TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


போக்குவரத்து முற்றுகைப் போராட்டம்: முல்லை பெரியாறு விவகாரத்தில் வைகோ நெடுமாறன் கைது!

Go down

போக்குவரத்து முற்றுகைப் போராட்டம்: முல்லை பெரியாறு விவகாரத்தில் வைகோ நெடுமாறன் கைது! Empty போக்குவரத்து முற்றுகைப் போராட்டம்: முல்லை பெரியாறு விவகாரத்தில் வைகோ நெடுமாறன் கைது!

Post by mmani Thu Dec 22, 2011 7:28 am

போக்குவரத்து முற்றுகைப் போராட்டம்: முல்லை பெரியாறு விவகாரத்தில் வைகோ நெடுமாறன் கைது! Vaiko_arrest

தமிழகத்தில் இருந்து கேரளா
செல்லும் 13 சாலைகளையும் மதிமுகவினர் மற்றும் விவசாய சங்கத்தினர் இன்று
முற்றுகையிட்டனர். இதனால், கேரளாவுக்கு போக்குவரத்து அடியோடு
நிறுத்தப்பட்டது.

முற்றுகை போராட்டத்தில் பங்கேற்ற வைகோ, நெடுமாறன் உள்பட
ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர். முல்லை பெரியாறில் புதிய அணை
கட்ட முயற்சிக்கும் கேரள அரசையும் இதில் நடவடிக்கை எடுக்காத மத்திய
அரசையும் கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் மக்கள் போராட்டங்களை
நடத்தி வருகின்றனர்.

கடந்த 16 நாட்களாக குமுளி வழியாக கேரளா - தமிழகம் இடையேயான போக்குவரத்து அடியோடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தமிழர்களும் ஐயப்ப பக்தர்களும் தாக்கப்பட்டதால் தமிழகம்
முழுவதும் போராட்டம் பரவியது. ஆங்காங்கே பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்,
உண்ணாவிரதம், வேலைநிறுத்தம், கடையடைப்பு என தங்கள் எதிர்ப்பை தொடர்ந்து
வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கேரளா செல்லும் 13 சாலைகளையும் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக மதிமுக அறிவித்திருந்தது.

தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்ப்பில் நடக்கும் போராட்டத்தில் வைகோ பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பதற்றம் அதிகரிக்கும் என்பதால் வைகோவை தேனியிலேயே தடுத்து நிறுத்த
போலீசார் முடிவு செய்தனர். தேனி அருகே பி.சி.பட்டியில் எஸ்.பி.
பிரவீன்குமார் அபினபு தலைமையில் 500-க்கும் அதிகமான போலீசார்
குவிக்கப்பட்டிருந்தனர்.

கூட்டத்தை கட்டுப்படுத்த ஆங்காங்கே தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன.
அங்கு காலையில் இருந்தே மதிமுகவினரும் விவசாய சங்கத்தினரும் திரண்டனர்.

அவர்களின் வாகனங்கள் மட்டும் கம்பம் வரை செல்ல அனுமதிக்கப்பட்டன.
கம்பத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக தொண்டர்கள், விவசாயிகள்
ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தில் பங்கேற்பதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கடந்த 3
நாட்களாக ரகசிய இடத்தில் தங்கியிருந்தார். அவர் இருக்கும் இடம் தெரியாமல்
போலீசாரும் உளவுத்துறையினரும் குழப்பமடைந்தனர்.

இன்று காலை கூடலூர் அருகே ஒரு கிராமத்தில் வைகோ இருப்பதாக தகவல்
பரவியது. லோயர்கேம்ப் குருவனூத்து பாலம் அருகே நடக்கும் போராட்டத்தில்
வைகோ பங்கேற்க உள்ளார் என்றும் கூறப்பட்டது.

தேனியில் உறவினர் வீட்டில்தான் இருக்கிறார், தேனியில் இருந்து
நடைபயணமாக செல்ல உள்ளார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் வைகோ தேனியில்
தங்கியிருப்பதை உறுதிப்படுத்திய போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை
நடத்தினர்.

முற்றுகை போராட்டத்தை நடத்துவதில் உறுதியாக இருந்த வைகோ, காலை 10.30 மணிக்கு திறந்த ஜீப்பில் கம்பம் நோக்கி புறப்பட்டார்.

அவரை சின்னமனூர் அருகே கீழபூலானந்தபுரம் என்ற இடத்தில் போலீசார்
தடுத்து நிறுத்தினர். வைகோவுடன் தமிழ் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன்
மற்றும் விவசாய சங்க நிர்வாகிகளும் வந்தனர்.

உத்தமபாளையத்துக்குள் செல்ல போலீசார் அனுமதிக்காததால் அந்த இடத்திலேயே வைகோ முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து வைகோ, நெடுமாறன் உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
வைகோ போராட்டம் காரணமாக சின்னமனூர், பாளையம், கம்பம், கூடலூரில் கடைகள்
அடைக்கப்பட்டன.

பஸ்கள் இயக்கப்படவில்லை. சுமார் 30 கிமீ தொலைவுக்கு மக்கள் ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டு உம்மன்சாண்டி உருவபொம்மைகளை எரித்தனர்.

அனைத்து வழிகளும் முற்றுகை தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் அனைத்து பாதைகளிலும் மதிமுகவினர் இன்று முற்றுகையிட்டனர்.

கோவை மாவட்டம் (தெற்கு) கந்தேகவுண்டன்சாவடியில் மதிமுக அவைத்தலைவர் துரைசாமி தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது.

கோவை மாவட்டம் (வடக்கு) ஆனைகட்டி சோதனை சாவடியில் பெரியார் திராவிட கழக
தலைவர் கொளத்தூர் மணி, பொள்ளாச்சி வளந்தாயமரம் சோதனை சாவடியில் தமிழ்
தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு, நடபுணி சோதனை சாவடியில் கணேசமூர்த்தி
எம்.பி., பொள்ளாச்சி கோபாலபுரம் சோதனை சாவடியில் தமிழ்நாடு கொங்கு இளைஞர்
பேரவை அமைப்பாளர் தனியரசு, கோவை மாவட்டம் (தெற்கு) வேலந்தாவளம் சோதனை
சாவடியில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் முற்றுகை
போராட்டம் நடந்தது. தேனி மாவட்டம் கம்பம் மெட்டில் மதிமுக துணை
பொதுச்செயலாளர் மல்லை சத்யா, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளைவில்
மதிமுக துணை பொது செயலாளர் நாசரேத் துரை, நெல்லை மாவட்டம் செங்கோட்டை
எல்லையில் மதிமுக உயர்நிலைக்குழு உறுப்பினர் நாஞ்சில் சம்பத் தலைமையில்
போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணசாமி
ஆர்ப்பாட்டம் பெரியாறு அணை விவகாரத்தில் தொடர்ந்து பொய் பிரசாரம் செய்து
வரும் கேரள அரசை கண்டித்து தேனியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் இன்று
ஆர்ப்பாட்டம் நடந்தது.

கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்து பேசினார். ஏராளமானோர் கலந்து கொண்டனர். கேரள அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரளாவுக்கு 4 வார கெடு
» முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பழ.நெடுமாறன் கைது
» டிசம்பர் 21-ல் முற்றுகைப் போராட்டம்: வைகோ
»  முல்லை பெரியாறு அணை பிரச்சினை காரணமாக கம்பம், கூடலூரில் லட்சக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர். மாவட்டம் முழுவதும் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். தமிழக-கேரள எல்லையில் வைகோ தலைமையில் நாளை மறியல் போராட்டம் நடைபெறுவதால் பலத்
» முல்லை பெரியாறு பிரச்னையில் தமிழக அரசுக்கு ஆதரவு: வைகோ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum