TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா
by வாகரைமைந்தன் Today at 1:33 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:21 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 01, 2024 11:23 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Oct 31, 2024 4:24 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Oct 21, 2024 5:23 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


நம்பிக்கை... வளர்ச்சி... லாபம்... எளிதாகத் தொடங்கக் கூடிய 5 தொழில்கள்! நீரை.மகேந்திரன்

Go down

நம்பிக்கை... வளர்ச்சி... லாபம்... எளிதாகத் தொடங்கக் கூடிய 5 தொழில்கள்! நீரை.மகேந்திரன் Empty நம்பிக்கை... வளர்ச்சி... லாபம்... எளிதாகத் தொடங்கக் கூடிய 5 தொழில்கள்! நீரை.மகேந்திரன்

Post by Tamil Thu Oct 16, 2014 2:22 pm

சிறு, குறு தொழில்களை ஊக்குவிப்பது மட்டுமல்ல, புதிய தொழில்களைத் தொடங்கு வதற்கான வழிகாட்டுதல்களையும் நாணயம் விகடன் தொடர்ந்து அளித்து வருகிறது. என்றாலும், என்ன தொழில் தொடங்கினால், நல்ல வளர்ச்சியும் லாபமும் காண முடியும் என்கிற குழப்பம் பலருக்கும் இருப்பது இயற்கைதான்.
எல்லோரும் மிக எளிதாகவும்,  அதிக மூலதனம் தேவைப்படாத வகையிலும் செய்யக்கூடிய ஐந்து தொழில்களை இந்தக் கட்டுரையில் கொடுத்துள்ளோம். இந்த ஐந்து தொழில்களில் உங்களால் சிறப்பாக செய்ய முடியும் என்கிற ஒரு தொழிலை தேர்வு செய்யுங்கள். எந்தக் கஷ்டம் வந்தாலும் பரவா யில்லை; தொழிலில் ஜெயிப்பது தான் ஒரே நோக்கம் என்கிற வெறியோடு, அந்தத் தொழிலை செய்ய ஆரம்பித்தால், நீங்கள் அதில் வெற்றி காண்பது உறுதி!
[You must be registered and logged in to see this image.]
இனி உங்களுக்கான ஐந்து தொழில்கள் இதோ...


[You must be registered and logged in to see this image.]
இந்தத் தொழிலை செய்துவரும் கோவை கணபதியைச் சேர்ந்த ஜே.வி. இண்டஸ்ட்ரீஸின் நிறுவனர் 
ஜே.மகேஸ்வரனைச் சந்தித்தோம்.
 
‘‘ஒரு பெரிய நிறுவனத்துக்குத் தேவையான சின்னச் சின்ன தயாரிப்புகளைச் செய்து தருகிறேன். மெக்கானிக் தொடர்பாக படித்திருந்தாலும், பிராக்டிக்கல் அனுபவம்தான் தனியாகத் தொழிலை [You must be registered and logged in to see this image.]தொடங்கத் தூண்டியது.

ஆரம்பத்தில் ஒரு மில்லிங் மெஷின் மட்டும் வைத்துக்கொண்டு தொழிலைத் தொடங்கினேன். வாடிக்கையாளர்களின் தேவைகள்தான் என்னை அடுத்தடுத்த நிலைகளுக்கு வளர வைத்தது.
ஒரு டிசைன் செய்தால், அதன் எல்லா நிலைகளையும் ஒரே இடத்தில் செய்து  தரும்போது, வாடிக்கையாளர்களுக்கு வேலை சுலபமாக முடிந்துவிடும். எனவே, புதிய ஆர்டர்கள் நம்மைத் தேடிவரும். தவிர, ஒரே வாடிக்கையாளரை மட்டும் நம்பிக் கொண்டிருக்காமல் குறைந்தபட்சம் நான்கு வாடிக்கையாளர்கள் இருப்பதுபோல பார்த்துக் கொள்ள வேண்டும்.  உங்கள் அருகாமையில் இருக்கும் பெரிய தொழிலகங்களை நம்பி இந்தத் தொழிலை திட்டமிடலாம். நான் கோவையில் தொழில் செய்தாலும் ஈரோடு, சேலம் என வாடிக்கையாளர்களை வைத்திருக் கிறேன். 

இந்தத் தொழிலுக்கு வங்கிக் கடன் கிடைக்கும்; மத்திய அல்லது மாநில அரசு மானியமும் கிடைக்கும். மாவட்ட தொழில் மையம் வழங்கும் வட்டி மானியமும்  கிடைக்கும். அனைத்து செலவுகளும் போக மாதம் 40 ஆயிரம் வரை வருமானம் வருகிறது’’ என்றார், குதூகலமாக. 

படங்கள்: தி.விஜய்



[You must be registered and logged in to see this image.]
இந்தத் தொழிலை நடத்திவரும் ராஜபாளையத்தைச் சேர்ந்த எஸ்எஸ்ஜி பவர் நிறுவனத்தின் உரிமையாளர் செ.முத்துக் குமாருடன் பேசினோம். 

‘‘சோலார் மின்சக்தி குறித்து பரவலாக மக்கள் அறிந்துகொள்ளத் தொடங்கிவிட்டனர். மின் தட்டுப்பாடு[You must be registered and logged in to see this image.]என்பது தவிர்க்க முடியாதது என்கிற நெருக்கடியிலிருந்து தப்பிக்க சோலார் மூலம் மின் சக்தி எடுப்பது அதிகரித்து வருகிறது. வீடுகளுக்கு மற்றும் சின்னச் சின்ன கடைகள், ஷாப்பிங் சென்டர் களுக்குத் தேவையான மின்சாரத்தை இதன் மூலம் பெறலாம். 

தவிர, சோலார் பவர் மூலம் இயங்கும் எல்இடி விளக்குகள், சோலார் வாட்டர் ஹீட்டர் என இதரப் பொருட்களையும் தயாரிக்கிறோம். இந்தத் தொழிலில் ஈடுபடும் பலரும் விற்பனைக்குப் பிறகான சேவைகளை முறையாகத் தருவதில்லை என்பதால், தொடர்ந்து தொழிலில் நிலைத்து நிற்க முடிவதில்லை. நான் தொழிலைத் தொடங்கும்போதே சர்வீஸ் சென்டர்களையும் தொடங்கிவிட்டேன். சேவையில் எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன். 
எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் சார்ந்த கல்வி பின்புலம் இருந்தாலும், தொழிலில் முன் அனுபவம் மற்றும் பயிற்சியே இந்தத் தொழிலில் ஈடுபட வைத்தது. இதற்காக மத்திய அரசின் எம்எஸ்எம்இ மூலம் பயிற்சிகள் வழங்கப்படு கின்றன. இந்தத் தொழிலுக்கு வங்கிக் கடன் கிடைக்கும். மத்திய அரசின் மாற்று எரிசக்தி துறை மானியமும் கிடைக்கும். மார்க்கெட்டிங் மற்றும் சர்வீஸ் இரண்டிலும் கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம்’’ என்றார் உற்சாகமாக.
படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்.


[You must be registered and logged in to see this image.]

இந்தத் தொழிலை செய்துவரும் சிதம்பரத்தைச் சேர்ந்த ஏஎம்என் மைக்ரோ கவரிங் நிறுவனத்தின் உரிமையாளர் பி.ஜாபர் அலியிடம் கேட்டோம். 

[You must be registered and logged in to see this image.]‘‘தங்கத்தின் விலையேற்றம் காரணமாக   தங்க நகைகளை மக்கள் வாங்குவது குறைந்து வருகிறது. தங்க நகைகளைப் போலவே, பொலிவைத் தரும் தங்க முலாம் பூசப்பட்ட நகைகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
முன்பு பாரம்பரிய முறையில் கைகளால் தயாரான கவரிங் நகைகள், இப்போது நவீன  இயந்திரங்களைக் கொண்டு செய்யப்படு கின்றன. இங்கு உற்பத்தியாகும் நகைகளை சென்னை மதுரை என இரண்டு பெருநகரங் களையும் மையமாக வைத்து பல சில்லறை விற்பனையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கிறோம். காப்பரில் செய்யப்படும் நகைகளை வாங்கி, நாங்கள் தங்க முலாம் பூசுகிறோம். தவிர, ஆர்டர்களுக்கு ஏற்ப செய்தும் தருகிறோம். கழுத்துச் சங்கிலி, நெக்லஸ், ஒட்டியாணம், ஆரம், காசுமாலை என அனைத்துவிதமான நகைகளையும் தயார் செய்கிறோம்.
வட மாநிலங்களிலிருந்து வரும் கல் வைத்த நகைகள்தான் கவரிங் நகைகளுக்குப் போட்டி. இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, புதிய டிசைன்களை உருவாக்கி னால், தங்க நகைகளுக்கு ஈடாக எப்போதும் எங்கும் இந்தத் தொழிலை மேற்கொள்ள முடியும். வங்கிக் கடனும் தொழில் முனைவோர்களுக்கான அனைத்து மானியங் களும் கிடைக்கும். இடம், இயந்திரம் தவிர, முலாம் பூசுவதற்கான தங்கம் வாங்க வேண்டும் என்பதும் முக்கியமான விஷயம்’’ என்றார் அவர்.   


[You must be registered and logged in to see this image.]
இந்தத் தொழிலை நடத்திவரும் சென்னையைச் சேர்ந்த ஆக்டிவ் டோட்டல் செக்யூரிட்டி சிஸ்டம் நிறுவனத்தின் ரா.நந்தகுமாரைச் சந்தித்தோம்.
‘‘நான் முதலில் சேஃப்டி அலாரம் உற்பத்தி செய்து வீடுகளுக்கும், அலுவலகங்களுக்கும் தந்து வந்தேன். இந்தத் துறையின் நவீன வளர்ச்சி அடுத்தகட்ட தேவைகளை நோக்கி நகர வைத்தது.
[You must be registered and logged in to see this image.]சேஃப்டி அலாரம் என்பது அனைத்து இடங்களுக்கும் வந்துவிட்டது. வீடுகள், அலுவலகங்களில் அவசிய கருவியாக மாறிவிட்டது. இன்றைய தேதியில் சிசிடிவி கேமரா உள்ள வீடுகளிலும் அலுவலகங் களிலும் இந்த சேஃப்டி அலாரம் கட்டாயமாக இருக்கிறது. 
இந்தத் தொழிலுக்கு உள்ள வரவேற்பைப் பார்த்து இப்போது கணினி சேவை வழங்கும் நிறுவனங்கள்கூட 'ஹைடெக்' தொழில் நுட்பத்துடன் இந்த சேஃப்டி அலாரங்களை தயாரித்து வர்த்தகம் செய்யத் தொடங்கிவிட்டன. இதை நாம் ஒரு போட்டியாக எடுத்துக்கொள்ளாமல்,  ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு இந்தத் தொழிலை செய்யலாம். இந்தத் தொழிலுக்கு வங்கிக் கடனும் மற்றும் சிறு, குறு தொழில் களுக்கான மாநில அரசின் மானியமும் கிடைக்கும்.
வாடிக்கையாளர் சேவையில் நாம் சிரத்தை யோடு செயல்பட்டால், புதிய வாடிக்கையாளர் கள் நமக்கு நிறையவே கிடைப்பார்கள். இந்த வேலைக்கு மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைக்குப் பிறகான சேவை அவசியம்’’ என்றார் நம்பிக்கையோடு.
படங்கள்: ப.சரவணகுமார்.  படங்கள்: எஸ்.தேவராஜன்.



[You must be registered and logged in to see this image.]
சென்னை கொளத்தூரில் இந்தத் தொழிலை செய்துவரும் பிளாஸ்மா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிறுவனர் பூ.மணிவண்ணனிடம் கேட்டோம்.
‘‘நினைவுப் பரிசுகள் இல்லாத விழாக்கள் இல்லை. பரிசுக் கோப்பைகள் தராத போட்டி களும் இல்லை.  [You must be registered and logged in to see this image.]பரிசுக் கோப்பைகள் தொடங்கி கீ-செயின் என பலவகையான பொருட்களைத் தயாரிக்க முடியும் என்பதால், ஆர்டருக்கு ஏற்ப நாம் தயாரிக்கும் பொருட் களையும் மாற்றிக்கொண்டே இருக்கலாம். இவற்றை ஆர்டருக்கு ஏற்ப செய்து தரலாம். அல்லது நாமே உற்பத்தி செய்து, விற்பனைக்கும் அனுப்பலாம். 

கீ-செயினை பொறுத்தமட்டில், நமது கற்பனைத் திறனுக்கு வானமே எல்லை. பல லட்சம் வடிவங்களில் வடிவமைத்து விற்கலாம். இவற்றை மொத்த விற்பனையாளர் களுக்கு விற்பனை செய்துவிடலாம்.

தவிர, பிளாஸ்டிக் மோல்டிங் துறையில் கால்பதித்து பிளாஸ்டிக் கன்டெய்னர் மற்றும் பிளாஸ்டிக் வீட்டு உபயோகப்பொருட்கள் செய்கிறேன். நான் இந்தத் துறையில் 15 வருடங்களுக்கு மேல் இருக்கிறேன். எனது நிறுவனத்தின் தயாரிப்பு தமிழகம் முழுக்க மொத்த விற்பனையாளர்களிடம் கிடைக்கும் வகையில் மார்க்கெட்டிங் உத்திகளைக் கையாள்கிறேன்.
பொதுத்துறை வங்கிகளில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின்   மானியமும் கிடைக்கும். புதிய டிசைன், மார்க்கெட்டிங் இவை இரண்டும் சரியாக இருந்தால் லாபம் நிச்சயம்.
படங்கள்: ஆ.முத்துக்குமார்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum