TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:46 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:03 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 16

2 posters

Go down

தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 16 Empty தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 16

Post by sakthy Wed Aug 13, 2014 1:17 pm

தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 16

தெரிந்து,பயின்று,கேட்டு தவறின்றி தமிழ் எழுதுவது அவசியமாகும். புதுக் கவிதை சப்பானிய கைக்கூக்கள் எழுதுவோர் ஆங்கிலக் கலப்புடனும்,தமிழ்ப் பிழைகளுடனும் கவிதை படைக்கிறார்கள். இந்தத் தளத்தில் கூட கவிதைகள் பலவும் தமிழ்ப் பிழைகளுடன் எழுதப்படுகின்றன. எவரையும் குறை கூற அன்று என்பதைக் கவனத்தில் கொள்க!

குழந்தை நடக்கத் துவங்கும்போது நேராக நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயற்கைக்கு முரணானது.

பெருங்கவிஞர் எழுதினாலும், யார் எழுதினாலும் தவறு என்றால் சொல்ல வேண்டும்,ஏற்று திருத்திக் கொள்ள வேண்டும். யார் சொல்கிறார் என்பதல்ல,என்ன சொல்கிறார் என்பதே முக்கியமாகும். தவறு என்று அறிந்தும் தன் இறுமாப்பிலோ, புதுமை, புது வரவு போன்ற கெடு மயக்கத்திலோ ஒருவர் எழுதினால், அது அவருக்கே இழுக்கு.

எந்தச் சொல் தமிழ்ச்சொல்,எவை தமிழ் சொல் அல்ல என்பதைக் கண்டறிவது எப்படி?
எப்போதும் அல்ல,பொதுவான நடைமுறை..........

அ – ஔ -தொடங்கும் சொற்கள் - தமிழ் சொற்கள்.
வல்லினமான
க,ச,த,ப – இவற்றில் தொடங்கும் சொற்கள் தமிழ்.
ட,ற – என்பதில் சொற்கள் வராது.
மெல்லினம்
ஞ,ம,ந  - தொடங்கும் சொற்கள் தமிழ்.
ண,ன, - இல் சொற்கள் தொடங்காது.
இடையினம்
ய,வ – சொற்கள் தொடங்கும்.
ர,ள,ழ,ல – இல் சொற்கள் தொடங்காது.

ல,ர – இவற்றில் சொற்கள்  வராது.அதனால் அப்படி வரும் சொற்கள், தமிழ் சொற்கள் அல்ல. அதனால் தான் இ-கரம்  சேர்த்து  எழுதுகிறார்கள்.

ராமன்,லக்குமி,ரசனை,ரசிகன்,ராமநாதபுரம் இவை தமிழ் சொற்கள் அல்ல. அதனால் இ-கரம் சேர்க்கப்பட்டு, இராமன்,இலக்குமி,இரசனை,இரசிகன்,இராமனாதபுரம் என சொல்கிறார்கள்.

நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் காலப்போக்கில் குறுகிச் சிறியதாய் விடும். இந்த வடிவக் குறுக்கம் மொழிக்கும் பொருந்தும். இப்படி தமிழின் சொற் சுருக்கத்திற்கு இலக்கணம் வழி வகுத்துள்ளது.
முதற்குறை, இடைக்குறை, கடைக்குறை என்பது அது அளித்துள்ள வழிகளுள் ஒன்று.

தாமரை - மரை - முதற்குறை ; மரை என்பதும் தாமரையைக் குறிக்கும்.
உள்ளம் - உளம் - இடைக்குறை ; உளம் என்பதும் உள்ளத்தைக் குறிக்கும்.
நீலம் - நீல் - கடைக்குறை ; நீல் என்பதும் நீலம் என்று பொருள்.

இவற்றில் எழுத்து மறைந்தாலும் பொருள் மாறாது. இடுசொற்களின் சேர்க்கையில் (புணர்ச்சியில்) எழுத்து மறையும்
(தேன்+மொழி-தேமொழி என்றாகிறது.).

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சச் சொல்லிலும் ஓர் எழுத்து குறையும்.
( பறவாத+வண்டு - பறவா வண்டு).

மற்றொரு வழியிலும் சொற்சுருக்கம் ஏற்படுகிறது. எந்த இலக்கணமும் சொல்லாத புதிய விதியாக இது உள்ளது. இது சமுதாய நடைமுறையில் அமைந்திருக்கிறது; சில சொற்களில் மட்டும் இது காணப்படுகிறது.

அதாவது ஒரு சொல்லில் அடுத்தடுத்து இரு குறில் எழுத்துகள் இருந்தால், முதல் குறில் நெட்டெழுத்தாகிறது, இரண்டாம் குறில் மறைகிறது; சொல் சுருங்குகிறது. இந்த விதி நடைமுறையிலுள்ள சொற்களுக்கு விளக்கம் தருவதாயுள்ளது. சில..................

அகலமரம் - ஆலமரம்;
அகப்பை - ஆப்பை;
அகங்காரம் - ஆங்காரம்;
இடுதல் - ஈதல்;
கழனி - கானி-காணி;
குதித்தாடல் - கூத்தாடல்;
சிகழிக்காய் - சீழிக்காய்;-சீக்காய்; சிவப்பு;
செய்தி - சேதி;
செய்யவன் - சேயவன்-சேயோன்;
தரு - தா;
தந்தை - தாதை;
தெய்வ ஆரம் - தேவஆரம் -தேவாரம்;
தொகுப்பு - தோப்பு;
பகுதி - பாதி;
பெயரன் - பேரன்;
பரவுதல் - பாவுதல்;
மிகுதி - மீதி;
விழுதல் - வீதல்

இப்படிப் பல சொற்கள் உள்ளன. நீங்களும் தேடலாம்.

நுவல், நுதல் (சொல்லுதல்) என்ற சொல், மேற்கூறிய புதிய விதியின்படி -நூல் - என்றாகிவிடும்.
இந்த விதி ஒரு சொல்லின் முதற் பகுதியில் மட்டுமன்றி, பிற்பகுதியிலும் அமைந்து சொற்சுருக்கத்துக்கு வழி வகுக்கிறது.

அஞ்சாதவர் - அஞ்சாதார்;
அடங்கியவன் - அடங்கியான்;
அதியன் மகன் - அதியன்மான்-அதியமான்;
அரவு - அரா;
இல்லவள் - இல்லாள்;
கனவு - கனா;
சிறியவர் - சிறியார்;
கோமகன் - கோமான்;
நிலவு - நிலா.

சொல் மாறிய நிலையிலும் இந்த விதி பொருந்தியுள்ளது.
இல்வழி (வீட்டுக்குள் செல்லும் வழி)
இது இடம் மாறி , வழியில் (வழி இல்) என்று மாறுகிறது. இவ்விதிப்படி, வழியில் என்பது வாயில்- என்றாகிறது. முந்தையர் என்பது மூதையர் என்றாகி, மூதாதையர் என்று கூறும்போதும் இந்த விதி பொருந்துகிறது.

இவ்விதி மலையாள மொழியிலும் அமைந்திருப்பது கவனிக்கலாம்.
மகனே - மானே-மோனே;
மகளே - மாளே-மோளே;

மலையாள மொழியில் பழைய தமிழ் சொற்கள் இருப்பதைக் காணலாம்.

மலையாளத்தில் எழுந்த இலக்கண நூலாகிய லீலா திலகம் (சரியாக தெரியா விட்டாலும்,இந்தக் காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம். -கி.பி. 1385 - 1400- ) இதில் பல தமிழ் சொற்களைக் காண முடிகிறது.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 16 Empty Re: தமிழ் கற்போம் - தவறுகளைத் திருத்துவோம் - 16

Post by mmani Thu Aug 14, 2014 6:49 am

மலையாளம் என்ற மொழி தமிழில் இருந்து பிரிந்த மொழி
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum