TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மூளைச்சாவு: இளைஞரின் 7 உடலுறுப்புகள் தானம்

2 posters

Go down

மூளைச்சாவு: இளைஞரின் 7 உடலுறுப்புகள் தானம் Empty மூளைச்சாவு: இளைஞரின் 7 உடலுறுப்புகள் தானம்

Post by Tamil Tue Jun 17, 2014 2:00 pm

மூளைச்சாவு: இளைஞரின் 7 உடலுறுப்புகள் தானம்
விபத்தில் படுகாயமடைந்து மூளைசாவு ஏற்பட்ட இளைஞரின் ஏழு உடல் உறுப்புகள் நான்கு மருத்துவமனைகளுக்கு திங்கள்கிழமை (ஜூன் 16) தானமாக அளிக்கப்பட்டன.
மூளைச்சாவு: இளைஞரின் 7 உடலுறுப்புகள் தானம் 10446521_10202716596290208_6199296700457394422_n
காஞ்சிபுரம் மதுராந்தகம் பழையனூரைச் சேர்ந்தவர் லோகநாதன் (27). இவர் கடந்த 11-ஆம் தேதி சாலை விபத்தில் சிக்கி படுகாயத்துடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 12-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் திங்கள்கிழமை காலையில் அவர் மூளைச்சாவு அடைந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

லோகநாதனின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க அவரின் தாய் முன்வந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு உடலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைச் திட்டத்தின் மூலம் யாருக்கெல்லாம் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக உடல் உறுப்பு தேவைப்படுகிறது என்றும், லோகநாதனின் உடல் உறுப்புகள் யாருக்கு பொருத்த முடியும் என்பது குறித்து ஆராயப்பட்டது.

தொடர்ந்து மதியம் 2 மணியளவில் உடல் உறுப்புகளை உடலில் இருந்து பிரித்தெடுக்கும் அறுவைச் சிகிச்சை தொடங்கியது.

இது குறித்து தமிழ்நாடு அரசின் உடலுறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சை திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அமலோற்பவநாதன் கூறியது:

நோயாளியின் இதயம், சிறுநீரகங்கள், கல்லீரல், கண்கள் மற்றும் தோல் ஆகிய உறுப்புகள் பிரித்தெடுக்கப்பட்டன. இதயம் மற்றும் சிறுநீரகங்கள் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கும், கண்கள் சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கும், தோல் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் தானமாகக் கொடுக்கப்பட்டன என்றார் அவர்.

இதய மாற்று அறுவைச் சிகிச்சை: மும்பையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரின் மகள் ஹவோவி (21). கல்லூரியில் படித்து வந்த இவருக்கு, கடந்த நான்கு ஆண்டுகளாக இதயத்தில் பாதிப்பு இருந்துள்ளது. அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றும் அங்கு இதயம் தானமாகப் பெற முடியவில்லை. இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறப்படுகிறது.

இவருக்கு லோகநாதனின் இதயம் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.

13 நிமிடத்தில் சென்ற இதயம்
தானம் மூலம் பெறப்பட்ட இதயம், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு திங்கள்கிழமை (ஜூன் 16) 13 நிமிடம் 12 விநாடிகளில் கொண்டு செல்லப்பட்டது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து மாலை 6.45 மணிக்கு காவல்துறை வாகனப் பாதுகாப்புடன் தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் வாகனம் புறப்பட்டது. மெரீனா கடற்கரை சாலை, சாந்தோம் வழியாக ஆம்புலன்ஸ் வாகனம் அடையாறு தனியார் மருத்துவமனையை சென்றடைந்தது. வழியில், 11 போக்குவரத்து சிக்னல்களையும் 13 நிமிடம் 12 வினாடிகளில் ஆம்புலன்ஸ் வாகனம் கடந்து மருத்துவமனையை அடைந்தது.

போக்குவரத்துத் துறை துணை ஆணையர் சிவானந்தத்தின் தலைமையில் 2 உதவி ஆணையர்கள், 5 காவல்துறை ஆய்வாளர்கள், 12 உதவி ஆய்வாளர்கள் உள்பட மொத்தம் 60 போலீஸார் ஆம்புலன்ஸ் வாகனம் விரைவாகச் சென்றடைய ஏதுவாக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். வழியில் எந்தத் தடங்கலும் ஏற்படாத வண்ணம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த க்ரீன் காரிடார் முறை செயல்படுத்தப்பட்டது.

என் மகனை உலகம் வாழ்த்த வேண்டும்!
உடலுறுப்புகளை தானமாகக் கொடுத்த என் மகனை உலகம் வாழ்த்த வேண்டும் என லோகநாதனின் தாயார் ராஜலெட்சுமி கூறினார். வந்தவாசி அருகில் உள்ள ஓசூர் என்ற இடத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராகப் பணியாற்றி வரும் ராஜலெட்சுமிக்கு லோகநாதன் ஒரே மகன். பொறியியல் டிப்ளமோ படித்து முடித்திருந்த இவர், இப்போதுதான் சிறிது நாள்களாக சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார் எனக் கூறப்படுகிறது. உறவினர் வீட்டு துக்க நிகழ்வில் பங்கேற்க சொந்த ஊருக்குச் சென்றபோது சாலை விபத்தில் சிக்கியதாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர். இது குறித்து தாயார் ராஜலெட்சுமி கூறியது:

எந்தவித ஆதரவும் இல்லாமல் தனியாளாக இருந்து என் மகனை வளர்த்தேன். அவன் என்னை வைத்துக் காப்பாற்றுவேன் என்று நினைத்தேன். நான் வளர்த்த வளர்ப்பு வீணாகக் கூடாது என்ற காரணத்தினால், என் மகனின் உடலுறுப்புகளை தானம் கொடுக்கச் சம்மதித்தேன். தன் உடலுறுப்புகளை தானமளித்து பலரின் வாழ்வில் ஒளியேற்றிய அவனை உலகம் வாழ்த்த வேண்டும். அதுதான் எனக்கு வேண்டும் என்றார் அவர்.

நன்றி: தினமணி
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

மூளைச்சாவு: இளைஞரின் 7 உடலுறுப்புகள் தானம் Empty Re: மூளைச்சாவு: இளைஞரின் 7 உடலுறுப்புகள் தானம்

Post by mmani Wed Jun 18, 2014 7:25 am

மனதை கலங்க வைக்கிறது
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மூளைச்சாவு ஏற்பட்ட மகனின் உடல் உறுப்புகள் தானம் வழங்கிய நளச்சக்கரவர்த்தி
» கோவையில் மூளைச்சாவு ஏற்பட்ட பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் ...
» மூளைச்சாவு ஏற்பட்ட மாணவி உடல் உறுப்புகள் தானம்: ஏழு பேருக்கு பொருத்தப்பட்டன
» ஆம்பூரில் பைக் விபத்தில் மூளைச்சாவு அடைந்த வியாபாரி உடல் உறுப்புகள் தானம்
» சரமாரி வெட்டுக் காயங்களுடன் சுடுகாட்டில் இளைஞரின் சடலம்: காஞ்சிபுரம் அருகே பயங்கரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum