TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:18 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 12:07 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Nov 24, 2024 8:26 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


இராமன் ஏகபத்தினி விரதனா? இராவணன் சீதையை கடத்தியது ஏன்? உண்மை என்ன?

2 posters

Go down

இராமன் ஏகபத்தினி விரதனா? இராவணன் சீதையை கடத்தியது ஏன்? உண்மை என்ன? Empty இராமன் ஏகபத்தினி விரதனா? இராவணன் சீதையை கடத்தியது ஏன்? உண்மை என்ன?

Post by sakthy Wed Sep 12, 2012 10:56 pm

இராமன் ஏகபத்தினி விரதனா? இராவணன் சீதையை கடத்தியது ஏன்? உண்மை என்ன?

நம்ம சினிமாவில் தங்கை செண்டிமெண்ட், தற்போது சிறிது குறைந்தாலும் கூட, அடிக்கடி வந்து போகும். இந்த செண்டிமெண்ட் இராமாயணத்திலும் வந்தது. ஆனால் மெல்ல மறைத்து விட்டார்கள். இராவணன் தங்கை சூர்ப்பனகை பொழுது போக்க செல்கிறாள்.அங்கே இராமனை காணுகிறாள்.அவனை காதலிக்கிறாள்.....இப்படி இராமாயணம் கூறிக் கொண்டு வந்து,தகாத முறையில் நடக்க முற்பட்டதால் தம்பி இலக்குவன் கொடிய தண்டனை கொடுக்கிறான்,என்று தொடருகிறது இராமாயணம்.கடவுள் அவதாரம், ஒரு பெண்ணுக்கு கொடுக்கும் தண்டனையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.இந்த கொடூர சம்பவத்தை இராவணனுக்கு அவன் தங்கை தெரிவிக்கிறாள். கோபம் கொண்ட இராவணன் சீதையை சிறை பிடிக்கிறான். அது இராவணனின் தண்டனையே தவிர,இராமனுக்கு உணர்த்துவதற்காகவே தவிர சீதை மேல் காதல் கொண்டல்ல. இவைகள் திரிவு படுத்தப்படுகின்றன.

அனுமன் சீதயை இலங்கையில் சந்தித்த போது, உங்கள் கவலையால் இராமன் மது மாமிசத்தை விட்டு விட்டார், என்று கூறுவதை வால்மீகி இராமாயணம் சுந்தர காண்டத்தில் சர்க்கம் 37 குறிப்பிடுகிறது.ஆனால் இதை சோ அவ்ர்கள் குறிப்பிடும் போது, இராமன் மதுவல்ல தேனை அருந்தினார் என வக்காலத்து வாங்குகிறார். ஆனால் மாமிசம் பற்றி மறந்து விடுகிறார். மது விலக்கை தேன் விலக்கு என்று குறிப்பிடலாமா?இந்த சமயத்தில் இருக்கு வேதத்தில் மதுவையும் மாமிசத்தையும் பயன்படுத்தியதை எழுதி வைத்திருக்கிறதே.தமிழர்களுடன் போர் நடத்தியதையும்,தமிழர்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றும்படி யாகங்கள் நடத்தியதையும் குறிப்பிடுகிறதே, அஸ்வமேத யாகம் சொல்லப்படுகிறதே ஏன் மறைக்கிறார்கள்? நோக்கம் மூட நம்பிக்கை, சாதி ,இவற்றை தமிழர்களிடம் பரப்பி, அவர்கள் கல்வியை அழிப்பதும்,கல்வி கற்காது தடை செய்வதும் தான்.

இராம பக்தர்களே,தயவு செய்து கம்பராமாயணத்தையும்,வால்மீகி இராமாயணத்தையும் ஒரு முறை ஒப்பிட்டு படித்துப் பாருங்கள்.அப்போது தெரியும் கம்பன் என்ன எழுதினான்,வால்மீகி என்ன எழுதினான் என்பதை.இங்கே சொல்வது என் கற்பனை அல்ல.அதனால் தான் ஆதாரங்களையும் வைத்திருக்கிறேன்.படித்துப் பாருங்கள்.

வால்மீகி ராமாயணப்படி, ராமன், லட்சுமணன், சத்துருகன்களே யாருக்குப் பிறந்திருக்கிறார்கள் தெரியுமா? குழந்தை இல்லாத தசரதன், 3 யாகப் பார்ப்பனர்களை அழைத்து தனது மனைவியை, அந்த 3 புரோகிதப் பார்ப்பனர்களிடம் ஒப்படைத்து தனது மனைவியிடம், நீ என்னைப் போலவே இவர்களையும் பாவி என்று கூறுவதாக வால்மீகி ராமாயணம் கூறுகிறது. அப்படிப் பிறந்தவர்கள்தான் ராமன் உட்பட நான்கு சகோதரர்கள்.
வால்மீகி ராமாயணத்தில் உத்திர காண்டத்தில் இது குறிப்பிடப்படுகிறது.
ஆனால், கம்பன், இதை எல்லாம் மறைத்து விட்டான். ‘சம்பூகன்’ என்ற சூத்திரன் - பார்ப்பனருக்குரிய தவத்தை செய்ததாலேயே - பார்ப்பன தர்மம் கெட்டுப் போய்விட்டது என்று, ராமன் சம்பூகனைக் கொன்றான்.இவற்றைச் சொல்ல விரும்பாத கம்பன்,உத்தர காண்டத்தை எழுதாமலேயே விட்டு விட்டான்.

இராமன் ஏகபத்தினி விரதனா?

இராமன் சீதையை மனைவியாக, இளவரசியாக மணந்து கொண்டாலும் அவர் தன்னுடைய காம இன்பத்திற்காக அரசப்பழக்க வழக்கங்களுக்கிணங்க இன்னும் அநேகப் பெண்களை மணந்து கொண்டார். இதை வால்மீகி இராமாயணத்தை மொழி பெயர்த்த சீனிவாசங்கையார், அயோத்தியா காண்டத்தின் 8ஆவது அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார். இது அவரின் கருத்தல்ல,மொழிபெயர்ப்பு அது.
கடவுள் இராமன் சொன்னான், பெண்களை நம்பக்க கூடாது. மனைவியிடம் இரகசியங்களைப் பேசக் கூடாது. இதுவும் வால்மீகி இராமாயணம் அயோத்தியா காண்டம், அத்தியாயம் 100 சொல்கிறது.

கல்யாணத்தின்போது சீதாவுக்கு 6 வயது. ராமனுக்கு 12 வயது.என்ன சொல்கிறார்,வால்மீகி இராமாயணத்தை ஆதாரம் காட்டி Dr.அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.ஆறு வயதில் அவளும் நோக்கினாள்,அவனும் நோக்கினாள்..............................இது கம்பன் தந்த …............................

இது தவிர அவர் இன்னொரு சங்கடமான, எண்ணியே பார்க்க முடியாத ஒன்றை குறிப்பிட்டு எழுதுகிறார்.தமிழன் நினைத்தும் பார்க்க முடியாத ஆரிய மனுதர்மம் இப்படி சொல்கிறது.
மாஸி மாஸி ரஜஸ்தஸ்யஹா
பிதா பிபதி கோனிதம்...”

இது என்ன தெரியுமா? எழுதவே கூசும் இந்த வாக்கியம், சித்து+2 படத்தில் வரும் வசனம்.........தலைமை ஆசிரியர் (ராஜேஸ்)வகுப்புக்கு வருகிறார். அவருடைய மகன்(சாந்தனு) தேறவில்லை,கடைசியாக நிற்கிறான் என்றதும்,முதலாவதாக தேறிய பெண்ணிடம் …..................வங்கி குடி என்கிறார். அதனால் அவன் வீட்டை விட்டு வெளியேறுகிறான். ஆனால் மேலே கூறியதன் பொருள் வேறானது. ஆனால் இது, எட்டு வயதிற்குள் திருமணம் பெண்ணிற்கு செய்து கொடுக்கா விட்டால்,மாதம் ஒரு முறை பெண்களுக்கு ஏற்படும் இரத்தப்போக்கை எடுத்து தந்தை குடிக்க வேண்டும், எண்ணிப் பார்க்க முடிகிறதா? இது தான் ஆரியர்கள் நமக்கு தந்தது. இவற்றை மறைக்க ஆரியத்திற்கு துணை போய், வால்மீகி இராமாயணத்தை கம்பர் மாற்றி எழுதியது ஏன்? தமிழர்களிடம் இவை எடுபடாது என்பதால் உண்மைகளை மாற்றி எழுதினார். இப்படி தமிழர்களின் வரலாறுகளை மறைத்து,தங்கள் போலிகளை புகுத்தி நம்மை போதையில் வைத்திருக்க முடிவு செய்தது ஆரியம். நாம் அதைக் கண்டு கொள்ளாது தொடர்ந்து ஏமாறிக் கொண்டிருக்கிறோம். கடலில் நம் நிலம் இருக்கிறது,20 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று சொல்லி பெருமை பேசிக் கொண்டால் போதுமா? நம் வரலாறுகளை மறைத்து ஏமாற்றுவதை இனம் காண வேண்டாமா? உண்மைகளை தெரிந்து கொண்டு இனியும் ஏமாறாமல் இருக்க வேண்டாமா?

நேத்தாஜி பற்றிய எனது கட்டுரையில் தெரிவித்தது போல்,பல வரலாறுகள் வட நாட்டவர்களால்,மத்திய அரசால்,ஆரியர்களால் மறைக்கப்பட்டு மாற்றப்பட்டு விட்டதற்குக் காரணம், 20 ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட தமிழனின் நாகரீகம் தெரிந்து விடுமானால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த ஆரியர்களின் உண்மைகள் தெரிந்து விடும் என்ற அச்சம் தான். அதனால் தான் வெளிநாட்டு ஆய்வாளர்கள் ஆய்வு முடிவுகளை வெளியிட்டும் கூட, கடலில் ஆழ்ந்து கிடக்கும் தமிழர் நாகரீக சிதைவுகளை வெளிக் கொணர மத்திய அரசு முன்வரவில்லை.தொல்பொருள் ஆய்வுகளைக் கூட தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கிறது. வெளி நாட்டவர்கள்,நம் நாட்டு நடுநிலை ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய, ஒப்படைக்க அல்லது அவர்கள் சுயாதீனமாக ஆய்வுகள் நடத்த ஏன் அனுமதிக்க மறுக்கிறது? சிந்தியுங்கள்.

சிலரின் கருத்துக்கள் இதோ...........
*****என்னுடைய இராமன் இராமாயணத்தில் வருகின்ற இராமனல்ல- மகாத்மா காந்தி.

****இராமாயணம், மகாபாரதம் இவை அரேபிய இரவுகள் என்ற கதைகளே தவிர வேறல்ல ..ஜவஹர்லால் நேரு.

***இராமன் கடவுளல்ல. அவன் ஒரு கதாநாயகன்! -இராஜகோபாலாச்சாரியார்.
ஒழிந்திருந்து வாலியை கொன்றது பற்றி,இராமன் தவறு செய்ததாகவே ராஜாஜியும் கருதியதால், ராமனின் சமாதானம், வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டு இருந்தாலும் அதில் சாரம் இல்லை என்று ராஜாஜி விட்டுவிட்டதாக ராஜாஜியே எழுதியுள்ளார்.
***இராமயணம் தெயவத்தின் கதை அல்ல. அது ஓர் இலக்கியம். கலியுக கம்பன் டி.கே.சிதம்பரநாத முதலியார்.

வாராழி கலசக் கொங்கை
வஞ்சிபோல் மருங்குவாள் தன்
தாராழிக் கலைசார் அல்குல்
தடங்கடற்கு உவமை தக்கோய்
பாராழி பிடரில்தங்கும், பாந்தழும்
பணி வேன் றோங்கும்
ஓராளித் தேறும் கண்ட உனக்கு
நான் உரைப்ப தென்ன? …........ இது கம்பராமாயணத்தில், இராமன் அனுமனுக்கு சீதையை பற்றி அடையாளம் கூறுகிறான். எந்த ஒரு மனிதனோ வேற்றான் ஒருவனுக்கு தன் மனைவியைப் பற்றி இப்படி வர்னித்து சொல்வானா?
கம்பன் சிறந்த கவி மறுக்கவில்லை.கருணாநிதியும் சிறந்த தமிழ் எழுத்தாளர் தான்............ஆனால்.......அவரை இன்று ஏற்றுக் கொள்ள தமிழினம் தயங்குகிறதே.எமன் ஏறும் பரியே முட்ட முட்ட கூரை இல்லா வீடே, குலராமன் தூதுவனே யாரையடா சொன்னாய், என வைகிறாள் ஔவைப்பாட்டி.லஞ்சம் ஊழலுக்காக ஈழத் தமிழர்களை கை விட்டார் கருணாநிதி. பணத்திற்கும்,ஆடம்பரமான வாழ்விற்காகவும் தமிழனை தூக்கி எறிந்தான் கம்பன். இரண்டும் ஒரே சாக்கடையில் ஊறியவை தான்.
இதை விட வேணுகோபாலன் மொழி பெயர்த்த தாய்லாந்து இராமாயணம் இன்னும் வேறு மாதிரியாக எழுதப்பட்டுள்ளது.அங்கே அனுமன் திருமணமானவனாக காட்டப்படுகிறது. படித்திருக்கிறீர்களா?

இவை ஒரு சிறு துழிகளே.
ஆதாரம்......சந்தரவதி என்ற பெண்மணி எழுதிய வங்காள மொழி இராமாயணம்,Dr.அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்,DR. . சாட்டர்ஜி M.A., Ph.d,. (USA),வால்மீகி இராமாயணம்,கம்ப இராமாயணம்.

சக்தி.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

இராமன் ஏகபத்தினி விரதனா? இராவணன் சீதையை கடத்தியது ஏன்? உண்மை என்ன? Empty Re: இராமன் ஏகபத்தினி விரதனா? இராவணன் சீதையை கடத்தியது ஏன்? உண்மை என்ன?

Post by மாலதி Thu Sep 13, 2012 9:31 am

இராமன் ஏகபத்தினி விரதனா? இராவணன் சீதையை கடத்தியது ஏன்? உண்மை என்ன? 28284 இராமன் ஏகபத்தினி விரதனா? இராவணன் சீதையை கடத்தியது ஏன்? உண்மை என்ன? 28284 இராமன் ஏகபத்தினி விரதனா? இராவணன் சீதையை கடத்தியது ஏன்? உண்மை என்ன? 28284


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum