TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:28 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 1:15 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Sep 14, 2024 1:52 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


முஸ்லிம்களின் அப்பாவித்தனங்கள் படமும், முஸ்லிம்களின் போராட்டமும். உண்மை என்ன?

2 posters

Go down

முஸ்லிம்களின் அப்பாவித்தனங்கள் படமும், முஸ்லிம்களின் போராட்டமும். உண்மை என்ன? Empty முஸ்லிம்களின் அப்பாவித்தனங்கள் படமும், முஸ்லிம்களின் போராட்டமும். உண்மை என்ன?

Post by sakthy Thu Sep 20, 2012 6:42 pm

முஸ்லிம்களின் அப்பாவித்தனங்கள் படமும், முஸ்லிம்களின் போராட்டமும். உண்மை என்ன?

அமெரிக்க தூதரகம் லிபியாவில் தாக்கப்பட்ட சம்பவம் நடந்த தினம்,செப்டெம்பர் 11,அதை நினைவு படுத்தி ஒரு அமெரிக்க வெறுப்பை ஏற்படுத்த முன்னரே திட்டமிட்ட ஒரு போராட்டமே இது என்று தெரிய வந்துள்ளது. லிபியாவில் முதலில் தொடங்கியது ஏன் என்ற கேள்விக்கு , லிபியாவில் முக்கிய முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி எதிர்பாராத வகையில் படு தோல்வி அடைந்ததும்,அமெரிக்க ஆதரவு முஸ்தாபா அபுசாகர் தலைமையிலானNFF கட்சி வெற்றி பெற்றதும், அமெரிக்காவுக்கான ஆதரவு உச்ச நிலையில் இருந்ததும் கண்ணில் குத்தவே,இந்தப் போராட்டம் அல் கைதா ஆதரவு அமைப்புக்களுடன் சேர்ந்து திட்டமிட்டு செய்யப்பட்டது என்கிறார்கள். இதை அறியாத உலகின் பல நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் கண்களை மூடிக் கொண்டு நபிகள் மீதான அவதூறு என கோசமிட்டு தவறான செயல்களை தொடங்கின. ஆனாலும்...................

இந்த 75 நிமிடப் படத்தை இயக்கிய நகுலா பசலி,சாம் பசிலி ,(Allan Roberts) என்பவர் அமெரிக்கக் குடியுரிமைப் பெற்ற எகிப்திய கிறித்தவர் ஆவார். பல முறை வங்கி மோசடி, வங்கி திவால், போதைப் பொருள் கடத்தல் போன்ற பல்வேறு குற்றங்களுக்காக, 2010ல் 21 மாதங்கள் சிறையில் இருந்தவர்.அத்துடன் 5 வருடங்களுக்கு இணையத்திற்கு செல்ல தடையும் விதிக்கப்பட்டார்.முதலில் பின்லாடனின் அப்பாவித்தனங்கள் என்ற பெயரில் தயாரித்துப் பின்னர் முஸ்லிம்களின் அப்பாவித்தனங்கள், Innocence of Muslims, என மாற்றி வெளியிட்டார்.இந்தப் படம் ஹாலிவோட்டில் வைன் அரங்கில் ஜூன் 23 ல் சிலருக்கு காண்பிக்கப்பட்ட போது, அதன் பெயர் Innocence of Bin Laden என்பதாகும்.பின் ஜூலையில் யூ டியுப்பில் ட்ரைலர் வெளியிடப்பட்ட போது அதை அரபு மொழியில் மொழி மாற்றம் செய்து செப்டெம்பர் 8 ல் எகிப்திய தொலைக்காட்சி ஒளிபரப்பியதை தொடர்ந்து எதிர்ப்புக்கள் ஆரம்பமானது.அது மட்டுமன்றி, டெரி ஜோன்ஸ் என்ற மத போதகர் ,முன்னர் குரானை எரிக்க முடிவு செய்தவரின் ஆதரவும் இந்தப் படத்திற்கு இருந்தது என்றும் தெரிய வருகிறது.இதனால் இந்தப் பட தயாரிப்பும் திட்டமிட்டே செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கருத இடம் உண்டு.இது பற்றி டெரி, முஸ்லீம்களுக்கு எதிராக அல்ல செப்டெம்பரை நினைவு கூர்ந்தே செப்டெம்பர் 11 ல் தேவாலயத்தில் ட்ரெயிலரை காட்டப் போவதாக அறிவித்ததாக தெரிவித்தார்.

எகிப்திய கிறிஸ்த்தவர்கள் முஸ்லிம்களால் படுகொலை செய்யப்படும் போது, தப்பிய கிறிஸ்தவ மதத் தலைவர், அதன் காரணங்களை, தமது மகளுக்கு விளக்குகின்றார். அப்போது பழைய கதையில் வரும் ஒருவரைப் பற்றி குறிப்பிடுகிறார்.அந்த நபரின் கதை முகம்மது நபி வாழ்க்கையை ஒத்து இருக்கின்றது என்றும், அத்துடன் ஒரு கழுதையுடன் பேசுவது,ஓரின சேர்க்கை போன்றவையும் மதத்தை இழிவு படுத்துவதாக கூறி போராட்டங்கள் வெடித்தன.

படத்திற்கு டப்பிங் செய்யும் போது மாஸ்டர் ஜார்ஜ் என்ற இடத்தில் முகமது,முஸ்லிம் என்ற வார்த்தைகளை நுழைத்திருக்கிறார்கள். இதனால் தான் அதில் நடித்தவர்களுக்கு முகம்மது பற்றிய படம் என தெரிய வாய்ப்பில்லாமல் போய் விட்டதும்,அவர்களுக்கு 2000 வருடங்களுக்கு முன்னர் உள்ள கதை என்றும்,அந்தப் பாத்திரத்தின் பெயர் மாஸ்டர் ஜோர்ஜ் என்பதுமாகும்.சின்டி லே கார்சியா என்ற தாயாக நடித்த நடிகை வழக்கு பதியப் போவதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில்,லிபிய, பெங்காசி அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டு,லிபிய மக்களின் ஆதரவை பெற்றிருந்த அமெரிக்கத் தூதுவர் கிறிஸ்டபர் ஸ்டீவன்ஸ் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டதுடன், மேலும் மூன்று அமெரிக்கப் பணியாளர்களும் படுகொலை செய்யப்பட்டனர்.இதற்கு முன்னர் எகிப்தில் உள்ள தூதரகமும் தாக்கப்பட்டது நினைவிருக்கலாம். தமிழ் நாடு உட்பட உலகின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.ஆனால் நடு நிலை முஸ்லிம் அமைப்புக்கள் எதுவும் பேசாது இருந்தது ஏன்? இந்த முகமது ஆதரவுகளை வைத்து வரும் நவம்பரில் நடக்கும் தேர்தலில்,ஒபாமாவிற்கு எதிராக குடியரசுக் கட்சி செயல்படுமா?

இருப்பினும் இந்தப் படத்தை தயாரிக்க 5 மில்லியன் எனக் குறிப்பிட்டுளார்கள். அதன் நடிப்பு மற்றும் இயக்கம் பற்றி பார்க்கும் போது 5 ஆயிரம் டாலர் கூட செலவாகி இருக்குமா தெரியவில்லை.ஒரு நிமிடம் கூடப் பார்க்க முடியாத இந்தப் படத்தை இந்த அளவு மோசமாக கொண்டு சென்றிருப்பது ஏன் ?

அமெரிக்க நாட்டில் உள்ள சுதந்திரம் காரணமாக இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.அதே போல் கிறிஸ்தவ மத தவறுகளை சுட்டிக் காட்டி இன்னொரு படம் எடுத்திருந்தால் யாரும் எதுவும் பேசி இருக்க மாட்டர்கள். அதை விடுத்து லிபிய சுதந்திரத்திற்காக லிபிய மக்கள் பக்கம் இருந்த கிறிஸ்டபர் ஸ்டீவன்ஸ் என்பவரை இவ்வளவு மோசமாக,கொடூரமாக நடத்தி கொலை செய்தது சரியானதா?தங்கள் பலத்த கண்டனங்களுடன் நிறுத்தி இருக்கலாமே! யாரும் இந்தக் கேள்வியை இதுவரை வைக்கவில்லை.

இருந்தும் கூட இன்னமும் பல சந்தேகங்களை பலரும் வைத்த வண்ணமே இருக்கின்றனர். இப்படி ஒரு குழப்பத்தை ஏற்படுத்த அல்-கைதா ஆதரவினர்,சமீபகால மத்திய கிழக்கில் அமெரிக்க ஆதரவு காரணமாக சீன-ரஸ்ய ஆதரவினர் செய்த செயல்..............இப்படி தொடருகிறது.

மதத்தைக் காட்டி என்னவெல்லாம் நடக்கிறது. அதனால் தான் தமிழன் மதம் என்ற வார்த்தையை நீக்கி சமயம் என்றே சொல்லி வந்தான்.

சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

முஸ்லிம்களின் அப்பாவித்தனங்கள் படமும், முஸ்லிம்களின் போராட்டமும். உண்மை என்ன? Empty Re: முஸ்லிம்களின் அப்பாவித்தனங்கள் படமும், முஸ்லிம்களின் போராட்டமும். உண்மை என்ன?

Post by mmani Thu Sep 20, 2012 7:05 pm

மதத்தைக் காட்டி என்னவெல்லாம் நடக்கிறது. அதனால் தான் தமிழன் மதம் என்ற வார்த்தையை நீக்கி சமயம் என்றே சொல்லி வந்தான். முஸ்லிம்களின் அப்பாவித்தனங்கள் படமும், முஸ்லிம்களின் போராட்டமும். உண்மை என்ன? 471843 முஸ்லிம்களின் அப்பாவித்தனங்கள் படமும், முஸ்லிம்களின் போராட்டமும். உண்மை என்ன? 471843
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum