Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கருப்புப் பணம்
Page 1 of 1
கருப்புப் பணம்
Derivatives are the financial weapons of mass destruction – Warren Buffetவளர்ந்த
நாடுகளில் ஒவ்வொரு தசாம்சமும் ஏதாவது புதிய நிதி முறைகள் கண்டறியப்பட்டுக்
கொண்டே இருக்கின்றன. அதில் ஆடும் விளையாட்டில் தான் அமெரிக்க, ஐரோப்பிய
வங்கிகள், முதலீட்டு தரகு நிறுவனங்கள் சம்பாதிக்கின்றன. கடந்த 40
வருடங்களில் கண்டறியப்பட்ட பல்வேறு நிதி முறைமைகள், உதவி செய்தது 40%
என்றால் உபத்திரவம் கொடுத்தது 60%. இதில் பரிமாற்றப்படும் பணம், இதன் தரகு
கமிஷன்கள், இதை செய்யும் சட்ட வழக்குரைஞர்களின் பங்கு, தணிக்கை செய்யும்
ஆடிட்டர்கள், பணம் பரிவர்த்தனை செய்யப்படும் சந்தைகள், வரிகளற்ற
சொர்க்கங்கள் என உலவும் கதாபாத்திரங்கள் ஒரு தனி உலகம்.
தொழில்மயமாக்கப்பட்ட பின் வந்திருக்கும் அங்கீகரிக்கப்பட்ட சட்டபூர்வமான
மாபியா கூட்டமிது.
டெரிவேட்டிவ்கள்* என்பது 80களுக்கு பின் நிதி வல்லுநர்களும், பெரு
தரகு/முதலீட்டு நிறுவனங்களும் கண்டறிந்தவை. 90களில் பிஷர் ப்ளாக் &
மைரோன் ஸோல்ஸ் என்கிற பொருளாதார நிபுணர்கள், இந்த ஆப்ஷன்களை ஆராய்ந்து
வெளியிட்ட தியரி தான் இன்று வரைக்கும் ப்ளாக் – ஷோல்ஸ் தியரி என்று
அழைக்கப்படுகிறது. இதற்கு இவர்கள் 1997-இல் பொருளாதார நோபல் பரிசு
பெற்றார்கள். இதை வைத்துக் கொண்டு கேம் ஆடிய லாங் டெர்ம் கேப்பிடல்
மேனேஜ்மெண்ட் நிறுவனம் 2000களின் பிற்பகுதியில் வீணாய் போய் பில்லியன்களில்
பணம் இழந்தது. டெரிவேட்டிவ்கள் பற்றியும், கணினி சார்ந்த பங்கு
வர்த்தகங்கள் பற்றியும் தெளிவாய் தெரிய Quants: The Alchemists of Wall Street என்கிற ஆவணப்படம் பாருங்கள்.
சுருக்கமாய், ஒரு பொருள், சேவையினை அடிப்படையாகக் கொண்டு, அதிலிருந்து
அதன் கூறுகளை வைத்துக் கொண்டு, அதன் மேல் கட்டி எழுப்பப்படும் நிதி சார்ந்த
வர்த்தக ஒலைகள் தான் டெரிவேடிவ்கள் (Derive from an underlying assets are
called Derivatives) இதை தான் இந்தியாவில் யூக பேர வணிகம் என்கிற பெயரில்
கங்கணம் கட்டிக் கொண்டு அடிக்கிறார்கள்.
2008 பொருளாதார மந்தம் ஏற்பட இந்த டெரிவேடிவ்களும், அந்த
டெரிவேடிவ்களின் மீதான காப்பீடும் தான் காரணம். லேமென் ப்ரதர்ஸ் கீழே
போனதற்கும், ஏஐஜியின் அரசாங்க கையேந்தலுக்கும் இதுவே அடிப்படை.
டெரிவேடிவ்களை வைத்துக் கொண்டு விளையாடுவது என்பது அலைகள் வரும் ஒரத்தில்
கட்டப்படும் மணல் வீடுகள். டெரிவேடிவ்கள் ஆட்டம் பாம்கள். வைத்துக் கொண்டு
வீட்டையும் தகர்க்கலாம்; பாறைகளையும் உடைக்கலாம். உலகில் பாறைகளை
உடைப்பவர்கள் குறைவு.
டெரிவேட்டிவ்களின் அடிப்படையே அது உருவாதன் உள்ளிருக்கும் சமாச்சாரம்.
இயற்கை வளங்கள், கரன்சி, நாட்டின் வட்டி விகிதங்கள் என எல்லாவற்றின்
மேலேயும் டெரிவேட்டிவ் ஆப்ஷன்களை எழுப்பலாம். ஆக, கொஞ்சம் அடிப்படைகள்
அசைந்தாலும் டெரிவேட்டிவ்களின் மூலம் மாறும் பணம் எக்கச்சக்கமாய் மாறும்.
உதாரணத்திற்கு கால் & புட் (Call & Put Options) என்றொரு
நிதிவிஷயமிருக்கிறது.
ஆப்ஷன்கள் என்பவை ஒரு விதமான டெரிவேடிவ்கள். கால் ஆப்ஷன் என்பது ஆப்ஷன்
விற்பவரிடம் வாங்குபவர் ஒரு குறிப்பிட்ட தொகையில் எதிர்காலத்தில் ஒரு
டெரிவேட்டிவினை வாங்க போடும் ஒப்பந்தம். நன்றாக கவனியுங்கள். இது வெறும்
ஒப்பந்தம், இதில் மார்ஜின் பணம் கட்டவேண்டும். எதிர்காலத்தில் அவர்
சொல்லும் விலைக்கு அதை அவர் வாங்கக் கூடிய உரிமை கால் ஆப்ஷன்
வாங்கியவருக்கு உண்டு; ஆனால் வாங்கவேண்டும் என்கிற கட்டாயமில்லை. இதன்
எதிர் தான் புட் ஆப்ஷன். எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட விலைக்கு விற்பது.
இதுதான் கருப்புப் பணத்தின் ஆரம்பம்.
ஒன்றுக்கும் உதவாத உருப்படாத ஆப்ஷன்களை வாங்கி விற்பது என்பது ரொம்ப
சுலபமான, சட்டப்பூர்வமான பண பரிமாற்றம். உ.தா. காசு பெற வேண்டியவர் ஒரு
ஆப்ஷனை ஆரம்பிப்பார். எ.கா அரிசி. அடுத்த வாரம் தமிழ்நாட்டில் அரிசியின்
விலை கிலோ ரூ.80 ஆகும் என்று வேண்டுமென்றே கால் ஆப்ஷன் எடுத்து, அதன்மேல்
ரூ.40-50 இலட்சங்கள் செலுத்தி, அது வீணாகும் போது, அதை பணமாய் ஒரு ஒவர் தி
கவுண்டர் (Over the Counter – OTC Exchange)இல் ’செட்டில்’ செய்தால் காசு
பெற வேண்டியவருக்கு பணம் நேரடியாக போய்விடும்.
OTC சந்தைகள் இன்னும் செளகர்யம். எவ்விதமான பெரிய சட்டவிதிகளுக்கு
(Compliance) உட்படாமல் இருப்பவை. இப்போது இன்னும் வசதி அதிகம்.
ஆன்லைனிலேயே OTCகள் உண்டு. பணம் இரண்டாவது ‘கிளிக்’கில் டிஜிட்டலாய்
கரையும்; அடுத்தவர் கணக்கில் நிறையும். சட்டப்பூர்வமாய் அதை காசு
கொடுப்பவர் நட்டக் கணக்கு காட்டலாம். காசு பெற்றவர் அதை சட்டப்பூர்வமாக
எடுத்துக் கொண்டு போகலாம். எல்லாம் வங்கிகள், சந்தைகள் வழியே நடக்கும்.
மேலே சொன்னது ஒரு சாம்பிள். அதே பணத்திற்கு ஒரே நபரால் பல்வேறு எதிர்கால
தினங்களில் வெவ்வேறு பண அளவில் எக்கச்சக்கமாக ஆப்ஷன்கள் எடுத்து பல
மில்லியன் டாலர்களை மாற்ற முடியும்.
அகமதாபாத்தில் இது சர்வ சாதாரணம். கமாடிட்டி தரகர்களோடு கொஞ்சம்
‘நெருக்கமாய்’ பேசினால் அவர்கள் ராஜபாட்டை விரித்து எல்லா பணத்தையும்
மாற்றிக் கொடுப்பார்கள். சிகாகோவில் நண்பர்கள் இருந்தால் போதும், உலகின்
எந்த கமாடிடீடிக்கும் வலை விரிக்கலாம். வலை விரிப்பின் வழியே பணம்
விக்டோரிய காலத்து ஒவியங்கள் போல தாராள மதர்ப்புடன் போக வேண்டிய இடத்துக்கு
போகும். சராசரியாக ஒரு நாளைக்கு உலகெங்கிலும் பல பில்லியன் டாலர் ஆப்ஷன்
ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன; பரிவர்த்தனையாகின்றன; பங்குச் சந்தைகளில்
‘செட்டில்’ செய்யப் படுகின்றன. ஒரு கேள்வியுமில்லை. Business is as usual.
கொசுறு-1: போன வாரம் வாசகர் கமெண்டில் P-Notes என்றழைக்கப்படும்
பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ் பற்றி எழுத சொன்னார். அது நேரடியாக
டெரிவேடிவ்களின் கீழ் வராது. அது ஒரு இந்திய அரசு சலுகை. வெளிநாட்டு
நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் இந்தியாவின் பங்குச் சந்தையில் முதலீடு
செய்யும் வழி. எவ்விதமான ஆதாரங்களையும், பணம் சம்பாதித்த வழியையும் இதில்
சொல்லத் தேவையில்லை. இன்னும் பெரிய சலுகையாக, எப்போது வேண்டுமானலும்,
உள்நுழைத்து, பணத்தினை வெளியேற்றலாம். பெரும் பண வர்த்தகம் இதில்
நடக்கிறது. இதை எழுத வேண்டுமெனில், நம்முடைய ரிசர்வ் வங்கி, நிதி
அமைச்சகம், செபி, பரஸ்பர நிதி, காப்பீட்டாயம் (IRDA) பற்றி எழுத வேண்டும்.
அது அடுத்த தொடருக்கான மேட்டர் )
கொசுறு-2: பிரணாப் முகர்ஜி அமெரிக்காவுக்கு போய் இந்த வார ஆரம்பத்தில்
திருவாய் மலர்ந்தருளி, வெளிநாட்டு நிறுவனங்கள் $10 பில்லியன் (ரூ.45,000
கோடிகள்) வரை இந்திய பரஸ்பர நிதி திட்டங்களில் பணம் போடலாம் என்று
சொல்லியிருக்கிறார். கருப்புப் பணத்தினை இந்தியாவுக்குள் உள்நுழைத்து
வெளியேற்ற உதவும் அடுத்த திட்டம். ரூ.20 கோடி இருந்தால், ரிசர்வ் வங்கியில்
அனுமதி வாங்கி நானும் இதன் எடிட்டரும் கூட அடுத்த பரஸ்பர நிதி
நிறுவனத்தினை ஆரம்பித்து பில்லியன் டாலராய் உள்நுழைக்கலாம்
* A financial instrument whose price is related to an underlying
commodity, currency, economic variable, financial instrument or
security. The different types of derivatives include futures contracts,
forwards, swaps, and options. They can be traded on exchanges or
over-the-counter (OTC). Market traded derivatives are standard, while
OTC trades are specific and customised.
உலகெங்கிலும் காப்பீடு என்பது ஒரு பெரிய இண்டஸ்ட்ரி. 2004 கணக்கு படி
காப்பீட்டின் ப்ரீமியம் மட்டுமே கிட்டத்திட்ட $2.941 டிரில்லியன்
(2941,000,000,000). அதிகமில்லை ஜஸ்ட் ரூ.1,32,34,500,00,00,000 (ஒரு
கோடியே முப்பத்து இரண்டு இலட்சத்து முப்பத்து நான்காயிரத்து ஐநூறு
கோடிகள்). இதில் கருப்புப் பணம் எப்படி வெளுப்பாகிறது என்பது அடுத்த வாரம்.
கல்லா நிரம்பும்……
நரேன்
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» அரசியல் வாதிகளின் கருப்புப் பணம் அம்பலம்: தோண்டி எடுத்தள்ளது குளோபல் மீடியா
» பதவிக்காக எம்.பி.,க்களுக்கு பணம் : ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில் இந்துஸ்தானி வாக்குமூலம்
» வெளிநாட்டில் உள்ள பணம் அனைத்துமே கறுப்புப் பணம் அல்ல
» கருப்பின் அழகு - அழகிய கருப்புப் படங்கள்
» பிரிட்டனின் கருப்புப் பட்டியலில் டக்ளஸ் தேவானந்தா
» பதவிக்காக எம்.பி.,க்களுக்கு பணம் : ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில் இந்துஸ்தானி வாக்குமூலம்
» வெளிநாட்டில் உள்ள பணம் அனைத்துமே கறுப்புப் பணம் அல்ல
» கருப்பின் அழகு - அழகிய கருப்புப் படங்கள்
» பிரிட்டனின் கருப்புப் பட்டியலில் டக்ளஸ் தேவானந்தா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum