Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஆந்திராவில் வெடித்தது வன்முறை: ராஜசேகர ரெட்டி மகன் ஜெகன் கைது
Page 1 of 1

காங்கிரஸ் மேலிடம்
வலியுறுத்தியும் கேட்காமல், ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின்
மகனும், எம்.பி.,யுமான ஜெகன்மோகன் ரெட்டி நேற்று யாத்திரை துவக்கியதால்,
பெரிய அளவில் வன்முறை வெடித்தது.
ஜெகன் மோகன் ரெட்டியின்
ஆதரவாளர்களும், தெலுங் கானா ராஷ்டிரிய சமிதியைச் சேர்ந்தவர்களும் மோதிக்
கொண்டனர். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெகனை, போலீசார் கைது
செய்தனர். துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறையில் ஒருவர் இறந்தார்; 15
பேர் காயம் அடைந்தனர். ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி, கடந்த
ஆண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். அப்போது இந்தச் செய்தியை
கேட்டதும் அதிர்ச்சியில் பலர் இறந்தனர்; சிலர் தற்கொலை செய்து கொண்டனர்.
இப்படி உயிரை மாய்த்துக் கொண்டவர்களின் குடும்பத் திற்கு ஆறுதல்
கூறுவதற்காக, தெலுங்கானா பகுதியில் ஆறு நாள், "ஆறுதல் யாத்திரை' மேற்
கொள்ளப் போவதாக, ராஜசேகர ரெட்டியின் மகனும், காங்கிரஸ் எம்.பி.,யுமான
ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். ஆனால், "இந்த யாத்திரையை ஜெகன்மோகன்
ரெட்டி மேற்கொள்ளக் கூடாது, அதை தள்ளி வைக்க வேண்டும்' என காங்கிரஸ்
மேலிடம் கேட்டுக் கொண்டது. இதை, ஆந்திர மாநில காங்கிரஸ் விவகாரங்களைக்
கவனிக்கும் மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியே ஜெகனிடம் தெரிவித்தார்.
அத்துடன், இந்தப் பிரச்னை தொடர்பாக விவாதிக்க உயர் மட்டக் கூட்டம் ஒன்றை
நடத் திய ஆந்திர முதல்வர் ரோசய் யா, ஆந்திர அமைச்சர்கள் இருவரை நேற்று
முன்தினம் இரவு ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டிற்கு அனுப்பினார்.
"யாத்திரையை தள்ளி வைக்க வேண்டும்' என, ஜெகனிடம் அவர்கள் கேட்டுக்
கொண்டனர். அதை ஏற்க ஜெகன் மறுத்துவிட்டார்.
அறிவித்தபடி, ஐதராபாத்தில்
இருந்து இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில், நேற்று காலை வாரங்கல்
மாவட்டத்தில் உள்ள மெகபூபாபாத் நகரத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.
அங்கிருந்து தான் 72 கிராமங்களுக்கு, "ஆறுதல் யாத்திரை' மேற் கொள்ளத்
திட்டமிட்டிருந்தார். ஆனால், ஜெகனின் யாத்திரைக்கு கடும் எதிர்ப்பு
தெரிவித்த தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர், ஜெகன் போகும்
வழியெங்கும் போராட்டம் நடத்தவும், அவரை தெலுங்கானா மண்ணில் கால் வைக்க
விடாமல் தடுக்கவும் திட்டமிட்டிருந்தனர்.
கல் வீச்சு, ரகளை:
காங்கிரஸ் எம்.பி., ஜெகன், மெகபூபாபாத் நகர் வரும் போது எதிர்ப்பைத்
தெரிவிக்க, அங்குள்ள ரயில் நிலையம் முன், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி
கட்சியினரும், உஸ்மானியா மாணவர் சங்கத்தின் கூட்டு செயல் குழுவைச்
சேர்ந்தவர்களும், இதர பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் குவிந்தனர்.
அதேபோல், ஜெகன் ஆதரவாளர்களும் குவிந்தனர். இதனால், இரு தரப்பினருக்கும்
இடையே மோதல் உருவானது; கல் வீச்சிலும் ஈடுபட்டனர். போலீசார் மீதும் கற்கள்
வீசப் பட்டன. மெகபூபாபாத் ரயில் நிலையத்தை, தெலுங்கானா ஆதரவாளர்கள்
சூறையாடினர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வும், ஜெகன்மோகன் ரெட்டியின் தீவிர
ஆதரவாளருமான சுரேகா, மற்றொரு எம்.எல்.ஏ., கவிதா மீதும் அவர்கள் கல்
வீசினர். இதில், கவிதாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. சுரேகாவிற்கு எந்தப்
பாதிப்பும் ஏற்படவில்லை. உடன், இருவரின் தனி பாதுகாப்பு அதிகாரிகளும்
அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர். அத்துடன் போராட்டக்காரர்
களை கலைக்க ஒன்பது ரவுண்டுகள் சுட்டனர். கூட்டத்தினரை கட்டுப்படுத்த
போலீசாரும் ரப்பர் புல்லட்களால் சுட்டனர்; கண்ணீர் புகை குண்டுகளையும்
வீசினர். இதனால், கல் வீச்சில் எட்டு போலீசாரும், போலீசாரின் துப்பாக்கிச்
சூட்டில் போராட்டக்காரர்கள் எட்டு பேரும் காயம் அடைந்தனர்.
நிலைமை பதட்டமாகவே, சுரேகா
எம்.எல்.ஏ., பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தூக்க மாத்திரைகளை
சாப்பிட்டு, தற்கொலை செய்ய முற்பட்டார். உடனே அவரை தடுத்து நிறுத்திய
போலீசார், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அத்துடன் ஜெகன்மோகன் ரெட்டி,
யாத்திரையை தொடர தடை விதித்த போலீசார், முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக
அவரை நலகொண்டா மாவட்டம் வாங்கிப்பள்ளி ரயில் நிலையத்திலேயே கைது செய்து,
ஐதராபாத் கொண்டு வந்தனர். ""சூழ்நிலை மோசமாக இருப்பதால், ஜெகன் மோகன் தன்
யாத்திரை தொடர்வது சரியாக இருக்காது. சட்டம் ஒழுங்கு பிரச்னை வராமல்
இருக்கவே அவரை கைது செய்துள்ளோம்,'' என, ஆந்திர உள்துறை அமைச்சர் சபீதா
ரெட்டி கூறினார். ஜெகன்மோகன் செல்லும் வழி நெடுகிலும், தெலுங்கானா தனி
மாநில கோரிக்கை ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்தாலும்,
மெகபூபாபாத் ரயில் நிலையம் தான் போர்க்களம் போல மாறியது.
"பந்த்'திற்கு அழைப்பு:
"வாரங்கல் மாவட்டத்தில் வன்முறை நிகழ, ஜெகன்மோகன் ரெட்டியே காரணம்.
அதனால், வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வாரங்கல் பிராந்தியத்தில்
இன்று "பந்த்' நடத்தப்படும்' என, தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழுவின்
அமைப்பாளர் கோதண்டராம் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ""மாநில
அரசு முன்பே நடவடிக்கை எடுத்திருந்தால், வன்முறை நிகழ்ந்திருக்காது.
மெகபூபாபாத்தில் நிகழ்ந்த சம்பவங்களுக்கு ஜெகனும், எம்.எம்.சி., கொண்ட
முரளியுமே காரணம்,'' என்றார்.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» தெலுங்கானா பிரச்னை: ஆந்திராவில் வன்முறை வெடித்தது (வீடியோ இணைப்பு)
» ஜெகன் மோகன் ரெட்டி கைது
» ஆந்திராவில் மறைந்த ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் துவக்கிய ஓய்.எஸ்.ஆர்.,கட்சிக்கு இடைத்தேர்தலில் அமோக வெற்றி கிட்டியுள்ளது
» பா.ஜ.விடம் ஆதரவு கேட்கிறார் : ஜெகன் மோகன் ரெட்டி!
» எம்.பி., பதவியை உதறி காங்கிரசுக்கும் ஜெகன் மோகன் ரெட்டி முழுக்கு: ஆந்திர அரசியலில் பரபரப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum