Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:13 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Nov 08, 2024 11:10 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 11:16 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 04, 2024 10:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
விந்து முந்துதல்.... ஆண்கள் மனத்தை அலைக்கழிக்கும் பிரச்சனை
Page 1 of 1
விந்து முந்துதல்.... ஆண்கள் மனத்தை அலைக்கழிக்கும் பிரச்சனை
பத்துப் பேரில் ஒருவர் (1/10) என்ற விகிதத்தில் மிகப் பரவலாக ஆண்களைப் பாதிக்கப்படும் நோய் எதுவென்றால் அது விந்து முந்துதல்தான்.
விந்து முந்துதலை ஆங்கிலத்தில் Premature Ejaculation என்பார்கள். இதுதான் ஆண்களை மிக அதிகமாகப் பாதிக்கும் பாலியல் பிரச்சினையாகும்.
உறவின் போது பெண் தனது உணர்வின் உச்ச கட்டத்தை எய்துவதற்கு முன்னரே ஆணுக்கு
உணர்வின் உச்ச கட்டம் எட்டி விந்து வெளியேறிவிடுவதைத்தான் விந்து
முந்துதல் என்கிறோம்.
விந்து முந்துதல் Premature ejaculation என்பது
யாரைப் பாதிக்கும்
உசிதமான நேரம் எவ்வளவு? ஆய்வு முடிவுகள்
உச்ச கட்டத்தை அடைவதற்கு எந்தளவு நேரம் உசிதமானது என்பதைப் பற்றி சரியான
தகவல்கள் இல்லை. இருந்தபோதும் 2006 ல் சமர்பிக்கப்பட்ட ஆய்வின் பிரகாரம்
பொதுவாக
எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்க வேண்டும்?
எனவே இந்தப் பிரச்சனை பற்றி வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு அளவுகோல்கள் இருக்கும் என்பது தெளிவாகிறது.
இருந்தபோதும் 20 நிமிடங்களுக்குக் குறைவான நேரம் மட்டுமே நீடிக்கும்
உடலுறவைப் பெரும்பாலான தம்பதிகள் திருப்பதியற்றதாகக் கருதுகிறார்கள்.
பலவற்றையும் கருத்தில் எடுக்கும்போது 10 நிமிட நேரத்திற்குள் விந்து
வெளியேறிவிடுவதை விந்து முந்துதல் எனப் பெரும்பாலான மருத்துவர்கள்
கருதுகிறார்கள்.
இன்னும் சற்று பொதுப்படையாக சிந்தித்தால் நேரக் கணக்குகளைவிட
திருப்தியடையும் உணர்வு முக்கியம் எனலாம். ஆண் அல்லது பெண் உச்ச கட்டம்
சீக்கிரமாக எட்டி முடிந்துவிடுகிறது எனக் கருதினால் அங்கு விந்து முந்துதல்
இருப்பதாகக் கருதலாம்.
காரணங்கள் என்ன?
மற்றவர்கள் கண்டு கொள்வார்களோ என்ற பதற்றமான
சூழ்நிலைகளில் பயத்துடனும் அவசர அவசரமாகவும் உறவு கொண்டவர்களின் ஆரம்ப கால
அனுபவங்களின் தொடர்ச்சியாக இது நேர்ந்திருக்கலாம்.
காலத்தை விரயமாக்காமல் அவசரமாக உறவு கொண்டு விந்நை வெளியேற்றிய நிகழ்வுகளால் பதனப்படுத்தியிருக்கலாம் என்கிறார்கள்.
ஆனால் அவ்வாறு இல்லாத பலருக்கும் விந்து முந்துதல் இருப்பதை அவதானிக்க முடிகிறது.
உடலுறவு என்பது உணர்வுகளோடு தொடர்புடையன. மனக் கிளர்ச்சி அதற்கு அவசியம்.
ஆனால் சஞ்சலமும், கவலையும் உறுப்புகளை சோரவும் ஈரலிப்பின்றி வரட்சியாகவும்
ஆக்கும், அதே நேரம் பதகளிப்பு முந்தச் செய்துவிடலாம்.
இதனால்தான் சிலர் மது அருந்தி உறவு கொள்கிறார்கள். அதனால் தமது மனத்தடைகளை அகற்ற முடியும் என எண்ணுகிறார்கள்.
ஆனால் மதுவானது ஆர்வத்தைத்த தூண்டுமளவு ஆற்றலை மேம்படுத்துவதில்லை.
அத்துடன் வேண்டாத பல பக்க விளைவுகளையும் தீங்குகளையும் கொண்டுவரும் என்பது
தெரிந்ததே.
என்ன செய்யலாம்?
மனம்
மனத்தைத் திருப்ப முயற்சியுங்கள். விந்து முந்திவிடுமா என அஞ்சிக்
கொண்டிராமல் மனத்தை முற்றிலும் வேறு ஒரு விடயத்தினால் செலுத்தினால் விரைவாக
வெளியேறுவதைத் தடுக்கலாம்.
களிம்பு மருந்துகள்
இவை தவிர, சில வெளிப் பூச்சு களிம்புகளும் பலன் அளிக்கும் என
நம்பப்படுகிறது. இப் பிரச்சினை உள்ள ஆண்களின் உறுப்பின் முனையில் உள்ள
மொட்டுப் பகுதியானது தூண்டப்படும் போது ஏனையவர்களதை விட கூடியளவு உணர்
வினைத்திறனைக் கொண்டிருப்பதே முந்துவதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.
இதனால், அப்பகுதியை சற்று மரக்கச் செய்யும் விறைப்பு (மரக்கச் செய்யும்) மருந்துகள் (Topical anesthetic) உதவும் என்ற கருத்து நிலவுகிறது.
இம் மருந்துகள் உறுப்பின் மொட்டுப் பகுதியின் உணர்நிலையை (Sensitivity)
சற்றுக் குறைப்பதன் மூலம் விந்து விரைவதைத் தாமதப்படுத்துகின்றன.
ஆனால் இம் மருந்தானது உணர்வை சற்று மரக்கச் செய்யக் கூடும். மருந்தை இடும்
ஆணுக்கு மாத்திரமின்றி அவருடன் உறவு கொள்பவரின் உணர்வுகளையும்
மந்தப்படுத்திவிடக் கூடிய பிரச்சனை இருக்கிறது. ஒரு சிலருக்கு பூசிய
இடத்துத் தோலில் ஒவ்வாமை ஏற்றடவும் கூடும்.
விசேட ஆணுறை
இதற்கு மாற்றாக 'நீண்ட உறவு Long Love' எனப் பெயரிடப்பட்ட ஆணுறை
மேல்நாடுகளில் அறிமுகப்பத்தப்பட்டுள்ளது. மரக்கச் செய்யும் மருந்துகளை (Benzocaine) பூச வேண்டிய தேவையில்லாமல், ஆணுறையில் உட்புறமாகக் கலந்திருக்கிறார்கள்.
இலங்கையில் Stamina என்ற ஆணுறையை இலங்கைக் குடும்பக் கட்டுப்பாட்டுச் சங்கம் சந்தைப்படுத்தியுள்ளது.
Durex, Pasante போன்ற இன்னும் பல்வேறு பெயர்களில் வேறுநாடுகளில் கிடைக்கும்.
அழுத்திப் பிடிக்கும் முறை
அமெரிக்க மருத்துவர்களான மாஸ்டர்ஸ் ஜோன்சன் அறிமுகப்படுத்திய முறை
இதுவாகும். மருந்து மாத்திரை, பூச்சு மருந்து எவையும் தேவையில்லை. மனைவியின
ஒத்துழைப்பும் கணவனின் பங்களிப்பும் மட்டுமே தேவை. ஆயினும் சரியான
முறையில் அதைப் பயில்வது அவசியம். விந்து வெளியேறவிருக்கும் தறுவாயில்
ஆணுறுப்பை இறுக அழுத்திப் பிடிப்பதால் தடுக்கலாம்.
மருத்துகள்
இத்தகைய நடைமுறை சிகிச்சைகளால் பயன் இல்லையெனில் மருத்துவரை நாடுங்கள்.
உடலுறவில் முந்துவதைவிடவும் பிந்துவதை விடவும் இணைந்து ஓடுவதில்தான்
இருவருக்குமே திருப்தியும் சந்தோஷமும் கிட்டும் என்பதைத் தாரக மந்திரம்
போலச் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. திருப்பதி கொள்வதற்கு மாற்று வழிகள்
உள்ளன.
இறுதியாக..
இதற்கு சிகிச்சைகள் மட்டும் பயனளிப்பதில்லை. கணவன் மனைவி தம்மிடையே
பிரச்சனைகளையும் விருப்பு வெறுப்புகளையும் வெளிப்படையாகப் பேசி, ஒருவரை
ஒருவர் குற்றம் சாட்டாத சகச உறவு இருக்க வேண்டும்.
நிலவினால் முந்துவதும் பிந்துவதும் அர்த்தம் கெட்டுப் போகும் என்பதே நிஜமாகும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
விந்து முந்துதலை ஆங்கிலத்தில் Premature Ejaculation என்பார்கள். இதுதான் ஆண்களை மிக அதிகமாகப் பாதிக்கும் பாலியல் பிரச்சினையாகும்.
உறவின் போது பெண் தனது உணர்வின் உச்ச கட்டத்தை எய்துவதற்கு முன்னரே ஆணுக்கு
உணர்வின் உச்ச கட்டம் எட்டி விந்து வெளியேறிவிடுவதைத்தான் விந்து
முந்துதல் என்கிறோம்.
ஆண்மைக் குறைபாடு அல்லது விறைப்படுவதில் Erectile dysfunction சிக்கலுக்கான காரணங்கள் இவை. விந்து முந்துதலுக்கான Premature ejaculation காரணங்கள் பிறகு கட்டுரையில் சொல்லப்படுகிறது |
- ஆண்மைக் குறைபாட்டினால் ஏற்படுவதல்ல.
- இங்கு ஆண் உறுப்பு விறைப்படுவதில் எவ்வித பிரச்சனையும் இருப்பதில்லை. விறைப்படுவதில் குறைபாடானது Erectile dysfunction எனப்படும்
- பாலுறவின் நாட்டத்திலும் குறைவிருப்பதில்லை.
யாரைப் பாதிக்கும்
- பொதுவாக இது இளமைப் பருவத்தில் அதிகம் ஏற்படுகிறது. பாலியல் உணர்வுகள்
அதிகமாகவும் தீவிரமாகவும் இருக்கும் பருவத்தில் பலரையும் பாதிக்கிறது. - காலம் செல்லச் செல்ல, வயது முதிர முதிர தங்கள் உணர்வுகளைக் கட்டில் கொண்டு வர பல ஆண்களால் முடிகிறது.
- இருந்தபோதும் பல நடுத்தர வயதில் உள்ள ஆண்களையும் இது பாதிப்பதும் உண்மையே.
உசிதமான நேரம் எவ்வளவு? ஆய்வு முடிவுகள்
உச்ச கட்டத்தை அடைவதற்கு எந்தளவு நேரம் உசிதமானது என்பதைப் பற்றி சரியான
தகவல்கள் இல்லை. இருந்தபோதும் 2006 ல் சமர்பிக்கப்பட்ட ஆய்வின் பிரகாரம்
பொதுவாக
- விந்து முந்துவதாகக் கருதும் ஆண்களுக்கு சராசரியாக 1.8 நிமிடங்களில் வெளியேறியது.
- எவ்வித பிரச்சனையும் இல்லை, சாதாரணமாக வெளியேறுகிறது எனக் கருதும் ஆண்களுக்கு 7.3 நிமிடங்கள் தாக்குப் பிடிக்கத்தக்கதாக இருந்தது.
- இருந்தபோதும் 25 நிமிடங்கள் வரை விந்து வெளியேறாது உறவில் ஈடுபட
முடிந்த சில ஆண்களும் கூட தமக்கு விந்து விரைவில் வெளியேறிவிடுவதாகக்
கவலைப்பட்டதுண்டு. - 2.5 சதவிகிதமான ஆண்களுக்கு பெண் உறுப்பினுள் நுழைந்த பின்னர் 90 செகண்டுகள் கூட தாக்குப் பிடிக்க முடியாதிருந்தது.
எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்க வேண்டும்?
எனவே இந்தப் பிரச்சனை பற்றி வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு அளவுகோல்கள் இருக்கும் என்பது தெளிவாகிறது.
இருந்தபோதும் 20 நிமிடங்களுக்குக் குறைவான நேரம் மட்டுமே நீடிக்கும்
உடலுறவைப் பெரும்பாலான தம்பதிகள் திருப்பதியற்றதாகக் கருதுகிறார்கள்.
பலவற்றையும் கருத்தில் எடுக்கும்போது 10 நிமிட நேரத்திற்குள் விந்து
வெளியேறிவிடுவதை விந்து முந்துதல் எனப் பெரும்பாலான மருத்துவர்கள்
கருதுகிறார்கள்.
இன்னும் சற்று பொதுப்படையாக சிந்தித்தால் நேரக் கணக்குகளைவிட
திருப்தியடையும் உணர்வு முக்கியம் எனலாம். ஆண் அல்லது பெண் உச்ச கட்டம்
சீக்கிரமாக எட்டி முடிந்துவிடுகிறது எனக் கருதினால் அங்கு விந்து முந்துதல்
இருப்பதாகக் கருதலாம்.
காரணங்கள் என்ன?
- இது ஏற்படுவதற்குக் காரணம. என்ன? ஒருவன் தனது பாலியல் உறவுகளின் ஆரம்ப
கட்டங்களில் இதற்கு ஆற்றுப்படுத்தப்படுவதாகச் சிலர் கருதுகிறார்கள்.
மற்றவர்கள் கண்டு கொள்வார்களோ என்ற பதற்றமான
சூழ்நிலைகளில் பயத்துடனும் அவசர அவசரமாகவும் உறவு கொண்டவர்களின் ஆரம்ப கால
அனுபவங்களின் தொடர்ச்சியாக இது நேர்ந்திருக்கலாம்.
காலத்தை விரயமாக்காமல் அவசரமாக உறவு கொண்டு விந்நை வெளியேற்றிய நிகழ்வுகளால் பதனப்படுத்தியிருக்கலாம் என்கிறார்கள்.
ஆனால் அவ்வாறு இல்லாத பலருக்கும் விந்து முந்துதல் இருப்பதை அவதானிக்க முடிகிறது.
- மற்றொரு காரணம் இது பரம்பரையில் வருவதாகவும் இருக்கலாம். விந்து முந்தியவரகள் பலரது தகப்பன்மாருக்கும் இது இருந்தது தெரிய வந்தது.
- மனப்பதற்றம் முக்கிய காரணமாக இருப்பதையும் மறுக்க முடியாது. மனப் பதற்றம் பதகளிப்பு ஆகியவை விந்து விரைந்து வெளியேறக் காரணமாகின்றன.
உடலுறவு என்பது உணர்வுகளோடு தொடர்புடையன. மனக் கிளர்ச்சி அதற்கு அவசியம்.
ஆனால் சஞ்சலமும், கவலையும் உறுப்புகளை சோரவும் ஈரலிப்பின்றி வரட்சியாகவும்
ஆக்கும், அதே நேரம் பதகளிப்பு முந்தச் செய்துவிடலாம்.
இதனால்தான் சிலர் மது அருந்தி உறவு கொள்கிறார்கள். அதனால் தமது மனத்தடைகளை அகற்ற முடியும் என எண்ணுகிறார்கள்.
ஆற்றலை மேம்படுத்தாது |
அத்துடன் வேண்டாத பல பக்க விளைவுகளையும் தீங்குகளையும் கொண்டுவரும் என்பது
தெரிந்ததே.
என்ன செய்யலாம்?
மனம்
மனத்தைத் திருப்ப முயற்சியுங்கள். விந்து முந்திவிடுமா என அஞ்சிக்
கொண்டிராமல் மனத்தை முற்றிலும் வேறு ஒரு விடயத்தினால் செலுத்தினால் விரைவாக
வெளியேறுவதைத் தடுக்கலாம்.
களிம்பு மருந்துகள்
இவை தவிர, சில வெளிப் பூச்சு களிம்புகளும் பலன் அளிக்கும் என
நம்பப்படுகிறது. இப் பிரச்சினை உள்ள ஆண்களின் உறுப்பின் முனையில் உள்ள
மொட்டுப் பகுதியானது தூண்டப்படும் போது ஏனையவர்களதை விட கூடியளவு உணர்
வினைத்திறனைக் கொண்டிருப்பதே முந்துவதற்குக் காரணம் என்று நம்பப்படுகிறது.
Lidocaine Gel |
இதனால், அப்பகுதியை சற்று மரக்கச் செய்யும் விறைப்பு (மரக்கச் செய்யும்) மருந்துகள் (Topical anesthetic) உதவும் என்ற கருத்து நிலவுகிறது.
ஸ்பிரேயாகவும் கிடைக்கிறது |
இம் மருந்துகள் உறுப்பின் மொட்டுப் பகுதியின் உணர்நிலையை (Sensitivity)
சற்றுக் குறைப்பதன் மூலம் விந்து விரைவதைத் தாமதப்படுத்துகின்றன.
ஆனால் இம் மருந்தானது உணர்வை சற்று மரக்கச் செய்யக் கூடும். மருந்தை இடும்
ஆணுக்கு மாத்திரமின்றி அவருடன் உறவு கொள்பவரின் உணர்வுகளையும்
மந்தப்படுத்திவிடக் கூடிய பிரச்சனை இருக்கிறது. ஒரு சிலருக்கு பூசிய
இடத்துத் தோலில் ஒவ்வாமை ஏற்றடவும் கூடும்.
விசேட ஆணுறை
இதற்கு மாற்றாக 'நீண்ட உறவு Long Love' எனப் பெயரிடப்பட்ட ஆணுறை
மேல்நாடுகளில் அறிமுகப்பத்தப்பட்டுள்ளது. மரக்கச் செய்யும் மருந்துகளை (Benzocaine) பூச வேண்டிய தேவையில்லாமல், ஆணுறையில் உட்புறமாகக் கலந்திருக்கிறார்கள்.
இலங்கையில் Stamina என்ற ஆணுறையை இலங்கைக் குடும்பக் கட்டுப்பாட்டுச் சங்கம் சந்தைப்படுத்தியுள்ளது.
அழுத்திப் பிடிக்கும் முறை
அமெரிக்க மருத்துவர்களான மாஸ்டர்ஸ் ஜோன்சன் அறிமுகப்படுத்திய முறை
இதுவாகும். மருந்து மாத்திரை, பூச்சு மருந்து எவையும் தேவையில்லை. மனைவியின
ஒத்துழைப்பும் கணவனின் பங்களிப்பும் மட்டுமே தேவை. ஆயினும் சரியான
முறையில் அதைப் பயில்வது அவசியம். விந்து வெளியேறவிருக்கும் தறுவாயில்
ஆணுறுப்பை இறுக அழுத்திப் பிடிப்பதால் தடுக்கலாம்.
- உறவின்போது பெண் தனது ஒரு கையால் விறைத்திருக்கும் ஆணின் குறியை பற்ற வேண்டும்.
- பெருவிரல் ஒரு பக்கத்திலும், சுட்டி விரலும் நடுவிரல் மறுபக்கமாகவும் இருக்குமாறு பற்ற வேண்டும்.
- அவ்வாறு பற்றும் போது சுட்டி விரலானது மொட்டிலுள்ள தடித்த வளையத்திற்கு
முற்புறமாகவும், நடுவிரலானது மொட்டிலுள்ள தடித்த வளையத்திற்கு
பின்புறமாகவும் இருக்கும். - ஆண் தான் உச்ச கட்ட்டததை எட்டுவதாக உணர்ந்தவுடன் அதை பெண் பங்காளிக்கு உடனடியாகச் சொல்ல வேண்டும்.
- உடனடியாக அவள் தனது பெருவிரலாலும், ஏனைய இரண்டு விரல்களாலும் அவனது
உறுப்பை இறுக்கி அழுத்த வேண்டும். வலிக்காது. ஆனால் விந்து வெளியெறுவது
தாமதப்படும்.
மருத்துகள்
இத்தகைய நடைமுறை சிகிச்சைகளால் பயன் இல்லையெனில் மருத்துவரை நாடுங்கள்.
உடலுறவில் முந்துவதைவிடவும் பிந்துவதை விடவும் இணைந்து ஓடுவதில்தான்
இருவருக்குமே திருப்தியும் சந்தோஷமும் கிட்டும் என்பதைத் தாரக மந்திரம்
போலச் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. திருப்பதி கொள்வதற்கு மாற்று வழிகள்
உள்ளன.
இறுதியாக..
இதற்கு சிகிச்சைகள் மட்டும் பயனளிப்பதில்லை. கணவன் மனைவி தம்மிடையே
பிரச்சனைகளையும் விருப்பு வெறுப்புகளையும் வெளிப்படையாகப் பேசி, ஒருவரை
ஒருவர் குற்றம் சாட்டாத சகச உறவு இருக்க வேண்டும்.
- நம்பிக்கையும்
- புரிந்துணர்வும்
- விட்டுக் கொடுப்புகளும்
நிலவினால் முந்துவதும் பிந்துவதும் அர்த்தம் கெட்டுப் போகும் என்பதே நிஜமாகும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளிலேயே பெரிய பிரச்சனை . . .
» இயற்கையாக விந்து முந்துதலை சரிசெய்வ்தின் மூலம் விந்து தள்ளல் நேரம் அதிகரிக்க
» ’விந்து’ என்ற சொல்லே பெரும்பாலான மனிதர்கள் மத்தியில் அறுவருப்பாக(!) உணரப்படும் சமூகத்தில், படம் முழுதும் ”விந்து தானம்” என்பதை முன்வைத்தே நகர்த்தும் துணிச்சலுக்கு மிகப்பெரிய சல்யூட்.
» கருணாநிதியின் அரசியல் சாணக்கியமும்,வைகோவின் கண்ணீரும்........மனத்தை உறுத்தும் நினைவுகள்..........
» விந்து பரிசோதனை என்ன செய்யப்படும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum