TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun May 28, 2017 8:39 am

» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Wed May 17, 2017 6:56 pm

» அகராதியில் காதல் செய்கிறேன்
by கவிப்புயல் இனியவன் Tue May 16, 2017 7:21 pm

» தாய் தந்தை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sat May 13, 2017 12:32 pm

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu May 11, 2017 11:49 am

» ஏனடி காதலால் கொல்லுகிறாய்
by கவிப்புயல் இனியவன் Sat May 06, 2017 6:32 pm

» நீ இல்லையேல் கவிதையில்லை
by கவிப்புயல் இனியவன் Sat May 06, 2017 12:23 pm

» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க
by velang Thu May 04, 2017 8:27 am

» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து
by கவிப்புயல் இனியவன் Tue May 02, 2017 8:18 pm

» தொழிலாளர் தினக் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon May 01, 2017 7:42 am

» காதல் சோகத்திலும் சுகம் தரும்
by கவிப்புயல் இனியவன் Sat Apr 29, 2017 1:46 pm

» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க
by velang Fri Apr 28, 2017 10:51 pm

» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட
by velang Mon Apr 24, 2017 10:18 pm

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட
by velang Thu Apr 20, 2017 7:53 am

» என் இதயம் பேசுகிறது
by கவிப்புயல் இனியவன் Tue Apr 18, 2017 11:58 am

» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Apr 17, 2017 9:59 am

» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.
by velang Sat Apr 15, 2017 10:28 pm

» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு
by கவிப்புயல் இனியவன் Thu Apr 13, 2017 7:13 pm

» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.
by velang Thu Apr 13, 2017 7:44 am

» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க
by velang Tue Apr 11, 2017 10:04 pm

» அவள் மனித தேவதை
by கவிப்புயல் இனியவன் Sat Apr 08, 2017 12:41 pm

» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்
by velang Fri Apr 07, 2017 10:30 pm

» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர
by velang Thu Apr 06, 2017 9:41 pm

» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க
by velang Mon Apr 03, 2017 10:17 pm

» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க
by velang Thu Mar 30, 2017 9:25 pm

» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட
by velang Wed Mar 29, 2017 8:25 am

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 11:42 am

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 11:18 am

» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய
by velang Wed Mar 22, 2017 10:09 pm

» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
by velang Tue Mar 21, 2017 9:48 pm

» பஞ்ச வர்ணக்காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon Mar 20, 2017 8:47 pm

» வேலன்:-பியோனோ கற்றுக்கொள்ள
by velang Sat Mar 18, 2017 9:30 pm

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat Mar 18, 2017 5:23 pm

» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட
by velang Thu Mar 16, 2017 9:44 pm

» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட
by velang Wed Mar 15, 2017 9:41 pm

» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட
by velang Tue Mar 14, 2017 10:02 pm

» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட
by velang Sun Mar 12, 2017 9:57 pm

» உயிர் காக்கும் விவசாயின் உயிர்
by கவிப்புயல் இனியவன் Sun Mar 12, 2017 9:01 pm

» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு
by கவிப்புயல் இனியவன் Sun Mar 12, 2017 7:30 pm

» வேலன்:-டெக்ஸ்டாப்பினை அழகுப்படுத்த
by velang Sat Mar 11, 2017 10:21 pm


தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-23

Go down

HOT தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-23

Post by sakthy on Wed Jun 04, 2014 1:43 pm

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-23

கற்தூண்கள் (pillars)

லவ்ரியா--நந்தன்கார்க் ,அலகாபாத் தூண்,வைசாலி தூண்,சாரநாத் தூண் என
அசோகரின் தூண்கள், வட இந்திய துணைக்கண்டத்தின் பல்வேறு இடங்களில் மௌரிய அரசரான அசோகரால், கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டன.  முதலில் பல்வேறு தூண்கள் இருந்திருந்தாலும்,தற்பொது வெறும் 19 தூண்கள் மட்டுமே உள்ளன. அதில் பல உடைந்த நிலையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அத்தூண்கள் சராசரியாக 40-50 அடி உயரமும் 50 டன் எடையும் கொண்டுள்ளன. அவை அனைத்தும் வாரணாசிக்கு தெற்கே அமைந்துள்ள சுன்னார் எனும் இடத்தில் செய்யப்பட்டு,பின்பு நூற்றுக்கணக்கான மைல் தொலைவு எடுத்துச்செல்லப்பட்டு நிறுவப்பட்டுள்ளன. இது வரலாறு.

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-23 2dciarq

அதே சமயம் இன்று நவீன உலைகளில் இவை போன்ற தூண்கள் செய்யப்படும் போது,அன்று இப்படியான தூண்களை சாதாரண வசதிகள் கொண்ட பட்டறைகளில் வைத்து உருவாக்கி இருப்பது அவர்களின் திறமை,கலையுணர்வு,முயற்சியின் வெற்றி எனச் சொல்லலாம்.ஆறு தொன் எடையும் 7 மீட்டர் உயரமும் கொண்ட இரும்புத் தூண் வடக்கே விச்னுபாத குன்றில் (Vishnupada hill ) உள்ளது.இது விக்ரமாதித்ய சந்திரகுப்தன் காலத்தியது மட்டுமல்ல,இன்றும் துருப்பிடிக்காமல் இருப்பது விசேடம்.

இந்தியாவில் மட்டுமன்றி உலகின் பல நாடுகளிலும் பல வகையான தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த வகையில் தென் இந்தியப் பகுதிகளில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க சில தூண்களைப் பார்க்கலாம்.நூற்றுக்கணக்கான தமிழர்கள் உருவாக்கிய சிற்பக் கலை நுணுக்கம் கொண்ட தூண்களை சொல்லப் போனால் ஒரு புத்தகமே உருவாகி விடும். அதனால் சில தூண்கள் உங்கள் பார்வைக்கு.

தூண்களில் கோபுரத்தூண்,தீபத்தூண்,  கட்டடக் கலை நுட்பம்  கொண்ட இசைத்தூண்கள், மண்டபத்தூண்கள் எனப் பலவகை உண்டு.

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-23 21bj9g9

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-23 2jf0rdf

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-23 1h4ejd

பேரூரில் பட்டீஸ்வரர் திருக்கோயிலில் உள்ள தூண்களை நாம் சுற்றி வந்தால் அதில் பல கதைகள் சொல்லியிருப்பதைக் காணலாம்.அந்தக் கதைகளைப் படிக்க நமக்குத்தான் பொறுமை கிடையாதே! கோவை மாநகரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் நொய்யல் ஆற்றை ஒட்டி அமைந்துள்ள இக்கோயில் கரிகால் சோழனால் கட்டப்பட்டது.  பல சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கதை சொல்லும் சிற்பத் தூண்களில் சில இன்று உடைந்த நிலையில் தேடுவாரற்று சில அங்கங்கே கிடப்பதைக் காணலாம். உயிர்ச் சிற்பங்களாய் தங்கள் சோகக் கதைகளை கூறிக் கொண்டு,கலையை, உருவாக்கிய சிற்பிகளின் உழைப்பை மதிக்கத் தெரியாத மனிதனை சபித்துக் கொண்டே இவை வீழ்ந்து கிடக்கின்றன.

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-23 33jrcj4

ஒவ்வொரு சுரத்தையும்,இராகத்தையும் இசைக்கும் மெய் சிலிர்க்க வைக்கும் இசைத்தூண்களை,எவ்வளவு முயற்சியுடன் தன்னம்பிக்கையுடன் ஒரு பாறையைக் கடைந்து உருவாக்கி இருப்பார்கள்.நெல்லையிலும் வேறு பல இடங்களிலும் இசையை ஒலிக்கும் இசைத்தூண்கள் பற்றிய ஆய்வுகளை ஆய்வாளர்கள் (கல்பாக்கம்) இன்றும் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-23 35l52qf

கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில், துங்கபத்திரை ஆற்றங்கரையில் உள்ள அம்பி (Hampi) என்ற  ஊரில் உள்ள விருபாட்சர் கோயில் இசைத்தூண்கள் வெவ்வேறு இசையை,இராகங்களை ஒலிக்கிறது.

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-23 5d54wy

ஆந்திர மாநில வாரங்கல்லில் கனுமகோண்டாவில் உள்ள 1000 தூண்கள் கொண்ட பழமை வாய்ந்த மூன்று தனிக்கோயில்கள் கொண்ட கோயில், 1163 ல் முதலாம் ருத்ரனால் கட்டப்பட்டது. மூன்று கருவறைகளில் ஒன்றில் மட்டுமே சிவலிங்கம் இருக்கிறது. இது சாளுக்கியக் கட்டிடக்கலையின் பாணியில் அமைந்த, நட்சத்திர வடிவிலான மூன்று கருவறைகள் கொண்ட கோயிலாகும். ஆனால் தூண் அமைப்புகளில் காகதீய முத்திரை உள்ளது.  இக்கோயிலின் கல்யாண மண்டபத்துக்கு அடியில் சமீபத்தில் ஒரு கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெரியதோர் ஊற்றின்மீது இக்கோயில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

காளையார்கோயிலில், அன்னை அருள்மிகு சொர்ணவல்லியின் சந்நிதி மண்டபத்திலே இடது பக்கத்தில் ஒன்றாகவும், வலது பக்கத்தில் ஒன்றாகவும் இரண்டு தூண்கள் இருக்கும்.இத்தூண்களில் மிகவும் நுணுக்கமான சிற்பங்கள் ஏதும் இருக்காது.

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-23 1z2q6n7

இந்தத் தூணைக் குடைந்து அதன் நடுவே ஒரு உருண்டைவடிவிலான (பந்து போன்ற) கல்லைச் செதுக்கியிருப்பர்.இவ்வாறு கல்லினால் ஆன பந்தை இத்தூண்களை விட்டு வெளியே எடுக்க முடியாது.பந்துபோன்று உருண்டையாக உள்ள கல்லை உள்ளேயே உருட்டலாம்.இதுபோன்று பிரான்மலைக் கோயிலில் சிங்கத்தின் வாய்க்குள் பந்துபோன்ற கல்லைக் காணலாம்.

இது மிகவும் நுணுக்கமாக எப்படித்தான் இப்படிச் செய்தனரோ? என்று எண்ணி எண்ணி வியப்படையச் செய்யும் அதே நேரம், காளையார்கோயிலில்உள்ள இந்த இரண்டு தூண்களிலும் பந்துபோன்ற கல்லை இன்று காணமுடியவில்லை. ஒரு சிற்பி எத்தனை  நாட்கள் நெற்றி வியர்வை சிந்தி தன் கலைத்திறனை வெளிக்காட்டிக் கொணர்ந்தவற்றை உடைத்து அழிக்க நம்மிடையே பலர் இருக்கவே செய்கிறார்கள்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1936
Join date : 26/09/2010

Back to top Go down

HOT Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-23

Post by sakthy on Wed Jun 04, 2014 3:34 pm

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-23 2hrmvf7

காரிந்திய முறைத் தூண்கள், பெல் கோயில், சிரியா

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-23 2mrf7a0

அமெரிக்காவில்  Capitol இல் உள்ள National Capitol Columns

தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-23 2e1tbnq

கிரீஸ் நாட்டில்  பர்னாசஸ் மலையின் டெல்பி.ஒலிம்பிக்கிற்கு முன்னோடியாக இருந்ததும், பைத்தியா (Pythia) என்னும் அப்பல்லோ கடவுளின் குறிசொல்பவர் இருந்த இடமும், அப்பொலோ கடவுளை வழிபடுவதற்கான முக்கிய இடமும் ஆகும்
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1936
Join date : 26/09/2010

Back to top Go down

HOT Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-23

Post by logu on Wed Jun 04, 2014 6:26 pm

அரிய தகவல் 
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

HOT Re: தெரிந்து கொள்ளலாம் வாங்க. உலகின் அதிசயங்களும் ஆச்சரியங்களும்-23

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum