Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மேலவை அமைக்க பெரும்பான்மை கட்சிகள் எதிர்ப்பு :அனைத்து கட்சி கூட்டத்தில் கருத்து
Page 1 of 1

சென்னை : மேலவை அமைப்பதில் அவசரம் காட்டக்கூடாது என, அனைத்து கட்சிக் கூட்டத்தில் பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தி.மு.க., - காங்கிரஸ் கட்சிகள் மட்டும் விரைவில் தேர்தலை நடத்த வலியுறுத்தின.
தமிழகத்தில் மேலவை தேர்தலை நடத்த, தொகுதிகளை சீரமைப்பு செய்து, அதன் மீது கருத்து கேட்க, ஆகஸ்ட் 28ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், பல்வேறு கட்சிகள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தன. அவற்றை பரிசீலித்த தேர்தல் கமிஷன், பட்டதாரி மற்றும் ஆசிரியர்கள் தொகுதிகளை பொறுத்தமட்டில் தொகுதி வரையறையில் எந்த மாற்றமும் தேவையில்லை என முடிவு செய்தது.உள்ளாட்சி தொகுதி வரையறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, அதன் மீது அரசியல் கட்சியினரின் கருத்து கேட்க நேற்று, அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தலைமையில், இந்திய தேர்தல் கமிஷன் செயலர் வில்பிரட், சார்பு செயலர் ஆஷிஷ் சக்கரவர்த்தி முன்னிலையில் இக்கூட்டம் நடந்தது.அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ம.க., - காங்கிரஸ், பகுஜன் சமாஜ், பா.ஜ., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதில், தேசியவாத காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, ""ஆசிரியர்களாக உள்ள பட்டதாரிகள் இரண்டு ஓட்டுகளைப் போட முடியும்? கவுன்சிலர்களாக உள்ள பட்டதாரிகள் இரண்டு ஓட்டு போட முடியுமா. கடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகள் பற்றி தேர்தல் கமிஷன் எவ்வித பதிலும் தரவில்லை. அதற்குள் அடுத்த கூட்டம், குறைந்த கால அவகாசத்தில் எதற்காக நடத்தப்படுகிறது,'' என்றெல்லாம் கேள்விகள் எழுப்பி, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
இக்கூட்டம் குறித்து பல்வேறு கட்சித் தலைவர்கள் கூறியதாவது:
தமிழிசை சவுந்திரராஜன் - பா.ஜ: பட்டதாரிகள் அனைவரையும் சேர்க்க வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஓட்டுரிமை உண்டா என்ற சந்தேகம் உள்ளது. இவ்விஷயத்தில் அவசரப்படக் கூடாது. சட்டசபை தேர்தலுக்கு முன் மேலவையை அமைக்க ஆளுங்கட்சி முயற்சிக்கிறது. வாக்காளர் பட்டியல் தயாரிக்க அவகாசம் தேவை. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மேலவை தேர்தலை நடத்த வேண்டும்.
மகேந்திரவர்மன் - பகுஜன் சமாஜ்: பெண்கள், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் ஆகியோருக்கான ஒதுக்கீடு அளித்த பின் தான் மேலவை தேர்தல் நடத்த வேண்டும். ஆசிரியர்கள் மட்டுமன்றி, போக்குவரத்து தொழிலாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், டாஸ்மாக் ஊழியர்கள் ஆகியோருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். அவர்களது குரல், மேலவையில் ஒலிக்க வேண்டும்.
பாலு - பா.ம.க: கடந்த கூட்டத்தில், கடலூர் தொகுதியுடன் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ப்பது சரியல்ல என்றும், அரியலூர் மாவட்டத்தை இதில் சேர்த்துவிட்டு, திருச்சியுடன் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்க்க கோரினோம். அதை ஏற்று, இந்த முறை அறிவிப்பு செய்திருப்பதற்கு நன்றி. எனினும், தொகுதி சீரமைப்பு தொடர்பாக இன்னொரு கூட்டம் தேவையில்லை. மேலவையை முறையாகவும், காலம் தாழ்த்தாமலும் அமைக்க வேண்டும்.
பாலகிருஷ்ணன் - மார்க்சிஸ்ட்: கடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட பெரும்பாலான ஆலோசனைகளை, தேர்தல் கமிஷன் பரிசீலிக்காமல் நிராகரித்துள்ளது. அவசர கதியில் தேர்தலை நடத்தும் நோக்கில் மீண்டும் கூட்டம் நடத்தப்படுகிறது. அதிகளவு உள்ளாட்சி பிரதிநிதிகள் கொண்ட, கிராம ஊராட்சித் தலைவர்களுக்கும், அதிக ஆசிரியர்கள் கொண்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும். ஆதிதிராவிடர்கள், பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து, நிதானமாக தேர்தலை நடத்தலாம். ஒரு பக்கம் இங்கு கூட்டம் நடத்திக் கொண்டு, மறுபக்கம் யார் எல்லாம் வாக்காளர்கள் என மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது கண் துடைப்பு.
தங்கபாலு - காங்கிரஸ் தலைவர்: இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் எந்த முறையில் மேலவை தேர்தல் நடத்தப்படுகிறதோ, அதே முறையில் தமிழகத்திலும் நடத்த வேண்டும். தமிழகத்தைப் பிரித்து பார்க்க, அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை. எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஓட்டுரிமை அளிக்க வேண்டும். இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம். ஆனால், தமிழக மேலவை மசோதா அடிப்படையில் தான் தேர்தலை நடத்த முடியும். தேர்தல் கமிஷன் எடுக்கும் முடிவை, காங்கிரஸ், தி.மு.க., ஏற்கும்.
கல்யாணசுந்தரம் - தி.மு.க: கூட்டத்தில் சில கட்சிகள், மேலவை தேவையில்லை என்றும், அதற்கான தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமென்றும் வலியுறுத்தின. உடனே தேர்தலை நடத்தி மேலவையை கொண்டு வர தி.மு.க., வலியுறுத்தியது. தி.மு.க., தேர்தலை சந்திக்க தயார். ஆனால், சில கட்சிகள் பயப்படுகின்றன. தேர்தல் கமிஷனுக்கு இவ்விஷயத்தில் ஒத்துழைப்பு தருவோம். மேலவையைக் கலைக்க அ.தி.மு.க., காட்டிய அவசரத்தைப் போல, அதை அமைப்பதற்கு தி.மு.க., அவசரம் காட்டவில்லை.
மேலவை அமைப்பதில் அவசரம் காட்டவில்லை: தலைமை தேர்தல் அதிகாரி : இக்கூட்டத்தில், அ.தி.மு.க., சார்பில் ஜெயலலிதா அளித்த மனு கொடுக்கப்பட்டது. அதில், "மேலவையை முறையாக அமைக்க வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் பட்டதாரி மற்றும் ஆசிரியர்கள் தொகுதிகளை பிரிக்கக்கூடாது.சென்னையில் அதிகளவு பட்டதாரிகளும், ஆசிரியர்களும் இருப்பர்; தேனி போன்ற மாவட்டங்களில் குறைவாக இருப்பர். எனவே, அவர்களது பட்டியலை தயாரித்து விட்டு, அதனடிப்படையில் தொகுதிகளை முடிவு செய்ய வேண்டும். அதேபோல, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தேர்தல் நடத்த வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
இக்கூட்டம் குறித்து பிரவீன்குமார் கூறியதாவது:பட்டதாரிகளாக ஆசிரியர்கள் இருந்தாலும், அவர்கள் பட்டதாரி தொகுதியிலும், ஆசிரியர் தொகுதியிலும் என இரண்டு ஓட்டுகளைப் போடலாம். தொகுதி சீரமைப்பு தொடர்பாக சில கட்சிகள் வைத்த ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன.எனினும், இட ஒதுக்கீடு அமல்படுத்துதல், பெண்களுக்கு ஒதுக்கீடு போன்றவை குறித்து அரசியலமைப்புச் சட்டப்படி தான் தேர்தல் கமிஷன் முடிவு எடுக்கும். ஊராட்சித் தலைவர்களை சேர்ப்பதற்கு, சட்டத்தில் கூறப்படவில்லை.உள்ளாட்சி அமைப்புகளுக்கான தொகுதிகளில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்துடன் அரியலூரும், திருச்சி மாவட்டத்துடன் பெரம்பலூரும் சேர்க்கப்பட்டுள்ளன. பட்டதாரி மற்றும் ஆசிரியர்களுக்கான தொகுதிகளில் எவ்வித மாற்றமும் இல்லை. பட்டதாரிகளை பொறுத்தவரை, திறந்தவெளி பல்கலையின் பட்டதாரிகளும் ஆந்திராவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எனினும், 10ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் ஐந்தாண்டுகள் படித்திருக்க வேண்டுமென்ற நிபந்தனை உள்ளது.ஆந்திராவில், இதே போல நவம்பர் 1ம் தேதியை தகுதியேற்பு நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரித்து, இறுதி வாக்காளர் பட்டியல் டிசம்பர் 29ம் தேதி வெளியிடப்பட்டன; மார்ச் மாதம் தேர்தல் நடத்தப்பட்டன.தேர்தலை நடத்துவதில் தேர்தல் கமிஷன் அவசரம் காட்டவில்லை. தேர்தல் கமிஷன் எப்போது தேர்தலை நடத்தச் சொல்கிறதோ அப்போது தேர்தல் நடத்தப்படும். மேலவைக்கான வாக்காளர் பட்டியலில் இடம் பெற, படிவம் 17ஐ உள்ளாட்சி பிரதிநிதிகள் பூர்த்தி செய்து தர வேண்டும். பட்டதாரிகளுக்கு படிவம் 18ம், ஆசிரியர்களுக்கு படிவம் 19ம் வழங்கப்பட்டு, அவற்றை பூர்த்தி செய்து தர வேண்டும்.இந்த படிவங்கள் அச்சடித்து தயாராக உள்ளன. மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இன்றைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகள் பற்றி, தேர்தல் கமிஷன் தான் முடிவு எடுக்கும்.இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.
மேலவைக்கான தொகுதிகள் : கிராம ஊராட்சித் தலைவர் தவிர, மற்ற ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றின் கவுன்சிலர்கள் சேர்ந்து மேலவைக்கு 26 உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும். இதற்காக சென்னை இரண்டு தொகுதிகளாகவும், திண்டுக்கல் - தேனி, கடலூர் - அரியலூர், கோவை - நீலகிரி, நாமக்கல் - கரூர், திருச்சி - பெரம்பலூர், நாகை - திருவாரூர், சிவகங்கை - ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் இணைக்கப்பட்டு, ஏழு தொகுதிகளாக மாற்றப்படுகின்றன. மீதமுள்ள மாவட்டங்கள் தனித்தனி தொகுதிகளாக இருக்கும்.
ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கான ஏழு தொகுதிகள் வருமாறு:
சென்னை: சென்னை - திருவள்ளூர் - காஞ்சிபுரம்.
தமிழக வடக்கு: வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை.
தமிழக வட மத்தி: விழுப்புரம், கடலூர், சேலம், நாமக்கல்.
தமிழக மேற்கு: ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர்.
தமிழக கிழக்கு மத்தி: திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகை, திருவாரூர், தஞ்சை.
தமிழக தெற்கு மத்தி: திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம்.
தமிழக தெற்கு: கன்னியாகுமரி,திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்கள்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» பெரும்பான்மை ஆதரவுடன் மேலவை தீர்மானம் நிறைவேற்றம்; பா.ம.க., வும் ஆதரித்த அதிசயம்
» தமிழக சட்ட மேலவை: மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது: அதிமுக கடும் எதிர்ப்பு
» கூட்டுக்குழு அமைக்க அரசு முன்வருகிறது? ஆலோசனை கூட்டத்தில் திருப்பம்
» தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கட்சிகள் காங்., எதிர்ப்பு
» எனது இறுதி பயணம் திருப்பதி எனக்கு அனைத்து நாடுகளிலுமே எதிர்ப்பு இருக்கு”! திருப்பதியில் மகிந்த ராஜபக்ச பெருமிதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum