TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:46 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:59 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 2:10 am

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம்

Go down

ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம் Empty ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம்

Post by logu Sun Dec 12, 2010 7:11 am

"2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை, ஆதிதிராவிடர் மீதான தாக்குதல் என,
தி.மு.க., பிரசாரம் செய்வது, மக்களை திசை திருப்பும் முயற்சி' என,
ஆதிதிராவிடர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 1.76 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு
இழப்பு ஏற்பட்டதாக, நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த
விவகாரத்தில் அத்துறை அமைச்சர் ராஜா ராஜினாமா செய்தார். முறைகேடு தொடர்பாக
கூட்டுக்குழு விசாரணை கோரி, எதிர்க் கட்சிகள் நடத்தும் போராட்டத்தால்,
பார்லிமென்ட் முடங்கியுள்ளது. "ஆதிதிராவிடர் என்பதால், ராஜா மீது
தாக்குதல் நடத்தப்படுகிறது' என, முதல்வர் கருணாநிதியும், தி.மு.க.,வினரும்
பேசி வருகின்றனர்.
இதுகுறித்து ஆதிதிராவிடர் அமைப்பு தலைவர்கள் தெரிவித்த கருத்துகள்:
சமூக சமத்துவப்படை தலைவர் சிவகாமி (ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி):
ராஜாவை, முதல்வர், அமைச் சராக பார்க்கிறாரா, ஆதிதிராவிடராக பார்க்கிறாரா
என தெரியவில்லை. "ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்டோர் யாரும்
பயன்பெறவில்லை. ராஜாவை பத்திரிகைகள் ஆதிதிராவிடர் என்று எழுதவில்லை; அவரை
ஆதிதிராவிடர் என அடையாளம் காட்டியதே தி.மு.க., தான். இது கேவலமான செயல்.
சிறப்பு உட்கூடு திட்டத்தை முறையாக அமல்படுத்துவது குறித்து, எஸ்.சி.,
எஸ்.டி., ஆணையம் பயனாளிகள் பட்டியலை கேட்டும், அரசு தரவில்லை. பஞ்சமி
நிலம் 12 லட்சம் ஏக்கர் பறிபோயுள்ளதை மீட்க முடியவில்லை. உமாசங்கர்
விவகாரம் எல்லாருக்கும் தெரியும். நிலைமை இப்படி இருக்க, விவகாரத்தில்
பயனடைந்துள்ளதாக கூறப்படும் குடும்ப உறுப்பினர்களை காப்பாற்றவும், மக்களை
திசை திருப்பவுமே முதல்வர், "ஆதிதிராவிடர்' என்ற பிரசாரத்தை கையில்
எடுத்துள்ளார்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி: "ஸ்பெக்ட்ரம்' ஊழல்
இந்தியாவை உலுக்கும் சம்பவம். இதில், ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர்
என்றெல்லாம் கூற முடியாது. யார், யாருக்கு தொடர்பு, எவ்வளவு பயன் பெற்றனர்
என்ற உண்மையை கொண்டு வர வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு. இதன் மூலம்
பயன் பெற்றுள்ள 200க்கும் மேலான நிறுவனங்களையும், கட்சியினரையும் ஜாதியை
சொல்லி காப்பாற்ற முயல்வதும், ஊழலை மறைக்க முயல்வதும் கண்டனத்துக்குரியது.
ஊழலில் ஆதிதிராவிடர், திராவிடம், ஆரியம் என்றெல்லாம் பேசுவதை முதல்வர்
நிறுத்தாவிட்டால், நாங்கள் வேறு மாதியான நடவடிக்கைகளில் இறங்க
வேண்டியிருக்கும்.
இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன்: 1.76 லட்சம்
கோடி ரூபாய் ஊழல் விவகாரத்தில், ஆதிதிராவிடர் மீதான தாக்குதல் என ஒரு
பொறுப்புள்ள முதல்வர் சொல்வது சரியல்ல; இது கடைந்தெடுத்த மோசடி. சபாநாயகர்
மீரா குமார், ஆறு கேபினட் அமைச்சர்களும் ஆதிதிராவிடர் தான். அவர்கள் மீது
குற்றச்சாட்டு ஏதும் இல்லையே; அப்புறம் எப்படி ஆதிதிராவிடர் மீதான
தாக்குதல் என கூற முடியும். ஜாதி சாயத்தை பூசி, ஆட்சியை, கட்சியை,
குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ள, இவ்வாறு பிரசாரம் நடக்கிறது.
ஆதிதிராவிடர் என்பதால் குற்றச்சாட்டுகள் வந்துள்ளது என்றால், இந்த இழி
செயலை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என கொதித்தெழுந்து, தி.மு.க.,
அமைச்சரவையிலிருந்து ஏன் வெளியேறவில்லை. இதை மக்கள் ஏற்க மாட்டர்.
காங்., எம்.எல்.ஏ., ஜெயக்குமார்: ஆதிதிராவிடர் என்பதால்
தாக்குதல் என்ற நிலையை தி.மு.க., எடுத்துள்ளது சரியல்ல. இதுபோன்ற நிலை
வரும்போது, குற்றச்சாட்டுகள் தவறு என்பதை நிரூபிக்கும் வகையில்,
கருத்துக்களை மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டுமே தவிர, ஆதிதிராவிடர் என்ற
பிரச்னையை முன் வைக்கக் கூடாது. அதுவும் முதல்வர் அப்படி சொல்லக் கூடாது.
அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் வை.பாலசுந்தரம்: மடியில்
கனமில்லை என்றால், கூட்டுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிடாதது
ஏன்? அவையை இவ்வளவு நாட்கள் முடக்கியது சரித்திரத்தில் ஒரு களங்கத்தை
ஏற்படுத்தும் செயல். ராஜா ஒரு ஆதிதிராவிடர் என்பதால் தாக்குதல்
நடத்துகின்றனர் என முதல்வர் கூறுகிறார். மாபெரும் ஊழல் விவகாரத்தில்,
ஜாதியை காரணம் காட்டி, ஆதிதிராவிட மக்களை இழுப்பது அறிவுக்கு அழகல்ல. திசை
திருப்பும் முயற்சி மக்களிடம் எடுபடாது; உண்மை வெளிப்பட்டே தீரும்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்: நெல்லை
துணைவேந்தர் காளியப்பன், டி.ஆர்.ஓ., ஜனார்த்தனம் ஆகியோரை தாக்கியோர் மீது,
இதுவரை நடவடிக்கை எடுக்காத முதல்வர், தற்போது ஆதிதிராவிடர் என்று சொல்வது
மக்களை திசை திருப்பும் முயற்சி. தங்களை பாதுகாத்துக் கொள்ள எடுக்கும்
முயற்சி தான் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» திசை திருப்புகிறார்களோ...
»  முழுப் பூசினிக்காயையும் சோற்றுக்குள் மறைக்க முயற்சி.. கிளிநொச்சி அரச அதிபரின் கூற்றுக்கு மக்கள் அமைப்புகள் கண்டனம்
» நிலக்கரி இறக்குமதி முறைகேட்டை கருணாநிதியால் மறுக்க முடியுமா? ஜெயலலிதா கேள்வி
» ரியல் எஸ்டேட் தொழிலில் நடக்கும் முறைகேட்டை தடுக்க சட்டம்! – மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» கோவிலுக்கு வந்த தலித் மாணவரை அடித்த அர்ச்சகர் கைது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum