Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ஓய்வூதியத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி
Page 1 of 1
ஓய்வூதியத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி
- பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக,
மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. மேலும், காப்பீட்டுத் துறையில்
அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் வியாழக்கிழமை
நடைபெற்றது. இதில், ஓய்வூதிய நிதித் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை
முதன்முறையாக அனுமதிப்பதற்கு வகை செய்யும் பிஎஃப்ஆர்டிஏ சட்டத் திருத்த
மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
பிஎஃப்ஆர்டிஏ சட்டத் திருத்த மசோதா கடந்த ஆண்டு மார்ச் மாதம்
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நிதித் துறைக்கான
நாடாளுமன்ற நிலைக்குழு தனது பரிந்துரையை கடந்த ஆண்டு செப்டம்பரில்
வழங்கியது. அதன் முக்கியமான 5 பரிந்துரைகளும் ஏற்கப்பட்டுள்ளதாக
நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஓய்வூதிய நிதியில் ஒரு பகுதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யவும்
இந்த மசோதா வகை செய்கிறது. இதுகுறித்து, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்
தொடரில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
""காப்பீட்டுத் துறையில் 49 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிப்பதற்கான
சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறும்போது, ஓய்வூதியத்
துறையிலும் 49 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க வகை செய்யும்
மசோதாவும் நிறைவேறும்'' என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்
தெரிவித்துள்ளார்.
காப்பீட்டுத் துறையில் உச்சவரம்பு அதிகரிப்பு: காப்பீட்டுத் துறையில்
இப்போது 26 சதவீதமாக உள்ள அன்னிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாக
உயர்த்துவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
இதுகுறித்து, மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் செய்தியாளர்களிடம்
கூறுகையில், ""தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கு முதலீடு தேவைப்படுகிறது.
இந்நிலையில், காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீடு 49 சதவீதமாக
அதிகரிக்கப்பட்டுள்ளதன் மூலம் அந்த நிறுவனங்கள் பயனடையும். அதேநேரம், இந்த
முடிவு பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களை எந்த விதத்திலும் பாதிக்காது''
என்றார்.
காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிப்பதற்கு மத்திய
அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதையடுத்து, இது தொடர்பான காப்பீட்டு சட்டத்
திருத்த மசோதா வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல்
செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான மசோதா ஏற்கெனவே, 2008 டிசம்பர் மாதம் மாநிலங்களவையில்
தாக்கல் செய்யப்பட்டது. எனினும், பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா
தலைமையிலான நிதித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அன்னிய முதலீட்டை
அதிகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த மசோதாவை இதே நிலையில் நிறைவேற்றினால் எதிர்பார்க்கும் பலன்
கிடைக்காது என்றும், சில திருத்தங்களை செய்ய வேண்டும் அக்குழு தனது
அறிக்கையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி ஆணைய (ஐஆர்டிஏ) சட்டம்
1999-ன்படி, மத்திய அரசு கடந்த 2000 ஆம் ஆண்டு காப்பீட்டுத் துறையில்
முதன்முதலாக தனியார் துறைக்கு அனுமதி வழங்கியது. இந்த சட்டத்தின்படி,
இப்போது இத்துறையில் 26 சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது.
இந்நிலையில், அன்னிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என
இத்துறையினர் நீண்டகாலமாக கோரி வருகின்றனர். இதற்கு ஐஆர்டிஏ தலைவர் ஹரி
நாராயணும் ஆதரவு தெரிவித்திருந்தார். எனினும், இடதுசாரிகள் மற்றும்
திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக தாமதமாகி
வந்தது.
இப்போது திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஐக்கிய முற்போக்குக்
கூட்டணியிலிருந்து விலகியதையடுத்து, காப்பீட்டுத் துறையில் அன்னிய
முதலீட்டை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
மேலும், 12-வது ஐந்தாண்டு திட்ட வரைவுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வழங்கியது. இதன்படி, அடுத்த ஐந்தாண்டுகளில் சராசரி பொருளாதார வளர்ச்சி
இலக்கு 8.2 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் தலைமையிலான
திட்டக்குழு ஏற்கெனவே ஒப்புதல் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய சீர்திருத்தங்கள் அனுமதி
காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டு வரம்பு 26% லிருந்து 49% ஆக உயர்வு
ஓய்வூதியத் துறையில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி
முன்பேர வர்த்தக ஒப்பந்தச் சட்ட அனுமதி மூலம் முன்பேர வர்த்தகச் சந்தைகளுக்கு கூடுதல் அதிகாரம்
லக்னௌ, வாராணசி, திருச்சி, மங்களூர், கோவையில் சர்வதேச விமான நிலையம் கட்ட அனுமதி
12-வது ஐந்தாண்டு (2012}2017) திட்ட வரைவுக்கு அனுமதி, ஆண்டு பொருளாதார வளர்ச்சி 8.2% எட்ட இலக்கு
ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» அன்னிய முதலீட்டுக்கு கருணாநிதி ஆதரவு
» ஆட்சிக்கு வந்தால் அன்னிய நேரடி முதலீடு கைவிடப்படும்: பா.ஜ.க.
» சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடு திட்டம் நிறுத்திவைப்பு !
» சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தால் அ.தி.மு.க. எதிர்த்து வாக்கு அளிக்கும் ஜெயலலிதா அறிவிப்பு
» ஆகஸ்ட் 15 முதல் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு
» ஆட்சிக்கு வந்தால் அன்னிய நேரடி முதலீடு கைவிடப்படும்: பா.ஜ.க.
» சில்லரை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடு திட்டம் நிறுத்திவைப்பு !
» சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தால் அ.தி.மு.க. எதிர்த்து வாக்கு அளிக்கும் ஜெயலலிதா அறிவிப்பு
» ஆகஸ்ட் 15 முதல் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum