TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் : இன்று இரவு 10 மணிக்கு தீர்ப்பு

Go down

விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் : இன்று இரவு 10 மணிக்கு தீர்ப்பு Empty விஸ்வரூபம் திரைப்பட விவகாரம் : இன்று இரவு 10 மணிக்கு தீர்ப்பு

Post by மாலதி Tue Jan 29, 2013 9:27 pm

விஸ்வரூபம் திரைப்பட வழக்கில் இரவு 10 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும்
என்று உயர்நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார். முன்னதாக தீர்ப்பு 8 மணிக்கு
வெளியிடப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
‘முஸ்லிமை கதாநாயகனாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ‘விஸ்வரூபம்’ படத்தில்
முஸ்லிம்கள் மனதை புண்படுத்தும் வகையில் எந்த காட்சிகளும் இல்லை. மேலும்,
தணிக்கை குழு சான்றிதழ் வழங்கிய பிறகு, படத்தை தடை செய்வது இந்திய அரசியல்
சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமை, கருத்துரிமை, படைப்புரிமைக்கு எதிரானது’
என்று சென்னை ஐகோர்ட்டில் நடிகர் கமல்ஹாசனின் வக்கீல் பி.எஸ்.ராமன் இன்று
வாதாடினார். இன்று மாலைக்குள் தீர்ப்பு வரலாம் என்று தகவல் வெளியானதால்
சென்னையின் பல பகுதிகளிலும் பாதுகாப்பு, சோதனை நடவடிக்கைகள்
தீவிரப்படுத்தப்பட்டன.

கமல்ஹாசன் இயக்கி நடித்து தயாரித்திருக்கும் படம் ‘விஸ்வரூபம்’. இப்படம்
கடந்த 25ம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. படத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக
காட்சிகள் இருப்பதாக கூறிய முஸ்லிம் அமைப்புகள், படத்தை தடை செய்ய கோரி
அரசிடம் மனு கொடுத்தன. இதையடுத்து படத்தை ரிலீஸ் செய்ய அரசு 15 நாள் தடை
விதித்தது. தடையை நீக்கி படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று
கமல் சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை நீதிபதி கே.வெங்கட்ராமன் விசாரித்தார். அவருக்கு விஸ்வரூபம் படம்
திரையிட்டு காட்டப்பட்டது. வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி ‘விஸ்வரூபம் படத்தை பார்த்தேன். விரும்பினால், இந்த
வழக்கில் புதிய மனு தாக்கல் செய்யுங்கள். நாட்டின் ஒருமைப்பாடு,
ஒற்றுமைதான் முக்கியம். எனவே அரசு அதிகாரிகளையும் சம்பந்தப்பட்டவர்களையும்
கமல் சந்தித்து பேசி சுமுக தீர்வு காண முயற்சிக்க வேண்டும்’ என்று கமலுக்கு
ஆலோசனை கூறி வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார். இன்றைய தினம்
தீர்ப்பு கூறுவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி வெங்கட்ராமன் முன்பு வழக்கு
இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கமல்ஹாசன் சார்பாக மூத்த வக்கீல்
பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதாடியதாவது:

‘விஸ்வரூபம்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. சான்றிதழ்
வழங்கிய மத்திய தணிக்கை குழுவில் முஸ்லிம் உறுப்பினர் இருந்துள்ளார்.
ஆப்கானிஸ்தான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்தான் இந்த
படத்தில் உள்ளது. முஸ்லிம்கள் மனதை புண்படுத்தும் வகையில் காட்சிகள்
அமைக்கப்படவில்லை. இந்த படத்தின் கதாநாயகனே ஒரு முஸ்லிம்தான். நல்ல மனிதராக
அவர் நடித்துள்ளார். இப்படிப்பட்ட படத்துக்கு மத்திய தணிக்கை குழு அனுமதி
வழங்கிய பிறகு அதற்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. சுப்ரீம்
கோர்ட் பலமுறை இதை உறுதி செய்துள்ளது. பேச்சுரிமை, எழுத்துரிமை,
படைப்புரிமைக்கு இந்திய அரசியல் சட்ட பாதுகாப்பு உள்ளது.

‘டாவின்சி கோட்’ என்ற ஆங்கில திரைப்படத்துக்கு அப்போதைய தமிழக அரசு தடை
விதித்தது. இந்த தடையை எதிர்த்து அப்போது வழக்கு தொடரப்பட்டது. தமிழக அரசு
சார்பாக அட்வகேட் ஜெனரலாக இருந்து நான்தான் வாதாடினேன். அப்படி இருந்தும்
வழக்கை விசாரித்த நீதிபதி தமிழக அரசு உத்தரவுக்கு தடை விதித்தார். அந்த
உத்தரவை இந்த வழக்கிலும் பின்பற்றி விஸ்வரூபம் படத்துக்கு அனுமதி வழங்க
வேண்டும்.

‘ஒரே ஒரு கிராமத்திலே’ என்ற திரைப்படத்துக்கு தணிக்கை குழு அளித்த
சான்றிதழ் செல்லும் என ஐகோர்ட் தனி நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதை
எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை 3 நீதிபதிகள் விசாரித்து, தணிக்கை சான்றிதழ்
கொடுத்தது தவறு என தீர்ப்பளித்தனர். சுப்ரீம் கோர்ட்டுக்கு இந்த வழக்கு
சென்றது. 3 நீதிபதிகள் தீர்ப்பு செல்லாது என சுப்ரீம் கோர்ட் கூறியது. இதை
நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

விஸ்வரூபம் படத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு
அதிகாரம் இல்லை. உத்தரவு நகலை மாவட்ட கலெக்டர் மூலமாக 31 தியேட்டர்களுக்கு
அவசர அவசரமாக அனுப்பியுள்ளனர். இது தவறானது. ரூ.100 கோடி செலவில்
விஸ்வரூபம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தடை காரணமாக பெரும் இழப்பு
ஏற்பட்டுள்ளது. சினிமா போட்டோகிராபி சட்டத்தின் கீழ் 144 தடை உத்தரவு
பிறப்பிக்க முடியாது. இதேபோல புதுவை அரசும் விஸ்வரூபம் படத்துக்கு தடை
விதித்திருப்பது செல்லாது. மும்பையில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.
இங்கேயும் படத்தை திரையிட அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு பி.எஸ்.ராமன் வாதாடினார்.

முஸ்லிம் அமைப்பு சார்பாக வக்கீல் ஒருவர் குறுக்கிட்டு, ‘இன்றைய ஆங்கில
பத்திரிகை ஒன்றில் இந்த வழக்கு தொடர்பாக தலையங்கம் எழுதப்பட்டுள்ளது’
என்றார். இதை கேட்ட நீதிபதி, ‘இந்த வழக்கை அமைதியான முறையில் நடத்த
விரும்புகிறேன். தேவையற்றதை பேசி நேரத்தை வீணடிக்காதீர்கள். வழக்கின்
தீர்ப்பை தமிழகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்த வழக்கு விசாரணைக்காக
அதிக நேரம் ஒதுக்கியுள்ளேன். இரு தரப்பு வக்கீல்களும் முழு ஒத்துழைப்பு
அளிக்க வேண்டும்’ என்றார். அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி,
‘விஸ்வரூபம் படத்தை திரையிட்டால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை
ஏற்படும் என உளவுத்துறை மூலம் அரசுக்கு தகவல் கிடைத்தது. எனவேதான் தடை
விதிக்கப்பட்டது. சினிமா போட்டோகிராபி சட்டப்படி தடை விதிக்க தமிழக
அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. தடையை நீக்கக்கூடாது. இந்த படத்தில்
முஸ்லிம்கள் மனதை புண்படுத்தும் காட்சிகள் உள்ளதால்தான் தடை
விதிக்கப்பட்டது. இதற்கு மத்திய தணிக்கை குழு சான்றிதழ் வழங்கியதே தவறானது.
மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்றார்.

தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.

சென்னையில் அலர்ட்

வழக்கு விசாரணை இன்று பிற்பகல் வரை நீடித்தது. இதற்கிடையில், இன்று மாலை
தீர்ப்பு வரலாம் என்று கூறப்பட்டதை அடுத்து, ‘அலர்ட்’ நடவடிக்கையாக
சென்னையில் பல இடங்களில் பாதுகாப்புக்கு அதிகளவில் போலீசார்
குவிக்கப்பட்டிருந்தனர். வாகன சோதனையும் தீவிரமாக நடந்தது.

விஸ்வரூபம் திரைப்பட தணிக்கையில் முறைகேடு : குற்றசாட்டிற்கு மத்திய அரசு மறுப்பு

விஸ்வரூபம் திரைப்பட தணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக தமிழக அரசு
கூறியுள்ள குற்றசாட்டிற்கு மத்தியஅரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
விஸ்வரூபம் திரைப்படத்தை தணிக்கை செய்வதில் வாரிய உறுப்பினர்கள் சரியாக
செயல்பட்டுள்ளதாக மத்தியஅரசு தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். மேலும்
கடந்த அக்டோபரில் படத்தை பார்வையிட்டு ஆட்சேபகரமான 14 காட்சிகளை நீக்க
உத்தரவிட்டதாகவும் மத்தியஅரசு கூறியுள்ளது. 1,08 நிமிடங்கள் ஓடக்கூடிய
காட்சிகள் நீக்கப்பட்ட பின்பே தணிக்கை சான்று தரப்பட்டுள்ளதாகவும்
விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

விஸ்வரூபத்தை திரையிட கர்நாடக அரசு அனுமதி ; கமல் தரப்பு வாதம்

விஸ்வரூபம் திரைப்படத்தை எச்சரிக்கை வாசகத்துடன் வெளியிட கர்நாடக அரசு
அனுமதியளித்துள்ளதாக கமல் தரப்பு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் அரசு தரப்பு
வக்கீல் வாதத்திற்கு பதிலளித்தார். அனைத்து இஸ்லாமியரும் தீவிரவாதி அல்ல
என்ற வாசகத்துடனும், யாருடைய மனதையும் புண்படுத்துவது நோக்கமல்ல என்ற
வரிகளுடனும் கர்நாடகத்தில் விஸ்வரூபத்தை வெளியிட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று இரவு 8 மணிக்கு புதிய தலைமுறை தொலைகாட்சி காணத்தவறாதீர்கள் !!!!
» Witness to Survival – CNN இன் ஆவணப்படம் 13ஆம் திகதி இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு ஒளிபரப்பப்படும்
» பொட்டு சுரேஷ் வெட்டி கொலை: இரவு 8 மணிக்கு முருகன் குறுக்கு தெருவில் என்ன நடந்தது?
» கூடங்குளம் விவகாரம்: எதிர்ப்பாளர்களுக்கு அதிர்ச்சி தரும் தீர்ப்பு
» விஸ்வரூபம் தடை விலகுமா? நா‌ளை தீர்ப்பு; சுமுகத்தீர்வு வருகிறது ; பேச்சு நடத்த ஏற்பாடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum