Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அநியாயமாக வீணாகும் மக்கள் வரிப்பணம் !
Page 1 of 1
அநியாயமாக வீணாகும் மக்கள் வரிப்பணம் !
மக்கள் வரிப்பணம் வீண் ஆவது நமக்கு புதிதல்ல ஆண்டாண்டு காலமாக அரசுகள்
செய்வது தான் இது நமக்கு பழகிப்போய் விட்டது தான் மிகக்கொடுமை. தற்போது
இதன் அளவு அதிகரித்துக்கொண்டே செல்வது வருத்தமாக அல்ல கடுமையான
உள்ளக்குமுறலையும் ஆத்திரத்தையும் வரவைக்கிறது. பொது மக்களாகிய நம்மால்
இதைத்தவிர வேறு எதுவும் செய்ய முடியாத நிலை, இதற்க்கு முக்கிய காரணம்
பொதுமக்களாகிய நாம் தான் என்பதால் கேவலமாகவும் இருக்கிறது.
எந்த அரசாங்கம் வந்தாலும் ஓட்டிற்காக இலவசம் என்ற ஒன்றை வைத்து ஓட்டு
வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில் சிறிய அளவில் ஆரம்பித்து தற்போது ஒரு
மிகப்பெரிய வியாதியாக தமிழகத்தை பிடித்து ஆட்டுகிறது. இது கலைஞர்
அரசாகட்டும் ஜெ அரசாகட்டும் யாரும் சளைத்தவர்கள் இல்லை.
ஜெ அரசில் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் என்ற விசயத்தில் இது
ஆரம்பித்தார்கள் என்று நினைக்கிறேன், சரி! இது மாணவர்களுக்கு தானே! என்று
மனசை தேத்த வேண்டியதாக இருந்தது. திமுக அரசு நாங்க எல்லாம் யோசித்தால்
இப்படி சப்பையா செய்ய மாட்டோம் என்று "தேர்தலில் வெற்றி பெற்றால்
அனைவருக்கும் டிவி" என்று அறிவித்தார்கள், நம்ம மக்களும் டிவி இலவசமாவா!
என்று தேர்தலில் தங்கள் பங்கை ஆற்றினார்கள்.
எந்த அரசாங்கம் ஆகட்டும் இங்கே ஒரு காண்ட்ராக்ட் விடுகிறார்கள் என்றால்
அதில் கமிசன் இல்லாமல் இருக்காது இது சிறு குழந்தைக்கு கூட தெரியும். சாலை
போடுவது, தண்ணீர் தொட்டி கட்டுவது, அலுவலக கட்டிடம் கட்டுவது, பாலம்
கட்டுவது, தண்ணீர் குழாய் பதிப்பது என்று எது செய்தாலும் எந்த
காண்ட்ராக்ட் வாங்கினாலும் அதில் சிறு கமிசன் கொடுத்தால் தான் வேலையே
நடக்கும் இது இங்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும் தான் ஆனால் நாம் நம்ம
கதைய பார்ப்போம்.
முதலில் டிவி கஷ்டப்படுகிறவர்களுக்கு என்று அறிவித்தார்கள் பின் அது
அனைவருக்கும் என்று விரிவாக்கம் செய்யப்பட்டது. டிவி முன்பு ஆடம்பர
பொருளாக இருந்தது தற்போது அத்யாவசிய பொருளாகி விட்டது, ஆனால் அதை இலவசமாக
கொடுக்கக்கூடிய அளவிற்கு அது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் அல்ல.
உங்களுக்கென்ன நீங்க டிவி வைத்து இருக்கீங்க? அதனால சொல்வீங்க! என்பது
தான் வரும் அடுத்த கேள்வியாக இருக்கும். மாநிலத்துல எவ்வளோ பிரச்சனை
மக்களுக்கு இருக்கு இப்போ டிவி கொடுப்பது தான் முக்கியமா! இதுல கொடுமை
கஷ்டப்படுகிறவர்களுக்கு கொடுத்தால் கூட சரி! என்று மனதை தேத்தலாம் நல்ல
வருமானம் உள்ளவர்களுக்கு கூட ரேஷன் கார்டுக்கு ஒன்று வீதம் வருவதால் ஒரு
வீட்டிலேயே படுக்கை அறைக்கு ஒன்று ஹாலுக்கு ஒன்று என்று அடுக்கி வைத்து
பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஒரு
சிலருக்கு இப்படி வாங்குவதில் விருப்பம் இல்லை என்றாலும் நாம வாங்கவில்லை
என்றால் வேற யாரவது அதை லவட்ட போகிறார்கள் என்பதால் வாங்கிக்கொள்கிறார்கள்
அல்லது வாங்கி வேறு யாருக்காவது கொடுத்து விடுகிறார்கள். இதனால் என்ன
பயன்? ஒரு டிவி யின் மதிப்பு குறைந்த பட்சம் ருபாய் 2000 என்று
வைத்துக்கொண்டாலும் கொடுத்த கோடிக்கணக்கான டிவி யை (2000*கோடி) கணக்கு
போட்டால் தலை சுற்றி கீழே விழுந்து விடுவோம், இதில் கமிசன் தனி. தற்போது
அடுப்பு அடுத்த ரவுண்டு வந்து கொண்டு இருக்கிறது.
இவ்வாறு டிவி வாங்கி கொடுத்ததன் மூலம் இலாபம் சன் கலைஞர் விஜய் போன்ற டிவி க்களுக்கும் சுமங்கலி கேபிள் நிறுவனத்தாருக்கும் தான்.
கலைஞருக்கும் சன் டிவி க்கும் சண்டை வந்த போது கலைஞருக்கு திடீரென்று
மக்கள் நினைவு வந்து அதிரடியாக அரசு கேபிளை துவங்கினார் அது இவர்கள்
மறுபடியும் இணைந்து! குடும்ப சகிதமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பிறகு
அது காற்றோடு போய் விட்டது. அரசு கேபிள் அமைப்பதற்காக வாங்கிய
கோடிக்கணக்கான விலை உயர்ந்த கருவிகள் அதற்காக அமைக்கப்பட்ட கமிட்டி போடும்
கூட்டத்திற்கு செய்த செலவு என்று அனைத்தும் வெட்டியாக போனது. இதெல்லாம்
யார் பணம்? இனி மறுபடியும் எப்போது அரசு கேபிள் துவங்கப்போகிறார்கள்
என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம்!
இவர்கள் சண்டையால் யாருக்கு இலாபம் தெரியுமா?
இவர்கள் சண்டைக்கு பிறகே கலைஞர் டிவி தொடங்கப்பட்டு அனைத்து படங்களும்
உரிமை வாங்கப்பட்டது, சன் டிவி க்கு தர மறுக்கப்பட்டதால் அவர்கள்
துவங்கியது தான் சன் DTH மற்றும் சப் பிக்சர்ஸ். இதன் பிறகே இவர்கள்
படங்களை வாங்கி வெளியிட ஆரம்பித்தார்கள். அதன் பிறகு போட்டி போட்டு
சிரிப்பொலி ஆதித்யா இசையருவி சுட்டி போன்ற சேனல்கள் துவங்கப்பட்டன.
ஆக மொத்தத்தில் இவர்கள் சண்டையால் அரசு கேபிள் துவங்கப்பட்டு
முடக்கப்பட்டு அதனால் மக்களின் வரிப்பணம் நஷ்டம் பிறகு ஒன்று சேர்ந்த
இவர்களுக்கு பல மடங்கு இலாபம் மற்றும் தொழில் விருத்தி. இப்ப யாரு அடி
முட்டாள்?
நாம் அனைவரும் தினமும் பார்ப்பது சாலை போடுவதில் இவர்கள் அடிக்கும்
கொள்ளை. எந்த திட்டமும் இல்லை புதிதாக சாலை போடுவார்கள் அடுத்த நாளே வேறு
காரணத்திற்க்காக தோண்டுவார்கள் மனசாட்சியே இல்லாமல்! இதை பார்த்து மனம்
நொந்து போகாதவர்களே இருக்க முடியாது. சென்னை மந்தைவெளியில் BSNL அலுவலகம்
முன்பு பல முறை நோண்டி பின் ஒரு வழியாக அட்டகாசமான சாலை போட்டார்கள்
(இடைப்பட்ட காலத்தில் செம்மண் பூமியாக இருந்தது) அதன் பிறகு கொஞ்ச
நாளிலேயே நாசமாக்கி விட்டிருந்தார்கள். இது தற்போதும் கூட தொடர்கிறது,
இது இந்த அரசாங்கம் என்று இல்லை எந்த அரசாங்கம் வந்தாலும் நடப்பது.
உண்மையில் இதற்கு என்று ஒருங்கிணைப்பு அமைப்பு என்ற ஒன்று உள்ளது.
அனைவரும் கலந்து பேசி எதிர்கால திட்டங்களை கருத்தில் வைத்து அதற்கேற்ப
தங்கள் வேலைகளை வகுக்க வேண்டும் ஆனால் அப்படி ஒன்று இருப்பது போலவே
தெரியவில்லை.
அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் படிகள் பற்றி தெரிந்தால் பலர்
மயக்கமாகி விடுவார்கள் அல்லது அவர்களுக்கு கூறியவுடன் ஒரு "ஜெலுசில்"
மாத்திரையும் சேர்த்து கொடுத்து விட வேண்டியது தான். சமீப (பாராளுமன்ற)
அறிவிப்பு இதன் உச்சம்... அது என்னவென்றால் "விமானப்பயணம் செய்யும் போது உடன் உறவினர்கள் நண்பர்களையும் இலவசமாக அழைத்து செல்லலாம்" என்பதே அது! யோவ்! எவன் வீட்டு பணத்துல இப்படி ஊர் சுத்துறீங்க? அனைத்தும் மக்கள் வரிப்பணம்.
ஒவ்வொரு முறையும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படும் அப்போது தான் அது
சாலையாகட்டும் கட்டிடம் கட்டுவதாகட்டும் தொடங்க முடியும், இதில் ஒரு சிலர்
மற்ற கட்சிக்காரன் பேர் வாங்கி விடக்கூடாது என்று எதிர்ப்பு
தெரிவிப்பார்கள் அது மக்களுக்கு நன்மை தருபவையாகவே இருந்தாலும் ஆனால் இந்த
விமானப்பயணம் மற்றும் அரசியல்வாதிகளுக்கான சலுகைகளுக்கு அனைத்து
கட்சியினரும் எந்த பாகுபாடும் இன்றி ஒப்புதல் தீர்மானம் நிறைவேற்றி
இருக்கிறார்கள். எப்படி பார்த்தீர்களா! அவர்கள் ஒற்றுமை!! இப்படி
வீணாப்போன பணம் பல்லாயிரம் கோடி.
முன்பெல்லாம் தேர்தல் சமயத்தில் ஓட்டு வாங்க மக்களுக்கு பணம் கொடுப்பது
இலைமறைவு காயாக இருந்தது, தற்போது அது அப்பட்டமாக நடக்கிறது. ஒவ்வொரு
வீட்டிற்கும் ருபாய் 500 பணத்தை கவரில் வைத்து கொடுக்கிறார்கள் (அனைத்தும்
மக்கள் பணத்தை கொள்ளை அடித்த பணம்) வாங்கவில்லை என்றால் வீட்டில் போட்டு
செல்கிறார்கள், தேர்தல் கமிசனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மக்களும்
யார் வந்தாலும் கொள்ளை அடிக்க போறாங்க! அதனால யார் அதிக பணம்
கொடுக்கிறார்களோ அவர்களுக்கே ஓட்டு! என்று கேவலமான மனநிலைக்கு
சர்வசாதாரணமாக வந்து விட்டார்கள்.
மிக மிக கேவலமான விஷயத்தை மக்கள் மனதில் வெற்றிகரமாக பதித்து தங்கள்
வெற்றியை அரசியல் கட்சிகள் நிரூபித்து இருக்கின்றன. அரசியல் கட்சிகள்
ஒன்றும் சும்மா பணம் கொடுக்கவில்லை அப்படி கொடுக்க அவர்கள் ஒன்றும் பொது
மக்கள் போல இளிச்சவாயர்கள் அல்ல. கொடுத்த பணத்தை பல மடங்கு இதைப்போல
லஞ்சமாக கமிசனாக திரும்ப எடுக்கிறார்கள். ஏற்கனவே எவரும் கண்டுகொள்வதில்லை
இனி மக்கள் யாராவது கேள்வி கேட்டால் அவர்கள் மதிப்பார்களா!
என்ன சமாதானம் கூறினாலும் மக்கள் இலவசத்திற்கும் பணத்திற்கும்
குவார்ட்டருக்கும் பிரியாணிக்கும் ஓட்டு போடுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை
(மிகவும் கஷ்டப்படுகிறவர்களையாவது ஒரு கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்).
இவர்கள் இப்படி வாங்கி ஓட்டு போட்டு நாசமாகப்போகிறார்கள் படித்த
பெருமக்கள் எவன் வந்தால் எனக்கென்ன என்று தங்கள் செயலுக்கு நியாயம்
கற்பித்து ஓட்டுச்சாவடி பக்கமே வராமல் அதிபுத்திசாலியாக பேசிக்கொண்டு
ஓட்டு போடாமல் இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலர் ஓட்டு போட தகுதியான நபர்
இல்லையே என்று மனம் வருந்தி செய்வது அறியாமல் விழிக்கிறார்கள்.
எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது ஜெ ஆட்சியில் இருந்த போது சென்னை மேயர்
தேர்தலில் கராத்தே தியாகராஜனை ஜெயிக்க வைக்க அவர்கள் செய்த அட்டூழியம்,
பயங்கரமான ரவுடித்தனம் கட்டவிழ்த்து விடப்பட்டு மிரட்டி கள்ள ஓட்டு போட்டு
ஜெயித்தார்கள். திமுக வே அடிதடியில் பெரிய ஆள் அவர்களையே மிரள வைத்தார்
ஜெ. அப்போது நான் நினைத்தது இப்படி அட்டகாசம் செய்கிறார்களே என்ன
ஆகப்போகிறது இனி என்று!
அதன் பிறகு திமுக ஆட்சிக்கு வந்தது அப்பாடா! என்று நினைத்தால் இவர்களும்
சற்றும் சளைக்காமல் செய்து வருகிறார்கள் அவர்கள் அதிகாரத்தால்
அடித்தார்கள் என்றால் இவர்கள் கொஞ்சம் அதிகாரம் அதிக பணம் அதிக இலவசம்,
சலுகை என்று வேறு வகையில் டெக்னிக்கலாக மக்களை ஒழித்து (கெடுத்து)
வருகிறார்கள். மக்கள் வரிப்பணத்தை மனசாட்சியே இல்லாமல் வீண் செய்து கொண்டு
இருக்கிறார்கள். இவை எல்லாம் எங்கே சென்று முடியுமோ!

Similar topics
» மக்கள் வரிப்பணம் பல நூறு கோடி ரூபாய் பாழ் : மெத்தனமே காரணம்
» தமிழக பொதுத்துறை நிறுவனங்களில் பல்லாயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் பாழ்
» தினமும் ரூ.5 கோடி "அவுட்!': ஆறு மாதங்களில் ரூ.900 கோடி மக்கள் வரிப்பணம் வீண்
» வீணாகும் வரிப் பணம்!
» கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்டரில் கொலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum