தவறு விசயத்தில், சரியாக -தவற்றை- என எழுதுபவர்கள் மிகக் குறைவாகவும், தவறை என பிழையாக எழுதுபவர்கள் அதிகமாகவும் உள்ளனர்.
குற்றியல் உகரத்தில் முடியும் பெயர்ச் சொற்கள் வேற்றுமை உருபுகளை ஏற்கும் போது,
குற்றியல் உகரம்- காணமல் போய்விடும்
அதற்கு முன் உள்ள வல்லின மெய் எழுத்து இரட்டிப்பாகும்.
உயிர்வரின் உக்குறள் மெயவிட் டோடும்-இது நன்னூல் சொல்லும் விதி.
எனவே, தவ+று = தவ+ற்+ ஐ - தவ + றை- தவறை என வருவது தவறு. அது,
தவ+ற் +ற் +ஐ - தவ +ற் +றை- தவற்றை என வரும்.
ஆகவேதான் -தவறை-என எழுதுவது தவறு ; -தவற்றை- என்று எழுதுவதே முறை.
தவறு என்னும் சொல்லுக்கு எதுகையாக வரும் சொற்களைத் தேடிப் பாருங்கள் :
கயிறு, வயிறு, பயிறு,… இப்படி வரும் சொற்கள் எல்லாம் உருபுகளை ஏற்கும் போது.....
கயிற்றை, கயிற்றால்…., வயிற்றை, வயிற்றால், வயிற்றோடு…, பயிற்றை, பயிற்றால்… என்றே எழுத வேண்டும்.
இதே விதிகள் (நெடில் தொடர்க்) குற்றியல் உகரத்தில் முடியும் பெயர்ச் சொற்கள் வேற்றுமை உருபுகளை ஏற்கும் போதும் பொருந்தும்.காட்டாக :ஆறு - ஆற்றை, சோறு- சோற்றால், சேறு - சேற்றோடு… என வரும் - வருவதே முறை.
இதன் எதுகைகளைத் தேடிப் பாருங்கள் : கூறு, வேறு, மாறு, சீறு ….இவை யாவும் மேல் சொன்னபடிதான் உருபை ஏற்கும் , ஏற்கவேண்டும்.
இது தான் தமிழ் இலக்கண விதி. இந்த விதியை நம் மதியால் மாற்றுவோம் என்று சிலர் புறப்பட்டால் அறிவின்மையின் பாற்படும்.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 19
நாமும் முயற்சி செய்தால் கண்டிப்பாக மாற்றலாம்
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Re: தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 19
அருள் wrote:நாமும் முயற்சி செய்தால் கண்டிப்பாக மாற்றலாம்
Similar topics
» தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 6
» தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 18
» தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 20
» தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 22
» தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம்- 14
» தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 18
» தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 20
» தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 22
» தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம்- 14
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|