Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வீணாகும் வரிப் பணம்!
Page 1 of 1
வீணாகும் வரிப் பணம்!
நாடாளுமன்றத்தின் இரண்டாவது கட்ட பட்ஜெட் கூட்டத்
தொடரும் முறையாகவும், முழுமையாகவும் நடைபெறாமல் முடிவுக்கு வந்திருக்கிறது.
தெளிவாகச் சொல்லப் போனால், செயல்படாமலே செயல்பட்டு முடிந்திருக்கிறது.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி தொடங்கிய இந்த மூன்று வார இரண்டாம் கட்ட பட்ஜெட்
கூட்ட அமர்வு, இரண்டு நாட்கள் முன்னதாகவே முடிவுக்கு வந்துவிட்டது. ஐக்கிய
முற்போக்குக் கூட்டணி இரண்டாவது முறையும் ஆட்சி அமைத்தது முதல், அநேகமாக
எல்லா கூட்டத் தொடர்களுமே இதேபோல, முறையாகச் செயல்படாமல் கூச்சலிலும்
குழப்பத்திலும்தான் முடிந்திருக்கின்றன.
எதிர்க்கட்சிகள் அவையை நடத்த அனுமதிக்கவில்லை. அதனால் நாடாளுமன்றத்தில்
நேரம் வீணடிக்கப்பட்டது என்பது ஆளும் கட்சியின் குற்றச்சாட்டு. இரண்டு
"மெகா' ஊழல்களில் கையும் களவுமாகப் பிடிபட்ட பின்னரும் பதவியில் தொடரும்
அமைச்சர்களுடன் செயல்படும் அரசுக்கு, நாடாளுமன்றத்தை நடத்தவும், மசோதாக்களை
நிறைவேற்றவும் என்ன தார்மிக உரிமை இருக்கிறது என்பது எதிர்க்கட்சிகளின்
குற்றச்சாட்டு. இரண்டிலுமே நியாயம் இருக்கிறது.
இந்த இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்ட அமர்வில் மக்களவை 94 மணி நேரம்
கூடியது. அதில் 92 மணி நேரம், 40 நிமிடங்கள் கூச்சல் குழப்பத்திலும்,
வாக்குவாதங்களிலும் வீணாகின. மாநிலங்களவை 82 மணி நேரம் கூடியதே தவிர,
ஏதாவது விவாதம் முறையாக நடந்ததா என்றால் இல்லை. 32 அமர்வுகளில் 21 நாள்கள்
கேள்வி நேரம் நடைபெறவே இல்லை.
பட்ஜெட் கூட்டத் தொடர் முறையாக நடைபெறாததால் உணவுப் பாதுகாப்புச் சட்ட
மசோதா, நிலம் கையகப்படுத்தல் சட்ட மசோதா, வங்கதேசத்துடனான எல்லை வரையறை
மசோதா போன்ற முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் நிதிநிலை
அறிக்கையும், ரயில்வே பட்ஜெட்டும் மட்டும் எந்தவித விவாதமும் இல்லாமல்
நிறைவேற்றப்பட்டன. அதற்குக் காரணம், உறுப்பினர்களின் சம்பளம், படி, தொகுதி
மேம்பாட்டு நிதி எல்லாமும் நின்று போய்விடும் என்பதுதான்.
நாடாளுமன்றம் ஒவ்வொரு ஆண்டும் மூன்று முறை கூட்டப்படுகிறது. பட்ஜெட்
கூட்டத் தொடர், குளிர்கால கூட்டத் தொடர், மழைக்கால கூட்டத்தொடர். இதில்
தற்போதைய 15-ஆவது மக்களவைக்கு மிகப்பெரும் புகழ் என்னவென்றால், இதுவரை
மிகமிகக் குறைந்த நாள்கள் செயல்பட்ட மக்களவை இதுதான்!
கடந்த கூட்டத் தொடர் வரையிலும், "ஐக்கிய முற்போக்கு கூட்டணி-2'
தலைமையில் நடைபெற்ற மக்களவைக் கூட்டத் தொடர் 1,157 மணிநேரம் மட்டுமே
நடைபெற்றுள்ளது. "ஐக்கிய முற்போக்கு கூட்டணி-1' ஆட்சியின்போது (14-ஆவது
மக்களவை) 1,737 மணி நேரம் நடந்துள்ளது. இதைவிடக்குறைவான மணித்துளிகளே
நடைபெற்ற 9-ஆவது 10-ஆவது 12-ஆவது மக்களவை முழுமையாக 5 ஆண்டுகள்
நிறைவடையாதவை.
தற்போதைய மக்களவை கூடிய மணித்துளிகளை முந்தைய மக்களவையுடன் ஒப்பிட்டுப்
பார்த்தால், இவர்களுக்கு நாம் வழங்கிய சம்பளம் வீண் என்பது வெளிப்படை.
ஒவ்வொரு மக்களவை உறுப்பினருக்கும் மாதச் சம்பளம் ரூ.50,000. இது தவிர
தொகுதிப் படி ரூ.40,000, பயணப்படி ஆண்டுக்கு ரூ.4 லட்சமாக
உயர்த்தப்பட்டுவிட்டது. விமானம், ரயில் பயணங்கள் இலவசம். மனைவிக்கும் 8
முறை விமானப் பயணங்கள் இலவசம். இது தவிர தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு.
இவர்களுக்கு தில்லியில் குடியிருப்பு தருகிறார்கள். கட்டணம் இல்லா
தொலைபேசி! அவை நடக்கும் நாள்களில் தினமும் ரூ.2,000 படி. மிக மலிவாக
கேன்டீன் சாப்பாடு. இவ்வளவும் பெற்றுக்கொண்டு, அவைக்குள் வந்து,
நாடாளுமன்றக் கடமையைச் செய்யாமல் சம்பளம், படி ஆகியவற்றை மட்டும் பெற்றுச்
செல்வது எந்த வகையில் நியாயம்?
நாடாளுமன்ற ஜனநாயகத்தில், அடித்தளம் விவாதக் கலாசாரம். தேசத்தை
எதிர்நோக்கும்முக்கியமான பிரச்னைகளை விவாதிக்கும்போது, பல்வேறு கட்சிகளின்
தலைவர்கள் அவரவர் கருத்துகளை முன்வைக்க நாடாளுமன்ற விவாதங்கள்
வழிகோலுகின்றன. அதுமட்டுமல்ல. இந்தியா போன்ற பல்வேறு மொழிகள், இனங்கள்,
மதங்கள், பிராந்தியங்கள் உள்ள தேசத்தில், ஒவ்வொரு பிரச்னைக்கும் பல்வேறு
பரிமாணங்கள் உண்டு. எல்லாப் பகுதிகளின் பிரதிநிதிகளும், நாடாளுமன்றத்தில்
உறுப்பினர்களாக இருப்பதால், அந்தந்தப் பகுதியின் கோணத்தில் அரசு எடுக்கும்
முடிவுகளும், அரசை எதிர்கொள்ளும் பிரச்னைகளும் விவாதிக்கப்படும்.
பண்டித ஜவாஹர்லால் நேருவும் சரி, அவருக்குப் பின்னால் பிரதமர்களான
லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய் ஆகியோரும் சரி, ஒரு
நாள்கூட நாடாளுமன்றம் நடைபெறும்போது, தலைநகரிலிருந்து வெளியே சென்றது
கிடையாது. குறிப்பாக, பண்டித ஜவாஹர்லால் நேரு அவையில் விவாதங்கள்
நடைபெறும்போது அமர்ந்திருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சிகள்
என்ன கூறுகின்றன என்பதை உன்னிப்பாகக் கவனித்து, அரசு தரப்பு முடிவுகளில்
மாற்றங்களைத் திறந்த மனதுடன் செய்யும் நற்பண்பு பண்டித ஜவாஹர்லால்
நேருவிடம் இருந்தது.
ஆளும் கூட்டணிக்கு விவாதம் இல்லாமல் நிதிநிலை அறிக்கைகள் நிறைவேறுவது
போல சாதகமான ஒன்று இருக்க முடியாது. இதை எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ள
வேண்டும். அதேபோல, ஆளும் கட்சிகளின் குறைகளை அவையில் எழுப்பி அதன் மூலம்
மக்கள் மனதில் இடம் பிடிப்பதை விட்டுவிட்டு, அவையை முடக்குவதால் அது ஆளும்
கட்சி தனது குற்றம் குறைகளை மூடி மறைக்க மறைமுகமாக வழிகோலுகிறது என்பதையும்
அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
கூச்சல் குழப்பத்தில் நாடாளுமன்றம் முடங்கியதுதான் மிச்சம். திருடன் தப்பி விட்டான்!
[You must be registered and logged in to see this link.]

Similar topics
» அநியாயமாக வீணாகும் மக்கள் வரிப்பணம் !
» பதவிக்காக எம்.பி.,க்களுக்கு பணம் : ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில் இந்துஸ்தானி வாக்குமூலம்
» வெளிநாட்டில் உள்ள பணம் அனைத்துமே கறுப்புப் பணம் அல்ல
» ஏ.டி.எம்.,ல் பணம் எடுப்பதற்கு இனி கட்டணம்...?!
» கருப்புப் பணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum