Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கோப்புகள் அழிப்பு: அ.தி.மு.க., புகார் பின்னணி
Page 1 of 1

தேர்தல் முடிவுக்கு முன், அனைத்து துறை அலுவலகங் களையும், புதிய
தலைமைச் செயலகத்திற்கு மாற்றிவிட வேண்டுமென்ற நோக்கோடு, தி.மு.க.,வின்
செயல்பாடு அமைந்துள்ளது. இதைத் தடுக்கும் வகையில், தேர்தல் கமிஷனில்
அ.தி.மு.க., புகார் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில்,
அ.தி.மு.க., - தி.மு.க., இடையே யான, "ஈகோ' பிரச்னையில் புதிய தலைமைச்
செயலகம் சிக்கித் தவிக்கிறது.
முதல்வர் கருணாநிதியின் சட்டசபை பொன்விழா நடந்த போது, புதிய தலைமைச்
செயலகம், "ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்படும்' என
அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஓராண்டுக்குள்ளாகவே புதிய சட்டசபை வளாகம்
கட்டப்பட்டது. மேற்கூரை, "டூம்' தயாராகாததால், கலை இயக்குனரை கொண்டு
இரண்டரை கோடி ரூபாயில், அவசரமாக, "செட்- அப் டூம்' வடிவமைக்கப்பட்டது.
இதன்பின், சட்டசபை முழுமையாக தயாராகமலேயே, திரைசீலை போட்டு மூடப்பட்டு,
பிரதமர், சோனியா ஆகியோரைக் கொண்டு திறக்கப்பட்டு, சட்டசபையின் பட்ஜெட்
கூட்டத் தொடரும் நடந்த பின், மூடப்பட்டு, சட்டசபை வளாகம் அமைக்கும் பணி,
அடுத்த கூட்டத் தொடர் வரை மேற்கொள்ளப்பட்டது. அதுவும், அவசர அவசரமாக
முடிக்கப்பட்டு, கூட்டத் தொடர் நடத்தப்பட்டது. ஆனால், புதிய சட்டசபை
துவக்கப்பட்ட பின், ஒரு நாள் கூட எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா சபைக்கு
வரவில்லை. அதேபோல, சட்டசபையில் பேசிய அ.தி.மு.க.,வினரும், "இது சர்க்கஸ்
கூடாரம் போல உள்ளது' என, கிண்டல் செய்தனர்.
இந்நிலையில், பழைய சட்டசபை அவசரமாக, மத்திய செம்மொழி ஆராய்ச்சி
நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த இடத்தில், செம்மொழி நூலகம்
அமைக்கப்பட்டது. இதற்காக, அங்கிருந்து இருக்கைகள் மற்றும் அனைத்து
வசதிகளும் அகற்றப்பட்டு, அடுத்து வேறு எந்த அரசு அமைந்தாலும் உடனடியாக அதை
தயார் செய்ய முடியாத அளவுக்கு, மாற்றங்கள் செய்யப்பட்டன. அடுத்ததாக, இந்த
ஆண்டு ஜனவரியில் தேர்தல் நெருங்கும் வேளையில், முதல்வர், துணை முதல்வர்
மற்றும் அமைச்சர்களது அலுவலகங்கள் அவசரமாக தயார் செய்யப்பட்டு, புதிய
தலைமைச் செயலகத்துக்கு மாற்றப்பட்டன. இதனால், பழைய தலைமைச் செயலகத்தில்
இருந்த அமைச்சர்களது அலுவலகங்களில் அனைத்து வசதிகளும் அகற்றப்பட்டு, அவை
பூட்டப்பட்டன. இதன்பின், இந்த சட்டசபையின் கடைசி கூட்டத் தொடரும்
முடிந்தது. அந்த சமயத்தில், சட்டசபை செயலகம் மட்டுமே, புதிய வளாகத்துக்கு
மாற்றப்பட்டு இருந்தது. ஆனால், தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின், ஒவ்வொரு
துறைக்கான அலுவலகம் தயாரானதும், அந்த அலுவலகம் புதிய தலைமைச்
செயலகத்துக்கு மாற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக, முதல்வர் மற்றும் துணை
முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள துறைகள், இங்கு மாற்றப்பட்டு
வருகின்றன.
இவ்வளவும் அடுத்தடுத்து நடப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
அடுத்து, ஒருவேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், முதல்வர் கருணாநிதி
மேற்பார்வையில் கட்டப்பட்ட இந்த தலைமைச் செயலகத்தில் தான் அது செயல்பட
வேண்டுமென தி.மு.க., விரும்புகிறது. இதன் மூலம் சரித்திரத்தில் முதல்வர்
பெயர் இடம்பெற வேண்டுமென்பது ஆளுங்கட்சியின் கருத்தாக உள்ளது. இதற்காகவே,
ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக இக்கட்டடத்துக்கு செலவிடப்பட்டுள்ளது.
இதுவே, கோட்டையில் இருந்து துறைகளை அவசரமாக புதிய வளாகத்துக்கு
மாற்றுவதற்கான காரணமாக கூறப்படுகிறது. ஆனால், அ.தி.மு.க., தரப்போ,
கருணாநிதிக்கு பெயர் பெற்றுத் தரும் இந்த புதிய வளாகத்தில் இயங்குவதை
விரும்பவில்லை. சட்டசபை கூட்டத் தொடரின் கடைசி நாளில் பேசிய,
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், "அடுத்து அம்மா தலைமையில்
கோட்டையில் அ.தி.மு.க., ஆட்சியமைக்கும்' என்றார். தற்போது
கோட்டையிலிருந்து துறைகள் அவசரமாக மாற்றப்படுவதை தடுக்க வேண்டும்
என்பதற்காக, கோப்புகளை அழிக்க முயற்சிகள் நடப்பதாக தேர்தல் கமிஷனிடம்
அ.தி.மு.க., தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதை கண்டித்து, முதல்வர்
கருணாநிதி சார்பில், அவதூறு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. உண்மையில்,
கோப்புகளை மாற்றுவதற்கு, அ.தி.மு.க., கவலை கொள்ளவில்லை. முக்கிய துறைகள்
மாற்றப்பட்டால், அடுத்து, அ.தி.மு.க., ஆட்சி அமையும் பட்சத்தில், புதிய
வளாகத்தில் இருந்து செயல்பட வேண்டியிருக்கும். அதை தடுத்தாக வேண்டும்
என்பதே அவர்களது நோக்கமாக உள்ளது. எது எப்படி இருந்தாலும், ஆயிரம் கோடி
ரூபாய்க்கு மேல் செலவு செய்து கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம், இரண்டு
கட்சிகளின், "ஈகோ' பிரச்னையில் சிக்கி தவிக்கிறது.
கடந்த ஆட்சியில், எதிர்க்கட்சி வரிசையில் கருணாநிதி இருந்த போது, புதிய
தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை முதல்வராக இருந்த ஜெயலலிதா
அறிவித்தார். அது பற்றி கருத்து தெரிவித்த கருணாநிதி, "நன்றாக கட்டட்டும்;
அடுத்து நாங்கள் ஆட்சிக்கு வந்து அதில் ஜம்மென்று அமர்ந்து கொள்வோம்'
என்றார். அதுபோல, ஜெயலலிதாவும், "புதிய தலைமைச் செயலகத்தில் வந்து
அமருவோம்' என்று ஒரு வார்த்தை தெரிவித்து இருந்தால், இந்த அளவுக்கு
துறைகளை மாற்றுவதில் வேகம் காட்டப்பட்டிருக்காது என்கிறது அதிகாரிகள்
வட்டாரம்.

அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» மவுண்ட்பேட்டன் காலத்து பைல்கள் சிக்கின: நரேந்திர மோடி உத்தரவால் 1½ லட்சம் கோப்புகள் அழிப்பு ...
» டுவிட்டரில் ஆபாசப் படங்கள்: பின்னணி பாடகி சின்மயி பரபரப்பு புகார்
» பென்டிரைவில் கோப்புகள் எல்லாம் ஐகானாக மாறிவிட்டிருந்தால்...
» இணைய இணைப்பின்றி கூகுள் ட்ரைவ் கோப்புகள்
» நிலக்கரி ஊழல் சம்மந்தப்பட்ட கோப்புகள் ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு குப்பைத்தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்டது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum