TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை

5 posters

Go down

அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை Empty அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை

Post by அருள் Wed Jan 23, 2013 9:36 pm

விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை Empty Re: அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை

Post by அருள் Wed Jan 23, 2013 9:38 pm

கமலஹாசன்
நடித்து இயக்கிய விஸ்வரூபம் திரைப்படம் வருகிற 25-ம் தேதி வெளிவருவதாக
இருந்தது. அதில் இஸ்லாமியர்களை தவறாக விமர்சித்திருப்பதாக முஸ்ஸீம்
அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இன்று உள்துறை அமைச்சகத்திடம்
விஸ்வரூபம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என முஸ்ஸீம் அமைப்புகள்
மனு கொடுத்தனர். இதனையடுத்து விஸ்வரூபம் படத்தை வெளியிட தடை விதித்து
தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை Empty Re: அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை

Post by அருள் Wed Jan 23, 2013 9:52 pm

விஸ்வரூபம்’ படம் டி.டி.எச்சில் முதலில் வெளியிடப்படும் என்று கமல்
அறிவித்தார். இதற்கு தியேட்டர் அதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய கமல் தியேட்டர்களில் வெளியான
பின்னர்தான் ‘விஸ்வரூபம்’ படம் டி.டி.எச்களில் வெளியிடப்படும் என்று சில
நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்.
அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை Viswaroopam-kamal-like-muslim-make
ஜனவரி 25-ந்தேதி ‘விஸ்வரூபம்’ படம் தியேட்டர்களில் வெளியாகும் என்றும்,
டி.டி.எச்களில் பிப்ரவரி 2-ந்தேதி வெளியிடப்படும் என்றும் அவர்
அறிவித்தார். இத்துடன் ‘விஸ்வரூபம்’ படத்துக்கான டி.டி.எச். விவகாரம்
முடிவுக்கு வந்தது.

இதற்கிடையில் கமல்ஹாசனின் பிரமாண்ட தயாரிப்பான இந்த விஸ்வரூபம்
திரைப்படம், பல்வேறு தடைகளைத் தாண்டி நாளை மறுநாள் திரைக்கு வர தயாரானது.
கூடவே பிப்ரவரி 2-ம் தேதி டி.டி.எச்.-ல் ரிலீஸ் செய்வதாக அறிவித்தார்.
விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் ஆகியோரை சமாதானம் செய்து ஒரு
வழியாக படத்தை வெளியிட ஆயத்தமாக இருந்த கமல்ஹாசனுக்கு, முஸ்லிம்களின்
போராட்டம் காரணமாக புதிய நெருக்கடி ஆரம்பித்தது.

விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களை தவறாக சித்தரிக்கும் காட்சிகள்
இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து முஸ்லிம் தலைவர்களுக்கு படத்தைப்
போட்டுக் காட்டியதாகவும், அதில் அவர்கள் திருப்தி அடைந்ததாகவும் கமல்
கூறியிருந்தார்.

இந்த நிலையில் விஸ்வரூபம் படத்தில் கலவரத்தை தூண்டும் வகையில்
முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், அந்த படத்தை
திரையிட தடை விதிக்க வேண்டும் என்றும் இந்திய தேசிய லீக் கட்சியினர் இன்று
சென்னை ஆழ்வார் பேட்டையில் கமல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முன்னதாக, விஸ்வரூபம் படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி
முஸ்லிம் அமைப்பினர் இன்று உள்துறை செயலாளரிடம் மனு அளித்தனர்.

இந்த போராட்டம் அனைத்து பகுதிகளுக்கும் பரவி வலுவடையும் சூழ்நிலை
ஏற்பட்டது. இதனால் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு விஸ்வரூபம் படத்தை
திரையிடுவதற்கு 15 நாட்களுக்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர்கள்
உத்தரவிட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய காட்சிகள்
நீக்கப்பட்டபிறகு படத்தை திரையிட அனுமதி அளிப்பது பற்றி தமிழக அரசு முடிவு
செய்யும்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை Empty Re: அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை

Post by அருள் Wed Jan 23, 2013 10:06 pm

விஸ்வரூபம் திரைப்படம் நாளை மறுநாள் ரிலீஸாக இருந்தது. ஆன்லைன்
புக்கிங்கில் முதல் 3 நாட்கள் டிக்கட்டுகள் விற்றுத்தீர்ந்திருந்தன. இந்த
நிலையில் தமிழக அரசு இன்று விஸ்வரூபத்தின் ரிலீஸை 15 நாட்களுக்கு தடை
செய்துள்ளது.








சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருப்பதாய் சொல்லப்படுகிறது.

இன்று இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த சிலருக்கு பிரத்யேகமான காட்சி
போட்டுக்காண்பிக்கப்பட்டது. அப்போது அந்தப் படத்தில் தாலிபான் தீவிரவாத
தலைவர் ஒருவர் கோயம்புத்தூரில் வந்து ஓராண்டுக்கு மேல் தங்கியிருப்பதாகவும்
அதற்கு கோவை நகர இஸ்லாமியர்கள் உதவுவதாகவும் காட்சிகள் இருப்பதாவும்,
இன்னும் சில காட்சிகளுக்காகவும் இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு
தெரிவித்ததையடுத்து இந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

ஆனால் அப்படி ஒரு சம்பவம் உண்மையாகவே நடைபெற்றதற்கு ஆதாரம்
இருப்பதாகவும் அதன் அடிப்படையிலேயே அந்த காட்சி அமைக்கப்பட்டதாகவும் கமல்
தரப்பில் சொல்லப்படுகிறது.

விஸ்வரூபத்தின் படத்தின் ரிலீஸில் ஒன்றன் பின் ஒன்றாய் பல பிரச்சினைகளை
கமல் சந்தித்துவருவது கவலைக்குறியது. விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு
ஏற்படும் என நம்புகிறோம்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை Empty Re: அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை

Post by navas Thu Jan 24, 2013 1:16 am

//ஆனால் அப்படி ஒரு சம்பவம் உண்மையாகவே நடைபெற்றதற்கு ஆதாரம்
இருப்பதாகவும் அதன் அடிப்படையிலேயே அந்த காட்சி அமைக்கப்பட்டதாகவும் கமல்
தரப்பில் சொல்லப்படுகிறது.// தீவிரவாதத்துக்கு ஆதரவாக நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுதலாக இருக்கும் தீவிரவாத நடவடிக்கையை அரசுக்கு தெரிவிக்காமல் மறைத்து வைத்த குற்றத்துக்காக படத்தை தடை செய்வதற்க்கு முன் அம்மையார் செய்யவேண்டியது தேசிய பாதுகாப்பு ச்ட்டத்தில் கமலை சிறைக்குள் தள்ள வேண்டும் இவனை போன்ற சினிமாகாரனுக்கு புரோகிதன் என்றால் இந்துமததை சார்ந்தவர்களையும் தீவிரவாதி என்றால் முஸ்லிமையும் கவர்ச்சியாட்டம் என்றால் கிறிஸ்தவபெண்ணாக காட்டுவது வழக்கம் விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக மட்டுமின்றி இஸ்லாமியர்கள் தனது மனைவியை மற்றவர்களுக்கு கூட்டி கொடுப்பவர்களாக சித்தரித்துள்ளான்
navas
navas
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 291
Join date : 24/03/2010
Location : dubai and india

http://indianrailwaytimes.blogspot.com/

Back to top Go down

அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை Empty Re: அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை

Post by மாலதி Thu Jan 24, 2013 6:54 am

படம் வந்தால்தான் உண்மை புரியும் அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை 917304


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை Empty Re: அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை

Post by மாலதி Thu Jan 24, 2013 7:06 am

உலகில் உள்ள தீவிரவாதிகளுக்கு கூட ஆதரவாக போராட நம் இந்தியாவில் மட்டும்தான் முடியும்.


உலகில் நடக்காத, இந்தியாவில் நடக்காத, தமிழ்நாட்டில் நடக்காத
தீவிரவாதத்தையா, குண்டு வெடிப்பையா கமல் புதியதாக காட்டி விடப்போகிறார்.
என்ன அராஜகம் செய்தாலும் அதனை சுட்டிக் காட்டக் கூடாது அப்படித்தானே...?!
மதத்தின் பெயரால் நிகழ்த்தும் தீவிரவாதத்தை எதிர்த்து அதனை செய்பவனை
எதிர்த்து கண்டனம் தெரிவித்தால் அது மனிதம் வாழ நினைக்கும் நல்லெண்ணம்
என்று பாராட்டலாம். எவன் தீவிரவாதத்தால் செத்தாலும் பரவாயில்லை ஆனால்
நாங்கள் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் எனும் சுயநலப் போக்கின், அராஜகப்
போக்கின் வெ ளிப்பாடே இது.

" தீவிரவாதிகளை தண்டிக்கக் கூடாது
அவர்களை ஊக்குவிக்கவேண்டும், இந்திய அரசாங்கம் அவர்களுக்கு சிறப்பு
பயிற்சியளிக்க வேண்டும் என இவர்கள் போராட்டம் நடத்தப் போகும் காலம் வெகு
தொலைவில் இல்லை".


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை Empty Re: அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை

Post by மாலதி Thu Jan 24, 2013 7:07 am

ஒரு
சிறு விசயத்தை நினைவுபடுத்திவிட்டு இக்கட்டுரையை தொடர்வது நல்லதென
நினைக்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த தனது 'ஹேராம்'
திரைப்படத்தில் கமல் இந்து பயங்கரவாதத்தையும், அவர்களால் இளைஞர்கள்
மூளைச்சலவை செய்யப்பட்டதையும் காட்டி இருக்கிறார். நாஜிக்களுடன்
ஒப்பிட்டிருப்பார். காந்தியார் கொல்லப்பட்டது இந்துத் தீவிரவாதிகளால் தான்
என்பதை ஆணித்தரமாகச் சொல்லியது அந்தப் படம். ஆகையால் கமலை நம்மால்
இந்துத்துவ ஆதரவு கலைஞராகவும் பார்க்க முடியவில்லை.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை Empty Re: அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை

Post by navas Thu Jan 24, 2013 6:40 pm

"ஹேராம் திரைப்படம் : இந்த படத்தில் முஸ்லிம் வெறியர்களால் தன் மனைவி கற்பழித்து கொல்லப்பட்டதால் தான் இந்து தீவிரவாதியாக மாற நேர்ந்ததாக ஒரு கருத்தை சொல்வார். இது உண்மைக்கு எதிரான திரிபுவாதம் இந்தியாவில் நடந்த கலவரங்களில் இந்து பெண்கள் முஸ்லிம்களால் கற்பழிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்ததாக வழக்குகள் இல்லை. அதேநேரம் முஸ்லிம் பெண்கள் ஆர்.எஸ்.எஸ். பேன்ற ஹிந்துத்துவா இயக்கங்களால் கூட்டமாக கற்பழிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.

உன்னைப்போல் ஒருவன்: கோவை குண்டு வெடிப்பு சம்பவம் 1998ல் நடந்தது. குஜராத் கலவரம் 2002ல் நடந்தது. குஜராத் கலவரத்தில் முஸ்லிம் ஒருவருடைய மூன்றாவது மனைவி (வயது 16) உயிரோடு எரிக்கப்பட்டதால், அவர் பயங்கரவாதியாக மாறி கோவையில் குண்டு வைத்ததாக சொல்லியிருப்பார். இந்த மிகபெரிய வரலாற்று புரட்டை கமலஹாசன் அறியாமல் செய்திருப்பார் என்று சொல்ல முடியவில்லை.

விஸ்வரூபம் : இந்த படத்தில் முஸ்லிமாக நடிக்கும் கமலஹாசன் தன் மனைவியை வெளி நாட்டினருக்கு கூட்டி கொடுப்பார். அல்குரானை தீவிரவாதத்தை போதிக்கும் நுலாகவும், தொழுகை உட்பட முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகள் தீவிரவாதத்திற்கு ஊக்கம் அளிப்பதாகவும், கோவை, மதுரை போன்ற நகரங்கள் சர்வதேச தீவிரவாதிகளின் புகலிடம் போல சித்தரித்துள்ளார்.

இதுவரை முஸ்லிம்களை தீவிரவாதியாக சித்தரித்தவர் இப்பொழுது அவர்கள் பொண்டாட்டியை கூட்டி கொடுக்கும் அளவுக்கு ஒழுக்கம் கெட்டவர்கள் ஆகவும், அவர்கள் புனிதமாக மதிக்கும் வேத நூல் குரானை அசிங்கப்படுத்தியும், இனி முஸ்லிம்கள் தொழுகைக்கு செல்வதை மாற்று மதத்தினர் தவறாக பார்க்கும் அளவுக்கு படத்தை எடுத்து பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறார். அர்ஜூன், விஜயகாந்த் படங்களை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு முஸ்லிம்கள் மீது வெறுப்பு உண்டாக்கியிருக்கிறார். இப்படி படம் எடுத்தது மட்டும் இல்லாமல் இதற்க்கெல்லாம் தன்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று வேறு கூறியிருக்கிறார்.

இந்தியாவில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு வழக்கு 2010 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு துறையிடம் ஒப்படைக்கப்பட்டு அதன் பின்னணியில் இருந்த ஹிந்துத்துவாவினர் கைது செய்யப்பட்டதும், ஹிந்துத்துவாவினர் காடுகளில் பயிற்சி எடுத்த தீவிரவாத முகாம்களை தேசிய புலனாய்வு துறையினர் தேடிவருவதும் கமலுக்கு தெரியாதா? இந்த குண்டு வெடிப்புகளை நடத்தியது ஆர்.எஸ்.எஸ் ,பாரதிய ஜனதா கட்சி என்று உள்துறை அமைச்சர் குற்றம் சாட்டி உள்ள இந்நிலையில் கமலஹாசனின் இந்த முஸ்லிம் விரோத திரைப்படம் அவற்றை மறைக்க அல்லது நியாப்படுத்த உருவாக்கப்பட்டதாகவே தெரிகிறது.

- மலர் விழி
navas
navas
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 291
Join date : 24/03/2010
Location : dubai and india

http://indianrailwaytimes.blogspot.com/

Back to top Go down

அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை Empty Re: அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை

Post by ஜனனி Thu Jan 24, 2013 8:41 pm

ஆரோக்கியமான விவாதம் ...தொடரட்டும்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை Empty Re: அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை

Post by ஜனனி Thu Jan 24, 2013 8:53 pm

விஸ்வரூபம் படத்தை எதிர்த்து முஸ்லீம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்...!!அதற்கு
ஆதரவாக பெரிய பெரிய அரசியல் வல்லோர்,கலையுலக போராளிகள்,புரட்சியாளர்கள்
எல்லாம் பொங்குவதை பார்த்து ஒரு கணம் மிரண்டாலும்,இதில் கிஞ்சித்தும்
நேர்மை இல்லை என்பதை சொல்லியே ஆகவேண்டும்.

என்னையும் மனிதாபிமானியாக,பெரியமனிதனாக காட்ட,என்னோட முஸ்லிம் நண்பர்களை மகிழ்விக்க நானும் இதை எதிர்க்கிறேன்னு பொய் சொல்ல முடியல.இதே கமலஹாசன் தான் ஹேராம் ல இந்து பயங்கரவாதிகள் பற்றியும் பேசினார்.
இதை எதிர்க்கிறவங்க பின்லாடனை திவீரவாதின்னு சொல்லாம எப்டி சொல்லனும்னு
எதிர்பாக்கிறாங்க??பின்லாடன் இஸ்லாத்தை சொல்லிதானே ஜிஹாத் போர்
நடத்தினார்.எனவே அவர் சார்ந்த மதத்தை சொல்லவேண்டிய அவசியம்
இருக்கிறது.தீவிரவாதிகள் என்று சொல்லவேண்டாம் என்று கூப்பாடு போடுபவர்கள்
மற்றவர்களை மாற்றுமுன்னர்,மற்றவர்கள் மாறவேண்டும் என சொல்வதற்கு
முன்ன்னர்,இஸ்லாத்தை சேர்ந்தவர்களிடம் மனிதத்தை பேணுமாறு கூறுங்கள்.அதற்காக
போராட்டம் நடாத்துங்கள்.

அல்ஜீரியாவில் நடந்த வெளிநாட்டு
பணியாளர் 30 பேரின் கொலைக்கும் அந்த தீவிரவாதிகள் அமைப்பு கூறிய
பதில்,இஸ்லாம் என்றால் என்னவென்று அமெரிக்காவுக்கு தெரியவேண்டும்
என்பது.இந்த காட்டுமிராண்டித்தனத்தை எதிர்த்து போர்க்கொடி தூக்க வக்கற்ற
ஒரு இனம்,பாரசீகத்தில் தான் தங்கள் வேருள்ளது.தாங்கள் தமிழர்கள்
அல்ல.முஸ்லிம்கள்.சவூதியை தாயகமாக மூதாதையராக கொண்ட,அராபிகளின்
வழித்தோன்றல் என்று சொல்லிக்கொண்டு ஈழப்போராட்டத்தை காட்டிக்கொடுத்த இலங்கை
முஸ்லிம்கள்,அவர்களின் தாயகத்திலேயே,அவர்களின் இனப்பெண்ணான ரிஷானாவை
தலைவெட்டி கொன்ற காட்டுமிராண்டித் தனத்தை கண்டிக்க வக்கற்ற ஒரு
இனம்,பிரான்சில்,ஏதுமறியா பள்ளிசிறாரை யூதர் என்பதற்காய் பிஞ்சுகளை 3
மாதத்திற்கு முன்னர் இஸ்லாத்தின் பெயரால் சுட்டுக்கொன்ற கயவாளித்தனத்தை
கண்டிக்க வக்கற்ற ஒரு இனம்,உலகின் காவல்துறைகளால் தேடப்படுபவர்களில்
பத்தில் எட்டுப்பேர் முஸ்லிமாக இருப்பதையும் கண்டித்து,அவர்களுக்கு இஸ்லாம்
சொன்ன ஷரியத் படி தண்டனை கொடுக்காமல் உலவிட்டதுமான இனம், எந்த நியாயத்தில்
தங்களை தீவிரவாதிகள் என்று சொல்லவேண்டாம் என்பார்கள்?

இதற்கு
வக்காலத்து வாங்கி,அரசியல் முன்னோட்டமே தெரியாத அரசியலை சேர்ந்த
சிலர்,தங்கள் பெரிய மனித தனத்தை தக்க வைக்க கொஞ்சம் கூட நியாயம் இல்லாத
ஒன்றுக்காய் கமலை கண்டிப்பதும்,இந்த தடை சரியானதே என்பதும் நகைச்சுவையாய்
உளது.அடிபட்ட துன்பப்பட்ட ஈழத்தமிழரை தனது வெளிநாட்டு படப்பிடிப்புகளில்
எல்லாம் பயன்படுத்தி விட்டு,அவர்களையே கேவலமாக காட்டி வரும் கமலை கண்டிக்க
வக்கற்றவர்கள் இதற்கு மட்டும் பொங்கி எழுவது விசித்திரம் தான்.கமல் மீது பல
குற்றச்சாட்டுக்களை நான் வைத்தாலும்,இந்த விஷயத்தில் கருத்து கூறும்
உரிமையை இல்லாது செய்து,படத்தை வெளிவிடாமல் செய்து ஜனநாயகத்தை இல்லாது
செய்த தமிழக அரசு கண்டிக்க தக்கது.எது எப்படியோ,கமலின்
கருத்தான,அத்திரைப்படத்தை வெளியிட அனுமத்திருக்கவேண்டும்.அதன்
பின்னரே,அதில் சொல்லப்பட்டது சரியா,பிழையா,தடை செய்யவேண்டுமா இல்லையா
என்பதை அவன் பேச வருவதை கேட்ட பின்னரே முடிவு செய்திருக்க வேண்டியது.
உலகம் முழுவதும் இருந்தும் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று கலை மூலம் சொல்பவனை எதிர்த்து,ஆர்ப்பாட்டங்கள்,பேரணிகள்
செய்கிற அந்த இனம்,தங்களையோ,தங்களது தீவிரவாத வேலையும்,சமூகத்துக்கு
ஒவ்வாத,மனித இனத்துக்கு ஒவ்வாத தண்டனை முறைகளும்,சட்டமும்,வாழ்க்கை
முறையையும் திருத்தி கொள்வதாய் இல்லை என்பது தான் வருந்ததக்கது.

- குமரன் கதிர்காமர்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை Empty Re: அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை

Post by navas Thu Jan 24, 2013 10:25 pm

குமரன் கதிர்காமர். ஒரு மனநோயாளி என்பது தெளிவாக தெரிகிறது // ஹேராம் ல இந்து பயங்கரவாதிகள் பற்றியும் பேசினார்.// தனது தங்கையை முஸ்லிம் கற்பழித்ததால் ஆத்திரத்தில் இந்து பயங்கரவாதி உருவானான் என்றுகூறி காந்தியை கொன்ற செயலை மறைமுகமாக் நியாயபடுத்தினார்
//ஈழப்போராட்டத்தை காட்டிக்கொடுத்த இலங்கை
முஸ்லிம்கள்,// புலிகள் முதியவர்கள் குழ்ந்தைகள் பெண்கள் உட்பட் முஸ்லிம் கிராம்த்தில் நூற்றுகணக்கில் கொன்றொழித்த வர்லாறு மனநோயால் இவ்ருக்கு ம்ற்ந்திருக்கும் //கமலின்
கருத்தான,அத்திரைப்படத்தை வெளியிட அனுமத்திருக்கவேண்டும்.அதன்
பின்னரே,அதில் சொல்லப்பட்டது சரியா,பிழையா,தடை செய்யவேண்டுமா// ச்ம்பந்தபட்ட மத்த்தின் தலைவ்ர்களுக்கு கமல் காண்பித்துவிட்டார் அவர்கள்தான் இதை அனுமதிக்க கூடாது என்று போராட்டத்தில் இருப்பவர்கள் உதரண்மாக இவ்ர் வீட்டு பெண்ணின் ஆபாச படம் மொபைல் மூலமாகவோ அல்லது இணையம் மூலமாகவோ யாராவது வெளியிட்டால் என்ன செய்வார் அந்த்காட்ச்சியை அவர் பார்த்து உறுதிசெய்த பின் காவல்துறையில் அந்த்காட்ச்சியை காட்டி தவறு செய்தவர்கள் மீது ந்ட்வடிக்கை எடுக்க புகார் கொடுப்பார் அந்த காட்ச்சியை நாங்கள் பார்த்தால் தான் அவன் குற்ற்ம் செய்தானா என்று முடிவு செய்யமூடியும் என்று மக்கள் கூறினால் இந்த அதிமேதாவி மக்கள் ஒவ்வருவருக்கு அசிங்க காட்சியை காட்டுவர் போலும் அப்ப்டி இருக்கிறது அவரது வாதம் மேலும் உலகில் பய்ங்கரவதம் நடத்துவது முஸ்லிம்களாம் உலகிலேயே அதிகமாக மக்களை கொலை செய்தது கிறிஸ்தவ பெய்ர்தாங்கிகள் இந்தியாவில் அதிகம் திவிரவாத்செய்ல் செய்த்து சங்பரிவார் தீவிரவாதிகள் இஸ்லாமிய பெய்ர் தாங்கிகள் சிலரும் தீவிரவாத் செயல் செய்திருக்கிறார்கள் ஆனால் அனைதையும் மற்ந்துவிட்டு எல்லா தீவிரவாத்மும் இஸ்லாமியர்கள் செய்த்தாக கூறுவார் ஏனெண்றால் இவ்ர் மன நோயாளி மற்றவை மறந்துவிடும்
//அந்த இனம்,தங்களையோ,தங்களது தீவிரவாத வேலையும்,சமூகத்துக்கு// இதுவே இவ்ரது கடுமையான் மனநோய் வந்தத்ற்கான ஆதாரம் சங்பரிவார் கூட இப்படி முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவதிகள் என்று சொல்லவில்லை ஆனால் இவர் முஸ்லிம்கள் அனைவ்ரும் தீவிரவாதிகள் என்கிறார்
navas
navas
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 291
Join date : 24/03/2010
Location : dubai and india

http://indianrailwaytimes.blogspot.com/

Back to top Go down

அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை Empty Re: அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை

Post by அருள் Fri Jan 25, 2013 8:16 am

அண்மையில்
ரிசானா என்ற அப்பாவி பெண் சவுதி அரேபியாவில் குராணை வாசித்து ஆட்டை
வெட்டுவது போல் வெட்டப்பட்டாள், விஸ்வரூபம் படத்திற்கு தடை கோரும் எந்த
அமைப்பும் இதை கண்டிக்கவில்லையே ஏன்??

இது என்னுடைய புராடெக்ட்
இதை எப்படி வேண்டுமானாலும் வெளியிடுவேன் என்று கூறி மக்களிடம் பணம் வாங்கிய
பின் தன் நிலையை மாற்றி தியேட்டரில் வெளியிட முயற்சி செய்த களவாணித்
தனத்தை நாம் ஆதரிக்கவில்லை, கமலின் இன்ன பிற கருத்துக்களையும் ஏற்கவில்லை,
ஆனால் மதத்திற்காக இவ்வளவு பேசும் அமைப்புகள் ஏன் அந்த மதத்தில் நிகழும்
அக்கிரமங்களை எதிர்க்கவில்லை????


-maninmainthan
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை Empty Re: அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை

Post by அருள் Fri Jan 25, 2013 8:18 am

கமலஹாசனுக்காக

பீஷ்ம் சாஹ்னி எழுதிய தமஸ் என்ற புதினம் கோவிந்த் நிஹ்லானியின்
இயக்கத்தில் தொடராகவும், பின்னர் தொகுக்கப்பட்டு முழு நீளப்படமாகவும்
வெளிவந்தது. பாகிஸ்தான் பிரிந்த பொழுது, அங்கு நடந்த சீக்கிய - முஸ்லீம் ,
இந்து - முஸ்லீம் கலவரங்களின் பின்னணியில் கதை நடக்கும். இதை தடை செய்ய
கோரி நீதி மன்றத்தின் முன் மனு வந்த பொழுது, நீதிபதிகள் படத்தைப் பார்த்து
பிரச்சினை இல்லை எனச் சொன்னார்கள்.

“எல்லோருக்கும் நீதிபதிகளைப்
போல அறிவும் தெளிவான சிந்தனையும் இருக்காது, இந்தப் படம் வெளிவந்தால்
நாட்டில் கலவரங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது, அதனால் தடை செய்ய
வேண்டும்” என வேண்டுகோள் வைக்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள்,

”சராசரி மனிதர்கள், முந்தையத் தவறுகளில் இருந்து தொடர்ந்து கற்றுக்கொண்டே
வருவார்கள், அடிப்படைவாதத்தில் விழுந்து திரும்ப அதேத் தவறுகளை செய்யும்
வாய்ப்பு மிகவும் குறைவு. படிக்காதவர்களோ, அல்லது பாமரர்களோ
எந்தவிதத்திலும் மற்றவர்களைக் காட்டிலும் அறிவுத்திறனிலோ, சிந்தனையிலோ
குறைவானவர்கள் கிடையாது. அவர்களாலும் எது நல்லது எது கெட்டது என
பகுத்தறிந்து , எதிர்காலத்தை நினைவில் வைத்து விசயங்களை எடுத்துச்
செல்லமுடியும். இதை சரியாக அறிந்து வைத்துக் கொள்வதே ஒட்டு மொத்தப்
புரிதலுக்கும் முதற்படி”

எனக்கூறி தமஸ் திரைப்படத்தைத் தடை செய்ய மறுத்து விட்டனர். தரவு [You must be registered and logged in to see this link.]

ஏறத்தாழ மேற்சொன்ன கருத்துகள் “ஒரேயொரு கிராமத்திலே” என்ற தமிழ்த் திரைப்படத்தின் தடை நீக்கத்திலும் சொல்லப்பட்டது.

"ஒரேயொரு கிராமத்திலே " இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்தில் மட்டும்
அல்லாது தரத்திலும் சராசரிக்கும் கீழான படம் தமிழக அரசால் தடை
செய்யப்பட்டு, பின்னர் உச்சநீதி மன்றத்தால் தடை நீக்கப்பட்டு வெளியானது.
உத்தரவில் இருந்த முக்கிய குறிப்பு,



கவிஞர் வாலி
எழுதிய கதைக்கு , உச்சத்தில் இருந்தாலும் இளையராஜா மிகவும் சுமாரான இசையைத்
தான் கொடுத்து இருப்பார். வழக்கமான உள்ளடி வெளியடிகளுடன் இந்தப் படம்
தேசிய விருது கூடப் பெற்றது. இருந்தும் கூட இப்படி ஒரு படம் வந்ததா என்று ,
இதன் பெயர் கூட மக்களின் நினைவில் இருக்காது.

இடஒதுக்கீட்டை
சூசகமாக எதிர்த்து வெளிவந்த ஜெண்டில்மேன் கூட அதன் விசமமான
கருத்துக்களுக்காக அறிவுஜூவிகளின் மத்தியில் மட்டும் தான்
விவாதிக்கப்படுகின்றது. சாமானிய மனிதர்கள் பெரும்பாலோனருக்கு இன்னும்
சிக்குபுக்கு சிக்குப்புக்கு ரயிலும் , கப்ளிங்ஸ் கிப்ளிங்ஸ்... புறா
எப்படி பறந்தது என்ற பொழுது போக்கு அம்சங்கள் மட்டும் தான் நினைவில்
நிற்கின்றன. சாமனியர்கள் தீவிரமான விசயங்களை பிரச்சினைகளாக உள்ளெடுத்து
தன்னையும் சுற்றத்தையும் இறுக்கப்படுத்திக் கொள்வதில்லை.

ஆக,
சிறுபான்மையோ பெரும்பான்மையோ ஆதரித்தோ எதிர்த்தோ ஒரு விசயம் திரைப்படமாகவோ ,
புத்தகமாகவோ வந்தால், வரட்டுமே... பிடித்திருந்தால் போற்றுவோம்,
பிடிக்காவிட்டால் தாளிப்போம்.

பம்பாய் திரைப்படம், தெலுங்கு
மொழிமாற்றப் பதிப்பு, ஆந்திராவில் தடை செய்யப்பட்டது. பின்னர்
நீதிமன்றத்திற்கு வழக்கு வந்த பொழுது, தடை செய்த அதிகாரிகள் படத்தைப்
பார்க்கமலேயே தடை செய்து இருக்கின்றனர் என வெட்ட வெளிச்சம் ஆகியது.

முதலில் அடி , உதை , தடை பின்னர் பார்க்கலாம் என்ற வகையிலேயே
சமீபகாலங்களாக Water, Da Vinci Code, War and Peace, குஜராத் கலவரங்கள்
பற்றிய ஆவணப்படங்கள் என தொடர்ந்து தடை செய்யப்பட்டு பின்னர்
நீக்கப்படுகின்றன.

விஸ்வரூபம் படத்தையே எடுத்துக் கொண்டால், தணிக்கைக் குழு வெட்டி எறிந்த காட்சிகளைப் பற்றியக் குறிப்புகள் கீழே,

இவற்றில் ஒன்றில் கூட மதம் சம்பந்தப் பட்டது கிடையாது. கமலஹாசன் சொன்னதைப்போல, விறுவிறுப்பான உளவாளிக்கதையாக மட்டுமே இருக்கும் போல.

டா வின்சி கோட் திரைப்படம், கத்தோலிக்கர்கள் அதிகம் வாழும் இத்தாலியிலேயே
தடை செய்யப்படவில்லை. மத நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையிலும்,
வரலாற்றுக்குறிப்புகளைத் தவறாக கொடுத்திருக்கும் இப்படத்தைப்
புறக்கணியுங்கள் என்றுதான் வாடிகனால் கேட்டுக்கொள்ளப்பட்டது. கவனிக்கவும்,
தடைக்கும் புறக்கணிப்பிற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் உள்ளாது.


அரசியல் ஆகட்டும் மதமாகட்டும், தேசியம் சார்ந்த உணர்வுகள் ஆகட்டும்,
உண்மையில் அவரவர் நம்பிக்கைகளை அவரவர் அனுமதியின்றி வேறு யாரும் மாற்றிவிட
முடியாது. நம் மக்களை வருத்தப்படுத்தக் கூடு
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை Empty Re: அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை

Post by navas Fri Jan 25, 2013 1:06 pm

அருள் wrote:அண்மையில்
ரிசானா என்ற அப்பாவி பெண் சவுதி அரேபியாவில் குராணை வாசித்து ஆட்டை
வெட்டுவது போல் வெட்டப்பட்டாள், விஸ்வரூபம் படத்திற்கு தடை கோரும் எந்த
அமைப்பும் இதை கண்டிக்கவில்லையே ஏன்??

இது என்னுடைய புராடெக்ட்
இதை எப்படி வேண்டுமானாலும் வெளியிடுவேன் என்று கூறி மக்களிடம் பணம் வாங்கிய
பின் தன் நிலையை மாற்றி தியேட்டரில் வெளியிட முயற்சி செய்த களவாணித்
தனத்தை நாம் ஆதரிக்கவில்லை, கமலின் இன்ன பிற கருத்துக்களையும் ஏற்கவில்லை,
ஆனால் மதத்திற்காக இவ்வளவு பேசும் அமைப்புகள் ஏன் அந்த மதத்தில் நிகழும்
அக்கிரமங்களை எதிர்க்கவில்லை????


-maninmainthan
இலங்கை ரிசானாவிற்கு மரணதண்டனை........ அறிவு ஜீவிகளின் இரட்டை முகங்கள்,,,,, அறிவு பூர்வமான பதில்கள்>>>>>>>>>>>>
குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக இலங்கையைச் சேர்ந்த ரிஸானா என்பவருக்கு சவூதி நீதி மன்றம் மரண தண்டனை அளித்துள்ளது. இது இந்தியாவில் உள்ள சில எழுத்தாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால் இவர்களின் விமர்சனத்திலிருந்து இவர்களுக்கு நிலையான கொள்கையும், தெளிவான பார்வையும் , பொது அறிவும் இல்லை என்பது தெரிகிறது.

தனக்குத்தானே முரண்படுவதுதான் பொய் என்பதன் அளவுகோல். இது நமது நாட்டுஅறிவு ஜீவிகளிடம் அதிகம் காணப்படுகிறது.

டெல்லி மாணவி கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று இவர்கள் புலம்பினார்கள். சட்டமும் நீதி மன்றமும் முடிவெடுக்கவேண்டிய விஷயத்தில் மக்களைத் தூண்டிவிட்டு அரசாங்கம் தூக்குத் தண்டைனை விதிக்க வேண்டும் என்று பேச வைத்தார்கள்.

போகக்கூடாத நேரத்தில் ஆண் நண்பருடன் நள்ளிரவில் உல்லாசமாக சுற்றிய பெண்ணாக இருந்தாலும் அவருக்கு ஏற்பட்ட அநீதிக்காக இவர்கள் குரல் கொடுத்தார்கள்.

பருவ வயது அடைந்த ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதற்காக மரண தண்டனை அளிக்க வேண்டும் என்பது இவர்களது கொள்கையாக இருந்தால், இவர்களுக்கு சிந்திக்கும் திறனும் மூளையும் மனசாட்சியும் இருந்தால் இலங்கைப் பெண் விஷயமாக எந்த நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும்?

ஒரு குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக ரிஸானாவுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி மாணவி கொல்லப்பட்டதற்கு மரணதண்டனை நியாயம் என்றால், அதைவிட ஆயிரம் மடங்கு நியாயம் நியாயம் குழந்தை கொல்லப்பட்ட வழக்கில் உள்ளது.குழந்தையின் உயிர், உயிர் இல்லையா?

சிறுமிக்கு தண்டனையா என்றும் இவர்கள் இப்போது கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் மைனர் பையனுக்கும், தூக்குத் தண்டனை கொடுக்கவேண்டும் என்றும், மைனர் வயதை 14ஆகக் குறைக்க வேண்டும் என்றும் இவர்கள்தான் கூப்பாடு போட்டார்கள். அதிகமான மாநில அரசுகளும் இதைக் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளன. இவர்கள் இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போதுதான் மைனர் என்பதன் அளவுகோலைக் கண்டுபிடித்துள்ளார்கள். ஆனால் பருவ வயதை அடைவதுதான் மேஜர் வயது என்று இஸ்லாம் அன்றே கூறிவிட்டது.

சவூதியில் அதுதான் சட்டமாக உள்ளதால் 17வயதுப் பெண் அந்தச் சட்டப்படி மேஜர் என்பதால் மைனர் என்ற அடிப்படையில் கருணை கோர முடியாது.

டெல்லி மாணவி பிரச்சினையில் மைனரை மேஜர் ஆக்கப்பார்க்கிறார்கள். சவூதி விஷயத்தில் மேஜரை மைனர் ஆக்க முயல்கிறார்கள். இவர்களது சிந்திக்கும் திறனில் கோளாறு இருக்கிறது என்பதற்கு இதுவும் சான்றாக உள்ளது.

இந்தியக் குழந்தையாக அது இல்லாததால், அதன் விபரீதம் இவர்களுக்கு விளங்கவில்லையா? மிருக புத்திரன்களாக இருக்கும் எழுத்தாளர்கள், ஜோசப் பாபா பையன்கள் மற்றும் விகடக்கச்சேரி நடத்தும் கோமாளிகள் தங்களின் குழந்தைகள் கொல்லப்பட்டிருந்தால், இதே நியாயத்தை இவர்கள் பேசுவார்களா? பறி கொடுத்தவர்களின் நிலையில் இருந்தும், பாதிக்கப்பட்டவர்களின் நிலையில் இருந்தும் இதைப்பார்ப்பதுதான் சரியான பார்வையாகும்.

அனைவருக்கும் சமநீதி என்பதுதான் நீதி செலுத்துதலில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயமாகும். டெல்லி மாணவிக்கு ஒரு நீதியும், சவூதி குழந்தைக்கு வேறு நீதியும் கேட்பது அனைவருக்கும் சமநீதி என்ற அடிப்படைக்கு எதிரானதாகும்.

அடுத்ததாக இதை தர்க்க ரீதியாக நியாயப்படுத்த அந்தப் பெண்ணானவர் குழந்தையைக் கொல்லவில்லை என்று வேறு கதை அளந்து கொண்டுள்ளனர்.

ஒருவர் குற்றவாளியா இல்லையா என்பததை பேனா பிடித்தவர்கள் முடிவு செய்ய இயலாது. எந்த நாட்டில் குற்றம் நடக்கிறதோ அந்த நாட்டின் நட்டமும் நீதிமன்றமும்தான் அதை முடிவு செய்ய இயலும்.

குழந்தை கொல்லப்பட்டபோது சாட்சிகளாகவோ அல்லது உடலைப் பரிசோதித்த மருத்துவர்களாகவோ இவர்கள் இருக்கவில்லை. விசாரணை அதிகாரிகளாகவும் இருக்கவில்லை. மேலும் வழக்கை விசாரித்த நீதிபதிகளாகவோ அல்லது நீதி மன்ற சாட்சிகளாகவோ இருக்கவில்லை. இது குறித்து முடிவு செய்யவேண்டிய ஆவணமும், ஆதாரமும், அறிவும் இவர்களிடம் இல்லாதபோது அந்தப் பெண் அப்பாவி என்று தீர்ப்பு எழுதுவதுதான் அறிவுடையவர்களின் செயலா?

லஞ்சம் ஊழலுக்கு இடமில்லாமல், நியாயமாக விசாரிக்கும் ஒரு நாட்டில் அந்த நாட்டுச் சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தால், அதுதான் குற்றவாளி என்பதற்கான ஆதாரம்.

அஜ்மல் கசாப் அப்பாவி, அவனைத் தூக்கில் போட்டது அநியாயம் என்று சவூதி அறிவு ஜீவிகள் எழுதினால், இவர்கள் அந்த அதிகாரத்தை சவூதி அறிவு ஜீவிகளுக்கு வழங்குவார்களா?

கோவை குண்டு வெடிப்பு அரசாங்கமே நடத்தியது, அதில் கைது செய்யப்பட்ட அனைவரும் அப்பாவிகள் என்று இவர்களைப்போல் கற்பனை செய்து எழுதினால், அதை மிருகபுத்திரன்களும் விகடக் கோமாளிப் பையன்களும் ஏற்றுக் கொள்வார்களா?

இவர்களுக்கு கொஞ்சமும் மூளை இல்லை, மனசாட்சியும் இல்லை, உலக அறிவும் இல்லை, சட்ட அறிவும் இல்லை என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

பெண் என்பதால் மரண தண்டனை கூடாது என்று இவர்கள் நினைத்தால் இப்போதும் இவர்கள் அறிவற்றவர்கள் என்றுதான் நிரூபித்துள்ளார்கள். ஆணும் பெண்ணும் சமம் என்று எழுதிவிட்டு குற்றம் செய்வதில்மட்டும் சமம் இல்லை என்று இவர்களது மூளை தீர்ப்பளிக்கிறது என்றால் இது மனநோயில்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்?

சவூதியில் வசிக்கும் ஒரு இந்தியக் குழந்தையை, இந்தியப் பெண் கொலை செய்தாலும், சவூதியில் இப்படித்தான் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கும். அப்போது இவர்கள் குழந்தையின் பக்கம் பேசியிருப்பார்களா அல்லது கொலை செய்தவர் பக்கம் பேசி இருப்பார்களா? நாட்டு மக்கள் அனைவரும் குழந்தையின் பக்கம்தான். நின்றிருப்பார்கள். அதை எதிர்த்து இவர்கள் வாய் திறந்தால் அடித்து உதைக்கப்படடு இருப்பார்கள்.

கோவையில் சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் இவர்கள் பேசிய நியாயம் இப்போது காணாமல் போனது ஏன்? மரண தண்டனை பெற்ற பெண் இந்து மதத்தவராக இருந்திருந்தால், இந்து என்பதற்காக மரண தண்டனை கொடுத்துவிட்டார்கள் என்று கதையை மாற்றி எழுதியிருப்பார்கள். நல்ல வேலை கொலை செய்த பெண்ணும் முஸ்லிமாக இருந்ததால் இந்தக் கதையை இவர்கள் எழுத முடியவில்லை.

கொலை செய்த பெண் இந்தியாவைச் சேர்ந்தவராக இருந்திருந்தால், இந்தியர்கள் என்ன கிள்ளுக்கீரையா என்று இந்த கூறு கெட்ட அறிவு ஜீவிகள் புலம்பித் தள்ளியிருப்பார்கள். நல்ல வேளை அப்பெண் இலங்கை வாசியாக அமைந்துவிட்டார்.

மன்னரின் குடும்பப் பெண் விபச்சாரம் செய்தபோது மரண தண்டனை அளித்த சவூதியில் அந்நிய நாட்டவர்கள் என்பதற்காக குற்றங்களில் சலுகை காட்டப்படுவது இல்லை. மற்ற விஷயங்களில் சொந்த நாட்டவர்களுக்கு சலுகை அளித்தாலும், கொலைக் குற்றத்தில் எல்லாம் சலுகை காட்டமாட்டார்கள்.

இந்தியக் குழந்தையை சவுதிக்காரன் கொன்று, அந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இதே தீர்ப்புத்தான் வழங்கப்பட்டிருக்கும்.

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் விமர்சிப்பதுதான் இவர்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது. மக்களை தூண்டிவிடக்கூடிய பிரச்சினை வராதவரை நடுநிலை வேஷம் போடுவார்கள். எதில் மக்களைத் தூண்டி விட முடியுமோ அதுபோன்ற பிரச்சினைகள் கிடைத்தால், இஸ்லாத்தை விமர்சிப்பதற்கு பயன்படுத்திக் கொள்வார்கள்.அறிவு ஜீவிகளின் இந்த இரட்டை முகம் மீண்டும் ஒரு முறை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.



navas
navas
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 291
Join date : 24/03/2010
Location : dubai and india

http://indianrailwaytimes.blogspot.com/

Back to top Go down

அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை Empty Re: அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை

Post by Tamil Fri Jan 25, 2013 2:47 pm

இஸ்லாமியனை
தீவரவாதியாய் காண்பிக்கக்கூடாதென்றால் முதலில் இஸ்லாமின் பெயரால் எந்த
தீவிரவாதியில் இருக்க விடக்கூடாது. அவனை முதலில் தலையை வெட்டட்டும்.
மதத்திற்கு அவமானம் சேர்க்கிறான் என.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை Empty Re: அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை

Post by ஜனனி Fri Jan 25, 2013 3:43 pm

தலைக்கு மேல வெள்ளம் சென்றபின் ஜான் என்ன முலம் என்ன !!
விஸ்வரூபம் படத்தை பற்றிய எனது நிலை ..
இன்று நீதிபதி திரைப்படத்தை பார்த்து 28 முடிவுசொல்கிறார்

எப்படியோ படமும் வந்துவிட்டது திருட்டு VCD - இல் .. உங்கள் போராட்டம் வென்றதா ??
எப்படியோ படமும் வந்துவிட்டது திருட்டு VCD - இல் .. உங்களால் போட்ட பணத்தை எடுக்க முடியுமா ??

லாபம் அடைந்தவர்கள் :
1. மீடியா
2. அரசியல்வாதிகள் (மதவாதிகள்)
3. திருட்டு VCD விற்பனையாளர்கள்

நஷ்டம் அடைந்தவர்கள்
1. கமல்
2. போராட்டம் நடத்திய சகோதரர்கள்

குறிப்பு : திருட்டு VCD க்காக படம் பதிவு செய்தவரும் அதை ஏற்றம் செய்த கும்பலில் முஸ்லீம் சகோதரர்கள் உள்ளனர்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை Empty Re: அண்மை செய்தி:விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காவிரி: கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக அரசு முடிவு
» அரசு பணிக்கு எந்த பட்டங்கள் சமமான படிப்புகளாக கருதப்படும்?: தமிழக அரசு அறிவிப்பு
» தமிழக அரசு மனு!கர்நாடகா 10 டிஎம்சி நீர் தரக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்.
» கர்நாடக அரசு 48 டி.எம்.சி. தண்ணீரை திறக்க வேண்டும்: தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு
» தமிழக அரசு கேட்ட நிதியில் மத்திய அரசு இதுவரை 1 ரூபாய்கூட ஒதுக்கவில்லை : முதல்வர் ஜெயலலிதா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum