TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பான்கீமூனின் சீற்றத்தின் பின்னணி

Go down

பான்கீமூனின் சீற்றத்தின் பின்னணி Empty பான்கீமூனின் சீற்றத்தின் பின்னணி

Post by அருள் Thu Mar 11, 2010 9:46 pm

பான்கீமூனின் சீற்றத்தின் பின்னணி


இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து தாம் கடந்த வருடம் வெளியிட்ட
கூட்டறிக்கையில் தெரி விக்கப்பட்டிருந்த விடயங்களில் முன்னேற்றம் ஏற்படா
தமை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கவலை
வெளியிட்டிருக்கின்றார்.
அவரது இந்த அறிவிப்பு கொழும்புக்கும் ஐ.நா.செயலா ளர் நாயகத்துக்கும்
இடையில் முறுகலும், உரசலும் தீவிர மடையத் தொடங்கியுள்ளன என்பதையே
கோடிகாட்டு கின்றது.
இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத் தில் இடம்பெற்றவை எனக்
கருதப்படும் மனித உரிமை மீறல்கள், சர்வதேச யுத்தக் குற்றங்கள் போன்றவை
குறித்து விசாரணை நடத்தப்படுவதற்கும்
அவற்றுக்குப் பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கும்
தவறிழைத்தோரை உரிய முறையில் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிப்பதற்கும்
உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது தான் இந்த முறுகல் நிலைக்கு
உரசல் போக்குக்கு பிர தான மூலகாரணம். அது வெளிப்படையாகப் பேசப்படா
விட்டாலும் இந்தப் பிணக்கின் பின்புலம் அதுதான் என்பது எல்லோருக்கும்
தெரிந்த அம்சம்தான்.
இத்தகைய யுத்த காலச் சம்பவங்கள் குறித்து உரிய நட வடிக்கைகள் எடுக்கப்பட
வேண்டும் என்று இப்போது ஆலாய்ப் பறந்து, மெழுகாய் உருகும் ஐ.நா. செயலாளர்
நாயகம் பான் கீ மூனுக்கு, இந்தத் தீவிர நிலைப்பாடு இப்படித் திடீரென
வந்திருப்பது அப்படி ஒன்றும் ஆச்சரியப் படத்தக்க விடயமன்று.
"சோழியன் குடுமி சும்மா ஆடாது' என்பார்கள். அது போல இலங்கை விவகாரத்தில்
ஐ.நா. செயலாளர் நாயகத் தின் இத்தகைய திடீர் ஆவேசப் போக்குக்கும் காரணம்
இல் லாமல் இல்லை.
இலங்கையில் யுத்தம் மிகத் தீவிரமடைந்திருந்த காலகட்டத்தில் கடந்த ஆண்டின்
முற்பகுதியில் இப்படி யெல்லாம் அராஜகம் அரங்கேறுகின்றது, அட்டூழியம் நடக்
கின்றது, படுகொலை அத்துமீறல் கணக்கு வழக்கின்றி இடம்பெறுகின்றது
என்றெல்லாம் சுட்டிக்காட்டப்பட்டே வந்தது. இலங்கையில் இருந்த
ஐ.நா.அலுவலகமும், அதன் பேச்சாளரும் கூட இவற்றை உரிய முறையில் ஐ.நா. தலை
மைச் செயலகத்துக்குத் தெரியப்படுத்தத் தவறவில்லை என்பது மறைக்கப்பட்ட
விவகாரம் அல்ல.
அந்தச் சமயத்திலும் அதன் தொடர்ச்சியாக வந்த காலகட்டத்திலும் விரைந்து
காத்திரமான பதில் நடவடிக் கைகளை ஐ.நா.செயலாளர் நாயகம் எடுப்பார் என இலங்
கைத் தமிழர்களும், புலம் பெயர் தமிழர்களும், சர்வதேச உலகத்தவர்களும்
எதிர்பார்த்தனர்.
ஆனால் அந்த எதிர்பார்ப்பை எல்லாம் பொய்யாக்கி, பொறுப்பின்றி நடந்துகொண்டார் செயலாளர் நாயகம்.
உலக நாடுகளின் பொதுமன்றமான ஐ.நாவிடமிருந்து நீதியும், நியாயமும்
கிடைக்கும் என்று எதிர்பார்த்த தமிழர் கள் கடைசியில் ஏமாந்துதான்
போனார்கள்.
இலங்கை அரசுத் தரப்பின் தீவிர இராணுவ வெறிப் போக் குக்கு அங்கீகாரம்
அளிக்கும் வகையில் அந்த ஆட்சிப் பீடத் துடன் தோளில் கைபோட்டுக் குசலம்
விசாரிக்கும் வகை யில் ஐ.நா. செயலாளர் அப்போது நடந்துகொண்டாரே தவிர,
இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை உலக மன்றத் தின் சார்பில் நீதியை,
மனுக்குலத்தின் தர்மத்தை நிலை நிறுத்துபவராக அவர் செயற்படவில்லை.
சரி. இப்போதாவது பழையவற்றைக் கிளறி எடுத்துக் கொண்டு நியாயம் கற்பிக்க
முயல்பவராக அவர் உருமாற் றம் கொண்டிருக்கின்றார் என்பது வரவேற்கத்தக்கதே.
ஆனாலும் அதற்கும் கூட அவரின் உள்நோக்கமும் சுயநல மும்தான் காரணம் என்பது
விசனத்துக்குரிய உண்மையாகும்.
2007 ஜனவரியில் ஐ.நா. செயலாளர் நாயகம் பதவிக்கு வந்த பான் கீ மூனின்
இந்தப் பதவிக்காலம் அடுத்த ஆண்டு டிசம்பரில் முடிவடைகிறது. அடுத்த
பதவிக்கு ஆள் தேடும் படலம் இந்த ஆண்டு நடுப்பகுதியில் ஆரம்பமா கும் என
எதிர்பார்க்கப்படுகின்றது.
வழமையாக ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு வருப வர் ஒவ்வொன்றும் ஐந்து
ஆண்டுகளைக் கொண்ட இரண்டு பதவிக்காலத்துக்கு அதாவது பத்து வருடங்களுக்கு
பதவியில் நீடிப்பது வழமை.
பான் கீ மூனுக்கு முன்னர் பதவியில் இருந்த கோபி அனான் (கானா), ஜாவீர்
பேர்ஸி டி கியூலர் (பெரு), கூர்ட் வால்ட்ஹெய்ம் (ஆஸ்திரியா), ஊதாண்ட்
(பர்மா), டாக் ஹமர்ஸ்க் யோல்ட் (சுவீடன்) போன்றோர் இரண்டு பதவிக் காலங்களை
அலங்கரித்தார்கள்.
ஆனால் பூட்ரஸ் பூட்ரஸ் காலி (எகிப்து), டிரிஜ்வி லீ (நோர்வே) ஆகியோர் ஒரே ஒரு பதவிக் காலத்துக்கு மட் டும் பதவியில் இருந்தனர்.
பான் கீ மூனுக்கும் அடுத்த பதவிக் காலத்தையும் கைப்பற்றும் ஆசை
வந்துவிட்டது. அதனால்தான் இலங்கை விடயத்தில் அவர் இத்தனை சீற்றம்
காட்டுகின்றார் எனத் தோன்றுகின்றது.
இந்தப் பதவியில் அடுத்த தடவையும் அவர் தொடர்வ தானால் அமெரிக்கா, பிரிட்டன்
மற்றும் ஐரோப்பிய ஒன்றி யம் போன்ற மேற்குலகின் ஆதரவுப் பின்புலம் அவருக்கு
அவசியம். அது இல்லாமல், பதவியில் தொடரும் அவரது கனவு பலிக்காது.
சர்வதேச விவகாரங்கள் தொடர்பான சர்ச்சைகளில் மேற்குலகு எடுக்கும்
நிலைப்பாட்டை வலிமையாக ஆத ரிப்பதன் மூலம் மேற்குலகின் ஆதரவைத் தாம்
தக்கவைத்து, அடுத்த தடவைக்கும் பதவிக்கு வரலாம் எனக் கணக்கிடு கின்றார்
அவர்.
இலங்கை விடயத்தில் இலங்கை அரசுக்கு எதிராக மேற் குலகு
சீறிக்கொண்டிருக்கின்றது. கிழக்கு நாடுகளின் செல் வாக்கைப் பயன்படுத்தி
அதனை முறியடிப்பதில் மஹிந்த ரின் ஆட்சி தீவிரமாக இருப்பதும் வெளிப்படை.
இந்தப் பின்னணியிலேயே மேற்குலகு இப்போது சீற்ற முடன் கையாளும் இலங்கை
விகாரத்தைத் தமது கையில் எடுத்துக்கொண்டு துள்ளிக் குதிக்கிறார் பான் கீ
மூன். அவரின் குடுமி சும்மா ஆடவில்லை.......!

நன்றி - உதயன்இணையம்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum