Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 7:01 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Today at 6:57 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 5:06 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:03 pm
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» தினம் ஒரு திருக்குறள்- படியுங்கள்
by வாகரைமைந்தன் Sun Aug 07, 2022 3:08 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Tue Aug 02, 2022 12:07 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Sat Jul 16, 2022 1:01 pm
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm
» கண்ணகி என்னும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி
by veelratna Wed Oct 20, 2021 12:51 pm
» கொரோனா பாடல் அண்மையில் வெளியாகிய
by veelratna Mon Oct 18, 2021 12:44 pm
» மாவிடடபுரம் கந்தசுவாமி கோவிலில் இடம் பெற்ற தேர்த்திருவிழாவின் பழைய காணொளி ஒன்று
by veelratna Mon Oct 18, 2021 11:54 am
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில்.
by veelratna Fri Oct 15, 2021 1:48 pm
» தலைமுறை இடைவெளி
by veelratna Fri Oct 15, 2021 1:44 pm
» தமிழால் பூசை நடக்கும் ஒரேகோவில்
by veelratna Tue Oct 12, 2021 10:58 am
» அண்ணை ரெயிட் கே எஸ் பாலச்சந்தர்
by veelratna Tue Oct 12, 2021 10:52 am
» ஓடலிராசையா KS Balachandran
by veelratna Mon Oct 11, 2021 10:21 am
» சுகுமாரி கதை தேடி நான் உயிரை கொடுத்ததோ
by veelratna Sun Oct 10, 2021 8:43 pm
» கலாவிநோதன் சின்னமணிஅவர்களின் பகுதி ;1
by veelratna Fri Oct 08, 2021 9:26 am
» தேசிய தலைவர் பிரபாகரன் ...................
by வாகரைமைந்தன் Fri Oct 01, 2021 11:53 am
உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
2 posters
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Re: உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
தமிழ் தெரியாத மகேஷ் பாபு, பரத் எனும் நான், படத்தில் உளச்சான்று என்பதை உளறிச்சான்று என சொல்லியது ஊடகங்களில் பேசப்பட்டது. அது சினிமாவில்...........................
இங்கே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் மிதி வண்டியில் தடுமாறி விழுந்தது பேசப்பட்ட நிலையில் ,
வார்த்தை தடுமாறிய சம்பவம் மீண்டும் கேலி செய்யப்பட்டு வருகிறது.வார்த்தை தடுமாறி விட்டால்........................
America is a nation that can be defined in a single word: Asufutimaehaehfutbw
அதேசமயம் கேலி செய்வதைக் கண்டித்து சிலர், வயது கூடிய ஒருவரைக் கேலி செய்ய வேண்டாம் எனவும் கருத்துப் பதிவு செய்து வருகின்றனர்.
கமலா ஹரிஸ் க்கு அதிஸ்டம் காத்திருக்கிறதா.............?
வாகரைமைந்தன்- பண்பாளர்
- Posts : 1020
Join date : 23/05/2021
மாதவனும் பழைய பஞ்சாங்கமும்
மாதவன் சொன்னது சரியா?
[You must be registered and logged in to see this image.]
செயற்கைகோள் துல்லிய ஏவுதலுக்கு பஞ்சாங்கம் கணிப்பு மிக அவசியம் என இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியதாக வெளியான செய்தி தவறானது. விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகளுக்காக உள்ள அல்மனாக் என்பதை வைத்தும், பல்வேறு கம்யூட்டர் சிமுலேஷன் மற்றும் பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு செயற்கைகோள் ஏவப்படும் நேரம் கணிக்கப்படுவது என்றே தெரிவித்து இருக்கிறார் என அறிய முடிகிறது.அன்றைய பஞ்சாங்கம் என்பதும் தவறு,பஞ்சாங்கத்தை வைத்து ஜோசியம் பார்ப்பதும் தவறு.
மொழிபெயர்ப்பு....பஞ்சாங்கம்-Almanac
வாகரைமைந்தன்- பண்பாளர்
- Posts : 1020
Join date : 23/05/2021
அரசியல்வாதிகளின் பொய்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ” பொய் செய்திகளை பரப்புபவர் கைது ” எனப் பதிவிட்டு உள்ளார்.
[You must be registered and logged in to see this image.]
ஜூன் 27-ம் தேதி உண்மைக் கண்டறிதல் தளமான ஆல்ட் நியூஸ் உடைய இணை நிறுவனர் மொகமது ஜுபைரை டெல்லி போலீசார் கைது செய்தனர். மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும், கலவரத்தைத் தூண்டுவதாகவும் ட்விட்டரில் ஒருவர் அளித்த புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153( கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஆத்திரத்தை உண்டாக்குவது) மற்றும் 295ஏ ( மத உணர்வுகளையோ அல்லது நம்பிக்கைகளையோ அவமதிப்பது) ஆகிய பிரிவுகளில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொகமது ஜுபைரின் கைதுக்கு எதிர் கட்சிகள் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஜுபைர் கைது செய்யப்பட்டதை அடுத்து , ” பொய் செய்தி பரப்புபவர் கைது ” என ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வலதுசாரி ஆதரவாளர்கள் மற்றும் பாஜகவினர் பதிவிட்டு வருகின்றனர். ஜுபைரை கைதை பொய் செய்தி பரப்புபவர் கைது எனப் பதிவிட்ட பாஜகவின் காயத்ரி ரகுராம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு பொய் செய்திகளை பரப்பி இருக்கிறார்.
கேரளாவில் கோவிலை மசூதியாக மாற்றியதாக வதந்தி :
கடந்த ஏப்ரல் மாதம் கேரளாவின் மல்லப்புரம் பகுதியில் உள்ள பழமையான இந்துக் கோவிலை முஸ்லீம்கள் கைப்பற்றி மசூதியாக மாற்றியுள்ளதாக பரவிய வதந்தியை காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார். ஆனால், அந்த வீடியோ கர்நாடகாவின் மங்களூரில் உள்ள பழமையான ஜீனத் பக்ஷ் மஸ்ஜித் உடையது என நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.
கேரளாவில் கோவிலை மசூதியாக மாற்றியதாக வதந்தியைப் பகிர்ந்த காயத்ரி ரகுராம் !
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டம் :
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் பணி ஆணை வழங்கப்பட்ட போது, அர்ச்சகர் பயிற்சி மையத்தின் நிலை என 2013-ம் ஆண்டு மதுரையில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படத்தை தவறாக ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
மகளிர் இலவச பேருந்து பயணம் :
கடந்த ஆண்டு ஜூன் மாதம் திமுக ஆட்சியில் பெண்களுக்கு உள்ளூர் பேருந்துகளில் இலவச பயணம் என அறிவிக்கப்பட்ட திட்டத்தைக் குறிப்பிட்ட காயத்ரி ரகுராம் சாதாரண பேருந்துகளின் எண்ணிக்கை குறைவு என தவறான தகவலை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
ஜேஎன்யூ மாணவிகள் நடிப்பதாக வதந்தி :
கடந்த ஏப்ரல் மாதம் ஜேஎன்யூ-வில் நடைபெற்ற தாக்குதலில் காயங்கள் ஏற்பட்டது போன்று போலியாக நடிப்பதாக இரு மாணவிகள் தாக்கப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படங்களை காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார். ஆனால், அது பொய்யான தகவல். உண்மையாகவே அவர்கள் தாக்கப்பட்டதற்கான ஆதாரங்களுடன் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்
போலி நியூஸ் கார்டுகள் :
மத்திய அரசு ஒளிவரைவு சட்டத்தை நிறுத்தாவிட்டால் சினிமாவில் இருந்தே முற்றிலும் விலகுவேன் என நடிகர் சூர்யா கூறியதாக போலியான நியூஸ் கார்டை கடந்த ஆண்டு ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
ஒளிவரைவு சட்டத்தை நிறுத்தாவிட்டால் சினிமாவில் இருந்து விலகுவேன் என சூர்யா கூறினாரா ?
இதேபோல், திமுக மகளிர் அணி கட்சியில் செயல்படுவதே இல்லை. இளம் பெண்களை இளைஞர் அணியில் சேர்ப்பதில் தவறு எதுவும் இல்லை. மகளிர் அணி செய்ய தவறியதை தான் நான் செய்கிறேன் என திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கூறியதாக போலியான நியூஸ் கார்டை பதிவிட்டு விமர்சித்து இருந்தார்.
மகளிரணி செயல்படவில்லை என உதயநிதி கூறியதாக போலிச் செய்தியை பகிர்ந்த காயத்ரி ரகுராம் !
கடந்த மார்ச் மாதம், தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை மதிமுக எம்.பி வைகோ விமர்சித்து உள்ளதாக போலியான நியூஸ் கார்டை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்
தமிழக பட்ஜெட்டை வைகோ விமர்சித்ததாக பாஜகவினர் பரப்பும் போலிச் செய்தி !
இப்படி பல வதந்திகள் மற்றும் போலியான செய்திகளை தமிழக பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்துள்ளார்.
இவர் மட்டுமல்ல அனைத்து அரசியல்வாதிகளும்,ஏன் youtube பிரபலங்களும்,சினிமாக்காரர்களும் சாமியார்களும் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள இப்படி பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்கள்.நாம் இவற்றைக் கண்டறிந்து எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
வாகரைமைந்தன்- பண்பாளர்
- Posts : 1020
Join date : 23/05/2021
படிக்காத மேதை
பிரதமர் படித்தவரா இல்லை படிக்காதவரா?
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய உரையில், பிரதமர் மோடியை படிக்காத மேதை எனக் கூறியிருந்தார்.ஜூன் 26-ம் தேதி அன்று சென்னையில் பாஜக அரசின் எட்டு ஆண்டு சாதனை குறித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், மாநிலத் தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் மற்றும் பொதுச்செயலாளர்கள் என பாஜகவினர் கலந்து கொண்டனர்.
அண்ணாமலை பேசுகையில்....இங்கு கர்மவீரர் காமராஜர் படிக்காதவர் தான், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி படிக்காதவர் தான். ஆனால் இன்று அந்த படிக்காத மேதை நரேந்திர மோடி அவர்கள் டெல்லியில் இருந்து செய்து இருக்கக்கூடிய சாதனையை பாருங்கள்.'என்றார்.
பிரதமரின் கல்வித்தகைமை பற்றி பல விவாதங்கள் இருந்து வருகின்றன.கடந்த பல ஆண்டுகளாக பிரதமர் மோடி வாங்கியதாக கூறப்படும் பட்டம் போலியானது எனக் குற்றச்சாட்டுகள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆனாலும்.............
2019 நாடாளுமன்ற தேர்தல் வேட்புமனுவில் நரேந்திர மோடி அவர்கள் குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பட்டம் வரை பெற்று உள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

குடிப்பது பாதுகாப்பானது என்று உள்ளூர் மக்களுக்குக் காட்ட,அசுத்தமான 'புனித நதி'யில் இருந்து நேராக ஒரு கிளாஸ் தண்ணீரைக் குடித்த இந்திய அரசியல்வாதி ஒருவர். இரண்டு நாட்களுக்குப் பிறகு விமானம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
ஜூலை 17, ஞாயிற்றுக்கிழமை, சுல்தான்புர்லோதிக்குச் சென்றிருந்தபோது, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஒரு தைரியமான விளம்பர ஸ்டண்டை செய்தார். நிருபர்கள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் சீக்கிய முதியவர்களுடன் சேர்ந்து, மான் ஒரு கட்டத்தில் குனிந்து, காளி பீன் ஆற்றில் இருந்து தண்ணீரை எடுத்து அனைவருக்கும் குடிப்பது பாதுகாப்பானது என்பதைக் காட்டினார். அந்த அரசியல்வாதியைச் சுற்றியிருந்தவர்களிடமிருந்து ஆரவாரமும் கைதட்டலும் கிடைத்தது. ஆனால் நதி உண்மையில் எவ்வளவு அழுக்காகவும் மாசுபட்டதாகவும் இருப்பது அவர்களுக்குத் தெரியாது.
அன்றைய தினம், துணை ஆணையர் அசோக் கௌரா செய்தியாளர்களிடம் கூறுகையில், காளி பெயின் கரையில் உள்ள பல நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருந்து சாக்கடை நீர் அதில் பாய்கிறது. அதைக் குடிப்பதற்கு எதிராக பகவந்த் மான் அறிவுறுத்துவதற்கு அவர் வரவில்லை என்று கூறினார்.
செவ்வாய் கிழமை, கடுமையான வயிற்று வலியை அனுபவிக்கத் தொடங்கியதால், மான் டெல்லி மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டதாக இந்தியா முழுவதும் உள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.
மானின் ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) அதிகாரிகள், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கும் அவரது முட்டாள்தனமான ஸ்டண்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்து, அவர் வழக்கமான சோதனைக்கு மட்டுமே உட்படுத்தப்பட்டதாகக் கூறினர். இருப்பினும், மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள்காட்டி பல செய்திகள், அவர் வியாழன் அன்றும் வயிற்று தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறினர்.
காளி பீன் சீக்கியர்களுக்கு ஒரு புனித நதி. ஏனெனில் சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக் அதில் குளித்து ஞானம் பெற்றதாக நம்பப்படுகிறது. 2000 ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்ததை விட இந்த நதி மிகவும் தூய்மையாக இருந்தாலும், அதைக் குடிப்பது அல்லது வேறு எந்த நதி நீரையும் குடிப்பது நல்லது அல்ல, என சுற்றுச்சூழலியலாளர் பாபா பல்பீர் சிங் சீச்சேவால் அதைச் சுத்தம் செய்வதைக் காண பிரச்சாரம் செய்தபோது, தெரிவிக்கப்பட்டது.
இன்னொரு தேர்மகோல் விஞ்ஞானியா?.
கொலராடோவைச் சேர்ந்த 7 வயது பிரிட்டானி ஸ்பானியல் டெக்ஸ்டர், விபத்துக்கு ஆளான பிறகு எழுந்து நிற்கவும் பின்னங்கால்களில் நடக்கவும் கற்றுக்கொடுத்து உலகம் முழுவதும் உள்ள பலருக்கு உத்வேகமாக மாறியுள்ளது
கார் விபதில் முன் கால்களை இழக்க நேர்ந்தது. அது முன் கால்கள் இல்லாமல் சுற்றி வர ஒருவித சக்கர நாற்காலி தேவைப்படும் என்று அவர்கள் கருதி, சிறிது நேரம் பயன்படுத்தினார்கள்.ஆனால் இப்போது தனது பின்னங்கால்களைப் பயன்படுத்து மிக வேகமாக நடக்க தொடங்கி உள்ளது.
இதேபோல் முன்னர் ஃபெயித் என்ற நாய் முன்கால்கள் துண்டிக்கப்பட்ட போது, பின்கால்களை தனியாக நகர்த்த கற்றுக்கொண்டது.

சிக்கலான மேம்பாலம்
உலகின் மிகச் சிக்கலான மேம்பாலம்
[You must be registered and logged in to see this image.]
ஐந்து நிலைகளில் பின்னிப்பிணைந்த 20 சரிவுகள் மற்றும் மூன்று முக்கிய விரைவுச் சாலைகளை இணைக்கும் வகையில், சோங்கிங்கில் உள்ள ஹுவாங்ஜுவான் மேம்பாலம்(Huangjuewan Overpass in Chongqing) உலகின் மிகவும் சிக்கலான மேம்பாலமாகக் கருதப்படுகிறது.
ஹுவாங்ஜுவான் மேம்பாலத்தின் முதல் புகைப்படங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் வந்தபோது, குறிப்பாக வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சி, ஆச்சரியம் மற்றும் கவலையை ஏற்படுத்தியது. பூமியில் அனுபவம் குறைந்த ஓட்டுநர்கள் எப்படி பல சாய்வுகள் மற்றும் பாதைகளை தேர்வு செய்ய வேண்டும் என்று பலர் ஆச்சரியப்பட்டனர். மேலும், உங்களை ஒரு அனுபவம் வாய்ந்த ஓட்டுநராக நீங்கள் கருதினாலும், ஹுவாங்ஜுவான் கொஞ்சம் குறைந்தபட்சம் முதல் பார்வையில் பயமுறுத்துகிறது. அதன் வடிவமைப்பாளர்களின் கூற்றுகள் உண்மையாக இருப்பதை விட மிகவும் சிக்கலானதாகத் தோன்றினாலும், Huangjuewan உலகின் மிகவும் சிக்கலான மேம்பாலம் என்று அறியப்பட்டது.

"நீங்கள் தவறான பாதையில் சென்றால் நீங்கள் முழு நகரத்தையும் சுற்றிச் செல்ல வேண்டும்" என்று ஒரு வாகன ஓட்டுநர் சிறிது நேரத்திற்கு முன்பு ஹுவாங்ஜுவான் மேம்பாலத்தின் புகைப்படத்தைப் பற்றி கருத்து தெரிவித்தார். மற்றவர்கள் தங்கள் ஜிபிஎஸ் அமைப்புகள் ஐந்து செங்குத்து நிலைகளைக் கருத்தில் கொண்டு ஏதேனும் உதவியாக இருக்குமா என்று ஆச்சரியப்பட்டனர்.
ஐந்து வருட திட்டமிடல் மற்றும் ஏழு வருட உண்மையான கட்டுமானப் பணிகளுக்குப் பிறகு 2017 இல் முடிக்கப்பட்டது. ஹுவாங்ஜுவான் மேம்பாலம் ஓரளவு கட்டடக்கலை அதிசயமாகக் கருதப்படுகிறது. மேலும் அதன் முன்னணி வடிவமைப்பாளர் மேம்பாலத்தில் செல்வது குறித்த எந்த கவலையும் ஆதாரமற்றது என்று வலியுறுத்துகிறார்.
இது மூன்று அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் பிற பிராந்திய சாலைகளை இணைப்பதால், வடிவமைப்பாளர்கள் மனித தவறுகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, ஓட்டுநர்கள் வேகமாகச் செல்ல உதவும் வகையில் கூடுதல் சரிவுகளைச் சேர்த்தனர். தவறான பாதையைத் தேர்வுசெய்தால், வாகன ஓட்டிகளுக்கு 10 நிமிடங்களுக்குள் வெளியேற முடியும். ஹுவாங்ஜுவான் ஓவர்பாஸில் இருந்து வளைவுகள் எட்டு வெவ்வேறு திசைகளில் சென்றாலும், ஓட்டுநர்கள் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை.
சீனா சமீபகாலமாக சில அழகான மேம்பாலங்களை உருவாக்கி வருகிறது. 2018 ஆம் ஆண்டில், கியான்சுன் இன்டர்சேஞ்ச் , 18 வெவ்வேறு வளைவுகளைக் கொண்ட மற்றொரு உள்கட்டமைப்பு அதிசயம். தரையில் இருந்து 37 மீட்டர் உயரத்தில் உயர்ந்திருந்தது.
Horizontal Glass Skyscraper -The Crystal

சதுரங்க ரோபோ
செஸ் விளையாடுவதற்கு குளிர்ச்சியான சிந்தனை தேவை. மிகவும் கடினமான சூழ்நிலையில் கூட, நீங்கள் வெற்றி பெற விரும்பினால், நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்.
உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் சிறப்பாகப் பெற அனுமதிக்க முடியாது. மேலும் நீங்கள் நிச்சயமாக வன்முறையில் ஈடுபட முடியாது. குறைந்தபட்சம், நீங்கள் ஒரு மனிதராக இருந்தால்.
ஆனால் விளையாட்டின் இந்த விதி பற்றி யாரும் ரஷ்ய செஸ் ரோபோவிடம் வெளிப்படையாகக் கூறவில்லை. சமீபத்திய விளையாட்டின் போது, ரோபோ தனது ஏழு வயது எதிராளியின் விரலைப் பிடித்து உடைத்தது.
அதிர்ஷ்டவசமாக, இரத்தவெறி கொண்ட இயந்திரம் நிரந்தர சேதத்தை ஏற்படுத்தவில்லை. விரலை கவனமாக வைத்துக் கொண்டு சிறுவனால் பின்னர் விளையாட்டுகளுக்குத் திரும்ப முடிந்தது.
ரஷ்யாவில் நடைபெற்ற மாஸ்கோ செஸ் ஓபன் போட்டியின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த நிகழ்வு ஜூலை 13 முதல் 21 வரை நடைபெற்றது.
போட்டியின் முடிவில், ஜூலை 19 அன்று, சிறுவன் AI-இயங்கும் செஸ் ரோபோட் என்ற அசாதாரண எதிரிக்கு எதிராக விளையாடினான்.
கணினிக்கு எதிராக மக்கள் சதுரங்கம் விளையாடுவது ஒன்றும் புதிதல்ல, ஆனால் இது வெறும் கணினி அல்ல. இது ஒரு முழு அளவிலான ரோபோவாக இருந்தது. அது ஒரு விளையாட்டு பலகையை கவனித்து, பொருத்தமான கணக்கீடுகளை செய்து, பின்னர் ஒரு துண்டை நகர்த்துவதற்கு ஒரு ரோபோ தனது கையைப் பயன்படுத்தியது.
இயந்திரம் ஒரு நகர்வைச் செய்து சிறுவனின் துண்டுகளில் ஒன்றைக் கைப்பற்றியது. ரோபோவின் நகமானது பலகையில் இருந்து துண்டை அகற்றத் தொடங்கியதும், சிறுவன் உடனடியாக அதை மாற்றுவதற்காக தனது ரூக்கை நகர்த்தினான்.
சிறுவன் ஒரு நகர்வைச் செய்த பிறகு, ரோபோவின் பதிலுக்கு நேரம் கொடுக்க வேண்டியது அவசியம். ஆனால் சிறுவன் விரைந்தான், ரோபோ அவனைப் பிடித்தது,விரலை முறித்தது.
நிச்சயமாக, அது ஒரு சதுரங்க துண்டைப் பிடித்திருக்கிறதா அல்லது மனித விரலைப் பிடித்திருக்கிறதா என்று ரோபோவுக்குத் தெரியாது. அது பலகையில் இருந்து “துண்டை” அகற்ற முயன்றபோது, அது சிறுவனின் விரலை முறுக்க ஆரம்பித்தது.
சிறுவனின் கை ரோபோவின் பிடியில் சுமார் 15 வினாடிகள் இருந்ததை வீடியோ காட்டுகிறது. அதன் பிறகு, அருகில் இருந்த இருவர் நகத்தை இழுத்து சிறுவனை விடுவித்தனர்.
துரதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில், ரோபோ ஏற்கனவே சிறுவனின் விரல் எலும்புகளை உடைத்துவிட்டது.
சிறுவனின் சதுரங்கப் போட்டியின் முடிவாக அது இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் நீங்கள் எதிர்பார்த்ததை விட அவர் மிகவும் கடினமானவர் என்பதை நிரூபித்தார். மருத்துவமனைக்குச் சென்ற பிறகு, சிறுவன் விரலில் ஒரு கட்டுடன்-மாவுக்கட்டுடன்- போட்டியை முடிக்கத் திரும்பினான்.

ஆல்பைன் கால்பந்து என்பது உலகின் மிகவும் பிரபலமான போட்டி விளையாட்டின் மாறுபாடு ஆகும். இது மிகவும் கடினமாக்கும் வகையில் செங்குத்தான மலை சரிவுகளில் விளையாடப்படுகிறது.
[You must be registered and logged in to see this image.]
பெரும்பாலான போட்டி விளையாட்டுகள் பொதுவாக சமதளத்தில் நடைபெறும். ஆனால் அல்பைன் கால்பந்தைப் பொறுத்தவரை, முக்கிய நிபந்தனைகளில் ஒன்று ஆடுகளம் செங்குத்தானதாக இருக்க வேண்டும். இது முற்றிலும் சாத்தியமற்றது என்று தோன்றுகிறது. ஆனால் ஆஸ்திரிய ஆல்ப்ஸில் உள்ள கால்பந்து ரசிகர்கள் குழு இது தங்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாடுவதற்கான இறுதி வழி என்று கூறுகின்றனர். 2014 உலகக் கோப்பையின் போது தீவிர அல்பைன் கால்பந்துக்கான யோசனையை அவர்கள் கொண்டு வந்தனர்.
இந்தியாவின் பீகாரைச் சேர்ந்த 62 வயது முதியவர், இரண்டு தசாப்தங்களாக குளிக்கவில்லை என்பது தெரியவந்ததையடுத்து, அதிக கவனத்தைப் பெற்றுள்ளார்.

தரம்தேவ் ராம் தனது சொந்த கிராமமான பைகுந்த்பூரில் பிரபலமானவர். அவர் 22 ஆண்டுகளாக குளிக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் அதற்காக யாரும் அவரை கேலி செய்யவில்லை. மாறாக, அவர் தனது முடிவுக்கு நிறைய மரியாதை பெறுகிறார். பெண்களுக்கு எதிரான வன்முறை, ஆண்களுக்கு இடையே நிலத்தகராறு, அப்பாவி விலங்குகள் கொல்லப்படுவது நிறுத்தப்படும் வரை குளிப்பதைத் தவிர்ப்பதாக 62 வயது முதியவர் சபதம் செய்தார். அது இன்னும் நடக்கவில்லை, எனவே தரம்தேவ் தனது சபதத்தை தொடர்ந்து நிலைநிறுத்துகிறார்.

பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் பொய் சொல்லலாமா?
விலைவாசி கடுமையாக உயர்ந்து உள்ளது, அத்தியாவசிய பொருட்களுக்கு கூட ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு உள்ளதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் எழுப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், “இது மத்திய அரசோ, பிரதமர் மோடியோ எடுத்த முடிவு அல்ல. திமுக அமைச்சர் உள்பட மாநிலங்கள் அங்கம் வகிக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலில் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு ” எனப் பேசியுள்ளார்.
ஜிஎஸ்டி கவுன்சிலைப் பொறுத்தவரையில், மொத்தம் 33 உறுப்பினர்கள், ஒன்றிய அரசின் நிதியமைச்சர் மற்றும் துணை நிதியமைச்சர் உள்ளனர். இவர்களோடு 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளும் உள்ளனர். கவுன்சிலில் எந்தவொரு முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றாலும் 75% வாக்குகள் தேவை. மொத்த வாக்குகளில், ஒன்றிய அரசின் இரண்டு உறுப்பினர்களுக்கு மட்டும் மூன்றில் ஒரு பங்கு(33%) உள்ளன. அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து 67% வாக்கு மட்டுமே .
இந்தியாவில் பெரும்பான்மையான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. குதிரை பேரம், ஆட்சிக் கவிழ்ப்பு என மாநிலங்களில் உள்ள ஆட்சியில் மாற்றம் ஏற்படுகிறது. இப்படி இருக்கையில், ஒன்றிய அரசு ஜிஎஸ்டி கவுன்சிலில் கொண்டு வரும் முடிவுகளுக்கு பாஜக ஆளும் மாநிலங்களின் ஆதரவு, அதேபோல் பாஜக ஆதரவு நிலையில் இருக்கும் மாநிலங்களின் ஆதரவு கிடைக்கும்பட்சத்தில் எளிதாக ஏற்றுக்கொள்ளப்படும். பெரும்பான்மையான ஆதரவு ஆளும் பாஜக அரசிற்கு இருப்பதால், ஒரு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தாலும் கூட கவுன்சில் முடிவை தடுக்க இயலாது.
பாஜக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை இருமுறை குறைத்து உள்ளதாகவும், திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் குறைக்கவில்லை என நிதியமைச்சர் பேசியுள்ளார்.
ஆனால், கடந்த வரும் தமிழக அரசு பெட்ரோல் மீதான வாட் வரியை 3 ரூபாய் குறைத்து இருந்தது. ஆனால், அதற்கு முந்தைய ஆட்சியில் இருந்த அதிமுக அரசு இருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை உயர்த்தி இருந்தது. ஆனால், அதைப் பற்றி பாஜகவினர் பேசுவதில்லை. பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்த தமிழக அரசை வரியைக் குறைக்கவே இல்லை எனப் பேசி வருகின்றனர்.
(YT)
வாகரைமைந்தன்- பண்பாளர்
- Posts : 1020
Join date : 23/05/2021
ஏன் இந்தப் பாகுபாடு?
இதுவும் வினோதம் தான்!
நாட்டின் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள விளையாட்டு அரங்கங்களின் கட்டமைப்பை மேம்படுத்த ஒன்றிய அரசு தரப்பில் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில், குஜராத், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக அளவிலான நிதியும், தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மிகக்குறைந்த அளவிலான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.[You must be registered and logged in to see this image.]
” கேலோ இந்தியா திட்டத்தின் ” கீழ் மாநில வாரியாக விளையாட்டு உள்கட்டமைப்பு தொடர்பாக ஒதுக்கப்பட்ட திட்டங்களின் நிதி குறித்து பதில் அளிக்குமாறு சிவசேனா கட்சியின் எம்.பிக்களான அரவிந்த் கன்பத், சஞ்சய் ஜாதவ், கிருபால் பாலாஜி துமானே, விநாயக் ராவத், தேல்கர் கலாபென் மோகன்பா உள்ளிட்டவர்கள் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் ஆகஸ்ட் 2-ம் தேதி பதில் அளித்து உள்ளார்.
[You must be registered and logged in to see this image.]
மக்களவையில் ஒன்றிய அமைச்சர் அளித்த பதிலில், ” நாடு முழுவதும் 300 திட்டங்களுக்கு ரூ.2754.28 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக, குஜராத் மாநிலத்தில் 5 திட்டங்களுக்கு ரூ.608.37 கோடியும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் 32 திட்டங்களுக்கு ரூ.503.02 கோடியும், அருணாச்சலப் பிரதேசத்தில் 21 திட்டங்களுக்கு 183.72 கோடியும், கர்நாடகாவில் 19 திட்டங்களுக்கு ரூ.128.52 கோடியும், ராஜஸ்தானில் 45 திட்டங்களுக்கு ரூ.112.26 கோடியும், மகாராஷ்டிராவில் 13 திட்டங்களுக்கு ரூ.110.80 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
100 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்ட 5 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. ராஜஸ்தான் மட்டுமே பாஜக ஆளாத மாநிலம் அதிலும், அந்த மாநிலத்திற்கு இருப்பதிலேயே அதிகபட்சமாக 45 திட்டங்களுக்கு ரூ.112.26 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
தென்னிந்திய மாநிலங்களில், தமிழ்நாட்டிற்கு 5 திட்டங்களுக்கு ரூ.33 கோடியும், ஆந்திரப்பிரதேசத்தின் 7 திட்டங்களுக்கு ரூ.33.80 கோடியும், தெலங்கானாவின் 6 திட்டங்களுக்கு ரூ.24.11 கோடியும், கேரளாவின் 5 திட்டங்களுக்கு ரூ.62.74 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில், பாஜக ஆளும் கர்நாடகா மாநிலத்திற்கு மட்டும் 19 திட்டங்களுக்கு ரூ.128.52 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் விளையாட்டு அரங்கங்களின் கட்டமைப்பை மேம்படுத்த ஒன்றிய அரசால் ஒதுக்கப்பட்ட நிதியில் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. குஜராத் மாநிலத்தின் 5 திட்டங்களுக்கு ரூ.608.37 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் 5 திட்டங்களுக்கு ரூ.33 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது.
(YT)
வாகரைமைந்தன்- பண்பாளர்
- Posts : 1020
Join date : 23/05/2021
பொய் சொன்ன அண்ணாமலை !
பர்மிங்ஹாம் இல் நடைபெற்ற 72 நாடுகள் பங்கேற்ற 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நிறைவடைந்துள்ளது. இந்த போட்டிகளில் பதக்கப்பட்டியலில் இந்தியாவின் பெயர் இடம் பெறுவது கனவாக இருந்தது அப்படியும் ஓரிரு பதக்கங்கள் பெற்று இருந்தாலும் இந்தியா பதக்கப் பட்டியலில் இறுதியில் காணப்படும் நிலை இருந்தது – அண்ணாமலை தமிழக பாஜக தலைவர் .
[You must be registered and logged in to see this image.]
2022ம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டியில் 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்ற இந்தியா பதக்கப் பட்டியலில் 4ம் இடத்தை பிடித்துள்ளது.

இதற்கு முன்பாக பாஜக ஆட்சியில், 2018ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 66 பதக்கங்கள் உடன் 3-ம் இடத்திலும், 2014-ல் ஸ்காட்லாந்த்தில் நடைபெற்ற போட்டியில் 64 பதக்கங்கள் உடன் 4-ம் இடத்திலும் இந்தியா இருந்து உள்ளது.

2010ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் 38 தங்கங்கள், 27 வெள்ளி , 36 வெண்கலம் என மொத்தம் 101 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 2ம் இடத்தைப் பிடித்ததே இன்றுவரை சாதனையாக இருந்து வருகிறது.
மேலும், 2006-ம் ஆண்டு 50 பதக்கங்கள் உடன் 4-ம் இடத்திலும், 2002-ம் ஆண்டு 69 பதக்கங்கள் உடன் 4-ம் இடத்திலும் இந்தியா இருந்து உள்ளது. 2002-ல் இருந்து கடந்த 20 ஆண்டுகளாக காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா பல பதக்கங்களை பெற்று 4 இடங்களுக்குள்ளே இருந்து வருகிறது. ஆனால், இந்தியா காமன்வெல்த் போட்டிகளில் கடைசி இடங்களில் இருந்து வருவதாக பொய்யான தகவலை பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.(YT)
அரசியலில் இதெல்லாம் சாதாரணம்தான்.அதற்காக இப்படியெல்லாமா ..........?
சமூக வலைத்தளங்களில்தான் இப்படியெல்லாம் பொய்கள் வருகிறதென்றால்,.....................?

» செய்தித் துளிகள்.............................காலையில் படித்த சில செய்திகளில் இருந்து........................
» விநோதம்-ஏமாற்றம்-எச்சரிக்கை
» வானத்தின் விநோதம், புகைப்படப்பிடிப்பாளரின் கண்ணில் சிக்கிய அரிய படங்கள் (காணொளி)
» ’தானே‘ புயலின் விளைவு: கடலில் வலை விரித்து நிலக்கரி அள்ளும் மீனவர்கள்! வட சென்னையில் விநோதம்
» பங்குச்சந்தை - தொடர் : 11

TamilYes :: செய்திக் களம் :: வினோதம்
Page 6 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|