TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஜெகன் மோகன் வெற்றியால் ஆந்திர காங்கிரஸ் கலக்கம்

Go down

ஜெகன் மோகன் வெற்றியால் ஆந்திர காங்கிரஸ் கலக்கம் Empty ஜெகன் மோகன் வெற்றியால் ஆந்திர காங்கிரஸ் கலக்கம்

Post by ஜனனி Mon Jun 18, 2012 1:15 pm

ஜெகன் மோகன் வெற்றியால் ஆந்திர காங்கிரஸ் கலக்கம் Tamil_News_large_488396ஆந்திராவில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில், ஜெகன்
மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது,
காங்கிரஸ் தலைவர்களை கலக்கமடையச் செய்துள்ளது. மாநிலத்தில் தங்கள்
கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ எனவும் அஞ்சத்
துவங்கியுள்ளனர். அத்துடன் மேலும் பல, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஒய்.எஸ்.
ஆர்.காங்கிரசுக்குத் தாவ திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில், ஆந்திராவில் இருந்து
காங்கிரஸ் கட்சி சார்பில் 33 எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தற்போது மாநிலத்திலும் ஆட்சியில் உள்ள அந்தக் கட்சி, சமீபத்தில் 18 சட்டசபை
தொகுதிகளுக்கும், நெல்லூர் லோக்சபா தொகுதிக்கும் நடந்த இடைத் தேர்தலில்,
இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 15 தொகுதிகளை, ஜெகன் மோகனின்
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது.வருமானத்திற்கு அதிகமாக சொத்து
சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஜெகன் மோகன் கைது செய்யப்பட்டு, சிறையில்
உள்ள நிலையில், அவரது கட்சி இந்த அளவுக்கு வெற்றி பெற்றிருப்பது, மாநில
அரசியலில் மாற்றம் நிகழுமோ, எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வீழ்ச்சி
ஏற்படுமோ என்ற கலக்கத்தையும், அச்சத்தையும் அந்தக் கட்சித் தலைவர்கள்
மத்தியில் உருவாக்கியுள்ளது.

எச்சரிக்கை அறிவிப்பு :பல ஆண்டு காலமாக ஆந்திர மாநில அரசியலில்
ஆதிக்கம் செலுத்தி வந்த காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகளை மீறி,
துவங்கிய 15 மாத காலத்தில் ஜெகன் மோகன் கட்சி இந்த வெற்றியை பெற்றிருப்பது,
அரசியல் நோக்கர்கள் பலரையும் வியப்படைய வைத்துள்ளது. மேலும், நடந்து
முடிந்த இடைத்தேர்தல், 2014ல் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான அரையிறுதி
போல கருதப்பட்ட நிலையில், ஜெகனின் வெற்றி, அடுத்த தேர்தலில் அவர் ஆட்சியைப்
பிடிப்பதற்கான ஒரு அறிகுறியாகவே நம்பப்படுகிறது. அத்துடன், காங்கிரசுக்கு
இது ஒரு எச்சரிக்கை அறிவிப்பாகவும் கருதப்படுகிறது.

சாக்குபோக்கு:ஜெகன் மோகன் கட்சியின் வெற்றி குறித்து கருத்து
தெரிவிக்கும் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள், "கைது
செய்யப்பட்டதால் ஏற்பட்ட அனுதாப அலையால் தான் ஜெகன் வெற்றி பெற்றார்' என,
சாக்கு போக்கு சொன்னாலும், அவருக்கு எதிரான ஊழல் புகார்களை மக்கள்
நிராகரித்துள்ளதையும், அரசுக்கு எதிராக எதிர்ப்பு அலை உருவாகியுள்ளதையுமே
காட்டுகிறது.ஆந்திராவில் சமீபத்தில் இடைத் தேர்தல் நடந்த 18 சட்டசபை
தொகுதிகளும், அங்கு மொத்தமுள்ள 23 மாவட்டங்களில் 12 மாவட்டங்களில்
பரவியுள்ளன. இந்தப் பகுதிகளில் எல்லாம் ஜெகன் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
மேலும், தனி மாநில கோரிக்கை தீவிரமாக வலுப் பெற்றுள்ள தெலுங்கானா
பகுதிகளிலும், ஜெகனின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் பெரு வெற்றி பெற்றுள்ளது,
அவருக்குள்ள செல்வாக்கை பறை சாற்றுவதாக உள்ளது. அத்துடன் தெலுங்கானா
பகுதியில் உள்ள பரகலா தொகுதியில், ஜெகன் கட்சி வேட்பாளர், தெலுங்கானா
ராஷ்டிரிய சமிதி கட்சி வேட்பாளரிடம் 1,500 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான்
தோல்வி அடைந்துள்ளார். அதனால், அங்கும் அவருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது
நிரூபணமாகியுள்ளது.

காங்கிரசுக்கு சிக்கல்:ஆந்திர சட்டசபை மொத்த உறுப்பினர்கள்
எண்ணிக்கை 294. இதில், காங்கிரஸ் கட்சிக்கு 154 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
பெரும்பான்மைக்கு தேவையான 148ஐ விட, ஆறு உறுப்பினர்களே அதிகமாக உள்ளனர்.
ஜெகன் கட்சியின் தற்போதைய வெற்றியைப் பார்த்து, காங்கிரஸ் அணியில் உள்ள
குறிப்பிட்ட அளவு எம்.எல்.ஏ.,க்கள், ஜெகனின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசுக்கு
தாவினால், முதல்வர் கிரண்குமார் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு
நிச்சயம் சிக்கல் ஏற்படும் என்பது உண்மையே. அப்படி சிலர் கட்சி தாவ
திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நம்பிக்கை :ஏற்கனவே உட்கட்சி பூசலில் தவிக்கும் காங்கிரஸ்
கட்சியில் எந்த நேரத்திலும், கட்சி தாவல் நடக்கவும் வாய்ப்பு உள்ளது.
அதற்கு ஏற்றார் போல் ஏற்கனவே, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் இருவர், தங்களின்
பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்து விட்டு, ஜெகனுக்கு ஆதரவு
தெரிவித்துள்ளனர்.இருந்தாலும், தற்போதைக்கு சிறையில் இருக்கும் ஜெகன்
மோகன், காங்கிரஸ் அரசை கவிழ்க்கும் வேலையில் ஈடுபட மாட்டார். அரசுக்கு
எதிராக உள்ள அலையை இன்னும் தீவிரப்படுத்தி, 2014 சட்டசபை தேர்தலில் வெற்றி
பெறுவதையே அவர் விரும்புவார். அதற்கு மற்றொரு காரணம், மாநில அரசு கவிழும்
சூழ்நிலை உருவானால், சட்டசபைக்கு முன்னதாகவே தேர்தல் வருவதை விரும்பாத
தெலுங்கு தேசம் கட்சி, காங்கிரஸ் கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு
கொடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. அதையும் கருத்தில் கொண்டே ஜெகன்
செயல்படுவார் என, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மண்ணை கவ்விய கவர்ச்சி அரசியல்வாதி:ஆந்திராவில் ஆடம்பரமான
விருந்தளிப்பதில் பெயர் பெற்ற, எதிலும் வீண் ஆரவாரத்துடன் செயல்படக்கூடிய,
காங்கிரஸ் தலைவரான டி.சுப்பராமி ரெட்டி, சமீபத்தில் நெல்லூர் லோக்சபா
தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில், படுதோல்வி அடைந்தது, அவரது ஆதரவாளர்களை
அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 69 வயதான அவர், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்
வேட்பாளர் ராஜமோகன் ரெட்டியிடம், 2.91 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில்
தோற்றுள்ளார். இதன் மூலம், நெல்லூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஏழு
சட்டசபை தொகுதிகளிலும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசுக்கு அமோக ஆதரவு இருப்பது
வெட்ட வெளிச்சமாகியுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர், நன்கொடையாளர்,
தொழிலதிபர் என, பல முகங்களைக் கொண்ட, காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுக்கு
மிகவும் நெருக்கமான சுப்பராமி ரெட்டியே, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை
வீழ்த்த சரியான நபர் என நினைத்து, காங்கிரஸ் மேலிடம் அவரை வேட்பாளராக
நிறுத்தியும், அவரும், வாக்காளர்களுக்கு தங்க ஆபரணங்கள் உட்பட பல பரிசுப்
பொருட்களை அள்ளி வீசியும் தோல்வியைச் சந்தித்திருப்பது, மக்கள் மத்தியில்
மாற்றம் ஏற்பட்டுள்ளதையே காட்டுகிறது.

ஆந்திர காங்கிரசில் இப்போது என்ன பிரச்னை?
* ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பின், அவரின் இடத்தை நிரப்ப தகுதியான தலைவர்கள் இல்லை.
*அதிகரித்துள்ள உட்கட்சி பூசல்.
*ஒரு பலமான அரசியல் சக்தியாக ஜெகன் உருவாகியிருப்பது.
* தனி தெலுங்கானா மாநில கோரிக்கை விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியிருப்பது.
*மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் விரும்பும், அனைவரையும் சமாளிக்கக் கூடிய திறமையான தலைவர் இல்லாதது.
இவை எல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum