Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
விஸ்வரூபம் படத்திற்கு புதிய சிக்கல்
Page 1 of 1
விஸ்வரூபம் படத்திற்கு புதிய சிக்கல்
விஸ்வரூபம்
படத்தை எங்களுக்கு திரையிட்டு காட்டிய பிறகே, தியேட்டர்களில், கமல்ஹாசன்
வெளியிட வேண்டும். இல்லையேல் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்த
வேண்டியதிருக்கும் என, தமிழக இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல்
கட்சிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கமல்ஹாசன்
இயக்கி, நடித்துள்ள,"விஸ்வரூபம் படம், இம்மாதம், 11ம் தேதி
வெளியிடப்படுகிறது. இப்படம் வெளியாவதற்கு, 8 மணி நேரம் முன்பாக,
டி.டி.எச்., வசதி மூலம், "டிவியில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு, சினிமா
தயாரிப்பாளர்களின் ஒரு பிரிவினரும், தியேட்டர்கள் உரிமையாளர்கள் மற்றும்
வினியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பை சேர்ந்தவர்களும், எதிர்ப்பு தெரிவித்து
வருகின்றனர். இந்நிலையில், இஸ்லாமிய கூட்டமைப்பினாலும், படத்திற்கு புதிய
சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இப்படப் பிரச்னை
தொடர்பாக, தமிழக இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின்
கூட்டமைப்பின் நிர்வாகிகள், சென்னையில் நேற்று நிருபர்களை சந்தித்தனர்.
இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகமது ஹனீபா கூறியதாவது:
"விஸ்வரூபம்
படத்தின், "டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது, படத்தில்,
இஸ்லாமியர்களுக்கு புறம்பான காட்சிகள் இடம்பெற்றிருக்குமோ என, சந்தேகம்
ஏற்படுகிறது.
இதனால்,
இப்படத்தை எங்கள் அமைப்பின் பிரதிநிதிகளுக்கு, பிரத்யேகமாக திரையிட்டுகாட்ட
வேண்டும் என, கேட்டோம். எங்களின் ஐயத்தை போக்கவேண்டிய நடிகர் கமல்ஹாசன்,
தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.
படம்
வெளியாவதற்கு முன்பாக, எங்களுக்கு படத்தை திரையிட்டு காட்ட வேண்டும்.
இல்லையென்றால், பட வெளியீட்டிற்கு, ஜனநாயக வழிகளில், எங்கள் எதிர்ப்பை
தெரிவிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு, முகமது ஹனீபா தெரிவித்தார்.
தியேட்டரில் திரையிடமாட்டோம் :
"டி.டி.எச்.,
என்பது, தியேட்டர், சினிமா தொழிலை மெல்ல கொல்லும், "சயனைடு விஷம்.
கார்ப்பரேட் கம்பெனிகளிடம் அடமானம் வைக்கும் முயற்சி. டி.டி.எச்.,ல்
வெளியாகும் கமல், மணிரத்னம் என, யார் படமாக இருந்தாலும், தியேட்டரில்
ஓட்டமாட்டோம் என, திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு
திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசரக்கூட்டம், நேற்று நடந்தது.
தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். கூட்டத்தில், "டி.டி.எச்.,ல்
வெளியிடப்படும் எந்த சினிமாவையும், தியேட்டரில் திரையிடமாட்டோம்.
வினியோகஸ்தர்கள் வாங்க மாட்டார்கள் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
"விஸ்வரூபத்திற்கு தடை கோரிய வழக்கு :
"நடிகர் கமல்
நடித்துள்ள, விஸ்வரூபம் படம், 90 கோடி ரூபாய் செலவில்
தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தை வெளியிட, கால தாமதம் ஏற்பட்டால், பலருக்கு
பாதிப்பு ஏற்படும் என, சென்னை ஐகோர்ட்டில், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்,
பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
ரெஜன்ட்
சாய்மீரா நிறுவனம் சார்பில், ஐகோர்ட்டில், தாக்கல் செய்த மனு: மர்மயோகி
படத்துக்காக, நடிகர் கமல், எங்களிடம் பணம் பெற்றார். இப்படம்
தயாரிக்கப்படவில்லை. எங்களுக்கு, கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது. 10.50
கோடி ரூபாய், தருவதற்கு உத்தரவிடக் கோரி, கமலுக்கு எதிராக, வழக்கு
தொடுத்துள்ளோம். விஸ்வரூபம் படத்தை வெளியிட்டு விட்டால், எங்களுக்கு பணம்
கிடைக்காது. எனவே, படத்தை வெளியிட, தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு,
மனுவில் கூறப்பட்டுள்ளது. இதற்கு, ராஜ்கமல் பிலிம்ஸ் பங்குதாரர்
சந்திரஹாசன், தாக்கல் செய்த பதில் மனு: மர்மயோகி படத்தால், ஓராண்டு காலம்,
கமலுக்கு வீணாகி விட்டது. அதன் மூலம், 40 கோடி ரூபாய், அவருக்கு இழப்பு
ஏற்பட்டது.
சாய்மீரா
நிறுவனத்துக்கு, எந்தப் பாக்கியும் இல்லை. விஸ்வரூபம், உன்னைப்போல் ஒருவன்
ஆகிய படங்களை வெளியிடும் போது, பணத்தை திருப்பிச் செலுத்துவதாக, எந்த
உத்தரவாதமும் அளிக்கவில்லை. கோர்ட் நடவடிக்கைகளை, மனுதாரர் தவறாக
பயன்படுத்துகிறார்.
மனுதாரர்
கோரியது போல், தடை விதித்தால், எங்களுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படும்.
தமிழிலும், இந்தியிலும், விஸ்வரூபம் படத்தை தயாரிக்க, 90 கோடி ரூபாய்
செலவாகியுள்ளது.படம் வெளியாக, கால தாமதம் ஏற்பட்டால், பலருக்கும்
பாதிப்புஏற்படும்.
எங்களுக்கு
இடையூறு செய்வது தான், மனுதாரரின் நோக்கம்.இவ்வாறு, பதில் மனுவில்
கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணையை, இம்மாதம், 8ம் தேதிக்கு, நீதிபதி
வி.கே.சர்மா தள்ளி வைத்துள்ளார்.
-சினிமா உலகம் -
Similar topics
» விஸ்வரூபம் படத்திற்கு தடை ஏன்?
» அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை
» கறுப்பு பணக்காரர்களுக்கு சிக்கல் : சுவிஸ் புதிய ஒப்பந்தம்
» இடதுசாரிகளும் போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் மத்திய அரசுக்கு புதிய சிக்கல்
» விஸ்வரூபம் எடுக்கிறது விஸ்வரூபம்.
» அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை
» கறுப்பு பணக்காரர்களுக்கு சிக்கல் : சுவிஸ் புதிய ஒப்பந்தம்
» இடதுசாரிகளும் போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் மத்திய அரசுக்கு புதிய சிக்கல்
» விஸ்வரூபம் எடுக்கிறது விஸ்வரூபம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum