TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 6:46 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:59 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:54 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 2:10 am

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கருணாநிதியின் அரசியல் சாணக்கியமும்,வைகோவின் கண்ணீரும்........மனத்தை உறுத்தும் நினைவுகள்..........

3 posters

Go down

கருணாநிதியின் அரசியல் சாணக்கியமும்,வைகோவின் கண்ணீரும்........மனத்தை உறுத்தும் நினைவுகள்.......... Empty கருணாநிதியின் அரசியல் சாணக்கியமும்,வைகோவின் கண்ணீரும்........மனத்தை உறுத்தும் நினைவுகள்..........

Post by sakthy Tue Sep 04, 2012 9:51 pm

கருணாநிதியின் அரசியல் சாணக்கியமும்,வைகோவின் கண்ணீரும்........மனத்தை உறுத்தும் நினைவுகள்..........

கருணாநிதி மேல் எனக்கு தனிப்பட்ட வெறுப்பு கிடையாது.அவரின் தமிழ் எனக்குப் பிடிக்கும்.அவர் எழுதிய பல நூல்கள் என்னைக் கவர்ந்தவை. இருப்பினும் அவரின் சொல்லும் செயலும் மாறுபடுவதும்,அவரின் மாறுபட்ட பேச்சுக்களுமே அவ்ரின் மேல் வெறுப்பை ஏற்படுத்தியது.

1972 ல் விவசாய்கள் போராட்டத்தில் வன்முறையை கட்டவிழ்த்தது,வீராணம் ஊழல் ,2ஜீ ஊழல்,குடும்ப அரசியல்,ஈழ வெறுப்பு,சுய நலம்,செய்த தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்காது,தன்னை நியாயப் படுத்தும் செயல்,அரசியல் சுய இலாபத்திற்காக எதையும் செய்யத் தயங்காத மனிதாபிமானமற்ற செயல்கள். இப்படி பல கண் முன்னே நிற்கும் காட்சிகளில் சிலவற்றை உங்கள் முன் வைக்கின்றேன்.

1989 பெப்.6 ல் கருணாநிதி ராஜிவ் காந்தியை சந்தித்த அதே நாள்,வைகோ விடுதலப் புலிகளை சந்திக்க புலிகள் அனுப்பிய படகு மூலம் ஈழம் சென்றார்.அது தவறென்றும்,அனுமதி இல்லாது சென்றார் என்றும் குற்றச் சாட்டுக்கள் வைக்கப்படுகின்றன.அதற்கு வைகோ வால் முதல் நாளே கருணானிதிக்கு எழுதிய கடிததில் இருந்து சில பகுதிகள்..............................
05-02-1989

என் உயிரினும் மேலான சக்தியாய் இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காமல் இருந்து என்னை இயக்கி வரும் தலைவர் அண்ணன் முதல்வர் அவர்களின் பாதங்களில் இந்த மடலை சமர்ப்பிக்கிறேன்..!

கடுகளவுகூட வருத்தமும், கோபமும் என் மீது எந்தக் கட்டத்திலும் ஏற்படாத வண்ணம் பயம் கலந்த பக்தியுடன் தங்களின் எண்ணங்களுக்கு ஏற்ப பணியாற்றி வரும் நான், பல இரவிலும், பகலிலும் ஆழமாகச் சிந்தித்து எடுத்த முடிவின் விளைவாக நான் எழுதிய இக்கடிதம் தங்கள் திருக்கரங்களில் கிடைக்கும் வேளையில் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்குமானால் ஈழத் திருநாட்டில் வவுனியா காட்டுப் பகுதிக்குள் தம்பி பிரபாகரனைக் காணச் சென்று கொண்டிருப்பேன்..........................................
…..................
சிங்கள ராணுவத்தினிடமோ, இந்திய ராணுவத்தினிடமோ நான் பிடிபட நேர்ந்தால் நமது கழக அரசுக்கோ இயக்கத்துக்கோ கடுகளவு பிரச்சினை எதுவும் ஏற்படாவண்ணம் நான் செயல்படுவேன். என்னைப் பலியிட்டுக் கொள்ளவும் சித்தமாக இருப்பேன் என்பதையும் தாங்கள் அறிவீர்கள்..!............................

இப்படி இருந்தது வைகோ கருணாநிதிக்கு எழுதிய கடிதம்.

ஆனால் வைகோ கழகக் கட்டுப்பாடுகளை மீறி அனுமதி பெறாது சென்றதாக கருணாநிதி குற்றம் சாட்டினார். உண்மையில் கருணாநிதியின் திட்டம் வைகோவை புறந்தள்ளி ஸ்டாலினை அவருக்கு அடுத்தபடியாக கொண்டு வருவதே.20 ஆண்டுகள் எம்.பி.ஆகவும் கட்சியின் உயர் பணிகளிலும்,போராட்டங்களிலும் ஈடுபட்ட வைகோவை குடும்ப பாசம் எட்டி உதைத்து தள்ளியது.
23 நாட்களுக்குப் பின் திரும்பிய வைகோ நிலைமை அறிந்து மன்னிப்புக் கோரியதுடன்,பொதுக் கூட்டங்களிலும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டிருந்தார்.
இருந்தும்,பிரச்சார கூட்டங்கள்,விழாக்கள் அனைத்திலும் வைகோ புறக்கணிக்கப்பட்டார். இந்தப் புறக்கணிப்பை அன்பழகனிடம் தெரிவித்து வருந்திய போது கிடைத்த பதில்...........இப்படி இருந்தது.

...யார் கூட மோதுற..? ஸ்டாலின் அவர் பெத்த புள்ளை.. அவர் எப்ப வேண்ணாலும் தலைவர் மடில உக்காந்துக்கலாம். நீ போய் உக்கார முடியுமா. இதையெல்லாம் பொறுத்துதான் போகணும்.?”

கருணானிதியின் உள் மனசு அன்பழகன் வாய் வழியாக வெளி வந்தது. இப்படி வைகோ புறந்தள்ளப்பட்ட போது …...................................
கருணாநிதி............... …..வைகோ எனது உறைவாள்.. அதனை எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது எனக்குத் தெரியும். அப்போது அதனைப் பயன்படுத்துவேன். மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுக்கள் இதற்காகவெல்லாம் கவலைப்பட வேண்டாம்........................ என்பது தான்.இப்படியான பல வசனங்கள் வழக்கமாக கருணா நிதியிடமிருந்து வருபவைதான்.

வைகோ ஈழ விசயம் ராஜிவ் விற்கு தெரிந்திருந்தும்,அதை பெரிது படுத்தாவிடினும் கருணாநிதியும் திமுகவும் பெரிதுபடுத்தின.ஏன்?......................
கருணாநிதியின் குடும்பாசம் வலுவாகும் போது.......................வைகோவை தூக்கிஎறிய வருகிறது, இப்படியொரு கடிதம்..............

திரு.வை.கோபால்சாமியின் ஆதாயத்திற்காக உங்களைத் தீர்த்துக் கட்ட எல்.டி.டி.யினர் திட்டம் வைத்திருப்பதாக மத்திய அரசுக்குக் கிடைத்த அதிகாரப்பூர்வமற்ற தகவலை உங்களுக்கு உடனடியாகத் தெரிவிக்க முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தேவையான அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் உங்களுக்கு வழங்கவும் எனக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எனவே உங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஒப்புதல் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்”

கேட்கவா வேண்டும். இதுவே சாக்காகி............துருப்புச் சீட்டை தூக்கி வைத்தார் கருணாநிதி.

எம்ஜிஆர் பிரிந்த போது, நடந்தது போல் பொதுக் குழுவை கூட்ட வேண்டும் என்ற வைகோவின் வேண்டுகோள் ஒதுக்கப்பட்டபோது, மூன்று தொண்டர்கள் தீக்குளித்தார்கள்,வைகோ கதறி அழுதார்.என்ன செய்ய முடியும். குடும்பபாசம் தலை மேல் நின்று ஆடியது. அதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை வைகோ,..........
ஒரு முறை கலைஞர் உணர்ச்சிவசப்பட்டு என்னைக் கட்டிக்கொண்டு, 'அண்ணா வழியில் எனக்குப் பிறகு கட்சியை உன்னால்தான் வழி நடத்த முடியும்’ என்று சொன்ன கருணானிதி,ஸ்டாலினை முன் நிறுத்த, வைகோவை தூக்கி எறிந்தார்.

மதிமுக உதயமானது.தேர்தலில் சில கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தது.................வெற்றி கிடைக்கும் என்று எண்ணிய நேரத்தில்........................................
ரஜனியின் குள்ளத்தனம்...............இப்படி இருந்தது.............
வைகோவிற்கு ஆதரவாக பேசி விட்டு வெளி நாடு செல்லப் போவதாக வைகோவிடம் சொல்லி சென்ற ரஜனி..............................
இனியும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும்கூட காப்பாற்ற முடியாது..” என்று அறிக்கைவிட்டு ரஜனி ஒரே நாளில் ஹீரோவாகியிருந்தார்..!
ஆனால்..........இப்படி ஒரு அறிக்கை விட்டு விட்டு வெளிநாடு செல்லப் போவதாக விமான நிலையம் சென்ற ரஜனி,சோவின் வற்புறுத்தலால் உடன் திரும்பி வந்து,ஜேக்கு ஆதரவாக பேசினார்............. இது மதிமுக விற்கு பலத்த இழப்பைக் கொடுத்தது. இது ஒரு புறம் இருக்க......................

ஐந்து முறை ஆட்சியைப் பிடித்த கருணாநிதி,

தமிழரும் தமிழுமே உயிர், மூச்சு, பேச்சு என்று முழங்கி அரசியல் வாழ்க்கை நடத்தி வந்த கருணாநிதி

................ராஜீவ் காந்தி படுகொலை ஈழ விடுதலைப் போராட்டத்தை தண்ணீர் விட்டு அணைத்தது போல ஆகிவிட்டது. இக்கொடுமை யைக் கண்டு கை பிசைந்து நிற்பதை விட தம்மால் வேறொன்றும் செய்ய முடியாதென்று பகிரங்கமாகவே கூறி, இனப் படுகொலையின் போது கண்ணை மூடிக் கொண்டு,சோனியா காங்கிரசிற்கு,துணை போனதன் மூலம்,பல ஆயிரம் மக்களின் அழிவிற்கும் கண்ணீருக்கும் துணை போய் விட்டார்.
டெசோ தீர்மானங்களை வைத்ததன் மூலம், இவர் உண்மையானவர் என்று நம்ப முடியுமா என்ற கேள்வி என் மனத்தில் மட்டுமல்ல அனைத்து தமிழர்களிடமும் இருக்கவே செய்கிறது.

சக்தி.














avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

கருணாநிதியின் அரசியல் சாணக்கியமும்,வைகோவின் கண்ணீரும்........மனத்தை உறுத்தும் நினைவுகள்.......... Empty Re: கருணாநிதியின் அரசியல் சாணக்கியமும்,வைகோவின் கண்ணீரும்........மனத்தை உறுத்தும் நினைவுகள்..........

Post by Tamil Tue Sep 04, 2012 10:00 pm

இந்த கட்டுரையில் குறிபிட்ட பலவிசியங்கள் எனக்கு புதியவை ...பகிர்ந்தமிகு நன்றிகள் கருணாநிதியின் அரசியல் சாணக்கியமும்,வைகோவின் கண்ணீரும்........மனத்தை உறுத்தும் நினைவுகள்.......... 917304
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

கருணாநிதியின் அரசியல் சாணக்கியமும்,வைகோவின் கண்ணீரும்........மனத்தை உறுத்தும் நினைவுகள்.......... Empty Re: கருணாநிதியின் அரசியல் சாணக்கியமும்,வைகோவின் கண்ணீரும்........மனத்தை உறுத்தும் நினைவுகள்..........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விந்து முந்துதல்.... ஆண்கள் மனத்தை அலைக்கழிக்கும் பிரச்சனை
» ஈழத்தமிழர்களது இரத்தமும், கண்ணீரும் ஊடகங்களுக்கு வணிகப் பொருட்களா?
» அஜீத் 15, சரத்குமார் 30, சத்யராஜ் 20 -உதவியும் ஒரு கிளாஸ் கண்ணீரும்...
» உன் புத்தகப் பை நிறைய, அந்த கண்ணீரும் சிரிப்பும்!! (கவிதை) வித்யாசாகர்!!
» வற்றிய தண்ணீரும்... வற்றாத கண்ணீரும்: இன்று உலக தண்ணீர் தினம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum