Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:42 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தமிழ் கற்போம் - தவறுகளை திருத்துவோம் - 32 + காணொளி-
Page 1 of 1

தமிழ் கற்போம் - தவறுகளை திருத்துவோம் - 32
நான் இரண்டு மூன்று வருடங்களாக இந்தத் தளத்தில் அன்புடனும்,கோபத்துடனும்,ஆதங்கத்துடனும் முடிந்தவரை தமிழில் பதிவுகளைத் தாருங்கள் என்று சொல்லி விட்டேன்.ஆங்கிலத்தையாவது தவிர்க்கலாமே,ஆனால் அவர்கள்-பதிவாளர்கள்-தயாராக இல்லை.
ஆனால் நமது அரசியவாதிகள் போல் தமிழ் இன உணர்வை வார்த்தைகளுடன் நிறுத்தி விடுகிறார்கள். பைபிளில் சொல்லப்பட்டது போல் அவர்கள் வார்த்தைகள் உதட்டில் இருந்து வருகின்றனவே தவிர தமிழ் உணர்வுடன் உள்ளத்தில் இருந்து வரவில்லை.
படிக்கும் நீங்களாவது முடிந்தவரை தமிழை பேசுவதிலும் எழுதுவதிலும்
பயன்படுத்துவீர்கள் என நம்புகிறேன்.
ஒருபுறம் இந்தித் திணிப்பு,சமஸ்கிருதத் திணிப்பு,கீதைத் திணிப்பு,மதத் திணிப்பு,ஆசிரியர்தினம் போன்றவற்றை மாற்றும் முயற்சி,செம்மொழி அலுவலகத்தில் தமிழரோ,தமிழ் தெரிந்தவரோ இல்லாத நிலை.
அன்னைத் தமிழை உங்கள் தின வாழ்வில் பயன்படுத்துங்கள்.
பிழையில்லாமல் நல்ல தமிழில் எழுத விரும்புவோர், வலி மிகும் - வலி மிகா இடங்களை அறிந்துகொள்வது மிகவும் அவசியம். வல்லெழுத்து மிகுந்து வருவதையே இலக்கணத்தில் வலிமிகுதல் என்பர். இரண்டு சொற்கள் இணையும்போது, இடையில் க், ச், த், ப் ஆகிய ஒற்றெழுத்து வந்து இரு சொற்களையும் ஒன்று சேர்த்தால் அதற்கு வலி மிகுதல் என்று பெயர்.
வலி மிகுவதால், சொற்களில் பொருள் வேறுபாடு தெரிவதற்கும் - பொருளைத் தெளிவாகவும் சரியாகவும் உணர்வதற்கும், உச்சரிக்கும்போது, தமிழ்மொழிக்கே உரிய இன்னோசையை வெளிப்படுத்துவதற்கும் உதவுகிறது.
வலி மிகுதல், தமிழ்மொழியிலும் மலையாள மொழியிலும் காணப்படுவதன்றி பிற மொழிகளில் இல்லை என்று மொழி நூலறிஞர்கள் கூறியுள்ளனர்.
தமிழ் - நூல்கள், நாளிதழ்கள், வார, மாத, இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள், விளம்பரப் பலகைகள், ரயில் நிலைய அறிவிப்புப் பலகைகள் என எல்லாவற்றிலும் வலி மிக வேண்டிய இடத்தில் வலி மிகாமலும், வலி மிகாத இடத்தில் வலி மிகுத்தும் எழுதி இருப்பது மலிந்து காணப்படுகின்றன.
இலக்கணம் படிக்காதவர்களும் மிகமிக எளிதாக வல்லெழுத்து மிகுதலை அறிந்துகொள்ள வேண்டுமானால் கீழே தரப்பட்டுள்ள சில விதிகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அ, இ, எ,
அந்த, இந்த, எந்த,
ஆங்கு, ஈங்கு, யாங்கு,
அப்படி, இப்படி, எப்படி
ஆண்டு (இடம்), ஈண்டு, யாண்டு,
அவ்வகை, இவ்வகை, எவ்வகை,
அத்துணை, இத்துணை, எத்துணை,
இனி, தனி, அன்றி, இன்றி
மற்ற, மற்றை, நடு பொது,
அணு, முழு, புது, திரு
அரை, பாதி, எட்டு, பத்து,
முன்னர், பின்னர்.
ஆகிய இவை நிலைமொழியாக அதாவது, முதலில் நிற்கும் சொல்லாக இருந்து - க, ச, த, ப என்னும் எழுத்துகளுள் எது வருமொழி முதலாக வந்தாலும் வல்லெழுத்தானது கட்டாயம் மிகும். க என்றால், க முதல் கௌ வரையிலுள்ள எழுத்துகளைக் கொள்ளவேண்டும்.
இவ்வாறே, ச, த, ப என்னும் எழுத்துகளுக்கும் கொள்ள வேண்டும். அதாவது, அடுத்து வரும் சொல்லின் முதலில் க, ச, த, ப வருக்கம் வந்தால்தான் வல்லெழுத்து மிகும்.
உயிரெழுத்து வந்தால் மிகாது, க, ச, த, ப வருக்கம் தவிர வேறு எழுத்துகள் வந்தாலும் மிகாது. அங்கு, இங்கு, எங்கு என்னும் சொற்களுக்குப் பின் கட்டாயம் வல்லெழுத்து மிகும்.
சில எடுத்துக்காட்டுகள்:
அ - அப்பக்கம், இ - இச்செடி, எ - எப்பக்கம், அந்தச் செடி, இந்தக் குழந்தை, எந்தப் பாடம்?, அங்குச் சென்றான், எங்குக் கேட்டாய்?, எங்குச் சென்றாய்?, ஆங்குச் சென்றான், அப்படிப் பேசு, இப்படிச் சொல், எப்படித் தந்தாய்?, அவ்வகைச் செடி, இவ்வகைப் பூக்கள், எவ்வகைக் கொடி?, அத்துணைப் பெரிய, இத்துணைச் சிறிய, எத்துணைப் பாடல்கள், அங்குப் போனார், இங்குச் சென்றார், இனிப் பேசமாட்டேன், தனிக் குடித்தனம், மற்றப் பிள்ளைகள், நடுக்கடல், பொதுக் கூட்டம், அணுக்குண்டு, முழுப்பக்கம், புதுப்பொருள், புதுத்துணி, அரைப்பக்கம், பாதித்துணி, எட்டுக் குழந்தைகள், பத்துச் செடிகள், முன்னர்க் கண்டேன், பின்னர்ப் பேசுவேன்.
ஓரெழுத்து ஒருமொழிக்குப் பின் வலி மிகும்.
பூ+பறித்தான் = பூப்பறித்தான்
தீ+பிடித்தது = தீப்பிடித்தது
கை+குழந்தை = கைக்குழந்தை
பூ+பந்தல் = பூப்பந்தல்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வலி மிகும்.
அறியா+பிள்ளை = அறியாப்பிள்ளை
காணா+காட்சி = காணாக்காட்சி
சொல்லா+சொல் = சொல்லாச்சொல்
நிலையா+பொருள் = நிலையாப்பொருள்
தீரா+துன்பம் = தீராத்துன்பம்
சொற்கள்- க்கு, ச்சு, த்து, ட்டு, ப்பு, ற்று என முடிந்திருந்தால், அச்சொற்களை வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்கள் என்பர். மக்கு, தச்சு, செத்து, விட்டு, உப்பு, கற்று ஆகிய இவை வன்தொடர் குற்றியலுகரச் சொற்கள்.
இத்தகைய சொற்கள் நிலைமொழியாக இருந்து வருமொழி முதலில் க, ச, த, ப என்னும் எழுத்துகள் வந்தால், கட்டாயம் வல்லெழுத்து மிகும்.
மக்குப்பையன், தச்சுத்தொழில், விட்டுச்சென்றார், செத்துப் பிழைத்தான், உப்புக்கடை, கற்றுக் கொடுத்தார், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, எதிர்த்துப் பேசினார், விற்றுச் சென்றான்.
அகர ஈற்று வினையெச்சத்தின் பின்னும், இகர ஈற்று வினையெச்சத்தின் பின்னும், ஆய், போய் என்னும் வினையெச்சங்களின் பின்னும் வல்லெழுத்து மிகும்.
வரக்கூறினார், தேடப்போனார்.
இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வல்லெழுத்து மிகும்.
கூறிச்சென்றார், வாடிப்போயிற்று.
போய் என்னும் வினையெச்சத்தின் பின் வல்லெழுத்து மிகும்.
போய்ச் சொன்னார், போய்த் தேடினார்.
ஆய் என்னும் வினையெச்சத்தின் பின் வல்லெழுத்து மிகும்.
சொன்னதாய்ச் சொல், வந்ததாய்க் கூறு.
ஈரொற்று வரும் வழி: பதினெட்டு மெய்யெழுத்துகளில் ய, ர, ழ - என்னும் மூன்று மெய்யெழுத்துகளின் பின் இன்னொரு மெய் (வலி) மிகும்.
காய் காய்க்கும், ஊர்க்குப் போ, நல்வாழ்க்கை.

sakthy- நிர்வாக குழுவினர்
- Posts : 1938
Join date : 26/09/2010
Re: தமிழ் கற்போம் - தவறுகளை திருத்துவோம் - 32 + காணொளி-
வல்லெழுத்து மிகாமல் (வலி) வருவது வலிமிகாமை எனப்படும். சிறிய, பெரிய, நடைபெற்ற, அன்றைய என்பவை பெயரெச்சங்கள். பெயரெச்சங்களின் பின் வல்லெழுத்து மிகாது. (எ.கா.)சிறிய பெட்டி,பெரியபையன்,நடைபெற்ற பொதுக்கூட்டம்,அன்றைய பேச்சு.
துணி கிழிந்தது-என்றதொடர் தொகாநிலைத் தொடர். இத்தொடரில் எழுவாய் முதலில் இருப்பதால் இது எழுவாய்த் தொடரானது. எழுவாய்த் தொடரில் பெரும்பாலும் வலி மிகாது.
அது, இது, எது; அவை,இவை,எவை;அன்று,இன்று,என்று ஆகியவற்றின் பின் வலிமிகாது. (எ.கா) அது செய்,இது பார், எது தவறு; அவை பறந்தன, இவை காண், எவை சாப்பிட்டன; அன்று காண்போம், இன்று போவோம், என்று சாப்பிடுவோம்.
அத்தனை,இத்தனை,எத்தனை என்று வரும் இடங்களில் வலிமிகாது. (எ.கா) அத்தனை சட்டைகள், இத்தனை செடிகள், எத்தனை கோடி,எத்தனை காலம்.
அவ்வாறு,இவ்வாறு,எவ்வாறு;அவ்வளவு,இவ்வளவு,எவ்வளவு என்று வரும் இடங்களில் வலிமிகாது. (எ.கா) அவ்வாறு எழுது,இவ்வாறு பாடு,எவ்வாறு செய்வாய், அவ்வளவு பேர்,இவ்வளவு காலம்,எவ்வளவு தொலைவு.
ஒரு,இரு,அறு,எழு என்று வரும் இடங்களில் வலிமிகாது. (எ.கா)ஒரு தடவை, ஒரு தரம், இரு காகங்கள், இரு படங்கள், அறுசுவை உணவு,எழுகடல்.
இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகாது. இரண்டு சொற்கள் நின்று இரண்டாம் வேற்றுமை "ஐ' உருபு தொக வருவது இரண்டாம் வேற்றுமைத் தொகை. (எ.கா)விடுதலை பெற்றது,குறள் கற்றான், பொன் சேர்த்தான், தமிழ் படித்தார், நீர் குடித்தது,பங்கு பிரித்தான்,பறவை பிடித்தான்,தேர்செய்தான், (பொருள் மயங்காதிருக்கும் பொருட்டுச் செய்யுளில் இரண்டாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையாயின் வலி மிகுவதுண்டு).
நான்காம் வேற்றுமைத் தொகையில் (கு) உயர்திணைப் பெயர்களின் பின் வலி மிகாது.
(எ.கா)பொன்னி கணவன் (பொன்னிக்குக் கணவன்), ஊர் போயினர் (ஊருக்குப் போயினர்), பள்ளி சென்றனர் (பள்ளிக்குச் சென்றனர்).
ஆறாம் வேற்றுமைத் தொகையில் (அது, உடைய) நிலைமொழி உயர்திணையாய் இருந்தால் வலி மிகாது. (எ.கா.)கண்ணகி கை,தம்பி துணி, காளி கோயில், ஐயனார் கோயில்.
ஏழாம் வேற்றுமைத் தொகையில் (இல், உள், இடம், பின், கண், பால், கீழ், மேல் முதலியன) நிலைமொழி உயர்திணையாய் இருந்தால் வலி மிகாது. (எ.கா) வாய் புகுந்தது.
வினைத்தொகையில் வலி மிகாது. (எ.கா) சுடுசோறு, பாய்குதிரை, ஒலிகடல், குடிதண்ணீர், சுடுகாடு இவை வினைத்தொகைகள். மூன்று காலம் (இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்) காட்டும் விகுதி மறைந்து வருவது வினைத்தொகை.
எழுவாய்த் தொடரில் வலி மிகாது. (எ.கா) பாம்பு கடித்தது, யானை பெரிது.
அடுக்குத்தொடரில் வலி மிகாது. (எ.கா) பூச்சிபூச்சி, பார்பார், படபட, கிடுகிடு, சலசல, கலகல.
உம்மைத் தொகையில் வலி மிகாது. (எ.கா) முத்துபவளம், செடிகொடி.
பெயரெச்சம், வினையெச்சத்தின் பின் வலி மிகாது. (எ.கா)கெட்டதயிர், எழுதின பாட்டு, வந்து பார்த்தார், நின்றுபோனார்.
ஒரு, இரு, அறு, எழு, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, ஒன்பது, நீ, பல, சில ஆகிய இச்சொற்களுக்குப் பின் வருமொழி முதலில் க, ச, த, ப வருக்கம் இருந்தால் வல்லெழுத்து மிகாது.
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிரப் பிற பெயரெச்சங்களின் பின்வரும் வல்லெழுத்து மிகாது. ஓடிய குதிரை என்னும் தொடரிலுள்ள ஓடிய என்பது பெயரெச்சம். ஓடாத குதிரை என்னும் தொடரில் ஓடாத என்பது ஈறுகெட்ட பெயரெச்சம். ஓடாக் குதிரை என்னும் தொடரிலுள்ள ஓடா என்பது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். இந்த ஈறுகெட்ட எதிர்றைப் பெயரெச்சங்களின் பின் வரும் வல்லெழுத்து மிகும். ஈறுகெடாத பெயரெச்சத்தின் பின் வரும் வல்லெழுத்து மிகவே மிகாது.
கூப்பிடும் விளிப்பெயர், (தம்பீ, போ) வியங்கோள் வினைமுற்று (வாழி பெரியோய், வீழ்க கொடுமை)ஆகிய இவற்றின் பின் வல்லெழுத்து (வலி) மிகாது.
ன்று, ந்து, ண்டு என்று முடியும் வினையெச்சங்களுக்குப் பின் வல்லெழுத்து மிகாது. இலக்கண விதிப்படி மென்தொடர்க் குற்றுகரச் சொற்களுக்குப் பின் வல்லெழுத்து மிகாது. (எ.கா.) என்று கூறினார், வந்து கேட்டார், கண்டு பேசினார்,நன்று பேசினாய்.
இரு வடமொழிச் சொற்கள் சேர்ந்து வரும் தொடரில் வலி மிகாது. (எ.கா.)ஆதிபகவன்,தேசபக்தி.
ஆ,ஓ,யா என்னும் கேள்வி வினாக்களுக்குப் பின் வலி மிகாது.
(எ.கா.)அவனா சொன்னான்?,தம்பியோ கேட்கிறான்? யா சிறியன? (யா-யாவை).
வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களின் பின் "கள்' "தல்' என்னும் விகுதிகள் சேரும்போது வலி மிகத் தேவையில்லை.வலி மிகுந்தாலும் தவறில்லை. (எ.கா.) எழுத்துகள்,வாக்குகள்,வாழ்த்துகள்,தோப்புகள்,தூற்றுதல்,வாழ்த்துதல்,கூம்புதல்.
இப்படி எழுதுவதற்கு விதி உண்டா? என்று கேட்பவருக்கு,
"இடைச்சொல், உரிச்சொல், வடசொல் இவற்றுக்குச் சொல்லிய விதிகளுள் கூறப்படாதனவும்,போலியும்,மரூஉவும் பொருந்திய வகையில் புணர்தலைக் கொள்ளுதல் அறிவுடையோர்யாவர்க்கும் முறையாகும்' என்று நன்னூல் சூத்திரம் விடையளிக்கிறது. ஆனால்,பழைய நூல்களிலும், புதியநூல்களிலும் வாக்குக்கள், எழுத்துக்கள்,வாழ்த்துக்கள்,வகுப்புக்கள்,கருத்துக்கள் என்றே அச்சாகியுள்ளதைக் காணலாம்.இவை செவிக்கு இனிமை தராதிருப்பதால், (இன்னோசை கருதி) வலி மிகாமல் எழுதுவதே சிறந்ததாகும்.

Similar topics
» தமிழ் கற்போம் - தவறுகளை திருத்துவோம் - 33 -ரூசிய அதிபர் மாளிகையில் தமிழ் -காணொளி.
» தமிழ் கற்போம் - தவறுகளை திருத்துவோம் - 10
» தமிழ் கற்போம் - தவறுகளை திருத்துவோம் - 25
» தமிழ் கற்போம் - தவறுகளை திருத்துவோம் - 11
» தமிழ் கற்போம் - தவறுகளை திருத்துவோம் - 12

Permissions in this forum:
You cannot reply to topics in this forum