Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
பேஸ்புக்கும் கூகுளும் அந்தரங்கமான செயலில் : தொடரும் விக்கிலீக்ஸ் வேட்டை
Page 1 of 1

தான் தொட்டுச்சென்ற ஒவ்வொருவர் மீதும் விக்கிலீக்ஸ் இணையத்தளம்
சேறுபூசியதாகத் தென்படுகிறது. ஆனால் 2010 இல் தங்களைத் தாங்களே
குழப்பத்திற்குள் சிக்கவைத்துக் கொள்வதற்கு அதிக எண்ணிக்கையான
அரசியல்வாதிகளுக்கும் பிரமுகர்களுக்கும் இணையத்தளத்தின் உதவி
தேவைப்பட்டிருக்கவில்லை.
வாஷிங்டனுக்கான அமெரிக்கத் தூதரகங்களின்
கேபிள்களை விக்கிலீக்ஸ் வெளியீட்டு வருகின்றது. அவற்றில் அதிகமானவை
இரகசியமான கலந்துரையாடல்கள் ஆகும். ஆனால், இவற்றில் பல விடயங்கள் ஏற்கனவே
சர்வதேச உறவுகள் தொடர்பாக சந்தேகிக்கப்பட்டவையாகும். விக்கிலீக்ஸின்
வெளியீடுகள் இவற்றை உறுதிப்படுத்துவதாகமட்டுமே அமைந்துள்ளன.
ஆயினும்
இந்த விடயங்கள் அமெரிக்கா நண்பர்களுக்கோ பகைவர்களுக்கோ சங்கடத்தை
ஏற்படுத்தியிருப்பதாகத் தோன்றவில்லை. உதாரணமாக அமெரிக்க இராஜதந்திரத்தை
கீழ் நிலைக்குக்கொண்டு சென்று விட்டதாகத் தென்படவில்லை.
விக்கிலீக்ஸின்
ஆவணங்களின் பிரகாரம் சவூதி மன்னர் அப்துல்லா, ஈரானின் நண்பர் அல்ல.
அமெரிக்கா ஈரானின் அணுவாயுத நிகழ்ச்சித் திட்டத்தை நிறுத்துவதற்கு
இராணுவத்தை பயன்படுத்த வேண்டும் என அவர் பரிந்துரை செய்திருக்கிறார்.
சீனாவின்
அரசியல் குழு உறுப்பினர் ஒருவர் இணையத்தில் பாரிய சேவையை வழங்கிவரும்
கூகுள் மீது ஊடுருவித் தாக்குதல் நடத்துமாறு உத்தரவிட்டிருக்கிறார். லிபிய
ஜனாதிபதி கடாபி உக்ரைன் தாதி மீது அதிகளவுக்கு தங்கியிருக்கிறார்.
ஜேர்மனியின் அதிபர் அஞ்சலா மேர்கல் ஆக்கபூர்வமான விடயங்களை மேற்கொள்பவர்
அல்ல. இவை விக்கிலீக்ஸினால் வெளியிடப்பட்ட அமெரிக்கக் கேபிள்களில்
உள்ளடக்கப்பட்டிருந்த சில விடயங்களாகும்.
வேறு ஒன்றும்
இல்லாவிட்டால் மட்டுமே இணைய காலகட்டத்தில் முன்னொருபோதும் இல்லாத
அபகீர்த்தியை இந்த விக்கிலீக்ஸ் விவகாரம் ஏற்படுத்தி இருக்கும் என
கருதமுடியும்.
ஒப்பீட்டு அளவில் 2010 ஆம் ஆண்டில் இத்தாலிப்
பிரதமர் சில்வியோ பேர்லஸ் கோளி மிகவும் வசைபாடுவதற்கு இலக்காகியிருந்தார்.
விமர்சனங்களைத் தொடர்ந்து தமது பிரதமரின் அந்தரங்க வாழ்க்கை நடைமுறையை
மாற்றி அமைத்துக் கொள்ளவேண்டும் என இத்தாலியர்கள்
எதிர்பார்த்திருக்கவேண்டும். கடந்த ஆண்டை விட அவர் அதிகளவுக்கு தப்பிச்
சென்றுள்ள நிலைமையே காணப்பட்டது. இளம் சிறுமி ஒருவருடன் அவரின் தொடர்பு,
திருமண வாழ்க்கை முடிவு கண்டமை மற்றும் அவர் தெரிவித்த கருத்துகள்
சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன.
74 வயதுடைய கன்சர்வேட்டிங்
அரசியல்வாதியான பேர்லஸ் கோனி நாட்டிய பெண்ணுடன் அவர் காணப்பட்டதையடுத்து
அனைவரின் கவனத்தையும் அந்தவிடயம் கவர்ந்திருந்தது. ரூபி ருபாகுவோரி என்ற
அந்தப் பெண் தான் 17 வயதுடையதாக இருக்கும் போது பேர்லஸ்கோனியின் விருந்தில்
கலந்துகொண்டதாகத் தெரிவித்திருந்தார். அதேசமயம் பிரதமரின் விருந்து
நிகழ்ச்சிகளில் உணர்வுகளைத் தூண்டும் நிகழ்வுகளுக்குத் தான்
பயன்படுத்தப்பட்டதாக கரிமா எல்.மம்ரூக் என்ற பெண் கூறியிருக்கிறார்.
இவற்றை
அப்பட்டமான பொய் என பேர்லஸ் கோனி நிராகரித்திருக்கிறார். ஆனால், மே மாதம்
ரூபியை பொலிஸார் தடுத்து வைத்திருந்த போது அப்பெண்ணை விடுவிக்க தான்
தலையிட்டதை பேர்லன்கோனி ஏற்றுக் கொண்டுள்ளார். பிரதமரின் அலுவலகத்தில்
இருந்து கிடைத்த தொலைபேசி அழைப்பு ஒன்றில் எகிப்து ஜனாதிபதி கொஸ்னி
முபாரக்கின் மருமகளை தாங்கள் கைது செய்திருப்பதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு
அறிவிக்கப்பட்டிருந்தது.
இராஜதந்திர நெருக்கடியை தவிர்ப்பதற்கான
அந்தப் பெண் விடுதலை செய்யப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
நீதித்துறையில் பேர்ஸிஸ் கோனியில் தலையீடு தொடர்பாக தாங்கள்
அதிர்ச்சியடைந்திருப்பதாக எதிரணியினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த பேர்லஸ்கோனி;
தன்னினிச்
சேர்க்கையாளராக இருப்பதிலும் பார்க்க அழகான சிறுமிகளுடன் விருப்பம்
கொண்டிருப்பது சிறப்பானது என கூறியிருந்தார். அந்த விடயம் மற்றுமொரு
சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. செயற்பாட்டாளர்களும் விமர்சகர்கள் பலரும்
தன்னினச் சேர்க்கையாளர்களுக்கு எதிராக பிரதமர் வெறுப்பு ஊட்டும் கருத்தை
தெரிவித்ததாக சாடியிருந்தனர்.
பேர்லந்தில் முன்னாள் பிரதிப்
பிரதமர் அந்திரே லெப்பர் கடந்த பெப்ரவரில் 27 மாத சிறைத்தண்டனையைப்
பெற்றார். தனது சுயபாதுகாப்புக் கட்சியைச் சேர்ந்த பெண்
உறுப்பினர்களிடமிருந்து பாலியல் ரீதியான சலுகைகளை வலியுறுத்தி பெற்றுக்
கொண்ட குற்றச்சாட்டின் பேரில் அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. அதேவேளை,
மத்திய பேர்லந்தில் மாவட்ட நீதிமன்றம் சுயபாதுகாப்புக் கட்சியின் முன்னாள்
எம்.பி.யான கஸ்ரனிஸ்லோ லீக்கிஸிற்கு ஐந்து வருட சிறைத்தண்டனை வழங்கியது.
வல்லுறவு மற்றும் தனது கட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினர்களிடம் பாலியல்
ரீதியான அனுகூலங்களைப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் ஐந்து வருட சிறை
வழங்கப்பட்டது.
கட்சியின் பிராந்திய அலுவலகத்தில் மீண்டும்
வேலையில் சேர்வதற்காக 2001 இல் பாலியல் ரீதியான அனுகூலத்தை வழங்குமாறு
லெப்பர் வலியுறுத்தியதாக கட்சி பணியாளர் அனிட்டா குரோஸ் குரோலீக்
கூறியுள்ளார்.
அமெரிக்காவில் மெல் கிப்சன் (54 வயது), சார்ஸ்கின்
(45 வயது) ஆகிய ஹொலிவூட் உறுப்பினர்கள் தவறான விடயங்கள் தொடர்பாக தொடர்ந்து
செய்திகளில் பேசப்பட்டனர் கிப்சனின் இளைய மகளான லூசியாவின் ரஷ்யத் தாயார்
தான் குழந்தையை வைத்திருக்கும் போது கிப்சன் தன்னை அடித்ததாக குற்றச்சாட்டு
தெரிவித்திருந்தார். சீன் நியூயோர்க்கில் ஹோட்டல் அறையொன்றில் கொக்கெயின்
மற்றும் மதுபானத்தை வைத்திருந்ததாபதாகவும், திரைப்பட நடிகையையும் அங்கு
வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. தனது முன்னாள் மனைவி மற்றும்
பிள்ளைகளுடன் நியூயோர்க்கிற்கு சீன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதே
இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இணையத்தள உலகிற்குச் சென்றால்
அங்குள்ள இரட்டை அதிகார மையங்களான பேஸ்புக்கும் கூகுளும் அந்தரங்கமான
அவதூறு செய்திகளில் தொடர்ந்தும் சிக்கியுள்ளன. 50 கோடி உறுப்பினர்களின்
தனிப்பட்ட விபரங்களை விளம்பரதாரங்களுடன் இந்த உலகின் முன்னணி சமூக
கட்டமைப்பானது பகிர்ந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேசமயம்
உலகில் ஆதிக்கம் மிகுந்த தேடுதல் கம்பனி (கூகுள்) கட்டமைப்புக்கள் மூலம்
வாகனங்களின் விபரங்களை சேகரிப்பதாகவும் ஆட்களின் சங்கேத குறிகளை
சட்டவிரோதமானமுறையில் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
viduppu kulumam

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» அமெரிக்கா வளர்த்துவரும் வேட்டை நாய் மம்தா பேனர்ஜி :விக்கிலீக்ஸ்
» கலெக்டர் நடவடிக்கை எடுக்காததால் செயலில் இறங்கிய வாலிபர்:காஞ்சிபுரம் மக்கள் பாராட்டு
» அமெரிக்காவில் தொடரும் பனிப்புயல்: 13 பேர் உயிரிழப்பு
» ஆத்திரத்தை வெளிக்காட்டும் செயலில் ஈடுபடக்கூடாது: வைகோ கண்டிப்பு
» உலகின் மிகப் பழமையான மொழி #தமிழ்! கூகுளும் சொல்கிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum