TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:16 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 7:14 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 17, 2024 2:27 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 15, 2024 4:50 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மூழ்கடிக்கப்பட (Unsinkable) முடியாத டைட்டானிக் (Titanic ) எப்படி மூழ்கியது? முழுக் கதை. ---தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 11

3 posters

Go down

மூழ்கடிக்கப்பட (Unsinkable) முடியாத டைட்டானிக் (Titanic ) எப்படி மூழ்கியது? முழுக் கதை.  ---தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 11   Empty மூழ்கடிக்கப்பட (Unsinkable) முடியாத டைட்டானிக் (Titanic ) எப்படி மூழ்கியது? முழுக் கதை. ---தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 11

Post by sakthy Sun May 25, 2014 6:20 pm

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 11

மூழ்கடிக்கப்பட (Unsinkable) முடியாத டைட்டானிக் (Titanic ) எப்படி மூழ்கியது? முழுக் கதை.



உள்ளே புகுமுன் டைட்டானிக் கப்பல் பற்றி சிறிது தெரிந்து கொள்ளலாம்.

White Star என்ற நிறுவனம் பொறுப்பேற்று இருந்தாலும்,Harland and Wolff  என்ற கப்பல் கட்டும் நிறுவனத்தால்,1909 மார்ச் மாதம் 31 இல் அடித்தளமிட்டு டைட்டானிக் கப்பல் கட்டும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு சிறிது முன்னால் சகோதரக் கப்பல் RMS Olympic  தொடங்கப்பட்டு 1910 அக்தோபரில் முடிக்கப்பட்டது. R.M.S. Titanic என்பது Royal Mail Ship -தபால்களை பிரிட்டன் தபால் சேவையுடன் இணைந்து கையாளும் கப்பலாகும். மூன்றாவது கப்பல் Britanic 1914 இல் முடிவடைந்த நிலையில், முதலாம் உலகப் போரில் மருத்துவ சேவைக்காகப் பய்ன்படுத்தப்பட்டது.

டைட்டானிக் 1911 மே மாதம் 31 இல் பணிகள் முடிவடைந்த நிலையில்,1912 ஏபரல் 10 இல் கன்னிப் பயணத்திற்கு (Titanic Maiden Voyage ) தயாரானது.1912 ஏப்ரல் 2 இல் விடப்பட்ட வெள்ளோட்டத்தில் அதன் வேகம் 21 நொட்டை (21 knots )எட்டியது.

இந்தக் கப்பலின் நீளம் 882.9 அடியும், அகலம் 92.5 அடியும்,175 அடி உயரமும்,நிறை 46,328 தொன்களையும் கொண்டதுடன், 21 மில்லியன் கலன் தண்ணீர் கொள்ளவையும் கொண்டதாகும். இந்தக் கப்பல், நீர் உட்புக முடியாதபடி தயாரிக்கப்பட்டிருந்தது.அதனால் அதைத் தயாரித்த தொழில்நுட்ப வல்லுனர்கள் டைட்டானிக் நீரில் மூழ்காது என உறுதி அளித்திருந்தனர். .1912 இல் கப்பலின் பெறுமதி $7.5 மில்லியனும்,தற்போது 400 மில்லியன் டாலருமாகும்.கப்பல் செய்யும் போது தொழிலாளர்கள் 17 பேர் உயிர் துறந்தனர்.

கப்பலின் தளத்தில் தினமும் The Titanic's Newspaper (Atlantic Daily Bulletin ) அச்சிட்டுக் கொடுப்பது வழக்கம்.அதில் செய்திகள்,விளம்பரங்கள்,குதிரை ஓட்டப்பந்தைய முடிவுகள்,பங்குச்சந்தை விபரம்,அன்றைய உணவு விபரம் போன்றவைகள் அடங்கி இருக்கும். கப்பலில் கடல் தபால் நிலையம்(Sea Post Office) ஒன்றும் செயல்பட்டது. இதில் இரண்டு பிரித்தானியர்களும் மூன்று அமெரிக்கர்களும் பணியாற்றினார்கள்.

இங்கே அனுப்பப்படுவதற்காக 3423 தபால் பைகள் இருந்தனவாம். அவை எதுவும் மீட்கப்படவில்லை.

மனிதனால் உருவாக்கப்பட்ட கப்பல்கள் புயல்,கடற்பெருக்கு,விபத்து,போர் என பல காரணங்களால் நீரில் மூழ்குவது பொதுவாக நடந்து வரும் சம்பவங்களாகும்.1911 ஏப்ரலிற்கும் 1912 ஏப்ரலிற்கும் இடைப்பட்ட காலத்தில்,நியுபவுண்லாந்து(Newfoundland ) கடற் பகுதியில் 20 கப்பல்கள் தண்ணீரில் மூழ்கின. இதில் உலகை உலுக்கிய கப்பல் விபத்து டைட்டானிக் கப்பல் விபத்தாகும்.

நீரில் மூழ்காதபடி சிறப்பாக அமைக்கப்பட்ட டைட்டானிக் என்ற சொகுசுக் கப்பல், 1912 ஏபரல் 11 ஆம் திகதி ஐயர்லாந்தில் உள்ள குவீன்டவுண்ணில் இருந்து புறப்பட்டு, நியூயோர்க் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதில் கப்பல் ஊழியர்கள் 885 பேரும் 1343  பயணிகளுமாக மொத்தம் 2228 பேர் பயணித்தனர். விளம்பரங்கள் மற்றும் பத்திரிகைச் செய்திகளில் சொல்லப்பட்ட செய்தியையும்,அதை உருவாக்கிய, White Star Line கொடுத்த unsinkable Titanic என்ற உறுதியையும்  நம்பிக்கையுடன் ஏற்று, மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருந்தவர்கள், தங்கள் வாழ்க்கை இப்படி நடுக் கடலில் முடியும் என நம்பி இருந்தார்களா?

1912 ஏப்ரல் இரண்டாம் திகதி Belfast  இல் இருந்து புறப்பட்ட டைட்டானிக்,ஏப்ரல் 10 ஆம் திகதி Southampton ஐ விட்டும் புறப்பட்டது.13 ஆம் திகதி Captain Smith ற்கு பால்டிக்கில் இருந்து பனிப்பாறைகள் பற்றி எச்சரிக்கை செய்யப்பட்டது. எனினும் எதுவித தடங்கலும் இல்லாது பயணித்த டைட்டானிக் கப்பல்,அத்திலாந்திக் கடலில் நியுபவுண்லாந்தில் (Newfoundland )இருந்து தெற்கே 375 மைல் தொலைவில்,1912 ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி பி.ப.11.40 மணியளவில் (அதாவது இரவு 11.40 ) பனிப்பாறையில் மோதியது.அதிகாலை 2.20 மணிக்கு (திங்கள் 15 ஆம் திகதி காலை) அதாவது 2 மணி 40 நிமிடங்களில் கப்பல் முற்றாக மூழ்கியது.கப்பலில் வடிவமைக்கப்பட்டபடி,  நீர் கசியாது(watertight) அமைக்கப்பட்ட பகுதிகளில் 16 இல் நான்கு பகுதிகள் உடைந்தாலும் நீரில் கூட மூழ்காது என நம்பி இருந்தும் எப்படி மூழ்கியது?

டைட்டானிக் பனிப்பாறையில் மோதுவதற்கு 37 வினாடிகளின் முன்னரே அவர்களுக்கு மோதும் அபாயம் தெரிய வந்ததால்,விபத்தைத் தடுக்க முடியவில்லை. முதல் அதிகாரி (First Officer Murdoch) hard a-starboard (உடனே அருகில் உள்ள துறைமுகத்திற்கு திருப்பும்) உத்தரவையும், அதை இயந்திர அறைக்கும் அறிவித்தார். இவை காலம் கடந்த உத்தரவாகி விட்டதால்,எதுவும் விபத்தை தடுக்க உதவவில்லை.

பனிப்பாறைகளின் கூர்மையான பகுதிகளினால் வலது பக்கம் துளைக்கப்பட்டதால், ஆறு நீர் உட்புகா கொள்கலன்களில்(contaner) நீர் உட்புகத் தொடங்கியது.மூன்று மணி நேரத்திற்குள் கப்பல் உடைந்து துண்டாகி,நீரில் இரண்டு மைல் ஆழத்திற்கு கடலின் அடித்தளத்திற்கு சென்று விட்டது.

உயிர்காப்புப் படகுகள் மூலம் 705 பேர் உயிர் தப்பினார்கள்.கப்பலில் இருந்த ஒன்பது நாய்களில் இரண்டு நாய்களும் (Pomeranian , Pekinese) எப்படியோ முதல் படகிலே தப்பி விட்டன.கப்பலில் போதியளவு உயிர்காப்பு படகுகள் இல்லாதிருந்ததும்,அதே சமயம் இருந்த உயிர்காப்பு படகுகளை சரியானபடி பயன்படுத்தாததும்,குறைந்த அளவு ஆட்களை ஏற்றியதும் தான்,1517 பேரளவில் உயிர்பலி கொள்ள வைத்தது என்கிறார்கள்.

உயிர் அச்சத்தில் அவசர அவசரமாக பயணிகள் தங்களைக் காப்பாற்றி தப்பித்துக் கொள்ள நினைத்ததால்,அதிக பயணிகள் படகுகளைப் பயன்படுத்த முடியாது போய் விட்டது என்கிறார்கள். 40 பேர் ஏற்றக்கூடிய முதல் படகில் 12 பேர் மட்டுமே சென்றதாகவும்,65 பேர் பயணிக்கக் கூடிய இன்னொரு படகில் 24 பேர் மட்டுமே சென்றதாகவும், தப்பித்தவர்கள் தெரிவித்தார்கள்.அத்துடன் கப்பல் மேலும் சிறிது நேரம் மூழ்காது இருந்திருந்தால் மேலும் பலர் தப்பித்திருக்க முடிந்திருக்கும் என்றும் தெரிவிக்கிறார்கள்.

மூன்று மணி நேரத்திற்கு அதிகமான தூரத்தில் Carpathia என்ற கப்பல் நிலை கொண்டிருந்ததால், உரிய நேரத்தில் மூழ்கு முன்னர் வரமுடியாது போயிற்று.Californian என்ற இன்னொரு கப்பல் குறைந்த தூரத்தில் இருந்தும் கூட, அவசர அழைப்பு சரியாகக் கிடைக்காததால்,உண்மை நிலையை கப்டன் Stanley Lord புரிந்து கொள்ளாததால்,உதவிக்கு அவர் உத்தரவிடவில்லை என்கிறார்கள்.

1912 ஏப்ரல் 15 ஆம் திகதி அதிகாலை 12.45 அளவில் Californian கப்பலின் பணியாளர்கள் வானத்தில் அபாய எச்சரிக்கை ஒளியைக் கண்டு காப்டனிடம் தெரிவித்தும், அவர் எந்தவித உத்தரவையும் வளங்கவில்லை என்றும்,வானொலி செய்தியாளர்( wireless operator) தூக்கத்தில் இருந்ததால் எந்தவித நடவடிக்கையும் எடுக்க்ப்படவில்லை என்பதும் குற்றச்சாட்டாக உள்ளது.

வெகு தூரத்தில் இருந்து காலம் கடந்து வந்த Carpathia  செய்த உதவியைப் போல்,  குறுகிய தூரத்தில் இருந்த Californian கப்பல் நடவடிக்கை எடுத்திருந்தால்,மேலும் பல உயிர்களைக் காப்பாற்றி இருக்க முடியும் என்கின்றனர்.

1912 ஏப்ரல் 17 இல் Mackay-Bennett , Nova Scotia மீட்புப் பணியில் ஈடுபட்ட போது, பணியாளர்களால் 306 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் பல அழுகிய நிலையில் இருந்தது.வேறு கப்பல்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டன. இருந்தும் மொத்தமாக 328 உடல்களையே கண்டெடுக்க முடிந்தது.

1985 இல் கப்பலின் உடைந்த பகுதிகளைக் கொண்டு வல்லுனர்கள் ஆய்வு செய்த போது,அந்த இடத்தில் ஒரு நீர்வீழ்ச்சி இருதிருக்கலாம் என்றும், அதனால் தான் விரைவாக மூழ்கி இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் மிக விரைவாக கப்பல் சென்றதால், பனிபாறைகள் பற்றி காப்டன் Captain Edward J. Smith  சரியாக கவனமெடுக்காமல் போயிருக்கலாம் அல்லது பனிப்பாறை பற்றிய எச்சரிக்கைச் செய்தி வானொலி ஒலிபரப்பு (ships Radio Room) அறையில் இருந்து கிடைக்காமல் போயிருக்கலாம் அல்லது crow’s nest இல் இருந்த கப்பல் ஊழியர்களிடம் பனிப்பாறைகளை கண்டறிய தொலை நோக்கிகள் (binoculars) இல்லாமலும் இருந்திருக்கலாம் என்றும் காரணங்களை தெரிவிக்கிறார்கள்.

இதைவிட கப்பல் கட்ட பாவிக்கப்பட்ட சில தரக்குறைவான பொருட்களும் செய்முறைகளும், 1912 ஏப்ரல் இரவு நடந்த பனிப்பாறைகளால் ஏற்பட்ட விபத்தினால்,நீர்புக முடியாத அறைகளுள் நீர் புகவும், விரைவாக மூழ்கவும் காரணமாக இருந்திருக்கலாம் என்றும் வல்லுனர்களால் சொல்லப்பட்டது.

தற்போது அத்திலாந்திக் கடலில் 12460 அடி ஆழத்தில் ஏறக்குறைய 2.5 மைல்கள் ஆழத்தில், ஆழ்ந்த மீளாத் துயில் கொள்கிறது டைட்டானிக் கப்பல்.

Back to top Go down

மூழ்கடிக்கப்பட (Unsinkable) முடியாத டைட்டானிக் (Titanic ) எப்படி மூழ்கியது? முழுக் கதை.  ---தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 11   Empty Re: மூழ்கடிக்கப்பட (Unsinkable) முடியாத டைட்டானிக் (Titanic ) எப்படி மூழ்கியது? முழுக் கதை. ---தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 11

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  கைத்தொலைபேசி எப்படி வேலை செய்கிறது? தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் - 35
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-23
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-24
» தெரிந்து கொள்ளலாம் வாங்க.உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும் -31
» தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-25

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum