Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:57 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:06 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அமெரிக்கா வளர்த்துவரும் வேட்டை நாய் மம்தா பேனர்ஜி :விக்கிலீக்ஸ்
Page 1 of 1
அமெரிக்கா வளர்த்துவரும் வேட்டை நாய் மம்தா பேனர்ஜி :விக்கிலீக்ஸ்
நாடாளுமன்றத்தேர்தல்
முடிவுகளுக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு
ஆதரவளித்து அவரை வளர்த்தெடுக்க வேண்டுமென்று அமெரிக்க அரசு அதிகாரிகளை,
இங்குள்ள தூதரக அதிகாரிகள் வலியுறுத்தினார்கள் என்பது அம்பலமாகியுள்ளது.
இந்தியாவின் உள்விவகாரங்களில்
இங்குள்ள அமெரிக்கத்தூதரக அதிகாரிகள் தொடர்ந்து தலையிட்டு வந் தனர் என்பது
அனைவருக்கும் தெரிந்த ரகசியமாகவே இருந்தது. விக் கிலீக்ஸ் கேபிள்கள் மூலம்
ஆவணங்களாக இந்த சதிவேலைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மேற்கு வங்க
நிலைமை பற்றி அக்டோபர் 20, 2009 (கேபிள் எண் : 230353) அன்று கொல்கத்தா
அமெரிக்கத் தூதரக அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட கேபிள், அம்மாநிலத்தில்
அமெரிக்க அரசு தலையிட வேண்டும் என்று கோருகிறது. 34 ஆண்டுகளாக மேற்கு வங்க
மாநிலத்தில் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி தலைமையிலான இடது முன்னணி ஆட்சியைக் கவிழ்க்க, மம்தா பானர்ஜியை
வளர்த்துவிட வேண்டும் என்று அமெரிக்க அதிகாரி பெத் ஏ பெய்ன் கையெழுத்திட்ட
கேபிள் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது.
இத்தனைக்கும் அவர் மாநிலத்தின்
முதல்வராகப் பொறுப்பேற்கும் தகுதியைப் பெற்று விட்டாரா என்ற
சந்தேகத்தையும் அந்த கேபிள் எழுப்பியுள்ளது. “வெளிப்படையாக அவரது கட்சி
எழுப்பும் முழக்கங்களை எல்லாம் மீறி, தற்போது ஆட்சிப்பொறுப்பில் உள்ள
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விட பானர்ஜி தலைமையில் அமையும் அரசு
அமெரிக்காவுடன் இணக்கமாக செயல்படக்கூடியதாக இருக்கும். அதனால் பானர்ஜியைத்
தொடர்ந்து வளர்த்து விடுவதில் அமெரிக்க அதிகாரிகள் கவனம் செலுத்த
வேண்டும்...” என்று அந்தக் கேபிள் கூறுகிறது.
விக்கிலீக்சிடமிருந்து இந்தக்
கேபிள் விபரங்களைப் பெற்றுள்ள தி இந்து ஆங்கில நாளிதழ் ஏப்ரல் 20ந்
தேதியிட்ட இதழில் செய்தி வெளி யிட்டிருக்கிறது. மேலும் அந்த கேபிள்
கூறுவதாவது : “நிதானம் கொண்டவ ராக, வெளியிலிருந்து ஆலோசனைகளைப் பெற்றுக்
கொள்பவராக அவர் உண்மையிலேயே மாறியுள்ளாரா அல்லது வெறும் அரசியல்
ஒப்பனைதானா என்ற சந்தேகம் அப்படியேதான் உள்ளது. மக்கள்தொகை அடிப்படையில்
இந்தியாவின் நான்காவது மாநிலத்திற்கு தலைமை தாங்கும் பெண்மணியாக தன்னை
முன்னிறுத்திக் கொள்ளும் முயற்சியில் அவர் இருக்கிறார் என்பது
பொதுக்கருத்தாக உள்ளது.”
“மம்தா பானர்ஜி : களப்போராளி
முதல் வருங்கால முதல்வர் வரை” என்ற தலைப்பிலான கொல்கத்தா தூதரகக் கேபிள்
இவ்வாறு கூறுகிறது: “2009 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத்
தேர்தல், பிராந்தியக் கட்சியாக இருந்த திரிணாமுல் காங்கிரசை மத்தியில்
ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக
மாற்றியது. ரயில்வே அமைச்சர் என்ற முறையிலும், தனிப்பட்ட முறையிலும்
தன்வசம் இருக்கும் ஆதாரங்களைக் கொண்டு வருங்கால முதல்வர் என்று தன்னை
முன்னிறுத்திக் கொள்ள மம்தா பானர்ஜி முயற்சிக்கிறார். அவருடைய
ஆதரவாளர்களும் சரி, விமர்சகர்களும் சரி, அவடைய இந்த புதிய அந்தஸ்தை
ஒப்புக் கொண்டாலும், இது புதிய தலைமையா அல்லது வெறும் ஒப்பனைதானா என்கிற
கேள்வி அப்படியேதான் உள்ளது.”
தொழில்துறைக்கு எதிரானவர் என்ற
முத்திரை அவர் மீது இருந்தாலும், தொடர்ந்து நிறுவனங்களை திருப்திப்படுத்த
மம்தா பானர்ஜி மேற்கொண்ட முயற்சி அமெரிக்கத் தூதரக அதிகாரிகளைக்
கவர்ந்திழுத்திருக்கிறது. “தொழில் நிறுவனங்களை நாடுகிறார் மம்தா” என்ற
தலைப்பில் உள்ள கேபிள் கூறுவதாவது : தன் மீது விழுந்துள்ள தொழில்துறைக்கு
எதிரானவர் என்கிற முத்திரையை நீக்க கொல்கத்தாவின் தொழில்நிறுவனங்களை மம்தா
பானர்ஜி திருப்திப்படுத்த முனைகிறார். பல முதலாளிகளைத் தனது ஆலோசகர்களாக
நியமிக்கிறார். சிறிய கார் தயாரிக்கும் டாடாவின் ஆலையை வெளியே
துரத்திவிட்ட மம்தாவின் நடவடிக்கையை தொழில் நிறுவனங்கள் மறக்கவில்லை.
மாற்றம் ஏற்படலாம் என்பதால் மம்தா பக்கம் தொழில் நிறுவனங்கள் சாய்கின்றன.”
முதல்வராகும் அளவுக்கு தகுதி
பெற்றிருக்கிறாரா என்ற சந்தேகத்தை எழுப்பிக் கொண்டே, எப்படியாவது 34
ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சிக்கு எதிராக மம்தா பானர்ஜியை வளர்த்து விட வேண்டும் என்கிற அமெரிக்க
அரசின் முயற்சி, உள்விவகாரங்களில் தொடர்ந்து அந்த நாடு தலையிடுகிறது
என்பதையும், கம்யூனிஸ்ட் எதிர்ப்பைக் கண்மூடித்தமாக பின்பற்றுகிறது
என்பதையும் அம்பலப்படுத்துவதாக இந்தக் கேபிள்கள் அமைந்துள்ளன.
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» பேஸ்புக்கும் கூகுளும் அந்தரங்கமான செயலில் : தொடரும் விக்கிலீக்ஸ் வேட்டை
» இந்திராகாந்தியின் வீட்டிலிருந்த அமெரிக்கா உளவாளி! – விக்கிலீக்ஸ் பகீர்!
» தமிழர்களை இராணுவ ரீதியில் பலவீனப்படுத்த முன்னெடுப்புக்களை எடுத்தது அமெரிக்கா - விக்கிலீக்ஸ்
» பயங்கரவாதி இலியாஸ் காஷ்மீரி கொலை? : பாக்..கில் பதுங்கி இருந்தபோது அமெரிக்கா வேட்டை
» மரம் வெட்டி வளர்த்துவரும் ஆறாயிரம் மரங்கள்
» இந்திராகாந்தியின் வீட்டிலிருந்த அமெரிக்கா உளவாளி! – விக்கிலீக்ஸ் பகீர்!
» தமிழர்களை இராணுவ ரீதியில் பலவீனப்படுத்த முன்னெடுப்புக்களை எடுத்தது அமெரிக்கா - விக்கிலீக்ஸ்
» பயங்கரவாதி இலியாஸ் காஷ்மீரி கொலை? : பாக்..கில் பதுங்கி இருந்தபோது அமெரிக்கா வேட்டை
» மரம் வெட்டி வளர்த்துவரும் ஆறாயிரம் மரங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum