Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
"விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியது" என்னும் தீர்ப்பால் தமிழர்களுக்கு என்ன பயன்
Page 1 of 1

"விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியது" என்னும் தீர்ப்பால் தமிழர்களுக்கு என்ன பயன் என்றொரு கேள்வி முன்வைக்கப்படுகின்றது. சுதந்திர தமிழீழத்தை நோக்கிய பயணத்தில், இந்தத் தீர்ப்பு இரண்டு முக்கிய பயன்களை அளிக்கின்றது. முதலாவதாக, இத்தீர்ப்பின் மூலம் இனப்படுகொலைப் பங்காளிகளின் பங்கு சட்டபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அது எப்படி என்பதை அறிந்துகொள்வதற்கு முன் இத்தடை ஏன் விதிக்கப்பட்டது என்று பார்க்கவேண்டும்.
இந்தியா தன்னுடைய வெளியுறவுக் கொள்கையில், வாஜ்பாய் ஆட்சியின்போது, 2000 ம் ஆண்டில் மாற்றங்கள் மேற்கொள்கின்றது. அப்பொழுதிலிருந்து இலங்கைக்கு போர்க்கப்பல்களும், ஹெலிகாப்டர்களும், தாக்குதல் ஆயுதங்கள் என்று பலவற்றையும் வழங்கத் தொடங்குகின்றது. ராணுவ ஆலோசனைகள், ராஜதந்திர உதவிகள் என்று நீளும் அந்த வேலைகள் 2005 ம் ஆண்டில் கூர்மையடைகின்றன. அப்பொழுது மன்மோகன் சிங் பிரதமராக இருக்கின்றார். எம்.கே. நாராயணன் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்கின்றார். இனப்படுகொலையின் முதல் பகுதியாக புலிகளுக்கான ஆதரவுத் தளத்தையும், புலிகளின் கடற்படையையும் அழிக்க திட்டமிடப்படுகின்றது.
இதன் அடிப்படையில் இனப்படுகொலை நடக்கும்போது, அதனை எதிர்த்து பெருமளவில் மக்கள் போராடக்கூடிய பகுதிகளில் அவற்றை முடக்குவதற்கான திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அப்படிப்பட்ட இரண்டு பகுதிகள் தமிழகமும், ஐரோப்பிய ஒன்றியமும். ஐரோப்பாவில் மக்கள் போராட்டம் என்பதைத் தாண்டி, விடுதலைக்கான நிதியையும் முடக்க வேண்டிய தேவை இனப்படுகொலையின் பங்காளிகளுக்கு இருக்கின்றது. அதன் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நெருக்கடி கொடுத்து விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிரவாதிகள் அமைப்பு என்று தடை விதிப்பதோடு, வங்கிகளில் இருக்கும் நிதிகளையும் முடக்குகின்றனர். இந்தியா அளித்த நெருக்கடி குறித்து இன்று வெளியாகியிருக்கும் தீர்ப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும்போதே, இருதரப்பில் ஒருதரப்பின் மீது தடை விதிப்பதென்பது, இன்னொரு தரப்புக்கு ஆதரவான செயலாகும். தடை விதித்ததன் மூலம் ஐரோப்பிய ஒன்றியமும், தடை விதிக்க அழுத்தங்கள் கொடுத்தது மூலம் இந்தியாவும் இனப்படுகொலையின் பங்காளிகளாக உருவெடுக்கின்றனர். இதே நேரத்தில் புலிகளின் கடற்படையை அழிப்பதற்கான வேலைகளும் தொடங்குகின்றன. அதனை முழுமூச்சில் இந்தியப் படைகளும், இந்தியா வழங்கிய போர்க்கப்பல்களின் உதவியோடு இலங்கையும் மேற்கொள்கின்றன.
இருக்கும் கப்பல்கள் வைத்துக்கொண்டு, புலிகளின் கடைசி இரண்டு கப்பல்களை அழிக்க முடியாமல் திணறுகின்றது இலங்கை கடற்படை. அப்பொழுது 2007 செப்டம்பரில் இந்தியா மேலும் இரண்டு போர்க்கப்பல்களை ஒப்பந்த அடிப்படையில் வழங்குகின்றது. அதில் ஒன்று சென்னையில் நிறுத்தப்பட்டிருந்த CGS Vigraha என்னும் கப்பல். கோத்தபயாவிடம் அவற்றை கையளிப்பது என்று முடிவெடுக்கப்பட்டு, சென்னையில் வைத்து வழங்கினால், சென்னையில் எதிர்ப்புகள் எழக்கூடும் என்று அந்தக் கப்பல், சென்னையிலிருந்து விசாகப்பட்டிணம் கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து வழங்கப்பட்டது. இந்தக் கப்பல்களை வைத்து புலிகளின் கடைசி கப்பல்களை, இலங்கையில் இருந்து 1860 கடல் மைல்கள் தொலைவில் அழிக்கின்றது. பிறகு 2009 நவம்பரில், தங்களுக்கு அளிக்கப்பட்ட கப்பல்களுக்கு உரிய வேலை முடிவுற்றது; அதனால் அதனை திரும்பத் தாருங்கள் என்று இந்தியா கோரியது. இந்த இரண்டு வேலைகளிலும் இந்தியாவின் பங்கு பல்வேறு ஆதாரங்கள் வழியாக பதிவாகியுள்ளது.
(இந்தியா ஒரு முக்கியப் பங்காளி; இன்னொரு முக்கியப் பங்காளி அமெரிக்கா. விடுதலைப் புலிகள் இயக்கத்தை அமெரிக்கா 1997 ல் தடை செய்கின்றது. பலரும் எழுதுவது போல் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு பிறகு அல்ல. சம்பந்தமே இல்லாமல் 1997 ல் ஏன் தடை செய்கிறது என்றால், ஈழத்தின் கடற்கரைகளில் இருந்து இல்மனைட் உள்ளிட்ட தாது மணலை அமெரிக்கக் கப்பல்கள் திருடிக்கொண்டிருந்தன. தம்முடைய 'மண்'ணை விட்டுக்கொடுக்க மறுக்கும் புலிகள், அமெரிக்கக் கப்பல்களை தாக்கினார்கள். அதனால், மணல் திருடன் அமெரிக்கா புலிகளை தடை செய்து, அவர்களை அழிப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்து அவர்களை அழித்தும் விட்டான். வேறொரு பதிவில் சர்வதேச அளவில் அமெரிக்க மேற்கொண்டவற்றை பற்றி விரிவாக எழுதுகின்றேன்)
இனப்படுகொலைக் குற்றம் குறித்த சட்டம் இனப்படுகொலை நிகழ்த்தியவர்களை மட்டுமல்லாது, இனப்படுகொலையை திட்டமிட்டவர்கள், அதற்கு துணை புரிந்தவர்கள், என்று அனைவருமே தண்டனைக்கு உரியவர்கள் என்று வரையறுக்கின்றது. இந்தியா இனப்படுகொலையில் நேரடியாகப் பங்கெடுத்தது மட்டுமின்றி, அதற்கான திட்டங்களை தீட்டுவதிலும் சர்வதேச அளவில் அதற்கான சூழலை ஏற்படுத்தியதிலும் முக்கியப் பங்காற்றியிருக்கின்றது. இந்தத் தீர்ப்பில் புலிகள் மீதான தடையை ஏற்படுத்தியதில் இந்தியாவின் பங்கு குறித்து கூறப்பட்டிருப்பதை அடிப்படையாகக் கொண்டு, எம்.கே.நாராயணன் தொடங்கி ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் இனப்படுகொலைக் குற்றவாளிகள் என நிரூபிக்க முடியும்.
இரண்டாவது முக்கிய பயன் என்பது, De Facto State என்னும் உரிமையை நாம் கோர முடியும் என்பதாகும். அமைதி உடன்படிக்கையில் கையொப்பமிட்ட ஒரு தரப்பை, அமைதி உடன்படிக்கை நடைமுறையில் இருக்கும் காலகட்டத்தில் தடை செய்ததன் மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை சர்வதேசம் முறையற்ற வழியில் மறுத்திருக்கின்றது. தற்பொழுது இந்தத் தடை சட்டரீதியில் தவறு என்று தீர்ப்பு வந்திருப்பதை முன்வைத்து, அப்பொழுது வழங்கப்பட்டிருந்த தன்னாட்சி அதிகாரம் என்னும் உரிமையை கோரி நாம் போராட்டங்களை முன்னெடுக்க முடியும்.
இந்தத் தீர்ப்பை முன்வைத்து மற்ற பகுதிகளிலும் தடைகளை தகர்ப்பதற்கான போராட்டங்களை முன்னெடுக்க தமிழர்களுக்கு இத்தீர்ப்பு துணை புரியும். தமிழர்களுக்கு மனதளவில் ஒரு பெரிய உத்வேகத்தை அளிக்கக்கூடியது இத்தீர்ப்பு.

Similar topics
» விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிக்க மத்திய அரசு கூறிய காரணங்கள் உண்மைக்குப் புறம்பானவை: வைகோ
» புலிகள் மீதான தடையை நீக்கு-கண்மணி.
» விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்: கிருஷ்ணசாமி
» விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீடித்து தமிழ்நாடு அரசு உத்தரவு
» இந்தியாவும் பிரித்தானியாவும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க தயாராகி வருகின்றன.!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum