TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


உலகில் அதி உயர்ந்த மலைச் சிகரம் எவரெஸ்ட்டா? உண்மை என்ன?

2 posters

Go down

 உலகில் அதி உயர்ந்த மலைச் சிகரம் எவரெஸ்ட்டா?  உண்மை என்ன? Empty உலகில் அதி உயர்ந்த மலைச் சிகரம் எவரெஸ்ட்டா? உண்மை என்ன?

Post by sakthy Mon Oct 08, 2012 3:29 pm

உலகில் அதி உயர்ந்த மலைச் சிகரம் எவரெஸ்ட்டா? உண்மை என்ன?

உங்களிடம் இருந்து உடன் வரும் பதில், எவெரெஸ்ட் என்பது தான்.இது உண்மையா? நாம் மூளைக்கு எப்பொதும் வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.நான் ஐந்து நாள் மருத்துவராகவும்,ஆறாவது நாளில் கணினியில் மேற்படிப்பையும் தொடருகிறேன்.படிப்பதற்கு எந்தத் தகுதியோ வயதோ குறுக்கே நிற்காது,நிற்கவும் கூடாது.அத்துடன் விரல் நுணியில் வரக் கூடியதாக பொதுஅறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.அது போல் நீங்களும் படியுங்கள்.இல்லையேல் மூளை துருப்பிடித்து விடும்.

செவ்வாய் கிரகத்தில் இருந்து ஒரு வேற்றுக் கிரகவாசி வருகிறார். கடற்கரையில் வந்திறங்கிய அவர் கடலைப் பார்க்கிறார். அங்கே அவர் என்றுமே பார்த்திராத உருவம் ஒன்று,அதாவது நம் மொழியில் மனிதன் ஒருவன் குழித்துக் கொண்டிருக்கிறான். கடலில் தண்ணீர் மட்டத்திற்கு மேல் மனிதனின் அரை உடல்,அதாவது இடுப்பிற்கு மேலே தலை வரை தெரிகிறது. அந்தக் கிரகவாசி என்ன நினைத்தார் தெரியுமா? அந்த பூமி மனிதனின் உயரம், தண்ணீர் மட்டத்தில் இருந்து மேலே தெரிவது தான் என எண்ணி, அவர்களின் அளவில் கணக்குப் போட்டு, அதுதான் அந்த மனிதனின் உயரம் என்று நினைத்துக் கொண்டார்.தண்ணீருக்கு கீழே உடல் இல்லை என்பதும், அவன் தண்ணீரில் மிதந்து கொண்டு இருக்கிறான் என்றும் நினைத்தார்.

அப்போது இன்னொரு மனிதன் அங்கே வருகிறான்.அந்த வேற்றுக் கிரகவாசி கடலில் குழித்துக் கொண்டிருந்த மனிதனையும்,பக்கத்தில் நின்ற மனிதனையும் மாறி மாறி பார்க்கிறார்.ஆகா(அவர்கள் மொழியில்) தண்ணீர் மட்டத்திற்கு கீழேயும் மனிதனின் உடல் உண்டா என்று அதிசயித்த அந்தக் வேற்றுக் இரகவாசி, கடலை திரும்பிப் பார்த்த போது, குழித்துக் கொண்டிருந்த மனிதன் வெளியே வருகிறான். இப்போது உண்மையைப் புரிந்து கொண்டான்.அதாவது அந்த மனிதனின் உயரம் தண்ணீர் மட்டத்திற்கு மேலே உள்ள பகுதி மட்டுமல்ல, தண்ணீருக்கு கீழே உள்ள பகுதியும் சேர்ந்தது தான் என்று.இப்போது தன் அளவுக் கணக்கை மாற்றிப் போட்டுக் கொள்கிறார்.

இப்போது எவரெஸ்ட் சிகரத்திற்கு வருவோம்.எவரெஸ்ட் மலைச் சிகரம் கடல் மட்டத்தில் இருந்து 29,029 அடிகள்(8,848 மீற்றர்கள்)உயரமுடையது..ஆனாலும் இந்த உயரத்தில் இப்போதும் கூட சர்ச்சைகள் உண்டு.நேபாளம் 8848 மீ.என்றும்,சீனா 8844 மீ என்றும்,அமெரிக்கா 8850 மீ.என்றும் கூறி வருகின்றன. இந்த சிகரத்தை 1953 மே 29 ல் எட்மண்ட் கிலாரி என்ற நியுசீலந்துக்காரரும்,நேபாளத்தை சேர்ந்த டென்சிங்க் என்பவரும் முதன் முதலில் ஏறிக் கொடி ஏற்றினார்கள்.முதலில் பெயர் பிரச்சனையும் சேர்ந்து கொண்டாலும்,1830-1843 வரை இந்திய நாட்டில் சர்வேயராக இருந்த, வெல்ஷ் நாட்டவரான Colonel Sir George Everest என்பவரை நினைவூட்டும் வகையில், அவர் பெயரை, Peak XV என்ற பகுதிக்கு எவரெஸ்ட் என வைத்தார்கள்.

19 மே மாதம் 2012, ல் ஜப்பானை சேர்ந்தTamae Watanabe என்ற 73 வயதுப் பெண் எவரெஸ்ட் ஏறி சாதனை புரிந்தார்.இருப்பினும் முதலில் ஏறிய பெண் என்றால்,16 மே 1975 ல் ஏறிய ஜப்பானை சேர்ந்த Junko Tabei என்பவர் தான். அது போல் நேபாளத்தை சேர்ந்த 76 வயதானMin Bahadur Sherchan, என்பவர் 25 மே 2008 ல் ஏறி சாதனை புரிந்தார்.ஆனாலும் போட்டோரிக்கோ வை சேர்ந்த 60 வயதான Julio Bird என்பவர் தான் தீபெத்,நேபாள் இரு பக்கத்தாலும் ஏறி சாதனை புரிந்தவராவர்.இவர் 2010 மே 17 ல் வட பகுதியில் இருந்து ஏறினார்.இதே சமயம் 13 வயதான Jordan Romero என்பவர் 2010 மே யில் தீபெத் பகுதி ஊடாக ஏறிய, வயதில் குறைந்த நபராவர்.

இந்த எவரெஸ்ட்டின் உயரத்தை,அதாவது மலைகள்,நிலங்களையும் கடல் மட்டத்தில் இருந்தே அளக்கின்றனர். எவரெஸ்ட் நிலப் பகுதியின் நடுவே அமைந்துள்ளது என்பது உங்களுக்கு தெரிந்ததே. அதனால் நிலத்திற்கு கீழே என்று எதுவும் சொல்ல முடியாது.எனவே கடல் மட்டத்தில் இருந்து அளக்கப்பட்டது சரியாகவே உள்ளது.

வேற்றுக் கிரகவாசி அளந்தது போல் கடல் தண்ணீர் மட்டத்தில் இருந்து அளந்தால், மனிதனின் உயரம்,அவனின் உண்மையான உயரத்தின் அரைவாசியே ஆகும். அந்த மனிதனின் உயரம், தண்ணீர் மட்டத்திற்கு மேலே ஒரு பகுதியும்,தண்ணீர் மட்டத்திற்கு கீழே ஒரு பகுதியையும் சேர்த்துக் கணக்கிடல் வேண்டியதாகிறது.அப்படிக் கணக்கிடும் போது தான், அவனின் உண்மையான உயரம் நமக்கு கிடைக்கும். இதை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.செவ்வாய் கிரகவாசி ஏற்கனவே ஏற்றுக் கொண்டு விட்டான்.

எவரெஸ்ட்டின் உயரம் 8848 மீ என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதே நேரம் இன்னொரு மலை ஹவாய் தீவொன்றில் உள்ளது. அதன் பெயர் Mauna Kea என்பதாகும்.இதன் உச்சியில் இருந்து 4600 ஆண்டுகளுக்கு முன்னர் எரிமலை ஒன்று வெடித்தது. இதன் உயரம் எவரெஸ்ட்டைப் போல் கணக்கிடும் போது,கடல் மட்டத்தில் இருந்து 13,799 அடிகள்(4,206 மீற்றர்கள்) தான். கடல் மட்டக் கணக்கை செவ்வாய் கிரகவாசி போல் பார்த்தால், எவரெஸ்ட் சிகரம் தான் உயரமுடையது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் மௌன கியா என்ற மலையின் முழு உயரம் 33,465 அடிகள் (10,200 மீற்றர்) .அதாவது கடல் மட்டத்திற்கு கீழே உள்ள பகுதியையும் சேர்த்து அளந்தால் வருவது, இந்த உயரம்.கடலுக்குள் ஆழ்ந்த நம் தமிழ் நகரங்கள் போல்,இந்த மலையும் கடலுக்கு அடியில் நிமிர்ந்து நிற்கிறது. இப்போது சொல்லுங்கள்,8848 மீற்றரா அல்லது 10.200 மீற்றரா ,இதில் எது உயரம் கூடியது?

மனிதனின் உயரத்தை கடலுக்கு கீழே உள்ள, இடுப்பில் இருந்து கால் வரை உள்ள பகுதியையும் சேர்த்து அளக்க வேண்டுமா? இல்லை தண்ணீர் மட்டத்தில் இருந்து அளக்க வேண்டுமா?

எவரெஸ்ட்டிற்கு கடல் மட்டத்திற்கு கீழே எந்தப் பகுதியும் கிடையாது.Mauna Kea ற்கு கடல் மட்டத்திற்கு மேலேயும் கீழேயும் இரு பகுதிகள் உண்டு. எது உயரமானது?

ஆனாலும்,பொதுவாக உலகத்தின் சட்டங்கள்,விதிகளை நாம் ஏற்று மதித்து நடக்க வேண்டி உள்ளதால்,கடல் மட்டத்தில் இருந்து அளப்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இன்னொரு கேள்வியும் உண்டு. அதாவது, எவரெஸ்ட் இமயமலைக் கூட்டத்திற்குள் இருக்கிறது.இதன்படி அந்த மலைக் கூட்டத்தின் நெருக்கத்தால்,வருடத்திற்கு கால் அங்குலம் வளர்ச்சி அடையும். இப்படிப் பார்த்தால் பல ஆயிரம் வருடங்களில் இந்த எவரெஸ்ட் சிகரம், அரசியல்வாதிகளைப் போல்,ஊழல்வாதிகளைப் போல் மற்றவர்களின் பணத்தினால் தங்கள் சொத்துக்களை சேர்த்து அதிகரிப்பது போல்,மற்ற மலைகளின் நெருக்கத்தால் எவ்வளவு உயரம் வளர்ந்தது?

சக்தி.


avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

 உலகில் அதி உயர்ந்த மலைச் சிகரம் எவரெஸ்ட்டா?  உண்மை என்ன? Empty Re: உலகில் அதி உயர்ந்த மலைச் சிகரம் எவரெஸ்ட்டா? உண்மை என்ன?

Post by அருள் Mon Oct 08, 2012 3:33 pm

 உலகில் அதி உயர்ந்த மலைச் சிகரம் எவரெஸ்ட்டா?  உண்மை என்ன? 254248  உலகில் அதி உயர்ந்த மலைச் சிகரம் எவரெஸ்ட்டா?  உண்மை என்ன? 254248  உலகில் அதி உயர்ந்த மலைச் சிகரம் எவரெஸ்ட்டா?  உண்மை என்ன? 254248
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum