TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


திசை திருப்புகிறார்களோ...

Go down

திசை திருப்புகிறார்களோ... Empty திசை திருப்புகிறார்களோ...

Post by அருள் Thu Jun 02, 2011 7:43 am


திசை திருப்புகிறார்களோ... Editorialimg





இந்தியர்கள் வெளிநாடுகளில் சேமித்து வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்டு
இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும், அதற்கான அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்று
வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முடிவிலிருந்து விலக மாட்டேன்'' என்று தன்னைச்
சமாதானப்படுத்த முற்பட்ட மத்திய அமைச்சர்களிடம் கூறியுள்ளார் யோகா குரு பாபா
ராம்தேவ்.
இரு தினங்களுக்கு முன், லோக்பால் சட்டத்தில் பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை
நீதிபதி ஆகியோரை உள்படுத்தக்கூடாது என்ற அரசின் "பிடிவாதத்துக்கு' ஆதரவு தெரிவித்த
ராம்தேவ், தற்போது, "தான் அவ்வாறு சொல்லவே இல்லை' என்று முரண்பட்டிருக்கிறார்.
இதுபோல பல விஷயங்களில் தனது கருத்தில் உறுதியாக இருப்பவர் அல்ல அவர் என்பதால், ஜூன்
4-ம் தேதிக்குள் தனது முடிவை மாற்றிக்கொள்ள மாட்டார் என்றும் உறுதியாகச்
சொல்வதற்கில்லை.
அது ஒருபுறம் இருக்கட்டும், பாபா ராம்தேவ் உண்ணாவிரதப் போராட்டத்தைத்
தொடங்கிவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு ஏன் இந்த அளவுக்கு அவசரப்படுகிறது,
அச்சப்படுகிறது? மத்தியப் பிரதேசத்திலிருந்து விமானம் மூலம் தில்லிக்கு வந்த பாபா
ராம்தேவை, பிரணாப் முகர்ஜி, கபில் சிபல், பவன் குமார் பன்சால், சுபோத் காந்த் சகாய்
என்று ஒரு மத்திய அமைச்சர்களின் குழுவே விமான நிலையத்துக்குச் சென்று, அவரைச்
சந்தித்து கெஞ்சுகிற அளவுக்கு அவரது போராட்டம் ஆட்சியாளர்களைப் பயமுறுத்துகிறதே அது
ஏன்?
முன்னர், அண்ணா ஹஸôரே தில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டபோது அதற்கு
மத்திய அரசு முதலில் முக்கியத்துவம் தரவில்லை. ஊடகங்கள் மூலம் போராட்டம் இந்தியா
முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியதால்தான், அதில் தலையிட வேண்டிய கட்டாயம் மத்திய
அரசுக்கு ஏற்பட்டது. அண்ணா ஹஸôரே இப்போராட்டத்துக்குப் பின்னர்தான் இந்தியா
முழுவதும் அறியப்பட்ட மனிதரானார்.
ஆனால் பாபா ராம்தேவ் அப்படியல்ல. அவர் இந்தியாவின் பல நகரங்களுக்கும் சென்று
தனது யோகா வகுப்புகளை நடத்தியவர். ஹிந்தி தொலைக்காட்சி சேனல்கள் மூலம் வடநாட்டில்
எல்லோருக்கும் தெரிந்தவர். இந்தியாவின் நடுத்தர மற்றும் படித்த வர்க்கத்தினரிடையே
நன்கு அறிமுகமானவர். அவர் தில்லியில் ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதப்
போராட்டத்தில் ஈடுபடுவதோடு, அவரது அன்பர்களும் இந்தியா முழுவதும் ஆங்காங்கே இதே
மாதிரியான போராட்டத்தில் ஈடுபட்டால், இது அரசுக்கு மேலும் ஒரு தர்மசங்கடமான நிலைமையை
உருவாக்கிவிடும் என்று மத்திய அரசு நினைத்தால் அது நியாயமானதுதான்.
இருப்பினும் இந்த விஷயத்தில் மத்திய அரசு அஞ்சுகிறதா அல்லது அஞ்சுவதுபோல
நடித்து, இந்தப் போராட்டங்கள் மூலம் விஷயங்களைத் திசைதிருப்ப முற்படுகிறதா
என்பதையும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
அண்ணா ஹஸôரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது மேடைக்கு வந்து வாழ்த்தியவர்
பாபா ராம்தேவ். ஆனால், லோக்பால் சட்ட மசோதா குழுவில் சாந்திபூஷண் மற்றும் அவரது மகன்
இடம்பெற்றபோது, தந்தை, மகன் இருவரையும் ஏன் நியமிக்க வேண்டும் என்று முதல்
எதிர்ப்பைத் தெரிவித்தவரும் அவர்தான்.
பிரதமர், தலைமை நீதிபதி, எம்.பி.க்கள் மீதான நாடாளுமன்றம் சார்ந்த
குற்றச்சாட்டுகள் லோக்பால் சட்ட வரம்புக்குள் வராது என்று மத்திய அரசு சொல்லிக்
கொண்டிருக்க, அண்ணா ஹஸôரே தரப்பில், இதற்கு எதிர்ப்பு இருக்கிறது, மீண்டும்
போராட்டத்தில் குதிக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளனர். மாநில அரசுகளின் கருத்தை
அறிந்த பிறகு இதுபற்றி மீண்டும் விவாதிக்கலாம் என்று விஷயத்தை ஆறப்போட்டிருக்கிறது
மத்திய அரசு.
இந்தவேளையில் பாபா ராம்தேவ் அதே நோக்கத்துக்காகப் போராட்டத்தை நடத்துவதன்
மூலம், லோக்பால் விவகாரம் பின் தள்ளக்கூடும். போராட்டத்தைக் கைவிடுங்கள் என்று
சொல்லிக்கொண்டே பாபா ராம்தேவை போராட்டத்தில் ஈடுபடுத்தும் அரசின் ராஜதந்திரமாகவும்
இது இருக்கக்கூடும்.
நான்கு மத்திய அமைச்சர்களும் பாபா ராம்தேவை விமான நிலையத்திலேயே போய்ச்
சந்திப்பதும், ""அவர் மிகவும் முக்கியமான விவகாரங்களைத்தான் வலியுறுத்துகிறார்.
நாங்கள் தொடர்ந்து அவரிடம் பேசி சமாதானம் செய்ய முயல்வோம்'' என்று மத்திய
அமைச்சர்கள் பேட்டி அளிப்பதும், விட்டால் இவர்களும் உண்ணாவிரதத்தில்
உட்கார்ந்துவிடுவார்கள் போன்ற தோற்றத்தைத் தருவதும் ஏதோவொரு நெருடலை ஏற்படுத்துகிறது.
ஒரு போராட்டம், ஒரு தலைவனின் தலைமையில்தான் நடைபெற முடியும். ஊழலுக்கும்
கருப்புப் பணத்துக்கும் எதிரான போராட்டங்கள் அவசியம் நம் நாட்டுக்குத் தேவை.
இத்தகைய விழிப்புணர்வு பரவலாக ஏற்பட்டால் மட்டுமே ஊழலையும் கருப்புப் பணத்தையும்
ஒழிக்க முடியும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஊழலுக்கு எதிரான
போராட்டம் தனிநபர்களை முன்னிலைப்படுத்துவதாக அமைந்து, பல்வேறு அணிகளாகப் பிரிந்து
ஆங்காங்கே நடக்குமேயானால், போராட்டத்தின் குறிக்கோள் பின்தள்ளப்பட்டுவிடும்.
ஒரே நோக்கத்துக்காக அனைவரும் ஒன்று திரளாமல், அவை தனிநபரை
முன்னிலைப்படுத்துவதாக அமைந்துவிடக்கூடிய ஆபத்தை பாபா ராம்தேவின் போராட்டம்
உருவாக்கியிருக்கிறது. இப்படியே தனிநபரை முன்னிலைப்படுத்தும் ஊழலுக்கு எதிரான
போராட்டங்கள் அமையுமேயானால் புகையிலை ஒழிப்பு ஊர்வலம், மனிதச் சங்கிலி போன்று வெறும்
சடங்காக அது மாறிவிடும். இப்படி ஆவதைத்தான் நமது அரசும் அரசியல்வாதிகளும்
விரும்புவார்கள்.
முதலில் லோக்பால் விவகாரத்துக்குத் தீர்வுகண்ட பின்னர், அடுத்ததாக கருப்புப்
பணத்துக்கான போராட்டத்தைத் தொடங்கினால் நன்றாக இருக்குமே!
அண்ணா ஹஸôரே ஆனாலும் சரி, பாபா ராம்தேவ் ஆனாலும் சரி அடிப்படையில் ஊழலுக்கு
எதிரான அவர்களது உணர்வை நாம் சந்தேகப்படவில்லை. ஆனால், ராஜதந்திரிகளான நமது
ஆட்சியாளர்கள் மிகமிக புத்திசாலிகள். அவர்களது பிரித்தாளும் சூழ்ச்சியால் ஊழலுக்கும்
கருப்புப் பணத்துக்கும் எதிராக மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் எழுச்சி
பிசுபிசுத்துப் போய்விடுமோ என்பதுதான் நமது பயம்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை திசை திருப்புவதா? தலித் அமைப்புகள் கண்டனம்
» தானே புயல் திசை திரும்பியதால் சென்னை தப்பியது
» கூடங்குளம் பிரச்சினையை திசை திருப்புகிறது இலங்கை : கருணாநிதி
» கமுதியில் முன்னாள் எம்.எல்.எ வெள்ளைச்சாமித்தேவர் வெட்டிக் கொலை - சாதியத்தாக்குதலாக திசை திரும்புகிறது
» டெசோ அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டம் தமிழினத்தை திசை திருப்பும் திட்டமிட்ட நாடகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum