TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


எம்.பி., பதவியை உதறி காங்கிரசுக்கும் ஜெகன் மோகன் ரெட்டி முழுக்கு: ஆந்திர அரசியலில் பரபரப்பு

Go down

எம்.பி., பதவியை உதறி காங்கிரசுக்கும் ஜெகன் மோகன் ரெட்டி முழுக்கு: ஆந்திர அரசியலில் பரபரப்பு Empty எம்.பி., பதவியை உதறி காங்கிரசுக்கும் ஜெகன் மோகன் ரெட்டி முழுக்கு: ஆந்திர அரசியலில் பரபரப்பு

Post by மாலதி Tue Nov 30, 2010 10:31 am

ஐதராபாத் : ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டிக்கும், காங்., மேலிடத்துக்கும் இடையே நடந்து வந்த மோதல், நேற்று உச்சகட்டத்தை எட்டியது. ஜெகன் மோகன், தனது எம்.பி., பதவியை உதறியதோடு, காங்கிரசுக்கும் முழுக்கு போட்டார். "ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ்' என்ற புதிய கட்சியை துவங்கப் போவதாக அவரது ஆதரவாளர்கள் அறிவித்து உள்ளதால், பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி, கடந்தாண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து, ராஜசேகர ரெட்டியின் மகனும், கடப்பா தொகுதி காங்கிரஸ் எம்.பி.,யுமான ஜெகன்மோகன் ரெட்டி, தன்னை முதல்வராக்கும்படி, காங்கிரஸ் மேலிடத்திடம் வற்புறுத்தினார். ஆனால், நிதி அமைச்சராக இருந்த ரோசய்யா, முதல்வராக நியமிக்கப்பட்டார். அதிருப்தி அடைந்த ஜெகன், தனது தந்தை மரணமடைந்தபோது, தீக்குளித்து இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக ஆறுதல் யாத்திரை துவக்கினார். இதற்கு காங்கிரஸ் மேலிடம் எதிர்ப்பு தெரிவித்தது. அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து யாத்திரை நடத்தினார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், ஜெகனுக்கு சொந்தமான சாக்ஷி "டிவி'யில் காங்., தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் ஆகியோரைப் பற்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதை காங்., தலைவர்கள் கண்டித்தனர்.
இதற்கிடையே, ஜெகனை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வந்த ரோசய்யாவை முதல்வர் பதவியில் இருந்து, காங்., மேலிடம் தூக்கியது. சோனியாவுக்கு விசுவாசமானவரான கிரண்குமார் ரெட்டி, முதல்வராக நியமிக்கப்பட்டார். அது மட்டும் அல்ல, ரெட்டி சமூகத்தை சேர்ந்தவர் முதல்வரானதால், அது ஜெகனை ஓரங்கட்டும் முயற்சி என்ற பேச்சு எழுந்தது. தன்னை அவமானப் படுத்துவதற்காகவே, கிரண் குமாரை கட்சி மேலிடம் முதல்வராக்கியுள்ளது என, ஜெகன் கருதினார். ராஜசேகர ரெட்டியின் சகோதரர் விவேகானந்தா ரெட்டியை அவசரமாக டில்லிக்கு அழைத்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, விவேகானந்தா ரெட்டிக்கு, ஆந்திர மாநில அமைச்சர் பதவி தருவதாக கட்சித் தலைமை உறுதி அளித்ததாகவும் தகவல் வெளியானது.
அவமதிப்பு: கட்சி மேலிடத்தின் இந்த நடவடிக்கையால் ஆவேசமடைந்த ஜெகன், காங்., கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று அதிரடியாக அறிவித்தார். இதுகுறித்து காங்., தலைவர் சோனியாவுக்கு எழுதிய ஐந்து பக்க கடிதத்தையும் செய்தியாளர்களுக்கு வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 14 மாதங்களாக, கட்சியின் மேலிட தலைவர்களால் எனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டது. சோனியாவை சந்திக்க என் தாயார் ஒரு மாதத்துக்கும் மேலாக அனுமதி கேட்டும் அனுமதி கிடைக்கவில்லை. பிரஜா ராஜ்யம் கட்சித் தலைவர் சிரஞ்சீவிக்கு ஒரே நாளில் அனுமதி கிடைத்தது. கடைசியாக, என் குடும்பத்திலும் பிளவு ஏற்படுத்தும் முயற்சிகள் நடந்தன. என் உறவினர்களுக்கு பதவி கொடுப்பதாகக் கூறி, அவர்களை என்னிடம் இருந்து பிரிக்கும் முயற்சி நடந்தன. இதனால் கட்சியில் இருந்து விலகுகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார். கடப்பா தொகுதி எம்.பி., பதவியையும் ராஜினாமா செய்து, சபாநாயகர் மீரா குமாருக்கு ஜெகன்மோகன் ரெட்டி "பேக்ஸ்' அனுப்பியுள்ளார். இதையடுத்து, ஜெகனின் வீடு முன் திரண்ட அவரது ஆதரவாளர்கள், பட்டாசு வெடித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தாயாரும் ராஜினாமா: இதற்கிடையே, ஜெகன்மோகனின் தாயார் விஜயலட்சுமி, தனது புலிவெந்துலா சட்டபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை ஆந்திர சட்டசபை சபாநாயகரிடம் இன்று அவர் கொடுக்கிறார். ஜெகனின் இந்த தடாலடி அரசியலால், ஆந்திராவில் காங்., கட்சி கலகலத்துப் போயுள்ளது. இதனால், அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவது இல்லை என்று, காங்., கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இருந்தாலும், ஜெகனுக்கு 36 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுவதால், காங்., மேலிடம் கவலை அடைந்துள்ளது. இந்த இழப்பை ஈடுசெய்வதற்காக, நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சியின் ஆதரவை நாடவும், சிரஞ்சீவிக்கு முக்கிய பதவியை தரவும், காங்., மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. சிரஞ்சீவி கட்சிக்கு 18 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளதால், ஜெகனால் ஏற்படும் இழப்பை இதன்மூலம் ஈடுசெய்ய முடியும் என, காங்கிரஸ் கருதுகிறது.
துரதிர்ஷ்டவசமானது: வீரப்ப மொய்லி கருத்து: ஜெகன் ராஜினாமா குறித்து, காங்கிரஸ் கட்சியின் ஆந்திர மாநில மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி கூறுகையில்,"காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக ஜெகன் அறிவித்துள்ளது, துரதிர்ஷ்டவசமானது. இருந்தாலும், ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி பலமாக உள்ளது. அரசுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது' என்றார்.
"ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ்': ஜெகன் மோகன் திட்டம்: காங்., கட்சியிலிருந்தும் எம்.பி., பதவியில் இருந்தும் விலகியுள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி மகனான ஜெகன் மோகன் ரெட்டி புதிய கட்சி துவங்குவது குறித்து தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தினார். அவர், தனது தந்தையின் நினைவாக "ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ்' என்ற பெயரில் புதிய கட்சியை துவங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum